Skip to content
Post Views: 3,784
காலையில் வாங்கிய நாளிதழை எடுத்து வந்து சோபாவில் இலக்கியா அமர்ந்தாள். கண் முன்னே இரண்டு நாளிதழ்கள் இருக்க தான் செய்தது ஆனால் அவை இரண்டும் ஆங்கில நாளிதழ்கள்.
எளிதாக எடுத்து படிக்கலாம் தான், ஆனால் திருப்த்தி அதில் அவளுக்கு இல்லை. ஆற அமர தமிழ் எழுத்துக்களை உள் வாங்கி அனுபவித்து படிக்க வேண்டும். நாள் முழுதும் எங்கு திரும்பினும் ஆங்கிலமே இருக்க, அவளுக்கே பயம் தமிழை மறந்தே விடுவோமோ என்று.
அதனால் தான் காலை மருத்துவமனை செல்லும் வழியில் நாளிதழை வாங்கி வைத்துக்கொள்வாள். இன்று இலக்கியா இருக்கும் மனநிலையில் சொல்லவே வேண்டாம், சிந்தனையில் இளையராஜா இசையில் எஸ் பி பி குரலில், ‘இளைய நிலா பொழிகிறதே’ என்னும் பாடலை முணுமுணுக்க சுகந்தமான மாலையாகியது பெண்ணுக்கு.
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
Advertisement
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இரவு உணவுக்கு இன்னும் நிறையவே நேரமுள்ளது. அவன் கேட்டத்தை செய்ய தான் முடியாது. வெள்ளை சுண்டல் கேட்கிறான், உடனே வைத்துவிட தான் முடியுமா குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஊற வேண்டுமே.
இருக்கட்டும், இருப்பதை வைத்து முடிந்ததை செய்யலாம் என அவள் எண்ணியிருக்க, அவள் கணவனோ உணவை வெளியில் இருந்து வரவைத்திருந்தான்.
Advertisement
அவன் கூறியது போலவே பூரி, சன்னா மசாலா வந்திறங்கியது. உற்சாகமாக இறங்கி வந்தவன் அவளை எதிர்பாராது தனக்கு தேவையானதை உண்டு முடிக்கும் முன்பே இலக்கியாவிற்கு எடுத்து வைத்து உண்டு முடித்தான்.
Advertisement
காலையிலிருந்து உண்ணாமல் இருந்தது வேறு அவனுக்கு பசியை கொடுக்க மொத்தமாய் ஆசை தீர ருசித்து அவளிடமும் உண்ண கூறி நிம்மதியாக வந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்துவிட்டான்.
அவன் செல்வான் பிறகு வரவேற்பறை செல்லலாம் என அவள் நினைக்க, அவனுக்கு உறக்கம் வரவில்லை போல். பொறுத்து பொறுத்து பார்த்தவள் மணி பத்தை கடந்தது அறிந்து இனியும் தாக்கு பிடிக்க முடியாதென்று அவனிடம் சென்றாள்.
அவள் கொலுசொலி கேட்டும் அர்ஜுன் நகர்ந்தானில்லை.
Advertisement
“டைம் ஆச்சு” அவளை திரும்பி பார்த்தவன், “அதுக்கு” என்றான் கேள்வியாக.
“நான் தூங்கணும் சார்”
“ம்ம்ம் சோபா தான் இருக்கே” நால்வர் வசதியாக அமரும் நீள்விருக்கையில் வசதியாக படுத்துக்கொண்டவன் ஒருவர் அமரும் இருக்கையை காட்டி கூற இலக்கியாவிற்கு சலிப்பு தான் வந்தது.
“காலைல ஹாஸ்பிடல் வேகமா போகணும் சார்”
“இப்போ நான் யாரையும் பிடிச்சு வக்கலயே”
“அதுக்கு தான் சேர்த்து இடம் குடுக்காம பண்றிங்களே” முணுமுணுப்போடு வீட்டின் ஒரு மூலையில் வைத்திருந்த அவளது பையிலிருந்து போர்வையை எடுத்தவள் வந்து அந்த சிறிய சோபாவில் அமர்ந்து அவனை பார்த்தாள்.
அவள் அமர்ந்ததும் அவனும் வசமாக அமர ஐயோ என்றானது அவளுக்கு. இன்று காலையே கழுத்து வலியில் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டாள், இதில் அர்ஜுன் வேறு பிடிவாதமாய் அமர்ந்திருந்தான்.
“அப்டி என்ன பத்து மணிக்கே தூக்கம்? நான் இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் ரூம் போவேன்” தன்னையே கண்களை எடுக்காமல் இலக்கியா பார்ப்பது அறிந்து கடினமாக கூறினான்.
“நான் ஒரு ஹாஸ்பிடல்க்கு முதலாளி இல்ல சார், நினைச்ச நேரம் வர போக, சம்பளம் வாங்குற சாதாரண வேலைக்காரி தான். சொன்ன நேரத்துக்கு முன்னாடியே போய் நிக்கணும்”
அவளை மெச்சுதலாக பார்த்தவன், “பரவால்லையே உனக்கும் நிதர்சனம் எதுனு தெரிஞ்சிருக்கு”
நெஞ்சில் சுருக்கென இலக்கியாவிற்கு குத்தியது.
கால்களை நெஞ்சோடு அனைத்து முகத்தை ஒரு பக்கம் சாய்த்து கண் மூட ஒவ்வொரு நொடியும் வேதனையோடு அடித்துக்கொண்டது மனம்.
ஒதுக்கப்பட்டது அவளுக்குபுதிதல்ல அது அவனிடமிருந்து வந்தது தான் வலித்தது.
திரையில் செய்திகள் தன் போல் ஒலித்துக்கொண்டிருந்தாலும் தான் பேசியதில் அவள் முகம் காட்டும் பாவனையை கவனித்த அர்ஜுன் மொத்தமாய் தன்னுடைய பார்வையை அவள் மீதே விழ விட்டான்.
அந்த சிறியவள் மனதில் என்ன ஓடுகிறது என தெரியவில்லை, ஆனால் அவனால் உறுதியாக கூற முடியும், அதற்க்கு அவன் செய்கை மட்டுமே காரணமாக இருக்குமென.
உறக்கத்தின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிக்கொண்டு அமர்த்திருந்தவளை என்ன கூறி மனதில் அனுமதிப்பான்?
மாநகரின் முக்கிய மருத்துவமனையின் பின்னால் உரிமையாளன் அவனுக்கென்ன இருந்த ஆசை மெல்லிய உடல்வாகு, அழகு, படிப்பு மற்றும் பலமான பின்புலம் கொண்ட பெண் தான் வேண்டும் என எதிர்பார்த்தான். அதில் இலக்கியா பெற்றிருந்தது அழகு மட்டுமே.
அந்த அழகும் அவனுக்கு இன்று வரை பெரிதாக தெரியவில்லை.
அஞ்சு போல் புதுமையை எதிர்பார்த்திருந்தவனுக்கு இயற்கை அழகோடு சற்று பொலிவு காமியாக இருந்த இலக்கியாவின் அழகு தெரியாமல் போனது.
அவனை பொறுத்தவரை அவன் மனைவியாக இருக்க அவளுக்கு சிறு தகுதியும் இல்லை. அவள் மனதும் அழுக்கு நிறைந்த குப்பை தொட்டியாக தான் கருதினான்.
அவள் பேசுவது, நடந்துகொள்வது எல்லாமே போலி தான், மனமெல்லாம் கசடு மட்டுமே.
இத்தனை வெறுப்பை மூளை தாங்கி நின்றாலும் அவனது கண்கள் தன்னையும் மீறி அவளை நொடிக்கு நொடி விடாமல் பார்த்தது.
அத்தனை அமைதியாக அவன் ஒவ்வொரு கூரிய அம்பையும் தாங்கி நின்றவள் தன்னுடைய உரிமையை மட்டும் நொடியும் அழுத்தமாய் விதைப்பதில் தவறியதில்லை.
திமிராய் இது என்னடைய வீடு என அழைத்து காட்ட, உன் அனுமதியே தேவையில்லை என வீட்டில் சிறிய தயக்கமும் இன்றி தானே தனக்கு தேவையானவற்றை உபயோகிக்க துவங்கியிருந்தாள், அவனது மாடி அறையை தவிர.
அர்ஜுன் இல்லாத நேரம் கூட தெரியாமல் கூட அந்த படிகளையும் மிதிக்கவில்லை அவள். வந்து பார்த்தவன் ஒரு பொருள் கூட இடம் மாறியிராமல் இருப்பதை கவனித்து புருவம் சுருக்கினான்.
“என்ன காலேஜ் நீ?” என்ன நினைத்து அந்த கேள்வியை எழுப்பினான் என அவனுக்கே தெரியவில்லை.
கண்களை சுருக்கி யோசனையில் இருந்தவள் விழிகளை திறந்து பார்க்க, அவளுக்கு எதிரில் மூன்றடி அழகு கண்ணாடி ஒன்று இருப்பதை அப்பொழுது தான் கவனித்தாள். அர்ஜுன் உருவம் தன்னை பார்ப்பது தெளிவாக தெரிந்தது.
“மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்” என்றாள் முகத்தை திருப்பாமல்.
புருவத்தை உயர்த்தி மெச்சினான், “அவ்ளோ நல்லா படிக்கிற பொண்ணா நீ?” தோளை குலுக்கி அவள் அமைதியாகிவிட அர்ஜுன் பார்வை மட்டும் அவளை விட்டு அகலவில்லை.
இலக்கியாவின் கண்களும் அவன் மேல் தான் ஒட்டி போனது. அவன் அவள் பார்வையை கவனிக்கவில்லை. அவளுக்கும் தன்னை அர்ஜுன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் தெரியவில்லை, அத்தனை அழுத்தமாய் அவள் மனதை படிக்கும் முயற்சியில் முதுகை ஊசியாய் குத்தியது அவன் கண்கள்.
இலக்கியாவின் முதுகுத்தண்டு சிலிர்த்தது அந்த பார்வையில். அதன் ஆழம் தாளாமல் கண்களை முடியும் இம்சை தான் பெண்ணுக்கு.
முடியவில்லை அவளால், எந்த வகையில் இந்த பார்வையை கொண்டு சேர்ப்பது என தெரியாமல் இலக்கியா தலையை திருப்பி அவனை பார்க்க, அவள் பார்வையை தாங்கி சலிக்காமல் விடாது பார்த்தான்.
குறுகுறுப்பு தாங்க வில்லை இலக்கியாவிற்கு.
“நீ ஏன் இப்டி?” சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு பேச்சை தான் வளர்த்தான்.
“எனக்கு தூக்கம் வருது, இந்த இன்டெர்வியூ எல்லாம் நாளைக்கு வச்சுக்கோங்க” அவளது குரலில் சிறு ஆசுவாசம் தெரிந்தது, அவன் பார்வை கேள்வியாய் மாறியதில்.
“அப்போவே இந்த இன்டெர்வியூ வச்சிருந்தா உன்ன நான் வேலைக்கே எடுத்திருக்க மாட்டேன்” அசால்டாக கூறியவனை விருட்டென திரும்பி பார்த்தவள் கண்களில் அப்பட்டமான கோவம்,
“இப்பயும் அவசரம் இல்ல சார், நாளைக்கு உங்க கேபின்ல வச்சு எவ்வளவு நேரம் வேணும்னாலும் கேள்வி கேளுங்க. பொருத்தமே இல்லாத நான் எதுக்கு உங்களுக்கு?” புருவம் உயர்ச்சி அவன் சிரித்த சிரிப்பில் தான் பேசியது உரைத்தது இலக்கியாவிற்கு.
“வாழ்க்கைல மட்டும் இந்த மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா நல்லா இருக்கும்ல?”
“அவ்வளவு ஈஸியா எதையும் விட்டுட்டு போக மாட்டேன் நான். வாழ்க்கை, வேலை எதுவா இருந்தாலும்”
“அந்த அழுத்தம் தான், உன்னக்கு ஒழுங்கான தூக்கத்தை கூட தர விடாம இப்டி நிறுத்திருக்குது தெரியிதா?” அவளை பார்த்து சிறுக முறைத்தான்.
“அந்த பிடிவாதம் நல்லது செஞ்சா அது தப்பில்லையே”
“எது ஒருத்தனோட கனவை உடைச்ச அந்த பிடிவாதம் நல்லதா?”
“கல்யாண கனவை சொல்றிங்களா, இல்ல பிஸ்னஸ் கனவை சொல்றிங்களா?”
அர்ஜுன், “எதுவும் தெரியாத மாதிரி பேசாதடி, ரெண்டையும் உன்னோட ஆடம்பர ஆசைக்காக ஒடைச்சிட்டு தத்துவம் பேசுறியா?”
“எது என்னோட ஆடம்பர ஆசை? இந்த வீடு, இந்த சோபால படுக்குறது, உங்க கார்ல வர்றதா ஆடம்பரம்? கூரை மட்டும் தான் மாறிருக்கு, ஆனா இந்த ஆடம்பரமான கூரை ஒரு நாள் சந்தோசம் தந்தது இல்ல வெறுமையை தவற. சின்ன கூரைக்கடில இருந்தாலும் படுத்த ஒடனே நிம்மதியான தூக்கம் வந்தது…” என்றவள் அவனை விடும் எண்ணத்தில் இல்லை.
“நல்ல தூக்கமும், ஆரோக்கியமும் இருக்கவன் தான் உண்மையான பணக்காரன். இதுல அடிப்படை தேவையே இல்லாத நான் எந்த வகைல பகட்டு வாழ்க்கை வாழ்ந்ததை நீங்க பாத்துட்டீங்க”
“ஓ கஷ்டமா இருக்கா இங்க? சரி கெளம்பு உன் வீட்டுல விட்டுட்டு வர்றேன்” அர்ஜுன் அவசரமாக எழுந்து அவளை அழைக்க அவனை அழுத்தமாக பார்த்தாள்.
“நீங்களும் படுக்குற அளவு ஒரு பெரிய பெட் அப்பா வாங்கி வச்சதும் சொல்றேன், சேர்ந்தே போகலாம்” உதட்டை சுளித்து சிறிதும் யோசிக்காமல் போர்வையை தரையில் விரித்து படுத்துகொண்டாள்.
அவளது பேச்சினை சற்றும் எதிர்பாராத அர்ஜுன் திகைத்து அவளை பார்க்க, அவளோ, “லைட் ஆப் பண்ணிடாதீங்க எனக்கு இருட்டுனா பயம்” என்று சொகுசாக படுத்துகொண்டாள்.
அர்ஜுன் அசையாது அவளை முறைத்து முறைத்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்க்க முயற்சிக்க அவளை பார்க்க பார்க்க வியப்பை தாண்டிய ஆத்திரம்.
‘எப்படி பேசுகிறாள் இவள்?’
“ஏய் கொசு கடி, குளிர தாங்கி ரோட்டுல கூட படுப்பேன், ஆனா உன் வீட்டுக்கு வரவே மாட்டேன்டி”
மூடிய கண்களோடு சிரித்தது அவள் இதழ்கள், “அதையும் தான் பாப்போமே” என்றது.
விடுவிடுவென நடந்தவன் விளக்கை அனைத்து, “எந்திரிச்சு மேல படுடி” உத்தரவாக உறுமினான்.
முழுநேர சோர்விலிருக்கும் அவள் தரையில் படுக்க வைக்க மனம் ஒத்துக்கொள்ளவில்லை அர்ஜுனுக்கு. அவளுக்கு கட்டாந்தரை எல்லாம் பழக்கப்பட்டது தானே, உண்மையில் மெத்தையை விட அந்த குளிர்ந்த தரை தான் சுகமாக இருந்தது.
அவளிடமிருந்து பதிலே இல்லை, “எக்கேடோ கெட்டு போ” அவளிடம் அவளுக்காக கூட யாசிக்க கூடாதென்ற முடிவில் மேலேறிவிட்டான்.
error: Content is protected !!