Skip to content
Post Views: 498
அன்பு நவியின் வினியின் நதி
அத்தியாயம் 6
வினோதனின் நீண்ட நாள் கனவான தனக்கென்று ஒரு இருசக்கர வாகனம் (Bike) வாங்கும் ஆசை அன்று தான் நிறைவேறியது. அவன் ஆசைப்பட்ட கருப்பு நிற ஹீரோ இக்னிட்டார் வண்டி (Hero Ignitor Bike) -யை வாங்கியிருந்தனர்.
ஆரம்ப தொகையை வினோதன் இவ்வளவு நாட்கள் வேலை பார்த்து சேர்த்த தொகையில் செலுத்தி விட்டனர். வினோதனின் தந்தை பெயரில் தான் வண்டியை எடுத்திருந்தனர். மாதா மாதம் குறிப்பிட்ட தவணை தொகையை 24 மாதங்கள் கட்டும் பொருட்டு வண்டியை எடுத்திருந்தனர்.
Advertisement
வண்டியை எடுத்ததும் வினோதன் நதியிடம் தான் முதல் வேலையாக காட்ட வந்திருந்தனர். இன்னும் வினோதன் எண்ணத்தை அவனும் சொல்லவில்லை… அவளும் அவள் விருப்பத்தை தெரிவிக்கவில்லை. இருவரும் தங்களுக்குள் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருந்தனர்.
மாலை கல்லூரி முடிந்து வெளியே வரும்போது வினோதன் வண்டியோடு அவளுக்காக காத்திருந்தான்.
நதி வெளியே வந்து அவனைப் பார்த்ததும் ஆச்சர்யமே… ”ஹே… என்ன அதிசயமா இருக்கு? இந்த நேரம் இந்த பக்கம் என்ன விஷயம்? வண்டி சூப்பரா இருக்கு.. யாரோடது?” எனக் கேட்க,
Advertisement
வினோதனும் அவள் ரசனையை சிரித்துக்கொண்டே பார்த்து, ”என்னோட வண்டி தான்.. இப்ப தான் வாங்கிட்டு, அப்டியே உன்னப் பாக்க வந்துட்டேன்” என்றான்.
Advertisement
நதியோ ”நிஜமாவா? வண்டி அழகா இருக்கு.. உங்களமாதிரியே!..” என்றாள்.
அவனோ, ”உன்ன விடவா?” என்றான்.
”என்ன சொன்னிங்க?” என அவள் சிரித்துக் கொண்டே கேட்க,
Advertisement
”ஒன்னுமில்ல… ஒரு ரவுண்ட் போலாமா??.. நீயும் நானும்” என அவன் கேட்க,
“இப்பவா? யாராச்சும் பாத்துட்டா என்ன பண்ண?” என்றாள்.
”அப்ப வரலயா? உன்ன தான் முதல்ல ஏத்தனும்னு ஆசையா வந்தேன்” என அவன் சிறிது வருத்தத்துடன் கூற,
”அவளும் சரி வாங்க போலாம்” என வண்டியில் ஏறி விட்டாள்.
அது ஒரு அழகான பயணமாகவே அவர்களுக்கு அது அமைந்தது.
ஒரு வாரம் சென்று இரவு நதி அவள் அக்கா பையனைத் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு கடையின் வாசலில் வினோதன் நின்று அவன் வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தான். நதி இதனைப் பார்த்ததும் சிரித்து விட்டாள்.
வினோதன் நிமிர்ந்து பார்த்து, ”என்ன இந்தப் பக்கம்? “ என கேட்டான்.
நதியோ ”அத நான் கேக்கனும்… இது எங்க ஏரியாங்க…” என்றாள்.
”வீட்டுக்குக் கொஞ்சம் பொருள் வாங்க வந்தேன்.. அதான்” என அவன் சொல்ல,
“அதெல்லாம் சரி… எதுக்கு நல்லா பளபளன்னு இருக்குற வண்டியை அலாவுதீன் அற்புத விளக்க தேய்க்கிற மாதிரி தேய்ச்சுட்டு இருக்கீங்க?” என அவள் கேட்க,
”பொருள் எல்லாம் வச்சா வண்டி அழுக்காகும்ல அதான்… வண்டிய மட்டும் இல்லைங்க.. என்கிட்ட எதகுடுத்தாலும் பளபளன்னு வச்சுக்குவேன்…” என அவன் பதில் கூற,
”நல்லா வச்சுக்குவிங்க வச்சுக்குவிங்க…” என அவள் சொல்ல,
”இந்த பொடியன் யாருங்க?.. குறுகுறுன்னு என்னயே பாக்குறான்” என அவன் கேட்க,
“இதுக்கு முன்னாடி அவன் பூச்சாண்டி எப்டி இருக்கும்னு பாத்தது இல்லங்க அதான்.. இப்டி தான் இருக்கும் போலன்னு குறுகுறுன்னு பாக்குறான்” என அவள் சிரிக்காமல் பதில் கூற,
”ஏதே… பூச்சாண்டியா? ரொம்ப ஏத்தம் தான் உனக்கு” என அவன் முறைப்புடன் சொல்ல,
“சும்மா சொன்னேங்க… கோவப்படாதிங்க… இப்ப தான் எல்லார் முகமும் பாக்க ஆரம்பிச்சுருக்கான் அதான் அப்டி பாக்கான்” என நதி சொல்ல,
“குட்டிப் பையா… ரொம்ப அழகா இருக்கிங்க… நீ உங்க சித்தி மாதிரி இல்லயேடா… ஒரு வேளை உன்ன ஆஸ்பத்திரியில மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்களோ?” என வினோதன் குழந்தையிடம் பேச,
“ரொம்பத்தான் நக்கல் உங்களுக்கு… அவன் என் அக்கா மாதிரி.. எங்க அக்கா ரொம்ப அழகு.. நான் தான் என் வீட்லயே கொஞ்சம் பொது நிறம்… என் அப்பா மாதிரி.. மத்த எல்லாரும் ப்யூட்டி குயின்ஸ் (Beauty Queens) தான்” என்றாள்.
”ஓஹோ.. அப்டி அப்டி… சரிங்க குட்டி ப்யூட்டி (Beauty)” என அவன் சொல்ல,
”எனக்கு நேரமாச்சு… நாங்க கிளம்புறோம் ப்ளாக் ப்யூட்டி (Black Beauty)…” என சொல்லிவிட்டு அவள் கிளம்ப,
அவர்கள் அந்த தெருமுனையில் திரும்பும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு முகநூலில் பேசுகையில் ”நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் நதி” என்றான் வினோதன்.
’ஒரு வேளை நமக்கு ப்ரபோஸ் (Propose) பண்ண போறானோ?’ என நதி நினைத்து, “சொல்லுங்க வினோ” என நதி கூற,
”இது இப்ப சொல்றது சரியா தப்பானு தெரியல.. ஆனாலும் சொல்றேன்.. “ என அவன் பூடகமாவே பேச,
”சும்மா சொல்லுங்க.. திட்ட மாட்டேன்” என்றாள்.
”நான் இத பல நாள் சரி வருமான்னு யோசிச்சு தான் சொல்றேன் நதி.. நாம பழக ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகபோகுது.. இப்ப வரைக்கும் உன்ன பத்தி நானும், என்னபத்தி நீயும் நிறையா தெரிஞ்சுக்கிட்டோம்… எனக்கு உன் குணம், பழக்கவழக்கம் எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கு… நீ என் தோழியா இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்… அத விட என் வாழ்க்கை துணையா வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. என்ன பிற்காலத்துல வாழ்க்கைத்துணையா ஏத்துக்குவியா?.. உன் பதில இப்பவே சொல்லனும்னு இல்ல நல்லா யோசிச்சு சொல்லு… பிடிக்கலன்னாலும் சொல்லு.. நண்பர்களாகவே நாம இருக்கலாம்… உனக்கு சரின்னா உன் வீட்டு பின்வாசலில் ஒன்னு வச்சுருக்கேன் எடுத்துக்கோ” என அவன் சொல்ல,
நதி எதிர்பார்த்தது தான்… இப்படி சொல்வான் என்று நினைக்கவில்லை. ’வாசல்ல வேற ஏதோ வச்சுருக்கானாம்ல என்னவா இருக்கும்?’ என யோசிக்க,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலங்க… முதல்ல இப்ப நமக்கு இத முடிவெடுக்குற வயசு இல்ல… ” என அவள் பதில் அனுப்பி விட்டு அவள் வீட்டின் பின்வாசல் சென்றாள்.
அதைப் பார்த்ததும் அவன், “நான் முதல்லயே சொன்னேங்க.. நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கேன்.. அது மட்டும் இல்லாம எனக்கு 19 வயசு ஆச்சு… ஜனநாயக விதிப்படி எனக்கு முதல்வரையே தேர்ந்து எடுக்குற உரிமை இருக்கு… இதுல என் வாழ்க்கையை யோசிக்க மாட்டேனா?” என பதில் அனுப்பினான்.
என்ன இன்னும் பதில் வரவில்லை என்று அவன் மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்க,
”க்கும்” என பின்னாடியிருந்து சத்தம், ”அய்யோ பேய்..” என இவன் அலறி கண்ணை மூட,
“பேய பாத்தா ஓடனும்.. கண்ண மூடிட்டு நிக்கக்கூடாது” என அவள் கூற,
”அட நீயா… நான் கூட யாரோனு பயந்துட்டேன் நதி..ஹி ஹி” என்றான்.
”நல்லா பயந்திங்க போங்க… ஏதோ சொல்லிட்டு இருந்திங்க.. எனக்கு ஏதோ வச்சுருக்கேனு சொன்னிங்க..?” என நதி கேட்க,
”என்னோட வாழ்க்கைத்துணையா என் கூடவே நீ வரனும்னு ஆசப்படுறேன்… என்னை வருங்காலத்துல கல்யாணம் பண்ணிக்குவியா?” என வினோதன் ஒரு சாக்கோ பீ (Chocopie) சாக்லேட்டும், ஓரியோ (Oreo) பிஸ்கட்டையும் நீட்ட,
நதி சிரித்து ”எல்லாரும் ப்ரபோஸ் பண்ணா டேரிமில்க் சாக்லேட் தான தருவாங்க… நீங்க என்ன வித்தியாசமா சாக்கோ பீ தரிங்க?” என கேட்டாள்.
”எல்லாத்துலயும் ஒரு தனித்துவம் இருக்கனும்ல அதான்…” என அவன் சொல்ல,
அவளும் தீவிரமாக ”எல்லாம் சரி தான்.. நான் யோசிக்கனுங்க… எங்க வீட்ல 3 பொண்ணுங்க… நான் தான் கடைசி… பையன் இல்ல… எதிர்காலத்துல என் அப்பா, அம்மாவ பாத்துக்கனும்… என் அக்கா முடிவு தான் என் வீட்ல எல்லாம்.. அவ என்னைய அரசு வேலைக்கு போகனும்னு சொல்றா… எனக்கு அதுல பெருசா ஆர்வம் இல்ல… ஆனா என் படிப்பே அவங்க முடிவு தான்… அதுனால இதுல என்னால மறுப்பு சொல்லவும் முடியாது… என் வாழ்க்கைலையும் அவங்க வேற எதாச்சு முடிவு பண்ணா?…” என நதி சொல்ல,
“நான் தான் சொன்னேனே நதி… உனக்கு பிடிக்கனும்னு… உனக்குனு எதாச்சும் பிடித்தம் இருக்கும்ல… அத சொல்லு.. படிப்பு வேற… வாழ்க்கை வேற…” என்றான்.
”என் வாழ்க்கைல வந்துட்டா விட்டுட்டு போக விடமாட்டேன்.. இப்பவே சொல்லிட்டேன்.. நல்லதோ, கெட்டதோ இனி வாழ்க்கை முழுக்க என் கூட தான்.. நல்லா யோசிச்சுக்கோங்க… அப்புறம் பாதில விட்டுட்டு போறேன்.. என்னால முடியலன்னு சொல்லக்கூடாது…” என நதி கூற,
“அதெல்லாம் கண்டிப்பா சொல்லமாட்டேன் நதி.. ரியலி லவ் யூ சோ மச்” என்றான் வினோதன்.
“எனக்கும் இதுவரைக்கும் பல பேர் ப்ரபோசஸ் வந்துருக்கு… ஆனா நான் யாரையும் கண்டுகிட்டது இல்ல… எனக்கும் உங்கள பாத்ததுல இருந்தே பிடிக்குங்க… பிடிக்கும்னா ரொம்ப பிடிக்கும்… அதனால தான் இவ்ளோ பேசுறேன் உங்ககிட்ட… ஒரு தடவைக்கு பல தடவை நல்லா யோசிங்க சொல்லிட்டேன்…” என்றாள்.
”நான் யோசிக்காம இவ்ளோலாம் பேசவே மாட்டேன் நதி… நீ வேணும்னா நேரம் எடுத்து பதில் சொல்லு… யோசிச்சு பொறுமையா நாளைக்கு இல்லேனாலும் இப்பவே கூட பதில் சொல்லு” என்றான்.
“ஆனா நீங்க என் கிட்ட சரியாவே ப்ரபோஸ் பண்ணலயே… நீங்க எப்டி எப்டியோ பண்ணுவிங்கனு நினச்சேன்… இப்டி சிம்பிள் ஆ இருக்கும்னு நினைக்கல… எனக்கும் ஆச இருக்கும்ல?” என நதி சொல்ல,
உடனே வினோதனோ முட்டி போட்டு அவள் முன் சாக்லேட் மற்றும் பிஸ்கட்டை நீட்டி “ ஐ லவ் யூ சோ மச் நதி… என் உயிர் இருக்குற வரைக்கும் உனக்காக மட்டுமே இருப்பேன்… என் வாழ்க்கைல உன்ன தவிர வேற யாருக்கும் இடமில்ல… வில் யூ மேரி மீ ?(Will you marry me?)” என்க,
அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு வானமும் லேசாக தனது தூரலை ஆரம்பித்தது.
அவன் கொடுத்த சாக்லேட் மற்றும் பிஸ்கட்டை எடுத்துக் கொண்டு, வினோதனுக்கு ஏற்றவாறு அவளும் முட்டிப் போட்டு ”ம்ம்ம் எஸ்… நான் இந்த உலகத்துல இருக்குற வரைக்கும் உங்களுக்கு உண்மையா இருப்பேன்.. சேம் டூ யூ” என்றாள்.
இருவரும் எழுந்து நின்று ”என்ன நதி வெறும் சேம் டூ யூ சொல்ற? உனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு வந்துருக்கேன்… எனக்கும் ஆச இருக்கும்ல ஐ லவ் யூ-னு அழகா சொல்லு” என வினோதன் சொல்ல,
நதியும் சிரித்துக் கொண்டே ”ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச் வினி…” என அவன் கையை எடுத்து அதில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அப்போது அவள் பின்வாசலில் லைட் எரிந்தது.
”யாருடா அது பூஜை நேரத்துல லைட்டப்போட்டது?” என வினோதன் சொல்ல,
நதி பட்டென கண்ணைத் திறந்து, “அய்யோ எங்க வீட்ல எந்துச்சுட்டாங்க.. நீங்க கிளம்புங்க…” என சொல்ல,
”அர்த்தராத்திரில யாரு எந்திக்குறது..? உங்க வீட்ல தூங்குற பழக்கம் இல்லையா?” என வினோதன் கேட்க,
”ஏங்க மிட்நைட் 1.20க்கு நம்ம பேசிட்டு இருக்கோம்.. இது தப்பில்ல… அவங்க இந்த டைம் எந்திக்குறது தப்பா? உங்கள கிளம்புங்க முதல்ல’’ என்றாள்.
”உனக்கு எதுவும் பிரச்சனை வராதுல? நான் வேணும்னா உன் வீட்ல சொல்லி விட்டுட்டு போகவா?” என வினோதன் கேட்க,
“கிழிஞ்சது போ.. கதையே கெட்டுடும்… கிளம்புங்க நீங்க.. நான் பாத்துக்குறேன்…” என்றாள் நதி.
“பாய்… நாளைக்கு காலேஜ்-ல பாப்போம்” என வினோதன் கிளம்ப,
”இருந்தா கண்டிப்பா பாப்போம்” என நதியும் அவன் கொடுத்த சாக்லேட், பிஸ்கட்டை அவள் பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
அங்கே அவள் குடும்பமே அவளுக்காக காத்திருந்தது போல அனைவரும் விழித்திருந்தனர்.
அவள் மனதிற்குள்ளோ ’மாட்டுனடி மானஸ்தி… இன்னைக்கு அவ்ளோ தான் தொலைஞ்சேன்…’ என அவள் இதயச்சத்தம் மேளச் சத்தம் போல டபடப டபடப என அவளுக்கு கேட்க ஆரம்பித்தது.
error: Content is protected !!