Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 32(1)

நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்… அவள் பேசியதை எல்லாம் மீண்டும் நினைத்து பார்த்து தானா இப்படி பேசியது என்னால் எப்படி பேச முடிந்தது… ” ஐயோ நான் ஏன் இவளோ மோசமா மாறிட்டேன்… கடவுளே எனக்கு ஏன் இந்த புத்தி வந்தது… தேவையில்லாம சுபாவை வேற தப்பு தப்பா பேசி மாமாவை கஷ்டப்படுத்தி என்ன காரியம் பண்ணிட்டேன் “…. என்று கூறி தலையில் அடித்து கொண்டாள்….



Advertisement

கண்கள் கலங்க மெத்தையில் அமர்ந்து இருந்தாள்…. “சுபா நான் பார்த்து வளர்ந்தவ… அவளை போய் என்ன சொல்லிட்டேன்… அவங்க என் மனசை கலைக்குற அளவுக்கு நான் என்ன சின்ன குழந்தையா… ” என்று அழுது கொண்டே தனக்குள் கேட்டு கொண்டாள்….

வாணன் அப்போது அறைக்குள் நுழைந்தான்… “மாமா ” என்று அவன் அருகில் சென்றவளை கண்டு கொள்ளாமல்  தன்னை சுத்தம் செய்துகொள்ள பாத்ரூம் சென்று விட்டான்… அவன் அவளை தவிர்த்ததை எண்ணி மீண்டும் அழுது கொண்டே மெத்தையில் அமர்ந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்….

Advertisement

Advertisement

வெளியில் வந்தவன் அவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் வெளியேறிவிட்டான்… அவளை கண்டுகொள்ளாமல் சென்றதால் தனிமையில் அழுது கரைந்தாள்… யாரும் அவளுடன் பேசவில்லை… இரவாகியும் வாணன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை… நந்தினி வெளியில் வந்து பார்த்தாள் அனைவரும் உண்டுவிட்டு வீட்டில் உள்ளோர் உறங்க சென்று இருக்க மாற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று இருந்தனர்… சுபாவின் குடும்பம் இங்கு தான் இருந்தனர்… தன்னை யாரும் அழைக்கவில்லை அனைவர்க்கும் கெட்டவள் ஆகி விட்டோம்  என குற்றவுணர்ச்சியில் இருந்தாள்….

நந்தினி அலைபேசியில் அழைத்து பார்த்தும் எடுக்கவில்லை அவன்… அப்போது தண்ணீர் குடிக்க வந்த சசி அவள் ஹாலில் அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் முன் வந்து நின்றான்… அவள் காலை பேசியது அவனுக்கு கோவம் இருந்தாலும் அழுத முகத்துடன் அமர்ந்து இருப்பதை பார்த்து “ஏன் தூங்காம இங்க உட்காந்து இருக்க க்கா போய் தூங்கு” என்று கூறினான்…

Advertisement

அதற்கு அவளோ மாமா இன்னும் வரல சசி போன் பண்ணாலும் எடுக்கவே இல்ல… நீ போன் பண்ணி பாரேன்.. ரொம்ப லேட் ஆகிடிச்சு என்று அழுதவாறே கூறினாள்….

“அழுவதா க்கா… நில்லு நான் கால் பண்றேன்” என்று கூறி வாணனுக்கு அழைத்தான்….

அந்த பக்கம் வாணன் எடுத்தவுடன் “அத்தான் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல.. அக்கா உட்காந்து அழுதுட்டு இருக்கா நீ இன்னும் வரலனு எங்க இருக்கீங்க” என்று சசி கேட்டான்…

அதற்கு வாணனோ “சசி இங்க நான் மெய்யனூர் வந்துட்டேன் டா… சொல்ல மறந்துட்டேன்… நீ போய் தூங்கு காலைல வரேன் ” என்று கூறி விட்டு வைத்து விட்டான்…..

தன்னையே பார்த்து கொண்டு இருந்த நந்தினியை பார்த்து தயங்கியவாறே “அக்கா அத்தான் மெய்யனூர் போயிட்டாங்கலாம் நீ போய் தூங்கு காலைல வரேன்னு சொல்லிட்டாங்க”  என்று கூறினான்….

அனைத்தும் தன்னால் தானே என்று அங்கேயே மடங்கி அமர்ந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்… “அக்கா அக்கா இங்க பாரு எதுக்கு அழுகுற… மாமா நாளைக்கு வரேன்னு சொல்லிட்டாங்க அழுகாத ” என்று சசி அவளை சமாதானம் படுத்த முயன்றான்….

“இல்ல சசி நான் அவங்க பேச்சை கேட்டு இருக்க கூடாது புத்தி கெட்டு போய் அவங்க பேச்சை கேட்டு என்ன என்ன பேசிட்டேன்… உன் கல்யாணத்தை கூட ஒழுங்கா கவனிக்காம அவங்க பேச்சை கேட்டு என்ன என்ன பண்ணிட்டேன் எல்லாம் என் தப்பு தான்.. சசி என்னை வீட்டுல விடுறியா… நான் மாமாவை பாக்கணும் டா….” என்று அழுது கொண்டே கேட்டாள்…

நில்லு க்கா கார் சாவி எடுத்துட்டு வரேன் என்று அவன் சாவி எடுத்து வர திரும்பும் போது கர்ணன் சத்தம் கேட்டு வெளியே வந்தான்….. “என்ன ஆச்சு ண்ணா ஏன் வெளிய நிக்குறிங்க என்று கேட்டான்…

“அத்தான் மெய்யனூர்ல இருக்காரு டா வீட்டுக்கு வரல.. அக்கா அழுகுது அத்தானை பாக்கணும்னு.. அது தான் விட்டுட்டு வர கிளம்புறேன்” என்று கூறினான்….

“ண்ணா நீ வீட்டுல இரு நான் போய் விட்டுட்டு வரேன்.. அண்ணி தனியா இருப்பாங்க… நீ போ” என்று கூறி விட்டு சாவியை எடுத்து கொண்டு மெய்யனூர் கிளம்பினான் நந்தினியை அழைத்து கொண்டு….

அவர்கள் சென்றவுடன் கதவை சாத்தி விட்டு அறையினுள் சென்றான் அவனின் மனைவியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் நுழைந்து அவளை இம்சை செய்து கொண்டு இருக்கிறாள் அவனின் மனையாள்…. அவளுக்கு முதல் முதலாக நெற்றி முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.. அவளும் உறக்கத்திலேயே அவனை உணர்ந்து அவனுள் ஒன்றி “லவ் யூ சசி” என்று கூறி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு உறங்கினாள்…

அவளின் லவ் யூவில் மெல்ல சிரித்து அவளை அணைத்து கொண்டு உறங்கினான் சசி… இருவரும் இணைய சில நாட்களே உள்ளன… இருவரும் சீக்கிரம் இணைந்து வாழட்டும்…..

அங்கு முகுந்தனின் வீட்டில் பெரியவர்கள் மூவரும் தூங்கி சுப்ரியா அவளின் கனவு நாயகனின் போட்டோவை பார்த்து “நீ எப்போ மாமா என் லவ்வை புரிஞ்சிக்க போற…. எத்தனை தடவை என் வாய்ஸ் கேட்டு இருப்ப… நான் பேசுற அப்ப என் வாய்ஸ் உனக்கு ஞாபாகம் வரலையா… நீ எப்போ எனக்கு லவ் யூ சொல்லி நமக்கு எப்போ கல்யாணம் ஆகும்… நீ சொல்லலனா போடா… நா சொல்றேன் ஐ லவ் யூ டா மாமா… லவ் யூ சோ மச் கர்ணா மாமா ” என்று கூறி அவனுக்கே தெரியாமல் எடுத்த போட்டோவை நெஞ்சோடு அணைத்து உறங்க ஆயத்தம் ஆகினாள்…..

முகுந்தனின் அறையில் ஆகாஷ் அவனின் குட்டி கட்டிலில் உறங்கி இருக்க கண்மணி முகுந்தனின் தோளில் சாய்ந்து கொண்டு இருந்தாள்… ” மாமா…. நான் கேக்குறதுக்கு எப்போ ஒத்துக்குவ…. எத்தனை நாளா கேட்குறேன் ” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்….

“நோ கண்ணம்மா…. தம்பி பிறக்குற அப்ப நீ பட்ட கஷ்டமே போதும் கண்ணம்மா… நமக்கு தம்பியே போதும் டா.. என்னால நீ கஷ்ட படுறதை பாக்க முடியல…” என்று அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு கூறினான்….

மாமா இந்த தடவ அப்படிலாம் ஆகாது…. என்று அவள் கூறி கொண்டு இருக்கும் போதே அவன் பாணியில் அவளை வாயை அடக்கி விட்டான் முகுந்தன்…. கண்மணி முதலில் அவனை முறைத்து பின் அவனுள் ஒன்றி விட்டாள்….

இங்கு அர்ஜுனன் வீட்டில் வர்ணன் அவனின் இளவரசியை நெஞ்சில் போட்டு தட்டி கொடுத்து கொண்டு இருக்க அவனின் மஹாராணியோ அவனை முறைத்து கொண்டு இருந்தாள்… சிவனேஸ் அங்கு கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தான்…. அவர்களின் பெண்ணரசி கார்த்திகா தூங்கி இருக்க அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு  கீழே விழாமல் இருக்க சுற்றியும் தலையணை வைத்துவிட்டு அவனின் மனையாளை நோக்கி சென்றான்….

அவள் முகத்தை திருப்பிக்கொள்ள “என்னடி ஜானு ஏன் மாமாவை முறைச்சிட்டு இருக்க….” என்று கேட்டு அவளை அணைத்து கொண்டான்….

“ஒழுங்கா போயிடு டா கொலைவெறில இருக்கேன்… ” என்று அவனை தள்ளி விட்டு சோபாவில் சென்று நின்று கொண்டாள்….

“என்னாச்சு ஜானு ஏன் இவ்வளவு கோவம்???” என்று கேட்டுக்கொண்டே அவனும் சோபாவில் அமர்ந்து அவளின் மடியில் படுத்து கொண்டான்…

“காலைல உங்க அண்ணி அவளோ பேசுனாங்க எதோ எதிர்த்து பேசுனியா…. வாயை மூடிட்டு நின்னுட்டு இருந்த… கேட்க போன என்னையும் போக விடாம பண்ணிட்ட… போடா… எதுக்கு இப்படி சேன்ஜ் ஆனாங்க இப்போ அண்ணா பேசுனதும் உண்மை புரிஞ்சிடிச்சோ…. இப்போ புரிஞ்சாலும் அவங்களை பாதிக்குற மாதிரி எதோ பிரச்சனை நடந்தா உடனே மாறிடுவாங்க…. ” என்று கூறிக்கொண்டு இருந்தவளை இடையிட்டு “ஜானு விடு கேட்க கூடாதவங்க பேச்சை கேட்டு பேசிட்டாங்க இனிமே அப்படி பண்ண மாட்டாங்க ” என்று கூறி அவளின் கையை தன் தலைமுடியின் மேல் வைத்துவிட்டு திரும்பி அவளின் இடுப்பை அணைத்து கொண்டு தூங்கிவிட்டான்… அவளும் அவனின் தலையை கோதி கொடுத்து கொண்டு இருந்தாள்…..

ஜனனியின் கூற்று உண்மையாகுமா?!?!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!