இங்கு காரில் சென்று கொண்டு இருந்த நந்தினி அழுது கொண்டே இருந்தாள்…. கர்ணன் அவளிடம் எதுவும் பேசவில்லை… பத்தேநிமிடத்தில்அய்யனார்புரத்தில்இருந்துமெய்யனூர்சென்றுஇருந்தான்… வீட்டினுள்காரைநிறுத்திவிட்டுஅவனுக்குஅழைத்தான்… வாணன்தூங்காமல்கணக்குவழக்கைதான்பார்த்துகொண்டுஇருந்தான்… அவனுக்குமனைவியில்செயல்உவப்பானதாகஇல்லை.. எப்படிஅவளால்பேசமுடிந்ததுதன்தங்கையைஎன்றுயோசித்துயோசித்துஅவனுக்குதூக்கம்வரவில்லை… அதனால்கண்ணக்கைபார்க்கலாம்எனநினைத்துஎடுத்துவைத்துபார்த்துகொண்டுஇருந்தான்….
நடுங்கி கொண்டே உள்ளே சென்றவள் கதவை அடைத்துவிட்டு வாணனை நோக்கி திரும்பினாள்…. “சாரி மாமா தெரியாம பேசிட்டேன்… அவங்க பேச்சை கேட்டு எது எதுவோ பேசிட்டேன்… மன்னிச்சுடு மாமா சாரி ” என்று அழுதவாறே கூறினாள்….
“தெரியாம பேசுனியா…. அவங்க தூண்டி விட்டதும் உன் மனசுல இருந்தது எல்லாம் வெளிய வந்துடுச்சு…. அவங்க பேசாம போனாலும் ஒரு நாள் உன் மனசுல இருந்தது வெளியில வந்து தான் இருக்கும்…. உன் மேல எனக்கு இன்னும் கோவம் போகல… கோவம் போனதும் பேசுவேன்… அது வரைக்கும் தயவு செஞ்சி முன்னாடி வந்து நிக்காத சரியா….. ” என்று கூறிவிட்டு பக்கத்து அறைக்கு சென்று விட்டான்…
நந்தினியும் அழுது கொண்டே தூங்கிவிட்டாள்…பக்கத்து அறைக்கு வந்த வாணன் பால்கனியில் நிலவை வெறித்தவாறு நின்றுவிட்டான்… “உன் மனசு இன்னும் மாறல…. உன்னை உன் தம்பி கேள்வி கேட்டதும் உன் குற்றவுணர்ச்சி வெளிய வந்து இருக்கு… திரும்பியும் அந்த அம்மா பேசுனா திரும்பியும் இதே மாதிரி ஆவ… உன் மனசு எப்போ முழுசா மாறுதோ அப்போ உன்கூட பேசுறேன் இனிம்மா” என்று கூறிவிட்டு அவனும் உறங்கிவிட்டான்….
கீழே தூங்கிக்கொண்டு இருந்த கர்ணன் திடீரென எழுந்து அமர்ந்தான்…. “அடியே ரியா ஒரு நாளாச்சும் என்னை தூங்கவிடேன்…. ஏன் கனவுல வந்து இம்சை பண்ணுற…. போன்ல தைரியமா லவ் சொல்லுற.. நேர்ல பார்த்தா அப்டியே கண்டுக்காம போற… ஆனா யாருக்கும் தெரியாம சைட் மட்டும் அடிப்பீங்களா மேடம்…. சீக்கிரம் உங்கிட்ட லவ் சொல்றேன்டி ஏன் செல்லாகுட்டி என்று கூறி சுபாவின் வளைகாப்பில் யாருக்கும் தெரியாமல் சுப்ரியாவின் புகைப்படத்தை ரசித்தவாறே மீண்டும் கண் அயர்ந்தான் கர்ணன்…..
அய்யனார்புரம்…..
பாலா வீட்டில் கிரிஜா ஒரு மூலையில் கன்னத்தை பொத்தியாவாரு அழுது கொண்டே நின்று இருந்தார்… எவ்வளவு தைரியம் இருந்து இருந்தா குடும்பதுக்குள்ள சண்டை மூட்டி இருப்ப…. உன்னை எல்லாம் சும்மாவே விட கூடாது என கூறி கன்னத்தில் நான்கு ஐந்து அறை அறைந்து விட்டு அறைக்குள் சென்றுவிட்டார் பாலா…
அர்ஜுனன் வீட்டில் அவன் அறையில் ஆரவ் அவன் கட்டிலில் தூங்கி இருக்க நிரவி குட்டியோ பசிக்கு அழுதவாரு இருந்தாள்… அர்ஜுனன் அவளை தூக்கிவைத்து கொண்டு ஏற்கனவே மித்ரா காய்த்து தந்த பாலை குழந்தைக்கு புகட்டி கொண்டு இருந்தான்… குழந்தையின் சத்தத்தில் காய்ச்சலின் காரணமாக தூக்கத்தில் இருந்த சுபா எழுந்து இருந்தாள்… எழுந்தவள் அர்ஜுனனிடம் மாமா பாப்பா ரொம்ப அழுகுறாளா….. என்னால பாப்பாவுக்கு பால் தர முடியல… என்று கூறி கண் கலங்கினாள்… அவள் கலங்குவதை பார்த்து “அம்மு கண்ணுல இருந்து கண்ணீர் கீழ இறங்குச்சு என்கிட்ட அடி வாங்கிக்குவ… ஒழுங்கா கண்ணை துடை பாப்பா பால் குடிச்சிட்டா… தூக்கமும் வந்துடுச்சு… ” என்று கூறி பால் பாட்டிலை கீழே வைத்து விட்டு பாப்பாவை தோளில் போட்டு கொண்டு ஏப்பம் விட முதுகை தட்டி கொடுத்தான்…. நிரவி குட்டியும் ஏப்பம் விட்டுவிட்டு அவளின் அப்பாவின் தோளில் சுகமாக தூங்கிவிட்டாள்….
சிறிது நேரம் தோளிலேயே தூங்க வைத்துவிட்டு கட்டிலில் படுக்க வைத்தான்…. பின் அவள் விழுந்து விடாமல் இருக்க பாப்பாவை சுற்றியும் தலையணை வைதான் “பாப்பா தூங்கிட்டா அம்மு உனக்கு பீவர் எப்படி இருக்கு இப்போ ஓகேவா” என்று கூறி அவளை தொட்டு பார்த்துவிட்டு “இப்போ குறைஞ்சி போச்சு அம்மு….. ஏன் எழுந்துட்ட தூங்கலாம்ல” என்று கேட்டு அவளின் பக்கம் அமர்ந்தான்….
“காலைல இருந்து தூங்கிட்டே இருந்ததுனால தூக்கம் போயிடுச்சு மாமா… பாப்பாவை நாலு நாளா தூக்க கூட இல்ல… ” என்று கூறி அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்….
“இன்னும் ஒரு நாள் அம்மு நாளைக்கு விட்டுட்டு அடுத்த நாள் பாப்பாவை தூக்கிக்கோ” என்று கூறி அவளின் தலையை கோதி கொடுத்தான்…
மாமா நீ தூங்கு… நாலு நாளா நீ ஒழுங்கா தூங்கவே இல்ல… நானும் கொஞ்ச நேரத்துல தூங்கு என்று கூறினாள்… அர்ஜுனனும் அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு உறங்க ஆயத்தம் ஆனான்…. அந்த நேரம் ஆரவ் எழுந்து தூக்க கலகத்திலேயே அர்ஜுனன் அருகில் வந்து அவன் மேல் படுத்து கொண்டான்… ஒரு பக்கம் அவனின் பெண்ணரசி தூங்கி கொண்டு இருக்க இன்னொரு பக்கம் அவனின் அம்மு படுத்து கொண்டு இருந்தாள்… அவன் மேலே ஆரவ் தூங்கி இருக்க சந்தோசமாக கண் அயர்ந்தான் அர்ஜுனன்…