மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்குமனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.
“சார்..மேடம்” என தயங்கியபிரபுவை பார்த்த தன்ராஜ் “என்ன இருந்தாலும் நீயும் நானும் ஆம்பிளயா..நாளைக்குநம்மபேர்லஅவங்க ஏதாவது புகார் குடுத்திடகூடாதுல்ல..அதான்..நம்மசேப்ட்டிக்காகமேடம் அவளே கிளம்பி வந்திட்டா“
சில நிமிடங்களில் ரூபாவும், அவளுடைய அம்மா விலாசினியும் வந்து சேர்ந்தனர்.
Advertisement
அவர்களை வரவேற்றதன்ராஜ் ” வாங்க மா..என்ன மா தயாராஇருக்கீங்களா?”
“பத்திரத்தை படிச்சுபார்த்துட்டீங்கனா மேற்கொண்டு நாம கையெழுத்து போட்டு அக்ரீமெண்ட் ரத்து பண்ணிக்கலாம்“..
ஏதோ பேச வந்த ரூபாவைபார்வையால்அடக்கியவிலாசினி “தோ..சார்..நீங்கலாம்இன்டர்ஸ்ட்ரில பெரிய ஆளுங்க சார்..பாரம்பரியமான கம்பெனி…”
Advertisement
“நமக்குள்ள எதுவும் பின்னால பிரச்சினை வரக்கூடாது இல்லையா சார்..எனக்கும்லீகல் விஷயங்கள் தெரியாது சார்..”
“நாங்க எல்லாம் உலகம் தெரியாத சாதாரண ஆட்கள் இல்லையா சார்..தோ..வந்துடுவார் சார்..”
வார்த்தைக்கு வார்த்தை விலாசினி போலி பணிவாக பேசியதை கேட்டு கூர்மையாக தன் மனைவியையும்பிரபுராமையும் பார்த்தார்.
பிரபுராமுக்கோ ஐயோ இந்தம்மா இவ்ளோ பெரிய கிரிமினிலா..நல்ல வேளை நாமதப்பிச்சோம்..என ஆஸ்வாசமாக பெரிய மூச்சு விட்டவர்..சாரை கூட கேட்காமஅவரோடஆஃபீஸ்க்குஇந்தம்மாபாட்டுக்குதன்னோட ஆளை கூப்பிடலாமா.. என கோவமாக தோன்றியது..
“நீங்க உங்க பக்கம் சேப்ட்டிக்காகஉங்கவக்கீலைகூப்பிடறீங்க..நியாயமான விஷயம் தான் மா..”
“ஆனா அவரை எங்கஆஃபீஸ்க்கு வர சொல்றத்துக்குமுன்னாலஎங்க கிட்ட கேட்டிருக்கணும்ல்ல.”
“எங்க நம்பர் உங்க கிட்ட இருக்குல்ல..அட்லீஸ்ட்காலைலகிளம்பறத்துக்குமுன்னாடியாவது ஒரு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாமே..”
“இது ப்ரொடைக்ஷன்கம்பெனிஇல்லையா..சினிமாக்காரங்க நடமாட்டம் அதிகம் இருக்கற இடம்..”
“இப்ப நீங்க வந்திருக்கீங்க..உங்கள மாதிரி பல ஆட்கள் வந்து போற இடம் பாருங்க..”
“அதனாலப்ரைவசிஇஷ்ஷுக்காக நாங்க பொதுவா வெளி ஆட்களைஎங்கஆஃபீஸ்க்குள்ளஅனுமதிக்கறதில்லயே.. இது உங்களுக்கு தெரியாதா..”
தன்ராஜ் மனைவியின் கூர்மையான சொல் அம்பினால்அதிர்ந்தவிலாசினிக்குதிருதிரு என விழித்தபடி என்ன பேசுவது என்றே தெரியாது போனது.
“என்னங்க..பேச்சேவரலயா…உங்களுக்கு இந்த பழக்கம் மறந்து போனாலும் உங்க வக்கீல் ஏற்கனவே எங்க கிட்ட இங்க வர பேசி அனுமதி வாங்கிட்டார்..”
சரியான பொம்பள.. நாமளே பத்து பேரோட சண்டை போடுவோம்..இந்தம்மாநம்மளையே தூக்கி சாப்பிட்டுடும்போலிருக்கே என மனதுக்குள் அவரை திட்டியபடி வெளியில் சிரித்தார்.
இவர்களின் பேச்சு நடந்து முடிவதற்குள் வேகமாக வந்த விலாசினியின் வக்கீல் தாமதமாக வந்ததற்க்கு மன்னிப்பு கேட்டு உட்கார்ந்தார்.
அதற்குள் அனைவரும் காபி வர அமைதியாக காபி குடித்தனர்.
அதன் பின் நல்ல நேரம் முடிவதற்குள் கையெழுத்து போட வேண்டும் என விஷயங்கள் வேகமாக நடந்தன.
தன்ராஜ் பத்திரத்தை எடுத்து விலாசினியின்லக்கீலிடம்குடுக்க அவரும் சில நிமிடங்கள் செலவழித்து படித்து முடித்து “எதுவும் பிரச்சினை வராது மேடம்.. நீங்க தாராளமா கையெழுத்து போட்டுடலாம்“
உடனே பத்திரத்தை வாங்கிய விலாசினி அங்கிருந்த வெங்கடாசலபதிபடத்தின்திருவடியில் வைத்து தன் மகளிடம் குடுக்க அவளும் கையெழுத்து போட்டு குடுக்க..ஒப்பந்தம் ரத்து ஆனது..
நினைவெல்லாம் நீயே 11
அவர்கள் வெளியே வரும் நேரம் சரியாக அங்கு வந்த தன்ராஜின் மகன் ரூபராஜ்ரூபாவை சுத்தி அத்தனை ஆட்கள் இருப்பதை பற்றி கூட யோசிக்காமல் பார்த்து பார்த்தபடி இருக்க அதை பார்த்து வெட்கசிரிப்போடு தலை குனிந்தவிலாசினியைபார்த்தவன் ஹா ஹா..ஹா..எனசிரித்து “பார்றா..அங்க பாத்தா..இங்கவெக்கம்வருது..இது நல்லாஇருக்கே..”
“நம்மபேரு கூட பொருத்தம இருக்கு..ரூபா…ரூபராஜ்செம்மல்ல..தேவதை மாதிரி வளர்த்திருக்கியே..விசா…”
“சுண்டினா ரத்தம் வந்திடும்போலயே..உம் பொண்ணுக்கு..எப்பவெச்சுக்கலாம்..வெட்கத்தபோக்கறவேலைய” என கூச்சமில்லாமல் கேட்டான்
அதை கேட்டு இன்னும் அதிகமாக வெட்கப்பட்டவிலாசினி “நீங்க பெரிய வீட்டு பையன்..உங்களுக்குஇல்லாமயா..”
“எங்கஎப்பனு காலமும் நேரமும் நீங்க சொல்லி விடுங்கசார்..பாப்பாஉங்களுக்காவேகாத்திருப்பாங்க..” என வழிந்தபடி பேசினார்.
“சரி..ஏதோஹிந்திசான்ஸ்கிடைச்சிருக்காமே..கைப்படாதரோஜாவாட்டம்இருக்கற கிளி பறந்து போயிடுச்சுனா..”
“உங்களை திருப்தி பண்ணாம நாங்க போக மாட்டோம் சார்..” என்ற விலாசினியின்உற்சாகத்தில்விசிலடித்தவன் “சரி நாளைக்கு ராத்திரி ஏழு மணிக்கு எங்ககெஸ்ட்ஹவுஸ்க்குபாப்பாவை தனியா அனுப்பி வெச்சிடு..நானும் தனியா பாப்பாக்காககாத்திட்டு இருப்பேன்…பொண்ணைபாத்தா அம்மா வெக்கப்படுறதுபுதுசாஇருக்கே..” என கண் அடித்து விட்டு வீட்டின் உள்ளே போனான்.
அதை கேட்டு அம்மாவை முறைத்து ஏதோ சொல்ல தொடங்கியரூபாவைபார்வையாலேஅடக்கியவிலாசினி ” இது அவங்கஇடம்..சுத்திஆளுங்கஇருக்காங்க..எதுவும் பேசாத..எது சொல்லணும்னாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..அமைதியா வா..” என்றபடி காரில் ஏறி வீடு நோக்கி சென்றனர்.
வீட்டுக்கு போனதும் ஃபோனை எடுத்து யாரிடமோ தலையாட்டி கொண்டே சிரித்தபடி பேசிய விலாசினியைஅருவெறுப்பாக பார்த்து நேராக பாத்ரூம்க்குபோனவளுக்குரூபராஜின் பார்வை நினைத்து இன்னும் அருவெறுப்பாகஷவரை திறந்து விட்டு நிற்க..எவ்வளவு நேரம் என நேரமே மறந்திருக்க..அம்மா வந்து கூப்பிடும் வரை அப்படியே நின்றாள்.
சரியாக ஆறு மணிக்கு குளித்து தயாராகிரூபாவோடு புறப்பட்ட விலாசினியிடம் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் உட்கார்ந்தாள்.
காரில் கிளம்பியதுமே தன் ஃபோனை எடுத்து சத்தமே வராமல் பேசிய விலாசினிம்..ம்..சரி..சரி என தன் பேச்சை முடித்து கொண்டார்.
தன்ராஜின்கெஸ்ட்ஹவுஸைஅடைந்ததும்வாட்ச்மேன் கூட இல்லாமல் கேட் திறந்திருக்கசத்தமேஎழுப்பாமல் இருவரும் நுழைய அங்கிருந்த ஹாலில் உட்கார்ந்திருந்தரூபராஜை பார்த்து குழைந்தவிலாசினி தன் கைப்பையில் இருந்ததை வெளியே எடுத்து வைத்தார்..
“என்ன விசா..எல்லாம் மறந்துடுச்சுபோல..இதெல்லாம் எனக்கு பழக்கமேகிடையாது..எடுத்து உள்ள வை…” என்றவன் “உக்காருங்க..நீ நின்னா எனக்கு கால் வலிக்கிது பாப்பா..” என இளித்தான்.
தன் திட்டம் நிறைவேறுவது எப்படி என யோசித்தபடிஉட்கார்ந்தவிலாசினியைபார்த்தவன் “என்ன விசா யோசனை..”
“ஒண்ணும்இல்ல சார்..வீட்டுல யாரையும் காணோமே..வாட்ச்மேன் கூட இல்ல..அதான்..”
“இது என்னோட தனிப்பட்ட இடம்..இங்க யாரும் வர மாட்டாங்க…இருந்த வாட்ச்மேனையும்அனுப்பிட்டேன்..”
“அதுவும் இல்லாம நீ என்ன எங்க வீட்டுக்கு சீராடவாவந்திருக்க..உம்பொண்ணை *** **** தானே வந்திருக்க..அதை மட்டும் பாரு…” என சொல்லி பெரிய குரலில் சிரித்தான்.
அவன் சொன்னதை கேட்டு பெரும் கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டாமல் சிரித்த விலாசினியைபார்த்தவன் “நீ கெளம்புவிசா…
“பாப்பாவ என் கூட ரெண்டு நாள் வெச்சுக்கஆசையாஇருக்கு..நானே திரும்பி கார்ல அனுப்பி வெக்கறேன்..” என விலாசினியை கிளம்பி வைக்க முயன்றான்.
“சரிங்க..சார்..உங்க இஷ்டம் போல..” என சொல்லி சிரித்தபடி வெளியே போனவர்பேயறைந்ததை போல உடனே உள்ளே ஓடி வந்தார்.
“என்னாச்சு..விசா..ஏன் இப்படி பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வர…”
“சார்..சார்..நான்கிளம்பணும்னுவெளியபோனா…எந்த நாதாரிப்பய தகவல் சொன்னானோதெரியல…வெளியபூராபத்திரிக்கைக்காரங்களாமைக்புடிச்சிட்டுநிக்கறாங்க சார்..”
“என்னது பத்திரிகை காரங்களா…எப்டி மோப்பம் புடிச்சாங்க..” என வாயில் வந்த கெட்ட வார்த்தைகளில் அவர்களை திட்டியபடி வெளியே சென்று பார்த்து விட்டு வந்தவன்விலாசினியிடம் “உங்ககார்லயா வந்த”
“இல்ல சார்..டாக்ஸில தான் வந்தோம்..”
“நல்லதாபோச்சு..கொஞ்சம் இரு..” என்றவன் உடனே தன் ஃபோனை எடுத்து யாரிடமோ பேசி ஃபோனைவைத்தவன் “நீ என்ன பண்ற..எங்க வீட்டுக்கு பின்னால ஒரு கேட் இருக்கு அது வழியாவெளியபோயிடு..ரெண்டு வீடு தள்ளி போனதும் அங்க ஒரு வெள்ளை கலர் டாக்ஸிநிக்கும்..”
“அதுல ஏறி வீட்டுக்கு போயிடு…நாம பிறகு பேசிக்கலாம்..” என சொல்லி அவர்களை அனுப்பி விட்டு பதட்டம் தீர தண்ணீர் குடித்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் மறுபடியும் யாருக்கோஃபோன் செய்த விலாசினி பார்த்த ரூபாவுக்கு பெரும் கோபம் வர அவளை முறைத்து விட்டு தன்னுடைய ரூம்க்குள் வேகமாக நுழைந்தாள்.
வெளியே போட்டு சென்று வந்த தன்னுடைய உடையை பார்த்ததும் தன் மேலேயே கோபம் வர வேகமாக தன்னறைக்குள் போய் மேக்கப் கலைத்து, குளியறைக்கு நுழைந்து அரைமணி நேரத்துக்கு மேல் குளித்து, வீட்டில் அணியும் டீ ஷர்ட்ட்ராக்ஸ்க்கு மாறி அங்கிருந்த பாட்டிலை எடுத்து வேகமாக தண்ணீர் குடித்தும், ரூமுக்குள்நடந்தபடி இருந்தும் கோபம் அடங்கவில்லை.
சிறிது நேரத்தில் அங்கு வந்த விலாசினியையும் அவள் கையில் இருந்த ஜுஸ்டம்பளரை பார்த்ததும் கோபம் அதிகமாக எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன டி கோவம் உனக்கு..வேகமா கதவை சாத்திட்டு வர..வீட்டுலநாம மட்டும் இல்ல..வேலை செய்யறஆட்களும்இருக்காங்க…சுவற்றுக்கும் காது உண்டு…”
“கொஞ்சம் பேரும்,பணமும், புகழும்வந்திட்டா போதும்.. நாமசெய்யற ஒவ்வொரு செயலையும்மத்தவங்கஉத்துகவனிப்பாங்க..அது வேறவிதமா வெளி உலகத்துக்குபோகும்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..”
“நமக்குனு ஒரு இமேஜ் வர வெக்கறது ரொம்ப கஷ்டம்…அதநிமிஷமாபலூன்வெடிக்கற மாறி வெடிக்கற மாறி சுலபமா உடைக்க வெச்சிடாத..புரியுதா..”
“ஏன் எதுக்கு நான் கோவமாஇருக்கேன்னு உனக்கு தெரியாதா..இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மாறி அசிங்கமா ட்ரஸ் பண்ணி என்னை அழைச்சிட்டு போய் ஊருக்கு காட்ட போற..”
“எனக்குனுமானஅவமானமேஇருக்காதா..ஒவ்வொருத்தனும் என்னை பாக்குறபார்வைக்கும், தேவையேஇல்லாம கண்ட இடத்துலயும்தொடும் போதும் அங்கயேசெத்துடலாமானு இருக்கு..”
“உனக்கு எங்க அது புரிய போகுது..உனக்கு தேவை பணம்..அது தான் சம்பாதிச்சுகுடுத்திட்டேன்ல்ல..”
“இனி என்னை இது மாறி எல்லா கூப்பிட்டு போகாத..நான் வர மாட்டேன்…”
“ஏய்…இந்தா பாருடி..என்னமோ நீ தான் நேரிடையாகண்ணகியோட வாரிசு மாதிரி சலங்கை கட்டி ஆடாத..புரியுதா…
“என் கஷ்டம் தெரியாமபேசாத..உன்னை சுத்தி நடக்கறது எதுவும் உனக்கு தெரியாது..நான்தெரியவிட்டதில்ல..”
“நீ பத்து படம் நடிச்சிருக்கதானே..எத்தனை பேர் எத்தனை விதமா கார் வாங்கி தரேன், பங்களா வாங்கி தரேன்..பண்ணை வீடு வாங்கி தரேன்னு உன்னை அவன் கூட இருக்க கேட்டிருப்பான்… எவ்ளோஃபோன் வரும் தெரியுமா..எல்லாத்தையும் நான் எவ்ளோசாமர்த்தியமா எவன் கிட்டயும்மாட்டாம உன்னை காப்பாத்தி கொண்டு வர எவ்ளோபாடுபட்டிருப்பேன்..”
நிறுத்தாமல் பெருமை பேசியபடி இருந்த விலாசினியை கை காட்டி நிறுத்தியரூபா பெரும் கோபத்தோடு “நிறுத்து மா..அப்டிஎன்னமா நீ கஷ்டப்பட்ட.. அருவெறுப்பா பார்வை..சம்பந்தமேஇல்லாமபக்கத்துல வந்து இளிச்சு..18+ பேச்செல்லாம்பேசறது..உடம்பை தடவறது..இது எதாவது ஒண்ணு நீ அனுபவிச்சிருக்கியா..மா..சொல்லு..
இதெல்லாம் தாண்டி வந்த எனக்கு கஷ்டமாஇல்ல உனக்கு கஷ்டமா..”
“என்னை ராத்திரி தேவதையா அனுபவிக்க ஒவ்வொருத்தரும்கேக்கும் போதும் எனக்கு பதிலா நீ ஒவ்வொரு தடவையும் வேறயாரையோ ஏற்பாடு பண்ணி அனுப்பி வெச்சதுதெரியாதுனுநெனக்கறியா..”
“எனக்கும் சுத்தி நடக்கறது எல்லாம் தெரியும் மா..சரிபோனாபோகட்டும்னு விட்டு வெச்சிட்டிருக்கேன்..அவ்ளோ தான்..”
“இங்கபாருடி..ஓவராபேசிட்டேபோகாத..உனக்கு மூணு வயசு திருவிழா தனியா நின்னுட்டுஅழுதிட்டு இருந்த.. காப்பாத்தி நாங்க கூப்பிட்டு வரலேனா இந்த வாழ்க்கை கிடைச்சிருக்குமா..இல்ல நன்றி இல்லாமஇப்டி பேசி இருக்க தான் முடியுமா..?
“சரி மா..நீகாப்பாத்தி கூப்பிட்டு வந்த..வளர்த்த..சரி..அப்பா படிக்க வெச்சாரு..ரெண்டு டிகிரி வாங்க வெச்சாரு..இதெல்லாம் நான் மறக்கல..மறக்கவும் மாட்டேன்..”
“அப்பா இருக்கற வரை எல்லாம் சரியா இருந்ததே மா..அண்ணனுங்க..ரெண்டு பேரும் நாங்க வெளிநாட்டுலஇருக்கோம்..அடிக்கடி வந்து உங்களை பாக்கறதுகஷ்டமா இருக்கு..இங்கவந்துடுங்கனுகூப்பிட்டாங்களே..”
“அவங்க மட்டும் இல்லயே..அண்ணிங்க..பசங்க எல்லாரும் தானே இப்ப வரைக்கும் கூப்பிட்டு இருக்காங்க..ஆனா நீ அவங்க கூட போக விரும்பல..அங்க போனா..உன்னாலஅவங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கறதுகஷ்டம்னுமாட்டேங்குற..”
“எத்தனை நாளுக்கு மா இந்த வாழ்வு எனக்கு பிடிக்கலமா..சொத்து எல்லாம் உன் பேர்ல தானே இருக்கு..நீவெச்சிட்டுநல்லாவாழுமா..எனக்கு எதுவும் வேணாம்..வெறுத்து போச்சு மா..எல்லாத்தையும்விட்டுட்டுஎங்கயாவதுபோயிடலாமானு இருக்கு..”
“அப்பா இருந்தவரைக்கும் நான் அவரோட வளர்ப்பு மகள்னு ஒரு தடவை கூட சொன்னதேஇல்ல..ஆனா அவர் போன பிறகு ஒரு நாள் கூட நீ சொல்லாமஇருந்ததேஇல்ல..”
“என் பொறுமை எல்லை மீறிட்டு இருக்கு..என்னிக்குவேணுமானாலும்வெடிக்கும்..நான்இல்லாமலே போகலாம்..”
“தூக்கமாவருது..தூங்க போறேன்..தயவு செய்து காலைல சீக்கிரம் எழுப்பாத..என்னை இன்னிக்காவதுநிம்மதியா தூங்க விடு..” என குரலேஎழுப்பாமல் கடினமாக சொல்லி விட்டு ரூபாதன்னறைக்குள் போனாள்.
அவள் பேசி சென்றதை கேட்ட விலாசினி..ஐயோ..ஹிந்தில நடிக்க நல்ல வாய்ப்பு வருதே..இப்பனுபாத்து இந்த பொண்ணு புத்தி இப்டிமாறுதே..சரியில்லயே..”
“கூடவே தானே இருக்கோம்..நம்கண்ல மண்ணை தூவி யார் இவளுக்கு சொல்லி தராங்கனுதெரியலயே..கை விட்டு போயிடுவாபோலிருக்கே.. ஏதாவது செஞ்சு தக்க வெச்சிட்டேஆகணும்..என மனசுக்குள் கருவியபடிஇரவெல்லாம் தூங்காமல் பல கணக்குகளை போட்டு கொண்டு இருந்தார் விலாசினி (தொடரும்).