Skip to content
Post Views: 1,091
நினைவெல்லாம் நீயே 10
மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.
“சார்..மேடம்” என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் “என்ன இருந்தாலும் நீயும் நானும் ஆம்பிள யா..நாளைக்கு நம்ம பேர்ல அவங்க ஏதாவது புகார் குடுத்திட கூடாதுல்ல..அதான்..நம்ம சேப்ட்டிக்காக மேடம் அவளே கிளம்பி வந்திட்டா“
சில நிமிடங்களில் ரூபாவும், அவளுடைய அம்மா விலாசினியும் வந்து சேர்ந்தனர்.
Advertisement
அவர்களை வரவேற்ற தன்ராஜ் ” வாங்க மா..என்ன மா தயாரா இருக்கீங்களா?”
“பத்திரத்தை படிச்சு பார்த்துட்டீங்கனா மேற்கொண்டு நாம கையெழுத்து போட்டு அக்ரீமெண்ட் ரத்து பண்ணிக்கலாம்“..
ஏதோ பேச வந்த ரூபாவை பார்வையால் அடக்கிய விலாசினி “தோ..சார்..நீங்கலாம் இன்டர்ஸ்ட்ரில பெரிய ஆளுங்க சார்..பாரம்பரியமான கம்பெனி…”
Advertisement
“நமக்குள்ள எதுவும் பின்னால பிரச்சினை வரக்கூடாது இல்லையா சார்..எனக்கும் லீகல் விஷயங்கள் தெரியாது சார்..”
Advertisement
“பாப்பாக்கு எதுவுமே தெரியாது சார்..ரொம்ப அப்பாவி..”
“என்ன பண்றது..நான் அவளை உலகம் தெரியாம என் கைக்குள்ளயே வெச்சு வளத்திட்டேன்..”
“நான் எங்க போய் நடிக்க சொல்றேனோ..அங்க போய் நடிச்சு குடுத்துட்டு வந்துடும்…அவ்ளோ தான் தெரியும்..”
Advertisement
“அதான் நேத்து எங்க வக்கீல் கிட்ட பேச்சுவாக்குல சொல்லிட்டு இருந்தேனா..அவரே சார் ஆஃபீஸ் தானே நானே பத்துமணிக்கு அங்க வந்துடறேன்னு சொன்னார்..”
“உங்க சைட்க்கு மேடம் இருக்காங்க..போறாததுக்கு டைரக்டரும் வக்கீல் வேற…”
“நாங்க எல்லாம் உலகம் தெரியாத சாதாரண ஆட்கள் இல்லையா சார்..தோ..வந்துடுவார் சார்..”
வார்த்தைக்கு வார்த்தை விலாசினி போலி பணிவாக பேசியதை கேட்டு கூர்மையாக தன் மனைவியையும் பிரபுராமையும் பார்த்தார்.
பிரபுராமுக்கோ ஐயோ இந்தம்மா இவ்ளோ பெரிய கிரிமினிலா..நல்ல வேளை நாம தப்பிச்சோம்..என ஆஸ்வாசமாக பெரிய மூச்சு விட்டவர்..சாரை கூட கேட்காம அவரோட ஆஃபீஸ்க்கு இந்தம்மா பாட்டுக்கு தன்னோட ஆளை கூப்பிடலாமா.. என கோவமாக தோன்றியது..
“நீங்க உங்க பக்கம் சேப்ட்டிக்காக உங்க வக்கீலை கூப்பிடறீங்க..நியாயமான விஷயம் தான் மா..”
“ஆனா அவரை எங்க ஆஃபீஸ்க்கு வர சொல்றத்துக்கு முன்னால எங்க கிட்ட கேட்டிருக்கணும்ல்ல.”
“எங்க நம்பர் உங்க கிட்ட இருக்குல்ல..அட்லீஸ்ட் காலைல கிளம்பறத்துக்கு முன்னாடியாவது ஒரு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாமே..”
“இது ப்ரொடைக்ஷன் கம்பெனிஇல்லையா..சினிமாக்காரங்க நடமாட்டம் அதிகம் இருக்கற இடம்..”
“இப்ப நீங்க வந்திருக்கீங்க..உங்கள மாதிரி பல ஆட்கள் வந்து போற இடம் பாருங்க..”
“அதனால ப்ரைவசி இஷ்ஷுக்காக நாங்க பொதுவா வெளி ஆட்களை எங்க ஆஃபீஸ்க்குள்ள அனுமதிக்கறதில்லயே.. இது உங்களுக்கு தெரியாதா..”
தன்ராஜ் மனைவியின் கூர்மையான சொல் அம்பினால் அதிர்ந்த விலாசினிக்கு திருதிரு என விழித்தபடி என்ன பேசுவது என்றே தெரியாது போனது.
“என்னங்க..பேச்சே வரலயா…உங்களுக்கு இந்த பழக்கம் மறந்து போனாலும் உங்க வக்கீல் ஏற்கனவே எங்க கிட்ட இங்க வர பேசி அனுமதி வாங்கிட்டார்..”
சரியான பொம்பள.. நாமளே பத்து பேரோட சண்டை போடுவோம்..இந்தம்மா நம்மளையே தூக்கி சாப்பிட்டுடும் போலிருக்கே என மனதுக்குள் அவரை திட்டியபடி வெளியில் சிரித்தார்.
இவர்களின் பேச்சு நடந்து முடிவதற்குள் வேகமாக வந்த விலாசினியின் வக்கீல் தாமதமாக வந்ததற்க்கு மன்னிப்பு கேட்டு உட்கார்ந்தார்.
அதற்குள் அனைவரும் காபி வர அமைதியாக காபி குடித்தனர்.
அதன் பின் நல்ல நேரம் முடிவதற்குள் கையெழுத்து போட வேண்டும் என விஷயங்கள் வேகமாக நடந்தன.
தன்ராஜ் பத்திரத்தை எடுத்து விலாசினியின் லக்கீலிடம் குடுக்க அவரும் சில நிமிடங்கள் செலவழித்து படித்து முடித்து “எதுவும் பிரச்சினை வராது மேடம்.. நீங்க தாராளமா கையெழுத்து போட்டுடலாம்“
உடனே பத்திரத்தை வாங்கிய விலாசினி அங்கிருந்த வெங்கடாசலபதி படத்தின் திருவடியில் வைத்து தன் மகளிடம் குடுக்க அவளும் கையெழுத்து போட்டு குடுக்க..ஒப்பந்தம் ரத்து ஆனது..
நினைவெல்லாம் நீயே 11
அவர்கள் வெளியே வரும் நேரம் சரியாக அங்கு வந்த தன்ராஜின் மகன் ரூபராஜ் ரூபாவை சுத்தி அத்தனை ஆட்கள் இருப்பதை பற்றி கூட யோசிக்காமல் பார்த்து பார்த்தபடி இருக்க அதை பார்த்து வெட்க சிரிப்போடு தலை குனிந்த விலாசினியை பார்த்தவன் ஹா ஹா..ஹா..என சிரித்து “பார்றா..அங்க பாத்தா..இங்க வெக்கம் வருது..இது நல்லா இருக்கே..”
“நம்ம பேரு கூட பொருத்தம இருக்கு..ரூபா…ரூபராஜ் செம்மல்ல..தேவதை மாதிரி வளர்த்திருக்கியே..விசா…”
“சுண்டினா ரத்தம் வந்திடும் போலயே..உம் பொண்ணுக்கு..எப்ப வெச்சுக்கலாம்..வெட்கத்த போக்கற வேலைய” என கூச்சமில்லாமல் கேட்டான்
அதை கேட்டு இன்னும் அதிகமாக வெட்கப்பட்ட விலாசினி “நீங்க பெரிய வீட்டு பையன்..உங்களுக்கு இல்லாமயா..”
“எங்க எப்பனு காலமும் நேரமும் நீங்க சொல்லி விடுங்க சார்..பாப்பா உங்களுக்காவே காத்திருப்பாங்க..” என வழிந்தபடி பேசினார்.
“சரி..ஏதோ ஹிந்தி சான்ஸ் கிடைச்சிருக்காமே..கைப்படாத ரோஜாவாட்டம் இருக்கற கிளி பறந்து போயிடுச்சுனா..”
“உங்களை திருப்தி பண்ணாம நாங்க போக மாட்டோம் சார்..” என்ற விலாசினியின் உற்சாகத்தில் விசிலடித்தவன் “சரி நாளைக்கு ராத்திரி ஏழு மணிக்கு எங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு பாப்பாவை தனியா அனுப்பி வெச்சிடு..நானும் தனியா பாப்பாக்காக காத்திட்டு இருப்பேன்…பொண்ணை பாத்தா அம்மா வெக்கப்படுறது புதுசா இருக்கே..” என கண் அடித்து விட்டு வீட்டின் உள்ளே போனான்.
அதை கேட்டு அம்மாவை முறைத்து ஏதோ சொல்ல தொடங்கிய ரூபாவை பார்வையாலே அடக்கிய விலாசினி ” இது அவங்க இடம்..சுத்தி ஆளுங்க இருக்காங்க..எதுவும் பேசாத..எது சொல்லணும்னாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..அமைதியா வா..” என்றபடி காரில் ஏறி வீடு நோக்கி சென்றனர்.
வீட்டுக்கு போனதும் ஃபோனை எடுத்து யாரிடமோ தலையாட்டி கொண்டே சிரித்தபடி பேசிய விலாசினியை அருவெறுப்பாக பார்த்து நேராக பாத்ரூம்க்கு போனவளுக்கு ரூபராஜின் பார்வை நினைத்து இன்னும் அருவெறுப்பாக ஷவரை திறந்து விட்டு நிற்க..எவ்வளவு நேரம் என நேரமே மறந்திருக்க..அம்மா வந்து கூப்பிடும் வரை அப்படியே நின்றாள்.
சரியாக ஆறு மணிக்கு குளித்து தயாராகி ரூபாவோடு புறப்பட்ட விலாசினியிடம் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் உட்கார்ந்தாள்.
காரில் கிளம்பியதுமே தன் ஃபோனை எடுத்து சத்தமே வராமல் பேசிய விலாசினி ம்..ம்..சரி..சரி என தன் பேச்சை முடித்து கொண்டார்.
தன்ராஜின் கெஸ்ட் ஹவுஸை அடைந்ததும் வாட்ச்மேன் கூட இல்லாமல் கேட் திறந்திருக்க சத்தமே எழுப்பாமல் இருவரும் நுழைய அங்கிருந்த ஹாலில் உட்கார்ந்திருந்த ரூபராஜை பார்த்து குழைந்த விலாசினி தன் கைப்பையில் இருந்ததை வெளியே எடுத்து வைத்தார்..
“என்ன விசா..எல்லாம் மறந்துடுச்சு போல..இதெல்லாம் எனக்கு பழக்கமே கிடையாது..எடுத்து உள்ள வை…” என்றவன் “உக்காருங்க..நீ நின்னா எனக்கு கால் வலிக்கிது பாப்பா..” என இளித்தான்.
தன் திட்டம் நிறைவேறுவது எப்படி என யோசித்தபடி உட்கார்ந்த விலாசினியை பார்த்தவன் “என்ன விசா யோசனை..”
“ஒண்ணும் இல்ல சார்..வீட்டுல யாரையும் காணோமே..வாட்ச்மேன் கூட இல்ல..அதான்..”
“இது என்னோட தனிப்பட்ட இடம்..இங்க யாரும் வர மாட்டாங்க…இருந்த வாட்ச்மேனையும் அனுப்பிட்டேன்..”
“அதுவும் இல்லாம நீ என்ன எங்க வீட்டுக்கு சீராடவா வந்திருக்க..உம் பொண்ணை *** **** தானே வந்திருக்க..அதை மட்டும் பாரு…” என சொல்லி பெரிய குரலில் சிரித்தான்.
அவன் சொன்னதை கேட்டு பெரும் கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டாமல் சிரித்த விலாசினியை பார்த்தவன் “நீ கெளம்பு விசா…
“பாப்பாவ என் கூட ரெண்டு நாள் வெச்சுக்க ஆசையா இருக்கு..நானே திரும்பி கார்ல அனுப்பி வெக்கறேன்..” என விலாசினியை கிளம்பி வைக்க முயன்றான்.
“சரிங்க..சார்..உங்க இஷ்டம் போல..” என சொல்லி சிரித்தபடி வெளியே போனவர் பேயறைந்ததை போல உடனே உள்ளே ஓடி வந்தார்.
“என்னாச்சு..விசா..ஏன் இப்படி பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வர…”
“சார்..சார்..நான் கிளம்பணும்னு வெளிய போனா…எந்த நாதாரிப்பய தகவல் சொன்னானோ தெரியல…வெளிய பூரா பத்திரிக்கைக்காரங்களா மைக் புடிச்சிட்டு நிக்கறாங்க சார்..”
“என்னது பத்திரிகை காரங்களா…எப்டி மோப்பம் புடிச்சாங்க..” என வாயில் வந்த கெட்ட வார்த்தைகளில் அவர்களை திட்டியபடி வெளியே சென்று பார்த்து விட்டு வந்தவன் விலாசினியிடம் “உங்க கார்லயா வந்த”
“இல்ல சார்..டாக்ஸில தான் வந்தோம்..”
“நல்லதா போச்சு..கொஞ்சம் இரு..” என்றவன் உடனே தன் ஃபோனை எடுத்து யாரிடமோ பேசி ஃபோனை வைத்தவன் “நீ என்ன பண்ற..எங்க வீட்டுக்கு பின்னால ஒரு கேட் இருக்கு அது வழியா வெளிய போயிடு..ரெண்டு வீடு தள்ளி போனதும் அங்க ஒரு வெள்ளை கலர் டாக்ஸி நிக்கும்..”
“அதுல ஏறி வீட்டுக்கு போயிடு…நாம பிறகு பேசிக்கலாம்..” என சொல்லி அவர்களை அனுப்பி விட்டு பதட்டம் தீர தண்ணீர் குடித்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் மறுபடியும் யாருக்கோ ஃபோன் செய்த விலாசினி பார்த்த ரூபாவுக்கு பெரும் கோபம் வர அவளை முறைத்து விட்டு தன்னுடைய ரூம்க்குள் வேகமாக நுழைந்தாள்.
வெளியே போட்டு சென்று வந்த தன்னுடைய உடையை பார்த்ததும் தன் மேலேயே கோபம் வர வேகமாக தன்னறைக்குள் போய் மேக்கப் கலைத்து, குளியறைக்கு நுழைந்து அரைமணி நேரத்துக்கு மேல் குளித்து, வீட்டில் அணியும் டீ ஷர்ட் ட்ராக்ஸ்க்கு மாறி அங்கிருந்த பாட்டிலை எடுத்து வேகமாக தண்ணீர் குடித்தும், ரூமுக்குள் நடந்தபடி இருந்தும் கோபம் அடங்கவில்லை.
சிறிது நேரத்தில் அங்கு வந்த விலாசினியையும் அவள் கையில் இருந்த ஜுஸ் டம்பளரை பார்த்ததும் கோபம் அதிகமாக எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன டி கோவம் உனக்கு..வேகமா கதவை சாத்திட்டு வர..வீட்டுல நாம மட்டும் இல்ல..வேலை செய்யற ஆட்களும் இருக்காங்க…சுவற்றுக்கும் காது உண்டு…”
“கொஞ்சம் பேரும்,பணமும், புகழும் வந்திட்டா போதும்.. நாம செய்யற ஒவ்வொரு செயலையும் மத்தவங்க உத்து கவனிப்பாங்க..அது வேற விதமா வெளி உலகத்துக்கு போகும்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..”
“நமக்குனு ஒரு இமேஜ் வர வெக்கறது ரொம்ப கஷ்டம்…அத நிமிஷமா பலூன் வெடிக்கற மாறி வெடிக்கற மாறி சுலபமா உடைக்க வெச்சிடாத..புரியுதா..”
“ஏன் எதுக்கு நான் கோவமா இருக்கேன்னு உனக்கு தெரியாதா..இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மாறி அசிங்கமா ட்ரஸ் பண்ணி என்னை அழைச்சிட்டு போய் ஊருக்கு காட்ட போற..”
“எனக்குனு மானஅவமானமே இருக்காதா..ஒவ்வொருத்தனும் என்னை பாக்குற பார்வைக்கும், தேவையே இல்லாம கண்ட இடத்துலயும் தொடும் போதும் அங்கயே செத்துடலாமானு இருக்கு..”
“உனக்கு எங்க அது புரிய போகுது..உனக்கு தேவை பணம்..அது தான் சம்பாதிச்சு குடுத்திட்டேன்ல்ல..”
“இனி என்னை இது மாறி எல்லா கூப்பிட்டு போகாத..நான் வர மாட்டேன்…”
“ஏய்…இந்தா பாருடி..என்னமோ நீ தான் நேரிடையா கண்ணகியோட வாரிசு மாதிரி சலங்கை கட்டி ஆடாத..புரியுதா…
“என் கஷ்டம் தெரியாம பேசாத..உன்னை சுத்தி நடக்கறது எதுவும் உனக்கு தெரியாது..நான் தெரியவிட்டதில்ல..”
“நீ பத்து படம் நடிச்சிருக்க தானே..எத்தனை பேர் எத்தனை விதமா கார் வாங்கி தரேன், பங்களா வாங்கி தரேன்..பண்ணை வீடு வாங்கி தரேன்னு உன்னை அவன் கூட இருக்க கேட்டிருப்பான்…
எவ்ளோ ஃபோன் வரும் தெரியுமா..எல்லாத்தையும்
நான் எவ்ளோ சாமர்த்தியமா எவன் கிட்டயும் மாட்டாம உன்னை காப்பாத்தி கொண்டு வர எவ்ளோ பாடுபட்டிருப்பேன்..”
நிறுத்தாமல் பெருமை பேசியபடி இருந்த விலாசினியை கை காட்டி நிறுத்திய ரூபா பெரும் கோபத்தோடு “நிறுத்து மா..அப்டி என்னமா நீ கஷ்டப்பட்ட..
அருவெறுப்பா பார்வை..சம்பந்தமே இல்லாம பக்கத்துல வந்து இளிச்சு..18+ பேச்செல்லாம் பேசறது..உடம்பை தடவறது..இது எதாவது ஒண்ணு நீ அனுபவிச்சிருக்கியா..மா..சொல்லு..
இதெல்லாம் தாண்டி வந்த எனக்கு கஷ்டமா இல்ல உனக்கு கஷ்டமா..”
“என்னை ராத்திரி தேவதையா அனுபவிக்க ஒவ்வொருத்தரும் கேக்கும் போதும் எனக்கு பதிலா நீ ஒவ்வொரு தடவையும் வேற யாரையோ ஏற்பாடு பண்ணி அனுப்பி வெச்சது தெரியாதுனு நெனக்கறியா..”
“எனக்கும் சுத்தி நடக்கறது எல்லாம் தெரியும் மா..சரி போனா போகட்டும்னு விட்டு வெச்சிட்டிருக்கேன்..அவ்ளோ தான்..”
“இங்க பாருடி..ஓவரா பேசிட்டே போகாத..உனக்கு மூணு வயசு திருவிழா தனியா நின்னுட்டு அழுதிட்டு இருந்த.. காப்பாத்தி நாங்க கூப்பிட்டு வரலேனா இந்த வாழ்க்கை கிடைச்சிருக்குமா..இல்ல நன்றி இல்லாம இப்டி பேசி இருக்க தான் முடியுமா..?
“சரி மா..நீ காப்பாத்தி கூப்பிட்டு வந்த..வளர்த்த..சரி..அப்பா படிக்க வெச்சாரு..ரெண்டு டிகிரி வாங்க வெச்சாரு..இதெல்லாம் நான் மறக்கல..மறக்கவும் மாட்டேன்..”
“அப்பா இருக்கற வரை எல்லாம் சரியா இருந்ததே மா..அண்ணனுங்க..ரெண்டு பேரும் நாங்க வெளிநாட்டுல இருக்கோம்..அடிக்கடி வந்து உங்களை பாக்கறது கஷ்டமா இருக்கு..இங்க வந்துடுங்கனு கூப்பிட்டாங்களே..”
“அவங்க மட்டும் இல்லயே..அண்ணிங்க..பசங்க எல்லாரும் தானே இப்ப வரைக்கும் கூப்பிட்டு இருக்காங்க..ஆனா நீ அவங்க கூட போக விரும்பல..அங்க போனா..உன்னால அவங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கறது கஷ்டம்னு மாட்டேங்குற..”
“எத்தனை நாளுக்கு மா இந்த வாழ்வு எனக்கு பிடிக்கல மா..சொத்து எல்லாம் உன் பேர்ல தானே இருக்கு..நீ வெச்சிட்டு நல்லா வாழு மா..எனக்கு எதுவும் வேணாம்..வெறுத்து போச்சு மா..எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது போயிடலாமானு இருக்கு..”
“அப்பா இருந்தவரைக்கும் நான் அவரோட வளர்ப்பு மகள்னு ஒரு தடவை கூட சொன்னதே இல்ல..ஆனா அவர் போன பிறகு ஒரு நாள் கூட நீ சொல்லாம இருந்ததே இல்ல..”
“என் பொறுமை எல்லை மீறிட்டு இருக்கு..என்னிக்கு வேணுமானாலும் வெடிக்கும்..நான் இல்லாமலே போகலாம்..”
“தூக்கமா வருது..தூங்க போறேன்..தயவு செய்து காலைல சீக்கிரம் எழுப்பாத..என்னை இன்னிக்காவது நிம்மதியா தூங்க விடு..” என குரலே எழுப்பாமல் கடினமாக சொல்லி விட்டு ரூபா தன்னறைக்குள் போனாள்.
அவள் பேசி சென்றதை கேட்ட விலாசினி..ஐயோ..ஹிந்தில நடிக்க நல்ல வாய்ப்பு வருதே..இப்பனு பாத்து இந்த பொண்ணு புத்தி இப்டி மாறுதே..சரியில்லயே..”
“கூடவே தானே இருக்கோம்..நம் கண்ல மண்ணை தூவி யார் இவளுக்கு சொல்லி தராங்கனு தெரியலயே..கை விட்டு போயிடுவா போலிருக்கே.. ஏதாவது செஞ்சு தக்க வெச்சிட்டே ஆகணும்..என மனசுக்குள் கருவியபடி இரவெல்லாம் தூங்காமல் பல கணக்குகளை போட்டு கொண்டு இருந்தார் விலாசினி (தொடரும்).
error: Content is protected !!