Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 17.2

இலக்கியாவின் அமைதியை பார்த்த திவ்யா (ஆரோஹி தோழி) ஆரோஹியை கை பிடித்து அமைதி காக்க கூற, அவளோ வீம்பிற்காகவே மேலும் தொடர்ந்தாள்.

“அவன் குணம் பத்தி யோசிக்கிறீங்களா? கவலையே வேணாம், பையன் தங்கம், கல்யாணம் ஆகிட்டா உங்களையே சுத்தி சுத்தி தான் வருவான்னா பாத்துக்கோங்க, அம்புட்டு லவ்ஸ் வந்துடும் உங்கமேல”

“என்னது லவ்ஸ் வந்து பின்னாடியே சுத்துவாரா? ஓ ஹோ” வருண், தர்ஷன் இருவரும் சிரிப்போடு ராகமிழுத்து பார்க்க, புரிந்த சித்தார்த்தும் அந்த கூட்டத்தோடு இணைந்துகொண்டான்.

“நம்பிக்கை இல்லனா என் நம்பர் தர்றேன் வாங்க பழகலாம்” படு சீரியஸாக அவன் பேச தவித்தது என்னவோ இலக்கியா தான்.



Advertisement

“ஆரோஹி என்..”

“இலக்கியா” மொத்த அறையையும் தன் பக்கம் திருப்பியது அர்ஜுனின் ஆழமான அழைப்பு.

திடுக்கிட்டு அவனை பார்த்த இலக்கியாவிடம், “கம் டு மை கேபின்” என்றவன் அந்த டிபன் பாக்ஸை எடுத்து நகரப்போக, “சார் டிபன் பாக்ஸ் உங்களுக்கு இல்ல” ஆரோஹி வேகமாக அவனை நிறுத்தினாள்.

Advertisement

“ஆமா அர்ஜுன், ஸ்தெத்னு நினைச்சு மாத்தி எடுத்துட்ட போல நீ” ப்ரியதர்ஷன் அடக்கிய சிரிப்போடு தகவல் கொடுக்க, இலக்கியாவை பார்த்த அர்ஜுன்,

Advertisement

“ம்ம்ம்? யாரோடது?” கூரிய விழியோடு அவளை துளைக்க, சில கணங்கள் தயங்கியவள்,

“உங்க… உங்களோடது” என்றாள்.

அவளது பதிலில் திருப்த்தி அடைந்தவனாய் சென்டிமீட்டர் மேலும் கீழும் தலை அசைத்து ஆரோஹியை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து புரிந்ததா என பார்க்க, “ஓ நல்லாவே புரிஞ்சது டாக்டர், அக்கா போங்க போங்க” என இலக்கியாவை அனுப்பி வைத்தாள் பெருகிய புன்னகையோடு.

Advertisement

இருவரும் நகர்ந்த பிறகு, “இந்த லவ் ட்ராக் வேற ஓடுதா?” சித்தார்த் வருணிடம் கேட்டான்.

“திருத்தம். கல்யாணம்” அவன் கூறிய பதிலில் ஆரோஹி கூட அதிர்ந்து போனாள்.

“எப்படி எப்படி?” ஆர்வமாய் கேள்வி வைக்க அதற்குள் அஸ்வினிடமிருந்து ஆரோஹிக்கு அழைப்பு வந்திருந்தது.

“அவ்ளோ தான், இனி ஆரோஹி யார்கிட்டயும் பேச மாட்டா. கிளம்பலாம்”

அந்த கூட்டம் அங்கிருந்து கலைந்திருக்க, அர்ஜுன் இலக்கியாவை வர கூறி கையில் உணவோடு முன்னே சென்றிருக்க அவன் எதிர்பார்த்தபடி அவன் மனைவி அவன் பக்கமே எட்டி பார்க்கவில்லை.

அவளுக்கு அதிகமாகவே போக்கு காட்டினாள். அவளோடு பேசியே ஒரு மாதமாகி போனது. அவளுக்காகவே அவள் இருக்கும் இடத்திற்கு காரணமே இல்லாமல் சென்று வந்தான்.

“போற போக்க பாத்தா சித்தார்த்க்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது போல” மதிய உணவு உண்பதற்காக இலக்கியாவிற்காக காத்திருந்த அர்ஜுன் காதில் சகோதரர்கள் இருவரும் வேண்டும் என்றே பேசியது தெளிவாக காதில் கேட்டது.

அவர்கள் சித்தார்த்தின் உண்மையான காதல் கதையை கேட்டு பேச, இவனுக்கோ தப்பாமல் இலக்கியா தான் வந்தாள். அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திரும்பி இளையவர்களை பார்க்க அவர்கள் தங்களுக்குள் இன்னும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

“டேய் அறிவில்ல? அவனுங்க தான் முட்டாள் மாதிரி பேசிட்டு இருந்தா, உங்களுக்கு அறிவு எங்கடா போச்சு, அவனை அடக்கி வைக்க மாட்டிங்களாடா?”

வருண், “எங்களை எதுக்கு ப்பா தம்பி கோவிக்கிற. அவனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றான். நீ தான் டைவர்ஸ் பண்ண பொறியாமே”

நாற்காலி இரண்டடி தள்ளி நகரும் அளவு விட்டு எழுந்தவன், “எவன்டா சொன்னான் உனக்கு?”

தர்ஷன் அர்ஜுன் தோளை இரு பக்கமும் பிடித்து மெல்ல தட்டினான், “எதுக்கு… எதுக்கு பதறுற? காம் டவுன் டாக்டரே. நாங்களா ஒன்னும் சொல்லல ப்பா, அவ்ளோ கற்பனை திறன் எங்களுக்கு இல்ல. இது உன்னோட அஞ்சுஸ்ரீ…”

“சாவடிச்சிடுவேன்டா” சீறினான் அர்ஜுன் தர்ஷனை பார்த்து.

வருண் வேகமாக அர்ஜுன் மார்பினில் கை வைத்து தடுத்து தர்ஷனிடம், “தர்ஷா, அப்டி சொல்லாதடா. அண்ணனுக்கு கோவம் வருதுல”

என்றவன் உள்ளடக்கிய சிரிப்போடு, “அந்த டாக்டர் அஞ்சுஸ்ரீ தான் அர்ஜுன், என்ன என்னமோ சொன்னா. அவ தான் இலக்கியாவை டிவோர்ஸ் பண்ணவே உனக்கு ஐடியா குடுத்தாலாமே.

நீ கூட லாயர் ஆபீஸ் போனது எல்லாம் சொன்னா. அவளை வர சொன்னவன் அவ பேச்சையும் கேட்ருபியோனு உன்ன தப்பா நினைச்சிட்டோம். சாரி டா”

தர்ஷனும் உடனே, “ஆமா அர்ஜுன். சாரி. நீ அப்டி கேவலமான வேலைய பண்ணிருக்க மாட்ட. ஒருவேளை அப்டி பண்ணிருந்தா இலக்கியாவுக்கு நல்ல லைப் குடுக்கணும்ல.

அந்த ஆசைல அப்டி பண்ணிட்டோம். என்ன பண்றது, இலக்கியாவுக்கு பேன்ஸ் அப்டி, எந்த பக்கம் போனாலும் அவளோட குணத்தை பாத்து இத்தனை பேர் வர்றாங்க”

இருவரையும் முறைத்து தீர்த்துவிட்டு வீட்டிற்கு பறந்திருந்தான். வீட்டிற்கு சென்று அன்றைய மீதி நாளை யோசிப்பதிலே கடத்திவிட்டான். இப்படியே இன்னும் ஒரு மாதம் கழிந்திருந்தது.

இலக்கியாவிற்கு அர்ஜுன் கூறிய வார்த்தைகளின் தாக்கம் குறைந்திருந்தாலும், அதிலிருந்து முழுதாய் மீள இயலவில்லை. அவனை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு சுற்றி வந்தாள். அர்ஜுனின் பிரிவிற்கும் ஆரோஹியை காரணம் காட்டி வராமலே தப்பித்துவிட்டாள்.

இன்று கூட சித்தார்த் இலக்கியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன், ‘எனக்குன்னே வருவீங்களாடா’ சித்தார்த்தை முறைத்து பார்த்து வேலையில் இறங்கியவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

சென்று சென்று அவளை பார்த்து வந்தான். இவன் வருவதை பெண்ணவள் கவனித்தாலும் வேலையிலே குறியாக இருந்தாள்.

“இலக்கியா…” அவள் ம்ம் என்று கூட சொல்லவில்லை.

அர்ஜுனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் அகல இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் இலக்கியாவின் அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றான்.

அந்த நேரம் தான் கீழே வந்த இலக்கியாவின் தந்தை இவனை பார்த்துவிட, “வாங்க மாப்பிள்ளை” என்றார் முகம் எல்லாம் புன்னகையோடு.

மகள் ஒரு மாதத்திற்கு மேல் இங்கு இருப்பதை கண்டவருக்கு பெரும் வருத்தம். அவளிடம் கூட பல முறை கேட்டு பார்த்துவிட்டார். எல்லாம் சரியாகும் என தந்தையின் வாயை அடைந்துவிட்டாள்.

இன்று அர்ஜுன் வந்து நிற்கவும், “உள்ள வாங்க மாப்பிள்ளை” என்றார் பாசமாக.

“இல்ல இல்ல அங்கிள். இலக்கியாவை பாத்துட்டு நான் கெளம்பிடுறேன். என் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு. நீங்க கொஞ்சம் கால் பண்ணி தரீங்களா?”

“இதோ மாப்பிள்ளை” உடனே மகளுக்கு அழைத்து அர்ஜுன் கையில் கைபேசியை கொடுத்து விலகி சென்றுவிட்டார்.

“சொல்லுங்க பா, இதோ பத்து நிமிசத்துல பால் எடுத்துட்டு வர்றேன், ரெண்டு பன் எடுத்துட்டு வரவா…”

“இலக்கியா” தந்தையின் அழைப்பு வழியே கேட்ட அர்ஜுனின் ஆழ்ந்த குரலில் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டாள்.

“கேக்குதாடி? நான் கீழ தான் நிக்கிறேன். ப்ளீஸ் வர்றியா?” அமைதியான குரலில் கெஞ்சி கேட்டான்.

அவனின் குரலில் சட்டென வழிந்த கண்ணீரை துடைத்தவள், “நான் கீழ வர மாட்டேன்” அழுத்தமாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அர்ஜுனுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. எத்தனை நாள் தான் இந்த ஆட்டத்தை ஆடுவது? அவளோடு இருக்க அவனுக்கு ஆசைகள் உள்ளது தானே.

ஆசை இல்லை ஏக்கமாக வளர்ச்சியடைந்தது அவளின் மீதான பிடித்தம். மாமனாரிடம் கைபேசியை கொடுத்து சில வார்த்தைகள் பேசிவிட்டு வாகனத்தை எடுத்தவன் காதில் மனைவியின் வார்த்தை ஒலித்துக்கொண்டே இருந்தது.

“கீழ வர மாட்டேன், கீழ வர மாட்டேனா என்ன தான் நினைச்சிட்டு இருக்கா பைத்தியம்” ஸ்டேரிங் வீலில் ஓங்கி அடுத்தவனுக்கு அத்தனை கோவம் வந்தது.

“அவ வர மாட்டானா, என்ன என்னை…” வாகனத்தை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவனுக்கு அவளின் வார்த்தை புதிர் இப்பொழுது புரிய வாகனத்தை ஒரு கையில் நிறுத்தி பண்ணீர் பாக்கெட் ஒன்றை வாங்கியவன் அப்படியே வாகனத்தை திருப்பி சூர்யா அப்பார்ட்மெண்ட் உள்ளே வாகனத்தை நிறுத்தினான்.

அர்ஜுன் வருவதை பார்த்து மீண்டும் வந்த மணிகண்டனிடம், “கடைக்கு போயிருந்தேன் மாமா, இலக்கியா பண்ணீர் கேட்டா. வீட்டுக்கு எப்படி போறது?”

“ஓ சரிங்க மாப்பிள்ளை, வாங்க நானே விட்டுட்டு வர்றேன்” வாட்ச் மேன் அறையில் போடப்பட்டிருக்கும் மின்விசிறியை கையேடு எடுத்து வந்து அவரே அவனை அழைத்து வாயில் வரை விட்டு, பூட்டியிருந்த கதவை தட்டி,

“இலக்கியாம்மா, இந்த பேன்ன உள்ள எடுத்துட்டு போ” என்றவர் மருமகனிடம், “ஏதாவது சௌரியம் இல்லனா சொல்லுங்க மாப்பிள்ளை. நான் வர்றேன்”

அவன் வாகனத்தை உள்ளே நிறுத்தியத்திலே அவன் இரவு இங்கு தான் தங்க போகிறான் என்பதை அறிந்தவர் அவனுக்காக மற்றுமொரு காத்தாடியை வைத்து சென்றார். அந்த சிறிய இடத்தில் இது மட்டுமே சாத்தியமும் கூட.

உள்ளுக்குள் அமர்ந்திருந்த இலக்கியாவிற்கு அர்ஜுன் தன்னை தேடி வந்துவிட மாட்டானா என ஏக்கமான எதிர்பார்ப்போடு காத்திருக்க தந்தை எதற்காக காத்தாடியை எடுத்து வந்தார் என யோசனையோடு கதவை திறக்க அர்ஜுன் சிரித்த முகமாய் மனைவிக்கு காட்சி கொடுத்தான்.

முதலில் அதிர்ந்தாலும் பிறகு எதுவும் காட்டிகொல்லாமல், “இங்க எதுக்கு வந்துருக்கீங்க?” நிர்மலமான முகத்தோடு கேட்டாள்.

“உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்தா தான் வீட்டுல இடம்னு சொல்லிட்டாங்க” என்றான் வீட்டினர் மேல் பழியை போட்டு.

அவள் மேல் உள்ள அன்பினால் அவர்கள் செய்திருக்க கூடுமென எண்ணியவள், “உங்க வீடு இருக்கே”

“இங்க விட மாட்டேன்னு சொன்னவங்க, அங்க எப்படி விடுவாங்க. சாவி வாங்கி வச்சிட்டு, பாஸ்வோர்ட் மாத்திட்டாங்க” என்றான் சோகமாக கூறுவது போல்.

அவனின் நடிப்பில் அசாராதவள், “அதுக்காக தான் என்ன கூட்டிட்டு போக வந்துருக்கீங்களா?” நிதானமாக அவனை பார்த்தாள்.

“இல்லையே” என்றான் உடனே, “உனக்கு எப்போ தோணுதோ அப்போ வா. இப்போ இதை வச்சு ஏதாவது செஞ்சு தரியா? பசிக்கிது”

சிறு பிள்ளை போல வயிற்றை தடவினான் முகத்தை சுருக்கி. பசி என வந்து நிற்பவனிடம் வீம்பு புடிக்க முடியவில்லை.

அவனிடமிருந்து பண்ணீரை வாங்கியவள் இருவது நிமிடத்தில் அச்சாரி பண்ணீர் செய்து இரண்டு தோசையோடு தட்டை நீட்டினாள்.

வீட்டின் வெளியே நிழல்கூரையின் கீழே போட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்த்திருந்தவன், உணவின் வாசனையை மோப்பம் பிடித்து, “இருந்தாலும் சப்பாத்தி செஞ்சிருக்கலாம்”

வேண்டும் என்றே குறை கண்டுபிடித்தவனை முறைத்தபடியே அவன் மனைவி நிற்க, இரண்டு தோசையை முடித்து இன்னும் ஒன்று கிடைக்காதா என பார்த்தான்.

அவள் அவன் தேவையை உணர்ந்து நகராமல் இருக்க, “இன்னொன்னு” உரிமையாக கேட்டான்.

முகத்தை தூக்கி வைத்தாலும் அவன் கேட்டதை நிறைவேற்றியிருந்தாள் அர்ஜுன் மனைவி.

திருப்தியாக உண்டு முடித்தவன் இன்னும் நகராமல் இருக்க, “கெளம்பல?” இறங்கி போன குரலில் மெல்ல கேட்டாள், உள்ளுக்குள் இரண்டு வாக்குவாதங்களை வைத்து.

அவன் இருக்கவும் வேண்டும், அதே நேரம் இந்த சிறு இடம், மெத்தையில்லாத கட்டில் எல்லாம் எல்லாம் அவனை அனுப்புவதே சிறந்தது என கூறியது.

“நான் ஏன் போகணும், உன்னால தான எங்கையும் போக முடியல, அதான் உனக்கே தண்டனை குடுக்க வந்துருக்கேன்”

இதழோர சிரிப்போடு புன்னகையை வெளிக்காட்டாமல் கூறியவன் வாயிலில் நின்ற மனைவியை ஒட்டி உரசி மெதுவாக உள்ளே நகர உடல் ஜில்லிட்டு விறைத்து போனது இலக்கியாவுக்கு.

அவனது சீண்டலில் வேக வேகமாக மூச்சு வாங்க வெளியே இரண்டு நிமிடம் நடந்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு உள்ளே வந்தாள். உள்ளே வந்தவளுக்கு மேலும் மூச்சு வாங்கியது அவனது சட்டையில்லா உள் பனியன் மட்டுமே போட்டிருந்த தேகம்.

“ஹோ… ஹோட்டல் போகலாம்ல?”

“காசு இல்ல” என்றான் உடனே அவள் நம்புவாள் நம்ப மாட்டாள் என்பதை எல்லாம் சிறிதும் யோசிக்காமல்.

இதற்கு மேல் அவனிடம் என்ன பேச முடியும், என்ன பேசினாலும் வாதாட ஒரு பதில் வைத்திருக்கிறான் என்பது தெரிந்துவிட்டது.

அமைதியாக கீழே தரையில் ஒரு விரிப்பை போட்டு, “நீங்க மேல படுத்துகோங்க” எந்திர குரலில் கூறியவளுக்கு மெத்தையில்லாமல் ஒரு தலையணையோடு இரும்பு கட்டிலில் அவனை படுக்க வைப்பது அவள் கொடுக்கும் தண்டனையாம்.

“தெளிவு தான்டி நீ” அந்த கட்டிலில் அர்ஜுன் அமரும் பொழுது மெல்ல சத்தம் கேட்க, “ஒடைஞ்சு போற கட்டில்ல என்ன தள்ளி விடுற பாத்தியா?”

“அப்போ கீழ படுங்க”

“கீழ எனக்கு செட் ஆகாது”

“அப்போ அங்கையே படுங்க”

“இந்த இத்துப்போன கட்டில்ல படுத்து நான் மட்டும் கீழ விழுகணுமா?”

“என்ன தாங்க உங்களுக்கு வேணும்? அது அப்டி எல்லாம் உடையாது”

“உன்ன நான் எப்படி நம்புறது, நீயும் வந்து படு விழுந்தா சேர்ந்து விழுகலாம்”

‘தெளிவு தான் இந்த டாக்டர்’ அவனை மூக்கு சிவக்க முறைத்தவள், “அவ்ளோ பயமிருந்தா வெளிய கயித்து கட்டில்ல படுத்துகோங்க” போர்வையை போர்த்தி படுத்துகொண்டாள் வேகமாக.

“வீட்டுக்கு முதல் தடவ வந்த புருஷனை வெளிய படுக்க சொல்ற, இருடி நான் என் மாமனார்கிட்ட போய் நியாயம் கேக்குறேன்”

எழுந்து கதவை அர்ஜுன் திறக்க போக, பார்வையிலிருந்து வெளி வந்தவள் வேகமாக, “ஐயோ டார்ச்சர் பண்ணாதீங்க சார். மேல வந்து படுக்கறேன்”

படுக்கை விரிப்பை எடுத்து ஓரமாக இவள் வைக்க அதற்குள் அர்ஜுன் உல்லாசமாக கைகளை தலைக்கு கீழ் வைத்து காலை ஆடிக்கொண்டிருந்தான்.

அவனும் அவன் கைகளுமே கட்டிலில் பாதிக்கு மேல் இடத்தை ஆக்ரமித்திருக்க ஆயாசமாக கட்டிலின் ஒரு மற்றொரு மூலையில் அவனை இடித்துவிடாமல் படுத்தாள்.

அவளது பயத்தை உணர்ந்தவன் இது சரி வராதென அவள் முதுகை வெறித்துவிட்டு சற்று திரும்பி படுத்தான்.

அவனின் உடல் சூட்டை உணர்ந்தவள் இன்னும் தள்ளி படுக்க, இந்த விளையாட்டும் அர்ஜுனுக்கு பிடித்திருந்தது. இவன் இவளை நெருங்க நெருங்க, அவள் கட்டிலின் விளிம்பிற்கு சென்று தடுமாற இருந்த நேரம் மனையின் வயிற்றோடு வேகமாக பிடித்த அர்ஜுன், “பாத்துடி” பதட்டமாக கூறினான்.

பயத்தில் அவளும் பிடிப்பிற்காக அர்ஜுனின் கையை பிடித்திருக்க, ஒரு நொடி அதிர்ந்தவளை அப்படியே தன்னை நோக்கி திருப்பியிருந்தான் மருத்துவன்.

“நான் என்ன பிசாசா இப்டி ஓடுற”

‘பிசாசுக்கு கூட நான் பயப்பிட மாட்டேன்டா, ஆனா உனக்கு…’ மனதிலே அர்ஜுனை வறுத்துவிட்டு, “எனக்கு ஓடி பழக்கமில்லை” என்றாள் முறுக்கிக்கொண்டு.

“அப்றம் ஏன்டி ஹாஸ்பிடல்ல நான் இருக்க பக்கமே வர மாட்டிக்கிற?”

“நான் ஏன் வரணும், நான் என்ன உங்கள ஓடி ஓடி காதலிக்கிறேனா?”

அர்ஜுன் இதழில் புன்னகை மலர்ந்தது, “ஓடி ஓடி தான் காதலிக்கனும்னு இல்லையே. பக்கத்துலயே நின்னு கூட பண்ணலாம், ஏன் நீ பண்ணல?”

விடிவெள்ளி விளக்கின் வழியே தெரிந்த அவனின் சிரிப்பில் கட்டுண்டு போதையேறாமல் துணுக்குற்றவள், “நல்ல கற்பனை தான்” தன்னை பிடித்திருந்த அர்ஜுனின் கையை எடுத்துவிட்டு மீண்டும் அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்.

வானை பிளந்து வரும் செங்காந்தள் கதிரின் பிழம்பை போல் மங்கையின் கோவம் எவ்வளவு அழகானதென, அவனின் உஷ்ண மூச்சை உள் வாங்கி தகிக்கும் அவளின் முதுகும், காற்றிலாடிய அவளின் பூனை மயிர்களும் கூட சிலிப்பிக்கொண்டு கூறியது.

அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் மீண்டும் மனைவியை பின்னிருந்து அணைக்க, இலக்கியாவின் உடல் இறுகி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

“இலக்கியா” அர்ஜுனின் அழைப்பில் அவள் அமைதியாக படுத்திருந்தாள்.

“இலக்கியா…” மனைவியின் பின்னங்கழுத்தில் இதழ் உரச அர்ஜுன் பேசியதில் உச்சி முதல் பாதம் வரை ஜிவ்வென ஒரு உணர்வு பிறக்க படுக்கையின் விரிப்பை இறுக்கமாக பிடித்துகொண்டாள்.

“என்ன உனக்கு புடிக்குமா?” அவனை கழுத்தை திருப்பி இலக்கியா பார்க்க, சற்று தலையை தூக்கி அவளது கன்னத்தில் இதழ் பதிக்க இப்படி ஒரு சுகத்தை வாழ்நாளில் அனுபவித்திராத விதம் அவளிடம்.

கண்ணை சிமிட்டாமல் தன்னை பார்த்த அர்ஜுனின் விழியினுள் ஆசை ததும்பி வழிவதை அவளால் நிராகரிக்க முடியவில்லை.

அவள் நேசத்திற்காக, விருப்பமில்லாமல் அவன் விருப்பத்தை வலுக்கட்டாயமாக பெற விரும்பாதவள், இன்று அதே மனிதனில் அவளின் மேல் அவனுக்கான ஆசையை கண்ட பிறகு காதலுக்கு தடை விதிக்க முடியவில்லை, உரிமையை விடமுடியவில்லை.

“இந்த பார்வை தான்டி… இது தான் என்ன கிறுக்கனாக்குது. சொல்லு என்ன புடிக்குமா புடிக்காதா?” ஆசை ஏக்கம் கலவையாக அவளின் ஒரு வார்த்தைக்காக காத்து அவள் முகத்தை இம்மி அசையாமல் பார்த்தான்.

எத்தனை நாள் தன்னை சுற்ற விட்டிருப்பான், “இல்ல புடிக்காது, சுத்தமா பிடிக்காது சார். கடுகளவு கூட பிடிக்காது. உங்கள பாத்தாலே வெறுப்பு தான் வருது” என்றவளுக்கோ கண் எல்லாம் வேதனையின் நீர் நிறைந்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!