Skip to content
Post Views: 2,894
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 4
Advertisement
கோடி பேசியதை மறுபடியும் நினைத்து பார்த்தவள்.உன்ன சொல்லனும் நீ அவர ரொம்ப நல்லவருன்னு நெனச்சு வண்டியில ஏறுனீல அதுதான். இனிமேல் எந்த பையன் கிட்டையும் பேச கூடாதுப்பா.
Advertisement
கோடி சார் இப்படி சொல்லிட்டாறே என்று அன்று முழுவதும் புலம்பிய படியே இருந்தாள்.
Advertisement
கோடியின் மீது கௌசி மிகுந்த, மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தாள். கௌசியின் மனதில் கோடிக்கு இருக்கும் இடமே வேறு.
Advertisement
கோடியை முதல் , முதலில் பார்த்ததை நினைவு படுத்தினாள்.
இராஜ செல்வனும், கௌசியும் அவர்கள் வீட்டிற்கு பொருள்கள். வாங்க . கோடியின் கடைக்கு சென்று பாத்ரூம் டோர், சிங்கு, டாய்லட் கோப்பை என்று அனைத்தும் கோடியின் ஸ்டோரில் இருந்தது. கௌசியை டிசைன், கலர் பார்க்க சொல்ல. அவளோ கடை முழுவதும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஒரு பாத்ரூம் டோர் டிசைன் பிடித்து இருக்க. அந்த டோர் வேணும் என்க.
அங்கு வேலை பார்க்கும் ஒருவன். கௌசியிடம் இது ஒருத்தர் வாங்கிடாங்க. வேறு பாருமா என்க.
கௌசிக்கு அந்த டிசைன் மிகவும் பிடிச்சு இருக்க. அது மாதிரி டிசைன் வேற காட்டுங்க. இல்லைன்னா இது மாதிரி செஞ்சு குடுங்க என்று கேட்க.
அவனோ இவ்வளவு தான் இருக்கு .இதில் எதையாவது செலக்ட் பண்ணு என்று சொல்ல.
கௌசி அந்த டோரையே பார்த்து இருக்க.
கோடி எங்கே இருந்து வந்தானோ. பளார் என்று அங்கே வேலை பார்ப்பவன்னு. அறைவிழுந்தது. கோடி அவனை அறைந்திருந்தான். கஸ்டமர் கேட்டத எடுத்து குடு.நம்ம கடைக்கு வந்தவங்கள ஒழுங்கா கவனி. அந்த பொண்ணு கேட்டா டோர் கீழ குடோனுல இருக்கும். போய் எடுத்துட்டு வந்து கொடு என்று சொல்லி செல்ல.
கௌசி கோடியை பார்த்து இருந்தாள். கௌசிக்கு அப்பொழுது 14 15 ந்து. வயது இருக்கும்.சின்ன பெண் போல இருந்தாள்.
கோடி கௌசியை பார்த்து உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை பாரும்மா என்று சொல்லி சென்றான்.
கௌசிக்கு கோடியை அப்பொழுதே பிடித்து இருந்தது. அவள் கேட்டது இல்லை என்று சொல்லியவுடன். கோடி வந்தது அவனை அறைந்தது. அனைத்தையும். பார்த்தவள்.கோடியை. ஒரு ஹீரோ போல மனதில் நினைத்து பார்த்தாள். ஆனால் சிரிக்காத ஹீரோ என்றே நினைத்தாள். அவனின் கோப முகம் கௌசியின் மனதில் பதிந்து விட்டது.
காலேஜின் மரத்தடியில் அமர்ந்து இருந்தவளை. கௌசியின் தோழி மீரா அவளை ஆடிடோரியத்திற்கு அழைக்க.
கௌசி நான் வரல.
மீரா டான்ஸ் எல்லாம் நல்ல இருக்குடி வா.
அவளோ மூடு சரியில்ல என்று கூற.
என்ன ஆச்சு. ஆமா நீ ஏன் இன்னைக்கு பஸ்சுல வல்ல.
அதுவா என்றவள் இன்று நடந்ததை சொல்லி முடிக்க.
மீரா அது யார் அந்த சாரு.
அவங்களா கோடி கோடிஸ்வரன் சார். என் பஸ்ஸ்டாப் எதிரில் ஒரு பெரிய காம்புலக்ஸ் இருக்குமே அதொட ஓனர்.
மீரா கே.பி ( K. P) காம்புலக்ஸ்ச.
ஆமாம் என்றாள்.
அங்கே தான் என் சித்தி பையன் பார்ட் டைம் வேலை பார்க்குறான்.
அப்படியா என்ற கௌசியை.
மீரா ஒரு மாதிரியாக பார்க்க.
கௌசி மீராவை பார்த்து ஏன் அப்படி பாக்குற.
நீ கரக்ட்டா சொல்லு சொன்னது அந்த காம்புலக்ஸ் ஓனரா.
ஆமாம் என்றாள் கௌசி.
மீரா நல்ல ஹைட்டா, கருப்பா,வயசு கூட 30 க்கு மேல இருக்குமே அவரா?
கௌசி ஆமாம் அவரை தான். உனக்கு தெரியுமா?
தெரியும் கௌசி அவங்க வீட்டை தாண்டி தான் எங்க வீட்டுக்கு போகனும்.
அவங்க வீடா.
ஆமாம் கௌசி .நீ சொன்ன சார் வீடு. அவங்க அம்மா எனக்கு தெரியும் பேரு குருவம்மாள் அப்பா பழனி.
கோசியோ எனக்கு கோடி சார் மட்டும் தான் தெரியும்.
மீரா கௌசியிடம் . நான் சொன்னா. தப்பா எடுத்துக்காத கௌசி இனிமே அந்த கொடி சார் கிட்ட பேசாத.
என்ன சொல்லுற மீரா.
அவங்க அம்மா குருவம்மாள் இருக்கே சரியான ரௌடி பொம்பள. வட்டிக்கு பணம் கொடுக்கும், சீட்டு பிடிக்கும், அது மட்டும் இல்ல. அந்த பொம்பளைய எங்க ஏரியாவில் சாராய காரம்மா என்று தான் கூப்பிடு வாங்க . அந்த பொம்பள ஊர்ல சாராயம் வித்துட்டு இருந்துச்சாம்.
என்ன மீரா சொல்லுற.
ஆமாம் கௌசி எங்க அம்மா சொல்லுவாங்க. அந்த பொம்பள சரியான பஜாரி. வாய தொறந்தா மூடாது.அசிங்கம்மா பேசுமாம்.
கௌசி என்ன இது கோடி சார் அம்மாவா என்றே தோன்றியது.
மீரா இன்னும் நெறையா இருக்கு அப்பறம் என்றவள்.
சொல்லு மீரா.
நீ யார்க்கிட்டையும் சொல்ல கூடாது.
கௌசியோ மீராவிடம் நான் யார்கிட்ட சொல்ல போறேன்.
அது கோடி சார் ஜெயில் கெல்லாம் போகியிருக்காரு தெரியுமா.
என்ன என்று அதிர்ந்த கௌசியை பார்த்த மீரா.
ஆமாம் கௌசி அவர் ஒரு வாரம் ஜெயிலுல இருந்தார். அப்படின்னு கேள்விப்பட்டேன்.சாக்கிரதை என்று மீரா சொல்லி கிளம்ப.
கௌசிக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்ன கோடி சார் ஜெயிலுக் கெல்லாம் போகிறுக்காரா? ஏன் போனார் , என்ன தப்பு செஞ்சார் என்று மனது ஒரு பக்கம் கேள்வி கேட்க.
இனிமே கோடி சார் இருக்குற பக்கம் தல வச்சு கூட படுக்க கூடாதுப்பா என்றவள் வீட்டிற்கு சென்றாள்.
ஒரு வாரம் கௌசி காலேஜுக்கு போக வில்லை. அவளுக்கு பயம் கோடி பஸ் ஸ்டாப் வந்து விட்டால் என்ன செய்வது. ஒரு வாரம் கழித்து போனால். அவர் வரமாட்டார் என்று நினைத்து இருந்தவள். கமலத்திடம் காலேஜில் படிக்க சொல்லி லீவு விட்டு இருக்குகாங்க என்று. சொன்னவள்.
ஒரு வாரம் கழித்து கௌசி காலேஜுக்கு கிழம்பி பஸ் ஸ்டாப் வர . கோடியோ கௌசியை பார்க்க தினமும் பஸ் ஸ்டாப் வர. ஒரு வாரமாக கௌசியை காணவில்லை.
எப்படி காலேஜ் வராமல் போவாளா வருவாள் தானே . தினமும் அவளின் காலேஜ் பஸ் வர இவள் ஏன் காலேஜுக்கு. வரவில்லை. நான் சொல்லியதால் கோபமா என்று நினைத்தவன். புடிக்கலின்னா சொல்ல வேண்டியதுதான . அத விட்டு ஏன் காலேஜ் வராமல் இருக்க. நான் என்ன செய்து விடுவேன் ஏன் அவள் ஒரு வராமாகியும் காலேஜ் போகவில்லை என்று கௌசியின் மீது கோபம் வந்தது கோடிக்கு.
அன்று திங்கள் கிழமை இன்னைக்கு அவள் வருவாள் என்று நினைத்தவள். பஸ் ஸ்டாப்பின் பக்கத்தில் நிற்க.
கௌசி எல்லா கடவுளையும் வேண்டியபடியே வந்தாள். கோடி சார் பஸ் ஸ்டாப் வரக் கூடாது. அவள் வேண்டிய அத்தனையும் கடவுள் அவளை கைவிட.
பஸ் ஸ்டாபின் பக்கத்தில் தன் புல்லட்டில் அமர்ந்து இவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான். இவளை பார்த்து என்ன வென புருவத்தை ஏற்றி கேட்க.
அவள் தலை குனிந்த படியே பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்க.
கொடி அவளின் பக்கத்தில் வருவதை பார்த்தவள்.பஸ் ஸ்டாப்பில் இருந்து வெளியில் நடக்க . கோடி இவளிடம் பேச முயற்சிக்க. அவளோ வேக , வேகமாக நடந்து அவள். வீட்டிற்கே சென்று விட்டாள்.
அவனுக்கோ கோபம் என்ன செய்தேன் நான். ஏன் காலேஜ் வரவில்லை என்று கேட்க வந்தேன். இவளோ பேயை பாத்த மாதிரி ஓடறா என்று கௌசியின் மீது கோபம் வர.
இனிமேல் உன்ன பாக்க வர மாட்டேன் என்றவன். ஒரு வாரமாக வரவில்லைஅவளை பார்க்க. நான் இவளை என்ன செய்தேன். என்னை பிடிக்க வில்லை என்றால் , உன்னை பிடிக்கல இனிமேல் என்ன பார்க்காத , பேசாத என்று சொல்ல வேண்டியது தானே. அத விட்டுட்டு நான் பக்கத்தில் வருவதை பார்த்து. ஓடுறா என்ன செய்தேன் இவளை.
இனி உன் கண் முன் நான் வரமாட்டேன்டி . பெரிய உலக அழகி என்று நெனப்பு. உன்ன விட அழகியெல்லாம் பார்த்தவன்டி, போடி என்று மனதை தேற்றியவன்.மனது சமன் படவில்லை. மறுபடியும், மறுபடியும் ஏன் என்னை பார்த்து பயந்து வீட்டுக்கு போன. நான் அவ்வளவு தொந்தரவா அவளை பண்ணேன்.
அவளை பார்க்காமல் கோடியால் இருக்க முடியவில்லை. மறுபடியும் பஸ் ஸ்டாப் போய் நிற்க.
கௌசியை அவர் தந்தை காலேஜுக்கு பைகில் கூட்டி செல்வதை பார்த்தவன்
ஓ எனக்கு பயந்து அவள் அப்பா கூட போற .போடி உன்னை யார் தேடுனா என்றவன் புலம்பிய படியே இருந்தான். கௌசியின் சார் என்று அழைப்பு அவனுக்கு கேட்க ஆசையாக இருந்தது.
கௌசி அன்று காலேஜ் போகாமல் திரும்பி வருவதை பார்த்த கமலம். ஏன்டி திரும்பி வர்ர பஸ் போய்டுச்சா.
இல்லம்மா அது, அங்கே என்று அவள் பயப்படுவதை பார்த்தவர். என்னடி சொல்லு என்று கமலம் கேட்க.
பஸ் ஸ்டாப்பில் தன்னை ஒருவன் கேலி செய்வதாக கூறியவள் நான். இனிமேல் காலேஜ் பஸ்சில் போக மாட்டேன். வேற ஸ்டாப் போறேன் இல்ல அப்பாவை கொண்டு விட சொல்லுங்க என்று சொல்ல.
கமலம் கௌசியின் பயத்தை பார்த்தவர் சரி அப்பாவை கொண்டு விட சொல்லுறேன் என்றார்.
கோடி அவளை பார்ப்பதை குறைத்து கொண்டான் .
கோடியின் வீட்டிற்கு கார்பரேஷன் வாட்டர் ( நல்ல தண்ணி) கனெக்க்ஷன் குடுக்க ஆட்கள் வர வேலை நடந்து கொண்டு இருந்தது.
கோடிக்கு அவசரமான வேலை வர. கமலத்தை அழைத்தவன் கொஞ்சம் பாத்து கோங்கக்கா எனக்கு ஒரு முக்கியமான வேலை அரைமணி நேரத்தில் வந்து விடுவேன். வீடு தோரந்து இருக்கு பைப்பு உள்ள வரைக்கும் கனெக்ஷன் குடுப்பாங்க பாத்துக்கோங்க என்று சொல்லி சென்றான் .
வேலைகள் முடிந்து விட. வேலை செய்யும் ஆட்கள் கமலத்தை அழைத்து தண்ணீர் சரியா வருகிறதா என்று செக் பண்ணுங்க என்று சொல்ல.
கமலம் கௌசியை அழைத்து. தம்பி வீட்டுல நல்ல தண்ணி கனெக்ஷன் குடுத்தாங்க தொட்டியில தண்ணி வருதான்னு பாரு என்று சொல்ல.
நானா என்றவள். ஏன் கோடி சார் இல்லையா.
அந்த தம்பி என்ன பாத்துங்க சொல்லி போயிருக்கு இப்போ வந்துரும். நீ போய் பாத்துட்டு வா.
சரி என்றவன் பின் பக்கம் நல்ல தண்ணி. தொட்டி கீழே கட்டி இருக்க தண்ணி மெதுவாக வந்து கொண்டு இருந்தது. கௌசி கமலத்திடம் வந்து அம்மா தண்ணி வருது என்று சொல்ல.
அந்த வேலை செய்தவர்களிடம் தண்ணி வருதுப்பா நீங்க கிளம்புங்க என்றவர்.
கௌசியை பார்த்து நல்ல தண்ணி நெறஞ்சவுடன் மேலா டேங்குல தம்பிக்கு ஏத்தி விட்டு வா. நான் இன்னைக்கு பிரதோசம் கோவில் போறேன் என்று கிளம்ப.
இந்த அம்மா வேற . தம்பி, இம்சா பிடிச்ச தம்பி . சும்மா இருக்க தேவை இல்லாத வேலை பாக்குது இந்த அம்மா என்று புலம்பிபடியே கோடியின் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்க. கோடியின் வீட்டை சுத்தம் செய்யும் பெண் ஒரு குழந்தையோடு வந்து வீட்டை சுத்தம் பண்ணி கொண்டு இருக்க. அந்த பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருக்க. அந்த பொண்ணை அழைத்து கௌசி அக்கா குழந்தை அழுகுது பாருங்க என்று கூற.
அந்த பொண்ணோ 5 நிமிசம் மா என்று கூறி கொண்டே வேலை பார்த்து கொண்டே இருக்க.கோடியின் வீட்டினுள் வந்தவள். அக்கா குழந்தை அழுகுது என்று சொல்ல.
5 நிமிசம் மா வாசிங் மெசின் ஆப் ஆனதும் துணியை. காய வச்சுட்டு போறேன் என்று சொல்ல.
கௌசி குழந்தையை பாருங்க நான் இப்பதான் தண்ணி மோட்டார் போட்டேன். நான் துணியை காய போடுறேன் என்று சொல்ல.
ரொம்ப நன்றி மா. குழந்தைக்கு பசிக்கு போல நான் வீட்டுக்கு போறேன். துணியை மட்டும் வெளியில் உள்ள கொடியில் போட்டுடுமா.
சரிக்கா என்றவள் . தண்ணீர் விழும். சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்க்க தண்ணீர் டேங் நிறைந்து விட . கீழே வந்து மோட்டரை ஆப் பண்ணியவள். வாசிங் மெசினை பார்க்க அது ஆப் ஆகியிருந்தது. இது உனக்கு தேவையா. சீக்கிரம் கிளம்பு என்றவள். கோடியின் துணிகளை எடுத்து வீட்டின் பின் பக்கம் துணியை காய போட்டவள் பின் கதவை சாத்தி விட்டு வர .
கோடி முன் கதவை பூட்டி கொண்டு இருந்தான்.
நான் உள்ள இருக்கேன் என்றவள் கதவை திறக்க என்று சொல்ல.
கோடி கௌசியை பார்த்து முறைத்து நிற்க .
கௌசியோ அவள் கையில் இருந்த பக்கெட்டை உள்ளே கொண்டு போய் வைத்தவள். கோடியை பார்க்காமல் கதவை திறக்க போக.
ஒரு நிமிசம் கௌசி என்றவன். எனக்கு பதில் சொல்லிட்டு போ என்னை பார்த்து ஏன் பயப்படுற. நான் என்ன சிங்கமா , புலியா. நான் உன்னை என்னை லவ் பண்ணு, பண்ணுன்னு டார்சர் பண்ணுனேனா. உனக்கு என்னை புடிக்கலேன்னா புடிக்கலேன்னு சொல்லு. அதவிட்டுட்டு ஏன் என்ன பாத்து பயபடுற என்று கேட்க.
கௌசி அவனை தாண்டி கதவை திறக்க போக.
கோடி கௌசியின் கை பிடித்து இழுத்து சோபாவில் உக்கார வைத்து சொல்லிட்டு போ.
அவளோ அவனை முறைத்து பார்த்து விட்டு. நான் வீட்டுக்கு போறேன் என்று அழுக.
ஏன் கௌசி நான் என்ன பண்ணேன் சொல்லுமா ஏன் அழுகுற.
எனக்கு வீட்டுக்கு போகனும் . கதவ திறக்க என்று மறுபடியும் அவனை பாராமல் குனிந்து கொண்டு அழுக.
என்னடி உன்னை பண்ணேன் சொல்லி தொல. என்ன பாத்து பயபடுவதற்கு. நான் என்ன பண்ணேன் சொல்லு.
எனக்கு உங்கல பாத்த பயமா இருக்கு.
என்ன பாத்த உனக்கு பயமா இருக்கா. முன்னாடி நல்லா தானே பேசுன. அப்போ பயம் வல்லயா. இப்ப மட்டும் என்ன வந்துச்சு உனக்கு.
கௌசி தலை குனிந்த படியே கண்ணீல் நீர் வர, என்னை போக விடுங்க.
பதில் சொல்லிட்டு போ.
என்ன பதில் சொல்லனும்.
நீ ஏன் என்ன பாத்து பயந்து ஓடுற அதற்கு பதில் சொல்லு.நீ பதில் சொல்லாம விடமாட்டேன்.
அவளோ தைரியத்தை வர வைத்து கொண்டு. நீங்க , நீங்க ஜெயிலுக்கெல்லாம் போயி வந்து இருக்கீங்கலாமே அப்படியின்னு சொன்னாங்க.
ஓ… நான் ஜெயிலுக்கு போய்யிட்டு வந்தது உனக்கு தெரிஞ்சு தான் என்ன பாத்து பயந்த அப்படி தானா .
ஆமாம் என்றாள் கௌசி.
நா ஜெயிலுக்கு போனதை சொன்னவங்க , நான் ஏன் ஜெயிலுக்கு போனேன்னு அவங்ககிட்ட கேளு என்றவன்.அவள் சொல்லிய காரணத்தை யோசித்தவன். என்னை புரிந்து வைத்தது இவ்வளவு தான் . கிளம்பு என்றவன் கதவை திறந்த விட.
அவளோ சாரி சார் என்று சொல்லி கிளம்ப.
எதற்கு சாரி .
நான் சொன்னது உங்கள கஷ்ட படுத்தி இருந்தால்.
அவனின் கோப முகத்தை பார்த்தவள் தயங்கி நிற்க.
கௌசி பார்த்தவன் இனி நீ என்கிட்ட பேச கூடாது. நான் பஸ் ஸ்டாப் வரமாட்டேன் .உன் லைப்புல இனி கோடி இல்ல. என்னை பார்க்கலண்ணு நினைச்சுக்கோ .
கௌசிக்கோ அவன் அவளை திட்டி இருந்தால் கூட பரவயில்லை. அவன் வருந்தி பேசியது சாரி சார் என்று மீண்டும் அழுக.
வெளியே போ என்றவன் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி கதவை சாத்தினான்.
கோடிக்கு அவள் சொல்லியவுடன் தான் அவனுங்கே அது ஞாயபகம் வர நினைவுகள் பின் நோக்கி சென்றன……
error: Content is protected !!