Skip to content
Post Views: 518
வினியின் நதி அத்தியாயம் 8
நதியின் தோழிகள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
”என்ன நடக்குது இங்க?” என மரியா அவளை மேலும் கீழும் பார்த்துக் கேட்க,
”எல்லாரும் தான் நடக்குறோம்.. ஏன் பாத்தா கண்ணு தெரியலயா? கண்ணாடிய மாத்தனும் உனக்கு” நதி அவளை கலாய்க்க,
Advertisement
”ஹி ஹி எல்லாரும் ஒருக்க சிரிச்சுருங்கடி.. காமெடி பண்றாலாம்” என வெண்ணிலா சொல்ல,
”நானும் கூட சிரிக்கேன்… வாங்க சிரிக்கலாம்” என்று நதி சொல்லி சிரிக்க,
மற்ற அனைவரும் சிரிக்காமல் அவளையே முறைத்துப் பார்த்தனர்.
Advertisement
“என்னடி?” என நதி சலிப்பாக கேட்க,
Advertisement
“அத நீ தான் சொல்லனும்” என ராதா கூற,
“ஒன்னும் இல்ல… சும்மா பேசிட்டு தான் இருந்தோம்.. நீங்களா எதாச்சும் நினைக்காதிங்க” என்றாள்.
”நாங்களா எதுவும் நினைக்கல…. நீ செய்றது தான் சரியில்ல.. தினமும் அவன பாக்க அவன் வகுப்புக்கு போற… ஏதோ நினச்சுட்டே இருக்க கிளாஸ்ல… யார்ட்டயும் சரியா பேசல… கேட்டா ஒன்னும் இல்ல சொல்ற… எங்கள தோழியா நினச்சா சொல்லிருப்பேல… ” என்றாள் வெண்ணிலா வருத்தமுடன்.
Advertisement
”அது வந்து.. அது வந்து “ என்று நதி இழுக்க,
“ஹேய் அப்டியே கட் பண்ணி மேட்டருக்கு வா.. இந்த வந்து, போயி, சுமந்து, தூக்கி எல்லாம் வேண்டாம் ” என ராதா சொல்ல,
”யாருகிட்டயும் சொல்ல மாட்டேனு சொல்லுங்க சொல்றேன்… இல்லேனா எதுவும் சொல்ல மாட்டேன்” என நதி கேட்க,
“மாட்டோம் மாட்டோம் உன் தங்க மலை ரகசியத்த சொல்லவே மாட்டோம்பா” என்று மரியா கூற,
“எனக்கு அவர பிடிச்சுருக்குடி..” என நதி கூறிய நொடி,
”அது அவருக்கு பிடிக்காம நான் சொந்தம்னு பழகுனேன் .. நீ இப்டி பண்ணுவேனு நினைக்கவே இல்ல நதி… இனி என் மூஞ்சில முழிக்காத.. இதுக்கு மேல என் பின்னாடி வந்தா உன்ன ப்ரின்சிபல் (Principal) கிட்ட சொல்லிருவேனு சொன்னாரா.. அவரு இல்லேனா உனக்கு வாழ்க்கையே இல்ல.. இனி உன் எதிர்காலம் என்ன ஆகும்னு நினச்சு அழுதியா? கவலப்படாதடி தங்கம்.. நாங்க இருக்கோம் உனக்கு.. அவன் கிடக்கான் கிருக்கான்டி.. எங்க நதி அழகுக்கும், அறிவுக்கும் அவன விட சூப்பர் ஃபிகரா, ரிச் பாய்யா பாத்து நாங்க உனக்கு கட்டி வைக்கோம்.. நீ வருத்தப்படாத செல்லம்” என்று வெண்ணிலா கூற,
”பாவம் அவன எவ்ளோ பிடிக்கும்னு அவ நம்மகிட்ட அவன பத்தி அத்தன தடவ அவன் திறமை, பேச்சு பத்தி சொல்லேலயே நமக்கு தெரியும்ல.. திடிர்னு அவன் வேண்டாம்.. பேசாதனு சொன்னது நதிக்கு ரொம்ப வருத்தமா இருந்துருக்கும்.. அதான் இத நம்மகிட்ட சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம மனசுல போட்டு மறுகிருக்கா… அது தெரியாம நம்ம ஏதோ நினச்சுட்டோம்… விடு நதி பசங்களே இப்டி தான்… இவன விட்டா வேற பையனே கிடைக்காதா? இதுக்கு போய் கண் கலங்கிட்டு” என்று ராதா சொல்ல,
“இவளுக்கு பசங்க கிட்ட ரொம்ப அனுபவம் அதான் இவ அட்வைஸ் பண்றா” வெண்ணிலா ராதாவை கிண்டல் செய்ய,
”அது இல்லடி நான் என்ன சொல்ல வரேன்னா…” என நதி தொடங்கும் போது,
இடைவேளை முடிந்ததற்கான மணி அடித்தது.
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நாங்க இருக்கோம்… என்ன நடந்தாலும் நாங்க இருப்போம்.. நீ வா நம்ம போலாம்” என்று மரியா இழுத்துச் செல்ல, அனைவரும் வகுப்பு நோக்கி சென்றனர்.
‘அய்யோ இவளுங்க வேற ஆளாளுக்கு அவங்க கற்பனைய சொல்லிட்டு.. நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்கல.. சரியான முட்டா பீஸ்ங்க.. சரி இப்போதைக்கு இப்டியே இருக்கட்டும்.. மெதுவா சொல்லிக்குவோம்.. நம்ம கூட்டாளிங்க தான.. எப்ப என்ன நடக்குமோ இவங்கள வேற எதுக்கு வருத்தப்பட வச்சுக்கிட்டு’ என நதி வேறு வழியின்றி அமைதியாக இருந்து விட்டாள்.
அன்றைய நாள் இனிதே முடிந்து மறு நாள் விடிந்தது. நதியின் வீட்டிலோ பெண் புரிந்து கொண்டாள். இனி ஒழுங்காக இருப்பாள் என எண்ணினர். அவள் சகோதரியோ இவள் திருந்துற ஆள் இல்லயே.. சரி விட்டு பிடிப்போம் என நினைத்தாள்.
அன்று மதியம் வினோதனுக்கு கல்லூரிக்கு முடிந்ததும் நேராக நதியைப் பார்க்க வந்தான். நதி அப்போது தான் உணவு உண்ண கிளம்பினாள். வினோதனைப் பார்த்ததும் அவள் தோழிகளை கிளம்ப சொல்லிவிட்டு இவள் அவனிடம் பேச சென்றாள்.
”நேத்து ஹார்ஸா பேசுனான்ல அதான் மன்னிப்பு கேக்க வந்துருப்பான்..” என அவள் தோழிகள் அவர்களுக்குள் கிசுகிசுத்து சென்றனர்.
இவளுங்க வேற லூசு மாதிரி எதாச்சும் சொல்லிகிட்டு என நதி நினைத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
”இந்தா இத பிடி” என நதிக்கு ஒரு பட்டன் கைப்பேசியை வினோதன் கொடுத்தான். ஃப்ல்ளிப் டைப் மொபைல் (flip type mobile) அது. அதில் வாட்ஸ்அப், முகநூல் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கருப்பு நிறமும், சுற்றி முனைப்பகுதியில் சில்வர் கலரும் பார்ப்பதற்கு அழகாக இருந்த்து.
”ஹே என்ன இது.. இது எதுக்கு எனக்கு? வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” என அவள் வாங்க மறுக்க,
”நீ தான அவசரத்துக்கு கூட என்கிட்ட பேச முடியலன்னு வருத்தப்பட்ட அதான்… அதெல்லாம் வீட்டுக்கு தெரியாம நீ பயன்படுத்திக்கோ.. இப்ப இத பிடி முதல்ல.. இது நான் மொதமொதல்ல என் சம்பளத்துல வாங்குன போன்… இப்ப டச் போன் (Touch Phone) வாங்கிட்டேன்.. இருந்தாலும் இத ஒரு நியாபகமா வச்சுருந்தேன்.. இப்ப உனக்கு தரேன்.. பத்திரமா வச்சுக்கோ” என்று அவள் கையில் திணித்தான்.
”யூ ஆர் சோ ச்ஸ்வீட்.. லவ் யூ வினி” என்று அவள் உற்சாகமாக சொல்ல,
”அதென்ன வினி? அன்னைக்கே கேக்கனும்னு நினச்சேன்.. நடந்த கலவரத்துல மறந்துட்டேன்..”
“அது செல்லபேருங்க.. வினோதன் சுருக்கி வினி”
“வினோதன் சுருக்குனா வினோ தான வரனும்.. அதென்ன வினி?”
“எல்லாரும் கூப்டுற மாதிரி கூப்டா என்ன ஸ்பெசல்… நான் உங்களுக்கு ஸ்பெசல் இல்லையா? அதான் வினி.. வினின்னா கனவு, அழகுன்னு அர்த்தம்.. என்னோட அழகான கனவு நீங்க… கனவு சீக்கிரம் நிஜமாகனும்… இந்த நதியோட வினி நீங்க.. எப்படி இருக்கு?” என்று அவள் கேட்க,
“பேசியே ஆள மயக்குற.. சரியான கள்ளி”
”ஏதே.. நான் பேசி மயக்குறேனா இத நீங்க சொல்றது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு… உங்களயே சொல்ல வச்சுட்டேன்ல… எனக்கு பெருமையாவும் இருக்கு”
”ரொம்ப பெருமை தான்.. எனக்கு நேரமாச்சு… பேசுனா பேசிகிட்டே இருப்போம்.. இனி தனியா இருக்கேல கால் பண்ணு பேசலாம்… சரியா?” என அவன் கிளம்ப பார்க்க,
”அதுக்குள்ள கிளம்பனுமா? கொஞ்ச நேரம் பேசலாமே..” என்று நதி இழுக்க,
”ஹெச்.ஓ.டி, ஸ்டாஃப் யாராச்சும் பாத்தா நமக்கு தான் வம்பு… அதான் போன் குடுத்துருக்கேன்ல அதுல பேசலாம்..”
“ம்ம்ம் சரி..”
“கொஞ்சம் சிரிடி தங்கம்.. அப்ப தான் கிளம்ப மனசு வரும்… இல்லேனா விட்டு போக மனசே இருக்காது”
“ஈஈஈஈ ஹாஹா ஹாஹா.. இந்த சிரிப்பு போதுமா?”
“அம்மா பேய்.. இனி நான் சொன்னாலும் சிரிக்காத தாயி… அப்றம் எனக்கு பேய் ஓட்ட தான் கூப்டு போனும்” என நடிகர் கவுண்டமணி பாணியில் சொல்ல,
நிஜமாகவே கலகலவென சிரிக்க தொடங்கிவிட்டாள்.
“ஹப்பா சிரிச்சுட்ட… நான் போய்டுவரேன் பாய்…”
“எப்டியோ பேசியே சாதிக்கிறிங்க… இது எல்லா நேரமும் வொர்க் அவுட் ஆகாது பாத்துகோங்க… நாளைக்கு பாக்கலாம் பாய்”
”பேசுறது தானம்மா என் வேலை.. பத்திரமா இரு.. அவசரம்னா கூப்டு..” என்ர்று சொல்லி வினோதன் விடைபெற்றான்.
அவளும் மொபைலை அவள் பைக்குள் வைத்து விட்டு உணவு உண்ண சென்றாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது. வினோதனுடன் தினமும் சில நிமிடங்களாவது போனில் பேசி விடுவாள். அப்போது தான் அவளுக்கு அந்த நாள் நிறைவானது போல ஒரு எண்ணம்.
இன்னும் இரண்டு நாட்களில் நதிக்கு பிறந்தநாள். அவர்கள் காதலிக்க ஆரம்பித்து முதல் பிறந்தநாள். அவன் தரும் பரிசுக்காக அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள்.
‘ஆமா முதல்ல எனக்கு பிறந்தநாள்னு அவனுக்கு தெரியுமா? எப்டி தெரியாம போகும்.. நான் தான் முகநூல்ல போட்டு வச்சுருக்கேன்ல.. அதுவும் வெள்ளிக் கிழமை வேற வருது.. என்ன பரிசு குடுப்பானோ ஆவலா இருக்கு’ என்று அவளுக்கு அவளே சிந்தித்து பதில் சொல்லிக் கொண்டாள்.
அன்று மாலை அவள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் வைத்து சந்திக்கலாம் என்று பேசி, கோவிலுக்கு சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு அவன் அவளிடம் ”உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றான்.
அவளும் “என்ன?” என்று கேட்க,
வருகிற வெள்ளிக்கிழமை என் அண்ணனுக்கு நிச்சயதார்த்தம்… பொண்ணு வீட்ல வச்சு சிம்பிளா பேசி முடிக்கோம்” என்று கூற,
”என்ன திடீர்னு? அவங்களுக்கு பொண்ணு பாத்திங்களா? என் கிட்ட இத பத்தி எதுவும் நீங்க சொல்லலயே..அவங்க படிச்சுட்டு தான இருக்காங்க அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்?” என அவள் கேட்க,
”திடீர்னு தான்… அவன் ஏற்கனவே காதலிச்சுட்டு தான் இருந்தான்.. எங்க வீட்டுக்கு தெரியும்.. பொண்ணு வசதியானவங்க… அண்ணன் பி.ஈ படிக்கேலயே அவங்க படத்துக்கு போய் வீட்ல மாட்டிகிட்டாங்க..” என அவன் சொல்ல,
“அவங்களும் திருச்சில படிச்சாங்களா?” என்று நதி கேட்க,
”இல்ல இல்ல.. பொண்ணு நம்ம ஊருல தான் பி.ஈ. படிச்சாங்க… ஸ்கூல் படிக்கேல +2ல இரண்டு பேரும் ஒரே டியூசன்… அதுல இருந்து லவ்… இவங்கள பாக்குறதுக்காகவே அண்ணன் திருச்சில இருந்து இங்க வந்து, இரண்டு பேரும் படம் பாக்க போயிருக்காங்க.. அவன் ஊருக்கு வந்தது எங்களுக்கு கூட தெரியாது”
”பாருடா… திருச்சி டூ விருதுநகர் ஒரு படம் பாக்கவா? சூப்பர்.. அப்புறம்?”
”அப்புறம் என்ன.. அவங்க படத்துல இருக்கேல பொண்ணு தம்பி தியேட்டர்ல வச்சு பாத்துட்டான்… பொண்ணு வீட்டுல போட்டு குடுத்துட்டான்.. படம் முடியேல பொண்ணு சொந்தகாரங்க எல்லாம் தியேட்டர் வாசல்ல நிக்காங்க.. அண்ணன் நைஸா பொண்ணு கூட பின்வாசல் வழியா போய் பொண்ண வீட்டுக்கு அனுப்பிட்டு இவனும் பஸ் ஏறி திருச்சிக்கு போய்ட்டான்..”
”அடப்பாவி பலே கில்லாடி தான் உங்க அண்ணா.. அப்புறம்?”
”ம்ம் ஆண்டாள் கோவில் சப்பரம்.. எவடி இவ… நான் என்ன கதையா சொல்றேன்.. போடி”
“கோச்சுகாதிங்க செல்லம் அடுத்து என்னாச்சு சொல்லுங்க”
”அடுத்து என்ன… அவங்க வீட்டுக்கு பொண்ணு போனதும் அவங்களுக்கு செமையா அடி.. அப்புறம் எங்க வீட்டுக்கும் பொண்ணு அப்பா, மாமா, சொந்தம் எல்லாம் வந்துட்டாங்க… என் அண்ணன் எங்கனு கோவமா கேட்டாங்க.. புண்ணியதுக்கு எங்க அப்பாவும், பொண்ணு மாமாவும் கூட படிச்சவங்க.. அதனால கொஞ்சம் பொறுமையா உக்காந்து பேச சம்மதிச்சாங்க அப்ப… ”
”இந்த அடிதடி சண்டை… மிரட்டல் எல்லாம் இல்லையா?”
”ரொம்ப ஆசப்படுற போலவே… நான் அப்ப தான் 9ம் வகுப்பு படிச்சேன்… அதுனால என்னை சண்டைல சேத்துக்கல.. சேத்துருந்தா தெரிஞ்சுருக்கும்..”
”சேத்துருந்தா அப்டியே கிழிச்சு தள்ளிருப்பிங்க…”
“என்ன சொன்ன?”
“சண்டைல சட்டை கிழிஞ்சுருக்கும்னு சொன்னேன்.. நீங்க மேல சொல்லுங்க”
”சண்டைல கிழியாதா சட்டை எங்க இருக்கு.. இதெல்லாம் வீரனுக்கு சகஜம்மா… ஆனா அன்னைக்கு அடிதடி சண்டைன்னு இல்ல… ரொம்ப சத்தம் போட்டு போனாங்க.. எங்க அண்ணனுக்கு போன் பண்ணா அவன் போன்-அ ஸ்விட்ச் ஆப் பண்ணிருக்கான்…”
“ரொம்ப விவரம் தாங்க உங்க அண்ணன்.. எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணிருக்காங்கல”
“ஆமா விவரம் தான்.. எங்களுக்கும் அவன் வந்ததே தெரியாதே.. அதுனால நாங்க அண்ணன்கிட்ட பேசுறோம்னு மட்டும் சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பினோம்”
“ம்ம்ம் அதுக்கப்புறம் அவங்க பாத்துக்கவே இல்லையா?”
“அப்படினு சொல்ல முடியாது.. அண்ணன் நல்லா படிப்பான்ல .. அதுனால படிப்புல கவனம் செலுத்தி இப்ப பி.ஹெச்.டி பண்றான்… பொண்ணு வீட்ல சொல்லி சொல்லி பாத்தாங்க.. பொண்ணு பிடிவாதமா என் அண்ணன் தான் வேணும்னு நின்னுட்டாங்க… அதுனால அவங்க வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க… இப்ப பொண்ணு கடைசி வருடம் எம்.ஈ பண்றாங்க… கல்யாணம் அடுத்த வருஷம் தான்.. இப்ப சும்மா சிம்பிளா ஒரு நிச்சயதார்த்தம்..” என்று வினோதன் கூறி முடித்தான்.
”வெள்ளிக்கிழமை தான் நிச்சயதார்த்தம் வைக்கனுமா? வேற நாளே இல்லையா? அடுத்த வாரம் கூட வைக்கலாம்ல..” என்று நதி வருத்தத்துடன் சொல்ல,
“பொண்ணு வீட்ல சம்மதிச்சு கேக்குறாங்க செஞ்சுருவோம்.. அண்ணனும் ஆசை பட்டுட்டான்.. எதுக்கு தள்ளி வைக்கனும்” என்று வினோதன் சொல்ல,
”ம்ம் அதுவும் சரிதான்… ஆமா பொண்ணு பொண்ணுனு சொல்றிங்க.. பொண்ணுக்கு பேர் இல்லையா?” என்று நதி கேட்க,
“ஆமால்ல.. அத சொல்ல மறந்துட்டேன்.. அண்ணி பேரு அபி”
“நல்ல பேரு.. நம்ம வீட்ல எல்லாருக்கும் குட்டி பேரு இல்லைங்க” என்றாள்.
“அட ஆமா.. நானும் இப்ப தான் யோசிக்குறேன்..” என வினோதன் சொல்ல,
“இதுவே நான் சொல்லி தெரிய வேண்டிருக்கு.. நல்லா யோசிச்சிங்க போங்க… அப்போ வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வரமாட்டிங்களா?” என ஏக்கத்துடன் அவனைப் பார்த்து கேட்க,
வினோதன் சிரித்துக்கொண்டு, ”கண்டிப்பா வரமாட்டேன்.. வீட்ல நிறைய வேலை இருக்கும்ல… நான் தான் பண்ணனும்.. வீட்ல விசேஷம் வச்சுட்டு யாராச்சும் கல்லூரிக்கு வருவாங்களா?” என்று கேட்க,
நதியோ ”நல்ல நாளுன்னு தான் கேக்குறேன்.. வருவிங்களானு?” என்று சொல்ல,
”நதி என்னாச்சு உனக்கு.. எதுக்கு திரும்ப திரும்ப கேக்குற?”
“ஒன்னுமில்ல.. சும்மா தான்.. நீங்க நிச்சயத்த என்ஜாய் பண்ணுங்க.. ஃபோட்டா எடுத்து அனுப்புங்க.. நான் அதுல எல்லாரையும் பாத்துக்குறேன்”
”கண்டிப்பா அனுப்புறேன்… சரி நேரமாச்சு கிளம்புவோம்.. நான் நாளைக்கும் கல்லூரிக்கு வரமாட்டேன்.. அவசரம்னா போன் பண்ணு..” என்று வினோதன் சொல்ல,
”அவசரம்னு கூப்டா வந்துருவிங்களா?” என்று நதி கேட்க,
”சே சே… போன்-அ சுவிச்ஆப் பண்ணி வச்சுருவேன் அதுக்கு தான்” என்று வினோதன் சிரிக்காமல் சொல்ல,
”உங்கள எப்ப பாரு என்னைய கிண்டல் பண்றதே வேலையா போச்சு போங்க” என்று நதி சிணுங்கினாள்.
”கோச்சுக்காதடி.. சும்மா சொன்னேன்.. உனக்காக வராம அப்புறம் யாருக்கு வரப் போறேன்… கண்டிப்பா வருவேன்..”
”சரி சரி நல்லவரே.. அவசரம்னு கூப்டும் போது தான் தெரியும்.. கிளம்பலாம் வாங்க” என்று இருவரும் அவரவர் வீடு நோக்கி சென்றனர்.
error: Content is protected !!