Skip to content
Post Views: 2,799
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 7
Advertisement
கோடிஸ்வரன் தன் அக்கா தென்றலுக்கு போனில் அழைக்க.
Advertisement
Advertisement
இரண்டு ரிங்கில் எடுத்தவள். சொல்லுடா கோடி இப்பதான் அக்கா நியாபகம் வந்துச்சா உனக்கு.
இல்லக்கா நீங்க வேலையா இருப்பீங்க அதுதான்.
Advertisement
சொல்லு கோடி என்ன விசயம்.
அது… எனக்கு…. ஒரு பொண்ண பிடிச்சுருக்கு.
என்னடா கோடி லவ்வா…
ஆமாம் தென்றல்.
சொல்லு எப்போ இருந்து..
அது ஒரு 6 மாசம் இருக்கும்.
என்னட பொண்ணுகிட்ட சொல்லியாச்சா.
எல்லாம் ஆச்சு . பொண்ணு வீட்டுல இருந்து பேச வர சொல்லுறாங்க.
அடபாவி எல்லாம் நீயா பேசி முடிச்சுட்டியா என்று கேட்க.
இதெல்லாம் இல்லக்கா. நான் புது வீடு கட்டி இருக்கேன்ல. ஆமாம்.
அந்த வீட்டின் எதிர் வீடு தான். அந்த பொண்ணோட வீடு.
தென்றல் கோடியிடம் ஏன்டா வீட கட்டி கிட்டே லவ் பண்ணியா ராசா என்று கேட்டு சிரிக்க.
போக்கா. அந்த பொண்ண இந்த வீடு கட்டறதுக்கு முன்னே தெரியும் .
சரி , சரி பொண்ணு பேரு என்ன.
அவ பேரு கௌசல்ஸ்ரீ , கௌசியின்னு கூப்பிடு வாங்க. காலேஜ் பைனல் இயர் படிக்குறா.
சூப்பர்டா நான் சித்திக்கிட்ட பேசுறேன்
கோடி நீ கண்டிப்பா வரனும் தென்றல் என்றான்.
கோடி உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.
சொல்லுக்கா.
நான் .. எனக்கு … பேபி பாம் ஆகியிருக்குடா.
என்னக்கா சொல்லுற.
ஆமாம்டா . இப்போ தான் 45 டேஸ் ஆச்சு. நான் புல் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். நான் வரமுடியாதுடா. சித்திக்கிட்ட சொல்லுறேன் சரியா.
சரிக்கா. ரொம்ப சந்தோஷம் உடம்ப பாத்துக்கோ. மச்சானுக்கு வாழ்த்து சொன்னேன்னு சொல்லு.
சரிடா .எல்லாம் நல்லபடியா நடக்கும்.
தாங் .யூ .க்கா என்றான் கோடி.
தென்றல் குருவம்மாளிடம் அனைத்தையும் சொல்ல.
குருவம்மாளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை கோடியா சொன்னான் .
ஆமாம் என்றாள் தென்றல்.
குருவம்மாள் தென்றலிடம் நீ எப்போ வர்ரம்மா என்று கேட்க.
அவள் கருவுற்று இருப்பதை சொல்ல.
சந்தோஷம் அடைந்த குருவம்மாள் சரிம்மா நீ உடம்ப பாத்துக்கோ. நான் உனக்கு போன் பண்றேன்.
குருவம்மாள் கோடிஸ்வரனை அழைத்து விசயத்தை கேட்க. அனைத்தையும் சொன்னவன். நாளைக்கு நல்ல நாளாம் என்று கூற.
சரிப்பா. நாளைக்கு நாமா பொண்ண பாத்து பேசலாம்.குருவம்மாள் உன் அண்ணன் கிட்ட சொல்லுடா.
சரிம்மா என்றான் . இவன் கிட்ட சொல்லனுமா ஆயிரம் கேள்வி கேப்பானே. கோடி சுந்தருக்கு அழைக்க.
என்னடா என்றான் சுந்தர்.
நாளைக்கு எனக்கு பொண்ணு பாத்து பேச போகனும் . நீயும் அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் வாங்க என்று அழைக்க.
டேய் என்னடா. பார்க்குக்கு கூப்பிடற மாதிரி கூப்பிடுற. எப்போ பார்த்தாங்க பொண்ணு. யார் பார்த்த பொண்ணு.
கோடி டேய், அண்ணா பேச்ச குற.எனக்கு ஒரு பொண்ண புடிச்சுருக்கு . அவங்க வீட்டுல சொன்னேன் . நம்ம வீட்டுல இருந்து பேச வர சொன்னாங்க.
சுந்தரால் நம்ப முடியவில்லை. டேய் தம்பி லவ்வாடா. நீ ஒரு பொண்ண லவ் பண்ணுனியா நம்ம முடியலயடா சரி சொல்லு எப்போ வரனும் .
அம்மா கிட்ட. சொன்னேன் கேட்டுக்கோ.
கோடி ஒரு , ஒருத்தரிடம் சொல்ல வெக்கமாக இருந்தது. மானத்த வாங்குறானுங்க. நீயாடா , நீயாடாயின்னு கேட்டு. ஏன் நாங்கெல்லாம் லவ் பண்ண கூடாதா.
கோடி சிவாவிடம் நாளை காலை 10 மணிக்கு மேல் உங்க வீட்டுக்கு வர்ரோம் என்று சொல்லியவன். பணம் விசயம் எங்க வீட்டுல யாருக்கும் தெரிய வேண்டாம் சரியா என்று கூற. சரிங்க சார் என்று போனை வைத்தான்.
சிவா கமலத்திடம் விசயத்தை சொல்ல.கமலம் வீட்டையே தலை கீழ் மாத்தி கொண்டு இருந்தார். வீட்டை அழகு படுத்துவது . வருவோர்க்கு என்ன சாப்பிட குடுப்பது என்று அனைவரையும் வேலை வாங்க. கமலம் சிவாவிடம் நாளைக்கு எத்தனை பேர் வருவாங்கன்னு கோடி தம்பி கிட்ட கேளு என்று கூற.
சிவா கோடியை போனில் அழைத்து . அம்மா கேட்டாங்க சார் நாளைக்கு நீங்க எத்தனை பேர் வருவீங்க.
நாங்க 5 இல்ல 6 பேர் வருவோம் என்றான் .
குருவம்மாள், கோடிக்கு பொண்ணு பாக்க போறோம் என்று பார்க்கும் அனைவரிடம் சொல்லி கொண்டு இருந்தார்.
சுந்தர் வந்து நாளைக்கு எத்தன மணிக்கு கிளம்பனும் என்று கேட்க.
குருவம்மாள் சுந்தரிடம் 10 மணிக்கு வர சொன்னான் கோடி என்று சொல்ல.
சரி சித்தி என்றவன். எதாவது வாங்கனுமா.
நான் எல்லாமே வாங்கிட்டேன் சுந்தர். காலையில் பூ மட்டும் வாங்குனா போதும் என்று மகிழ்ச்சியாக சொல்ல.
சரி சித்தி நான் நாளைக்கு லீவு சொல்லியிருறேன் . அப்பறம் சித்தி பொண்ண பாத்து பேசி வர்ர அடுத்த மூகூர்த்தத்துல கல்யாணத்த முடிச்சுருன்னும். கோடிய நம்ப முடியாது. அப்பறம் எனக்கு புடிக்கலன்னு சொன்னாலும் சொல்லுவான், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் . கோடிக்கு கல்யாணத்தை முடிக்குறோம்.
சரிப்பா என்ற குருவம்மாள் பழனுயிடம் சென்று விசயத்தை சொல்ல.
பழனி நல்ல படியா போய் பொண்ண பாத்து பேசியிட்டு வாங்க என்றார்.
காலையில் இருந்து கௌசிக்கு வேலைகள் சரியாக இருந்தன. கமலத்துக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததில் இருந்து ஒரு வேலையையும் செய்ய விடுவதில்லை காலையில் இருந்து கிச்சனில் சமைத்து கொண்டு இருந்தாள்.
கமலம் கௌசிக்கு எல்லா சமையலும் . ஒரு அளவுக்கு சொல்லி கொடுத்து இருக்க.
காலை எல்லோருக்கும் டிபன் செய்து முடித்தவள். கோடி வீட்டில் இருந்து வருவோருக்கு இனிப்பு , காரம் என்று செய்து முடிக்க காலை 9 மணியாகியது.
கமலம் வேகமாக வேலையை முடி கௌசி . தம்பி வீட்டுல இருந்து வர போறாங்க.
அம்மா 10 மணிக்கு தான் வருவாங்க. இப்போ 9 மணி தானே ஆகுது. நான் அரைமணி நேரத்தில் கிளம்பி இருவேன்.
கௌசி கிச்சனில் அனைத்து வேலைகளையும் முடித்தவள்.அவளின் அறைக்கு செல்ல.
கமலம் அவளுக்காக கரும்பச்சை நிறபுடவையில், ஆரஞ்சு கலர் பாடர் வைத்த பட்டு புடவையும் , நகையும் எடுத்து கௌசியில் கட்டிலில் வைத்து இருக்க.கமலத்தின் மகிழ்ச்சியை பார்த்தவள். இவ்வளவு நேரம் அவளின் குழப்பங்கள் . பின்னுக்கு போய்யின.
அம்மா இவ்வளவு நகையா . இரண்டு இல்ல மூனு போட்டா போதும்.
நீ சும்மா இரு கௌசி . தம்பி வீட்டுல எல்லோரும் வசதியா இருப்பாங்க. நிறைய நகை போட்டு வருவாங்க. நீ சிம்பலா இருந்தா நல்லா இருக்காது. உனக்குன்னு 50 பவுன் நகை வாங்கி வச்சுருக்கேன். அப்பறம் எல்லாத்தையும் போட சொல்லிருவேன் பாத்துக்கோ.நீ குளிச்சுட்டு தலையை காய வை . நான் தல பிண்ணி விட வரேன் என்று கீழே சென்றார்.
குருவம்மாள் கோடியின் வீட்டுக்கு 9.30 மணிக்கே வந்து விட்டார். கோடி அவன் வீட்டில் குளித்து விட்டு டி.வி.யில் நீயுஸ் பார்த்து கொண்டு இருக்க. காலிங் பெல் சத்தம் கேட்டு வந்த கோடி.வாசலில் நிற்கும் தன் குடும்பத்தை பார்த்து. பரவாயில்ல 10 மணிக்கு வர சொன்னா 9.30 மணிக்கே வந்துட்டீங்க. வாங்க வாங்க என்றவன். எல்லோரும் சாப்படீங்கல என்று கேட்க.
குருவம்மாள் எல்லோரும் சாப்பிட்டோம் கோடி. இந்த உனக்கு சப்பாத்தியும், பீட்ருட் பொரியலும் கொண்டு வந்தேன் சாப்பிடு என்று கொடுக்க அதை. வாங்கி சாப்பிட்டவன் . கிளம்ப.
குருவம்மாள் எந்த வீடு கோடி. ஏதுத்த வீடு தான் . வாங்க என்று அழைத்து செல்ல.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு, கமலம், சிவா ,இராஜாசெல்வம் அனைவரும் வந்து கோடியின் வீட்டாரை கை கூப்பி வாங்க , வாங்க என்று அழைத்து உள்ளே செல்ல.
குருவம்மாள் வீட்டை கண்களாலே சுற்றி பார்த்தவர் கமலத்திடம் வீடு ரொம்ப அழகா இருக்கு. என்று பேச்சு குடுத்தார்.
வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் கமலம்.
குருவம்மாள் கமலத்திடம் என் மருமகளை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க என்று சொல்ல. சிரித்த கமலம். சுந்தரின் மனைவியை அழைத்து மாடியில் முதல் அறையை காண்பித்து .என் பொண்ணு அந்த ரூம்பில் இருக்கா கூட்டிட்டு வர்ரீயாம்மா என்று கேட்க.
சரிம்மா என்று தன் மகனை அழைத்து கொண்டு சென்றாள்.
ரூம் கதவை தட்டி விட்டு திறக்க.
கௌசி வாங்க என்று அழைக்க.
நான் கோடியின் அண்ணி மணிமொழி என்று தன்னை அறிமுகம் செய்தவன் இது என் பையன். கௌசியை பார்த்து ரொம்ப அழக இருக்க மா. என்றாள் மணிமொழி.
நான் கௌசல்யாஸ்ரீ காலேஜ் பைனல் படிக்கிறேன்.
சுந்தரின் மகன் அம்மா இவங்கதான் சித்தியா என்று கேட்க ஆமாம்டா.
வா கௌசி கீழே போலாம்.
சுந்தரின் மகன் கௌசியின் கை பிடித்து மாடியில் இருந்து அழைத்து வர.
கௌசி வந்தவர்களுக்கு கை கூப்பி வணக்கம் வைத்து வாங்க என்று அனைவரையும் அழைக்க.
கமலம் இது உன் அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிங்கோ என்றார் .
கௌசி குருவம்மாளிள் காலில் விழ. கௌசி காலில் விழுவதற்கு முன் அவளை நல்லா இரும்மா என்றவர். அவரின் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டார்.
குருவம்மாள் கௌசியை பார்த்து கமலத்திடம் பொண்ணு மகாலட்சுமி மாதிரி அழகா இருக்கா. எங்க கோடிக்கு ஏத்த ஜோடி என்றவர் . தன் கழுத்தில் இருந்த இரட்டை வழை செயினை கழட்டி கௌசியின் கழுத்தில் போட்டவர் இது என் அக்கா ஜெயின் என்றவர் . தன் கைகொண்டு கௌசிக்கு திருஷ்டி எடுத்தவர். அழகா இருக்கடா. உன் பேரு என்னம்மா என்றார்.
கௌசல்யாஸ்ரீ மா என்றவள் . அத்தையின் கூப்பிடும்மா என்றார் குருவம்மாள்.
கௌசி கோடியை திரும்பியும் பார்க்க வில்லை. கௌசி மேலே இருந்து வரும் போதே கோடிஸ்வரன் அமர்ந்த இடம் தெரிய. அந்த பக்கம் பார்க்கவே இல்லை கௌசி.
ஆனால் கோடி கௌசியை மட்டும் தான் பார்த்தான்.சும்மாவே இவன் கௌசியை பார்ப்பான் இப்ப சொல்லனுமா. உரிமையோடு பார்த்தான் .
குருவம்மாள் எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு என்று சொல்லியவர்.அடுத்த மூகூர்த்தத்துல கல்யாணத்த வச்சுக்கலாம் . அடுத்த மாதம் சரியில்லை என்று சொல்ல.
இராஜாசெல்வம் குருவம்மாளிடம் கௌசிக்கு இன்னும் 5 மாசத்துல. காலேஜ் முடிஞ்சுரும் . அப்பறம் கல்யாணத்த வச்சுக்கலாமே.
அதனால் என்ன தம்பி. மருமக கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட படிக்கட்டும்.
கோடி குருவம்மாளிடம் அம்மா 5 மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொல்ல.
குருவம்மாள் இல்ல கோடி நல்லத தள்ளி போட கூடாது. என் மருமகள் நம்ம வீட்டுல இருந்து படிக்கட்டும் என்று
சொல்ல.
கமலம் இராஜாசெல்வத்தை பார்த்து தலையை ஆட்ட.
இராஜாசெல்வம் குருவம்மாளிடம் நீங்க நாள் பார்த்து சொல்லுங்க எப்ப வேணாலும் கல்யாணத்தை வைக்கலாம் என்று சொல்ல.
குருவம்மாள் இன்னும் 12 நாள்லுல நல்ல மூகூர்த்தம் வரது தம்பி என்று இராஜாசெல்வதிடம் சொல்ல. அப்போ கல்யாணத்தை அந்த நாள்ளுல வச்சுக்கலாம் என்று முடிவு பண்ணினார்கள்.
கோடியின் வீட்டார் கௌசியின் குடுபத்தினரிடம் சொல்லி சென்றனர்.
கோடி கௌசியை பார்க்க. அவள் மணிமொழியிடமும் , சுந்தர் மகனிடம் பேசி கொண்டு இருக்க.
கோடி கமலம் , சிவா, இராஜாசெல்வத்திடம் சொல்லிவிட்டு சென்றான்.
கௌசிக்கு இன்னும் 12 நாளில் கல்யாணம் எனக்கா . சொல்ல முடியாத பயம். எல்லாம் வேகமாக நடப்பது போல் இருக்க.கோடி சாரை எனக்கு புடிக்குமா. நான் ஏன் அவரை ஏற்று கொண்டேன் . பணம் கொடுத்து உதவியதால என்று மனதில் ஏதோ ஏதோ நினைத்து இருக்க. கமலமும் இராஜாசெல்வம் கல்யாணத்தை பத்தி பேசி கொண்டு இருந்தனர்.
கௌசி அவள் அறைக்கு சென்றாள். கௌசியின் தோழி் ஒருத்தி போன் போட்டு நாளை ஒரு டெஸ்ட் இருக்கு கண்டிப்பாக காலேஜ் வரனும் என்று சொல்ல.
கௌசி வந்து கீழே கமலத்திடம் சொல்ல. போயிட்டு வா , கல்யாணத்தப்போ ஒரு வாரம் லீவு போடு என்று சொல்ல சரி என்றவள் மேலே சென்றாள்.
காலை வேகமாக எழுந்தவள். வீட்டின் சமையல் வேலைகளை முடித்தவள். காலேஜுக்கு கிளம்ப. சிவா காலேஜில் விடுவதாக சொல்லியவன். இன்று சாயங்காலம் ஹைதராபாத் சொல்கிறேன். என்று சொன்னான்.
கௌசியை பஸ் ஸ்டாப்பில் விட்டவன். நான் ஊருக்கு போறேன் கௌசி என்றவன்.உனக்கு என்னால தான கௌசி இப்படி அவசர கல்யாணம் என வருத்தபட.
கௌசி அப்படி எல்லாம் இல்லண்ணா. கோடி சார் மட்டும். பணம் தரலன்னா யோசிச்சு பாரு.
நம்ம குடும்பத்தின் நிலை எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கும். எனக்கு எப்போ கல்யாணம் நடக்கனமுன்னு இருக்கோ அப்பதான் நடக்கும்.நீ வருத்தப்படாத என்ற கௌசி காலேஜுக்கு போனாள்.
கௌசி காலேஜ் முடிந்து. கோச்சிங் கிளாஸ் போக. இன்று கோச்சிங் கிளாஸ் லீவு என்று சொல்ல. மனதில் கோடியை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவள். நேற்று கோடி சாரை நான் பார்க்கவே இல்லை கோபமா இருப்பாரோ என்றவள்.
கோடியின் கடை வாசலில் பஸ்சில் இருந்து இறங்கியவள். கடையை எட்டி பார்க்க. யாரும் இருப்பதாக தெரியவில்லை.அது மதியம் 4 ன்கு மணிக்கு மேல் இருக்க எல்லோரும் உணவு உண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க.
கௌசிக்கு கடையின் உள்ளே போக பயமாக இருக்க . வெளியே இருந்து எட்டி பார்த்தவள். யாரும் இல்லை என்று நினைத்தவள்.திரும்பி வீட்டை நோக்கி நடக்க. பின்பு யோசித்து வீட்டுக்கு போய்யிட்டு திரும்பி வர முடியாது என்று நினைத்து மறுபடியும் கோடியின் கடை வாசலில் நின்று எட்டி பார்க்க.
நஞ்சுண்டா கோடியின் கடையில் வேலை பார்ப்பவன் வந்து கௌசியை பார்த்து அண்ணா மேலே கரித்தாரே பண்ணி என்று அழைத்து செல்ல.( அண்ணா மேலே கூப்பிடுறாரு) .
கௌசிக்கு என்னை எப்படி பார்த்தாரு என்று நஞ்சுண்டாவின் பின்னாடி சென்றாள்.
கௌசியிடம் ரூம்பை காட்டி போங்க என்று சொல்லி கீழே சென்றான்.
கௌசி ரூம் கதவை திறக்க.
வா கௌசி என்றான் கோடி.
அவள் கோடியின் கடை வாசலில் நின்று பார்த்ததை சி.சி.டி விடியோவில் இருந்து பார்த்தவன். நஞ்சுண்டாவை அழைத்து அவனின் ரூம்பிற்கு அழைத்து வர சொல்ல.
கோடி அவன் அறையில் உள்ள டி.வி. யில் விடியோவை கனக்ட் பண்ணி பார்த்து கொண்டு இருந்தான்.
கௌசி கோடியை பார்த்து கொண்டு இருந்தாள். கதவின் பக்கத்தில் தயங்கி நிற்க.
வா கௌசி என்றான்.
கௌசி ஒரு சேரில் உட்கார்ந்து அந்த ரூம்பை பார்க்க. கோடி அனைத்து. சி.சி.டி வீடியோவை பார்த்தவன். டி.வி. யை ஆப் பண்ணி விட்டு சொல்லு கௌசி என்றான்.
கோடிக்கு மனதில் பயம் எங்கே இவள் வந்து கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி விடுவாளோ என்று நினைக்க.
கௌசி அவளின் காலேஜ் பேங்கில் இருந்து கோடிக்கு ஒரு பெரிய சிங் சாக்லேட்டை எடுத்து குடுக்க.
அதை பார்த்தவன். உனக்கு பிறந்த நாளா என்று கேட்க.
இல்லை என்றவள். மறுபடியும் அவளின் பேங்கில் இருந்து 5 சிவப்பு ரோஜாகளை எடுத்து கோடியிடம் நன்றி சொல்லி கொடுக்க.
அவளிடம் இருந்து சிரித்துக் கொண்டே வாங்கியவன்.
எத்தனை பேர இவளுக்கு குடுத்துருக்கானுங்க. இவ எனக்கு குடுக்குற. கோடிக்கு ஆச்சரியம் . இதை கௌசியிடம் இருந்து அவன் எதிர் பார்க்க வில்லை.
கௌசி கோடியிடம் கை கூப்பி நன்றி சொல்ல.
ஏய் கௌசி , ஏன் இப்படி பண்ணுற என்றவன் அவளின் கையை கீழே இறக்கி விட.
கௌசிக்கு கண்ணீல் இருந்து கண்ணீர் வர. கௌசி அழுக , அழுகாதம்மா என்றவன் . கௌசியின் அருகில் வர.
கௌசி. கோடியிடம் நீங்க உதவி பண்ணலன்னா ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும் என்று அழுக.
ஏய் கௌசி என்ற அவளின் கையை பிடித்து சமாதானம் பண்ண.
அவளோ மேலும் , மேலும் தேம்பி அழுக. கௌசியை மெல்ல அணைத்து இருந்தான் கோடி.
அவளோ கோடியின் சட்டையை பிடித்து. அவன் மார்பில் சாய்ந்து மீண்டும் அழ.
கோடி அவளின் முதுகில் கை வைத்து அவளை தட்டி கொடுத்து சமாதானம் பண்ண.
சாரி என்றாள் .
எதற்கு என்றான் கோடி.
நேத்து உங்களை பாக்காம இருந்ததுக்கு .
ஓகே விடு என்றான்.
கோடியின் மார்பில் சாய்ந்து ஏதோ, ஏதோ பேசிக் கொண்டே இருந்தவள். தீடீர் என்று பேசாமல் இருக்க. கோடியின் மீதே தூங்கி இருந்தாள் கௌசி.
மெதுவாக அவளை தன் கட்டிலில் படுக்க வைத்தவன்.அவளை பார்க்க. அவளோ ஆழ்ந்து உரங்குவதை பார்த்தவன்.
இந்த பிரச்சனையில் இருந்தே சரியாக தூங்க வில்லை போல.தன்னிடம் சொல்லியவுடன் மன பாரம் குறைந்து தூங்குகீறாள் என்று நினைத்தவன்.
ஒரு சேரில் அமர்ந்து அவளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.
நாளை அவள் இந்த கல்யாணம் நடக்காது . எனக்கு நீ வேண்டாம் போ என்று சொல்வாள் என்று அறியாதவன் .
இன்று தனது ரூம்பில் தூங்கும் அவனின் மின்னலை ரசித்தான்….
error: Content is protected !!