Skip to content
Post Views: 2,368
மின்னல் ஒரு கோடி
Advertisement
அத்தியாயம் – 12
Advertisement
கௌசல்யா ஸ்ரீ , கோடிஸ்வரனின் நிச்சயம் நல்ல படியாக நடந்து கொண்டு இருந்தது.
Advertisement
கௌசிக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வளையல் போட . கோடிஸ்வரின் நெருங்கிய உறவு முறை பெண்கள் வளையல் போட வந்தனர்.
Advertisement
முதலில் தென்றல் கௌசிக்கு வளையல் போட பின்பு மணிமொழி என்று உறவுமுறை பெண்கள் வரிசையாக அவர்களை அறிமுகம் படுத்தி கொண்டு கௌசிக்கு வளையல் போட. ஒரு வயதான் பெண்மணி வந்து கௌசி வளையல் போடும் பொழுது இந்த அழகிக்குதான் கோடிஸ்வரன் ,கோடி கணக்குல காசு குடுத்தானா என்றவர். பராவயில்லை இவ அழகுக்கு இன்னும் கூட குடுக்கலாம் என்க..
இதை பற்றி தெரியாதவர்கள் என்ன விசயம் , பணமா ,பணம் குடுத்துத்தான் கோடி இவளை கல்யாணம் பண்ணுறானா. அதானே பார்த்தேன் இவங்க நம்ம ஆளுங்க கிடையாது. காதல் திருமணமான்னு நெனச்சோம். இப்ப தானே தெரியுது என்று குசு, குசுவென்று பேச.
கௌசிக்கோ மனதில் சுருக்கென்று வலி . சூழ்நிலை அறிந்து அமைதியாகி விட.நந்தினி தங்கையின் அருகில் அமர்ந்து இருக்க பொருமையா இரு கௌசி சிலர் இப்படி தான் பேசுவாங்க. நீ அமைதியா இரு என்றவள் கௌசியின் முதுகை தட்டி கொடுத்தாள்.
போட்டோ எடுக்குறாங்க பாரு என்று சொல்ல.
வந்த கண்ணீரை உள் இழுத்து கொண்டாள்.
வளையல் போடும் நிகழ்ச்சி முடிய அனைவரும் உணவு சாப்பிட சென்றனர்.
மணிமொழியும் , தென்றலும் வா கௌசி சாப்பிடலாம் என்று அழைக்க.
இல்லை நான் கோடி மாமா கூட சாப்பிடுறேன்.
அவன் பிரெண்டு கூட சாப்பிடுவான். நீ. வா ரொம்ப நேரம் ஆச்சு.வா கூட்டம் குறையிற மாதிரி தெரியல சாப்பிட்டு ஓய்வு எடு என்று சொல்லி கௌசியை உணவு சாப்பிடும் இடத்துக்கு அழைத்து செல்ல.
அண்ணி என்றவள் தென்றலை அழைக்க கோடி சார் என்கூட சாப்பிடரதா சொன்னாங்க.
நான் சொல்லிக்கிறேன் என்ற தென்றல். கௌசியை அழைக்க, பக்கத்தில் இருந்த நந்தினியையும் வாங்க சாப்பிட. நீங்க மாசமா இருக்கீங்க தானே வாங்க. சாப்பிடலாம் என்று டைனிங் டோபல் இருக்கும் இடத்துக்கு சென்றனர்.
கௌசி கோடியை தேடிக்கொண்டு வர.
சாப்பிடும் இடத்துக்கு வந்தவர்கள் அனைவரும் அமர . அங்கே தான் கோடி இருந்தான் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே உணவு சாப்பிட சொல்லி கொண்டு இருந்தான்.
சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரிடமும் வாங்க ,என்றவன் சாப்பிடுங்க என்று சொல்லி கொண்டே வர. இவர்கள் அமர்ந்து இருந்ததை பார்த்த கோடி அருகில் வந்து நந்துவை பார்த்து சாப்பிடுங்க என்றவன்.கௌசியை பார்த்த முறைக்க.
தென்றல் கோடியிடம் ஏன்டா அவளை பார்த்து முறைக்குற. நான் தான் கௌசியை சாப்பிட கூட்டிட்டு வந்தேன்.கௌசி வரமாட்டேன்னு தான் சொன்னா .
சரி எல்லாரும் சாப்பிடுங்க என்றவன் .கௌசி பார்த்து ஒன்னும் சொல்லாமல் சென்று விட்டான்.
கௌசிக்கு தென்றலின் மீது கோபம் , இந்த அண்ணி வேற வா, வான்னு கூப்பிட்டு வந்துட்டாங்க என்றவள் கோடியை பார்க்க.
அவனோ அங்கே ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தவன் . கௌசியின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான்.
கௌசி சாப்பிடமால் கோடியை பார்த்து கொண்டு இருக்க.
தென்றல்,மணிமொழி, நந்து அனைவரும் இவளை சாப்பிட சொல்ல இவளோ கோடியை மட்டும் பார்த்து இருக்க.
கோடிஸ்வரன் அங்கே இருந்தவாறே கௌசியை சாப்பிடு என்று கண்களாலே சொல்ல .
கௌசி மாட்டேன் என்று தலையாட்டினாள்.
கோடிஸ்வரன் அங்கே இருந்து இவளை சாப்பிடு என்று மிரட்ட.
கௌசி அவனை பார்க்காத வாரு திரும்பி கொள்ள.
இவளை என்றவன் அருகில் வந்து ம்ம்..என்று சொல்ல.
அவளோ கோடியை செல்ல கோப பார்வை பார்க்க. கௌசியின் இலையில் இருந்த ஸ்வீட்டை எடுத்து கௌசிக்கு ஊட்டி விட்டு சாப்பிடு என்று சொல்ல.
சரி என்று தலையாட்டியவள். அவளின் இலை உள்ள அனைத்து ஸ்வீட்டையும் எடுத்து கோடியின் வாய்யருகே கொண்டு செல்ல .
அவள் கொடுப்பதை வாங்கி உண்டவன் . கௌசியின் தலையில் கை வைத்து சாப்பிடு என்று சொல்ல, இவர்கள் ஊட்டிக்கொள்வதை பார்த்த தென்றல் என் தம்பி இது என்றே பார்க்க. மணிமொழி தென்றலின் கை இடித்து பாத்திங்கல அண்ணி என்று சொல்ல.
இவர்கள் பேசுவதை பார்த்தவன். இங்க என்ன பார்வை. நாங்க சின்ன பிள்ளைங்க ,அப்படிதான் ஊட்டிக்குவோம். நீங்க உங்க இலை பாத்து சாப்பிடுங்க என்று கிளம்பி விட்டான்.
கௌசியின் பக்கத்தில் எல்லோரும் கௌசியை கேலி பண்ண. இவங்க இங்கே இருந்து கண்ணாலே பேசுறது என்ன. அவர் அங்கே இருந்து வந்து ஊட்டி விடறது என்ன. நம்ம கோடி தம்பியா இதுன்னு சந்தேகமா இருக்க. என்று எல்லோரும் பேசி சிரித்து சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தனர்.
தென்றல் நந்தினியிடம் கௌசிக்கு சுத்தி போடுங்க வந்த வங்க எல்லோரும் பொண்ணு நல்ல இருக்கு சொல்லிட்டு போறாங்க. கௌசியிடம் காலையில் 5 மணிக்கு முகூர்த்தம் கௌசி 4 மணிக்கே ரெடியா இரு என்று சொல்லி சென்றாள்.
கௌசி கோடியிடம் சொல்லிவிட்டு ரூம் செல்லலாம் என்று அவனை தேட. கோடியை பார்க்க முடிய வில்லை.நந்துவின் போனில் இருந்து நான் ரூம் போறேன் என்று மெஜேசை போட்டவள் அவளின் ரூம் சென்றாள்.
கௌசி மணமகள் அறைக்கு சென்று அலங்காரத்தை கலைத்து ஒரு பூனம் புடவையை கட்டியவள். கோடிக்கு போனில் அழைக்க அவனோ ஒரு முக்கியமான ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்க.
கௌசி போன் பண்ணியதை பார்த்தவன் போனை எடுத்து அப்பறம் கூப்பிடுறேன் என்று போனை வைத்தான்.
கமலம் வந்து நீ தூங்கு கௌசி என்று பக்கத்து அறைக்கு செல்ல.
கௌசிக்கு கோடி சார் சாப்பிட்டாரா தெரிந்து கொண்டு தூங்கலாம் என்று நினைக்க. அவளின் சேலையை மடித்து வைத்தவள். நகைகளை எடுத்து வைத்து . நாளைக்கு என்ன வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.
சிவா தங்கையை பார்க்க வந்தவன் தூங்கலையா கௌசி என்று கேட்க.
கோடி சார் சாப்பிட்டாரா என்று கௌசி சிவாவிடம் கேட்க.
இல்லை கௌசி நாங்க சாப்பிட சொன்னோம் கோடி சார் வேண்டாமுன்னு சொல்லிட்டாரு நாங்க என்ன பண்ண.
இப்போ தான் மிச்ச இருந்த சாப்பாட ஆசிரமத்துக்கு வண்டில ஏத்திட்டு வர்ரேன் என்று சொல்ல.
கோடிக்கு கௌசி போன் பண்ண.
போனை எடுத்தவன் என்ன கௌசி நீ தூங்கலயா .
நீங்க எங்க இருக்கீங்க.
இங்கே கீழே தான்.
சாப்பிட்டீங்களா .
உம் சாப்பிட்டேன் என்றான் கோடி.
என்ன சாப்பிட்டீங்க.
அது என் பொண்டாட்டி, கை நிறைய ஸ்விட்டு ஊட்டி விட்டா . வயிறு நிறைஞ்சு போச்சு என்றான்.
போனை ஆப் பண்ணியவள் கீழே வர.
கோடி மணமேடையின் அருகில் நின்று. மணமேடைக்கு பூ அலங்கார பண்ணி கொண்டு இருப்பதை மேற்பார்வை பார்த்து கொண்டு இருந்தான்.
கோடியின் அருகில் வந்தவள் . வாங்க என் கூட என்றவள். வெளியில் போக.
என்ன கௌசி என்றவன். அவளின் பின்னே போனான்.
வேகமாக சென்றவள் அவளின் ஸ்கூட்டியை ஸ்சார்ட் பண்ணியவள் .ஏறுங்க என்றாள்.
கோடி என்ன வேணும் கௌசி எதாவது வாங்கணுமா என்றான்.
வண்டியில ஏறுங்கன்னு சொன்னேன். என்று கோபமாக சொல்ல.
அம்மாடி என்ன கோபம் வருது என்றவன்.ஒன்னும் பேசமல் கௌசியின் பின் ஏறி அமர.
வண்டியின் வேகத்தை வைத்தே. அவளின் கோபத்தை உணர்ந்தவன் அமைதியாக இருக்க.
அவள் வந்தது 24 மணி நேரம் திறந்து இருக்கும் . இராஜாதி நகரில் உள்ள பிரியாணி கடைக்கு.
கோடிஸ்வரன் கடையை பார்த்து சிரிக்க . என்ன சிரிப்பு என்றவள் அடி வாங்காமல் வாங்க என்றவள் . அவனின் கை பிடித்து ஹோட்டலுக்கு அழைத்து செல்ல.
அந்த நேரத்திலும் கூட்டாமாக இருந்தது அந்த கடை. சுட , சுட பிரியாணியை அனைவரும் சாப்பிட்டு கொண்டே இருக்க.
கோடியும் கௌசியும் இருவர் அமரும் சேரில் அமர்ந்தனா். கௌசி கோடிக்கும் சேர்த்து ஆடர் சொல்ல.
கௌசியை பார்த்து கோடி மேடம் நான் இங்கே தான் இருக்கேன்.
என்க்கிட்ட ஒன்னும் கேட்காம ஆடர் சொல்லுற.
அது எல்லாம் கேட்க முடியாது.நான் சொல்லுறதான் நீங்க சாப்பிடனும் என்றவள் கோடியை பார்த்து சிரிக்க.
என்ன கோபம் போயாச்சா என்றான்.
போகாது என்றவள். என்ன பிடிவாதம் உங்களுக்கு. அது என்ன என் கூட சேர்ந்து சாப்பிட்டால் , சாப்பிடுவேன் இல்லன்னா பட்டிணியா இருப்பேன்ணா என்ன அர்த்தம்.
உன் கூட சேர்ந்து சாப்பிடனுமுன்னு ஆசையின்னு அர்த்தம் டி பொண்டாட்டி என்றான்.
இன்னும் கல்யாணம் ஆகல என்றாள் கௌசி.
கல்யாணம் ஆகாம தானே என்னை இழுத்துட்டு வந்து பிரியாணி வாங்கி தர்ரீயா.
அது நீங்க சாப்பிடலன்னு தெரிஞ்சவுடன் உங்கல சாப்பிட வைக்கணுமுன்னு தோனுச்சு.
அந்த உணர்வு தான், பொண்டாட்டி என்றான்.
இவள் கேட்கல சத்தமா என்றாள் கோடியை பார்த்து.
லவ் யூ பொண்டாட்டி என்றான் சத்தமாக.
ஐயோ சத்தம் போடதீங்க என்று சொல்ல.
நீ தானா கேட்கலன்னு சொன்ன.
கேட்டுச்சு , கேட்டுச்சு போதுமா.
கௌசி ஆடர் பண்ணியது வர இருவரும் நன்றாக உண்டனர்.
கோடி சாப்பிட்டதுக்கு பணத்தை கட்டி வர. இருவரும் வெளியில் வர. வண்டியின் சாவியை கோடியிடம் கௌசி கொடுக்க.
நீ தானே என்னை கூட்டிட்டு வந்த. இப்போ நீ தான் என்னை திரும்ப கொண்டு போய் விடனும் என்றான் கோடி.
அய்யோ ! என்னால முடியாது வயிறு புல்லா இருக்கு .நீங்க ஓட்டுங்க மாமா சார் என்று கெஞ்ச.
இப்பவும் மாமா சார் தானா?
அந்த மாமா சார்ல எவ்வளவு அன்பு இருக்கு தெரியுமா.
என்ன அன்பு கௌசி என்று வண்டியை எடுக்க.
கோடியின் பின்னாடி அமர்ந்தவள், போங்க நேரம் ஆச்சு என்க.
வண்டி மண்டபம் நோக்கி சென்றது. கௌசி வண்டியில் இருந்து இறங்கி பாய் சார் என்று கிளம்ப.
கோடி கௌசியின் கையை பிடித்து கொண்டவன். நான் ஏதோ ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கேன்.உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு கிடைக்க என்றான் .
கௌசி இந்த வார்த்தையை நமக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் கழிச்சி சொல்லுங்க ஒத்துக்கிறேன். நீங்க கண்டிப்பா இவ இம்ச தாங்க முடியல அப்படியின்னு தான் சொல்ல போறீங்க என்று சிரிந்தவள் நான் போறேன் சார் என்ற கிளம்ப.
அவளின் கை கோடியிடம் இருந்தது. கையை விடங்க நான் போறேன் என்றாள்.
கோடி கையை விட தோணலயே இப்படி இறேன் என்றான்.
சார் கையை விடுங்க சார் என்றாள்.
மாட்டேன் என்றான் கோடி.
கோடி அசந்த நேரம் . கௌசி கோடி கன்னத்தில் முத்தம் மிட. அவனோ அதிர்ச்சியாக பார்த்து நிக்க. அவள் தரும் முதல் முத்தம் அல்லவா. கௌசி முத்தம் கொடுத்தவுடனே கோடி கையையில் இருந்த அவள் கையை உருவி இருந்தவள். மண்டபத்துக்கு ஓடி விட்டாள்.
கோடி அவள் முத்தமிட்ட இடத்தை தடவி கொடுத்தவன் மண்டப வாசலில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டவன். சிறிது நேரம் கழித்து அவனின் ரூம் சென்று தூங்கினான்.
மிக அழகாக விடிந்தது காலை பொழுது. மண்டபம் எங்கும் சொந்தம் பந்தம் கூடி இருக்க. மங்கள வாத்தியம் ஒலித்து கொண்டு இருந்தது.
மணமகள் அறையில் கௌசி மெருன் கலர் புடவையில் கல்யாணத்துக்காக ரெடியாக.
அங்கே மணமகன் அறையில் கோடீஸ்வரன் போன் பேசிய படியே பட்டு வேஷ்டி சட்டையில் ரெடியாக.
முதலில் கோடீஸ்வரனை அழைத்து பூஜைகள் செய்ய. பெற்றோருக்கு பாத பூஜை செய்தவன். இருவரிடம் ஆசிர்வாதம் வாங்கி . கையில் காப்பு கட்டி என்று சம்பிரதாயங்கள் நடந்தன.
பின்பு கௌசி மணமேடைக்கு வந்தாள்.
கோடீஸ்வரன் ஏற்கனவே கனவில் இந்த புடவையில் கௌசி எப்படி இருப்பாள் என்று கற்பணை பண்ணி இருக்க.அதை விட. இன்னும் அழகாக இருந்தாள். கோடி வீட்டின் முறைப்படி கூரை புடவை என்பார்கள் மெருன் கலர். புடவை வெள்ளை நிற பிளவுஸ் அணிந்து அதற்கு ஏற்ற வாறு மெருன் கலரில் கல் வைத்த நகைகளை அணிந்து இருந்தாள்.
கௌசி மணமேடைக்கு வந்து . கோடியின் அருகில் அமர .
கோடீஸ்வரன் கௌசியை பார்த்து அழகா இருக்க என்றான்.
கௌசி கோடியை பார்த்து வெட்கபட்டு தலை குனியா.
இது தான் வெட்கமா என்றான் அவளை சீண்டும் விதத்தில்.
அவளோ ஆமாம் என்றாள் தலையசைத்து. இருவரும் ஐயர் சொல்வதை செய்ய . கௌசி அவளின் பெற்றோருக்கு பாத பூஜை பண்ண. பண்ணும் பொழுதே கௌசி கமலத்தை பார்த்து அழ . கமலத்துக்கும் கண்கள் கலங்கியது. இராஜாசெல்வம் மகளின் தலையை வருடி விட்டவர்.அழ கூடாது.நாங்க எப்போதும் உன்கூட தான் இருப்போம் சரியா என்றார்.
தந்தை சொல்வதை கேட்டு தலையாட்டியவளை பார்த்த சிவா. என்ன கௌசி கல்யாணம் பண்ணி வெளிநாட்டுக்க போற. ஏதுத்த வீட்டுக்கு தானே போற அதுக்கு எதுக்கு கண்ணீர். என்று அவளை கேலி. பேசி சிரிக்க வைத்தான்.
கோடிஸ்வரனை பார்த்த சிவா மச்சான் ஏதுத்த வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு கண்ணீர். நீங்க மட்டும் வெளியூருல இருந்தீங்க இங்கே கண்ணீர் ஆறே ஓடியிருக்கும் என்று கோடியிடம் சொல்ல அண்ணா என்றாள் கௌசி.
சரி ,சரி அழதா என்றவன் தங்கையின் தோளை தட்டி குடுத்தான்.
ஐயர் மணிமொழியிடம் மாங்கல்யம் இருந்த தட்டை கொடுத்து அணைவரிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்ல.
மணிமொழி எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு ஐயரிடம் தட்டை குடுங்க.
ஐயர் தட்டை வாங்கி தாலியை எடுத்து மந்திரங்களை சொல்லி கோடிஸ்வரனிடம் கையில் மாங்கல்யத்தை கொடுங்க .
ஐயரிடம் இருந்து வாங்கியவள் கௌசியை பார்க்க .
அவளோ இரண்டு கையை கூப்பி வணங்குவது போல கோடிஸ்வரனை பார்த்து தலை குனிய.
தாலி கயிறை கௌசல்யா ஸ்ரீயின் கழுத்தில் கட்டினான் கோடிஸ்வரன்.
கௌசிக்கு ஆனந்ததில் கண்ணீல் நீர் வர.கோடி அதை துடைத்து விட்டவன் .மெல்ல அவளை தோள் அனைத்து நெத்தியில் முத்தம் மிட்டான். ஹாய் பொண்டாட்டி நோ க்கிரையிங்.
சரி புருஷ் என்றாள் கௌசி .
அது என்ன புருஷ் என்றான் கோடி.
அது தாலி. கட்டியாச்சுல.அப்போ நீங்க என்னோட புருஷன் தானே . அதான் புருஷ் செல்லமா.
சரி தான் என்றவன் சிரிக்க. பூ மழை பொழிந்தது இருவரின் மேல்.. பின்பு அஃனியை சுத்தி வந்தார்கள்.
இருவரும் எழுந்து பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க.
மண்டபவாசலில் ஏதோ சத்தம் கேட்க. கோடிஸ்வரன் என்ன வென்று பார்த்தவன் . பார்த்ததும் கௌசியை முறைத்து இது உன் வேலையா என்றான்.
கௌசியோ எனக்கு தெரியாது பா.. …..
error: Content is protected !!