Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 13 1

மின்னல்  ஒரு  கோடி

  அத்தியாயம்  –  13



Advertisement

Advertisement

  திருமணம்  முடிந்து  கொஞ்ச  நேரம்  கூட  ஆகவில்லை  கோடியும் ,கௌசியும்  முறைத்த கொண்டு  நிற்க.

Advertisement

சத்தம் கேட்டு  மண்டப வாசலில் என்ன வென்று அனைவரும்  பார்க்க கௌசிக்கு  சீர்வரிசை  சாமான்  வந்து  மண்டபத்தில் இறக்கி  கொண்டு  இருந்தார்கள் .

Advertisement

கோடிஸ்வரன்   ஏற்கனவே  கமலத்திடம்  சீர்வரிசை  வேண்டாம். அப்படி  உங்களுக்கு  கௌசிக்கு  செய்யனுமுன்னா.கௌசி பேருல  அமோண்டா  பேங்குல  போடுங்க.அவளுக்கு  எப்போதாவது  உதவியா  இருக்கும் என்று  சொல்லி இருந்தான்.

இன்று  ஒரு  லாரியில்  இருந்து  சீர்வரிசை  சாமான்  இறங்க.கோபம்  கொண்டவன்  கமலத்திடம்  ஏன் அக்கா  நான்  தான் வேண்டாமுன்னு  சொன்னேல.

அவரோ  கௌசியை  பார்க்க. கோடிஸ்வரன்

கௌசியிடம்  வந்தவன்  இது உன்  வேலையா.

ஆமாம் என்றாள் கௌசி.

ஏன்  கௌசி நம்ம  வீட்டில் தான் எல்லா  பொருளுமே  இருக்குல. அப்போ  இது  எல்லாம்  எதுக்கு.

அங்கே  கொஞ்சம்  பாருங்க  என்றாள். குருவம்மாள்  எல்லோரிடமும்  சீர்  வரிசை பத்தி பேசி  காண்பித்து  கொண்டு  இருந்தார்.

அவனோ  எனக்கு  தெரியுமுடி .நீ  அன்னைக்கு  என்  ரூம்முக்கு  வந்து.  உங்க வீட்டு கல்யாணம்  எப்படி  நடக்குமுன்னு கேட்ட  பாரு  நான்  அப்பவே  உஷாரா  இருந்து  இருக்கனும்.உனக்கு  சுந்தர்  கல்யாண  வீடியோ  காட்டுனேன்  பாரு . என்  தப்பு  தான்.

கௌசி  கோடிஸ்வரனை  பார்த்து. உங்க  அண்ணிக்கு  எல்லாம்  செஞ்சாங்க  தானே.அப்போ  எனக்கும்  செய்யனும்  தானே . எதுக்கு  திட்டுறீங்க.

எங்க அண்ணியும்  நீயும்  ஒன்னா  கௌசி என்று  கோடி .

என்ன , ஏன்  அப்படி  சொல்லுறீங்க. நான்  என்ன  உங்க  அண்ணிய    விட  குறைந்து விட்டேன்.

நான்  அப்படி சொல்லல்ல  கௌசி. அவங்க  எங்க  ஆளுங்க எல்லா முறையும்  தெரியும்.  உன்ன   நான்  ஆசை  பட்டு  கல்யாணம்  பண்ணி  இருக்கேன்.  இந்த  சாமானை  எங்கே  கொண்டு  போய் வைக்க . இவ்வளவா என்றவன்  அதில் டி.வி ,முதல் வீட்டுக்கு தேவையான  அனைத்தும் இருக்க .சில்வர், பித்தலை, செம்பு  என்று எல்லா வகையிலும்   சின்னது, பெரியது என்று பாத்திரங்கள்  வேற இருக்க.  இதை எங்கே கொண்டு போய் வைக்க  என்று  கௌசியின்  காதில்  திட்டி   கொண்டு  இருந்தான்.

கௌசி  கோடியிடம்   என்னைய  உங்க அம்மா  மறுபடியும்   திட்டனுமுன்னு  எதிர்  பார்க்குறீங்க  அப்படி தானே.

அது  இல்லம்மா .

எது  இல்லம்மா  உங்க  வழக்க படி. பொண்ணு வீட்டுல  இருந்து  பொண்ணுக்கு  சீர் கொண்டு வந்து  மண்டபத்துல  எல்லோரும்  பாக்குற  மாதிரி  வைக்குறது  பழக்கம்  தானே . அப்போ எங்கல  மட்டு செய்யாதீங்கன்னு   சொன்னா  என்ன அரத்தம். எல்லோரும்  என்னைய  உங்க வீட்டுல   இருந்து நீ ஒன்னும்  கொண்டு  வரலன்ணு    சொல்லவா.

நான்  உங்கள  ஒன்னும் சொல்லம்மா. நீங்க இன்னும் ஒரு லாரி சாமான்  கொண்டு வந்தாலும்  வாங்கிக்கிறேன். போதுமா என்றவன் அமைதியாகி விட.

கல்யாணத்துக்கு  வந்தவர்கள்  மணமக்களை வாழ்த்தி ,போட்டோ எடுத்துக்கொண்டு  செல்ல. கூட்டம்  கொஞ்சம்  குறையவும். மணமக்களை, சாப்பிட  அழைத்து  செல்ல  கோடிஸ்வரன்  அமைதியாக   மூஞ்சை   உர் என்று வைத்து  இருக்க.

 கௌசி சாப்பிட்டு  கொண்டே  கோடியை பார்த்து  இப்ப  தான்  நீங்க  ரொம்ப  அழகா  இருக்கீங்க  என்றான்.

என்ன  என்றான் கோடி.

 கோபத்துல   தான்   உங்க  முகம்  ரொம்ப  டெரர்  பாய்  மாதிரி  இருக்கு  ஐ லைக்கிட்  என்றவள்  கோடியில் இடுப்பை  பிடித்து கிள்ளி விட.

 அடி பாவி என்றவன் எப்படி  இப்படி எல்லாம் பேசுற  என்று சிரித்து.நான் செய்ய  வேண்டியதை நீ செய்யுற.நேரம்  என்றான்.

உங்கல யாரு வேண்டாம் என்றது  என்றவள். அவளிள் இடுப்பை சேலையில் இருந்து  மறைக்க.

அந்த மாதிரி  சீன் இல்ல மேடம் என்றவன் சாப்பிட்டியா .

உம் என்றவளை  இருவரும்  கை கழுவி  வெளியில் வர. பொண்ணும், மாப்பிள்ளையும் முதலில்  கோவில் சென்று வந்து. மாப்பிள்ளை வீடு என்று குருவம்மாள்  வீட்டிற்க்கு செல்ல.

இருவரையும்  ஆரத்தி எடுத்து  உள்ளே   அழைத்து  வந்தனர்.

குருவம்மாள் கௌசியை  அழைத்து  பூஜை அறைக்கு  விளக்கேத்தி  வணங்க  சொல்ல.அதை செய்தவள்.பின்பு கோடிக்கும் ,  கௌசிக்கும்  பால் , பழமும்  கொடுத்தனர்.

குருவம்மாள்  கௌசியின்  வீட்டில்  உள்ள  அனைவரையும்  மதிய  உணவுக்கு அழைத்து  இருந்தார்.

அதன்படி  கமலம்  வீட்டில்  இருந்து  அனைவரும் வந்து  இருந்தனர். கமலம்  பொண்ணுக்கு  நிறைய  பலகாரம்  வாங்கி வந்து  இருந்தார். பணியாரம், வடை , முறுக்கு, அதிரசம், இனிப்பு , காரம் என்று  பெரிய  அட்டை  பெட்டியில்  கொண்டு வந்தனர்.

குருவம்மாளின் வீடு  நிறைந்து  விட்டது. கமலம்  கொண்டு  வந்த  பலகாரம் , பழங்கள் என்று.

கமலத்துக்கு  கௌசியை  யாரும்  ஒன்னும்  சொல்ல  கூடாது  என்றே  சற்று  அதிகமாக  செய்து  இருந்தார்.

கமலம் வீட்டார்  குருவம்மாளின்  வீட்டிற்க்கு  வந்து மதிய  உணவை  முடித்தவர்.இரவு  எங்க  வீட்டுக்கு  அனைவரும்  வர  வேண்டும்.விருந்து ஏற்பாடு  பண்ணி  இருக்கோம்  என்று  சொல்லியவர்.அனைவரிடம்  தனி,தனியே சென்று கூப்பிட்டார்.

கோடியிடம்  வந்துருங்க  தம்பி  என்றார்.

சரிங்கக்கா   என்றவன். குருவம்மாளிடம்  எல்லோரும்  போகலாம்  என்று சொல்ல.நான்  வல்ல  கோடி  அப்பாவை  பாக்கனும். போட்டது  போட்ட  படி  இருக்கு . நீ அண்ணையும்  தென்றலையும்  கூட்டி  போய்யிட்டு வா என்றார்.

குருவம்மாள்  கோடியிடம்  நைட்டு  நம்ம  வீட்டுக்கு  வா  கோடி.நம்ம  வீட்டுல  உனக்கும்  கௌசிக்கும்  விசேஷம்  நம்ம   மாடியில் உள்ள ரூம்புல வைக்கலாம்.

கோடிஸ்வரன்  இல்லம்மா   நான்  என்  வீட்டுக்கே  போறேன்.நாளைக்கு  கௌசிக்கு  ஒரு  பரிச்சை இருக்கு .நான்  நாளைக்கு  சாயங்காலம்  கௌசியை  கூட்டிட்டு  வர்ரேன்  என்றான்.

கோடிஸ்வரன்  கௌசியிடம்  வந்து நீ  ரெஸ்ட்  எடு  கௌசி .நான்  மண்டபத்துக்கு போயி  எல்லோருக்கும்  கொஞ்சம்  காசு கொடுக்கனும்.ஒரு சில வேலை  இருக்கு  என்று  சொல்லி  கிளம்பினான்.

குருவம்மாள்  வீட்டில்  ஒரு  சில  உறவு  முறை பெண்கள் மட்டும் இருக்க.

கௌசி ஹாலில்  அமர்ந்து  இருந்தாள்.

குருவம்மாள்  அந்த  பெண்களிடம்  கண்  காண்பித்து ,பழனியின்  ரூம்  செல்ல.

 கோடியின்  உறவு முறை பெண்கள்  கௌசியிடம்  பேச்சு  கொடுக்க. என்ன  படிக்குறமா என்று  கேட்க  காலேஜ்  பைனல் இயர் படிக்குறேன். இஞ்சினியர்  படிக்குறீயா இல்லம்மா  லா  படிக்குறேன்.

லா  நா என்னம்மா.

லாயர் அதாவது  வக்கீல்   ஆக படிக்கிறேன்.

பெரிய  படிப்பு தான் என்று  அந்த  பெண்கள்  சொல்ல.பின்பு  உன்  நகை எல்லாம்   நல்ல இருக்கு.  எங்க  வாங்குனீங்க.

 எல்லா  நகையும்  எஸ்.எம்  ஜுவல்லரியிலதான்  வாங்குவோம் என்றாள்.

அந்த   பெண்  உன்  நெக்லஸ்  ரொம்ப  வைட்டா  இருக்கும் போலயே .

 இல்லம்மா  5   பௌவுனுதான்  என்றாள்.

கழட்டு  பார்ப்போம்  என்க.

 கௌசி  நகையை  கழட்டி  அந்த  பெண்ணிடம்  கொடுக்க.

அதை வாங்கிய  அந்த பெண்மணி  நகையை  திருப்பி, திருப்பி பார்த்து . கையில்  நகையை வைத்து  எடை பொடுவது  போல்  பார்த்து  நல்லா  இருக்கு  போட்டுக்கோ என்று  நகையை திருப்பி  கௌசியிடம் கொடுத்து விட்டாள்.

இன்னும்  ஒரு  பெண்மணி .என்  பொண்ணுக்கும்  நீ  போட்டு  இருக்குற  மாதிரி  இந்த நகை வாங்கனும் என்று  கௌசி போட்டு   இருந்த  அத்தனை  நகையை  வாங்கி  பார்த்து  விட்டு .பின்பு  திருப்பி  கௌசியிடமே  குடுத்து விட்ட  பெண்கள்.நீ  உள்ள  போமா கொஞ்சம் நேரம்  தூங்கு  என்று சொல்ல.

இதற்கு  தான்  காத்து  இருந்தவள்  போல்  உள்ளே  சென்று  கட்டிலில் படுத்து  கொண்டாள். மிகவும்  சோர்வாக  இருந்தது, இடுப்பு  வலி வேற  பத்து  நிமிடம்  படுத்து   இருந்தவள். பேன்  போடமல்  இருக்க  எழுந்து  வந்து  பேன் போட .குருவம்மாளின் குரல்  வெளியில்  கேட்க.

சன்னல்  அருகே  சென்ற  கௌசி  எட்டி  பார்க்க இவ்வளவு  நேரம்  கௌசியிடம்  பேசிய  பெண்கள் குருவம்மாளிடம்  எல்லாம்  தங்கம்  தான்  அக்கா. நாங்க  பார்த்தோம்.

நல்ல கடையில தான் வாங்கி  இருக்காங்க . கொறஞ்சது  50  பௌவுனாவது  இருக்கும்.

நீ பயப்படாத  நல்ல  பொண்ணா தான்  தெரியுது.

என்ன   நல்ல  பொண்ணா. இவ  வர்ரதுக்கு  முன்னேயே  கோடி   என்ன  அவளை பத்தி பேச கூடாதுன்னு  சொல்லிட்டான். நான் என்ன  பேச  இவள. இன்னும்  முத  ராத்திரியே  நடக்கல, அதுக்கு  முன்னாடியே  இப்படி, எல்லாம்  நல்ல  படியா  முடிஞ்சா  என்ன  திரும்பி  கூட பாக்க  விட  மாட்டா போல.  என்ன பேசி  என் பையன  மயக்கி  வச்சு  இருக்காளோ  மேணா  மினுக்கி , என்று வாய்க்கு வந்ததை    குருவம்மாள் பேச.

இங்கே  கௌசி  எல்லாத்தையும் கேட்டவள்  ச்சீ  என்று  இருந்தது.என்ன  மனுஷி  இந்த  பொம்பள  நகையை  பத்தி  என்கிட்ட  கேட்டாலே  நானே  சொல்லி  இருப்பேன். இப்படி  பண்ணிட்டாங்களே. நானும்  லூசு  மாதிரி  எல்லா  நகையும்   கழட்டி  பாக்க   சொல்லி  .எனக்கு   எல்லாம் அறிவே  இல்ல  என்று  தன்னையே  திட்டி  கொண்டவள்.

சிறிது  நேரம்  படுத்து  தூங்கிவட்டாள்.

கோடிஸ்வரன்   கீழே உள்ள  ரூம்பில் வந்து  கௌசி  தூங்குவதை  பார்த்தவன். கமலம் அக்கா  வீட்டுக்கு  போகனுமே என்றவன். கௌசியை  எழுப்ப.  கௌசி  ,கௌசி  என்று அவளை எழுப்ப.

கொஞ்ச  நேரம்  மம்மி  என்று  மறுபடியும்  தூங்க .

ஹலோ  கௌசி  என்று  அவளின்  கன்னத்தை தட்ட .

என்னம்மா  என்றவள்.எழுந்து அமர.

கோடிஸ்வரன்  அவளின்  அருகில்  அமர்ந்து   நல்ல  தூக்கமா  என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!