Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 16

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 16

       ஆளார்த்தி கரைத்து எடுத்து வந்தாள் பிருந்தா. மருத்துவ மனை போய் ஒரு நாள் முழுக்க இருந்து வந்தாள் என்று தான்…

   நர்மதாவுக்கே விருப்பம் இல்லை. இது என்ன சீரும் சிறப்புமாகவா பொறந்த வீடு வந்து இருக்கேன். சீல்பட்டு போய் அல்லவா நிற்கிறேன். அதே எண்ணம் தான் விஜயாவுக்கும்…



Advertisement

  “அது ஒன்னு தான் குறைச்சல், தூக்கி போட்டு அந்த பக்கம்…” என்று சத்தம் போட,

     “விஜி வாய மூடு. நர்மதாவ நினைச்சு நாங்க பயந்த பயம் உனக்கென்ன தெரியும். உன்னை யாரு வர சொன்னா?.. நீ ஊர்லையே இருக்க வேண்டிய தான…” என்று பால மரத்தான் சத்தம் போட,

     “என் பேச மாட்டீங்க. உங்களுக்கு உங்க மகள்க நினைப்பு தான். நடு ராத்திரியில மக வீட்டுல சண்டைன்னு ஓடி வாறீங்க. சுக மில்லாத உங்களை அனுப்பி வச்சு, அங்க சின்னவளை நினைச்சு பயந்து போய் இருந்தேன். ராத்திரி முழுக்க பல்லி சத்தம் வேற… நான் பயந்த மாதிரியே சேதி வருது. என்னால எப்படி அங்க இருக்க முடியும். அந்த நாசமா போறவன் உங்க மேல கை வச்சான்னு சொன்னதும் ஆடி போயிட்டேன். என் உசிரே என் கிட்ட இல்லை…” என்று அழுக,

Advertisement

   நர்மதா முகம் முற்றிலும் மாறி போனது.

Advertisement

    “விஜயா வாய மூடு. ஏதாவது பேசாத… பிருந்தா நீ தான் உங்க அம்மாவுக்கு ? சொன்னையா?…” என்று தந்தை கோபப்பட,

     அப்பா குரலில் இருந்த அழுத்தம் பிருந்தாவுக்கு பயம் தந்தாலும்,

  “உங்க மருந்து, மாத்திரை கேட்டு தான் போன் பண்ணினேன் ப்பா…” என்றால் தயங்கி.

Advertisement

   “ விஜயா, நிரஞ்சன் நம்ம மருமகன். வார்த்தையை பார்த்து பேசு…” என்று எச்சரிக்க,

   “ஆமா பொல்லாத மருமகன். காசு, பணம் இருந்தா போதும் குணம் குப்பை தான். அவனுக்கும் ரெண்டு பொம்பளை பிள்ளைக இருக்கு, ஒரு நாளைக்கு வராமவ போகும்…” ஒரு ஆதங்க பேச்சு தான்.

  ஆனால், நர்மதாக்கு குத்தியது. நிரஞ்சன் அப்பாவை, அக்காவை பேசும் போது வலித்தது போலவே, கணவனை பேசும் போதும் வலித்தது.

   “விஜயா என்ன பேசுற… ஏதோ ஆதங்கத்துல வார்த்தையை விடாத. நீ பேசுறது நம்ம மருமகன், பேத்திகளை.. நீ பார்க்க வந்தது நம்ம மகளை. செத்து பிழைச்சு வந்த பிள்ளையை உள்ள கூட விடாம பேச்சை பாரு. பிருந்தா, உங்க அம்மாவுக்கு டிக்கெட் போடு, ஊர் போய் சேரட்டும்…” என்று கண்டிப்பான வார்த்தை வந்த பின் தான் வாயை மூடினார் விஜயா.

  வீட்டுக்கு வந்ததும் தலைக்கு குளித்து உடை மாற்றியவள், கண் மூடி படித்து கொண்டாள். கல்யாணம் முடிந்த எத்தனையோ மாதத்தில் அக்கா வீடு வர வேண்டும். ரெண்டு நாள் சேர்ந்தார் போல இருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தவள் தான். இன்று நிலைமையே வேற மாதிரி இருந்தது.

   பெருமையும், பூரிப்புமாக, கை கொள்ள பொருட்களோடு, சிரித்த முகமாக தாய் வீட்டு சொந்தத்தை பார்ப்பதும், நான் நன்றாக வாழ்கிறேன் என்று பெருமையாக அல்லாமல் சந்தோசமாக காட்டுவதும் என்ற நினைப்பு இருந்தது.

   நிரஞ்சன் பட்டும், வைரமாக இறைத்து கொட்டும் போதெல்லாம் பார்த்து பெருமை பட அருகில் பெற்றோர் இல்லையே என்ற வருத்தம் இருக்கும். என் புருசன் கொஞ்சம் முசுடு தான். ஆனால், என்னையும், என் பிள்ளைகளையும் நன்றாக தான் பார்த்து கொள்கிறான் என்ற பெருமை நர்மதாவுக்கும் உண்டு. அவர்கள் பக்கத்திலேயே நிரஞ்சன் தான் கொஞ்சம் வளமான, வசதியான குடும்பம். அவன் வருமானம் தான் அதிகம்.

   மகள் வசதியான வாழ்க்கை வாழ்கிறாள், மருமகன் நன்றாக சம்பாதிக்கிறான் என்ற பெருமை நர்மதா பெற்றோருக்கும் உண்டு. சொந்த பந்த விசேசங்களின் போதும் அந்த பெருமை பேசுவதுண்டு.

  “எங்க வீட்டுல பிள்ளைக எல்லாம் படிச்சு வேலைக்கு போனாலும், எங்க சின்ன மாப்பிள்ளை சம்பாத்தியம் தான் அதிகம். அம்புட்டு திறமைமிக்க ஆளு…” என்று விஜயா எங்கு சென்றாலும் சின்ன மாப்பிள்ளை பெருமை பேசுவார்.

   பெருமையாக வாழ்ந்தால் தான் பெருமையாக பேசவும் செய்வார்கள். இனி அப்படி ஒரு வார்த்தை விஜயா வாயில் இருந்து வராது. என்ன தான் மகளை கட்டி கொடுத்த இடமாக இருந்தாலும், தன் கணவன் மேலையே கை வைத்த பின் சின்ன மாப்பிள்ளை மரியாதை எப்படி தருவார்கள்.

  பொதுவாகவே நிரஞ்சன் என்ற பேருக்கு ஒரு மரியாதை நர்மதா வீட்டில் உண்டு. தவிர்க்க முடியாத விசேஷங்களுக்கு மட்டும் வந்து தலை காட்டுவான். அதிலும் ஒரு மரியாதையாக, அமைதியாக தான் நடத்தை இருக்கும். அடிக்கடி மாமியார் வீடு வருவதோ அல்லது வீட்டு உள் விவகாரங்களில் தலை கொடுப்பதோ எதுவும் இருக்காது. அவனளவில் நிமிர்ந்து நிற்பான். நர்மதா தோற்றமே நிரஞ்னுக்கான மரியாதை தான்.

 இன்று எல்லாம் கெட்டது. சண்டை, கணவன் அடித்தது என்று எல்லாவற்றையும் ஒரு கோபம் வரையுறையில் கொண்டு வந்தாலும், தன் தந்தையை தள்ளி விட்டது, தப்பு என்று தெரிந்தும் மன்னிப்பு கூட கேட்காமல் நின்றது, அதையும் விட போட்ட உடையோடு விரட்டி விட்டது என்று நெஞ்சில் மறக்க முடியாத வலியை கொடுத்து விட்டான்.

    இங்கு வந்து பிருந்தா நைட்டியை தான் வாங்கி அணிந்து கொண்டாள். இனி நிரஞ்சன் பட்டும், வைரமும் குவித்தாலும் மனம் பூரிக்காது. விவாகரத்து செய்ய போவதில்லை தான். சத்தம் போட்டு தற்போது பிரித்து வைத்தாலும், கொஞ்ச நாளில் சேர்த்து தான் வைப்பார்கள்.

  ஆனால், இனி என்றும் என் கணவன் என்று பெருமையாக, பூரிப்பாக பிறந்த வீட்டில் சொல்ல முடியாது. நிரஞ்சன் என்பவன் இது தான் என்று எல்லோர் மனதிலும் ஒரு பிம்பத்தை பதித்து விட்டான். அது தான் நர்மதாக்கு அவ்வளவு வலித்தது. ஏன் இப்படி மாறி போனான். ஓரளவு முரண்பாடுகள் கொண்டவன் தான் என்றாலும் முழு கெட்டவன் கிடையாது.

   சேர்ந்து வாழவே முடியாது என்று யோசிக்கும் அளவுக்கு குணம் கெட்டவன் கிடையாது. இனி என் புருசன் என்று ஒரு வார்த்தையும் யாரிடமும் சொல்ல முடியாது. பொண்டாட்டியை அடிச்சு துரத்தி விட்டவன் என்ற பெயர் தான் நிலை நிற்கும்.

     ஏதேதோ யோசித்து வேதனையில் படுத்து கிடந்தவள், பிள்ளைகள் நினைவு வர வேகமாக எழுந்து கொண்டாள். ரெண்டு நாளாக பிள்ளைகளை தொட்டு தூக்க கூட இல்லையே… அவசரமாக வெளியே வந்து எட்டி பார்க்க,

   சஸ்டி தன் பெரியம்மாவின் எடுப்பில் உட்கார்ந்து, பிருந்தா தோசை ஊற்றுவதை பார்த்து கொண்டு இருக்க, சான்வியை தொட்டிலில் போட்டு விஜயா ஆட்டி கொண்டு இருந்தார்.

   “அடுத்த இடம் என்பதால் பிள்ளை தூங்காமல் அழுதுட்டே இருக்கு. அதான் உங்க மாமா தொட்டி கட்டினார்…” என்ற பிருந்தா கையில் டீ யோடு நின்று கொண்டு இருந்தாள்.

  தனக்கான டீயை வாங்கிய நர்மதா, பெரிய மகளை பார்த்தாள். தாயை பார்த்தும் பிள்ளை அம்மா என்று வரவில்லை. தன் பெரியம்மா இடுப்பிலேயே ஒய்யாரமாக இருந்தது.

   இந்த பாசத்தை தான் நிரஞ்சனுக்கு புரியவைக்க முயற்சி செய்கிறாள். தன் சொந்த வீட்டை தாண்டி மற்றொரு வீட்டில் உரிமையாக புழங்கலாம் என்றால் அது உடன் பிறந்தவள் வீடு மட்டும் தான். அங்கு ஒரு சகஜபாவம் தோன்றும். உரிமையாக உள் நுழைய கூடிய இடம்.

   கிட்டத்தட்ட ரெண்டு நாளாக முடியாமல் கிடக்கிறாள் நர்மதா. உடன் நின்று பார்த்தது யார்? மாமியார் என்று அவ்வளவு செய்தால் எட்டி நின்றதோடு சரி. ஆம் ரெண்டு நாளும் கூடவே இருந்தார்.

  ஆனால், பிருந்தா… முதல் நாள் சாப்பிட உணவு வாந்தியாக வெளி வந்தது. இதில் பீரியட் வேற…

  சுசீலா சொன்னார், “ராத்திரி என்னால கூட இருக்க முடியாது நர்மதா. ஒரு நாள் தானே. உங்க அக்காவ வர சொல்லு… நீ பீரியட் வேற, எனக்கு ஆகாது. நீ போன பாத்ரும்ல நான் போக முடியாது. வித்யா சொன்னா உடனே வந்துடுவா… ஆனா அவளுக்கும் சின்ன குழந்தை இருக்கு…” என்று சமாளித்து வீடு கிளம்பி விட்டார்.

  வித்யாவுக்கு மட்டுமா பிள்ளை இருக்கு… பிருந்தாவுக்கும் தான் பிள்ளை, புருசன் என்று குடும்பம் இருக்கு. இதில், நர்மதா பிள்ளைகள் இருவர். இரவு தங்கைக்கும் துணை இருந்து, அவள் துணிகளை துவைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு என்று நர்மதா வீடு வரும் வரை உடன் இருந்தது பிருந்தா தான்.

  இதில் மாமா செல்வம் மிக நல்லவர். ரெண்டு நாளாக வீடு, பிள்ளைகள், அவர்கள் உணவு என்று பார்த்து கொண்டது அவர் தான். இரண்டு நாள் வேலை கெட்டது. பொண்டாட்டியோட தங்கச்சியை பார்க்கணும் என்று என்ன இருக்கு… ஆனாலும் செய்தார். ஏன்? அது தானே சொந்தம்.

  அப்படி ஒரு அரவணைப்பை, பாசத்தை, கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரும் உறவை எப்படி மதிக்க வேண்டும். நிரஞ்சன் சொன்னானே, உங்க பெரிய மகள் உறவு வேண்டாம் என்று… கல்யாணம் செய்து தங்களுக்கு என்று குடும்பம் வந்தால் பிறந்த வீடு அந்நியமாம்.

   இன்று யார் வந்து முன்ன நின்றது. போட்டு இருந்த உடையோடு வெளியே தள்ளும் போது கொஞ்ச காலம் என்றாலும் அரவணைக்க ஒரு உறவு இருக்கே. அதை எப்படி விட்டு கொடுக்க முடியும்.

  ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் வித்யா உடன் நர்மதா இருந்த போதும் யார் வந்து நின்றது. அடுத்த வீட்டுக்கு சென்ற பிருந்தா தான். அது தான் இரத்த சொந்தம், உடன் பிறந்த உறவு. இதை வாய் சொல்லால் நிரஞ்சனுக்கு புரிய வைக்க முடியாது. அவனாக உணர்ந்தால் தான் உண்டு.

   நிரஞ்சனுக்கு தூக்கமில்லை, பசியில்லை, வேலைக்கு கூட போக முடிய வில்லை. நர்மதா இருந்த வரை சீராக சென்ற குடும்ப வாழ்க்கை சிதைந்து போனது. பித்து பிடித்து தான் நின்றான்.

  வித்யா இழுத்து போட்டு வேலை செய்தால். நர்மதா இல்லை, வேலை எல்லாம் அவள் கையில் தான். யாரும் குறை சொல்லாத படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள்.

   நாலு நாட்களுக்கு மேல் ஆகியும் நர்மதாவிடம் இருந்து எந்த பேச்சு வார்த்தையும் வர வில்லை. வீட்டில் பெரியவர்களும் முன்ன நின்று எடுத்து எதுவும் பேச வில்லை.

  ரெண்டு நாளாக நிரஞ்சன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று வருகிறான். அவர்களின் பள்ளிக்கு வர வில்லை. இன்று எப்படியும் பிள்ளைகளை அனுப்பி விடுவாள் என்று காத்திருக்கிறான். இவ்வளவு நாள் பிள்ளைகள் குரல் கேட்காமல் இருந்ததில்லை.

 ரோட்டுக்கு அந்த பக்கம் இவன் இருக்க, இந்த பக்கம் ஆட்டோவில் நர்மதா வந்து விட்டாள். வேலைக்கு சென்று இருப்பாள் போல கொண்டை போட்டு இருந்தாள்.

  அன்று இருந்த வீக்கம் இன்று இல்லை. முகம் அவ்வளவு வாட்டமாக இருந்தது. ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தாள்.

  இது என்ன இவ்வளவு பாவமான தோற்றம் என்று தான் நிரஞ்சன் பார்த்தான்.

   பிள்ளைகள் வந்து அவர்கள் பையை வாங்கி தோளில் போட்டு மெதுவாக நடந்து வந்தாள்.

  “எதுக்கு இந்த கஷ்டம். ஹாஸ்பிடல் இருந்து நேர வீடு வர வேண்டிய தான.. அன்னைக்கு ஒரு கோபம். எப்பவும் அப்படியே வா இருக்க போறோம்…” என்ற நினைப்போடு நிரஞ்சன் நெருங்க,

  அவனை பார்த்ததும் முகம் வெடித்தது. எதுவும் நடக்காது போல நம்மு என்று வந்து நிற்க. எப்படி தான் இருந்ததோ அவளுக்கு…

  வந்த ஆட்டோவில் பிள்ளைகள் உடன் ஏறி கொண்டு போய் விட்டாள்.

  “இன்சல்ட் பண்ற நர்மதா நீ…” என்று முனங்கி கொண்டே, அவளை பின் தொடர்ந்தான்.

  “இது என்ன வயசு பையன் மாதிரி. நின்னு ஒரு பதில் சொல்ல வேணாம்… எரிச்சலோடு பின் தொடர,

  பிள்ளைகள் உடன் அவர்கள் வழக்கமாக செல்லும் பேக்கரிக்கு தான் சென்று இருந்தாள். வீட்டுக்கு வாங்கி கொண்டு, பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்து, ஒரு டீயோடு அப்பாடா என்று அமர்ந்து விட்டாள்.

    உள்ளே வந்த நிரஞ்சன். “என்ன சேலை இது? அந்த காலத்து பொம்பளை மாதிரி தூக்கி சொருகுன கொண்டை வேற… இதுல முக்கா லிட்டர் எண்ணெய் மூச்சியில… என்னை அசிங்க படுத்தவே இப்படி வந்து இருக்கா…” என்று அவளருகில் வந்து முனங்க.

   அவள் கண்டு கொள்ளவே இல்லை. இவனோடு வார்த்தையாடவே முடியாது. வாய் மூடி கொண்டால் கொஞ்சம் தெம்பு கிடைக்கும்.

   சின்ன குட்டியை தூக்கியவன், “அப்பாவா மிஸ் பண்ணீங்களா?…” என்று கேட்க.

   “இல்லை ப்பா. அங்க அண்ணங்க கூட சூப்பரா போச்சு. நெறைய விளையான்டோம். ஜாலியா இருந்துச்சு…” என்று பதில் கிடைக்க.

  முகம் சுருங்கியவன், தன் பெரிய மகளை பார்த்தான்,

  “எனக்கு நெக்ஸ்ட் வீக் டென் டேஸ் லீவ். பெரியம்மா வீட்டுல தான் இருப்போம். நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன். அம்மா ஓகே சொல்லிட்டாங்க…” குஷியாக சொன்னாள்.

  அது சரி என்ற நிரஞ்சன் மனைவியை பார்த்தான்.

 “இது என்ன ட்ரெஸ்? நல்லாவே இல்லை…” என்றான்.

  நர்மதா பேசவே இல்லை. ஆனால் அவள் கண் பேசியது. போட்ட உடையோடு போக சொன்னான். உடை கூட பிருந்தாவோடது தான். கொஞ்சம் லுசாக இருந்தது. பேருக்கு தான் உடை அணிந்து, தலை பின்னி இருந்தாள். மற்றபடி அக்கறை அற்ற தோற்றம் தான்.

  மனதில் அவ்வளவு வேதனை, வலி. ஏதோ பிள்ளைகளுக்காக என்று வேலைக்கு போய் வருகிறாள். இவனை மாதிரி எல்லாம் இருக்க முடியாது.

  “எதுக்கு ஆட்டோவுல போற… நம்ம வீட்டுல ரெண்டு கார் இருக்கு. யாருக்கு? எல்லாம் உனக்கு தான்…” நிரஞ்சன் மீண்டும் ஆரம்பிக்க,

  முகம் மாறினாள் நர்மதா. இனியும் இருந்தால் பொறுக்க முடியாது என்று தோன்ற, கிளம்பி விட்டாள்.

 விதாண்ட வாதம், ஏட்டிக்கு போட்டி, கூட கூட பேசுவதில் எல்லாம் நிரஞ்சனை அடிச்சுக்க முடியாது. அவனோடு பேசாமல் இருப்பதே திடம்.

“வீட்டுக்கு வா நர்மதா…” என்று கணவன் சொல்ல,

  அவள் ரோட்டை பார்த்து நின்றாள்.

  “நான் தனிப்பட்டு உங்க அப்பா கிட்ட மன்னிப்பு கேக்குறேன்…”

  அசைவில்லை அவளிடம்,

  “ஆள் கூட்டி பஞ்சாயத்து எல்லாம் வேணாம். நமக்கு ஒன்னும் நேத்து கல்யாணம் ஆகல. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் உங்க அப்பாவை பார்ப்போம்…”.

 “என்னை பத்தி நினைச்சியா? நல்ல சாப்பாடு, தூக்க மில்லை. லேசா காய்ச்சல் கூட இருக்கு…”

  “நாலு பேர் வச்சு பேசினா யாருக்கு அசிங்கம். நம்ம சண்டை போட்ட பிள்ளைகளை நினைச்சு பாரு…” ஏதேதோ சொல்லி பார்த்தான்.

  நர்மதா நிமிர கூட இல்லை. மீண்டும் முகம் தூக்கி கொண்டான்.

  “தாலியை கழட்டி கொடுத்துட்ட… போடின்னு போகாம உம் பின்னாடியே அலையிரேன். அந்த திமிர் உனக்கு…” கடுப்பாக பேசினான்.

  “என்னை பத்தி தெரியும் தான. நானே இறங்கி வந்து பேசுறேன், முகம் தூக்குற… வாய திறந்து பேசுடி…”

  “அப்படி என்ன அடம். இங்க பாரு நர்மதா ஆள் கூட்டி வர பழக்கம் எல்லாம் வேணாம். நான் கேள்வி பட்டேன், மதுரையில இருந்து ஆள் வருதாம். நம்ம குடும்ப விசயம் நமக்குள்ள இருக்கட்டும்…”

  “நீ கார்ல ஏறு, உங்க அப்பாவா போய் பார்ப்போம். நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்…” என்று பேசும் போதே, ஒரு ஆட்டோவை மறித்து ஏறி கொண்டாள்.

  பட்டென்று கிளம்பி செல்வாள் என்று நினைக்க வில்லை.

  “நர்மதா…” என்று அழைக்கும் போதே, வண்டி நகர்ந்தது.

   இப்போதும் இவன் மனைவியை சரிகட்டினால் போதும் என்று தான் நினைக்கிறான். உண்மையில் திருந்தியவன் நேர வீட்டுக்கு வர வேண்டிய தானே… பொண்டாட்டி வீட்டு ஆட்களிடம் பேசி, புரிய வைத்து அழைத்து செல்லலாம். அதை விட்டு ரோட்டில் இவளிடம் மல்லு கட்டுகிறான்.

   அடுத்த வாரத்தில் ஒரு லீவ் நாளில் பஞ்சாயத்து பேச ஏற்பாடு நடந்தது. நிரஞ்சன் வீட்டு வராண்டாவில் தான்.

  நிரஞ்சன் கத்தினான், “அப்பா எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளை இருக்கு. நேத்து கல்யாணம் ஆன மாதிரி ஊரை கூட்டி பஞ்சாயத்து பேசாத. நாம மட்டும் போய் நர்மதா, பிள்ளைகளை கூட்டி வரலாம்…”

 தாமோதரன், “அவங்க ஆள் வச்சு தான் பேசுவோம்ன்னு சொல்றாங்க நிரஞ்சன். மருமக ரெண்டு நாள படுக்கையுல கிடந்துச்சு. யாரால? எந்த தகப்பனும் யோசிக்க தான் செய்வான் நிரஞ்சன்…”

“அசிங்கமா இருக்குப்பா. ஆளாளுக்கு வந்து அட்வைஸ் பண்ணுவாங்க. குற்றவாளி மாதிரி கை கட்டி நிக்கனும்…”

  “அது எல்லாம் சம்மந்தி மேல கை வைக்கும் போது யோசிச்சு இருக்கணும். அவங்க வீட்டு ஆளுக வந்து கேள்வி கேட்க தான் செய்வாங்க. எங்க கிட்ட பேசுற மாதிரி பேசாம, கொஞ்சம் தன்மையாக பேசு நிரஞ்சன். இன்னும் உன் பேரை கெடுக்காத…” என்று தந்தையாக அறிவுரை சொன்னார்.

  பிருந்தா ஆட்களை திரட்டினாள். தன் சொந்த சித்தி, அத்தை, சித்தப்பா, தாய்மாமன், மூத்த தாத்தா என்று ஒவ்வொருவருக்கும் போனில் சொல்லி விட்டாள். நர்மதா ஹாஸ்பிடலில் எனும் போதே கிளம்பிய கூட்டம், பஞ்சாயத்தை வைத்து தள்ளி போட்டார்கள்.

   முகுந்தனுக்கும் போனில் சொல்லி விட்டாள் பிருந்தா.

  “நீங்களும் இருக்கணும் மாமா…”

 “என் தம்பிக்கு நான் கூட தான் இருப்பேன் பிருந்தா…” என்றான் முகுந்தன்.

  “உங்க மனைவியும் கட்டாயம் இருக்கணும் மாமா…” என்றதும்,

 “வித்யாவா…” என்று யோசனையாக முகுந்தன் சொல்ல,

   “பிரச்சனையோட நூல் அவங்க தான். திரும்ப என் தங்கச்சி அங்க தான் வந்து வாழ போறா. அப்ப எல்லாரையும் வச்சு தான் பேசணும்…” என்று முடித்தாள் பிருந்தா.

  அன்று மதியமே நிரஞ்சன் பிள்ளைகளை தனியே கூட்டி கொண்டு வந்து விட்டான். அவர்களுக்கு பிடித்தது எல்லாம் வாங்கி கொடுத்து,

   “சஸ்டி குட்டி, நாளைக்கு உன் கிட்ட யார் வேணும்ன்னு கேட்டா, எனக்கு அம்மாவும் வேணும். அப்பவும் வேணும்ன்னு சொல்லணும்…”

“சரிப்பா…” என்றது குட்டி.

  “அப்பா வேணும்ன்னு கூட சொல்லு, ஆனா அம்மா மட்டும் வேணும்ன்னு சொல்லாத… அப்பாவா மட்டும் சொல்லு… நாம எல்லாரும் பெரிய கார்ல டூர் போகலாம்…” என்று பலவிதமாக பிள்ளைகளை தன் பக்கம் கவர் செய்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!