Skip to content
Post Views: 1,553
நயம் – 10 
Advertisement
அபி கண்விழித்து பார்க்கையில் அரவிந்த் முகம் அவளுக்கு மிக அருகில் இருந்தது. ஒரு கை அவளின் நெற்றியிலும், மறுகை அவளின் கரத்தையும் இறுக்கமாக பற்றியபடி இருந்தது. நிர்மலமான அவன் முகத்தில், நெற்றி முடிகள் காற்றில் அலைபாய அவளின் கலைஞன் படுத்து இருக்கும் அழகை ரசித்தாள். சிறிது நேரம் அவன் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.
Advertisement
குட் மார்னிங். மை புருஷ் என மனதில் எண்ணியபடி மெல்ல அவன் கரத்திலிருந்து தன் கரங்களை விலக்கினாள். டேய் கிருஷ், உனக்காக தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்னு எப்போ சொல்ல போறேனோ. தெரியலை. ஆனால் நீ சொன்ன மாதிரி நேர்ல கொஞ்ச நாள் லவ் பண்ணுவோம். இந்த பீலும் நல்லாதான் இருக்குல்ல என்றபடி குளியலறைக்கு சென்றுவிட்டாள்.
Advertisement
குளித்து சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு நெற்றி வகுட்டில் குங்குமம் இட்டுக் கொண்டு தலையில் கட்டிய துண்டுடன் இறங்கி வந்தாள். அப்போது மணி ஐந்து முப்பது தான் ஆகி இருந்தது. வழக்கம் போல் எழும் நேரத்தில் உறக்கம் களைந்து எழுந்து விட்டவள், தன் வீட்டில் இருந்தது போன்றே வாசலில் கோலம் போட்டுவிட்டு, பூஜையறையில் வந்து விளக்கேற்றி இறைவனை வணங்கினாள்.
Advertisement
அவள் அடுப்பறைக்கு செல்லும்போதே வீட்டின் வேலையாள் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டார். குட் மார்னிங் லெட்சுமிமா என்றபடி வாங்கியவள். ஹாலில் சென்று அமர்ந்தாள். அவள் செய்தித்தாளை பார்த்தபடி குடித்து முடிக்கும் நேரத்தில் அச்சுதன் எழுந்து வந்து விட்டார்.
பாருடா என் வீட்டு மகாலட்சுமி அதுக்குள்ள பிரெஷா காபி கூட குடிச்சு முடிச்சுருச்சு என்று கூறியபடியே சிரித்தப்படி அமர்ந்தார்.
குட் மார்னிங் மாமா என்றவள். இப்படியே பழகிட்டேன் மாமா. அம்மா கூடவே இருந்து வந்த பழக்கம். அதான் இங்கேயும் எழுந்து ரெடியாய்ட்டேன். அத்தை இன்னும் காணோம் எழுந்துட்டாங்களா ? உங்களுக்கு காபியா டீயா என்றபடி எழுந்தாள்.
நாங்க ரெண்டு பேரும் கிரீன் டீ தான் எப்பவும் குடிப்போம். அத்தையும் காலையிலே எந்திரிச்சுருவா. குளிச்சுட்டு இருந்தா. அவ வந்தவுடனே நாங்க குடிக்கிறோம். அரவிந்த் காலையில் காபி தான் குடிப்பான்மா. இன்னிக்கு மட்டும் ஜாகிங் வேணாம்னு கோவிலுக்கு போயிட்டு வந்துருங்கமா என்றார்.
சரி மாமா என்றவள் அவனுக்கான காபியை பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு சென்றாள். அங்கோ இன்னும் அவன் உறங்கி கொண்டு இருந்தான். அவனை எழுப்பியவள், கோயிலுக்கு போகணும் சொன்னீங்க. சீக்கிரம் கிளம்பணும் பாஸ் என்றாள்.
இந்நேரம் என் மேலே படுத்து கிஸ் பண்ணி எழுப்பிவிட்டா நல்லா இருக்கும். எங்க இவ அதெலாம் பண்ணப்போறா. நமக்கு இன்னிக்கு இவ்வளவுதான் என மனதில் எண்ணியபடி எழுந்து அமர்ந்தவன்.
குட் மார்னிங்டா. அதுக்குள்ள ரெடி ஆகிட்ட போல. என்னையும் எழுப்பி இருக்கலாமே. அட்லீஸ்ட் ஒரு சேலையாவது கட்டி இருக்கலாம். சுடி வேண்டாம் கொஞ்ச நாளைக்கு என்றான்.
இல்லை பாஸ். சேலை தான் கட்ட போறேன். அதுவரை தான் சுடி. நீங்க குளிச்சுட்டு வாங்க. அதுக்குள்ள நான் ரெடி ஆகிறேன் என்றாள் நல்லா பெண்ணாய்.
பின் இருவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். நீண்ட நாள் கழித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல போகும் பரவசம் அவனிடம். சிறுவயதில் வாரம் தவறாமல் சென்றவன் இன்றோ வருடம் பல கடந்து தன் மனையாளோடு முதன் முதலாக செல்கிறான்.
அம்மனை காண அரைமணி நேரம் காத்திருக்க நேரமில்லாமல். சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று விட்டனர். அர்ச்சனை முடித்து வந்தவர்கள் முக்குருணி விநாயகரை தேடி சென்றனர்.
அபி இங்கே ஒரு லிங்கம் இருக்கும். எந்த பக்கம் இருந்து நாம் பார்த்தாலும் அந்த சுழல் லிங்கம் நம்மை பார்க்கிற மாதிரியே இருக்கும். அவ்ளோ கலைநயமா பெயின்டிங் பண்ணி இருப்பாங்க என்றான்.
ஆமாம். நாம் எங்கே இருந்தாலும் கடவுள் நம்மளை நோக்கி, அவர் பார்வையில் தான் நம் உலகம் சுற்றுகிறது என்பதை விளக்கும் தத்துவம் தான் இந்த சுழல் லிங்கம். எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் எப்படி இவ்ளோ அழகா நுணுக்கமான வரைஞ்சி இருப்பாங்கன்னு ஒரு கேள்வி எப்பவும் என் மனசில் வரும் என்றாள்.
இங்கே மட்டுமா ஆயிரங்கால் மண்டபத்துல போனா எவ்வளவு நுணுக்கமான சிற்பங்கள் இருக்கும் தெரியுமா. நான் அங்கே போனா குறைஞ்சது ஒரு மணி நேரமாவது இருப்பேன். சின்ன வயசில அங்கே தான் அடிக்கடி கூட்டி போவாங்க அத்தை என்றான்.
ம்ம்ம். நானும் அடிக்கடி போவேன். அங்க உள்ள சிற்பங்களை பார்த்து தான் ஆர்க்கிடெக்ட் படிக்க விரும்பினேன். எவ்வளவு பொறுமையா இத்தனை சிற்பத்தூண்களை வடிச்சு, வருஷக்கணக்கா தங்களை அர்ப்பணிச்சு, அதை எல்லாம் ஒன்று சேர்த்து , கோயிலா அமைச்சு இருக்காங்க. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கதைகளை சொல்லும். தந்தத்துல குட்டி குட்டி சிலைகள் இருக்கும். இப்போதான் மினியேச்சர் பேமஸா இருக்கு. ஆனால் அப்போவே அதையெல்லாம் பண்ணி இருக்காங்க. அதே மாதிரி புது மண்டபத்துல கூட நிறைய சிலைகள் இருக்கும். கடைகளை எல்லாம் வெளியேற்றி இப்போதான் அதை புதுப்பிச்சு இருக்காங்க.
ஆசாமிகிட்ட சண்டை போடுற மனுசனை பார்த்திருக்கோம். ஆனால் இங்கே தான் சாமிகிட்டயே சண்டை போட்ட நக்கீரனும் இருந்திருக்கிறார். இப்படி பல சிறப்புகள் இருக்கு என்றாள் .
அதை பத்தி பேச ஆரம்பிச்சா அதுவே ஒரு புக்கா எழுதலாம். அவ்வளவு இருக்கு. என்ன பண்ண நேரம் இல்லையே இப்போ ? சீக்கிரம் வேற அம்மா வர சொல்லி இருக்காங்க. அதுனால் அடுத்து ஒரு நாள் ரிலாக்சா வருவோம்.
வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட்டு முடித்து அனைவரும் சேர்ந்து அபியின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர். கணேஷ், பவி இருவரும் வந்து அவர்களை அழைத்து சென்றனர். அபி உள்ளே வந்தவுடன் சிவா, விஷ்ணு அபிம்மா என ஓடி வந்தனர். அவர்களின் செல்ல சித்தியோடு தானே அவர்களின் பொழுதுகள் செல்லும். அவள் இல்லாத அந்த ஒரு நாள் வெறுமையே சிறுவர்களை தேட செய்தது.
ஏன் அபிம்மா, இனி நீ இங்கே இருக்க மாட்டியா? பாட்டி சொல்றாங்க இனிமே உன்னை பார்க்க சித்தா வீட்டுக்கு தான் போகணும்னு சொல்ராங்க. இஸ் இட் ட்ரு? என்றான் விஷ்ணு குட்டி.
ஆமாம்டா செல்லக்குட்டி. இனி சித்தா கூட தான் நான் இருப்பேன். பாட்டி தாத்தா தனியா இருப்பாங்க. நீங்க தான் குட் பாய் ஆச்சே. அவங்களை பத்திரமா பாத்துக்கணும் சமைத்து பையனா சரியா என்றாள் அபி.
ஓ…அப்ப பாட்டி மட்டும் தனியா இருப்பாங்க இல்லை. நான் அவங்க கூட இருக்கேன். யு டோன்ட் ஒர்ரி என்றான் அந்த பெரிய மனிதன். சிவா அவ்வளவாக அனைவரிடமும் கலகலவென பார்த்ததும் ஓட்டமாட்டான். ஆனால் விஷ்ணு அப்படியல்ல. முகம் தெரியாத ஆளாக இருந்தாலும் சட்டென்று ஒட்டிக் கொள்வான். அபி போலவே சரியான வாய்.
சித்தா, ஏன் இவ்ளோ நேரம் நான் உங்களுக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா. கோயிலுக்கு என்னை மட்டும் விட்டுட்டு போயிட்ட மீ பாவம்ல. திஸ் இஸ் வெரி பேட் ஹாபிட். எல்லாரும் சேர்ந்து தான் போகணும். இனிமே தனியா போகாதே. சரியா .
ஓகே இனி எங்க போனாலும் உங்களை கூட்டிட்டு போறேன். இப்போ சாரி. நீ தூங்கிட்டு இருந்தனால தான் விட்டு போயிட்டேன். நாளைக்கு நம்ம எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போகலாம். ஆமாம் உங்க அப்பா காணோம, எங்கே போய்ட்டாங்க ?என்றான்.
அவரு பெங்களூரு போயிருக்காரு. ஆல்ரெடி பிக்ஸ் பண்ண மீட்டிங். அதனால சேன்ஜ் பண்ண முடியல. நாளைக்கு மதியம் வந்துருவாங்க என்றாள் பவி.
ம்ம்ம்…ஓகே, நான் கோயிலுக்கு போனப்ப கால் பண்ணி இருப்பாங்க போல. வீட்ல வச்சிட்டு போனதால இப்பதான் நானும் பார்த்தேன். அவர்ட்ட கொஞ்சம் பிளானிங் பத்தி பேசணும். அப்புறம் பேசிக்கிறேன்.
அபி. உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வை. வேற ஏதாவது தின்க்ஸ் எடுக்கணும்னா எடுத்து வச்சிரு. உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போகணும்ல. போய் அதை பார்த்து எடுத்து வைம்மா. தம்பி நீங்களும் மேலே போய் ரெஸ்ட் எடுங்க என்றார் பிரியா.
என்ன ஆச்சி அத்தை. திடீர்னு ங்க எல்லாம் போட்டு பேசற. எப்பவும் போல பேசுங்க. இப்படி பேசுறது தள்ளி நிறுத்துற மாதிரி இருக்கு. எனக்கு புடிக்கலை என்றான் அரவிந்த்.
அப்படி இல்லப்பா. எல்லோரும் இருக்கும் போது வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கண்டிப்பா கொடுக்கணும். இனி அண்ணன் மகன் மட்டும் இல்லைல.
அதற்குள் பாட்டி எனக்கு இன்னிக்கு சிக்கன் 65 வேண்டும். நல்லா ரெட்டா, மொறுமொறுன்னு காரம் கொஞ்சம் கம்மியா பண்ணி கொடுங்க.
அச்சோ. இன்னிக்கு நோ நான் வெஜ். ஒன்லி வெஜ் மட்டும்தான். காலிபிளவர் 65 தான் பண்ணிருக்கேன். காளான் பிரியாணி உனக்கு பிடிக்குமே. அதான் பாட்டி பண்ணிருக்கேன். போய் சாப்பிடலாமா இல்லை கொஞ்ச நேரம் ஆகட்டுமா என அனைவரிடமும் பொதுவாய் கேட்டார்.
எப்ப பாரு ஏதாவது சொல்லிருங்க பாட்டி. சே நான் பிக்பாயா ஆனா டெய்லி சிக்கன் மட்டும்தான் சமைச்சு சாப்பிடுவேன். உங்களுக்கு அப்போ தர்றேன். வாடா சிவா. போய் 65 சாப்பிடலாம் என்றவன் அவனுக்காக தட்டில் வைத்தாய் பாகம் பிரிக்க ஆரம்பித்தான். இது உனக்கு, இது எனக்கு ஓகே யா என்றான்.
ஆம் நம் குட்டி தங்கம் பாகம் பிரிப்பதில் கெட்டிக்காரன். மாதுளை முத்துக்களை கூட எண்ணி எண்ணி தான் பிரித்து சாப்பிடுவான். என்ன அந்த ஒரு மணி நேரம் நம்ம கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்.
நீங்களும் வர்றீங்களா பாஸ். மேலே போய் பேக் பண்ண போறேன். என்றபடி தன் அறைக்கு சென்றவள், விஷ்ணுவையும் கையோடு தூக்கிக் கொண்டு படி ஏறினாள்.
அபிம்மா, நம்ம ரெண்டு பேரும் மட்டும் போய் ஐஸ் சாப்பிடுவோமா. சிவாக்கு வேணாமாம். டக்குனு ஓடி போய் நைசா யாருக்கும் தெரியாம போவோமா?
செல்லக்குட்டி, இனிமே அபிமா என்னை விட்டு எங்கேயும் வரமாட்டாங்க. நம்ம மூணு பெரும் சேர்ந்து போவோம். ஆனால் ஏன் யாருக்கும் தெரியாம போகணும்?
ஐ, உங்களுக்கும் ஐஸ் பிடிக்குமா, அம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க, அதன் யாருக்கும் தெரியாமல் போறேன் .
ஒய், அம்மா உனக்கு சளி பிடிக்கும்னு தானே சாப்பிட கூடாதுன்னு சொல்ராங்க., பொய் சொல்றது பேட் ஹாபிட், அவங்கிட்ட சொல்லிட்டு போய் தான் சாப்பிடணும் , சரியா என்றான்.
நீங்களும் அபிமா மாதிரியே சொல்றிங்க , சரி சொல்லிட்டே போவோம்.
ட்ராலியில் தன் உடைகளை எடுத்து வைத்தபடியே இவர்கள் பேசுவதை கேட்டவள் ஒன்றும் சொல்லவில்லை . சிறிது நேரத்தில் சிவாவும் இவனோடு சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகளோடு ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்தவன் அவள் கீழே சென்றதை கூட கவனிக்கவில்லை. அங்கே ஒரு டேபிள் மேல் இவன் பெயர் எழுதி ஒரு கடித உரை இருந்தது. அதை எடுத்தவன் இதை படிக்கலாமா, வேண்டாமா ஒரு நிமிடம் யோசித்து, பின் தனக்கு தானே எழுதி வைத்துள்ளாள் பார்ப்போம் என்று அதை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
என்னை பற்றி உங்களுக்கு எதுவும் சொல்ல தேவையில்லை. ஆனால் என்னில் நிறைந்த உங்களை பற்றி என்னை தவறி யாரும் சொல்ல முடியாதே. கவிதையாக எழுதி உள்ளேன், வேணும்னா நடுவுல மானே, தேனே, பொன்மானே போட்டு கூட படிச்சு பாருங்க , நான் ஒன்னும் சொல்லமாட்டேன் என தொடங்கியதை கண்டு சிரித்தபடி படிக்கலானான்.
“அறியா வயதில் விட்டு சென்றவனே !
உன்னை பிரிந்து அழுதேன், துடித்தேன்
மயங்கி வீழ்ந்த என்னை
மருத்துவம் எழுப்பி விட்டது
உன் பேச்சுக்குரலை கேட்டேனும்
அழ மாட்டேன் என
குரல் பதிவை போட்டனர்
உன் விளையாட்டு சாமான்கள் என் வசம்
உன் பொம்மையில் சட்டையை மாட்டி
என் க்ரிஷ் என்றேன்
விந்தையாய் பார்த்தனர்
குறிப்பேட்டில் எழுதி வை
வந்து படிப்பான் என்றனர்
குவிந்து போன ஏடுகள் ஏராளம்
அதில் நான் உன் வசம் தாராளம்
பள்ளி மடலில் நண்பன் என்றேன்
பேதை பெண்கள் சிரித்தனர்
பருவ வயதில் உயிர் நண்பன் என்றேன்
உன் உயிர் தான் நண்பனல்ல என்று
பரிகாசம் செய்தனர்
பதின்ம வயதில் என் காதலை யாசிக்க
பின்னால் சுற்றும் வாலிபனிடம்
தைரியமாய் சொன்னேன்
என் காதல் நீயென
கேட்டவன் உன்னை எங்கென
கேட்டான் யாரென கேட்டான்
என் செய்வேன் யான்?
வருணன் பொழிகையில்
வருண் வம்புடன் வந்தான்
நீ தீண்டும் கரத்தினை தொட்டான்
பட்டென அடித்தேன்
முரண்டு பிடித்தான் முட்டாளவன்
எத்தனை முறை சொல்வது
என் மனம் நீயென்று
உண்மையில்லை பொய் என்றான்
பொய்யில்லை மெய் என்றேன்
கேள்விகள் மாறினாலும் கேளாதவன்
வதைத்தான், தளர்ந்தேன்
தேடினான் ஓடினேன்
தொலைவில் சென்றேனும் படித்தேன்
தொல்லைகள் விடுபட்டு
கலைகள் பல பயின்றேன்
பணியில் மனம் செலுத்தினேன்
பாவையின் மனம் மாறவில்லை
இனி உன்னையன்றி நானில்லை
என்றுணர்ந்தேன்
உயிர் நேசம் கொண்டேன்
வீசும் தென்றலிலும்
மலரும் மலரிலும்
காணும் எங்கிலும்
நீயே தெரிந்தாய்
மாமன் துணை கொண்டு
காதலை வெல்ல துடித்தேன்
வந்து விட்டாய்
வசந்தம் தந்துவிட்டாய்
உணர்வுகளின் குவியலில் என் உள்ளம்
உன்னை கண்டு விட்டேன் இன்று
என்னை கை பிடித்து இழுத்த கள்வனே
என் உள்ளம் கவர் கிருஷ்ணன்
திகைத்து விழித்தேன் என்னை போன்றே
நீயும் காதல் கொண்டதை எண்ணி
சந்தோஷ வானில் மிதந்தேன்
உச்ச கட்ட பரவசத்தில் என் மனம்
என் தனிமைகளின் அரசன் நீ
உன்னை வென்று விட்டேன்
கை சேர்ந்து விட்டேன்
முகிலாயம் நனைந்ததை
முத்தத்தால் காய வை
தனிமையின் தோள் சேர வா
இனிமையின் சுகம் காண வா
இனி உன்னை பிரிய மாட்டேன்
அபிநயங்களின் விழிகளில்
என்றும் நீயே ! எங்கிலும் நீயே .”




அவன் படித்து முடித்தான், விதி அவனை படிக்க நினைத்ததோ, கீழே பெரும் கூச்சல் கேட்டு ஓடினான்.
error: Content is protected !!