Skip to content
Post Views: 1,501
நயம் 11 
Advertisement
அவளின் கவிதையை படித்து முடித்தவுடன், என் மேலே உனக்கும் இவ்வளவு காதலா ? இதை அன்னிக்கு ஆபிசுல பார்த்த அன்னிக்கு, நான் தான் உன் மாமா பையன்னு சொல்லிருந்தா உடனே லவ் பண்ணி இருந்துருக்கலாமோ, சே மிஸ் பண்ணிட்டேனே ! இப்பவும் ஒன்னும் சொல்லாம எழுதி மட்டும் வச்சிருக்கா. இனி நீ சொல்லலைனாலும் பரவாயில்லை. என்ன பண்ண போறேன் பாரு என மனம் முழுவதும் சந்தோசமாய் திரும்பினான். அவள் அங்கில்லை. கீழே சென்றிருந்தாள். அவன் படியிறங்கி வரும் போதே கத்தல் சத்தங்கள் அதிகம் கேட்டது. என்னவென்று காண வேகமாய் ஓடி வந்தான்.
Advertisement
Advertisement
அச்சுதன் மிக கோபமாக, டென்ஷன் அதிகரித்து கத்தி கொண்டு இருந்தார். அபியும் கணேஷும் அவரை சமாதானப்படுத்தி கொண்டு இருந்தனர்.
Advertisement
நேற்றுதான் கல்யாணம் முடிந்தது. ஒரு வாரம் இவங்கள நம்பி ஆபிஸை விட்டுட்டு வர முடியுதா ? என்னமா சொதப்பி வைச்சு இருக்காங்க. மீடியாவுல கிழிக்கின்றான். என்ன பண்றது இப்ப என திட்டிக் கொண்டு இருந்தார்.
ப்ளீஸ் மாமா. டென்ஷன் ஆகாதீங்க, திருப்பி பீபீ இன்க்ரீஸ் ஆனா பிராப்லம் ஆயிரும். நானும் க்ரிஷும் பார்த்துக்குறோம். நீங்க அமைதியா இருங்க என கெஞ்சி கொண்டு இருந்தாள்.
அரவிந்த் வந்து கேட்டவுடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தனர். இன்று காலையில் சரக்குகளை ஏற்றி கொண்டு சென்ற லாரி தமிழ்நாட்டை கடந்து ஆந்திர எல்லை ஓரம் சென்றது. சற்று தூரம் கடந்த நிலையில் போலீசார் வண்டியை நிறுத்தி உள்ளனர். ஆனால் வண்டியை நிறுத்தாமல் சென்ற டிரைவர் பாலத்தின் மீது சென்ற கொண்டு இருந்த நிலையில் சட்டென வண்டியை நிறுத்தி மேலே இருந்து குதித்து தண்ணீரில் விழுந்து தப்பி சென்று உள்ளான். வண்டியின் RC புக் பார்த்து டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு போன் செய்து பேசி உள்ளனர். அது வாடகைக்கு AK நிறுவன சரக்குகளை ஏற்றி செல்லும் லாரி என்றும், அதன் உரிமையாளர் என்ற முறையில் அச்சுதனுக்கு போன் செய்து உடனே வர சொல்லி உள்ளனர்.
இவர்களது சரக்கு வாகனத்தில் இரும்பு கம்பிகளுக்கு மத்தியில் செம்மர கட்டைகளும் சேர்ந்து கிடைத்துள்ளன என போலீஸ் வண்டியை பிடித்து வைத்துள்ளனர்.
ஏதோ ஒரு புண்ணியவான் இவர்கள் வண்டியை பிடித்ததை வீடியோ எடுத்து மீடியாவில் போஸ்ட் செய்து விட்டான். எங்கே தவறு நடந்தாலும் அதை சுட்டி காட்ட வேண்டும் என்ற கோணத்தில் அவர்கள் செய்தாலும் உண்மை என்னவென்று தெரியாமலே அவர்கள் செய்யும் சிறுபிள்ளைத்தன விளையாட்டில் எத்தனை பேரின் வாழ்க்கை தடம் மாறும் என்பதை சற்று யோசித்து செய்தால் நல்லது. என்ன செய்வது அவர்களின் போஸ்ட்க்கு கிடைக்கும் லைக்ஸ் தானே அவர்களுக்கு முக்கியம். காட்டு தீயாய் இந்த விஷயம் ஊரெல்லாம் பரவி நியூஸ் சானலில் ஒளி பரப்பு செய்து விட்டனர். அதனை கேட்டு தான் அச்சுதன் மிக கோபம் கொண்டு விட்டார்.
எதுவும் புரியாமல் சற்று நேரம் நின்றவன் நீங்க இருங்கப்பா, நாங்க பார்த்துக்குறோம் என்றபடி அபியை கூட்டிக் கொண்டு காரில் ஏறினான். இருந்த ஒட்டுமொத்த டென்ஷனில் காரை ஓட்டிக் கொண்டு சென்றவனிடம், க்ரிஷ் உடனே நம்ம ஆபீசிற்கு வண்டியை திருப்புங்க என்றாள்.
ஆபிஸ் போய் என்ன செய்ய போறே. எனக்கே இங்கே என்ன பண்ணனும், யார்ட்ட பேசணும்னு புரியலை. நீ வேற கோபப்பட வைக்காதே, ப்ளீஸ் மா, சும்மா வா, விளையாட்டு பேச்சில்லை இது என்றான்.
அவன் இருந்த கோபத்தில் தன்னை மறந்து பேசுகின்றான் என்றாலும், முகம் காட்டாது நான் தான் அங்க பர்ச்சேஸ் மேனேஜர் . இந்த மாதிரி பிரச்சனையை சமாளிக்க தெரியும். ப்ளீஸ் சொல்றதை கேளுங்க என்றாள்.
அங்கபோய் என்ன பண்ண போறேன்னு சொல்லு. திருப்பவா , வேண்டாமான்னு நான் முடிவு பண்றேன். இப்போதும் கோபம் குறையவில்லை.
ஓகே. சொல்றேன். நம்ம ஆபிசுல எல்லா இடத்திலேயும் CCTV கேமரா கனெக்ட் பண்ணி இருக்கு. லோடிங் ஏத்துற இடத்துலே மட்டும் மூன்று கேமரா இருக்கு. அதே மாதிரி செக்யூரிட்டி கேட்ல டெலிவரி சலன் பைல் பண்ணி வைப்பாங்க, ரெஜிஸ்டர் இருக்கு லோடு உள்ள இருக்கறதை அங்கேயும் போட்டோ ஸ்கேன் பண்ணி தான் அனுப்புவாங்க. அதுவும் கேமெராவுல பதிவு ஆகும். அந்த எவிடேன்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டு போனா நமக்கு உதவியா இருக்கும்.
இப்போ நம்ம பண்ண வேண்டியது சிஸ்டம் ரூம்போயி அந்த புட்டேஜ் எல்லாம் இருக்கானு செக் பண்ணி பார்த்து வேற இடத்துலயேயும் பதிவு செஞ்சு வைப்போம். டைம் ஆனா அது எல்லாம் மிஸ் ஆகிடும். அதுக்கு தான் சொல்றேன்.
அப்பாவை வேணா நம்ம மானேஜர் கூட போலீஸ் ஸ்டேஷன் போய் மத்த விஷயம் பார்க்க சொல்லுவோம். இது எல்லாம் நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும். ப்ளீஸ் கொஞ்சம் நிதானமா யோசிங்க.
அவள் கூறியதை கேட்டவுடன் செம்ம அபி, இந்த புட்டேஜ் மட்டும் கிடைச்சா நம்ம மேல எந்த தப்பும் இல்ல, கம்பெனி உள்ள நடக்கலைன்னு பக்காவா நிரூபணம் பண்ணிரலாம். சூப்பர்டா என்றபடி தனது அலுவலகத்தை நோக்கி காரை திருப்பினான்.
அவர்களின் அலுவலகத்திற்கு சென்று கேமரா கோணத்தில் பதிந்தவை அனைத்தையும் செக் செய்து பார்த்ததில் அங்கே எந்த தப்பும் நடக்கவில்லை என்ற உண்மையும் புரிந்தது. பின் தேவையானவற்றை உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி அப்போதே தங்கள் மேல் எந்த தப்பும் இல்லை என நிரூபித்தனர்.
ஆனால் தங்களுக்கு தெரியாமல் யார் டிரைவர் மூலம் இந்த தவறினை செய்தது என்பதை கண்டறிந்து தருமாறு புதிதாய் ஒரு வழக்கினை பதிந்து விட்டு வந்தனர்.
அதற்குள் கணேஷ் தனக்கு தெரிந்த ஒரு வக்கீல் மூலம் முன்ஜாமீன் வாங்கி விட்டார். அச்சுதன் எங்கும் செல்லாமலே அனைத்தையும் பேசி முடித்து இருந்தனர்.
ஊருக்கு சென்ற கோகுலும் வந்து விட்டதால் அவனோடு இணைந்து மூவரும் செயல்பட்டனர். தன் நிறுவனத்தின் மீது தப்பில்லை என்றாலும் லாரி டிரைவர் கிடைத்தால் தான் அனைத்தும் முடியும், ஆனால் அவனோ சப்தம் காட்டாது எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
இதற்கு நடுவே உறவுகளின் அலப்பறை வேறு . அடுத்தடுத்து போன் செய்ய ஆரம்பித்து விட்டனர். அவர்களிடம் பேசவா , பிரச்சனையை சரி செய்ய ஓடவா என்ற நிலையில் தான் அனைவரும் குழம்பி போய் இருந்தனர்.
அதிலும் ப்ரியாவின் பெரியம்மா மகன் போன் செய்து திட்ட ஆரம்பித்து விட்டார். நம்ம உறவில் அத்தனை பசங்க இருக்காங்க, அவங்களை எல்லாம் விட்டுட்டு இவனை போய் கல்யாணம் முடிச்சியே, பாரு கடத்தல் தொழில் பண்ணி தான் அத்தனை சொத்தும் சேர்த்து வச்சி இருக்கான். பாவப்பட்ட பணத்துல நம்ம பொண்ணு வாழணுமா, அவன் பணமே வேணாம்னு சொல்லி மாப்பிளை தனியா கூட்டி வந்து பொண்ணோட வாழ வை என்று பொரும ஆரம்பித்து விட்டார்.
அதிலும் துரத்து உறவு ஒருவர் இவனோட பொண்ணை அனுப்பிவச்சே நம்ம பிள்ளையை பாரின்ல போய் வித்துட்டு வந்துருவான், அத்துவிட்டுட்டு பொண்ணை கூட்டி வந்துடு என அட்வைஸ் மழை பொழிய தொடங்கி விட்டனர்.
ஒத்த நாள் தானே சேர்ந்து வாழ்ந்தாங்க , அதுக்குள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சு , உன் பொண்ணு தான் முதல் தாரமா, இல்லை ஊருல ஒருத்தி இருக்காளா , பார்த்து சூதனமா இருந்துக்கோ என்றார் கணேஷ் வீட்டு உறவு .
இப்படி வகை தொகையில்லாமல் பேச ஆரம்பித்து விட்டனர். மூன்று நாட்கள் முடிக்கும் முன்பே விழி பிதுங்கி விட்டது. எதனை கொண்டு இவர்களை அடித்து விரட்டலாம் என்ற நிலைக்கு ப்ரியாவே சென்று விட்டார். அவ்வளவு வேதனை .கணேஷிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார். நம்ம பொண்ணு கல்யாணம் முடிச்சிட்டோம்னு சந்தோசம் பட முடியுதா. எவ்ளோ பேச்சு பேசுறாங்க. தொழில் பிரச்சனையை வீட்டுக்கு கொண்டு வந்து அதை நம்ம பசங்க வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பேசுறாங்க. யார் எப்படின்னு நமக்கு தெரியாம இருக்கோமா, இவங்கட்ட எல்லாம் ஏன் தான் பேசுறோம்னு இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. திட்டினா இன்னும் பேச்சு வளரனும் தான் பேசாம இருக்கின்றேன்.
இங்கே இப்படி அங்கே என்னவோ ?.
இங்கோ அரவிந்த் வீட்டிலோ , கல்யாணம் பண்ணி வந்த மறுநாளே இப்படி போலீஸ் ஸ்டேஷன் போக வச்சிட்டாலே, ராசி கெட்டவ , இவளை இன்னும் வச்சி இருந்த யாராவது பொட்டுனு போய்டா போறாங்க. மொத பத்தி விடுத்தா என பிரமிளாவின் அத்தை பெண் வீட்டுக்கு வந்தே கூறினார்.
மகராசி வந்த நேரம் சரியில்லை, பொருத்தம் பார்த்து தானே பண்ணீங்க, அவதி அவதியா கல்யாணம் முடிக்கும் போதே சொன்னேன், கேட்டியா, என் ஓரகத்தி பொண்ணு ஒன்னு இருக்கு. அவளை முடிப்போம், இவளை விரட்டுத்தா என தூபம் போட்டார் ஒரு பெண்ணரசி. அச்சுதனுக்கு தெரியாமல் இவர்களை சமாளித்து அனுப்புவதே பெரும் பாடாய் இருந்தது பிரமிளாவிற்கு.
ஏற்கனவே பீபீ அதிகரித்து இருக்கும் அச்சுதன் காதிற்கு இவை சென்றால் மனிதர் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விடுவார். தப்பாக பேசுபவர்களை கண்டால் அவருக்கு பிடிக்காது. வீட்டுக்குள் கூட அவர்களை அடுத்து உள்ளே விட மாட்டார். முகம் பார்க்கவும் மறுத்து விடுவார்.
ஏற்கனவே உடல்நிலையில் சற்று சுணக்கம் இருக்கும்நிலையில் , கல்யாண அலைச்சல், அதற்கு பின் புதிதாய் இந்த வழக்கு, போலீஸ் ஸ்டேஷன், லாயர் வீடு என மனிதர் அலைந்து கொண்டே தானே இருக்கின்றார். இதனையும் அறிந்தால் என்ன ஆகுமோ என்ற பயமே சொல்லாமல் மறைக்க செய்தது.
இத்தனை வருடங்கள் சொந்தமாய் கூடவே வந்தவர்கள் நம்மை பற்றி என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை கண் கூடாக பார்க்க தானோ கடவுள் நமக்கு துன்பம் தருகின்றார் . ஏனென்றால் பிரச்சனை என்று வரும் போது தான் யாரை தள்ளி நிறுத்தணும், யார் தள்ளி விடுவர், யார் குழி பறிப்பர் , யார் தோள் கொடுப்பார், யார் உயிர் கொடுப்பார், யார் எடுப்பர் என்ற உலக ஞானமே நமக்கு தெளிவாய் புரிகின்றது. அப்படித்தான் இதனை இரு குடும்பங்களும் எடுத்து கொண்டது.
இத்தனை வருட நட்பு அவர்கள் இடையே புரிதலை உருவாக்கியது. நம்பிக்கையை கொடுத்தது. பாசத்தை பலப்படுத்தியது. இருவரில் ஒரு குடும்பம் சற்றே பின்வாங்கி இருந்தாலும் அவர்கள் மகவுகளின் வாழ்வே
அஸ்தமனம் ஆகி இருக்கும். மூத்தவர்கள் மட்டுமல்ல இளையோருக்கு கூட அந்த பாசம் இரத்தத்தில் கலந்து இருந்ததால் தான் உறவுகள் சதியை, ஊராரின் பேச்சினை கிஞ்சித்தும் தலையில் ஏற்றாமல் ஒன்றாய் சுற்றவைத்தது.
இந்த பிணக்கு கூட அவர்களை ஒன்றாக தான் சேர்த்து வைத்துள்ளது. தயக்கம் விடுத்து அனைத்தையும் அபியும், அரவிந்தும் நன்றாக பேச ஆரம்பித்து விட்டனர். இப்போது எல்லாம் இயல்பாக அவன் கை தொட்டு, அருகில் அமர்ந்து , தோள் சாய்ந்து சற்றே நெருங்கி நிற்கின்றாள். அவனுக்கு தேவையான அனைத்தையும் அவளே செய்ய ஆரம்பித்து விட்டாள். அவன் விளையாட்டு பெண் மட்டுமல்ல , புத்திசாலியாய் , பொறுமையாக பிரச்சனை சரி செய்யும் திறன் உள்ளவள் என்பதையும் அவன் கண்டு கொண்டான்.கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தானோ .
சிறிது மனம் ஆசுவாசம் அடைந்த நிலையில் தான் அர்விந்திற்கு அந்த சந்தேகம் வந்தது. லாரி டிரைவர் வேலை பார்த்த டிரான்ஸ்போர்ட் வரதன் உடையது ஆகிற்றே, ஒரு வேலை அவன் தான் அனைத்து குழப்பத்திற்கும் காரண கர்த்தாவா என்ற குழப்பம் ஏற்பட்டது. இனி என்ன செய்வானோ ? என்பதை அடுத்த பதிவில் காண்போம் .




பகைவனுக் கருள்வாய் – நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே – நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே!
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?- நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?- நன்னெஞ்சே!
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,- நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ? நன்னெஞ்சே!
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ? – நன்னெஞ்சே!
error: Content is protected !!