Skip to content
Post Views: 921
அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் முகத்தில் வடிந்த வியர்வை துடைத்து கொண்டு ஒரு வித பயத்துடன் பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே வேகமாக சென்றால் அவள். பின்னால் ஒரு முன் இருபதுகளில் உள்ள ஒரு இளைஞன் அவளை விட வேகமாக சென்று கொண்டிருந்தான்.
இவள் ‘யாரு இவன் ஏன் நம்ம பின்னாடி வாரான் ‘ என்று மனதில் மட்டுமே நினைத்துக் கொண்டாள். அவனிடம் கேட்க அவளுக்கு பயம். மறுபடியும் அவனை திரும்பி பார்த்தாள். அவன் ஏதோ யோசனையில் நிற்பது போல் தெரிந்தது. இவள் பார்ப்பதைத் அறிந்தவுடன் ‘ஹலோ ‘என்று அழைக்க
இதில் பயத்தில் திரும்பி பார்க்காமல் அந்த கேட் கதவை திறந்து கொண்டு சென்று, மீண்டும் திரும்பிப் பார்க்க அவன் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தது தெரிந்தது.
அவள் வேகமாக ஒரு அறையில் சென்று உள்ளே நுழைந்து கொண்டாள். அந்த அறையில் இருந்த எல்லோரும் இவளை வித்தியாசமாக பார்த்தார்கள்.
——————————
‘டேய் மச்சான் யார்டா தேடுற’ என அருகில் கேட்ட குரலில் யாரையோ தேடி கொண்டு இருந்தவன் திரும்பி பார்த்து சிரித்தான் அவன்.
‘அது ஒன்னும் இல்லடா . வா நம்ம போலாம் ‘ இருவரும் அவள் சென்ற அதே ரூமில் நுழைந்தார்கள்.
அங்கே கண்ணில் கண்ணீருடன் அவள் நின்று கொண்டிருக்க , அவளுக்கு முன்பு கோவமாக அவர் நின்று கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் உள்ளே நுழைவதை
பார்த்து அதை கோபத்துடன் இவர்களை திட்ட தொடங்கினார்.
—————————–
‘டேய் யார்டா நீ, ஏன் என் லைஃப் உள்ள வந்த, உன்ன எப்ப பாத்தேனோ அப்ப இருந்து ஏன் நிம்மதி போச்சு, நீ வர்றதுக்கு முன்னாடி சந்தோஷமாக இல்லனா கூட நிம்மதி இருந்துச்சி, நைட் படுத்தா தூங்க முடிஞ்சது எல்லாத்தையும் அழிச்சிடியே. போடா இனி நீ எனக்கு வேண்டாம்.’ என அவள் அழுது கொண்டு இருக்க அருகில் இருந்த அவள் தோழி கூல் ட்ரிங்ஸ் குடித்து பாப்கான் திண்று கொண்டு ஏதோ படம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருந்தாள்.அப்போது கதவை திறந்து கொண்டு இன்னொருத்தோழி உள்ளே நுழைந்தால் ‘என்னடி இன்னைக்கு கோட்டா ஓவரா’ என்று நக்கலாக அவளிடம் கேட்டாள்.அவள் பதில் சொல்வதற்கு முன்பு “காற்றின் அலைவரிசை கேட்கிறதா? ” என மொபைல் ரிங்டோன் கேட்டது.
இவ்வளவு நேரம் யாரை திட்டி கொண்டு இருந்தாலோ அவன் புகைப்படம் மொபைலில் ஸ்கிரீன் ஆனது சற்று பதட்டமாக மொபைலை ஆன் செய்து “ஆன் சொல்லுடா” என ஒருவித சிரிப்புடன் பேச தொடங்கினாள். இவ்வளவு நேரம் இதை ஒரு ஃபிலிம் போல பார்த்துக்கொண்டு இருந்து அவள் தலையில் தட்டிக்கொண்டு” இது திருந்தாத கேஸ்” என அவள் வேலையை பார்க்க சென்றாள்.
error: Content is protected !!