Skip to content
Post Views: 5,186
“என்ன சொல்றீங்க சார், என் பொண்ணு தான் விஜயதேவி, அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல!
முந்தாநாள் தான் நிச்சயமே ஆகியிருக்கு!
உங்களுக்கு யாரோ எனக்கு வேண்டாதவங்க தப்பா சொல்லி அனுப்பியிருக்காங்க, கொஞ்சம் நல்லா விசாரிச்சுட்டு வந்தா நல்லது!” என்று நக்கலாகவே சொல்லி தன் பண்ணை கெத்தைக் காட்டினார் ஞானம்!
“நாங்க விசாரிக்காம உங்கள மாதிரி ஆளுங்க வீட்டுக்கு உடனே எல்லாம் வந்திட மாட்டோம்!
Advertisement
கம்ப்ளெயின்ட் பண்ணின டாக்டர் ஜக்தீஷ், அவரும் உங்க பொண்ணும் பண்ணிகிட்ட மேரேஜ் சர்டிபிகேட் காண்பிச்சு தான் கம்ப்ளைன்டே பண்ணியிருக்கார்.
நீங்களா அவர் வொய்ப அவர் கூட அனுப்பிட்டா உங்களுக்கு நல்லது, நாங்களும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காம போய்டுவோம்!
ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க சார்!” என்றார் இன்ஸ்பெக்டர்.
Advertisement
“என்ன சொல்றீங்க என் பொண்ணு ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டாளா? இருக்காது, இருக்கவே இருக்காது, நீங்க அட்ரஸ் மாறிதான் வந்திருக்கணும்!” அதிர்ச்சியில் கூச்சலிட்டார் ஞானம்!
Advertisement
“அடியே! என்னடி சொல்றாங்க இவங்க என் தலையில கல்லைப் போடுற மாதிரி என்னென்னமோ சொல்றாங்க இந்த ஆளுங்க!” இன்னொரு பக்கம் சூர்யத்தம்மாவின் ஓலக் குரல்!
ஜானுவும் சரவணனும் கூட அதிர்ச்சியில் தான் இருந்தார்கள்! அவர்களுக்கும் விஜி இவ்வளவு தூரம் செய்திருப்பாள் என்று நினைக்கவில்லை!
விஜியின் காதல் நிறைவேறுவது அவ்வளவு ஈசியில்லை என்று அவர்களுக்கும் தெரியும் தான்!
Advertisement
எப்படியாவது போராடி, சாம பேத தண்டம் அனைத்தையும் பயன்படுத்தி, கிழவியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஞானத்தை வழிக்குக் கொண்டுவர அவர்கள் பல்வேறு ஐடியாக்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் தான் கிழவி அதிரடியாய் இப்படி ஒரு சம்பந்தம் பேசி விட்டது!
அப்போது விஜி சம்மதித்து சபையில் அமர்ந்தது கூட அப்போதைய நிலவரத்தை சமாளிக்க என்றே ஜானுவும் சரவணனும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!
நிச்சயம் தானே முடிந்தால் முடியட்டும், ஜானுவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஏதோ சித்தா டாக்டர் என்றார்களே, அப்போ அவனும் படித்தவனாக இருக்கிறான், விஜியைப் பற்றி எடுத்து சொல்லி இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தி விடலாம் என்றே சரவணன் நினைத்து கொண்டிருந்தான்!
விஜியும் அவள் பங்குக்கு இப்படி அதிரடி காட்டி விட்டது அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான்!
விஜி அவர்களிடம் வந்து “சாரிம்மா, சாரிண்ணா, எனக்கு அப்பாவைப் பற்றி, இந்த கிழவியின் தந்திரத்தைப் பற்றி கொஞ்சம் பயம்.
அதனால ஒரு சேப்டிக்கு தான் நாங்கள் ரிஜிஸ்டர் பண்ணி வச்சது! ஆனா நாங்க இன்னும் வாழ்க்கையை எல்லாம் ஆரம்பிக்கல, அது உங்களோட ஆசிர்வாதத்துடன் தான் நடக்கும்!
இப்போ பிரச்சினை தலைக்கு மேல், உங்க கையையும் மீறி போனதுனால, நான் ஜக்தீசை வர சொல்லும்படி ஆகிடுச்சு!
சாரிம்மா, ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோ! ப்ளீஸ் அண்ணா நீயும் தான்!”
கிழவியின் பேச்சைக் கேட்டு விஜியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வைத்து இருந்ததால், அவள் ஜகதீஸ்க்கு போன் போட்டு இங்கு இருக்கும் நிலையை சொல்லிவிட, அவன் தன் லாயர் பிரண்டிடம் கேட்டு விட்டு கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டான்!
போலிஸ் பாதுகாப்புடன் ஜகதீஸ் அவன் பிரெண்ட்ஸ்களோடு வந்து விஜியை அவனோடு கூட்டி சென்று விட்டான்!
நடப்பதையெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டாது வேடிக்கை தான் பார்க்க முடிந்தது ஜானுவாலும் சரவணனாலும்!
தலையில் கையை வைத்துக் கொண்டு இடி விழுந்தது போல அமர்ந்து விட்டார் ஞானம்!
“அய்யோ! இப்படி என் பிள்ளையை அவமானப்படுத்திட்டு போறாளே பாதகத்தி!
அவ நல்லா இருப்பாளா? நாசமாதான் போவாள்” என்று பேத்தி என்றும் பாரமால் மண்ணை வாரி போட்டு சபித்தார் சூர்யத்தம்மா!
அது வரை சிலையாக நின்று கொண்டிருந்த ஜானுவின் பெற்ற வயிறு பதறியது!
“அத்தை என்ன பண்றீங்க நீங்க, அவ உங்க பேத்தி அவளைப் போய் இப்படி வாக்குசம் விடறீங்க!”
“பேத்தி என்னடி பேத்தி, முதல்ல என்னோட மகன்! அப்புறந்தான் மத்தவங்க எல்லாம்!
இங்க பாரு ராசா மாதிரி இருந்தவன் இப்படி தலையை குனிஞ்சு அவமானப்பட்டு உட்கார்ந்து இருக்கிறது யாரால! அவளை நான் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பனுமா?
அவ எல்லாம் போன ரெண்டே மாசத்துல, சோத்துக்கு இல்லாம நடுத்தெருவில நின்னு, கண்ணை கசக்கிட்டு இங்க தான் வருவா பாரு, அப்ப இருக்கு அவளுக்கு!”
“அவ ஏன் சோத்துகில்லாம போகப் போறா? அவ புருஷன் ஒண்ணும் இல்லாத பரதேசின்னு நினைச்சீங்களா, உங்கள மாதிரி பத்து மடங்கு பணக்காரங்க அவங்க!
எல்லாத்துக்கும் மேல அவளை ரொம்ப நேசிக்கிறார் அந்த பையன்! பாசம் நேசம் பத்தியெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது! உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் ஜாதி, பணம் சொத்து இது மட்டும் தானே!
மனுஷங்களோட உணர்வுகள பத்தி உங்களுக்கும் தெரியாது, உங்க பிள்ளைக்கும் தெரியாது!” கிழவி சாபமிட்ட ஆத்திரத்தில் ஜானுவும் உணர்ச்சிவசப்பட்டு வாயை விட்டு விட்டாள்!
“அப்போ, இந்த சதிக்கு நீயும் தான் உடந்தையா? டேய் ஞானம் கேட்டியா சேதிய, இது பத்தி எல்லாம் உன் பொண்டாட்டிக்கும் ஏற்கனவே தெரிஞ்சு இருக்கு!
உன் பொண்டாட்டியே உனக்கு துரோகம் பண்ணிட்டாடா!” கிழவி இன்னும் கத்தி ஓலமிட்டது!
“பாட்டி, அம்மாவை ஒண்ணும் சொல்லாத, அந்த பையன் பத்தி நான் விசாரிச்சுட்டு வந்தத வச்சு தான் அம்மா சொல்றாங்க!
சும்மா அவங்கள போய் குத்தம் சொல்லாத!” சரவணன் தாயைத் திட்டுவது பொறுக்க முடியாமல் கத்த,
“டேய் பாருடா, இவனும் உனக்கு எதிரா தான் இருக்கான்! எல்லாம் கூட்டு சேர்ந்து என் பையன அவமானப்படுத்திட்டாங்களே! அய்யோ மகமாயி இத கேக்க யாருமில்லையா?”
கேட்க யாருமே இல்லை தான்!
அந்த அளவுக்கு ஊரில் எல்லோர் வாயிலயும் விழுந்து இருந்தனர் அம்மாவும் பிள்ளையும்!
வகை தொகை இல்லமால் எல்லோரையும் ஜாதி பெயர் சொல்லி சொல்லி அவமானப்படுத்தி கீழ்த்தரமாக நடத்தி இருந்ததால், ஊரில் இவர்கள் வீட்டின் இந்த அவமானம் இனிப்பான செய்தியாக தான் இருந்தது!
“கடவுள் இருக்கான்யா, வச்சான்ல கிழவிக்கும் அவ மகனுக்கும் ஆப்பு! பொண்ணு ரூபத்தில!” என்றே நினைத்தார்கள்!
கிழவி ஓலத்தை இன்னும் நிறுத்த வில்லை!
“டேய் எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு, இவ இந்த பிள்ளைங்க ரெண்டையும் உனக்கு தான் பெத்தாளான்னே!” கிழவி விஷமாய், அமிலமாய் வார்த்தைகளை விட, அது வரை கூட விஜி செய்தது தப்பு தான் என்ற எண்ணத்தில் இருந்த சரவணனுக்கு கோபம் தலைக்கேறியது!
“ஏய்! கிழவி நாக்கை அடக்கிப் பேசு! வாய் தான் இருக்குன்னு உன் இஷ்டத்துக்கு பேசாதே! அப்புறம் மரியாதை கெட்டுடும்!
ஊர்ல உன்னை சூனியக்கார கிழவின்னு சொல்றதுல தப்பே இல்ல! நீ சொந்த பேரப் பிள்ளைகளையே இந்த பேச்சு பேசுற, அப்ப மத்தவங்கள் என்ன பேச்சு பேசியிருப்ப?
என்னப்பா, இந்த கிழவி என்னென்னமோ பேசுது, நீங்களும் கேட்டுகிட்டு சும்மா நிக்கிறீங்க?
இப்படி எல்லாம் பேசாதன்னு சொல்லுங்க, உங்களுக்கு இது அதிர்ச்சி தான் அவமானம் தான் ஒத்துக்கிறேன்.. அதுக்காக அம்மாவை இப்படி பேசுறது தப்புப்பா, ப்ளீஸ் இத இப்படி பேச வேணான்னு சொல்லுங்க!”
“எதடா நிறுத்த சொல்ற, இப்படி பெத்த பொண்ணை கூட்டி கொடுத்து அனுப்பி வச்சவள, நான் எப்படி பத்தினின்னு நம்புறது? இவ்வளவு நெஞ்சழுத்தம் உள்ளவ என்ன வேணா பண்ணியிருப்பா!”
அவரும் அம்மாவைத் தப்பாக பேச, சரவணன் ரவுத்திரமானான்!
“யோவ்.. உன்னை… அப்பான்னு கூட பார்க்க மாட்டேன்! அப்படியே கழுத்தை நெரிச்சு கொன்னே போட்டுடுவேன்!
அம்மாவுக்கும் பிள்ளைக்கும் பேய் தான் பிடிச்சுருக்கு! அம்மா நீ, கிளம்பும்மா, நீ இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்க நிக்க கூடாது! கிளம்பு!”
சரவணன் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்!
அவன் திருச்சியில் ஒரு புகழ்பெற்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் பேகல்ட்டி ஆக வேலைப் பார்த்து வந்தான்.
ஒரு பெங்களூரில் இருந்த ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் பிளேஸ்மென்ட் கிடைத்திருந்தது!
ஐடி இண்டஸ்ட்ரீஸ் நன்றாக பூம் ஆகிக்கொண்டு இருந்த சமயம் அது! அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க அவன் ஜானுவை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்று விட்டான்.
கனகுவையும் ஜகதுவையும் அவசரமாக கோவிலுக்கு அழைத்து விஷயத்தை சுருக்கமாக சொல்லி விட்டு மகனோடு சென்று விட்டார் ஜானு!
இங்கே ஞான சம்பந்தத்தால் தெருவில் நடமாட முடிய வில்லை!
அவரின் கார் ஊருக்குள் வரும் நேரம் பார்த்தே, டீக்கடை ஸ்பீக்கரில்
“யப்பா ஞானம்.. சீதாவை காணோம், பொழுது விடிஞ்சா போகப் போகுது மானம் ..” என்று பாட்டை வேண்டுமென்றே போட்டார்கள்.
அவருக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.
உறவினர் ஒருவர் வந்து ஆறுதல் சொன்னார். அது கூட ஒரு வகை நக்கல் தான்!
ஏனென்றால் அவரின் மகன் தன்னுடன் வேலைப் பார்த்த வேறே ஜாதி பெண்ணைத் திருமணம் செய்து விட்டான் என்று அவர்கள் குடும்பத்தை அவர்கள் இனத்திற்கு என்று இருக்கும் ஒரு சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் என்று ரொம்பவும் வம்படியாக நின்றவர் ஞானம், அவரின் அம்மாவின் அறிவுரைப்படி!
“என்ன ஞானம் பண்றது? தோளுக்கு மேலே வளர்ந்துட்டாலே, நம்ம பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க இல்ல இந்த காலத்துல! எல்லாம் அதது இஷ்டம் தான்! மனசை தேத்திகிட்டு அடுத்து நடக்கிற வேலையப் பாரு! நானும் அப்படி தான் பண்ணினேன்!
என்ன.. என் அளவுக்கு உனக்கு நம்ம ஜாதி சனங்க தொல்லை இருக்காது, நான் அத பார்த்துக்கிறேன்” என்று போறப் போக்கில் ஆறுதல் சொல்வது போல ஒரு குத்தும் விட்டு விட்டு தான் போனார் அவர்!
ஞானம் ஒரு கட்டத்தில், இதை எல்லாம் பொறுக்க மாட்டாமல், ஒரு முழ கயிற்றில் தன் வாழ்வை முடித்துக் கொண்டு விட்டார்!
விசயம் கேள்விப்பட்டு ஜானுவும், சரவணனும் ஓடி வந்தார்கள்!
விஜிக்கு தெரிவிக்கவில்லை!
கனகுவும் ஜகதுவும் தான் ஜானுவுக்கு ஆறுதல் சொன்னார்கள்!
“மனசுலயும் ஒண்ணுமில்ல, மண்டையிலும் ஒண்ணுமில்ல இந்த மனுஷனுக்கு!
இப்படி புத்திக் கெட்ட தனமாவே வாழ்க்கையின் கடைசி வரை நடந்துகிட்டு, இப்படி போய்ட்டாரே! காலத்துக்கும் இது என் மகளுக்கும் பழிச்சொல் தானே!
அடியே மந்தரைக் கிழவி, கடைசி வரை என் புருஷனுக்கு தப்பு தப்பா சொல்லிக் கொடுத்தே அவர் வாழ்க்கையையே முடிச்சு விட்டுட்டியே!” மாமியாரை கத்தி தீர்த்து விட்டாள் ஜானு!
கிழவியும் அதிர்ந்து போய் தான் இருந்தது!
மகன் இறந்த பின் தான், தான் சரியாக பிள்ளையை வழி நடத்த வில்லையோ என்ற புத்தி வந்தது!
கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் சூர்யத்தம்மா செய்தது!
எல்லா சடங்குகளும் முடிந்து, சரவணன் தன் அம்மாவை தன்னுடன் அழைத்தான்.
ஜானு தயங்கிய போது, “நீ எதுக்கு இன்னும் இங்க இருக்கணும் கிளம்பும்மா, அது தான் முப்பது எல்லாம் முடிஞ்சுடுச்சு இல்ல!”
“பாட்டி.. அவங்கள எப்படி விட்டுட்டு போறது? அவங்களையும் கூட்டிட்டு போலாம்!”
“யம்மா, உனக்கு புத்தி ஏதும் கெட்டுப் போச்சா? உன்னை.. உன் கேரக்டரை பேரன் பேத்தி எடுக்கப் போற வயசுல கேவலப்படுத்தின, இந்த கிழவிய நாம கூட்டிட்டு போகனுமா, அதெல்லாம் முடியவே முடியாது!” தீர்மானமாய் சொல்லிவிட்டான் சரவணன்.
அவனை என்ன முயன்றும் சமாதானம் செய்ய முடியவில்லை ஜானுவால்!
இதில் மட்டுமில்ல, விஜியின் விசயத்திலும் கூட!
விஜி, இப்படி தனக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணியிருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை!
அப்படி பண்ணிய போதும் தன்னுடன் கூட அதை மறைத்து வைத்ததை அவனால் தாங்கிக்க முடியவில்லை!
ஏனென்றால், அவன் விஜியை தங்கையாக மட்டும் பார்க்க வில்லை, நல்ல தோழியாகவும் நினைத்து இருந்தான்!
தங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை என்பது போல தான் இருவரும் இருந்தனர்!
அவள் காதல் விசயம் கூட அவனுக்கு தானே முதலில் தெரியும்!
அவனால் விஜியையும் மன்னிக்க முடியவில்லை!
அதனால் அவளை அவன் அதற்குப் பின் தொடர்பு கொள்ளவும் முயற்சிக்க வில்லை!
விஜி முயற்சித்த போது அவளை அவாய்ட் செய்தான்.
இங்கே கிழவி, யாரை எல்லாம் ஜாதி துவேசம் கொண்டு ஒதுக்கி வைத்ததோ, அவர்கள் தான் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள்!
காத்தானின் மனைவி தான் உணவு சமைத்துக் கொடுத்து, கிழவியைப் பராமரித்தாள்.
செல்வம் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போவதும் வருவதும்.
கூப்பிட்டால் அல்லது வலியில் கத்தினால் ஏனென்று கேட்க இப்போது அவர்கள் தாம் அருகில்!
முதுமை காரணமாகவும், தொடர்ந்த மன உளைச்சல், துக்கத்தாலும், ரொம்ப நாட்கள் சூர்யத்தம்மாவும் உயிருடன் இருக்க வில்லை!
அடுத்த சில வருடங்களில் அவரும் இறந்து விட, சரவணன் வந்து, இருக்கிற நிலபுலன்கள், தோப்பு எல்லவாற்றையும் விற்று விட்டு, அதில் விஜிக்கு உரிய பங்கு அனைத்தையும், அவளை அவனின் ஆடிட்டர் மற்றும் வக்கீல் மூலம் அப்போது மட்டும் தொடர்பு கொண்டு சேர்த்து விட்டான்!
அப்போது ஜான்வி இரண்டு வயது பெண் குழந்தை!
அவளுக்கு தாய் மாமன் சீராக ஒரு பெரிய தொகையை அவள் பேரில் டெபொசிட் செய்து விட்டான்.
அத்துடன் அவர்கள் தொடர்பு அறுந்து விட்டது!
ஜானுவுக்கு தான் மனதே கேட்க வில்லை! பேத்தியைக் கொஞ்ச ஆசை இருந்த போதும் மகனை நினைத்து அடக்கிக் கொண்டு விட்டார்!
அதன் பின், ஜான்விக்கு ஆறு வயது ஆகும் போது, அவளின் பெற்றோர் இருவரும் ஒத்து வரவில்லை என்று மியுச்சுவல் கன்சென்ட் பேரில் டிவோர்ஸ் வாங்கி விட்டார்கள்!
அது வரை தன் அம்மாவையும் அண்ணனையும் பார்க்க ஆசைப் பட்டுக் கொண்டிருந்த விஜி, அவளுக்கு டிவோர்ஸ் ஆன பிறகு அவர்களை சந்திக்கும் ஆசையை விட்டு விட்டாள்.
தான் இப்படி இருப்பதை அம்மாவால் தாங்கிக்க முடியாது என்று தன்னை மறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
காலப்போக்கில் சரவணனின் கோபமும் குறைந்து, கிட்டதட்ட அவனுமே தங்கையைக் காண ஆசைப்பட்டு, தேடிய போது, விஜி அவர்களுக்கு முன் வராமல் ஒளிந்து கொண்டாள்.
தான் இப்போது கணவருடன் இல்லை, டிவோர்ஸ் ஆகி தனியே பெண் குழந்தையுடன் இருப்பதைக் கண்டால் தாயும் அண்ணனும் ரொம்பவும் வருத்தப்படுவார்கள். அவர்களை பொறுத்தவரை தான் எங்கோ கண் காணாத இடத்தில் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ்வதாகவே நினைத்துக் கொண்டிருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு தன்னை மறைத்துக் கொண்டாள் சென்னையில் இருந்து கொண்டே!
இந்த இன்டர்நெட் காலத்தில் தொலைந்துப் போனவர்களை சோசியல் மீடியா மூலம் கூட கண்டுப் பிடித்து விட முடியும்! ஆனால் ஒளிந்து கொண்டு இருப்பவளைக் கண்டுப்பிடிக்க எப்படி முடியும்?
முடியவில்லை சரவணனாலும்! அவன் சென்னையில் தான் அவள் இருக்கிறாள் என்று அனுமானிக்காமல், அவனின் தேடுதல் பூராவும் வட இந்தியாவில் இருந்தது!
வருடங்கள் ஓடி, ஜான்வியும் எம்பிபிஎஸ் பைனல் இயர் படித்துக்கொண்டிருந்த போது, கொரானா வந்தது.
விஜி, தன்னை முழுவதுமாகவே அந்த மருத்துவப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.
அவருக்கும் கொரானா பாஸிடிவ் வந்து, தனிமையில் இருந்த போதும் தைரியமாக இருந்தார். மகளுக்கும் தைரியம் சொன்னார்.
“பின்னே என்னடி, ஐ சி யூ வில் கொரானா பேசண்டுகளுடன் ஒன்றாக அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கோம். என்ன தான் ஸ்பேஸ்க்கு போற மாதிரி டிரஸ் போட்டுட்டு எல்லாவித ப்ரீகாசன்ஸ் எடுத்திட்டாலும், ஐ சி யூ டூட்டி பார்க்கிற எங்களுக்கு கூட பாஸிடிவ் ஆகலைன்னா, அந்த வைரஸ்க்கு என்ன மரியாதை?” என்று கூட கிண்டல் பண்ணி சிரித்தவர் தான்!
ஆனாலும் கொரானாவின் கோரப்பிடிக்கு அந்த தன்னலமற்ற டாக்டர் தப்ப வில்லை!
விஜி இறந்த பின் ரொம்பநேரம் கூட உடலை வைத்திருக்க முடியவில்லை, நிறையப் பேர் அவர்க்கு இறுதி மரியாதை செய்ய விரும்பியும் முடியவில்லை, அப்போதைய சூழ்நிலையில்!
ஆனால் ஜகதீஸ் மட்டும் தன் செல்வாக்கினை பயன்படுத்தி விஜியின் இறுதிக் காரியங்களை நல்லபடியாகவே நடத்தினார். ஜான்விக்கு துணையாக இருந்தார்.
விஜியைப் பிரிந்த போதும் அவர் ஜான்வியை ஒருபோதும் கை விட்டதே இல்லை!
ஊர்மிளாவுக்கும் பெண் குழந்தை இல்லாததால் அவளே ஜகதீஸ்க்கு இருக்கும் ஒரே ஆசை மகள்!
ஒவ்வொரு வருடமும் ஜான்வி லீவுக்கு அவள் அப்பாவின் ஊருக்குப் போவதும் வழக்கமாயிருந்தது!
அப்போதெல்லாம் ஊர்மிளாவுமே அவளை நன்றாகவே பார்த்துக் கொள்வாள். அவள் வடக்கத்திய பெண் என்றாலும் தமிழ்நாட்டு சமையல் அவளுக்கு நன்றாகவே செய்ய வரும்.
ஜான்விக்கு கொஞ்சம் சமையல் சொல்லிக் கொடுத்திருப்பதும் கூட அவளே!
அவளின் மகன்களும் ஜான்வியிடம் பிரியமாகவே இருப்பார்கள்!
கூடவே ஊர்மிளாவின் அண்ணன் சந்தீப்பின் மகன் நிகில் வேறு ஜான்வி வந்திருப்பது தெரிந்து விட்டால், ஜகதீஸ் வீடே கதி என்றும் இருப்பான்!
“பப்பாவுக்கு, நான் இங்கே வந்து வேலைப் பார்ப்பதில் கொஞ்சமும் இஷ்டம் இல்லை! என்னை பி ஜி படிக்க சொல்லி, சீட்டும் வாங்கி வைத்திருந்தார். முடித்தபின் நானும் நிகிலும் தான் அவரின் ஹாஸ்பிட்டலை பார்த்துக்கணும்னு சொல்லிட்டே இருப்பார்!
நான் தான் பிடிவதமாக என் அம்மா வாழ்ந்த இந்த ஊரில் இப்படி ஒரு போஸ்டிங் இருப்பது கேள்விப்பட்டவுடன் வந்து விட்டேன்.
என் அம்மாச்சி வீட்டில் யாராவது இன்னமும் இங்கு இருப்பார்கள் என்று நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா இங்க யாருமே இல்லை!” ஜான்வி கொஞ்சம் விசும்பினாள்.
அவளின் தலையை கோதியபடி, “இப்ப என்ன உன் அம்மாச்சி இல்லன்னா என்ன, நாங்க ரெண்டு அம்மாச்சி இருக்கோம்டி என் கண்ணு! அழுவாதடிம்மா” என்று அவளுக்கு தட்டிக் கொடுத்தார் ஜகது!
“உனக்கு கல்யாணம் ஆற வரைக்கும் நீ இங்கயே இரு! அப்புறம் உன் புருஷன் சொல்றபடி எங்க வேணுமின்னாலும் போய்க்கோ! ஆனா உனக்கு நாங்க ரெண்டு கிழவிகளும் இருக்கோம், அத மட்டும் மறந்திடாதே” என்றார் மேலும்!
“அதென்ன, அவ புருஷன் சொன்னா இருக்கட்டும்னு சொல்ற! என் பேத்திக்கு ஒண்ணும் சீமையில இருந்து மாப்பிள்ளை வேணாம், நாம் இங்கேயே மாப்பிள்ளைப் பார்த்து அவளுக்கு கட்டி வச்சு நம்ம பக்கத்துலையே வைச்சுக்குவோம்!” என்றார் கனகு!
“ஏய்! என்னடி சொல்ற, பேத்தி படிப்புக்கு ஏத்த மாப்பிள்ளை இங்க யார் இருக்கா?” என்றார் ஜகது!
“ஏன் இல்லை , என் பேரன் பரணி இருக்கான்டி, அவனுக்கு நானும் தான் ஆத்தா, அவனுக்கு என்ன குறை?”
“அவனுக்கு என்ன குறை? யாராச்சும் சொன்னா வகுந்து புடுவேன் வகுந்து! இப்ப பிரச்சினை அது இல்லைடி கனகு!
பேத்திக்கு அவனைப் பிடிக்கணுமே? அது தானே முக்கியம்! அவ இஷ்டப்படாம எப்படி அதான் ரோசிக்கிறேன்!” என்றார் ஜகது!
“அதெல்லாம் எனக்கு இஷ்டம் தான் அம்மாச்சி!” என்றால் ஜான்வி கொஞ்சம் வெக்கத்துடன்!
ஜான்வியிடம் போட்டு வாங்கி விட்டார்கள் கிரிமினல் கிழவிகள் இருவரும்!
error: Content is protected !!