Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 19 1

 மின்னல்  ஒரு  கோடி



Advertisement

அத்தியாயம் – 19   Final-1

Advertisement

  கோடிஸ்வரனின் கார்  மைசூரை நோக்கி  சென்று கொண்டு இருந்தது.கோடிஸ்வரன்  கார் ஓட்ட   பக்கத்தில்  கௌசி , கௌசியின் மடியில்  துருவா  தூங்கி  கொண்டு வந்தான்.

Advertisement

  இரவு  12 .30  மணிக்கு  மைசூரில் உள்ள கௌசிக்கு  கவர்மென்ட்  குடுத்த வீட்டுக்கு  வர. வீடு பழைய  வீடாக  இருந்தாலும் .மிக  அழகாக இருந்தது.

காவலுக்கு  ஆட்கள்  வீட்டு வேலை செய்ய என்று  2 நபர் பக்கத்தில்  இருப்பார்கள். இவர்கள்  வந்ததும்  தங்களை  கோடியிடம் அறிமுகம்  செய்து கொண்டு ,காலையில்  வருகிறோம் என்று சென்று விட்டனர்.

Advertisement

 கோடிஸ்வரன்  மகனை  தோளில் வைத்து  கொண்டே  வீட்டை  பார்க்க .

கௌசி  ஒரு அறையை  காட்டி  மகனை படுக்க  வைக்க சொல்லி விட்டு, கோடிக்கு  பால் காய்ச்சி  எடுத்து வந்து கொடுத்தாள்.

கோடி  வீட்டையும்  தன் மனைவியை பார்த்து இருந்தவன்.

 கௌசி நீங்க குளிச்சுட்டு வாங்க,நானும் போய் குளிச்சுட்டு வர்ரேன்  என்று இன்னொரு அறைக்கு சென்று குளித்து விட்டு  கோடியின் அருகில் வர.

கோடி கௌசியை பார்த்து வாய் பிளந்து நின்றான். என்னடி  டிரஸ்  இது.

கௌசி ஏன் உங்களுக்கு  தெரியலயா ,

அது தெரியுது, நீ  ஒரு  ஜட்சு.  நீ இப்படி டிரஸ் போடலாமா.

 ஏன்  ஜட்சு இப்படி  டிரஸ்  போட கூடாதுன்னு  ஏதாவது  ரூல்  இருக்கா என்ன. நான் என்ன  வெளியே வா போட்டேன்  நம்ம ரூம்புக் குள்ள தானா.

கோடி  கௌசியை பார்த்து சிரித்தவன். அது என்ன உனக்கு இந்த டிரஸ் மேல  அவ்வளவு  பிரியம் .

 அது  ப்பிரியா   இருக்குல இந்த  சாட்ஸும் , டிசர்ட்டும் என்றவள்.லைட் ஆப்  பண்ணிவிட்டு  கோடியின்  அருகில் வர.

கோடி உன்ன பாத்த. நீ  சீக்கிரம்  துருவாவுக்கு  தங்கச்சி பாப்பா ரெடி  பண்ணிருவ போலயே என்று சிரிக்க.

கௌசி கோடியிடம்  வேண்டாமுன்னா  போங்க என்றவள். துருவாவின்  பக்கத்தில்  நெருங்கி படுக்க.

கோடிஸ்வரன்  மனைவியை  கையை பிடித்தவன்  அதில் முத்தம் வைத்து உன் கூட  என் வாழ்க்கையை  அனுபவிச்சு வாழ  ஆசை படுறேன்  என்றவன்.  கௌசியை  அனைத்துக் கொண்டு  தூங்கு என்றான்.

கௌசி  கோடியின் தலை  கோதிவிட்டு  கோடியின்  முகத்தையே  தொட்டு தடவி பார்த்தவள். மீசை  ரொம்ப அழகா  இருக்கு என்றவள்.மீசையோடு விளையாட.

ஏய் வழிக்கு தடி , விடு என்றான்

அட சும்மா  இருக்க  கோடி சார். அழகா இருக்கு என்று ,மீண்டும்   மீசையை நீவி  விட்டு அழகு படுத்த.

உனக்கு  என் மீசை  பிடிச்சுருக்கா என்றான்.

கௌசி ஆமாம் என்றவள்.நீங்க  இப்போ  கொஞ்சம் அழகா  மாறிட்டீங்க என்றவள் . கோடியின்  கன்னத்தில் முத்தம் மிட.

கோடிஸ்வரன்  மனைவியை அணைத்து கொண்டு .நாளைக்கு கோர்ட்டுக்கு எத்தன  மணிக்கு போகனும் .

காலையில் 9 மணிக்கு  போகனும் 10 மணிக்கு  மேல தான் வேலை.9 மணிக்கு  போய் என்ன கேஸ்  வருதுன்னு பாக்கனும், படிக்கனும் அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்.

சரி என்ற கோடி  கௌசியை அணைத்து கொண்டு தூங்கு என்றான்.

 கௌசி காலையில்  7.30 எழுந்தவள் குளித்து விட்டு  வெளியில் வர.

கோடியும்  துருவாவும்  டி.வி யில்  சிங்சான் பார்த்து கொண்டு இருக்க. கௌசி  இருவருக்கும்  காலை வணக்கம் சொன்னவள்.துருவாவிடம்  பால்  குடிச்சீயா என்றாள்.

துருவா நைனா  குடுத்தாங்க  என்றான்.

கௌசி  கோடியிடம்  காபி தரவ என்க.

கோடி சரி என்னு தலையாட்ட.

கௌசி இருவருக்கும்  காபி கலந்து  எடுத்து வந்து  கோடியிடம்  ஒரு கப்பை கொடுத்தவள்.இன்னொன்றை அவள் எடுத்துக் கொண்டு  கோடியிடம்  அமர்ந்து கொண்டவள். துருவாவை  தள்ளி உங்காருட என்றவள் கோடியை  இடித்துக் கொண்டு அமர.

ஏன் கௌசி உனக்கு உங்கார  வேற இடமே இல்லையா .

இல்லை என்றவள். கோடியின் தோளில்  சாய்ந்து கொண்டு  காபியை குடிக்க.

கோடி  சிரித்துக் கொண்டே  இவள் என்னை விட்டு  எப்படி இருந்தாள்,  4  வருடம்  என்று  நினைக்க தோன்றியது.

துருவா மம்மி  பசிக்குது.

என்ன  வேணும்டா.

துருவா  தோசை என்று சொல்ல.

சரி என்றவள்.கோடியிடம் உங்களுக்கு என்றாள்.

நீ என்ன பண்ணாலும் ஓகே கௌசி என்றான்.

கௌசி கிச்சன் நோக்கி சென்றவள் . காலை உணவு மட்டும்  செய்து விட்டு .

மதியம்  12  மணிக்கு மேல்  வந்து. மதியம்  சூடாக  உணவு செய்து கொள்ளலாம் என்றவள் . தோசை சுட்டு எடுத்து வந்து இருவருக்கு பரிமாற .

கோடி நீ ஏன் கஷ்ட படுற கௌசி சமைக்க ஆள்  இருக்கும்  தானே.

ஆள் இருக்கு தான். அம்மா இங்கே  இருந்த அவங்க  சமைப்பாங்க. நான்  ஒரு ஆலுக்கு நானே தேவைனா   சூடா  நானே  சமச்சு  சாப்பிடுவேன்.

 வீட  மட்டும் சுத்தம்  பண்ண ஆள் வருவாங்க பாத்துக்கோங்க என்றவள் கோர்ட்க்கு கிளம்ப.

கோடி நான் உன்னை டிராப் பண்ணுறேன் என்றான்.

 கௌசி வேண்டாம்    கோடி மாம்ஸ் கார் வரும். பக்கம் தான் 10 நிமிசம் என்றவள். மதியம் 12 மணிக்கு மேல வந்துருவேன் என்று சொல்லி கிளம்பினாள்.

 துருவா  கௌசி  சென்றவுடன்   பக்கத்தில்  உள்ள பார்க்கிற்கு  கோடியை  அழைக்க.

உனக்கு வழி  தெரியுமாடா  என்றான்  கோடி.

பக்கத்தில் தான் நைனா  வா , நா  கூட்டிட்டு போறேன் .

இருவரும் கிளம்பி பார்க் சென்று  விளையாடி விட்டு வரும் பொழுது.

துருவா  அங்கே உள்ள சுட்டி  ஸ்கூலை பார்த்து நிற்க.

கோடி என்னட  என்றான்.

துருவா நானும் ஸ்கூல் போறேன் என்றவன் . எனக்கு சிங்சான் பேக் வேணும் , வாட்டர் பாட்டீல் வேணும் வாங்கி தர்ரீயா நைனா என்றான்.

மகனை தூக்கி கொஞ்சியவன்.

வாடா என்றவன்.ஸ்கூல்  உள்ளே சென்று எப்போது சேர்க்கலாம் என்று கேட்டு வந்தான்.

துருவாவுக்கு சந்தோஷம் .நைனா நான் ஸ்கூல் போறேன் என்றவன்.குதித்து கொண்டு வீட்டனுள் நுழைய.

கௌசி     கிச்சனின் கோடிக்கு பிடித்த நான்வெஜ்   சமைத்து கொண்டு இருந்தாள்..

மம்மி நான் ஸ்கூல் போறேன் . நாளைக்கு என்று குதித்து  கொண்டே சொல்ல . எங்கே டா போற என்றவள். நேரம்  1 மணியாக  வேகமாக சமையல் செய்து கொண்டு இருந்தாள். துருவா சொல்வது கௌசிக்கு புரியவில்லை.

கோடிஸ்வரன் மகனை வெளியில் விளையாடு டா போ என்க. துருவா சரி நைனா என்று சென்று விட. கௌசி பின் இருந்து அணைத்து கொண்டவன்.

 சமையல் வாசம் தூக்குது என்றவன். கௌசியின் வாசத்தை நுகர.

மதியம் சாப்பாடு  வேண்டாமா என்றவள் . குக்கரை முடிவைத்து விட்டு .   என்னவென்று  கேட்க.

 நாங்க பார்க் போயிட்டு வரும் பொழுது ஒரு ஸ்கூலை பார்த்தோம். துருவா நான் ஸ்கூல் போறேன் சொல்லுறான். நான் போய் ஸ்கூல் பாத்தேன் ரொம்ப நல்ல இருக்கு துருவாவை சேர்க்கலாமா என்றான்.

 கௌசி துருவாவை ஸ்கூலில் சேர்க்கலாம் . ஆன எங்கே சேர்க்கலாம்.

கோடி என்ன சொல்லுற.  இங்கே சேர்க்கலாமே.

இல்ல அம்மா கிட்ட கேக்கனும் என்றாள்.

ஏன் கேட்கனும்.

என்னால தனியா  துருவாவை பாத்துக்க முடியாது. அம்மா எங்கே சொல்லுறாங்கலோ அங்கே தான்

 சேர்க்கனும் என்றவள் .சமையல் செய்ததை  எடுத்து வந்து டேபலில்  வைத்து .துருவா வா என்றவள் கோடிக்கும் உணவு பரிமாற  அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன்.

 கோடி   கௌசியிடம் இங்கேயே துருவாவை  ஸ்கூல  சேரு. நான் பாத்துக்குறேன்.

கௌசி என்ன சொல்லுறீங்க. நீங்க  எப்படி . இங்கே  பாத்துக்க முடியும்.   உங்களுக்கு  எவ்வளவு வேலை இருக்குமுன்னு  எனக்கு தெரியாத, அத விட இப்போ சார் எம் ,எல் ஏ அந்த பதவி வேற.

நான் அம்மாவ  கேட்டு வேணா அங்கே பெங்களுருல சேர்க்க பாக்குறேன். உங்களுக்கு  துருவாவை பாத்த மாதிரி இருக்கும்.

 கோடி நான்  இங்க உள்ள ஸ்கூலை போய் பாத்துட்டு வந்துட்டேன் நல்ல இருக்கு. நாளைக்கு   நாம போய் துருவாவை சேர்த்து விடலாம்.

 நான் சொல்லுறது உங்களுக்கு புரியுத. என்னால தனியா என்று சொல்ல.

நான் பாத்துக்குறேன்.

நீங்க எப்படி ?

நான் எம் , எல் ,ஏ பதவியை  ராஜினாமா  பண்ணிட்டேன்.

கௌசி ஏன் என்று அதிர்ச்சியாக கேட்க.  இனிமே உங்கூட  தான் என்றான்.

கௌசி இப்போ எங்க கூட தானே இருக்கீங்க.

அது இல்ல கௌசி என்று கோடி சொல்ல வர.

யார கேட்டு  எம்,எல். ஏ,  பதவியை வேண்டாமுன்னு சொன்னீங்க. ஏன் இந்த  தீடிர்ன்னு முடிவு  எடுத்தீங்க. இந்த பதவியின்னா சும்மாவா . உங்கல மக்கள் நம்பி  இந்த பதவிவை  உங்களுக்கு  கொடுத்து இருக்காங்க என்றவள் கோடியை முறைத்து விட்டு. ரூம் செல்ல.

கோடி கௌசியின் பின் சென்று அவளின் கை பிடிக்க.போங்க ஏன் இப்படி பண்ணுனீங்க என்று கண் கலங்கியவளை.

கோடி   கௌசியை ஏன்டி நீ சந்தோஷ படுவன்னு பார்த்த இப்படி பீல் பண்ணுற.

நீங்க  உங்க  அடையாளத்த விட்டுட்டு என் கூட இருக்கவேணாம். எம்,எல் ஏ என்பது  எவ்வளவு பெரிய பதவி ,பொருப்பு அத  விட்டுட்டு என்று புலம்பியவள்.அப்பறம்  காம்புலக்ஸ் என்று கோடியை பார்க்க.

அது என்ற கோடி .என் ப்ரெண்டு ஒருத்தன்  வெளிநாடுல இருந்து வந்து இருக்கான்.  ஏதாவது  பிஸ்னஸ்  பண்ணனு முன்னு ஐடியா குடுன்னு  சொல்லிட்டு இருந்தான். நான் தான் ஒரு  2 இல்ல 3 வருஷத்துக்கு என் காம்புலக்ஸை பார்த்துக்கோ. நல்ல அனுபவமா இருக்கும் அப்பறம்  தனியா கடை வச்சுக்கலாம் சொல்லி இருக்கேன். அதனால  இனிமே உன் கூட தான் இருக்க போறேன்.எப்படி உனக்கு 3 வருஷத்துல வேற கோர்ட்டு  ஜட்ச போடுவாங்கல. அப்போ  எனக்கு  தெரிஞ்ச ஆள்  வச்சு  பெங்களுர் மெஜஸ்டிக்  உள்ள கோர்ட்ல  போஸ்டிக்  போட சொன்ன ஆச்சு.

கௌசிக்கு தலை சுத்தியது போல இருந்தது. கோடி தன்னுடன்  இருப்பது  சந்தோஷம் தான் . அதற்காக  அவனது  பதவி, கடை  என்று அனைத்து விட்டு. தன்னுடன்  இருப்பது  பிடிக்காமல்.அன்று முழுவதும் அழுதவளை.

கோடிஸ்வரன் எதுக்கு அழற, இப்போ  உனக்கு அழறதற்கு  ஒரு விசயம் வேணும் அப்படித்தானே என்று கேட்டவனை.

கோடியிடம் பேசாமல்  அவ்வப்போது கண்கள் கலங்குவதும் பின்பு துடைப்பதும்மாக  இருந்தவளை. பார்த்தும் பார்க்காமல் இருந்தான் கோடி. கௌசியிடம் கோடி    இன்னும்   மூனு வருஷம் கழிச்சு  நான் எலெக்‌ஷனுல நின்னு எம் ,எல், ஏ வாக ஆகிறுவேன் . நீ என்ன நெனச்சு கவலை படதே என்றவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!