Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 10

வியர்க்க வியர்க்க ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தார் ஜக்தீஸ்.

கால்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் மனது அவற்றை விட வேகமாக ஓடி யோசித்துக் கொண்டிருந்தது.

ஜான்வியின் எதிர்காலத்திற்காக என்று அவர் எடுத்திருக்கும் சில முக்கிய முடிவுகள், சில அதிரடி வேலைகள், அவற்றில் சில அண்டர்க்ரவுண்ட் வேலைகளும் கூட! . இவற்றைப்பற்றி தான் அவர் மனம் வெகுவாக யோசித்துக் கொண்டிருந்தது.

கடவுளே, எல்லாம் நான் நினைத்தபடி ஒர்கவுட் ஆகணும். அப்படி ஆனால் தான் என் பேட்டி என் கூடவே இருப்பாள். இவ்வளவு நாள் நான் அவளைப்  பிரிந்திருந்தது போதும்.



Advertisement

இவளுக்காக தானே, அவர் மச்சினன் சந்தீப்பின் மகனை நிகிலை டாக்டர் ஆக்கியது!

அவனையும் படிக்க வைத்து, மகளுக்கே கல்யாணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்வது தான் அவர் திட்டம்.

ஊர்மிளாவுக்குப் பிறந்தவர்கள் இருவருக்குமே மெடிசன் படிக்க ஆர்வமில்லை!

Advertisement

ஆனால் அவரின் வாரிசாக ஜான்வி மட்டும் தான் அதை விரும்பி எடுத்துப் படித்தாள். அதனால் அவளே, தான் உண்டாக்கி வைத்திருக்கும் மருத்துவ சாம்ராஜ்யத்தை அவருக்குப் பிறகு ஆள வேண்டும்!

Advertisement

என்னதான் அவர் விஜியைப் பிரிந்திருந்த போதும், ஜான்வி அவருக்கு என்றுமே டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்தான்!

அதனால் தான் ஒவ்வொரு வருடமும் லீவ் எப்போது விடும் என்று காத்திருந்து கூட்டி வந்துவிடுவார்.

டிவோர்ஸ் வாங்கியபோது , ஜான்வி பெண்பிள்ளை என்பதால் அவள் அம்மாவுடன் அனுப்பி வைத்து விட்டது சட்டம்!

Advertisement

இல்லையென்றால் அவர் தன்னுடனே வைத்து பார்த்திருப்பார்.

ஆனால் அவர் விஜியையும் நினைத்து தான் ஜான்வியை அவளோடு விட்டு வைத்தார்.

ஜான்விக்கு திருமணம் ஆகும் வரை அவளுடனேயே இருக்கட்டும். எப்படி இருந்தாலும் ஜான்விக்கு திருமணம் ஆனவுடன் விஜி அவளைப் பிரிந்து தானே ஆகவேண்டும்!

அவளுக்கு மாப்பிள்ளை தன்பக்கமே பார்த்து கல்யாணம் முடித்து தன் அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர் இருந்து வந்தார்!

இதில் அவரே எதிர்பாராத ஒன்று! விஜியின் இறப்பு!

சரி விஜியும் இல்லை இப்போது என்று அவள் இறந்த பிறகாவது, ஜான்வியை தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், இந்த பெண் அந்த கிராமத்திற்கு போயே ஆகவேண்டும் என்று ஒரே அடம்!

சரி போய் கொஞ்ச நாள் இருக்கட்டும், என்ன இருந்தாலும் அவளும் சென்னை மாதிரி சிட்டியில் வளர்ந்த பெண், கொஞ்ச நாளிலேயே கிராமத்து லைப் ஸ்டைல் பிடிக்காமல் அவளே வந்து விடுவாள் என்று தான் அவளை அங்கு அனுப்பியதே!

ஆனால் இப்படி அவளை அங்கிருந்து பெண் கேட்டு வருவார்கள் என்று அவர் கொஞ்சமும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை!

இதில் ஜானவிக்கும் விருப்பம் போல தெரிகிறது! இல்லையென்றால் அவர்கள் இவ்வளவு தூரம் தைரியமாக வந்து பேசியிருக்க மாட்டார்கள்!

ஏன் தான் இந்த ஜான்வி, அவ அம்மா  மாதிரி சில விசயங்களில் இப்படி இமோஷனல் இடியட்டாக இருக்கிறாளோ?

விஜிதான், இப்படி ஊர் பாசம் மண் வாசம் என்று ஏதாவது உளறிக் கொண்டிருப்பாள்.

என்னதான் வசதியான குடும்பம் என்றாலும் விஜியும் ஜான்வியும் கொஞ்சம் அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்ந்தார்கள்!

விஜிக்கு கொஞ்சம் இரக்க குணம் அதிகம், சேவை மனப்பான்மையும் கூட!

டாக்டர் தொழிலை அவள் சேவையாக நினைத்துதான் செய்தாள்!

கொஞ்சம் “பிழைக்கத் தெரியாத” டாக்டரும் கூட!

அவள் பார்ட்னர் ஆன ராஜாராமும் இவள் அளவுக்கு இல்லை என்றாலும் அவரும் கூட அதே ரகம் தான்!

அதனால் தான் கிட்டதட்ட ஒரே நேரத்தில் ஹாஸ்பிட்டல் ஆரம்பித்த இருவரின் தொழில்களில் , ராஜாராம் – விஜியின் ஹாஸ்பிட்டல் மாநில அளவில் தான் இருந்தது!

ஆனால் ஜகதீஸ் ஹாஸ்பிட்டல் மிகப்பெரிய ஹாஸ்பிடல் செயின் ஆக இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கிறது!

ஜக்தீசும் சோசியல் சர்வீஸ் செய்பவர் தான்!

ஆனால் அவை அனைத்தும்  CSR( Corporate Social Responsibility) Activities வகையை சேர்ந்தவை!

பெரும்பாலும் வரி விலக்கிற்காக செய்யப்படுபவை!

விஜி செய்து வந்த மாதிரி இல்லை!

இந்த ஜான்வி பெண்ணிற்கும் இந்த குணம் கொஞ்சம் இருக்கிறது!

அம்மாவின் குணம் இருக்கும் போது அப்பாவின் குணமும் இருக்க தானே வேண்டும்!

என் பிசினஸ் மைன்ட் அவளுக்குள்ளும் நிச்சயம் இருக்கும்!

அதை வெளிக்கொண்டு வர வேண்டும்!

அதற்கு ஜான்வி இங்கு வந்து பொறுப்புகளை ஏற்க வேண்டும்!

இந்த பணம் கொடுக்கும் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாக அவள் உள் வாங்க வேண்டும்!

அப்படி அவள் உணர்ந்து விட்டால், பின் பட்டிக்காட்டு மதராசியை திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்!

அதற்கு தானே அவர், அவளை அவரின் ஹாஸ்பிட்டல் குரூப்பிற்கு எம் டி ஆக நியமிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற AGM (Annual General Meeting) ஏற்பாடு செய்து, அதற்கு ஜான்வி வர வேண்டும் என்று சொல்லி பிளைட் டிக்கெட் போட்டு அனுப்பியும் விட்டார்.

அவளை எம் டி ஆக்க, அவரது மகன்களும் ஒத்துக் கொண்டு விட்டார்கள்.

இதில் இன்னொரு வேலையும் கூட அவர் செய்திருந்தார் அவர்!

டாக்டர் ராஜாராமிற்கும் ஜான்வியை அவரது மகனுக்கு கட்டி வைக்கும் எண்ணம் இருந்தது!

விஜியிடம் என்ன பேசியிருந்தாரோ என்னமோ!

ஜகதீஸ் அவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரிய நோ சொல்லி விட்டார்!

ராஜாராமின் மகனைப் பொறுத்தவரை ஒரு குறையும் சொல்ல முடியாது தான்!

ஜகதீஸ் ஒரு வேளை விஜியைப் பிரியாமல் இருந்திருந்தால், ஜான்வியை அவரே வளர்த்திருந்தால், அவரின் மகனுக்கே பெண் கொடுத்திருக்கக் கூடும்!

ஆனால் இப்போது, அவர் பெண்ணை தன் அருகில் வைத்துக் கொள்ள  ஆசைப்படும் போது, அவளை எப்படி சென்னையில் இருக்கும் அவரின் மகனுக்கு கொடுக்க முடியும்!

இதையெல்லாம் யோசித்து, திறம்பட செயல்பட்டார் ஜகதீஸ்!

இவ்வளவு செய்த அவர், காதல் எல்லாவற்றையும் ஒரே சாட்டில் அடித்துப் போட்டு விடும் என்பதை மறந்து விட்டார்!

கூடவே அவருமே கூட லவ் மேரேஜ் தான் செய்தவர் என்பதையும் ரொம்ப ஈசியாக மறந்து விட்டார்!

—-

ஜான்வி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

வீட்டினர் எல்லோருமே வாசலுக்கு வந்து விடைக் கொடுக்க நின்று இருந்தனர்!

பரத் அவளைக் காரில் ஏர்போர்ட்டிற்கு கொண்டு விட ரெடியாக இருந்தான்.

இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில், இப்போது தான் முதல் முறையாக பத்து நாள் லீவ் எடுத்துக் கொண்டு  ஊருக்குப் போகிறாள்!

ஜகது கலங்கிய கண்களுடன் “பத்திரமா போய்ட்டு வாடிம்மா, போய் இந்த கிழவிய மறந்திராதே, போன் பண்ணு!” என்றார்.

“என்ன அம்மாச்சி இப்படி சொல்றீங்க, நான் எப்படி உங்கள போய் மறப்பேன்? நான் தினமும் வீடியோ கால் பண்ணுவேன், நீங்க பேசணும் ஓகேயா?” என்று கட்டிக் கொண்டு சொன்னாள்.

அப்படியே கனகுவையும்!

பரணி தூரமாய் நின்றுக் கொண்டு ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்!

அவள் போவதை அவனால் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை!

“ஏண்டி இப்படி என் கண் முன்னாடி வந்து நின்ன? நின்னு, கீழே விழுந்து, நான் பிடித்து, அதுக்கப்புறம் நான் நானாவே இல்லை தெரியுமா?

நான் பாட்டுக்கு நான் உண்டு என்  வேலை உண்டுன்னு இருந்தேன்!

இப்படி என் மனசை திருடிட்டு போற மாதிரி போற? பத்து நாள் தான் என்றாலும் உன்னைப் பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்?” அவனுள் ஒரே புலம்பல்!

“நான் மட்டும் என்ன ஆசையாவா போறேன்! பப்பா முக்கியமான மீட்டிங்னு சொல்லும் போது என்னால் போகாம இருக்க முடியல!

நான் இங்கே இருந்து போனாலும் என் மனசு இங்க, இந்த வீட்டை, வீட்டினரை, அப்புறம் உங்களை தான் சுத்தி சுத்தி  வந்ந்துட்டே இருக்கும்!” இது ஜான்வியின் மைன்ட் வாய்ஸ்!

இருவரும் கண்ணாலேயே பேசி முடித்து அவள் பரத்துடன் கிளம்பி விட்டாள்.

என்ன தான் நேருக்கு நேராக பரணியும் ஜான்வியும் பேசிக் கொள்ள வில்லை என்றாலும், அவன் வீட்டில் இருப்பதே, அவனது இருப்பே, அவளுக்குள் சந்தோசத்தைத் தரும்!

பரணிக்கும் அப்படி தான்! அவனுடன் பேசாவிட்டாலும், அவள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கொண்டிருந்தாலே கூட அவனுக்கு போதும்.

இப்போது அதுவும் இல்லாமல் அவள் ஊருக்கு போவது இருவருக்குமே கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது!

ஜகதுவுக்கும் ஒரே வருத்தம்!

இப்ப போற பேத்தி, திரும்பி வருவாளா? இல்ல அவள் அப்பா பேச்சைக் கேட்டுவிட்டு அங்கேயே இருந்து விடுவாளா? என்ற பயம் அவருக்கு!

ஏனென்றால் ஜகதீஸ் அவருக்குப் போன் செய்து இதையும் சொல்லி விட்டார்!

தான் எப்படியும் அவள் மனதை மாற்றி, அங்கேயே வைத்துக் கொள்வேன் என்று! கொஞ்சம் ஓவர் கான்பிடன்டாக!

இதை கனகுவிடம்  சொல்லி வருத்தப்பட்டார் அவர்!

“ஏதாவது செஞ்சு அவளைப் போக விடாம பண்ணுடி” என்றும் கேட்டு விட்டார்!

“அப்படியெல்லாம் நம்ம ஜானு மாற மாட்டா! அவ எண்ணத்தில் அவள் உறுதியா தான் இருக்கா! நீ ஒண்ணும் கவலைப் படாதே!”

“அப்படி ஊசாலாடும் மனசோட இருக்கிற பெண் ஆக இருந்தால், கேப்பார் பேச்சைக் கேட்கும் பெண்ணாக இருந்தால், வசதி வாய்ப்பைப் பார்த்து மனசை மாத்திக்கிற பெண்ணாக இருந்தால், அப்படி ஒரு பெண்ணை நம் பேரனுக்கு கட்டி வைக்க கூடாது.

எந்த சூழ்நிலையிலும் மாறமா இருக்கணும்.

அப்ப தான் சரியா இருக்கும். மத்தபடி அவளைப் போக விடாம பண்றது எல்லாம் இந்த கனகுக்கு ஒரே விசயமே இல்லை!

ஆனால் நான் தான் அவள் போய்ட்டு வரட்டும்னு இருக்கேன்!” என்றார் நம்பிக்கையுடன்!

———-

ஜகதீஸ் வீட்டுக்கு போன பின்னும் பகலில் அவள் ஹாஸ்பிட்டல் போவது, அங்கு ஜகதீஸ் அறிமுகப்படுத்தி வைத்தவர்களிடம் பேசுவது, போன்ற வேலைகள் செய்தாலும், மாலை அவள் ஜகதுவுக்கு வீடியோ கால் பண்ண மட்டும் மறக்க மாட்டாள்!

ஜக்தீஷ்க்கு கோபமாக வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். உள்ளே போய் ஊர்மிளாவிடம் தான் பொருமுவார்!

அவள் காலில் இருக்கும் போது, பரணி அவ்வபோது கேசுவலாக வருவது போல திரையில் அவளுக்கு தரிசனம் தந்தும் பெற்றும் கொள்வான்!

ஆனால் அவனாக அவளுக்கு போன் பண்ணவே மாட்டான்!

ஒரு வாரமாக , நிகிலுடனே தான் ஜான்வி ஹாஸ்பிட்டலின் எல்லா இடங்களுக்கும் விசிட் பண்ணினாள்.

அவள் தான் வருங்கால எம் டி என்று கிட்ட தட்ட எல்லோருக்குமே அன் அபிசியலாக தெரிந்தே இருந்ததால், சென்ற இடத்தில் எல்லாம் ஒரே ராஜ மரியாதை!

பரணியின் ஹாஸ்பிட்டலில் ஒரு ஜூனியர் டாக்டர் அளவில் மட்டுமே மரியாதையை அனுபவித்து இருந்த ஜான்விக்கு இது ஒரு மாதிரி கூச்சத்தையே தந்தது!

இதையும் கூட ஜகதுவிடம் சொல்லி சிரிப்பாள் ஜான்வி போனில்!

அடுத்த நாள் மாலை அவளை எம் டி ஆக அறிவிக்க இருக்கும் மீட்டிங்!

அப்போது பார்த்து ஜகதீஸ்க்கு ஒரு எமர்ஜென்சி சர்ஜரி டெல்லியில்!

ஆனால் அவர் அதை முடித்துவிட்டு நேரே மீட்டிங் வந்து கலந்து கொள்வதாக இருந்தது!

அன்று வழக்கம் போல் ஜகதுவை போனில் அழைத்தாள் ஜான்வி!

போன் ஸ்விட்ச்ஆப்.

கனகுவின் போன் நாட் ரீச்சபிள்! விக்கி லீவில் இருந்தான்.

பரத்தின் போனும் அதே நிலையில்!

பரணிக்கு போன் பண்ணினால் என்ன என்று முதலில் நினைத்தவள், பிறகு அவன் ஏதாவது நினைத்துக் கொள்வான் என்று நினைத்து அந்த எண்ணத்தைக் கை விட்டாள்!

பின் மணியின் போனுக்கு அடித்தாள். ரிங் போய் மணி எடுத்தான்!

அப்போது அவன், கதிர் ஆசையாக வாங்கி வளர்த்த ஜல்லிக்கட்டு காளை மாட்டுக்கு தீவனத்தைக் கரைத்து கொண்டிருந்தான், அதன் பட்டியில் இருந்து!

அந்த காளை அவனுக்கு மட்டுமே அடங்கும்! அதில் ரொம்ப பெருமை அவனுக்கு!

இப்போது போனைக் காதில் வைத்து தோள் பட்டையில் கிடுக்கிக் கொண்டே இரு கைகளால் தீவனத்தைக் கரைத்துக் கொண்டே ஜான்வியிடம் பேசினான் அவன்!

“மணி.. எங்க இருக்க? ஏன் வீட்டில் யாரோட போனும் எடுக்க மாட்டேங்குது! அம்மாச்சி எங்கே! மத்தவங்க எல்லாம் எங்க?” என்று கேட்டாள் ஜான்வி!

“எல்லோரும் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க ஜானும்மா”

“ஏன் யாருக்கு என்ன ஆச்சு?”

“அதுவா அண்ணன் வண்டியில இருந்து கீழே விழுந்து ஆக்சிடன்ட் ஆகிடுச்சு, நாய் குறுக்கே வந்ததாலே! நல்ல அடி! கையில பிராக்சர் ஆகிடுச்சு!

வீட்டுல எல்லோரும் ஹாஸ்பிட்டல இருக்காங்க.

நான் மட்டும் இங்க மருதுக்கு தண்ணி காட்டணும்னு வீட்டுக்கு வந்துட்டே.” மணி பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் போன் தீவனத் தொட்டியில் விழுந்து விட்டது!

“ஹலோ..ஹலோ மணி.. “ எதிர்புறம் ஜான்வி கத்திக் கொண்டிருந்தாள் பதட்டத்துடன்!

போன் ஸ்விட்ச் ஆப்!

இங்கே ஜான்விக்கு வியர்த்துக் கொட்டியது!

“அய்யோ ஆக்சிடெண்டா! பரணிக்கா? நான் இப்ப உடனே அவரப் பார்க்கணுமே! என்ன ஆச்சு? எப்படி ஆச்சு? இப்ப எங்க இருக்காங்க? அய்யோ எதுவுமே தெரியலையே, இந்த நேரம் பார்த்து, நாம வேற பக்கத்துல இல்லையே! நாம் உடனே அங்கே போகணும்! அவர் முகத்தைப் பார்க்கிற வரை எப்படி நிம்மதியா இருக்க முடியும்?” தவியாய் தவித்துப் போனாள் ஜான்வி!

எத்தனையோ ஆக்சிடென்ட் கேஸ்களை அவள் படிக்கும் காலந்தொட்டு பார்த்திருந்தாலும், இப்போது அடி பட்டிருப்பது அவளின் பரணிக்கல்லவா!

மீண்டும் மணிக்கு போனில் முயற்சித்தாள். அது தான் ஆப் ஆகிவிட்டதே!

பதட்டத்தில் அவளுக்கு பரணி ஹாஸ்பிட்டல் சீப் டாக்டரைத் தொடர்பு கொள்ளக் கூட தோன்றவில்லை!

உடனே அவள் அப்பாவின் பிஏவை அழைத்து, அவளுக்கு அடுத்த ப்ளைட்டில் திருச்சி போக வேண்டும், ரொம்ப எமர்ஜென்சி என்று சொல்லி டிக்கெட் போட வைத்தாள்.

அவன் “மேம் நாளைக்கு உங்களுக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கே”  என்று சொல்ல,

“அதை விட பெரிய எமர்ஜென்சி இது! ப்ளீஸ் புக் பண்ணுங்க பப்பாவிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்”  என்ற சொல்லி விட்டாள்.

அவன் அடுத்த நாள் காலையில் ஹைதராபாத் வழியாக போகும் ஒரு பிளைட் இருக்கிறது என்று சொல்லி அதற்கு புக் பண்ணி விட்டான்.

கூடவே ஏர்போர்ட்டில் இருந்து அவள் கிராமத்திற்கு ஆன்லைனில் கேப் புக் பண்ணியும் கொடுத்தான்.

அவனிடமிருந்து டிக்கெட் விவரங்களைப் பெற்றுக் கொண்ட ஜான்விக்கு பொழுது விடியும்வரை ஒரு கணம் கூட தூக்கம் வரவில்லை!

விடிய விடிய விழித்தே இருந்தவள், விடியற்காலை பொழுதிலேயே எழுந்து கிளம்பி விட்டாள்.

அவள் எப்படி பிளைட் பிடித்து, எப்படி காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே திரும்ப கேட்டால், சொல்லத் தெரியாது!

வீட்டுக் கேட்டை திறந்துக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தவள் காதில் பரணியின் பேச்சு சத்தம் கேட்டது!

அவன் வீட்டில் பக்கவாட்டில் இருந்த பேக்கிங் செக்சனில் நின்று கொண்டு கனகுவிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

அங்கு வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் டீ ப்ரேக்கிற்காக செல்வியிடம் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செட்டில் உட்கார்ந்து இருந்தனர்.

இங்கு பரணியும் கனகுவும் மட்டுமே!

ஜான்வி பரணியை அங்கு பார்த்தவள், அவளை அறியாமல் அவன் அருகில் ஓடிச் சென்றவள், அவன் கைகளை பிடித்துக் கொண்டு அவனையே பார்த்தவள், இரவு முழுக்க தூங்காத களைப்பு, மன உளைச்சல் காரணமாகவும், அவனை நல்லபடியாக கண்டுவிட்ட திடீர் இன்ப அதிர்ச்சியாலும் கொஞ்சம் தலைச் சுற்றி அப்படியே அவன் மேல் சாய்ந்து விட்டாள்.

திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவள், இப்படி மயங்கி வேறு சரிய, பரணி திகைத்துப் போய் விட்டான்.

 ஆனாலும் அவன் கைகள் தானாகவே அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தான் இருந்தன!

“டேய் தம்பி தூக்குடா அவளை” கனகு பதறி சொல்லிவிட்டு, வேகமாய் போய் அவள் வீட்டை திறந்து விட்டார்.

ஜான்வியை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அவளின் கட்டிலில் படுக்க வைத்தான்!

அங்கிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் லேசாக தெளித்து எழுப்ப முயன்றான்.

“டேய் இந்த தண்ணீ வேண்டாம் பழசு, நான் வீட்டில் போய் வேற எடுத்துட்டு வரேன்” என்று கனகு வெளியே சென்று விட்டார்!

பரணி முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் நினைவுக்கு வந்தவள், தன் முன் உட்கார்ந்திருந்த பரணியை வேகமாக இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

“ஏய் என்ன இது?” அவன் திகைத்துப்போய் கேட்க,  “உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு சொன்னாங்க உங்களுக்கு ஒண்ணும் இல்லையே?”

“எனக்கு ஒண்ணுமே இல்லை, பரத் தான் பைக்கில் இருந்து ஸ்கிட் ஆகி விழுந்துட்டான். கையில் கொஞ்சம் பிராக்சர் ஆகிடுச்சு! நம்ம ஹாஸ்பிட்டல தான் அட்மிட் பண்ணியிருக்கோம்” என்று அவனை வார்த்தைகளை சொல்லி முடிக்க விடாமல் பண்ணியது ஜான்வியின் அதிரடி செயல்!

அவள் தன் இதழ்களின் மூலம் அவனின் இதயத்தை அடைய முயற்சிப்பவள் போல  அவன் இதழ்களில் ஆழ்ந்த முத்த யுத்தம் செய்ய தொடங்கி விட்டாள்!

பரணி அப்படியே பேச்சிழந்துப் போய் விட்டான்!

இவள் வாயைத் திறந்து தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டேன்கிறாள் என்று அவன் வருத்தப்பட்டது போக, இப்போது அவனையே பேச விடாமல் அல்லவா செய்து விட்டாள்!

அவன் கைகளும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டன!

“ஜானும்மா.. இந்தா தண்ணீய கொஞ்சம் குடி, செல்வி பின்னால டீ போட்டு  எடுத்துட்டு வருவா” என்றபடியே உள்ளே நுழைந்த கனகுவுக்கு ஒரே ஷை ஷையாய் (Shy)போய் விட்டது!

அவர் கனடா சென்ற போது ஆரம்பத்தில் இப்படிப் பட்ட ஓரிரு காட்சிகளை அவர் பார்த்து கூட இருக்கிறார்!

ஆனா அவங்க எல்லாம் வெள்ளைக்காரங்க! இங்கே அவரின் பேரன் பேத்தியை, இப்படிக் கண்டவுடன், அவருக்கு கூச்சமாக போய் விட்டது!

கொஞ்சம் குரலை உயர்த்தி ,”ஜானும்மா..” என்று அழைக்க, அவரின் குரல் கேட்டு விலகினர் பரணியும் ஜான்வியும்!

இப்போது ஜான்விக்கு ஒரே வெக்கமாக போய் விட்டது!

“அய்யோ என்ன பண்ணி வச்சுட்ட ஜானு, பரணி என்ன நினைப்பான் உன்னைப் பத்தி! கனகு பாட்டி வேறே பார்த்து இருக்குமோ!” அவளுள் செல்லமான அவஸ்தை!

கனகு உள்ளே வந்தவுடன், “டேக் கேர்” என்று மட்டும் சொல்லி விட்டு, பரணி அவசரமாய் வெளியேறிவிட்டான்!

அவனுக்குமே கொஞ்சம் வெட்கமாக போய் தான் இருந்தது, கூடவே கொஞ்சம் சந்தேகமும், ஒரு வேளை கனகு ஆத்தா பாத்து கீத்து இருக்குமோ, என்று!

உள்ளே வந்த கனகு, ஜான்வியைப் பார்த்து, “என் பேரப்பிள்ளைங்க சந்தோசத்துக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்டி என் ராசாத்தி!” என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினார்!

அவரின் அடுத்த ப்ளானில் அவ்வளவு ரிஸ்க் இருக்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!