Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 20 2

கௌசி  வந்ததில்  இருந்தே. குருவம்மாளிடம் பேசுவதை குறைத்து கொண்டான். குருவம்மாள் எதாவது கேட்டால் சுந்தரிடம் சொல்லி செய்ய சொல்லுவான். குருவம்மாள் பல முறை பேரனை  முகத்தையாவது காட்டு என்று சொல்லி இருக்க. கோடி துருவாவை குருவம்மாளிடம்  காட்டியதே இல்லை . இன்று தனது  உயிரான கௌசியை தன் பிள்ளைகளை  காப்பாற்றி குடுத்துவிட்டு சென்ற குருவம்மாளை நினைத்து வருந்த.

கௌசி இருந்த அறையில் இருந்த டாக்டர்   வந்து  சுந்தரையும் ,கோடியையும் பார்த்து   பேசன்டோட ஹஸ்பென்ட் என்று கேட்க. கோடி நான் தான் சார் என்று முன்னாடி  வர. குழந்தையை பார்த்தவர் , குழந்தை நார்மலா இருக்கு.யாரும் லேடிஸ் இல்லையா  என்றவர். உங்க வைப்புக்கு  கழுத்தில் தையல் போட்டு இருக்கு பேச கொஞ்சம் கஷ்ட படுவாங்க.கழுத்து எலும்பு  லைட்ட கிரக்  ஆகி இருக்கு .  கழுத்துல பெல்ட்டு   போட சொல்லி இருக்கேன் இரண்டு  மாசம் ஆன சரியாகிறும். குழந்தையை ஆபரேஷன்  பண்ணி தான்  எடுத்தோம்.  இப்போ  ஐ,சி.யூ  இருக்கட்டு ஒரு  இரண்டு நாள் கழிச்சி  நார்மல்  ரூம் மாத்திங்கலாம்.



Advertisement

கோடி  டாக்டரிடம்  நன்றி சொல்ல . என்க்கிட்ட  ஏன்ப நன்றி சொல்லுற உங்க  வைப்ப  கூட்டி வந்தாங்கல  அவங்க  கிட்ட  நன்றி சொல்லுங்க. ஒரு 10 நிமிசம்  லேட்டா  வந்து இருந்த  இரண்டு பேரையும்  காப்பாத்த  முடிஞ்சுருக்காது.

ஆமா ,அவங்க எங்க?  உடனே பணம் கட்டி சைன் போட்டு  எப்படியாவது  என் மருமகள காப்பாத்துக்க  என்று நர்ஸ் காலில் விழுந்து . நானே பாத்துக்குறேன் என்று  கேட்டாங்க.  அவங்க அப்படி சொல்லவும் தான் நாங்க உடனே ஆப்ரேஷன் பண்ணி இரண்டு பேரையும் காப்பாத்தினோம். இல்லண்ணா ஹஸ்பென்ட் சைன்  இல்லமா நாங்க டிரிட்மென்டை ஆரம்பிச்சு இருக்க மாட்டோம் என்றவர் கோடியின்  தோளில் தட்டி விட்டு சென்றார்.

Advertisement

Advertisement

சுந்தரின் மனைவி மணிமொழி  ஹாஸ்பெட்டல் வந்து இருந்தாள். அத்தை சொன்னாங்க என்றவள். கோடியிடம் இருந்த குழந்தையை  வாங்கி கொள்ள.

கோடி  கமலத்துக்கு போன் போட்டு கௌசிக்கு  குழந்தை பிறந்து இருக்கு என்ற விசயத்தை  மட்டும் சொல்ல.இரண்டு மணி நேரத்தில் கமலம் வந்து இருந்தார்.

Advertisement

முதலில் குழந்தை பார்த்து சந்தோஷபட . பின்பு ஏன் ஐ.சி.யூவில்  வச்சு இருக்காங்க என்று  கேட்க.

சுந்தர்  கமலத்திடம் அனைத்தையும்  சொல்ல.

குருவம்மாள்  இன்று சரியான  நேரத்துக்கு  தன் மகளை ஹாஸ்பெட்டலில்   சேர்க்க வில்லை என்றாள் . தன் மகள் பேத்தி  இன்று  இல்லை  என்று நினைத்தவர். மகளை சென்று பார்த்து வர. கௌசி மயக்கத்தில் இருந்தாள். பின்பு பேத்தியை பார்க்க பசியாற்ற என்று நேரம் செல்ல.  கமலத்துக்கு  என்ன மாதிரியான  நிலையிது  என்று  புரியவில்லை. குருவம்மாள் மீது  எவ்வளவு கோபம்  இருந்தது . இப்போது  அவர்  செய்த செயலால் எல்லாம்  பின்னுக்கு போகின.

தன்  மகளை காப்பாத்தி  குடுத்தவருக்கு  என்ன  செய்ய  போகிறோம்  என்றவர் .மன்னிப்பு யாரை  யாரு  மன்னிப்பது. அவர், அவர் மனதில்  அவர்கள்  நல்லவர்கள்.

இங்கே  நீ கெட்டவன்  ,இப்படி  ஏன் நடந்து  கொண்டாய்  என்றால்.அவனின் பார்வையில்   அவன் செய்தது  சரி  என்று சொல்லுவான்.

கௌசி  கண்விழிக்க. டாக்டர்  வந்து   பார்த்து விட்டு  ஸ்டைன்  பண்ணிக்காதீங்க என்று சொல்லி விட்டு செல்ல.

கௌசி  தன் வயிறை தொட்டு பார்த்தவள். என்ன குழந்தை பிறந்து இருக்கு , எப்படி இருக்கு என்று   அறிந்து  கொள்ள  தன் உறவுகளை தேட.

முதலில் வந்தது கோடிதான். கௌசி  விழித்து இருப்பதை பார்த்தவன்.கௌசியின் அருகில்  வந்து   அவளின் தலை கோதி  நெத்தில் முத்தமிட ,அவனின்  கண்ணீர்  துளி கௌசியின் முகத்தில்  பட்டது.

கௌசிக்கு  கோடி  கலங்குவதை  பார்த்தவள்  என்னவென்று  கேட்க தோனா பேசுவதற்கு  கஷ்டமாக இருந்தபோதும் . குழந்தை என்று  மெல்ல  சொல்லி  தன் வயிறை தடவுவதை பார்த்து.

கோடி அம்மா என்றான்.  எங்க அம்மாவை  எனக்கு  பெத்து  குடுத்துறுக்க என்றவன். கௌசியின் அருகில் அமர்ந்து  பெண் குழந்தை என்றவன்.  வேற ரூம்புல  தூங்குற  முளிச்சவுடனே  தூக்கிட்டு வர்ரேன்  என்றவன்.பேசாத  கழுத்தில் தையல் போட்டு இருக்கு  வழிக்குதா என்றான்.

கௌசி இல்லை என்று தலையாட்டியவள் கண்களை  மூடி கொண்டாள். காலையில்  நடந்தது கண்முன்னே வந்தது. என்ன நடந்தது என்றே தெரியும் முன்னே அனைத்தும்  முடிந்து இருந்தது.

  முதலில்  தன் பிள்ளைகளையும், தன்னையும்   காப்பாத்தி கொள்ள வேண்டும். யார்ரவது  தங்களை காப்பாற்ற மாட்டார்களா  என்று எதிர் பார்க்க,குருவம்மாளை பார்த்தவுடன் தன்னை எப்படியாவது  ஹாஸ்பெட்டலில் சேர்த்து விடுவார் என்றே கண்ணை  மூடினாள். ஒரு வேளை அவர் வர வில்லை என்றான். தான்  தன் குடும்பம் என்று நினைத்து பார்க்க கண்ணீல் நீர்வர.

பக்கத்தில்  அமர்ந்து   இருந்த கோடி  கௌசியின்  கண்ணீரை துடைத்து விட்டு.   உங்க அம்மாவை வர சொல்லுறேன் என்று  வெளியில் சென்றான்.

கமலம்  மகளை பார்க்க பேத்தியோட  ரூம்பிற்கு வந்தவர். கௌசிக்கு  கழுத்தில்  கட்டு போட்டு இருப்பதை பார்த்தவர். என் பிள்ளைக்கு  எப்படி வழித்திருக்கும் என்று கௌசியை பார்த்து கண்கலங்கியவர். மகளை  தொட்டு  தடவி  குடுத்தவர். வழிக்குதாட என்றார்.

கௌசி இல்லை என்று மகளை பார்க்க , அவளால் முடியவில்லை.

 நர்ஸ்சிடம் சொல்லி  ,கௌசி படுத்து இருக்கும்  பெட்டை  கொஞ்சம்  ஏத்தி  விட்டு  பேத்தியை காண்பித்தார்.

கௌசி மகளை தொட்டு  பார்த்து அழகா இருக்காம்மா என் பொண்ணு என்றவள்  ஆனா முகம் நம்ம வீட்டு ஜாடையில்ல.

கமலம்  ஆமா கௌசி  எல்லோரும் சொல்லுறாங்க உன்  மாமியார் ஜானகி மாதிரி இருக்களாம் . உன் புருஷனுக்கு  அவ்வளவு சந்தோஷம் ,என்க்கிட்டை  பிள்ளையை  குடுக்க  மாட்டிக்கிறாரு என்று  மகளிடம்  புகார் சொல்ல.

கௌசி கமலத்தை பார்த்து சிரித்தவள். துருவா என்று கேட்க  ஐ.சி,யூ அலோவ் பண்ண மாட்டாங்கலாம். நான் கேட்டு துருவாவை அழைத்த

 வர்ரேன் என்றவர். படுத்துக்கோ  என்று பேத்தியை தூங்கி சென்றார்.

ஒரு வாரம் ஆகியது . கௌசி  உடல்  சரியாகி  நார்மல் ரூம்பில்  வந்து இருந்தாள். நாளை கௌசியை வீட்டுக்கு அழைத்து சொல்லலாம்  என்று இருக்க.

கோடி  வெளியில் சந்தோஷமாக இருந்தாலும். மனதில்  ஏதோ   நினைத்து வருந்துவது போல தெரிய.

ஆனால் மனைவியையும் ,மகளையும் விட்டு அகல வில்லை முழுநேரமும் இவர்களுடன் தான்.

கௌசியை  ஹாஸ்பெட்டலில் இருந்து  வீட்டுக்கு அழைத்து செல்ல.  சிவா கார்  ஓட்ட முன்னாடி கமலம்  குழந்தையை மடியில் வைத்து அமர்ந்து கொள்ள. பின்னாடி  கோடியும், கௌசியிம் அமர்ந்து  இருக்க.துருவா இராஜாசெல்வத்துடன்  டுவீலரில் வீட்டுக்கு சென்று விட .

கமலம் இந்த பக்கம் போ என்க. கமலம் சொல்லிய படியே  சிவா கார் ஓட்ட. சிவா  காரை நிறுத்தியது குருவம்மாளின்  வீட்டில் தான்  கோடிக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கௌசிக்கு கமலம் செய்வது  சரி என்று  தோன்ற  காரில்  இருந்து  இறங்கினாள்.

காரின் சத்தம் கேட்டு வந்த குருவம்மாள்  இவர்களை பார்த்து  விட்டு அப்படி  நிற்க.

கமலம்  குருவம்மாளிடம்  முதல், முதலில்   உங்க பேத்தி  மருமக   உங்க வீட்டுக்கு  வர்ராங்க  என்று சொல்ல.

 குருவம்மாள்  வீட்டில் உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து பேத்திக்கும், மருமகளுக்கு சுற்றியவர் உள்ளே வாங்க என்று அழைக்க.  சிவா நீங்க போயிட்டு வாங்கம்மா என்றவன்  காருக்கு சென்று அமர்ந்து விட.

கமலம், கௌசி  ,குழந்தை , எல்லோரும் குருவம்மாளின் வீட்டினுள்  செல்ல.

கோடி  வெளி வாசல்  திர்னையில் அமர்ந்து  கொண்டான்.

கமலம்  குருவம்மாளிடம் குழந்தையை கொடுத்து .  இரண்டு பேரையும்  வாழ்த்தி திருநீர்  பூசி விடுங்க என்று  சொல்ல.

சரி என்றவர். பழனியை சக்கர நாற்காலியில்  அமர வைத்து அழைத்து வந்து குழந்தை காட்டி நம்ம ஜானகி அக்கா மாதிரியே . என்று பழனியிடம் குழந்தையை  காட்ட .

பழனி ஆமாம் என்றார். மனைவியின் புகைபடத்தை பார்க்க இருவர் முக வடிவம் ஒன்று போல இருந்தது.

குருவம்மாள்  பிள்ளைகளுக்கு  திருநீர் பூசி விடுங்க என்று பூஜை அறையில் இருந்து விபூதி  எடுத்து வர.

பழனி   பேத்திக்கும்   கௌசிக்கும் திருநீர் பூசி விட்டு கோடி எங்கே என்று  தேட.

அவன் வெளி வாசல்  திர்னையில் அமர்ந்து இருக்க.

பழனி  கோடி என்று அழைக்க. உள்ளே செல்ல மனம் வராமல் வெளியில் அமர்ந்து  இருக்க.

குருவம்மாள்  வெளியே வந்தவர். மகனை பார்த்து  கோடி இந்த அம்மாவை மன்னிங்க மாட்டியா  என்று கலங்க.

குருவம்மாளை நிமிர்ந்து பார்க்க மகன்  கண்ணீல் கண்ணீரை  கண்டவர்.

எய்யா  ,என் சாமி  என்று கோடியை அணைத்து கொண்டார். உள்ள வாயா என்று  அழைத்து சென்றார்.

பழனி மகனுக்கு  திருநீர்  பூசி விட்டு  எல்லோரும்   எந்த குறையும்  இல்லாமல் நல்ல இருக்கணும் என்று வாழ்த்த.

கோடிஸ்வரன்  கமலத்தை  பார்த்து  கைகூப்பி நன்றி சொல்ல வேண்டாம் தம்பி  என்றார் குருவம்மாள்.

 தப்பு  இங்கே அனைவரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தன் மகள் , தன் மகன்  என்று அவர்களுக்கு  மட்டும்  நியாயம்  செய்பவர்கள் .

அடுத்த வீட்டில் இருந்து வந்து வாழும்  மருமகளை அவர் பிள்ளைகளை  போல்  யாரும்  பார்ப்பது இல்லை.

எப்போது  தன் மருமகளை  மகளாக  எந்த மாமியார்  பார்க்கிறார்களோ  அப்போது தான்  பிரச்சனை குறையும்.

5 ஆண்டு கழித்து கோடியில் வீட்டின் வாசலில் கோடியின் மகள்  ஆதினி கோடி ,அமர்ந்து  இருக்க.

 கோடி காம்புளக்ஸ் சென்று விட்டு வீட்டின்   கேட்டை  திறந்து   பைக்கை வைத்து நிமிர . கோடி வீட்டின் இளவரசி ஆதினி கோடியை பார்த்து. வாங்கிட்டு வந்துதீங்க என்றாள்.

கோடி என்ன ஆதிகுட்டி   என்றவன்.பின்பு நியாபகம்  வர சாரி என்றான்.

உங்க கிட்ட காலையில்  என்ன சொன்னேன்  ஆரஞ்சு கலர் சாக்ஸ் வாக்கிட்டு வாங்கன்னு சொன்னேல. ஏன் வாங்கிட்ட வரல.

கோடி சாரிடா ஆதினி குட்டி மறந்துட்டேன் நாளைக்கு வாங்கிட்டு வர்ரேன்.

நீ பேட் நைனா நல்ல அப்பாவே இல்ல நான் கேட்டத வாங்கி தரல.

நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன் என் நைனாவுக்கு காலில் அடி பட்டு வலி இருக்கு அது சரியாகும்.  எங்க நைனா கால் வழிக்குன்னு சொன்னாரு அவருக்கு சரியாகனுமுன்னு  வேண்டிக்கிட்டே , இப்ப சொல்லுறேன் உங்களுக்கு கால் நல்ல வழிக்கட்டும்.

துருவா ஆதினி அப்படி  சொல்லாத நைனாட்டா சாரி கேளு.

 நோ அண்ணா , நான் கேட்க மாட்டேன் என்று கோபபடும் மகளை தூக்கி சுத்தியவன் அவன் மறைத்து வைத்து இருந்த  ஆரஞ்சு கலர்  சாக்ஸை மகளிடம் நீட்ட.

ஆதினி அதை வாங்கி பார்த்தவன்   ஐ நைனா  சாக்‌ஸ் என்றவள் தந்தையை அணைத்து முத்தமிட.

துருவாவும் கோடியை  மேல் ஏறிக்கொண்டான்.  இவர் செய்யும்  செயலை பார்த்த  கௌசி சிரித்து கொண்டு  இரவு உணவை  செய்து  கொண்டு  கிச்சனில் இருக்க.

கோடி கிச்சன் வந்து  கௌசியை அணைத்து நிற்க. என்ன  உங்க சின்ன குருவம்மாள் என்ன சொல்லுற.

ஏய்  என்னாடி பிள்ளையை  அப்படி சொல்லுற.

பின்ன உங்க மக   அப்படி தானே இருக்க.  பேசுன சரவெடி தாங்க முடியல.

 ஏய் என் குட்டி மின்னல் டி அவ..

ஆமா அப்போ நான். என் பெரிய மின்னல்  என்று  கோடி கொஞ்ச.

நைனா என்று ஆதினி்  கூப்பிட .         கோடி    வந்துட்டேன் என்று  மகளிடம்   வேகமாக  போக.

 மகளிடம்  போகுமும்  கோடியை பார்த்து இருந்தாள்   கோடிக்கு எல்லாம்   அவன் மகள், மகன் , மனைவி   மட்டுமே. கௌசிக்கு  எல்லாம் கோடிஸ்வரன்  மட்டுமே. இவர் வாழ்வில்  இனி சந்தோஷம் மட்டுமே……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!