Skip to content
Post Views: 4,857
நீங்காத நினைவு நீ
Advertisement
அத்தியாயம் = 1
Advertisement
காலை 10 மணி விருதுநகரில் உள்ள தனது கடைக்கு வந்த தானிய மூட்டைகளை. மூடை தூக்கும் தொழிலாளர்கள் மூடையை இறக்கி வைத்து கொண்டு இருக்க. மூடைகள் இறக்கு வதை பார்த்து கொண்டு இருந்தான் ஸ்ரீ ஜெயம்.
Advertisement
அவனின் பெயர் ஸ்ரீஜெயரத்தன ராஜ், ஆனால் அவனை எல்லோரும் ஸ்ரீஜெயம், என்றே அழைப்பார். வயதோ 48 இன்னும் திருமணம் ஆக வில்லை, காதல் தோல்வி என்று சொல்லலாம்.
Advertisement
உடன் பிறந்தவர்கள் 4 பேர், இரண்டு பெண் பிளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள் , ஸ்ரீஜெயரத்தன ராஜ் மூன்றாவது. ஒரு அக்கா, அண்ணன், ஒரு தம்பி,தங்கை இவனோடு பிறந்தவர்கள்.
ஸ்ரீஜெயமின் தந்தையும், தாய்யும் இறந்து விட. அவனின் அக்கா நளினி தம்பியின் பக்கத்தில் வீடு கட்டி வந்து விட்டார். தாய் , தந்தை இறந்ததில் இருந்து தம்பிக்கு எல்லாம் நளினியே.
இன்னொரு தங்கை பெங்களூரில் திருமணம் முடித்து கொடுத்து இருக்க, தம்பி அருப்புக்கோட்டை இருக்கிறார், இவர்களுக்கு மூத்தவர் சென்னையில் இருக்கிறார்.
ஸ்ரீஜெயமின் போன் ஒலித்தது. அவனின் அக்கா நளினி அழைத்து கொண்டு இருக்க.
ஸ்ரீஜெயம் போனை எடுத்து என்ன அக்கா என்று கேட்க.
மணி 10 ஆச்சு இன்னும் நீ சாப்பிட வரல.
இதோக்கா இன்னும் 20 நிமிசத்துல வர்ரேன். லோடு இறக்குறாங்க, பில் போட்டு வர்ரேன்.
சரிடா என்று நளினி போனை வைத்தார்.
ஸ்ரீஜெயம் எல்லா மூடைகள் இறங்கியவுடன் பில் போட்டு விட்டு . அவனின் கடையில் வேலை செய்யும் சேகர் வர. கடையை பார்த்துக்கோ , அக்கா வீட்டுக்கு போய்யிட்டு சாப்பிட்டு வர்ரேன் என்று கிளம்பினான். ஸ்ரீஜெயம் டிகிரி படித்து முடித்து தன் தந்தையின் தொழில் நவதானிய வியாபாரத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
ஸ்ரீஜெயம் நவதானியங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்கிறார்.
அறுவடை தை முதல் , சித்திரை வரை நடக்கும். அப்பொழுது ஸ்ரீஜெயமின் குடோன்கள் நவதாணிய மூட்டைகள் நிரம்பி வழியும்.
பிறகு நல்ல வியாபாரிகள் வந்தால் நேரடி விற்பனைக்கு அதிக லாபம் வைத்து விற்றுவிடுவான்.
ஸ்ரீஜெயம் சொந்தமாக ஒரு ரைஸ்மில்லை நடத்தி வருகிறான்.
ஸ்ரீஜெயம் தனது அக்கா நளினி வீட்டிற்கு காலை உணவு சாப்பிட தனது புல்லட்டில் சென்றான்.
தம்பியை பார்த்து நளினி வாடா என்று அழைத்து . சாப்பிட இட்லியும் குடல் குழம்பு கொடுக்க.
ஸ்ரீஜெயம் என்னாக்கா வீடே மணக்குது கறிகுழம்பு வாசம் .
ஆமாடா ! இன்னும் மூணு நாள்ல பங்குனி பொங்கலுக்கு காப்பு கட்டி விடுவாங்க அதான் இன்னைக்கே கறி எடுத்துட்டேன்.
ஸ்ரீஜெயம் மச்சான் வந்து சாப்பிட்டாரா ,
இல்லடா நான் இப்பத்தான் மச்சானுக்கு சாப்பிட சாப்பாடு குடுத்துட்டு வர்ரேன்.
நளினியின் கணவர் தமிழ்அரசன் மளிகை கடை பெரியதாக வைத்துள்ளார்.
ஆமாம் எல்லோரும் பொங்கலுக்கு வர போன் பண்ணிட்டீயா.
ஸ்ரீஜெயம் எல்லோருக்கும் போன் பண்ணி ஆச்சு. உன் தங்கச்சி தான் பிள்ளைகளுக்கு பரிச்சை முடியல பொங்கலுக்கு வர முடியாது. இரண்டு நாள் கழிச்சு தான் வர முடியுமுன்னு சொன்னா.
அப்படியா என்ற நளினிக்கு இரண்டு பிள்ளைகள். பொண்ணை சிவகாசியில் கல்யாணம் பண்ணி குடுத்து இருக்க. அவளுக்கு ஓரு பிள்ளை . இப்போது இரண்டாவது மாசமாக இருக்கிறாள். நளினியின் பையன் அன்பு அரசன், மும்பையில் வேலை செய்துவருகிறான்.
ஸ்ரீஜெயம் அக்காவிடம் அன்பு எப்போ வர்ரான்.
அவன் இப்போ மும்பையில் இல்லடா சிங்கப்பூர் போய் இருக்கிறான். வேலை விசயமா, பொங்கலுக்கு வந்துருவேண்ணு சொன்னான்.
ஸ்ரீஜெயம் அக்காவிடம் அன்பு வந்தா தான் எனக்கு பொங்கலே.
ஏன்டா அப்படி சொல்லுர , நீ தான் வியாபாரிகள் சங்க தலைவர். உன் பார்வையில் தான் பொங்கலே நடக்குது.
எல்லாம் சரி தான். அன்பு வந்து இருந்தா தான் திருவிழாவே கலை கட்டும்.
அது சரி உன் மருமகனை நீ விட்டு கொடுப்பியா. ஏன்டா இந்த அன்பு பயலுக்கு கார்த்திகை வந்த 30 முடிய போகுது. இந்த வைகாசியில கல்யாணம் பண்ணிருலாமா .
ஸ்ரீஜெயம் அன்பு கிட்ட கேளுக்கா.
அவன்டா கேட்டா வேலை இருக்கு , சம்பாதிக்கனும் அப்படியின்னு சொல்லுவான்.
நீ எடுத்து சொல்லுக்கா,
சரி பொண்ணு எங்க பாக்க போற.
தம்பி! பொண்ண அன்புக்கு பிடிச்ச இருந்த போதும்.
முதல்ல நம்ம அண்ணன் பொண்ண அன்புக்கு கேட்கனும். அவன் பொண்ண கொடுத்த பாரவால, இல்லன வெளியே தான் பாக்கனும்.
ஸ்ரீஜெயம் அன்புக்கு போனில் அழைக்க.
தன் தாய்மாமன் அழைப்பை பார்த்தவன். ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க.
நான் நல்ல இருக்கேன்டா. எனக்கு என்ன மூனு வேளை சாப்பாடு என் அக்கா நளினி போடுற ஜம்முனு இருக்கேன்.
ஸ்ரீஜெயம் அன்பு நீ எப்போ வர்ர .
மாமா நான் இப்போ சிங்கப்பூரில் இருக்கேன் . இன்னும் 4 நாள்ல வேலை முடிஞ்சுரும். நேர மும்பை போய்டு எல்லாத்தையும் சப்மீட் பண்ணிட்டு வர்ரேன்.
என்ன அன்பு இப்படி சொல்லுற நீ இருந்தா தான் எனக்கு பலமே.பொங்கலுக்கு எவ்வளவு வேலை இருக்கு. கோவில்ல, நம்ம உறவின் முறை பில்டிங்கில , நம்ம சார்பா ஏகப்பட்ட வேலை இருக்கு.
மாம்ஸ் எவ்வளவு சீக்கிரம் வர முடியுதோ வர்ரேன் மாம்ஸ்.
சரிடா என்று அழைப்பை துண்டிக்க . ஸ்ரீஜெயமிற்கு இன்னொரு கால் வர. ஹலோ சித்தப்பா என்று திவ்யா அரிய நாச்சி போனில் கூப்பிட. ஸ்ரீஜெயமிற்கு யார் என்று தெரியாமல் . யாருமா நீ.
நான் டெல்லியில இருந்து பேசுறேன்.
ஸ்ரீஜெயம் வேணி அக்கா பொண்ணா.
ஆமாம் சித்தப்பா .
சரிடா எப்போ இங்க வர.
நாளைக்கு ஈவ்னிங் வர்ரேன் சித்தப்பா.
சரிடாம்மா வந்துட்டு போன் பண்ணு.
ஓகே ப்பா என்று போனை வைத்தாள் . திவ்யா அரிய நாச்சி. டெல்லியில் பேஷன் டிசைனிங் படித்து முடித்து இருக்கிறாள்.
நீண்ட வருமாக விருதுநகர் பொங்கலுக்கு வரமால் இருக்க இந்த வருடம் கண்டிப்பாக போகவேண்டும் என்று வருகிறாள்.
ஸ்ரீஜெயமிடம் நளினி யாருடா போன்ல நாளைக்கு வரேன்னு சொன்னது.
ஸ்ரீஜெயம் நம்ம தாய் மாமன் பொண்ணு டெல்லியில இருக்காயில்ல கிருஷ்ணவேணி அவளோட பொண்ணு .
யாரு நம்ம நாச்சியா.
ஆமாம் அக்கா. உனக்கு வேணி போன் போட்டாங்கலாம் நீ எடுக்கலயாம் அது தான் எனக்கு போட்டா. நம்மா வீட்டுக்கு தான் வருவா.
சரிடா என்றவர். ஸ்ரீஜெயமிடம் நம்ம திவ்யா அரிய நாச்சியை அன்புக்கு கட்டலாமா.
ஸ்ரீஜெயம் உனக்கும் , அன்புவுக்கும் பிடிச்சா ஓகேக்கா. வேணிட்டா நான் பேசுறேன்.
சரிடா முதல்ல திவ்யா வரட்டும்.
திவ்யா அரிய நாச்சி மதுரை வந்து இறங்கினாள். பங்குனி வெயில் சூடாக இருந்தது. ஸ்ரீஜெயமிற்கு போனில் அழைக்க.
சொல்லுடா எங்க இருக்க.
மதுரை வந்துட்டேன் சித்தப்பா.
ஸ்ரீஜெயம் கார் அனுபுறேன். வைட்டு பண்ணு என்றார்.
திவ்யா நான் பஸ்சுலே வந்துருவேன். சித்தப்பா வழி மட்டும் சொல்லுங்க.
சரிடா என்ற ஸ்ரீஜெயம் .முதலில் மாட்டுதாவணி பஸ் ஸ்டாப் வாட.அங்கே விருதுநகர் பஸ்சில் ஏறி வரனும்.
சரி சித்தப்பா என்றவள். ஒரு ஆட்டோ பிடித்து மாட்டுதாவணி சென்றாள். திவ்யா அரிய நாச்சி பார்பதற்கு வெள்ளை நிறம், தோள் வரை முடியை விரிந்து விட்டு இருந்தாள், முட்டி வரை குட்டை ஸ்கட், டி.சர்ட் மேல ஓவர் கோட், கண்ணீல் கூலர் . கழுத்தில் பாட்டு கேட்க இயர் பேட் மாட்டி, கையில் ஒரு பெரிய ட்ராலி பேக் , சிறிய பேகை இழுத்துக்கொண்டு வந்தாள்.
அங்கே ஒரு சிலர் மதுரை டு சிவகாசி என்று சத்தம் மிட.
திவ்யா அவரின் அருகே சென்று இந்த பஸ் விருதுநகர் போகுமா என்று கேட்க.
போகும், போகும் ஏறுமா.
திவ்யா அரிய நாச்சி பஸ்சில் ஏறி பார்க்க ஒரே ஒரு சீட்டு மட்டும் காலியாக இருக்க அங்கே சென்று அவளின் பைகளை மேலே வைத்தவள் காலியா இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள். ஏற்கனவே ஒருவன் சன்னல் ஓர சீட்டில் அமர்ந்து இருக்க. திவ்யா அவனை தொடாத வாரு அமர்ந்து இருந்தாள்.
திவ்யா அரிய நாச்சி பஸ்சில் அமர்ந்து பக்கத்தில் உள்ளவனை பார்க்க . அவனோ போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருக்க. அவள் பஸ்சில் உள்ளவரை வேடிக்கை பார்க்க.திவ்யாவின் போன் ஒலித்தது போனை ஆன் பண்ணியவள். ஹாய் மம்மி ஹையம் இன் மதுரை பஸ் என்று சத்தமாக ஆங்கிலத்தில் பேச.
பக்கத்தில் உள்ளவன் இவளை பார்த்து உச் என்று சத்தம் போட.
திவ்யாவுக்கு அப்பொழுது தான் சத்தமாக ஆங்கிலத்தில் பேசி விட்டோம் என்று மெதுவாக பேச. திவ்யாவின் தாய் வீட்டுக்கு போனதும் போன் போடு என்று போனை வைக்க. திவ்யா பக்கத்தில் உள்ளவனிடம் சாரி கேட்கா.
கை தூக்கி ஓகே என்றவன். மறுபடியும் போன் பேசிக்கொண்டிருக்க.
திவ்யாவுக்கு பஸ்சில் புழுக்கமாக இருந்தது, ஆட்கள் வேறு ஏரியவண்ணமே இருக்க. சூடு தாங்காமல் தனது ஓவர் கோர்டை கழட்ட.
அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஆண்டவர் கனிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அவள் ஆட்டோவில் இருந்து இறங்கும் பொழுதே ஆண்டவர் கனி பார்த்து விட்டு தான் பஸ்சில் வந்து ஏறி அமர்ந்து தான். நல்ல அழகான பொண்ணு என்ன கலர் , கொஞ்சம் நேரம் நின்னு பார்க்க முடியுத, தெரிஞ்சவன் ஏவனாவது பார்த்த அவ்வளவு தான் மானம் போச்சு என்று புலம்பிக் கொண்டே பஸ்சில் ஏறி அமர்ந்து தான்.
திவ்யா அரிய நாச்சி யாரிடமோ பஸ்சை பத்தி விசாரித்து விட்டு . அவன் பஸ்சில் ஏறிய போதே குஷியாகி விட்டான் ஆண்டவர் கனி.
அது மட்டுமா அவளே வந்து தன் பக்கத்தில் வந்து அமர்ந்தை. ஆண்டவர் கனியால் நம்ப முடியா வில்லை , அழகான பொண்ணு தன் அருகில் திவ்யா அரிய நாச்சியின் சென்ட் வாசனையும் அவளின் வாசனையும் சேர்ந்து அவனை ஏதோ பண்ண. அதனை அனுபவிக்க முடியாமல் ஒருவன் போன் போட்டு தொல்லை பண்ணி கொண்டு இருக்க.
திவ்யா ஓவர் கோர்டை கலட்டி கையில் வைத்து கொள்ள.
ஆண்டவர் கனிக்கு அய்யோ என்று இருந்தது. திவ்யா சீவ்லெஸ் டி.சர்ட் அணிந்து இருக்க. அது வேற ஏற்ற இறக்கமாக இருக்க. இவனுக்கு தான் தர்ம சங்கடமா இருந்தது.
ஆண்டவர் கனி பஸ்சில் உள்ளவர்களை பார்க்க. நிறைய பேர் திவ்யாவை பார்க்க. சீட்டை விட்டு எழுந்தவன். அவளை சன்னல் ஓரத்தில் அமர சொல்ல. திவ்யா தாங்யூ என்றவள். சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டாள்.
ஆண்டவர் கனி பஸ்சில் உள்ளவர்களை பார்த்து முறைக்க. திவ்யா அரிய நாச்சியை பார்த்த சிலர் திரும்பி கொள்ள.
ஆண்டவர் கனிக்கு மறுபடியும் போன் வர அவன் பேசிக்கொண்டு இருக்க. கண்டக்டர் வந்து அனைவரிடமும் எங்கே போகவேண்டும் என்று டிக்கேட் கொடுக்க.
திவ்யா விருதுநகர் என்று டிக்கெட் வாங்க.
அங்கே உள்ளவர்கள் அனைவருமே டிக்கெட் எடுக்க. ஆண்டவர் கனிக்கு மட்டும் டிக்கெட் எடுக்காமல் அமர்ந்து இருக்க. திவ்யா ஆண்டவர் கனியின் அருகில் வந்து நீங்க டிக்கெட் எடுக்கல என்றாள்.
ஆண்டவர் கனி போன் பேசிய படியே ஓகே என்றான்.
திவ்யா மறுபடியும் நீங்க என்று.
ஆண்டவர் கனி போனை கட் பண்ணி விட்டு . என்ன உனக்கு பிரச்சனை என்றான்.
அவளோ நீங்க டிக்கெட் எடுக்கல.
அது எனக்கு தெரியும் என்றவன்.இது என் பஸ் என்று சொல்ல.
உங்க பஸ்சுன, டிக்கெட் வாங்க மாட்டீங்களா என்று வேற கேட்க.
ஆண்டவர் கனிக்கு அவள் கேட்ட விதம் சிரிப்பு வர, அதை மறைந்தவன். அவளை முறைக்க.
திவ்யா அரிய நாச்சி சாரி நீங்க போன் பேசும் போது உங்கல டிஷ்டர்ப் பண்ணிட்டேனா என்றவள். ஆண்டவர் கனியிடம் இந்த பஸ் எப்போ கிளம்பும்.
இன்னும் 5 நிமிசத்துல.
ஓகே என்றவள். நீங்க எங்கே போகனும் .
அவன் நீ எங்கே போற.
நான் என்றவள் விருதுநகர் போகனும் வந்தா சொல்லுறீங்களா.
ஆண்டவர் கனி சரி என்க.
சன்னல் ஓரம் சாய்ந்து கண்களை மூடி தூங்க.
ஆண்டவர் கனி தூங்கும் அவளை பார்த்து கொண்டு வந்தான். பஸ் வேகமாகச் செல்ல. திவ்யாவுக்கு தாலாட்டு ஆடுவது போல் இருக்க. இரண்டு நாள் சரியாக தூங்காமல் இருக்க. நன்றாக தூங்கியவள். பஸ் வேகமாகச் செல்ல , பஸ் குலுங்கியதால், திவ்யா ஆண்டவரின் கையை பிடித்து கொண்டு அவனின் தோள் சாய்ந்து தூங்க.
ஆண்டவர் கனிக்கு வாழ்வில் இது மாதிரியெல்லாம் தனக்கு நடக்கும என்று இருந்தது. அத்தனை சுகமாக இருந்தது அவள் தன் மேல் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்து.
டிரைவர் திருமங்கலம், திருமங்கலம் என்று சத்தம் மிட.
திவ்யா அரிய நாச்சி கண் திறந்து பார்க்க ஆண்டவரின் கை பக்கத்தில் தெரிய.அவனிடம் சாரி கேட்டவள். எப்போ விருதுநகர் வரும் என்றாள்.
ஆண்டவர் இன்னும் 1 மணி நேரம் ஆகும்.
திவ்யாவுக்கு நீண்ட பயணம் சோர்வு குடுக்க.அவள் உடலை நெழிப்பதை பார்த்தவன்.
என்னவென்று கேட்க.
திவ்யா அரிய நாச்சி நான் டெல்லியில் இருந்து வர்ரேன் என்றவள். அவளின் மொத்த புராணத்தையும் ஆண்டவர் கனியிடம் சொல்ல.
அனைத்தையும் கேட்டவன். விருதுநகரில் யாரு வீட்டுக்கு வந்து இருக்க.
திவ்யா அரிய நாச்சி எங்க சித்தப்பா ஸ்ரீஜெயம் வீட்டுக்கு அப்பறம் எங்க அத்தை நளினி வீட்டுக்கு பொங்கலுக்கு வந்துருக்கேன்.
இவ்வளவு நேரம் அவள் பேசியதை ஆர்வமாக கேட்டவன்.
திவ்யா இப்பொழுது சொல்லியதை கேட்டவனின் முகம் இறுகியது.
ஆண்டவர் கனிக்கு மனதில் தனது எதிரி வீட்டு பொண்ணா என்றவன். அவனின் சீட்டில் இருந்து எழுந்து கொண்டவன். டிரைவரிடம் சென்று நின்று பேசிக்கொண்டு இருக்க.
திவ்யா ஆண்டவர்கனியை பார்த்து ஏதோ சொல்ல வர.
அவனோ இவள் பக்கம் கூட திரும்ப வில்லை
ஆண்டவர் கனி யாரை இவ்வளவு நாள் எதிரி என்று நினைத்து இருந்தானோ. அந்த வீட்டு பெண்ணிடம் , ஆசை கொண்ட மனதை வெறுத்தவன். அவளை பார்க்காமல் நின்று இருக்க.
விருதுநகர், விருதுநகர் என்று கண்டக்டர் கத்த. திவ்யா அரிய நாச்சி பேக்குகளை எடுத்து கொண்டு கீழே இறங்கி நின்றவள் பார்ப்பதற்கு பஸ் ஸ்டாப் போல தெரியலை என்று பார்க்க. ஆண்டவர் கனி இறங்கி நடப்பது தெரிய அவனின் பின்னே சென்றாள். ஹலோ சார் என்று திவ்யா ஆண்டவர் கனியை கூப்பிட.
திரும்பி பார்த்தவன் என்னவென்று திவ்யாவை முறைக்க.
திவ்யா பஸ் ஸ்டாப் எங்கே ? இது பஸ் ஸ்டாப் மாதிரி தெரியல.
அதோ பார் என்று கொஞ்சம் தள்ளி இருந்த விருதுநகர் பஸ் ஸ்டாபை காண்பித்தவன். மதுரை பஸ் இங்கே தான் நிக்கும். விருதுநகர் பஸ் ஸ்டாபின்னுல் வரமாட்டாங்க.
சரி என்றவள் ஆட்டோ ஸ்டான்டு என்று கேட்க.
அதோ என்று சொல்லி கிளம்ப.
திவ்யா தாங்யு சார் என்றவள் உங்க நேம் என்னா சார் .
ஆண்டவர் கனி எதற்கு என்றான்.
ஏன் சார் ஒரே ஊரு, நீங்க எனக்கு எல்பு பண்ணி இருக்கீங்க ஒரு நன்றி சொல்ல என்று கேட்டவளை பார்த்தவன்.
தூரத்தில் ஸ்ரீஜெயம் வருவதை பார்த்தவன். அதோ உங்க சித்தப்பா வருரார் அவர் கிட்ட கேளு என்றவன் நடக்க.
ஸ்ரீஜெயம் திவ்யாவின் பக்கத்தில் வந்து புல்லட்டை நிறுத்த.
சித்தப்பா என்றவள். ஆண்டவர் கனி நடந்து செல்வதை காண்பித்து யாரு சித்தப்பா அவங்க. முதலல் நல்லா பேசுனாங்க பஸ்சுல.நான் உங்கல பத்தி சொன்னவுடனே கோபமா பேசுறாங்க.
யாரு என்று ஸ்ரீஜெயம் ஆண்டவர் கனியை பார்த்து இவனா. அவன் ஆண்டவர் கனி , எக்ஸ் ஊர் தலைவர் பையன் என்றவர். அவன் உன் கிட்ட பேசுனானா.
ஆமாம் சித்தப்பா. விருதுநகர் எப்போ வருமுன்னு கேட்டேன் பேசுனாங்க.
சரி என்றவர் வண்டியில் ஏறுமா ஆண்டவர் கனியை பார்த்து கொண்டே அவங்க மேல் ஊரு காரங்க, நம்ம கீழ் ஊரு காரங்க. அது தான் அவன் உன்கிட்ட பேசல.
ஆனா நம்மா எல்லோரும் ஒரே வகுப்பு தானே .
ஆமாம் ! ஆனா அவனுகளுக்கு மேல் ஊரு காரனுங்கன்னு கொஞ்சம் கெத்து அவ்வளவு தான்.
ஸ்ரீஜெயம் திவ்யா அரிய நாச்சியை நளினியின் வீட்டில் விட்டவர்.நைட் வர்ரேன்மா என்று கிளம்பினார்.
ஸ்ரீஜெயமின் சத்தம் கேட்க வந்த நளினி திவ்யாவை வாடா இப்போ தான் வந்தியா .
ஆமாம் அத்தை.
உள்ள வா என்ற நளினி. திவ்யா அரிய நாச்சியை நீண்ட வருடம் கழித்து பார்க்க. பிள்ள அழகா இருக்க. நம்ம அன்பு பேசி கல்யாணம் பண்ணலாம். நளினி திவ்யாவை போய் குளித்துவிட்டு வாடா சாப்பிடலாம் என்று சொல்ல.
சரி அத்தை என்றவள் அன்பில் ரூம் செல்ல.
நளினி நாளை டெல்லிக்கு போன் போட்டு பேசனும் வரும் வைகாசி மாசத்துல அன்புக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் பண்ணனும்.
விதியோ திவ்யாவின் தலையில் ஆண்டவர் கனி என்ற பெயரை எழுதி இருப்பதை யார் அறிவார்….
error: Content is protected !!