Skip to content
Post Views: 1,604
அத்தியாயம் 17
அசோக் எச்சரிக்கை செய்ய செய்யவே அந்த பெண் சிங்கம் சுற்றி வர அதன் அருகே இரு குட்டிகள் நின்றது. அவளிடம் அதை மட்டும் பார்க்குமாறு சைகை செய்தான். அந்த சிங்கம் ஒருவேளை எட்டிப் பிடித்தால் வண்டிக்குள் வந்துவிடுமா என்ற பயம் இருக்க வைஷ்ணவி அச்சமும் ஆச்சர்யமும் கலந்தக் குரலில் அவனிடம் கிசுகிசுத்தாள்.
“அது தாவி உள்ள வந்துடுமா அசோக்?”
அவளது கேள்விக்கு
Advertisement
“நீ இப்படியே பேசிட்டு இருந்தா கண்டிப்பா உள்ளே வரும்” என்றான் அசோக்.
அவன் சொன்னதும் வைஷ்ணவி வாய் பொத்தி அமைதியாக இருக்க அசோக் அவளது கரம் பற்றி அவளது சுருங்கிய புருவங்களைப் புன்னகையுடன் நேராக்கினான். அந்த கணம் அவளது இதயம் இருமடங்காக துடித்துப் பின் இயல்பாக அசோக் அவளை வேறுபக்கம் பார்க்குமாறு கைக் காட்ட அங்கே அந்த சிம்மம் இரு குட்டிகளுடன் சிறிது நேரம் விளையாடியது. ஆண் சிங்கம் அவர்களை கவனித்துக் கொண்டே சற்று தூரத்தில் இருந்த அந்த பாறையின் மேல் நளினமாக கம்பீரமாக அமர்ந்திருந்தது.
அசோக் பத்து நிமிடங்களுக்கு மேல் அந்த வண்டி அங்கேயே நிற்க நிறைய புகைப்படங்கள் எடுத்தான். அந்த சிங்க குடும்பம் தாண்டி வண்டி மெல்ல நகர்ந்து போக வைஷ்ணவி அவனிடம் திரும்பினாள்.
Advertisement
“இப்படியே திரும்பி இந்த வண்டியை ஹோட்டலுக்குப் போக சொல்லிறியா! பயமா இருக்கு அசோக்!”
Advertisement
வைஷ்ணவி சொல்ல அசோக் கலகலவென சிரித்தான்.
“இதுக்கே பயந்தா எப்படி வைஷூ? இன்னும் நிறைய இருக்கு! இது சும்மா ட்ரைலர் தான் அம்மா மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு!”
அசோக் சொல்ல அந்த வண்டி செல்ல செல்ல சுற்றிலும் வர காடுகள் தாண்டி அங்கங்கே மரங்கள் இருந்தது. அதில் ஒரு மரத்தைக் கண்டதும் அந்த வண்டி விற்க இந்த தடவை யாரு என்பது போல் அங்கு இங்கும் பார்த்தாள் வைஷ்ணவி. எந்த மிருகமும் தெரியவில்லை மீண்டும் அசோக்கின் காதுகளில் மெதுவாக கேட்டாள்.
Advertisement
“ஏன் இங்கே எதுவுமே இல்லை? இந்த வண்டிக்கு கீழே அனகோண்டா பாம்பு போகுதா?”
அவள் கேட்க அசோக் தலை மேல் கை வைத்தான்.
“அனகோண்டா பிரேசில் காட்டிலத் தான் இருக்கும் வைஷூ! இது சவானா காடு ஆப்பிரிக்கா!”
அசோக் சொல்லி இருபுறமாகத் தலையாட்டி உதட்டைப் பிதுக்க, அகிர்டா விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தான். வைஷ்ணவி அதைக் கவனிக்காது அசோக்கிடம் பொரிந்துத் தள்ளினாள்.
“உன் ஜிகே எல்லாம் இப்ப நான் கேட்கல, எதுக்காக இந்த வண்டி எதுக்காக நிக்குது?”
மீண்டும் கிசுகிசு குரலில் வைஷ்ணவி கேட்க, அசோக் அவளைப் பார்த்தான்.
‘பரவாயில்ல எவ்வளவு வலிச்சாலும், ஏமாற்றம் ஆனாலும் இவளோடு இருந்துக்கலாம். இவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு, இவளுடைய சில சமயக் குழந்தைத்தனத்திற்கு அடிமையாகி, இவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விடலாம்’
அவன் மனது நினைக்க, அவள் அவனது தோளைக் கிள்ளினாள்.
அசோக் திடுக்கிட்டு அவளைப் பார்க்க அவள் சிரித்தாள். மறுநொடி அவள் முகத்தை அழகாக ஏந்தினான் அசோக். அந்த செயலில் வைஷ்ணவி திடுக்கிட்டிருக்க, அவள் கண்கள் நேராக அவனது முகம் நோக்கி இருந்தது. அடர்ந்த புருவங்கள் அதன் கீழ் கூர்மையான கண்கள் உதடுகள் தான் தடிமனில்லாது சிறிதாக இருந்தது.
‘சரியான பூட்டுவாய்’
அவள் மனசுக்குள் கேலியாக நினைத்துக் கொள்ள, தடிமனான உதடுகள் இல்லாததால் மீசை இல்லாமல் வடிவாக இருந்தது அசோக்கின் முகம். அவள் விழிகள் அகல மெல்ல அவள் முகத்தைத் திருப்பி அந்த மரத்திலிருந்து ஒரு மரத்தை அவள் பார்வைக்கு காட்டினாள்.
ஒரு குடையை விரித்தது போல் அந்த மரத்தின் கிளைகள் இருக்க அந்தக் கிளையை மீண்டும் உற்றுப் பார்த்தாள் வைஷ்ணவி. அந்த கிளையின் மேல் ஒரு சிறுத்தை அமர்ந்திருக்க வைஷ்ணவி கண்கள் விரிந்தது திரும்பி அசோக்கை பார்த்தாள். அசோக் ஆம் என்பது போல் தலையசைக்க, வைஷ்ணவி அசோக்கின் அருகில் நெருக்கி அமர்ந்தாள். அசோக்கின் மனம் வேண்டாம் வேண்டாம் அவன் மனம் சொல்ல சொல்ல அவள் இன்னும் அவனிடம் ஒடுங்கியிருந்தாள்.
“வைஷூ”
அசோக் சொல்ல வைஷ்ணவி நிமிர்ந்தாள். அவன் மார்பின் மேல் அவள் எவ்வளவு தூரம் சாய்ந்திருக்கிறாள் என்பதை அவன் கை விரலால் காட்ட மெல்லத் தன்னை விடுவித்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். பின் பேசினாள்.
“ஏதோ பயத்தில தோள் சாஞ்சுட்டேன். அதுக்கு எதுக்கு இப்படி சும்மா சும்மா சொல்லி காமிக்கிறே?!”
வைஷ்ணவி முறைப்பாகச் சொல்லிவிட்டு நேராக அமர்ந்தாள். அசோக் சிரித்தான் வண்டி ஒரு இடத்தில் போய் நின்றது. சற்று தூரத்தில் மான் வகை கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கடந்து போய்க் கொண்டிருந்தது. அனைவருமே அதை பார்க்க வைஷ்ணவிக்கு அவற்றை நேஷனல் ஜியோகிராபியில் திரையில் படமாகப் பார்த்ததாக தோன்றியது. வைஷ்ணவி பார்க்க பார்க்கவே பெரும் கூட்டம் அங்கிருந்த நீர் நிலைக்குள் இறங்கி மறுபுறம் சென்றது. அசோக் அதை காண்பிக்க ‘ப்பா என்ன அனுபவம் அது! நேஷனல் ஜியோகிராபியில் கண்டிருந்த காட்சியை கண் முன்னே நேரில் காண்பதெல்லாம் அவை புழுதியைக் கிளப்பி நகர்ந்தது. அந்த குளத்தின் சில மான்கள் தண்ணீர் குடிக்க இறங்க முதலைகள் அங்கிருந்து நிஜத்திலேயே ஒரு மானை பிடித்து உண்பதைக் கண்முன்னே நேரடியாகக் கண்ட வைஷ்ணவி காட்சியின் கொடூரத்தில் கண்களை இறுக மூடி அவன் தோளில் புதைந்துக் கொண்டாள். அசோக்கின் மனம் அவன் உருவாக்கிய மன வேலிகளை எல்லாம் வெட்டி எறியத் தொடங்கியது.
‘முடியாது இவளிடம் நான் விலகி இருக்கவே முடியாது இவள் ஈர்ப்பு விசையின் மொத்த உருவம். என் சாபமான வரம்’
அசோக் தன் நினைவுகளைத் தலையை சிலுப்பிக் கொண்டு அடக்கியவன் அவளை திருப்பி வேறு ஒரு காட்சியைக் காண வைத்தான்.
“கண்ணை மூடிட்டு இருக்காதே வைஷூ! இதெல்லாம் திருப்பிப் பார்க்கவே முடியாது!”
அசோக் சொல்ல வைஷ்ணவி மறுத்துப் பேசினாள்.
“பாவம் அசோக். என்னால முடியல!”
“வைஷூ இது இயற்கையோட செலக்சன். அந்தப் பெண் சிம்மம் ஒரு மானையாவது வேட்டையாடி ஆகணும். இல்லைனா அதோட இரண்டு குட்டி சாகும். திஸ் இஸ் சர்வைவல் ஆஃப் த விட்டஸ்ட்”
“ஏன் அசோக் அதுக்கு சிங்கம் இல்லையா?”
வைஷ்ணவி கேட்க,
“அது இப்போதைக்கு கூட்டத்துல இல்ல வைஷூ. அது கூட்டத்தில இல்லாததால அந்த ரெண்டு குட்டிகளோட உணவு அதுதான் தேடணும். இயற்கையே ஒன்னை அழித்து தான் இன்னொன்னு வாழனும்னு இருக்குது.”
அவன் சொல்ல அதை காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் அகிர்டா பலமாக எச்சரித்தான். அதற்கு காரணம் நீர்யானைகள். நீர்நிலைகளில் இருந்த நீர்யானைகள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
நீர்யானைகளை ஈர்க்கும் அளவிற்கு ஏதாவது சண்டை இட வேண்டாம் சத்தமிட வேண்டாம் என சொல்லி இருந்தான் அகிர்டா. நீர்யானைகள் பெரும் கூட்டமாக அங்கே குளித்துக் கொண்டிருந்தது. அதன் வாயை பிளக்க வைஷ்ணவி விழி அகல அதை நோக்கி விட்டு அசோக்கிடம் கேட்டாள்.
“ஏன் அசோக் இந்த நீர்யானை முதலை எல்லாம் வாய் பிளந்துட்டே இருக்குது. அதோட வாயை பறவைகள் சுத்தம் பண்ணத் தானே”
“அதுவும் ஒரு காரணம் வைஷூ. முக்கியமா உடம்பில் இருக்கிற வெப்பத்தத் தணிக்க இப்படி வாய் பிளந்து உஷ்ணத்தைத் தணிக்கும். ஆனா இன்னொன்னு இருக்கு வைஷூ அது சும்மாவே வாயைப் பிளந்துட்டே இருக்கும்”
அசோக் தீவிரமான முகத்தோடு பேச வைஷ்ணவி ஆர்வமாகக் கேட்டாள்.
“என்னது அசோக் அது?”
“பேரு வைஷ்ணவி ஊரு சென்னை”
அசோக் சொல்ல வைஷ்ணவி முகம் கோபத்தில் சிவக்க அவன் முதுகில் அவள் குத்த முயற்சிக்க அவளது தோளோடு தன் கையைச் சேர்த்து அடக்கியவன் இரு நீர்யானைகள் மூர்க்கமாகச் சண்டையிடுவதைக் காட்டினான்.
அதன் பின் மதிய உணவு போகிற வழிகளில் நிறைய வண்டிகள் நிற்கும் இடம் பார்த்து நிறுத்தி உணவு உண்டனர்
அதன் பின் ஓரிடத்தில் பத்து வண்டிகள் மேலிருக்க அகிர்டா அங்கே வண்டியை நிறுத்தச் சொன்னான். நிச்சயமது ஏதாவது முக்கியமான மிருகங்களின் வருகையாக இருக்கும் என்று அனைவருமே நிற்க தூரத்தில் யானைக் கூட்டங்கள் இருந்ததைப் பார்த்தாள் வைஷ்ணவி. யானைக் கூட்டங்களை கண்டதும் குதூகலமானாள் வைஷ்ணவி. சில காட்சிகள் சில பொருட்கள் சில மனிதர்களின் நினைவுகள் நம்மை மழலையாகவே மாற்றி விடுகிறது. ஆப்பிரிக்கை யானைகள் முறம் போன்ற காதுகளை மெல்ல அசைய அசைய நடக்க சிறு குட்டி யானைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து விளையாடிக் கொண்டிருந்தது.
வைஷ்ணவி அசோக்கை ஒரு குழந்தை போல் தட்டி,
“அசோக் அங்க பாரு யானை” என்று சொல்ல அசோக் சிரித்தான். அவன் அவளையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். அவன் அதைப் புகைப்படம் எடுக்க எடுக்க அந்த யானைகள் அங்கிருந்த இரு சிங்கக்குட்டிகளை நோக்கி வர அகிர்டா விளக்கம் கொடுத்தான்.
“யானைக் கூட்டம் எப்பொழுதும் சிங்கக் குட்டிகளிடம் இரக்கமற்று தான் நடந்து கொள்ளும். ஏன்னா சிறிய யானைகளை குட்டி யானைகளை சிங்கங்கள் வேட்டையாடும் அதான் அந்த குட்டிகளைப் பார்த்தா யானைக் கூட்டங்கள் கொன்னுடும்”
அகிர்டா சொல்ல அப்பொழுது இரு குட்டிகளுடன் அந்தப் பெண் சிம்மம் தனியாகத்தான் இருந்தது. அது தனித்து விடப்பட்டிருந்தது. கூட்டத்தோடு இல்லை. யானைகள் மெல்ல அதை நோக்கி வர அந்த பெண் சிம்மம் பதட்டத்துடன் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு தன் குட்டிகளை காத்துக் கொண்டு நின்றிருந்தது. ஏனோ சற்று நேரத்தில் யானை கூட்டம் அதனை நோக்கி முன்னேறாது வேறு வழியில் நடக்கத் தொடங்கியது. மிருகங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நீருக்காகவும் உணவுக்காகவும் இடம்பெயர்ந்து தேடிச் செல்வதை தான் சவாரி பயணத்தில் நாம் அதிகம் காண நேரும் அழகான தருணங்கள். வைஷ்ணவிக்கு அந்த காட்சிகள் தன் வாழ்நாளில் என்றென்றும் மறக்க முடியாத காட்சியாக மனதிற்குள் பதிய வைக்க சரியாக மாலை வேளையில் மீண்டும் ஒரு சிங்கக் கூட்டம் கண்ணில் தென்பட்டது. இம்முறை மூன்று சிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று தள்ளி தள்ளி படுத்து ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. உண்மையில் அவைகளுக்கு மனிதர்கள் ஏதோ ஒரு காட்சி பொருளாக இருக்கலாம் அவைகள் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருந்தன. மனிதர்கள் அல்லவா கூண்டுகளுக்கு நின்று அதனை ரசிக்கிறார்கள் முக்கியமாக அந்த மிருகங்களில் கண்களில் தெரியும் ஒரு அலட்சியம் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருந்தது.
என் கண்ணில் நீ மதிப்பே இல்லை என்று காட்டும் அலட்சியம் அந்த சிங்கத்தின் பிடரிமயிர் சிலுப்பலில் தெரிய, வெகு சில மனிதர்களிடம் காணும் இந்த அகந்தையின் ஈர்ப்பு போதையானது தான். மாலைப்பொழுது வரத் தொடங்கியதும் அவர்கள் மத்திய செரங்கெட்டியில் முகாமிட்டனர். காடுகளுக்கு நடுவே முகாம் இட்டுத் தங்குவது வைஷ்ணவிக்கு அச்சத்தின் எல்லை எதுவென காட்டியது. டென்ட் போன்ற லாட்ஜூகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். சுற்றிலும் சுவர்கள் எல்லாம் இல்லை கெட்டியான துணி போன்ற அமைப்பு இருக்க வசதியான படுக்கை இருந்தது. வைஷ்ணவி இரவு தூக்கம் வராது அசோக்கை நச்சரித்தாள்.
“திடீர்னு மிருகங்கள் எல்லாம் வந்துருச்சுன்னா?!”
பகலில் கண்ட சிங்கங்களும் சிறுத்தைகளும் நினைவு வர அசோக்கிடம் கேட்டாள் வைஷ்ணவி.
“வராது வைஷு இங்க எல்லாம் சேஃப்டி மெஷர்ஸ்சும் எடுத்துட்டு தான் தங்க வைப்பாங்க இந்த டென்த் சுற்றியும் மிருகங்கள் வராத இடமா பார்த்து தான் தேர்வு செஞ்சிருப்பாங்க. பேசாம தூங்கு”
டென்டின் ஒரு ஓரத்தில் ஸ்லீபிங் பேக்கில் அவன் படுத்துக்கொள்ள வைஷ்ணவிக்கு ஒரு சிறு படுக்கை இருந்தது. வைஷ்ணவி அதில் உறக்கம் வராது விழித்துக் கொண்டே படுத்து இருந்தாள். சிறிது நேரத்தில் அங்கே சலசலப்பான சத்தம் கேட்க வைஷ்ணவி எழுந்து நேராக அசோக்கின் அருகில் வந்து அவனை எழுப்பினாள். அசோக் திரும்பினான். உயிர் பயத்தில் அவள் இருப்பதை அறிந்து அசோக் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“இவ்வளவு பயம் இருக்கு இல்ல தனியா எதுக்கு வேர்ல்ட் டூர் வர”
“நான் பயப்படலை” வைஷ்ணவி வீராப்பாகச் சொல்ல அசோக் மீண்டும் கேலி செய்தான்.
“ஓ! அப்ப அம்மா ஏன் அங்க இருந்து இங்க வந்தீங்க?”
அசோக்கின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாது வைஷ்ணவி வேறொன்று பேசினாள் வைஷ்ணவி.
“அசோக் நிஜமாகவே அங்கே ஏதோ பட படன்னு சத்தம் கேட்குது!”
அசோக் அவள் புறம் திரும்பினான் அவளுக்கு என்று அந்த லாட்ஜில் ஒரு படுக்கை இருந்தது. அவன் முன்னே இருந்த இரு இருக்கைகளை சேர்த்து போட்டு அதன் முன்னே ஒரு ஸ்லீப்பிங் பேக்கில் உறங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது இவள் தன் அருகில் வந்து நிற்கிறாள், அசோக் எழுந்து அமர்ந்தான். அவர்கள் தற்பொழுது இருந்தது நமக் என்னும் மத்திய செரங்கெட்டி சவானா காடுகளில் இருக்கும் லாட்ஜகளில் ஒன்று. தங்குவதற்கு உள்ளே பெரிய படுக்கை சுத்தியும் துணியால் ஆன மறைப்பு சுவராக இருந்தது.
“அது ஏதாவது முள்ளம் பன்றியாக இருக்குமோ?”
வைஷ்ணவியின் கேள்வியில் அசோக் அறையை ஆராய்ந்துக் கொண்டு இருந்தவன் அவளிடம் திரும்பினான்.
“இங்க பாரு இப்ப நீ போய் தூங்கல உன் கூட சேர்ந்து நான் வந்து கட்டில்ல படுத்துக்குவேன்”
அதைச் சொன்னதும் வைஷ்ணவி ஓடிப்போய் கட்டிலில் பேசாமல் அமர்ந்துக் கொள்ள அசோக் சிரித்தான். பின் அசோக் தூங்குவதாக பாசாங்கு செய்ய வைஷ்ணவி வெளியே தெரிந்த நீலவண்ண வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அந்த டென்டில் அரைபட்ட வடிவில் ஒரு பெரிய இடைவெளி சாளரமாக இருந்தது. அதன் வழியாக வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தாள் நீலமும் இல்லாத ஊதா நிறத்தில் வானம் மின்ன தூரத்தில் ஒரு மரம் தன் கை விரல்களை பரப்பி நின்றது போல் நின்றிருந்தது
“அசோக் எனக்கு தூக்கம் வரல பயமா இருக்கு நீ கொஞ்ச நேரம் டென்ட் முன்னாடி நின்னு பாரு நான் தூங்குறேன் அப்புறம் நான் பார்க்கிறேன் நீ தூங்கு”
வைஷ்ணவி சொல்ல அசோக் வேறுவழி இல்லாது பெருமூச்சு விட்டு எழுந்து சரி என்றான். அசோக் அந்த வாயிலில் அமைதியாக அமர்ந்திருக்க வைஷ்ணவி தூங்கச் சென்றவள் பின் மெல்ல எழுந்து மீண்டும் பேசினாள்.
“எனக்கு நம்பிக்கை இல்லை நீ தூங்கிட்டீனா?”
வைஷ்ணவி கேட்க,
“சரி அதனால?” அசோக் மறு கேள்விக் கேட்டான்.
“நான் நீ தூங்குறியா இல்லையான்னு பாத்துட்டே உட்கார்ந்து இருக்கேன்”
அதை கேட்டதும் அசோக் நெற்றியில் சட்டென்று கையில் அடித்தான்.
“வைஷு நான் பண்ண மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா?” அசோக் கேட்க வைஷ்ணவி தெரியாது என்பது போல் தலையசைத்துக் கேட்டாள்.
“என்ன எதாவது மறந்துட்டு வந்துட்டியா?”
“இல்ல கோவால பிளைட் ஏற அடம் பிடிச்சப் பாத்தியா, அப்ப பேசாம, ரோசம் பார்க்காம, உன்னை பெட்டியோட கொண்டு போய் ஷெரீன் ரிசாட்ல இறக்கி விட்டுட்டு நான் வந்து தனியா கூட ஃப்ளைட் ஏறி வந்திருக்கலாம். பெரிய தப்பு பண்ணிட்டேன்”
அவன் சொல்ல வைஷ்ணவி அவனை முறைத்தாள். பின் அசோக் சமாதானக் குரலில் பேசினான்.
“ரெண்டு பேரும் தூங்கலாம் அங்கிருக்க இன்னொரு ஸ்லீப்பிங் பேக் எடு”
என்றவன் அவன் அருகிலேயே அந்த ஸ்லீப்பிங் பேக்கைப் போட்டு அவளை உறங்கச் சொன்னான். வைஷ்ணவி சரியென உறங்குவதாக பாசாங்கு செய்ய அவன் உறங்குவது தெரிந்தது. அதன் பின் அவள் உறங்குகையில் தன்னுடைய கரத்தால் அவனது கரத்தை மெல்லப் பற்றிக் கொண்டு உறங்க அசோக் தனது கரத்தில் அவளது விரல்களை மூடினான். ஒரு முத்தமிட கெஞ்சிய மனதை சமனப்படுத்தி தனது சலனத்தைத் தவிர்க்க அவன் தடுமாற

வைஷ்ணவி தூக்கம் கலைந்து எழுந்தாள். அசோக் அவளது காதருகேப் பேசினான்.
“வைஷூ! நான் இங்க தானே இருக்கேன் எதுவும் வரலைத் தூங்கு”
“முள்ளம்பன்றி வந்திடுச்சா?! சிறுத்தையா?!”
வைஷ்ணவியின் அச்சம் அவளது உடல் அதிர்வில் தெரிய அசோக் அவளது கரத்தை இறுகப் பற்றி அவளிடம் பேசினான்.
“வெளியில அகிர்டா இருக்கான். இன்னும் நாலு பேர் இருக்காங்க அவங்க பாத்துக்குவாங்க”
அவன் சொல்லிவிட்டு வைஷ்ணவியின் கரங்களைப் பற்றி அவளை உறங்கச் சொல்லி அவளுக்கு முதுகு காட்டி அருகில் உறங்கினான். வைஷ்ணவி அவனைப் பார்த்தபடியே கண்ணயர்ந்தாள். சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். சிறிது நேரத்தில் எழுந்த அசோக் மட்டும் அவளையே பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தான். அவனது அச்சத்திற்குத் தூபமிடும் அவளது செய்கைகளைத் தவிர்க்க முடியாது அமர்ந்து இருந்தான்.
கவிதை
நிமிடங்களுக்குள் உன்னை பொதிந்த
நாட்களை மட்டுமே
ஆயுள் வரை நீளும்
நினைவுகளில் சேமித்து வைக்கிறேன்!

error: Content is protected !!