Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK 10 2

“அம்மா இவ்வளவுக்கும் காரணமாக உங்க சித்தி பொண்ணு அதுக்கு அப்புறம் வந்து உங்களை எல்லாம் பார்க்கவே இல்லையா”

“ அவ  எப்படிடா நம்மள வந்து பார்ப்பா. அவளோட அம்மா அப்பா இறந்து சொத்தெல்லாம் போய் சோத்துக்கு வழியில்லாம அனாதை மாதிரி ரோட்ல நின்னா அவளை எங்க அம்மாவும், அப்பாவும் கூட்டிட்டு வந்து சொந்த பொண்ணு மாதிரி வளர்த்தாங்க. ஆனா அவ அவங்க இறந்தபோது  கூட இங்க வரவே இல்லை. சோத்துக்கு வழி இல்லாதவ அவ்ளோ பெரிய பணக்கார குடும்பத்துல மருமகளா ஆனா உடனே அவளை வளர்த்தவங்க கண்ணுக்கு தெரியவே இல்லை. நம்ம அக்கா வாழ்க்கை நம்மளால இப்படி ஆயிட்டேன்னு ஒரு குற்றயுணர்ச்சியும்  இல்லாம அவ நல்லா சந்தோசமா வாழத்தான் செய்யுறா. இப்ப கூட அவ பொண்ணுக்கு கல்யாணம் நடக்க போகுது. ம் என்ன பண்ண இப்ப எல்லாம் கெட்டவங்களுக்கு தான் வாழ்வு போல. அவளுக்கு கடவுள் எந்த குறையும் இல்லாம நல்ல வாழ்வு கொடுத்திருக்கிறாரு. ஆனால் அவளுக்கு அவ்ளோ செஞ்ச நம்மள பாரு. எங்க அக்கா வாழ்க்கைனா என்னன்னு தெரியாம இந்த நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து இருக்கா. நான் பெத்த ஒரே பொண்ணுக்கூட இருந்து வளர்க்க முடியாம இருக்கேன். என்ன சொல்ல இந்த கடவுள் நல்லவங்களை இப்படித்தான் பண்ணுவாரு போல. இவ்ளோ பண்ண அவளுக்கு ஒரு தண்டனை கூட அவருக்கு கொடுக்கவே இல்லடா” என்றாள் வருத்தமாக தேவி.



Advertisement

“ அவர் என்னமா தண்டனை கொடுக்கிறது. உங்களுக்கும் அம்மாவுக்கும் அவங்க பண்ணதுக்கு சேர்த்து வச்சி நான் தண்டனை கொடுப்பேன். உங்க வாழ்க்கையும் பெரியம்மா வாழ்க்கையும் ஆன மாதிரி அவங்க பொண்ணு வாழ்க்கைய ஆக வைக்கல நான் உங்க பொண்ணு இல்லமா. அம்மாவும் பொண்ணும் பிரிந்து இருந்தா எப்படி வலிக்கும் அவங்களுக்கு நான் காட்டுறேன்” என்றாள் பழி வெறியுடன் யாழினி

Advertisement

@@@@@@@@@@@@@@

Advertisement

“அம்மாடி அமிழ்தினி இங்க பாருடா. அம்மா வந்து இருக்கேன் டா கண்ணத் திறந்து பாருடா” என மருந்தின் மயக்கத்தில் இருந்தவளை எழுப்பிக் கொண்டு இருந்தாள் பிரபாவதி.

Advertisement

 அப்போது தான் ட்ரிப்ஸ் மாத்துவதற்காக உள்ளே வந்த நர்ஸ் இவளின் இந்த செயலில் பதறி போய், “மேடம் என்ன பண்ணுறீங்க. அவங்களை ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெளிய இருங்க இப்ப டாக்டர் வர நேரம் அவர் வந்தா என்னை தான் திட்டுவாங்க. ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேக்குறேன் வெளிய போங்க”

“ என்னோட பொண்ணுமா கண்ணு திறக்காம படுத்திருக்கா இவ எப்ப எந்திரிப்பா” என்றார் அழுகையுடன்

“ அழாதீங்க ப்ளீஸ் அவங்களுக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் பிரஷர்  அதிகமாயிட்டு அதற்கான மெடிசன் கொடுத்து தூங்க வச்சிருக்கோம்”

“அப்ப எப்ப எழுந்திரிப்பா”

“ இனி காலைல தான் எந்திரிப்பாங்க. அது வரைக்கும் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. இல்லன்னா வீட்டுக்கு கூட போயிட்டு வாங்க”

“ சரிமா வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே”

“ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா காலைல இவங்களை வீட்டுக்கு அனுப்பிருவாங்க”

“ ஓ சரிமா நான் வெளியே இருப்பேன்” என்று சொல்லி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பிரபாவதி.

“ என்ன கேட்டாச்சா இதுக்கு தான் அவளோ பெரிய அலப்பறை. என்னவோ பொண்ணு மாசமா இருந்ததுல இருந்து அவ கூடவே இருந்து மருந்து மாத்திரை எல்லாத்தையும் பார்த்து பார்த்து கொடுத்த மாதிரி தான். அவ மாசமா இருக்கான்னு தெரிஞ்ச நாளிலிருந்து ஒரு நாளாவது அவளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிக் கொடுத்து இருக்கியா நீ. என்னவோ அவ மேல எங்களுக்கு பாசமே இல்லாத மாதிரி தான் சொல்ற. அவ கல்யாணமான நாளிலிருந்து நாங்க யாருமே கூப்பிடலைன்னு சொல்ற. நீ ஒரு நாளைக்கு அவங்க வீட்ல தங்கி அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியா. அம்மா நீ உனக்கே அக்கறை இல்லாத போது நாங்க என்ன பண்ண முடியும். உனக்கு தான் உன் பசங்கள பாத்துகிறத விட வேற நிறைய வேலை இருக்கு. அப்படி இருக்கும்போது நீ உன் பசங்கள பத்தி யோசிப்பியா என்ன” என்றார் கோபமாக வள்ளியம்மை.

அந்த வராண்டாவில் நின்றிருந்த மயில்வாகனார், செந்தில் முருகன், சிவகாமி, பழனி முருகன், இன்பா, கவின், தீபக், ஈஸ்வரி என அனைவரும்  அவர் திட்டுவதை கேட்டுக் கொண்டு இருந்தனரே தவிர அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.

  அவமானத்துடன் அங்கே நின்ற ஒருத்தரின் முகம் பார்க்காமல் கண்கலங்கி தலை குனிந்து நின்றார் பிரபாவதி.

“ பொண்ணா லட்சணமா குடும்பத்தை பாக்கானும். அத விட்டுட்டு இப்படி அள்ளிப் போட்டு மேக்கப் பண்ணிட்டு திரிஞ்சா மட்டும் போதுமா” என்றவர் அடுத்து பேசும் முன்னே “போதும் நிறுத்துங்கம்மா  அவ யாருன்னு உங்களுக்கு தெரியுமா. அவ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா. பொண்ணுன்னா வீட்டை மட்டும் தான் பாத்துக்கணுமா ஏன் அதுக்கு மேல எதுவும் பண்ண கூடாதா. என்ன அவ வந்து பாக்கல பாக்கலைன்னு சொல்றீங்க. அவ தோழி நான் இருக்கிறேன் என்கிற தைரியத்தில் தான் அவ பொண்ண வந்து பார்க்காம இருந்தா. ஏதோ அவ தான் தப்பு பண்ண மாதிரி இல்ல நிக்க வச்சு அவளை திட்டிட்டு இருக்கீங்க. ஏய் நீ ஏன் டி ஏதோ தப்பு பண்ண மாதிரி தலை குனிஞ்சு நிக்க. நிமிர்ந்து பாரு ஒன்ன கேள்வி கேக்க யாருக்கும் இங்கே தகுதி கிடையாது” என்று சொல்லி பிரபாவதி கையைப் பிடித்து தன்னை நிமிர்ந்து பார்க்க செய்தார் ஈஸ்வரி.

“ஈஸ்வரி” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டு அழ தொடங்கினார் பிரபாவதி.

“என்னை மன்னிச்சிடு டி” என்றார் அழுகையுடன்  பிரபாவதி.

 அதற்கு, “நீ ஏன் டி என்கிட்ட மன்னிப்பு கேட்கிற நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் உன் பொண்ண என்னால சரியா பாத்துக்க முடியலடி” என்றார் குற்ற உணர்வுடன் ஈஸ்வரி.

“ அத விடுடி நான் உனக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படிக்க காலேஜுக்கு வராம நான் கல்யாணம் பண்ணதுக்கு நீ என் மேல கோவமா இருப்பன்னு எனக்கு தெரியும். சாரி டி அப்போ உள்ள சூழ்நிலை என்னை அப்படி பண்ண வச்சுட்டு. நான் மட்டும் இவரை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா சொத்துக்காக ஒரு குடிகாரனுக்கு என்ன கட்டி வைச்சியிருப்பாங்க. அதனாலதான் அக்காவ பொண்ணு பார்க்க அவங்க அண்ணாக்கூட வந்த இவரை எனக்கு பார்த்ததும் பிடிச்சி போச்சி. இவருக்கும் என்னை பிடிச்சி இருந்துச்சி. ரெண்டு பேரும் லவ் பண்னோம். ஆனா பெரியவங்க கிட்ட சொல்லி கல்யாணம் பண்ண எனக்கு டைம் இல்ல. இருந்தாலும் இவர் நான் எங்க அப்பா கிட்ட பேசி பொண்ணு கேக்கேன்னு சொன்னாரு. ஆனா இவங்க சம்பாதிச்சா கூட அந்த வீட்ல உள்ளவங்க என்ன இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டாங்க. அதனாலதான் இவர பிளாக் மெயில்  பண்ணி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்ப என் லைஃப் தவிர வேறு எதுவும் என் மனசுல இல்லடி. அதனால தான் உன்கிட்ட என்னால மன்னிப்பு கேட்க முடியலடி. கொஞ்சம்  தாமதமானாலும் இப்போ உன்கிட்ட கேட்கிறேன் டி என்னை மன்னிச்சிடுடி” என்று அவளின் கையை பிடித்து கண்ணில் வைத்து அழ தொடங்கினாள் பிரபாவதி.

“ ஏய் அதெல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்சது. நான் அத மறந்துட்டேன் டி. இருந்தாலும் நீ என்கிட்ட பேசாதது தான் என்னால மன்னிக்க முடியல அதனாலதான் உன் பொண்ணு கிட்ட ஏதாவது சொல்லி உன்னை திட்டிக்கிட்டே இருப்பேன். அந்த வருத்தமும் இப்போ நீ மன்னிப்பு கேட்டதுல காணாம போச்சு இனி நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல. இருந்தாலும் உன்னோட கஷ்டத்தை நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம் டி. இவங்க ஏதோ நல்லவங்களா இருந்ததால உன் வாழ்க்கை சரியா போச்சு இதுவே ஏதாவது கெட்டவங்க கையில மாட்டியிருந்தா நீ என்ன ஆயிருப்ப. அத என்னால நினைச்சு கூட பாக்க முடியலடி. இனிமே சாகுற வரைக்கும் உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா நீ என்கிட்ட தான் முதல்ல சொல்லணும் சரியா” என்றார் கண்டிப்புடன் ஈஸ்வரி

“ சரிடி இனி என்ன நடந்தாலும் முதல்ல உன் கிட்ட தான் சொல்லுவேன்” என அவரின் கையை இறுக்கமாக பிடித்து  கொண்டார் பிரபாவதி.

 இருவரும் பேசிக்கொண்டதை கேட்ட பெரியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது கவின் பாட்டியின் கையை பிடித்து, “ இப்ப தெரியுதா பாட்டி எதுக்காக நான் உங்களை இப்படி பேச சொன்னேன்னு”

“ ஆமாடா தங்கம் இந்த பிரபா மனசுக்குள்ள எத்தனை கஷ்டத்தை வச்சுட்டு இவ்வளவு வருஷமா வாழ்ந்தான்னு எங்களுக்கு தெரியல டா நாங்க அவள சரியா புரிஞ்சிக்கலன்னு இப்ப

தெரியுது. இத எங்களுக்கு புரிய வைச்ச உனக்கு தான் தங்கம் நன்றி சொல்லணும். நீ எப்பவும் இதோ சந்தோஷத்தோட நல்லா இருப்ப டா தங்கம்” என்றார் நெகிழ்ச்சியுடன் வள்ளியம்மை.

“ தேங்க்ஸ் பாட்டி” என்றவன்  “இதோடு சேர்த்து இவனுக்கு கல்யாணத்தை பேசி முடிச்சிடுங்க பாட்டி” என்று தனது முன்னே நின்ற இன்பாவை பார்த்து சொன்னான் கவின்.

“ சரிடா பெரிய மனுஷா உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைக்கோம்”என்றார் சிரிப்புடன் வள்ளியம்மை.

 “என்னங்க நான் சொல்றது சரிதானே” என்று தனது கணவரின் முகத்தை பார்த்தார்.

“”

 இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்று இன்பா நிமிர்ந்து தனது தம்பியின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து குற்ற உணர்ச்சியுடன்  நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!