Skip to content
Post Views: 749
அலைவரிசை – 10
“அம்மா, அப்பா எங்க இருக்கீங்க நான் வந்துட்டேன்” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் பால்வண்ண பாதங்களில் இரட்டை அடுக்கு கொலுசு அதிர பூந்தென்றல் போல அந்த அரண்மனை போன்ற வீட்டில் நுழைந்தாள் யாழினி.
Advertisement
அழகிய புன்னகை முகமாய் வந்தவளை கொஞ்சமும் ரசிக்காமல் சிடுசிடுப்புடன், “உன்னை யாரு யாழினி இங்கு வர சொன்னது. நான் தான் வரேன்னு சொன்னேன் இல்ல. அதுக்குள்ள அவசரப்பட்டு உன்னை யார் இங்க கிளம்பி வர சொன்னது. உன் பாட்டி என்ன தான் பண்றாங்க ஒன்னு கவனிக்காமா” என்று கோபமாக கேட்டார் அவர் தந்தை பாண்டியன்.
“அப்பா பாட்டிய ஒன்னும் சொல்லாதீங்க. நான் அவங்கக்கிட்ட என்னோட பிரண்ட்ஸ் கூட குற்றாலத்துக்கு டூர் போறதா சொல்லிட்டு இங்க வந்தேன். அவங்களுக்கு எதுவும் தெரியாது திட்றதா இருந்தா என்னை மட்டும் திட்டுங்க”
Advertisement
Advertisement
“ இது என்ன பழக்கம் யாழினி பாட்டி கிட்ட பொய் சொல்றது” என்றார் கண்டிப்புடன்
“ என்னை வேற என்னப்பா பண்ண சொல்றீங்க. நான் இங்கு வரேன்னு சொன்னாலும் என்னை கூட்டிட்டு வர மாட்டீங்க. அம்மாவும் என்ன பாக்க வர மாட்டாங்க. நான் அம்மாவ அஞ்சு வயசா இருக்கும் போது பார்த்ததுபா. என்ன மாதிரி பொண்ணுங்க அம்மா கூட இருக்கும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா பா. நான் எப்ப கேட்டாலும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பிறகு பார்க்க வருவாங்கன்னு சொல்றீங்க. நான் இங்க வரேன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டிங்க. அதான் நான் உங்ககிட்ட சொல்லாம அம்மாவ பார்க்க வந்துட்டேன்” என்று சொல்பவளுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க முடியாமல், வீட்டிற்கு வந்துவிட்ட மகளை எப்படி யார் கண்ணிலும் படாமல் வாசலோடு அனுப்புவது என்ற தவிப்புடன் நின்றார் பாண்டியன்.
Advertisement
அப்போது அங்கே வந்து தேவி, “ யாழினி செல்லம் எப்படி இருக்கீங்க. இப்பதான் உங்களுக்கு அம்மாவை பார்க்கணும் தோணுச்சா. உங்க அப்பா கிட்ட கேட்டா பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் இருக்கா இல்லைனா படிக்கா லீவு கிடையாது சொல்லுறாங்க உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுடா” என்று அன்பொழுக சொல்லி மகளை கட்டிக்கொண்டு அழுதார்.
அவரின் கண்ணீரைப் பார்த்து இவளுக்கும் அழுகை வந்தது. சிறிது நேரம் இருவரும் அழுதுவிட்டு, “ அழுதது போதும் டா. இனி உன் கண்ணில இருந்து அழுகையே வரக்கூடாது. இனி உன்ன அம்மா எப்படி பாத்துக்க போறேன்னு மட்டும் பாரு. இனிமேல் உன்னை யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது” என்று பாண்டியனை நக்கலாக பார்த்துக் கொண்டு யாழினிடம் சொன்னார் தேவி.
“சரி வாடா உள்ள போலாம்” என்றவர் “இல்ல இல்ல நீ இங்கேயே நின்னு நான் உள்ள போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வரேன்” என்று தனது கனமான உடலை தூக்கிக்கொண்டு சிறுபிள்ளை போல துள்ளி உள்ளே சென்றார் தேவி.
“ பாருங்க பா அம்மாவ எப்படி சந்தோசமா போறாங்கன்னு. ஏன் இவ்வளவு வருஷம் என்னை அம்மா கிட்ட இருந்து தனியா பிரிச்சு வச்சீங்க. என்ன பார்த்த உடனே அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க . இந்த சந்தோசத்த எல்லாம் எங்களை அனுபவிக்க விடாம பண்ணிட்டீங்களே. ஏன் பா இப்படி பண்ணுனிங்க” என்றாள் அதங்கமாக யாழினி.
அதற்கு அவர் ஏதோ சொல்ல வர அப்போது வந்த தேவியை பார்த்து அமைதியானார். “அவர்கிட்ட உனக்கு என்ன பேச்சி குட்டிமா. அவர் கிட்ட எதுவும் கேட்காத இல்லனா ஏதாவது சொல்லி திரும்பவும் நம்மள பிரிச்சிருவாரு. நீ இங்க வாடா எப்படி வந்து நில்லு நான் உனக்கு ஆரத்தி சுத்துறேன்”என்று சொல்லி அவளுக்கு திருஷ்டி கழித்து உள்ளே கூட்டிச் சென்றார் தேவி.
“குட்டிமா நீ மாடில ரெண்டாவது ரூம்ல போய் நீ கை கால் முகம் கழுவிட்டு வா. சாப்பிடலாம் நான் உனக்கு பிடிச்சது எல்லாம் சமைச்சி வைக்கிறேன். ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதே” என்றார் வருத்தமாக
அவரின் வருத்தமான
முகத்தை பார்த்து அவரைக் கட்டிக்கொண்டு “அம்மா ப்ளீஸ் ஃபீல் பண்ணாதீங்க நீங்க என்ன சமைச்சாலும் எனக்கு பிடிக்கும் சரியா. அதனால சந்தோஷமா உங்களுக்கு பிடிச்சது என்ன வேணாலும் செய்யுங்க. நான் சாப்பிடுறேன்” என்று சொல்லி அவரின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அறைக்கு சென்றார்.
“ச்சி கருமம்” என்று தனது கன்னத்தில் அவள் முத்தமிட்டு சென்ற இடத்தினை அழுத்தி துடைத்தாள் தேவி. அவளின் இந்த செயலிலே பார்த்துக் கொண்டு வந்த மாயாவதி. தனது தங்கை கையினை பிடித்து, “கொஞ்ச நேரம் உன்னால பாசமா இருக்கிற மாதிரி நடிக்க முடியாதா தேவி” என்றாள் கோவமாக
“ என்னை என்னக்கா பண்ண சொல்ற இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் இவ்ளோ பாசமா பேசினது கூட இல்லை. அதுவும் இவ முகத்தைப் பார்த்து என்னால பாசமா இருக்கிற மாதிரி கூட நடிக்க முடியல. இவ முகத்தை பாருக்கா அப்படியே அவ முகம் மாதிரியே இருக்கு. அந்த முகத்தைப் பார்க்குற அப்போ எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவள கொலை பண்ண தோணுது. இதனால தான் அந்த ஆளு அத இத சொல்லி இவள என் கண்ணுல போடாம மறைச்சி வளர்த்து இருக்கான். அந்த ஆளுக்கு இருக்கு அக்கா” என்றாள் வெறுப்பாக தேவி.
“ அப்படி எதுவும் பண்ணிராத தேவி. இந்த முகம் தான் நமக்கு கிடைச்ச ட்ரம்கார்ட். இதை வச்சுதான் இனி நம்ம அவங்களோட கண்ணுல விரலை விட்டு ஆட்டனும். அதனால கொஞ்ச நாளைக்கு பாசம் இருக்கிற மாதிரி அவகிட்ட நடி. அப்ப தான் நம்ம சொன்ன பேச்செல்லாம் கேட்பா. சரியாக அவ வர மாதிரி தெரியுது நான் உள்ளே போறேன். நெக்ஸ்ட் நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே பண்ணு” என்று சொல்லி உள்ளே சென்ற மறைந்தாள் மாயாவதி.
“அம்மா என்ன இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க என்ன ஆச்சு உங்களுக்கு. இன்னும் நடந்தத ஏன் நினைச்சிட்டு இருக்கீங்க. போன காலத்த ஒன்னும் பண்ண முடியாது அதான் இப்ப நான் வந்துடனே இனி நாம சேர்ந்து ஒன்னா இருக்கலாம். அதனால நீங்க எதுவுமே நினைச்சு வருத்தப்படாதீங்க” என்றாள் அவரின் கவலையே போக்கும் விதமாக யாழினி.
“ அதெல்லாம் ஒன்னும் இல்லடா. வேற ஒன்னு நெனச்சீட்டு இருந்தேன். வா நாம போய் சாப்பிடலாம்”
“ அப்படி என்னமா நெனச்சீங்க இவ்வளவு சோகமா இருக்கு உங்க முகம்”
“ அது பிறகு சொல்றேன் டா இப்ப வந்து நீ சாப்பிடு வா” என்று சொல்லி டைனிங் டேபிள் நோக்கி அழைத்து சென்று உணவினை பரிமாற தொடங்கினாள் தேவி.
“ வாவ் மாம் இவ்வளவு சூப்பரா நீங்க சமைப்பீங்களா செமையா இருக்கு சாப்பாடு” என்று சொல்லி ரசித்து உண்ண தொடங்கினாள் யாழினி. சிறிது சாப்பிட்டு விட்டு, “அப்பா எங்க அம்மா ஆளையே காணோம்”
“அவர் ஏதோ வேலையா வெளியே போனார் டா. நீ முதல்ல சாப்பிடுடா. இன்னும் கொஞ்சம் வைக்கவா” என கேட்டாள்.
“ ஐயோ போதுமா ஏற்கனவே ரொம்ப அதிகமா இருக்கு. நீங்களும் என் கூட உட்கார்ந்து சாப்பிடலாம் தான”
“ இல்லடா நீ சாப்பிட்டு முடி நான் போய் உங்க பெரியம்மாக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் சாப்பிடணும்” என்றாள் கவலையாக தேவி.
“ ஆமால பெரியம்மா ஐயோ நான் மறந்து போயிட்டு அம்மா. பெரியம்மா எங்க இருக்காங்க ஏன் இவ்வளவு நேரம் என்ன பாக்க வராம இருக்காங்க”
“ அது ஒரு பழைய கதைடா நீ சாப்பிட்டு முடி உனக்கு அவங்களை காட்டுறேன்” என்றார் கவலையாக.
“சரி மா” என்று சொல்லி அமைதியாக சாப்பிட தொடங்கினாள்.
“என்ன இவ ஒரு தடவ கேட்டதோட சாப்பிட தொடங்கிடா அவ்வளவு தானா. அடுத்து என்ன பண்ண”என யோசித்துக் கொண்டு இருக்க
“அம்மா அம்மா”என அவளை அசைத்தாள் யாழினி.
“ஏய் ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியா. பேசாம சாப்பிட்டு தொலை” என்று கோபமாக சொன்னவள். அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து, “இல்லடா சாப்பிடும் போது பேசக்கூடாது. அப்படிப் பேசுனா சாப்பாடு மூக்கு போய்க்கும். அதான் அப்படி பேசிட்டேன் சாரி டா” என்று முகத்தை பாசமாக வைத்துக்கொண்டு நடித்தாள்.
“ இல்லமா நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். அதான் பெரியம்மாவை பார்க்கலாம்னு உங்கள கூப்பிட்டேன்”
“ஓ அப்படியா தங்கம் சாரிடா அம்மா ஏதோ ஒரு நினைப்புல இருந்தேன். அதான் உன்னை திட்டிட்டேன். வாடா நம்ம போய் பெரியம்மாவ பார்க்கலாம்” என்று சொல்லி கீழே இருந்த ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள்.
அந்த அறை முழுவதும் இருண்டு இருக்க உள்ளே நுழைந்து வலது பக்கத்திலிருந்து லைட் ஸ்விட்ச் ஆன் செய்ய அந்த அறை முழுவதும் வெளிச்சம் பரவியது. அங்கே ஐம்பதுகளில் உள்ள பெண்மணி ஒருவர் தலைமுடியை விரித்து போட்டு எதிரே இருந்த அந்த போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் மாயாவதி.
“ அம்மா இவங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஒக்காந்து இருக்காங்க”
“ அது ஏன் மா கேக்குற. இந்த போட்டோல இருக்குறது தான் உங்க பெரியம்மா பாத்த மாப்பிள்ளை. இவருக்கும் உங்க பெரியம்மாக்கும் கல்யாணம் பண்றதா பேசி இருந்தாங்க. ரெண்டு பேரும் நல்லா பேசி பழகி அவங்க கல்யாண நாளுக்காக காத்திருந்தாங்க. ஆனா கல்யாண நாள்ல இந்த மாப்பிள்ளையோட தம்பியும், நம்ம வீட்டுல வளர்ந்த எங்க சித்தி பொண்ணும் ஓடிப்போய்ட்டாங்க. அதுல நடந்த பிரச்சனையால இவங்களோட கல்யாணம் நின்னுட்டு. அந்த மாப்பிள்ளைக்கும் அவரோட அத்தை பொண்ண அவங்க வீட்ல உள்ளவங்க பேசி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஆனா இத தாங்க முடியாத உங்க பெரியம்மா அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிட்டாங்க”
“ ஏம்மா இவங்கள சரியாக்கி கல்யாணம் பண்ணி வைக்க யாருமே முயற்சி பண்ணலையா”
“ அதெல்லாம் ஒருத்தர பார்த்து கல்யாணம் பண்ண முயற்சி பண்ணுனோம். ஆனா அன்னைக்கு பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரும் போன கார் ஆக்சிடென்ட் ஆகி அவர் அங்கேயே இறந்துட்டாரு. உங்க பெரியம்மாக்கு பழசு எல்லாம் மறந்து போயிட்டு ஆனா அப்ப கூட இந்த போட்டோல உள்ளவர அவங்க மறக்கவே இல்லை. அதுக்கப்புறம் நாங்க அவங்களுக்கு பார்க்காத மருத்துவம் இல்லை. போகாத கோவில் இல்லை. இவங்கள சரி பண்ணவே முடியல. அன்னையிலிருந்து இன்னிக்கு வரைக்கும் இந்த போட்டோக்கு முன்னாடி இப்படித்தான் உட்கார்ந்து இருக்காங்க. தன் பொண்ணு இப்படி ஆனதை பார்த்து தாங்க முடியாம உங்க தாத்தாவும் பாட்டியும் அடுத்தடுத்து செத்து போய்ட்டாங்க. அதுக்கப்புறம் எனக்கு உங்க பெரியம்மா பாத்துக்குறதே பெரிய வேலையா போச்சு. அதனாலதான் உங்க அப்பா உன்னை கொண்டு போய் உங்க பாட்டிக்கிட்ட வளர்க்க விட்டுட்டாங்க. இதனால தான் உன்னை பார்க்க நான் வரவே இல்லடா செல்லம். அம்மாவை மன்னிச்சிருடா” என்றார் கலங்கிய கண்களுடன் தேவி.
error: Content is protected !!