Skip to content
Post Views: 7,284
காதல் அன்று
“நாம் அடிக்கிற இந்த இங்க்லீஷ் கிஸ் ரேஞ்சுக்கெல்லாம், அநேகமா ட்வின்ஸா தான் இருக்கும்” என்று ராகவ் சொன்னதைக் கேட்டு முதலில் கொஞ்சம் அதிர்ந்தாலும், பின் சமாளித்துக் கொண்டு விட்டாள் வித்யா!
“ம்ம். பரவாயில்ல மாமா. பாப்பா வந்தா வரட்டும்!
உனக்கு வாரிசு வரக் கூடாதுன்னு தானே உங்க சித்தி உங்களுக்கு கல்யாணமே ஆகக் கூடாதுன்னு நினைக்குது.
Advertisement
அது நினைப்புல மண்ணை அள்ளிப் போட்டுடலாம், நல்லா ட்வின்ஸா பெத்து!
அப்ப, வா மாமா, நாம கிஸ் பண்ணிக்கலாம், அப்ப தான் சீக்கிரம் பாப்பா வரும்” என்றாள் அதிரடியாய்!
இப்போது அதிர்ச்சியானது ராகவ்!
Advertisement
“அடிப்பாவி, என்ன இந்த எக்ஸ்ட்ரீமுக்கு போறா!” என்று நினைத்துக் கொண்டான்.
Advertisement
“உனக்கு ஆம்பிளப் பிள்ளை வேணுமா, இல்ல பொம்பளப் பிள்ளை இஷ்டமா?” ஆசையுடன் கேட்டாள் வித்யா.
“ம்ம். எனக்கு உன்னை மாதிரி, என் அம்மா நந்தினி மாதிரி பெண் குழந்தை தான் வேணும்! மகாலக்ஷ்மி மாதிரி!” என்றான் ராகவ்!
“எனக்கு எதுனாலும் ஓகே தான்! என்றவள், சீக்கிரம் வா, மாமா வந்து கிஸ் பண்ணு!”
Advertisement
ராகவ் முதலில் அதிர்ச்சியானாலும், பிறகு அவளின் குழந்தைத்தனம் அவன் மனத்தை அப்படியே லேசாக்க, அவளுடன் விளையாட நினைத்து
வேண்டுமென்றே அவளை விட்டு கொஞ்சம் நகர்ந்து போய் வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டு,
“உனக்கு அவ்வளவு ஆசைன்னா, நீ தான் முயற்சி பண்ணனும்!
மாமா ரொம்ப டயர்ட்! நீ வந்து வேணா கிஸ் பண்ணிக்கோ, பாப்பாவை வர வச்சுக்கோ!” என்றான் குறும்புடன்!
அவள் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை!
அவன் அருகில் வந்து, தன் இரண்டு கைகளால் அவன் தலை முடியைக் கோதியவள், அப்படியே குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்!
“ம்ம்.. செல்லாது, செல்லாது இது அம்மா கிஸ்!” என்றான் ராகவ்.
அவள், அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட,
“ம்ம். இதுவும் செல்லாது, இது சும்மா கிஸ்!” என்றான்!
அவள் அவன் மூக்கோடு மூக்கை உரசி கொஞ்சி விட்டு, அவன் இதழ் அருகில் அவள் இதழைக் கொண்டுப் போய் விட்டு,
அதற்கு மேல் அவளுக்கு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அவன் அதற்கு மேல் அவளை விட்டு வைக்காமல் அவளின் வேலையை அவன் எடுத்துக் கொண்டு விட்டான்!
கொஞ்ச நேரம் கழித்து அவளை விட்டவன்,
“ஏய்.. லூஸு.. வெறுமனே இப்படி கிஸ் பண்ணிட்டு இருந்தா மட்டும் பாப்பா வந்திடாது, அதுக்கு இன்னும் நிறைய ப்ராசெஸ் இருக்கு!”
“அப்படியா” என்றாள் வித்யா அப்பாவியாய்!
“ஆனால் நாம கல்யாணம் ஆனா பிறகு அதை தொடங்கினா தான், நாளைக்குப் பிறக்கப் போற நம்ம பாப்பாவுக்கு மரியாதை! சரியா?
எனக்குன்னு சில எத்திக்ஸ் இருக்கு, நான் அத மீற மாட்டேன்!” என்றான் அவளின் நெற்றியில் முட்டியபடி!
“ஆமா, என்னடி நீ, பொசுக்குனு இப்படி பாப்பா பெத்துக்கலாம்னு சொல்லிட்ட, நமக்கு இன்னும் நிச்சயம் கூட ஆகலை! ஒரு வேளை நான் உன்னை கல்யாணமே பண்ணிக்காம ஏமாத்திட்டா என்ன பண்ணுவ!”
“யாரு..நீ..ஏமாத்த போறியா, அதுவும் என்னை!
போ மாமா, அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்!
நீயெல்லாம் ஒரு டம்மி பீசு!” என்றாள் நக்கலாக, கூடவே “என் மாமா ரொம்ப நல்லவன், அவனுக்கு யாரையும் ஏமாத்தவெல்லாம் தெரியாது, வராது!
ஏமாந்து வேணுமினாலும் போவியே தவிர உனக்கு யாரையுமே ஏமாத்த தெரியாது!” என்றாள் காதல் பொங்க!
அவளை அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ராகவ்!
அவனுக்கு அப்படியே கண்கள் கலங்கி விட்டன!
எப்படி ஒரு நம்பிக்கை இவளுக்கு! அது அவனுக்கு ரொம்ப பெருமையும் கர்வத்தையும் கூட கொடுத்தது.
அணைப்பை விடாமலே பேசினான்.
“ஏய், ஏண்டி உன்னை சில பேர் மயில் மயில்ன்னு கூப்பிடுறாங்க!”
அவள் தலையைத் தூக்காமலே பதில் சொன்னாள்.
“அது என் பாட்டியோட பேர் வள்ளிமயில்.
அதுவும் இல்லாம நான் பிறந்த வருசம் தான் பாரதி ராஜாவின் பதினாறு வயதினிலே படம் வந்து சக்கைப் போடு போட்டதாம்!
அப்ப எல்லோர் மனசுலயும் அந்த மயில், சப்பாணி, பரட்டை பேருங்க நல்லா பதிஞ்சுட்டுது!
அப்ப பார்த்து நான் பிறந்தேனா, எனக்கும் வள்ளிமயில்னே பேர் வச்சுட்டாங்க, அப்புறம் என் அம்மா ரொம்ப சண்டைப் போட்டு
தான் வேற பேர் வச்சாங்க!
ஆனாலும் பாட்டியோட ஊர்க்காரங்க மட்டும் இன்னுமும் என்னை மயில்ன்னு தான் கூப்பிடுவாங்க! அப்பாவும் அப்படி தான் கூப்பிடுவார்.
எனக்குமே இந்த வித்யா பேர சொல்லி கூப்பிடுவத மயில்ன்னு கூப்பிட்டா தான் பிடிக்கும்!
சும்மா ஸ்கூல்ல, வித்யான்னு பேர் வச்சுட்டு மக்கா இருக்கேன்னு கேலிப் பண்ணி, பண்ணி, எனக்கு அந்த பேரை பிடிக்காம போய்டுச்சு!
மாமா ப்ளீஸ் நீயும் என்னை மயில்னே கூப்பிடு!” என்றாள் வித்யா!
“சரிடி.. என் செல்ல மயிலு.. மாமாவை இந்த அளவு நம்புற, ஆனா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரு கண்டிசன் இருக்கு!”
“அப்படி என்ன மாமா பெரிசா கண்டிசன் போடப் போறே?” அசால்டாக தான் கேட்டாள் வித்யா இப்பவும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே!
“ம்ம். நீ ப்ளஸ் டூ கண்டிப்பா பாசாகணும், பாஸ் ஆனா தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லன்னா இல்ல!”
“அய்யோ என்ன மாமா இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலை மேல போடுற, இதெல்லாம் ஆகுற காரியமா?”
“அதெல்லாம் ஆகுற காரியம் தான், மாமா வேணுமின்னா நீ பாஸ் பண்ணி தான் ஆகணும்!”
“ம்ம். மாமா” அவள் சிணுங்க,
“நான் சொன்னா சொன்னது தான்! இது வரைக்கும் வேணா நீ எப்படியோ படிச்சு இருக்கலாம்.
ஆனா நீ இனிமே ராகவ் பொண்டாட்டி ஆக போறவ.
இனி உன்னைப் பார்த்து யாரும் மக்கு வித்யான்னு சொல்லக் கூடாது!”
“அதெல்லாம் சரி மாமா, ஆனா எனக்கு கொஞ்சம் மந்தப் புத்தி மாமா, அந்த அளவு படிப்பு எல்லாம் வராது!“
“யாருடி அப்படி சொன்னா? அதெல்லாம் நல்ல அறிவு, தெளிந்த சிந்தனை எல்லாம் இருக்கு, பேச்செல்லாம் என்னமா பேசுற, ரொம்ப ஆழ்ந்து சிந்திக்கிறவங்களால தான் இப்படியெல்லாம் பேச முடியும்!
ஆனா நீ வேற எங்கியோ லேக் (Lack) ஆகுற! அதை தான் கண்டுப் பிடிக்கணும் முதல்ல!
ஆமா நீ என்ன க்ரூப்?” கேட்டான்.
“காமர்ஸ்!”
“நினைச்சேன்! கிஸ் பண்ணினா குழந்தை வந்துடும்மான்னு கேட்டப்பவே, தெரிஞ்சது! உனக்கு எந்த அளவு சயின்ஸ் நாலேட்ஜ் இருக்குன்னு!
ஆனா, அட்லீஸ்ட் டென்த் வரைக்கும் சயின்ஸ் படிச்சு இருப்பியே!
ஆமா டென்த்ல நீ எவ்வளவு மார்க்! முக்கியமா சயின்ஸ்ல?”
‘மாமா அதை ஏன் இப்ப கேக்குற?”
“காரணம் இருக்கு சொல்லு!’
“மொத்தமே டூ பிப்டி தான்! எல்லாத்துலயும் ஜஸ்ட் பாஸ். மேத்ஸ் தவிர!”
“மேத்ஸ்ல எவ்வளவு?”
‘ம்ம் சென்டம்!”
“அப்படியா?” அவன் அதிர்ந்தான்!
அவளுக்கு மேத்ஸ் நன்றாகவே போட வரும்.
மத்த சப்ஜெக்ட் தான் பிடிக்காது!
குறிப்பாக, மனப்பாடம் பண்ண வேண்டியிருந்த சயின்ஸ்!
உண்மையில் அவள் அதில் ஜஸ்ட் பாஸ் ஆனதே கூட தமிழரசன் பேப்பர் சேஸ் செய்ததால் தான்!
அவளின் மேத்ஸ் மார்க்கைக் காட்டி!
இதனால் வீட்டில் ரொம்பவும் கேலி செய்யப் பட்டாள்!
ஆனால் அப்போது படுத்தப் படுக்கையாய் இருந்த அவள் பாட்டி தான் அப்போதும் அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் முட்டுக் கொடுத்தார்!
“அவள் எங்க படிக்க முடிஞ்சது? இந்த கிழவியப் பார்த்துக்கவே அவளுக்கு நேரம் சரியா போச்சு, அவள் பாசானதே பெரிய விசயம்! போவிங்களா” என்று!
இந்த பேச்சுகளில் அவள் எடுத்த அந்த சென்டம் பற்றி யாரும் பேசவும் வில்லை! பாராட்டவும் இல்லை!
அதனால் நாம் என்ன பண்ணினாலும் இந்த மக்கு பட்டம் போகப் போவதில்லை!
பின் எதற்கு ரொம்ப கஷ்டப் பட்டுக்கிட்டு! என்று தான் அவள் படிப்பை ஆர்வம் செலுத்தாமல் போனதே!
இதை சரியாக கணித்து பிடித்தும் விட்டான் ராகவ்!
“மயிலும்மா, இனி தினம் என்கிட்டயே டியுசன் படிச்சுக்கோ, மாமா உனக்கு சொல்லித் தரேன்!
நீ ஸ்கூல் முடிஞ்சவுடன் டெய்லி இங்க வந்திடு!” என்று சொல்லி விட்டான்.
அதைப் போலவே அவளும் தினமும் அவள் வரத் தொடங்கினாள்!
வீட்டில் பிரன்ட் வீட்டில் படிக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு!
யாருக்கும் ஒரு சந்தேகமும் வர வில்லை!
ஒரு நாள் அந்த மாடி வீட்டின் நுழைவாயில் அருகே நின்று ராகவின் நெற்றியில் முட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்த வித்யாவை, கீழே அந்த மளிகைக் கடையில் இருந்து அவள் அண்ணன் வாகீசனின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டான்!
பார்த்த கையோடு வாகீசனுக்கும் போனில் கூப்பிட்டு சொல்லியும் விட்டான்!
அவ்வளவு தான் வீடே ரணகளமாகி விட்டது!
ஏற்கனவே லதாவுக்கு இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லை!
அதோடு அன்று பேசி சென்றவர்கள் மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை!
அதற்குள் இவள் இப்படி அவனோடு பழக ஆரம்பித்து விட்டது அவருக்கு ரொம்பவே அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது!
அய்யோ, அந்த ஈஸ்வரி, ஒரு வேளை இந்த கல்யாண ஏற்பாட்டைக் கெடுத்து நிறுத்தி விட்டால், அவர் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆவது!
படிக்க வில்லை என்றாலும் கூட கொஞ்சம் பவுன் போட்டு நல்ல இடத்தில் கொடுத்துவிட வேண்டுமே தவிர இப்படி அல்ல!
அவருக்கு பயங்கர கோபம் வந்து வித்யாவை கன்னா பின்னாவென்று அடித்து விட்டார்!
அவள் கன்னங்களில் விரல் அச்சுகள் விழும் அளவு!
அவள் அழுது கொண்டே ரூமில் படுத்து விட்டாள்.
ராகவை சந்திக்க போக வில்லை!
மறு நாளும், அதற்கு அடுத்த நாளும் இது தொடர, ராகவிற்கு சந்தேகம் வந்து விட்டது!
அவளுக்கு காய்ச்சல் என்றால் கூட போனிலாவது சொல்லியிருப்பாள்,
இப்படி பேசாமல் எல்லாம் இருக்க மாட்டாளே என்று!
அவன் அவள் வீட்டிற்கு போன் பண்ணினான்.
வித்யாவை போனை எடுக்க விடவில்லை லதா! அவரே எடுத்தார்.
“இல்ல தம்பி, நீங்க நடந்துக்கிறது ஒண்ணும் சரியா படல.
இன்னும் உங்க வீட்டுல இருந்து யாரும் ஒரு வார்த்தை கூட பேச வரல, இப்படி இருக்கிற சூழ்நிலையில் நீங்க ரெண்டு பேரும் இப்படி பழகுறது நல்லா இல்லை!
வேணாம் என் பொண்ணை விட்டுடுங்க!” என்று சொல்லி விட்டு பட்டென்று போனை வைத்து விட்டார், அவனின் பதிலைக் கூட கேட்காமல்!
ராகவிற்கு வித்யாவின் நிலைமை புரிந்தது.
இப்போது பெரியப்பா வேறு இல்லை! யூ எஸ் போனவர் இன்னும் திரும்ப வில்லை!
இடையில் அவனுக்கு அங்கிருந்து போன் செய்தவர், தான் வந்தவுடன் கல்யாண தேதி நிச்சயம் செய்து விடலாம் என்றும் சொல்லியிருந்தார்!
இப்போது வந்திருப்பாரா? தெரியவில்லை!
நமிபிக்கையில்லாமல் தான் அவன் வித்யா வீட்டின் அருகே இருந்த பூத்தில் இருந்து அவரின் லோக்கல் நம்பருக்கு போன் செய்தான்,
அவரே எடுத்தார்!
“நான் இப்ப தான் ராகவ் ஏர்போர்ட்டில் இருந்தே வந்தேன், உள்ளே நுழைஞ்சேன், உன் போன்!”
அவன் விஷயத்தை சொன்னவுடன், அவர் உடனே அப்படியே கிளம்பி வித்யாவின் வீட்டுக்கே ராகவுடன் சென்று விட்டார்!
error: Content is protected !!