Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK-11-2

“ என்ன சகோ கிளாஸ் ஆரம்பிக்க போது இன்னும் நம்ம இனியா சகோவ காணோம்” என்றாள் பிரியங்கா

“ அதானே இன்னும் என்ன செய்றா இவ. இவ சொல்லி தானே இந்த காலேஜ்ல நம்ம சேர்ந்தோம் கடைசியில இவ கோயம்புத்தூரில் இருந்துட்டாளா என்ன சகோ” என்றாள் பயத்துடன் பூஜா.

“ வாய கழுவு சகோ நம்ம தலைவி ஒன்னும் அப்படி பண்ண மாட்டா. கண்டிப்பா வந்துருப்பா பாரு சகோ. எதுக்கும் வா நம்ம கேண்டின்ல போய் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம் சகோ” என இருவரும் கேண்டின் நோக்கி சென்றனர்.

 அவர்கள் சந்தேகப்பட்டது போல அங்கே இருந்து தான் வாய்க்கொள்ளாத அளவு சமோசாவை தின்று கொண்டிருந்தாள்.



Advertisement

 “சகோ ஃபர்ஸ்ட் நாள் காலேஜ் ஒரு பயம் இருக்கா உனக்கு. அதுவும் இவ்ளோ பெரிய தப்பு நீ பண்ணலாமா. என்கிட்ட சொன்னா நானும் வந்து இருப்பேன் சகோ. நீ மட்டும் வந்து தின்னுட்டு இருக்க இது நியாயமா தர்மமா” என்றாள் நாடகப்பாணியில்

“சகோ உனக்காக சிக்கன் சமோசா வெயிட்டிங் இங்க பாரு”

“ அதான பார்த்தேன் என் சகோ எனக்கு துரோகம் பண்றதாவது இதுதான் நட்புக்கு அழகு” என்று சொன்ன பிரியங்கா அவளின் பக்கத்தில் உட்கார்ந்து சமோசாவை திங்க தொடங்கினாள்.

Advertisement

 இருவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்த பூஜா, “ கொஞ்சமாவது பயம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும். நமக்கு இன்னைக்கு தான் காலேஜ் பர்ஸ்ட் டே. யாராவது ரேகிங் பண்ணா என்ன பண்ணுவீங்க” என்றாள் பயத்துடன்.

Advertisement

“அட கொஞ்சம் அங்க பாரு சகோ என்ன ராகிங் பண்ணவன் தான் இப்ப சமோசாவுக்கு காசு கொடுத்துவிட்டு இருக்கான்”

 என்றதில் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே உயரமான ஒருவன் கையில் கூல் ட்ரிங்க்ஸ் ஒன்று வாங்கிக் கொண்டு மொத்தத்திற்கும் சேர்த்து பில் பே பண்ணிக்கொண்டு இருந்தான்.

“ எப்படி சகோ வந்த முதல் நாளே இவன் உன் கிட்ட மாட்டுனான்”

Advertisement

“ கம்பெனி சீக்ரெட் அதெல்லாம் வெளியே சொல்ல கூடாது சகோ” என்றவள் அவன் தங்களை நெருங்கி வருவதை பார்த்தவுடன் அமைதியாக இருக்கும்படி இருவருக்கும் கண் காட்டினாள் இனியா.

“ தங்கச்சிமா இப்ப பரவாயில்லையா இந்தாடா இந்த கூல்டிரிங்ஸ் சேர்த்து குடி அப்பதான் பசி அடங்கும்” என்று சொல்லி பாசமாக கூல்டிங்ஸை இனியாவிடம் நீட்டினான் அவன்.

“ சரி னா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நீங்க செஞ்சது நான் இன்னைக்கு மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கொடுத்ததை வாங்கி குடித்தாள்.

“ இதுல என்னம்மா இருக்கு இன்னும் என்ன வேணும்னாலும் அண்ணன் கிட்ட கேளு நான் வாங்கி தரேன் சரி மா கிளாசுக்கு டைம் ஆச்சு நான் போறேன்” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு காலி செய்தான் தீபக்.

“ ஏய் யாரடி இந்த கோமாளி. உன் கூடவே இருக்கிற எங்கள கண்டுக்கவே இல்ல. எப்படி இவன் உனக்கு கிடைச்சான்”

“ அதுவா இந்த லூசு காலைல என்னை ராகிங் பண்ணலாம்னு சொல்லி கூப்பிட்டான். நான் இவன் கூப்பிட்ட உடனே மயங்கி விழுற மாதிரி ஒரு பிலிம் காட்டுனேன. உடனே பயந்து போய் கேண்டின் கூட்டிட்டு வந்து இதெல்லாம் வாங்கிட்டு வந்து கூடவே கூல் ட்ரிங்க்ஸ் தந்துட்டு போறான் முட்டாப் பய” என்றாள் இனியா.

“ அதானே எங்க சகோவ யாராவது ராகிங் பண்ண முடியுமா என்ன” என்று சொல்லி இருவரும் ஹைஃபை போட்டுக் கொண்டனர்.

“ ஏய் இது நம்ம ஊரு கிடையாது ரெண்டு பேரும் கொஞ்சம் அடக்கி வாசிங்க. வந்த முதல் நாளே இவ்வளவு தாங்காது இந்த காலேஜ்” என சொல்லி இருவரையும் இழுத்துக் கொண்டு தங்களின் கிளாஸ் ரூமுக்கு சென்றாள் பூஜா

 இவர்கள் மூவரும் பேசுவதை அவர்களுக்கு பின்னே உள்ள டேபிளில் இருந்து ஒருத்தன் சிரித்துக்கொண்டு கேட்டு இருந்ததை மூவரும் கவனிக்கவில்லை.

 

 

@@@@@@@@@@@@

 

 

“ என்ன பிரதர் உன் பேஸ் இன்னைக்கு கொஞ்சம் பிரைட்டா இருக்கு என்ன நடந்துச்சு காலேஜ்ல” என்றான் தனியாக புன்னகை முகமாய் இருந்த அண்ணனிடம் கவின்.

“ அதுவாடா இன்னைக்கு ஒரு பொண்ணுக்கிட்ட காலையில நம்ம தீபக் மாட்டிக்கிட்டான்” என்றான் சிரிப்புடன் இன்பா.

“பொதுவா தீபக் பொண்ணு கிட்ட எதுவும் பேச மாட்டானே. எப்படி மாட்டுனான்”

“அதை ஏன் கேக்குற பசங்ககிட்ட இன்னைக்கு நான் ஒரு பொண்ணை ராகிங் பண்ணுறேன்னு சொல்லி பெட் கட்டி இவளை கூப்பிட்டான் டா. அவ முகத்தைப் பார்த்து பாவம் நெனச்சு கூப்பிட்டான். ஆனா அவ பெரிய தில்லாலங்கடியா இருந்திருப்பா போல இவன் கிட்ட வந்து அப்படியே தலை சுத்துற மாதிரி ஒரு ஆக்சன் பண்ணுனா பாரு. பய பயந்து போய் வாமா தங்கச்சின்னு சொல்லி கேண்டின் கூட்டிட்டு போய் சமோசா வாங்கி கொடுத்து அதுவும் பத்து சிக்கன் சமோசாடா இதுல ஒரு கூல்ட்ரிங்ஸ் வேற. இத்தனையும் வாங்கி கொடுத்துட்டு கிளாஸ் ரூம் வந்தா அங்க அவ உக்காந்து இருக்கா அத பாத்த உடனே நம்மால் மூஞ்சி போச்சு பாரு ஒரு போக்கு அதை இப்ப நினைச்சாலும் தாங்க முடியலடா” என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான்.

“ டேய் ஏன் டா அவன் சரியா தானடா செஞ்சான் மயங்கி விழுந்தவளுக்கு சாப்பிட வாங்கி கொடுத்து இருக்கேன் இதுல என்ன சிரிக்கிறதுக்கு இருக்கு” என்றான் புரியாமல்

“ அங்க தான் டா செம ட்விஸ்ட் நம்ம ஆளு அவள ராகிங் பண்ண கூப்பிட்டா அவ நம்மாள ராகிங் பண்ணி இருக்காடா. அவளுக்கு தல சுத்தவே இல்லை சும்மா சீன் போட்டு இவனுக்கு தண்டமா நூறு ரூபா செலவு வச்சிட்டு போயிட்டா டா. சரி ஏதோ சின்ன பொண்ணு விளையாட்டு நினைச்சுட்டு கிளாஸ் ரூமுக்கு வந்தா அங்கு அவ ஒக்காந்து இருக்கா. இவனுக்கு ஒரே சாக்கு கிட்ட போய் தங்கச்சிமா இப்ப பரவாயில்லையான்னு கேட்டான் உடனே அவ டேய் முட்டைகோஸ் யார் டா உனக்கு தங்கச்சி அடிங்க நல்ல முருங்கைக்காய் மாதிரி இருந்துக்கிட்டு என்னைய நீ கலாய்க்கப் பாக்கியா சொல்லி திட்ட தொடங்கிட்டா நம்ம ஆளுக்கு செம பல்பு இன்னைக்கு” என்று மீண்டும் சிரிக்க தொடங்கினான். இப்போது அவனுடன் கவினும் சேர்ந்து சிரித்தனர். சிறிது நேரம் இருவரும் சிரித்து விட்டு தனது அண்ணனை பார்த்து,

“அது சரி ஆனா அந்த பொண்ண பத்தி சொன்னா உன் பேஸ் அப்படியே பிரைட்டா ஆகுது. என்ன பிரதர் வேற ஏதாச்சும் எண்ணம் இருக்கா என்ன”

“அட போடா நம்ம அம்மா பத்தி தெரிஞ்சுக்கிட்டே நீ இதைக் கேட்க பாத்தியா. அவங்களுக்கு தான் லவ்வும் பிடிக்காது லவ்வர்ஸ்யும் பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா”

“ அவங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கும் தெரியும் ஆனா உனக்கு இவங்கள புடிச்சி இருக்கா இல்லையா அதுதான் கேள்வி”

“தெரியல டா அவ விளையாட்டுத்தனம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பார்க்கலாம்” என்றான் ரசனையுடன்

“ அப்போ ஓகே விழுந்துட்ட. சரி அண்ணி எப்போ என் கண்ணுல காட்ட போற”

“ டேய் நீ வேற கத்தாதடா அம்மா காதுல விழுந்துற போகுது அப்படில்லாம் ஒன்னும் இல்ல ஒருவேளை அப்படி எனக்கு தோணுச்சுன்னா பஸ்ட் உன்கிட்ட தான் சொல்லுவேன் ஓகேவா இப்போதைக்கு கொஞ்ச நேரம் உன் வாயை மூடிட்டு இரு” என்று சொல்லி தனது அறைக்கு சொல்றான் இன்பா.

 போகும் அவனைப் பார்த்துக் கொண்டே, “ ஈசு உன் பெரிய பையன் உனக்கு பெரிய ஆப்பா வைக்கப் போறான் போல கெட் ரெடிமா” என்றான் சத்தமாக கவின். ஆனால் அவனுக்கு தெரியவில்லை தனது அண்ணன் வைத்து ஆப்பு தனக்குத்தான் என்று.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!