Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கவிதையாய் ஒரு காதல்- கவிதை 7

கவிதை 7

என்ன தான் பழக்கமானவன் என்றாலும் ஒரு வித பயத்துடன் தான் முதலிரவு அறைக்குள் நுழைந்தேன்…

பிரபஞ்சனுக்கு சின்ன தயக்கமும் இல்லை…

வேஷ்டி சட்டையுடன் கட்டிலில் அமர்ந்து அலைபேசியினை பார்த்துக் கொண்டு இருந்தவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான்…



Advertisement

அவனை பார்க்கவே கூச்சமாக இருந்தது…

கையில் இருந்த பால் செம்பை குனிந்தபடியே நீட்ட, அவனோ மென் சிரிப்புடன் அதனை வாங்கிக் கொண்டவன், “இதெல்லாம் ஓவர் டி” என்று சொன்னான்…

சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, “கொஞ்சம் வெட்கப்பட விடுறீங்களா ப்ளீஸ்” என்றேன்…

Advertisement

சத்தமாக சிரித்தபடி, பால் செம்பை தூக்கி அருகே இருந்த டீப்பாயில் வைத்தவன், என் கையை பற்றி இழுத்து அருகே அமர வைத்தான்…

Advertisement

எனக்கு மூச்சடைத்தது…

என்ன தான் இயல்பாக இருக்க முயன்றாலும் உள்ளுக்குள் ஒரு படபடப்பு.

இதனை பற்றி எல்லாம் இரவு நேரங்களில் பேசி இருக்கின்றோம் தான்…

Advertisement

அதுவே நிஜமாகும் கணம் எனக்குள் ஒரு பிரளயம்…

என் கையை பற்றிக் கொண்டே, “ஃபெர்ஸ்ட் நைட் இருக்கட்டும், லைஃபை பிளான் பண்ணலாமே” என்று சொன்னான்…

அவளோ, “ஒரு  வருஷத்துக்கு குழந்தை வேணாம்னு ஏற்கனவே பேசி வச்சது தானே” என்றேன்…

“அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான்…

எனக்குள் இருக்கும் அமெரிக்க கனவை சொல்வதா வேண்டாமா? என்று தடுமாற்றம்…

இப்போது சொல்லி இனிய உணர்வை நான் கலைக்க விரும்பவில்லை…

அவன் இதனை எப்படி எதிர்கொள்வான் என்று தெரியாதே…

“அதுக்கு மேல என்ன பிளானிங்?” என்று கேட்டேன்…

“பேச ஒன்னும் இல்லன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்று சொல்லிக் கொண்டே, என் கழுத்தை பற்றி, இதழில் அழுத்தமாக அவன் இதழ்களை பதித்துக் கொண்டான்…

அதன் பிறகு நடந்ததுக்கு அவனும் நானும் சம பொறுப்பு தான்…

என்னை மொத்தமாக களவாடிக் கொண்டான்…

எனக்குள் என்னென்னவோ உணர்வுகளில் பிரவாகம்…

நான் ஆசைப்பட்ட ஒருவனுடன் இருக்கும் இந்த நெருக்கமான அந்தரங்க கணங்களை ரசித்து அனுபவித்து அவனை மொத்தமாக உள்வாங்கியும் கொண்டேன்…

சின்ன சின்ன சீண்டல்கள், சில்மிஷங்கள், முத்தங்கள், முனகல்கள் என வெற்றிகரமாக அரங்கேறியது எங்களது முதலிரவு…

ஒரு வாரம் இருவருக்கும் விடுமுறை ஆயிற்றே…

எனது அத்தை, அது தான் பிரபஞ்சனின் அம்மா, எதுவும் பெரிதாக வார்த்தைகளை விடவில்லை…

சாதாரணமாக பேசி, என்னுடன் நல்ல உறவை பேண நினைத்து இருப்பார் போலும்…

மகன் மேல் அவருக்கும் பாசம் அதிகம் ஆயிற்றே…

அவனுக்காக என்னை பொறுத்துக் கொள்ள நினைத்து இருந்தார்…

பிரபஞ்சனும் எனக்காக பேசி இருப்பான் என்று தோன்றியது…

நானும் அவர் அபிமானத்தை பெற வேண்டும் என்கின்ற ஒரே காரணத்துக்காக வீட்டு வேலைகள் எல்லாம் செய்து அவர் மனதை குளிர்வித்துக் கொண்டேன்…

பிரபஞ்சனுக்கும் எனக்கும், அன்யோன்யமும் அன்பும் சேர்ந்து அதிகரித்துக் கொண்டது…

இந்த சந்தோஷமான கணங்கள் மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும்.

அதுவரை சீராக தான் எங்கள் வாழ்க்கை சென்றது…

எனக்கு அலுவலகத்தில் கிடைத்த ப்ரோமோஷன் தான் எங்கள் வாழ்க்கைக்கு எமனாக வந்து சேர்ந்தது…

அன்று எனது மேலாளர் என்னை அழைத்து இருந்தார்…

நானும் ஆர்வமாக செல்ல, அவரோ, “கங்கிராட்ஸ் ஹரிணி, அமெரிக்காவுக்கு போற டீம் ல நீங்க செலெக்ட் ஆகி இருக்கீங்க” என்று சொல்ல, எனது விழிகள் ஆச்சரியமாக விரிந்தன…

“தேங்க்ஸ் சார்” என்றேன்…

“அஞ்சு வருஷம் அங்கே நீங்க வேலை பார்க்கணும், உங்க பெர்ஃபோர்மன்ஸ் நல்லா இருந்தா, காண்ட்ராக்ட் எக்ஸ்டெண்ட் பண்ணுவாங்க” என்று சொல்ல, என் முகம் எல்லாம் பூரிப்பு…

எனது ஆசை நிறைவேற போகின்றது…

“ரொம்ப சந்தோசம் சார்” என்றேன்…

“உங்களுக்கு ஓகே தானே” என்று கேட்டார்…

சந்தோஷத்தின் மிகுதியில் நான் பிரபஞ்சனிடம் கேட்பது பற்றி யோசிக்க கூட இல்லை…

அவன் சம்மதிப்பான் என்கின்ற நம்பிக்கையில், “ஓகே தான் சார்” என்றேன்…

இந்த வாய்ப்பை நான் தவற விட விரும்பவில்லை…

எனது கனவுக்கு கிடைத்த அஸ்திவாரம் இது…

விட்டுக் கொடுக்க இஷ்டமே இல்லை.

சாதித்து விட வேண்டும் என்கின்ற ஆசை இப்போது வெறியாக இருக்க, சம்மதித்து விட்டேன்…

அடுத்த நான்கு மாதங்களில் கிளம்பியாக வேண்டும்…

அலுவலகத்தில் இருந்து அடுத்தடுத்த விஷயங்களை பார்க்க தொடங்கி விட்டார்கள்…

இன்று நேரே சென்று பிரபஞ்சனிடம் இதனை பற்றி பேச நினைத்துக் கொண்டே, வேலையில் மூழ்கி போனேன்…

அன்று இரவு வீட்டுக்கு வந்ததுமே குளித்து சாப்பிட்டு விட்டு, அறைக்குள் முடங்கிய சமயம், என்னை பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான் பிரபஞ்சன்…

“பேசணும் பிரபஞ்சன்” என்றேன் உணர்வுகளை அடக்கிக் கொண்டே…

“என்னடி?” என்று கேட்டான்.

அவனை நோக்கி திரும்பியவன், “எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சு இருக்கு” என்றேன்…

“வாவ்” என்று சொல்லிக் கொண்டே, என் இதழில் இதழ் பதித்து விட்டு, “ப்ரவுட் ஒஃப் யூ” என்றான்…

அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, “அமெரிக்கா போகணும்” என்றேன்…

மெதுவாக விலகி நின்று கொண்டே, “அமெரிக்காவா?” என்று கேட்டான்…

இதற்கு மேல் என் கனவுகளை மறைத்து பயன் இல்லை…

எல்லாமே சொல்ல தொடங்கினேன்…

“நான் ஃபெர்ஸ்ட் ஆஹ் போறேன் பிரபஞ்சன், அப்புறம் நீங்க வாங்க, அப்புறம் அத்தையை எடுக்கலாம், நம்ம எல்லாரும் அங்கேயே வாழலாம், பிசினஸ் பண்ணலாம், நல்லா உழைக்கலாம், சந்தோஷமா இருக்கலாம், நிறைய குழந்தைங்க பெத்துக்கலாம்” என்று வரிசையாக அடுக்கினேன்…

அவன் முகத்தில் சின்ன சலனம் தெரிந்தது…

பிடிக்கவில்லை என்று யூகித்துக் கொண்டே, “நம்ம ஃபினான்சியல் ஸ்டேட்டஸ் உயர வேணாமா?” என்று கேட்டேன்…

“இப்போ என்ன குறை?” என்று அடுத்த கேள்வி…

“எனக்குன்னு ஆசை இருக்கு பிரபஞ்சன்” என்றேன்…

அவன் முகம் இறுகியது…

“ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்க தோணலையா?” என்று கேட்டான்…

அவன் குரலில் ஏமாற்றம்…

என் இதயத்தில் ஒரு அழுத்தமான உணர்வு…

என்னிடம் மௌனம்…

என்னையே பார்த்துக் கொண்டு இருந்தவன், “அம்மா சம்மதிக்க மாட்டாங்க ஹரிணி, அம்மா இல்லாம நான் வர மாட்டேன்” என்றான்…

ஏனோ அந்த வார்த்தைகள் என்னை தள்ளி வைத்த உணர்வை தான் கொடுத்தது… கோபமும் வந்தது…

“என் கனவு எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு இங்க வாழ முடியாது பிரபஞ்சன்” என்றேன்…

“அப்போ உனக்கு நான் வேணாமா?” என்று கேட்டான்…

என் பலவீனத்தை பிடித்துக் கொண்டான்…

“அப்படின்னு நான் எப்போ சொன்னேன்?” என்று கேட்டேன்…

“அப்போ இந்த அமெரிக்கா எல்லாம் வேணாம்… இங்கேயே சந்தோஷமா இருக்கலாம்” என்று எனக்கான முடிவையும் அவனே எடுத்தான்…

முதல் முறை அவன் மீது எனக்கு ஒரு அதிருப்தி…

என் முடிவை என்னால் எடுக்க முடியாமல் போனதால் உண்டான வலி…

சத்தமாக கத்தி அழ வேண்டும் என்கின்ற உணர்வு தான்…

கண்கள் கலங்கி விட்டன…

“அத்தை கிட்ட நான் பேசி பார்க்கவா?” என்று கேட்டேன்…

என் கடைசி ஆயுதம் தானே…

“சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்…

“பேசி பார்க்கலாமே” என்றான் கெஞ்சுதலாக.

“ம்ம், நாளைக்கு பேசு” என்று சொன்னவன், என்னை முத்தமிட்டு ஆட்கொள்ள தொடங்கி விட்டான்…

வழக்கமாக அவன் மூச்சு காற்று பட்டாலே சிலிர்த்து எழும் என்னால் அவன் ஆழ்ந்த முத்தங்களுக்கு கூட பதில் முத்தங்களை வழங்க முடியவில்லை…

மனம் மரத்துப் போய் விட்டது…

அடுத்த நாள் முதல் வேலையாக, அத்தையின் அருகே சென்று அமர்ந்தேன்…

அவரோ டி வி பார்த்துக் கொண்டு இருக்க, “அத்தை” என்று சொன்னேன்…

“சொல்லு” என்றார் அவர்…

அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்த பிரபஞ்சன் ஒரு கணம் இருவரையும் பார்த்து விட்டு சாப்பிட தொடங்கி விட்டான்.

“எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சு இருக்கு” என்றேன்…

என்னை திரும்பி பார்த்தவர், “ரொம்ப சந்தோசம்” என்றார்…

“அமெரிக்கா போகணும்” என்று சொன்னேன்…

அவர் முகம் இறுகியது…

“ஏன் இங்க இருந்து வேலை பார்க்க முடியாதா?” என்று கேட்டார்…

“அங்கே தான் வேலை பார்க்கணும்” என்றேன் தயக்கமாக.

என்னை ஒரு கணம் பார்த்து விட்டு, “இதுக்கு தான் இவளை கல்யாணம் பண்ணுனியா?” என்று பிரபஞ்சனிடம் கேட்க, அவனோ எதுவும் பேசாமல் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்…

சுருக்கென்று தைத்தது அவனுக்கு…

அவன் நடவடிக்கையே என்னை திருமணம் செய்தது தவறு என்னும் தோரணையில் தான் எனக்கு தெரிந்தது…

சட்டென கண்களும் கலங்கி விட, “அத்தை ப்ளீஸ்” என்று கெஞ்சுதலாக கேட்க, “அமெரிக்கா போறதுன்னா போ, என் மகனுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போ” என்று தலையில் குண்டை தூக்கி போட, வாயடைத்து போய் விட்டேன் நான்…

வழக்கமாக ஏதாவது என் அத்தை பேசினால் கூட என்னை சமாதானப்படுத்த வரும் பிரபஞ்சன், இந்த விஷயத்துக்கு என்னை சமாதானப்படுத்த கூட வரவில்லை…

வேலைக்கு கிளம்பி விட்டான்…

எனக்கு அழுகை…

அடக்கிக் கொண்டே, நானும் வேலைக்கு சென்றேன்…

‘அமெரிக்கா போக முடியாது’ என்று அலுவலகத்தில் சொல்லவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை…

என் உயிர்ப்பே தொலைந்த உணர்வு தான்…

நான் நானாக இல்லை…

ஆனால் பிரபஞ்சன் அதே உயிர்ப்புடனும் உணர்வுடனும் தான் இருந்தான்…

ஒரு மாதம் கடந்து விட்டது…

எப்படி தான் பிரபஞ்சனை சம்மதிக்க வைப்பது என்று தெரியவே இல்லை…

அலுவலகத்திலும் நான் வெளிநாட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டு இருந்தன…

மனம் அழுத்த ஆரம்பிக்க, அம்மாவுக்கு அழைத்து புலம்பினேன்…

“மாப்பிள்ளை சொல்றத கேளு… உன் அத்தை கூட இப்போ உன் கூட நல்லா தானே இருக்காங்க, வாழ்க்கையை கெடுத்துக்காதே” என்று திட்டி விட்டார்.

எனக்கு என்று யோசிக்க யாருமே இல்லை…

பெண் என்றாலே, ஆசை கனவு எல்லாமே தூக்கி எறிந்து விட்டு வாழ வேண்டுமா? என்கின்ற ஆதங்கமும் வலியும் எனக்குள்…

இந்த தடுமாற்றத்தின் நடுவே, நானே எதிர்பார்க்காத அதிர்ச்சி…

அடுத்த மாதமே கர்ப்பம் ஆகி விட்டேன்…

பிரபஞ்சனின் குழந்தையை சுமக்க ஆரம்பித்து விட்டேன்…

கவனமாக இருந்தும் எதிர்பார்க்காத அதிர்ச்சி இது…

பிரெக்னன்சி ஸ்டிக்கில் தெரிந்த இரு கோடுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தேன்…

பிரபஞ்சனின் குழந்தையை சுமக்க ஆசைப்பட்டேன் தான்…

ஆனால் இப்படி ஒரு நிலையில் அல்ல…

மனதளவில் நொறுங்கி இருக்கும் பொது இந்த விஷயத்தை கொண்டாட முடியவில்லை…

எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்கின்ற எண்ணம் தான்…

ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை…

அன்று பிரபஞ்சன் வீட்டுக்கு வரவே நேரம் ஆகி விட்டது…

குளித்து விட்டு வந்தவனிடம், “பிரபஞ்சன் ஐ ஆம் ப்ரெக்னன்ட்” என்று சொன்னேன்…

என்னை அதிர்ந்து பார்த்தவன், “வாட்?” என்று கேட்டான்…

அவனும் இதனை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது…

“ஆக்சிடென்ட் பிரேக்னன்சி” என்றேன்…

எனது கண்களும் கலங்கி விட்டன…

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவனோ, “ஓகே, பெத்துக்கலாம்” என்றான்…

இப்போதும் எனது முடிவை அவனே எடுத்தான்…

சுமக்க போவது நான் தானே… முடிவெடுக்க அவன் யார்? என்கின்ற எண்ணம் தான் எனக்கு…

“என்னால முடியாது பிரபஞ்சன்” என்றேன்…

இப்போதும் நான் எனக்காக பேசவில்லை என்றால் எப்போதுமே பேச முடியாது…

வாயை திறந்து விட்டேன்…

முதல் முறை அவனை எதிர்த்து பேச தொடங்கி இருந்தேன்…

அவன் முகம் இறுகியது…

“என்னடி விளையாடுறியா?” என்று கேட்டான்…

“நீங்க தான் விளையாடுறீங்க” என்று ஆதங்கமாக கண்ணீருடன் வந்தது என் குரல்…

என்னையே பார்த்து இருந்தான்…

கண்ணீரை துடைத்துக் கொண்டேன்…

“எனக்குன்னு ஒரு ஆசை இருக்கவே கூடாதா பிரபஞ்சன்… அமெரிக்கா போகவும் விடல, இதுவும் உங்க இஷ்டம் தானா?” என்று கேட்டான்…

என்னை முறைத்தவன், “அதுக்காக குழந்தையை கொல்ல போறியா?” என்று கேட்டான்…

அந்த வார்த்தைகள் ஒரு மாதிரியாகி விட்டது எனக்கு…

“எனக்கு இருக்கிற மனநிலைக்கு சுமக்க முடியாது பிரபஞ்சன்… ப்ளீஸ்” என்றேன் கெஞ்சுதலாக.

“என்னடி மனநிலை? ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டு இருக்க… இந்த குழந்தை என்னோடது… அது மேல கை வச்சா மனுஷனா இருக்க மாட்டேன்” என்றான் ஒற்றை விரலை நீட்டி…

முடிந்து விட்டது…

எனக்குள் இருந்த அவன் மீதான ஏதோ ஒன்று அறுந்து விட்டது…

இவனும் சராசரி ஆண்கள் போல தானா? என்று தோன்ற, “நான் கலைக்க தான் போறேன், இது என்னோட குழந்தை” என்று அழுத்தமாக சொல்ல, என் கழுத்தை எட்டி பிடித்தவன், “கொன்னுடுவேன் டி” என்றான் என்னை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே…

இதுவரை அன்பு, காதல் மட்டுமே அவன் விழிகளில் எனக்கு தெரிந்து கொண்டு இருந்தது…

இன்று தான் முதல் முறை, பிரபஞ்சனுக்குள் இருக்கும் ராட்சஷனை கண் கூடாக கண்டு கொண்டேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!