Skip to content
Post Views: 4,611
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 14
ஒரு நாள் கடந்து இருக்க, கொஞ்சம் நிதானமாக இருந்தாள் தாமரை. நேற்றைய இரவில் இருந்து வயிற்று போக்கு நின்று விட்டது, காலையில் தான் சிறிது கஞ்சி தண்ணியை புகட்டி பார்த்தார்கள். உடல் ஏற்று கொண்டதும், தற்போது இளநிர் சேர்த்து கொடுக்க ஆரம்பித்தனர்.
இன்னும் அவசர வார்ட் விட்டு வெளி வர வில்லை. ஆனால், மருத்துவர் நம்பிக்கை அளித்திருக்க, ஓரளவுக்கு தெம்பாக உணர்ந்தார்கள் சொந்தமும், சுற்றமும். குழந்தையை தன் கண் பார்வையிலே வைத்து கொண்டாள் தாமரை. குழந்தையின் கன்னத்து காயமும் ஆறி இருக்க, தன்னால் தானோ? என்ற குற்ற உணர்வும், குழந்தைக்கு என்னவோ? என்ற பயத்தில் இருந்தும் மெல்ல வெளி வர ஆரம்பித்தாள். நடமாட்டம் இல்லை என்றாலும், ஓரளவு எழுந்து உட்கார முடிந்தது. அடிக்கடி குழந்தையை மடியில் தூக்கி வைத்து கொள்வாள். “ நீயே முடியாதவா! செத்து பொழச்சி வந்துருக்க, நாங்க எம்புட்டு பேரு இருக்கோம், பார்த்துக்க மாட்டோமா உம் புள்ளைய கூடுவே”… என்று பூமணி கேட்டாலும் தர மாட்டாள். மூன்று நாள் தாயை காணாத ஏக்கம் போல, குழந்தையும் தாயிடம் ஒட்டி கொண்டது.
சொந்ததிற்க்கு பேச மேலும் ஒரு விசயம் கிடைத்தது போலானது தாமரையின் செயல். “ குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்று தானே இவ்வளவு பிரச்சனையும், இப்ப பிள்ளைய நொடி பிரியாம தாய் நிக்காலே”, “சாக கிடந்தவ பிள்ளைய பார்த்து தானே எந்துருச்சா” “தாமரை மனசு பிள்ளை கிட்ட தான் கெதியா கிடந்துறுக்கு போலவே”. “குளுக்கோஸ் எருன கையோட பிள்ளைய அணைச்சு பிடிக்குற, இவளுக்க பிள்ளை பாசம் இல்லனு அந்த வேலு பய அடிச்சான்” என்று ஊர் மக்கள் அவர்கள் பங்கிற்கு பேசி செல்ல,
Advertisement
சொந்தமும்.. மணி “ தாங்க சிலையாட்டம் இருக்குற புள்ளைக்கு, இப்படிய மாப்பிள்ளை பார்ப்ப, சொந்தனாலும் விசாரிக்க வேண்டாமா!”என்க,
பூமணியும், “ நல்லா சொல்லுங்க அக்கா, அந்த மனுஷன் காதுல விலுராப்புல.. எங்க தாமரைக்கு எம்புட்டு கவர்மெண்ட் மாப்பிள்ளை, என்ஜினியர் மாப்பிளை வந்துச்சு தெரியுமா! அத்தனையும் இந்த பாவி மனுஷன் தட்டி களிச்சாக, என் அக்கா மகன் இருக்க, யாரும் தகுதியாக முடியாதுன்னு மதுரை வீரங்கனக்கா ஒத்த காலுல நின்னு முடிச்சாங்க.. அந்த அக்கா மகன் பவுச பாரும், ஊரே மெச்சுது” என்று வசை பாடியவரிடம்,
“ஜாதகம் ஏதும் பாத்தீகல”என்க,
Advertisement
“இல்லையே மதினி, சொந்தம். ஆயித்த மகன், மாமா மவ. வேற என்னத்த பார்க்க” என்று முடிக்க,
Advertisement
“அப்படி இல்லவே சொந்தம்னாலும் இது எல்லாம் பார்க்கணும். கிரகம் சரி இல்லையோ என்னவோ?, யாருக்கு தெரியும். உயிர் போற அளவுக்கு வந்துருக்கே..” என்று மணி மதினி சொல்லி முடிக்க,
அவரின் அக்கா, “ ஆமா மணி! என்னனு பார்க்கணும். உன் மருமகனுக்கு என்ன பொண்டாட்டி செத்த புது மாப்பிள்ளை.. ஆன புள்ளையா இழந்ததுட்டு நிக்கிறது யாரு? நாம தானே. எனக்கு என்னவோ உன் பேத்தி பொறந்த நேரம் சரியில்லைன்னு தான் தோணுது. அதுக்கு முன்னாடி நல்லா தான இருந்துச்சுங்க ரெண்டும்” என்று முடிக்க,
“அட, அமாக்கா முன்னலாம் தாமரை கிழிச்ச கோட்ட தாண்டாத பையன் தான், இன்னிக்கு சலம்பிக்கிட்டு திரியுறான்” என்று புலம்பிய பூமணிக்கு பேத்தி பிறந்த நேரம் சரியில்லையோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
Advertisement
அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் கொடி. எவ்வளவு நேரம் விஷயத்தை மறைக்க முடியும். கண்டு கொண்டார்… உடன் பிறந்தவன் மீது உப்பளவு கோபம். சொந்த அக்கா மகன் மகளின் கணவன் எது பற்றி நினைக்காமல் மகனை ஜெயிலில் தள்ளியதற்கு தம்பியை வைத்து வாங்கிவிட்டார்.
“எங்க அந்த பசப்பி.. நடிச்சுக்கு உள்ள படுத்து கிடக்காளா? செஞ்ச தப்ப மறைக்க சாகுறேன்னு நாடகம் ஆடி என் மகனை ஜெயில்ல தள்ளிட்டா நாடககாரி… சொந்தம்னு இவளை கொண்டு வந்து வீட்டில் வச்சேன் பாரு என்ன சொல்லணும்… கொஞ்சமும் தகுதி இல்லாத இவள பொண்ணு எடுத்ததுக்கு என் மகனை ஜெயில்ல தள்ளிட்டாலே, விளங்காதவ…” என்று தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்.
சாக கிடக்கும் தன் மகளை ஒரு வார்த்தை கூட கேட்காமல் மகனுக்காக வந்து நிற்கும் அக்காவை பார்த்து சுகத்திற்கு அவ்வளவு கோபம்..
“அக்கா பார்த்து பேசு இனி என் மகளை ஒரு வார்த்தை சொன்ன எனக்கு மூத்தவன் கூட பார்க்க மாட்டேன் தப்பு செஞ்சா உன் மகனை விட்டுட்டு இப்பவும் என் பிள்ளையை குறை சொல்ல வந்து நிக்கிறியே இனி ஒரு வார்த்தை என் மகள பத்தி உன் வாயிலிருந்து வந்துச்சு நமக்குள் ஒரு உறவு இருக்காது….” கடினமான முகத்தோடு சிவம் சொல்லிவிட்டார்.
“ஏலே! உம் மவள ஒத்த சொல்லு சொன்ன, தூக்கி வளத்த அக்காவ வெட்டி வீசிடுவியோ?, அப்போ எம் புள்ள உமக்கு யாருவே?, உன் கூட நிக்குற தருதலைங்க எம் புள்ளையா வெட்டுவேன்னு நிக்கும் போது, எங்கக்கா மவன், எம் மருமவன், என் குடும்பம்ன்னு ஒத்த வார்த்தை சொன்னியாவே!. அப்போ உன் நினைப்புல என்ன இருந்துச்சு, எம் மவன் செத்தா சகட்டும்னு நின்னியோ?. அப்பவே செத்து போச்சுலே உறவு. இனி என்ன பார்த்து பேசுறது! உங்கள தீர்த்து தான் பேசுவேன்” என்று கோபமாக சிவத்தை பார்த்து கத்தியவரின் வார்த்தையில் இருந்த அவேசம் அனைவரையும் கட்டி போட்டது.
“ரெண்டு பொம்பளைகளுக்கு அப்புறம் பொறந்த ஒத்த தம்பி. பெத்தவங்க இல்லாம நாத்தியத்து நிக்க கூடாதுன்னு, உமக்கு நல்லது, கெட்டது பார்த்து கூட நின்ன என்னிய நாத்தியத்து நிக்க வைக்க பார்த்தியா?. எம் ஒத்த மவன தூக்கி குடுக்க தான் நான் உசுற வச்சு இருக்கேன்னு நெனச்சியோ?. வயசான ரெண்டு பொம்பளைகளுக்கும் அவன் ஒருத்தன் தான ஆதரவு, மவன விட்டு அக்கா ரெண்டு பேரும் எப்படி இருப்பாங்கன்னு நினைப்பு இருந்துச்சா?” என்று சாட்டையாக விளாச,
வாய் திறக்க வில்லை சிவம். அவர் சொல்வது அனைத்தும் உண்மை தான். தாமரைக்கு ஒன்று என்றால் வேலுவை போடுவோம் என்று பூமணி வீட்டு ஆள்கள் சொல்லும் போது இவரும் சரி என்று தானே சொன்னார். மகள் மீது கொண்ட பாசம், உடன் பிறப்பை நினைக்க விடவில்லை.
“ஏலே சிவம்! நியி நல்லவனா இருந்த என்ன பண்ணிருக்கனும். இப்படின்னு விவரம்ன்னு தெரிந்த உடனே, என்னிய பார்த்து பேசிருக்கணும்ல. நான் என்ன காணாத சீமையில இருந்தேன். நான் இல்லையா மூத்தவ ஒருத்தி இருக்காள அவ சொல்லாவது கேட்டியா?. அப்படியா உம் பொண்டாட்டி அழுகையும், மவ பாசமும் கட்டி போட்ருச்சு. அப்ப நான் என்னத்துக்குவே உம் மகளை பார்த்து பேசனும். உன் கூட பொறந்தவ உன் புத்தி தான், எனக்கும் எம் மவன் தான் முக்கியம். அவன் வெளிய வரதுக்கு நான் என்னவும் பண்ணுவேன், யாரையும் எதிர்த்து நிப்பேன். உன்னாலே முடிஞ்சத பார்த்துக்க!” என்று தெனவெட்டாக பேச,
ஒருத்தரும் வாய் திறக்க வில்லை. கூட்டத்தின் அமைதி பார்த்த பூமணி அண்ணன், “ என்னாலே! அடங்கி நிக்குறீங்க, அந்த பொம்பள பேச்சுக்கு பயந்துடீங்கல” என கூட்டத்தை பார்த்து கேட்க,
அவர் வார்த்தையில் வெகுண்ட கலைவாணன் வாய் திறக்கும் முன், “ யார பார்த்துலே பொம்பளைன்னு சொன்ன, சங்க அறுத்துருவேன் பார்த்துக்க! நாலு குடிகார பயலுகல கூட்டு சேர்த்த நீயி பெரிய ஆளா! அப்படி பெரிய ஆளாவே இருந்தாலும் உம் சலசலப்புகெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். இந்த அரசி ஆம்பிளைக்கு ஆம்பிளை, போம்பலைக்கு…” விடவே இல்லை கொடி ஒருத்தரும் வாய் திறக்காத படி.. ஒவ்வொருவருக்கும் வாயடைக்கும் பதில் வைத்திருந்தார்.
மாமியாரின் பேச்சு பிரச்சனைக்கு தீர்வு காணாது என்று உணர்ந்த கலைவாணன்.. மணிமாறன் மூலம் கடினப்பட்டு கொடியை அப்புறப்படுத்தினான். பின் சமாதானமாக சிவத்திடம் பேச.. சிவம் பிடி கொடுக்கவில்லை.
“முடியாதுங்க தம்பி உங்க மேல மரியாதை இருக்கு அதற்காக என் மகளை சாகுற அளவுக்கு கொண்டு விட்டவன என்னால மன்னிக்க முடியாது…”
“நம்ம தாமரை மேலயும் தப்பு இருக்கு சித்தப்பா. அதை கொஞ்சம் யோசிங்க பெத்த தகப்பன் புள்ளைய பார்த்து கோவத்துல அடிச்சிட்டான். தாமரை செஞ்சதும் தப்பு தானே சித்தப்பா..” என்று புரிய வைக்க முயன்றான் கலைவாணன்.
“என் பேத்தி நல்லாத்தான் இருக்கு தம்பி. பிள்ளைய நல்லா வைக்கணும்னு எந்த தாய்க்கும் தான் ஆசை இருக்கும் அதுக்காக என் மகளை சாகுற அளவுக்கு தள்றதா…” நன்றாக இருந்த பவித்ராவை பார்த்த சிவத்திற்கு சாகும் நிலையில் இருந்த தாமரையே பெரியதாக தெரிந்தாள்.
இது ஆகாது என்று உணர்ந்த கலைவாணன் “சரிங்க சித்தப்பா கடைசியா என்னதான் சொல்ல வரீங்க ஜெயில்ல இருக்கிறது உங்கள் மருமகன். என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் விட்டுக் கொடுக்க முடியாது நாளைக்கு தாமரையும் அங்கதான் போய் வாழனும். நீங்க என்னதான் சொல்றீங்க?” நேர்பட ஒரு பேச்சு.
“என் மக நிலைக்கு காரணம் வேலு தான். அவனா சும்மா விடமாட்டேன்…” கோபம் குறையவில்லை சிவத்திற்கு…
சரிங்க சித்தப்பா அப்ப நாங்களும் உங்க மகள் மேல கேஸ் போடறோம்?…” இன்று கலைவாணன் சொன்னதும் அதிர்ந்து போய் பார்த்த சிவம்
“என்ன?…”
“ஆமா, நீங்க நியாயம் பேச மாட்டேங்கிறீங்களே.. உங்க மகள் மேல இருக்க தப்ப நீங்க ஒத்துக்கவே மாட்டேங்கிறீங்க. நீங்க வேலு மேல போட்ட கேஸ தொடர்ந்தீங்கன்னா.. நாங்களும் தாமரை மேல கேஸ் போடுவோம். எல்லா ஆதாரமும் பக்காவா ரெடியா இருக்கு.. பவித்ராவை ஹாஸ்பிடலுக்கு அட்மிட் பண்ணது, பவித்ராவோட சீரியஸ் கண்டிஷன், டாக்டர் சர்டிபிகேட் எல்லாம் இருக்கு நாங்களும் ஒரு கேஸ் போட்டோம் அப்படின்னா என்ன ஆகும் நிலைமை?..”
“இப்ப வரைக்கும் நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியாது நம்ம வீட்டு பொண்ணுன்னு நாங்களும் வெளியே சொல்லல இனி போலீஸ் கேஸ்டில் போயிருச்சுனா பாத்துக்கோங்க?…” ஒரு மறைமுக மிரட்டல் விட்டான் கலைவாணன். அவனுக்கும் வேற வழி தெரியவில்லை.
சட்டத்தில் பெண்களுக்கு என்று தனி சலுகை இருக்க, வேலு எளிதாக ஜெயிலுக்கு சென்று விடுவான் பாவம் அவன்.. எப்படியாவது வெளியே எடுக்க கலைவாணன் முயன்றான்.
சிவத்திற்கு பேச்சை வரவில்லை. மகள் மீது கேஸ் ஏற்றவும் பயந்து போனார். அவருக்கு மகள் செய்த தவறு புரியவில்லை. கலைவாணன் தாமரை மீது கேஸ் கொடுப்பேன் என்ற பின் வேண்டா வெறுப்பாக வேறு வழி இல்லாமல் மேலும் ஏது போட்ட கேஷை வாபஸ் வாங்கினார்.
வேலு வெளியே வந்த பின் தான் மற்ற அனைவருக்கும் நிம்மதியே.. ஒரு வாரம் இனி சரி கட்டி விடலாம் பவித்ராவும் நன்றாக இருக்க, தாமரையும் ஓரளவு குணமானாள் பிரச்சனை குறையும் என்று எல்லோரும் நினைத்திருக்க…
பூமணி ஊர் பஞ்சாயத்தை கூட்டி விட்டார். அவருக்கு மகளை வேலுவோடு அனுப்ப விருப்பமில்லை. தன் மகளுக்கு ஊர் பஞ்சாயத்திலாவது நியாயம் கிடைக்கட்டும் என்று பெரியவர்களை வைத்து ஊர் பஞ்சாயத்தை கூட்டிவிட்டார்.
ரெண்டே நாளில் முழுதாக சோர்ந்து போனான் வேலு.. ஜெயிலில் இருந்து வெளிவந்தவன். யாரையும் எதிர்கொள்ள துணிவு இல்லாமல் போனான். கலைவாணன் மணிமாறன் யார் சொல்லியும் கேட்காமல் யாரையும் பார்க்காமல் நேராக களத்து மேட்டில் போய் அமர்ந்து கொண்டான் அவன் பேசி சில வார்த்தைகள் மனைவியும், பிள்ளையையும் மட்டும் கேட்டுக் கொண்டான். அவ்வளவுதான்…
error: Content is protected !!