Skip to content
Post Views: 1,719
கீதம் – 10 
காலையில் ரவுண்ட்ஸ் வந்தவன் அனைவரையும் பரிசோதித்து விட்டு இறுதியாக தான் ஜோதியின் அறைக்கு வந்தான். அவனோடு வந்த நர்ஸ், இன்ஜெக்ஷன் எடுக்க சென்றதால், இவன் மட்டுமே கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான். ஜோதி உறக்கத்தில் இருக்க, பாட்டி தன் இரு பேத்திகளை இடுப்பில் வைத்து கொண்டு, தொட்டிலில் படுத்து இருந்த பேரனை பார்த்து, விளையாட்டு காட்டி கொண்டு இருந்தார். ஆரவை அவர் பார்த்ததில்லை. இவன் கையில் ஸ்டெத் இருப்பதை கூட கவனிக்காமல், “இந்தா! யாரு நீ.,? நீ பாட்டுக்கு உள்ளே வர்ற.,? ‘ என்றவாறே சத்தம் போட, ஜோதி விழித்து விட்டாள்.
Advertisement
” பாட்டி கத்தாதே, அவரு தெரிஞ்ச அண்ணன் தான். சும்மா இரு., என்றவாறே ” வாங்க அண்ணா., உட்காருங்க” என சேரை கண் காட்டினாள்.
உள்ளே வந்தவனோ ” என்ன பாட்டி, அன்னைக்கு தானே பேசினோம்., மறந்துட்டீங்களா” என்றபடி அமர்ந்தான்.
Advertisement
Advertisement
முகத்தை உற்று பார்த்து விட்டு, “ஆமா, அந்த ராங்கி கூட ஜோடி போட்டு வந்தியே., அவன் தானே நீ., இங்க என்னத்துக்கு வந்த .,” என அவனிடம் கேள்வி கேட்கும் போதே அறைக்குள் நுழைந்த நர்ஸ். ” பாட்டி., அவரு டாக்டர், யாருன்னு தெரியாம மரியாதை இல்லாம பேசாதீங்க., ” என்றதை கேட்டவுடன் தான் அவனை இருவரும் உற்று நோக்கினர்.
“மன்னிச்சுக்கோங்க அண்., டாக்டர்., அக்கா கூட வந்ததால் அவங்க கூட்டாளினு நினைச்சுக்கிட்டோம். சாரி ., ” என தயக்கமாய் ஜோதி பேச
Advertisement
“பரவாயில்லாம., ஒன்னும் தப்பில்ல.., அண்ணனு தானே கூப்பிட்ட, அப்படியே கூப்பிடு “ஆரவ் சொன்னவுடன் இருவர் முகமும் மலர்ந்தது. ஜோதியை பரிசோதித்து விட்டு, கேஸ் பைலில் எழுதி முடித்த பின்,
“நேத்து எல்லாரையும் பயங்கரமா திட்டினீங்கலாம். ஏன் பாட்டி” என மெதுவே அவர் புறம் திரும்பி பேசினான்.
“என்ன புள்ளைன்னு பார்த்துட்டு கூட அப்புறம் பண்ணி இருக்கலாமே. திடுதிடுப்புனு கட்டுப்பாடு பண்றோம்னு சொன்னாக்கா கோபம் வராதா? என் பேத்தி உடம்பு என்னத்துக்கு ஆகுறது? அது தெரியுதா உங்களுக்கு?” குற்றம் சாட்டும் பாவனையில் பாட்டி பேச
“எங்களுக்கு தெரியலையா.. சரி தான்” என சிரித்து கொண்டே… ஜோதியை கண் காட்டியபடி “இவங்க ரொம்ப வீக்கா இருந்தாங்க. பிரசவத்தை தாங்குற அளவுக்கு உடம்புல சக்தியே இல்லை. ரத்தம் ஏத்தி தான் பிரசவம் பார்த்தோம். லேட்டா முடிவெடுத்து பண்ற அளவுக்கு நேரமில்லை. இங்கே நேரம் ரொம்ப முக்கியம். நாங்க உங்களுக்கு நல்லது தான் பண்ணுவோம். அவங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆனால் நீங்க தானே கஷ்டப்படுவீங்க. புரிஞ்சுக்கோங்க பாட்டி..,” என்றவனிடம் அப்போதும் முறுவல் மாறாமல் புன்னகை தான் முகத்தில் குடிகொண்டு இருந்தது. மெல்லிய புன்னகையுடன் பேசியவனை கண்டு
“அந்த ராங்கிகாரி நல்ல ஜோடியை தான் புடிச்சிருக்கா” என முனுமுனுத்தவர் “எல்லாம் சொன்னாங்க, நான் தான் பயத்துல தெரியாம திட்டிப்புட்டேன். மன்னிச்சுகிடுங்கனு அய்யாகிட்ட நேத்தே சொல்லிட்டேன் தம்பி” என அப்போதும் முறுக்கி கொண்டார்.
அவர் முனுமுனுத்தது கேட்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் “சிஸ்டர் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு வாங்க. நான் op போகிறேன்.., “என்றவாரே போனில் குறுஞ்செய்தியை பார்த்தபடி அங்கேயே அமர, செவிலி வெளியேறிய பின்னர், பாட்டியிடம் குரலை தாழ்த்தியபடி ஏஜென்ட் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு வெளியேறினான்.
அவனின் சந்தேகம் ஊர்ஜிதமாகும் வகையில் கேட்ட செய்தியும் இருந்தது. இவனை விட கூடாது என மனதில் திட்டி கொண்டே கமிஷனருக்கு அனைத்து விஷயங்களையும் குறுஞ்செய்தி வழி அனுப்பிய பின்பே, நோயாளிகளை பார்வையிட ஆரம்பித்தான்.
பரபரப்பாக அடுத்தடுத்து வந்த நோயாளிகளை பார்த்து முடித்து நிமிரும் போது மணி இரண்டை கடந்து விட்டது.
கேஸ் எதுவும் இல்லாததால் அவன் முன் சென்று நின்றவள், ” சார்..” என அழைத்து, பேச்சை துவக்க முயல
” சொல்லுங்க நந்திதா மேடம் ..,” என்றவனை பார்த்து விட்டு, கேம்ப் ஏற்பாடுகளை பற்றிய டீடெயில்ஸ் அடங்கிய கோப்பினை கொடுத்தாள்.
அதை முழுவதும் படித்து நிமிர்ந்தவன், ” ம்ம். ஓகே. மெடிசன்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கோங்க. நேத்து அவங்கட்ட பேசும்போது நிறைய பேருக்கு சளி பிரச்சனை தொடர்ந்து வருதுன்னு சொன்னாங்க. லேப் டெக்னிசியன் நாலு பேரையும் சேர்க்கணும். டெஸ்டிங் மெட்டரியல்ஸ் கொஞ்சம் சேர்த்துக்கோங்க. ” என நிறைய விஷயங்களையும் சேர்த்து, விவாதித்து, ரவியிடம் கலந்து பேசி அனைத்து வேலைகளையும் முடித்தனர். “நீ சாப்பிட கிளம்புடா. ஈவினிங் வா. போதும்” என அவளை அனுப்பிவிட்டு இவர்களும் கிளம்பினர். ரவி மேலே செல்ல, ஆரவ் மீதி வேலையை பார்த்த படி அமர்ந்து இருந்தான்.
நந்திதா ஆயத்தமாகி கிளம்ப “ஏய், ராங்கி ! இந்தாடி கேக்கு சாப்புட்டு போ., என்றபடி பாட்டி அவளை இடைமறித்தார்.
“லேட்டா வந்து கேக்கு கொடுத்தா, நான் வாங்கனுமா, முடியாது” முறுக்கி கொண்டவளை பார்த்து
” நேத்து நீ தாண்டி வரல. நான் என்னத்த பண்ண? “
“இந்த கதை எல்லாம் என்கிட்ட வேணாம் காது டார்லிங். ஒழுங்கா பிரியாணி சமைச்சு கொடு.. வரேன்” அவரோடு வம்பு பேச
” வூட்டுக்காரனோட வீட்டுக்கு வாடி, சமைச்சு தரேன்..,” பாட்டியின் பதிலில்
” பாருடா இவங்க பிரியாணியை சாப்புட நாங்க கல்யாணம் பண்ணிக்கணுமா? என்னா டார்லிங்..,” என்றபடி தோளில் கைப்போட்டு கொண்டு, கேக்கை எடுத்து சாப்பிட்டாள்.
” கைய எடுடி. பெருசுன்னு மருவாதி இருக்கா. .,”
” நீ என் செல்ல பாட்டி. புஜ்ஜு பாட்டி.., நான் போடாம வேற யாரு போடுவா..,” கன்னத்தை வேறு கிள்ளி கொஞ்ச
கூச்சத்துடன் நகர்ந்தவர் “உன் புருஷனை கொஞ்சுடி . என்னை விடு..,” என்றப்படி அவளை தள்ளி நிறுத்தி ” நீ சொன்னபடி எனக்கு பேரன் பொறந்துட்டான். எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா? உனக்கு தான் ஸ்வீட் கொடுக்க தேடுனேன். நீ இல்லடி என் ராசாத்தி .., நல்லா இருப்படி நீ ..,” என நந்துவின் கையை பற்றி கொண்டு தழுதழுக்க பேச
” அச்சோ. ஒன்னு காது கிழிய கத்துறது, இல்லை அழகுறது இதே உனக்கு வேலையா போச்சு பாட்டி… ” என அவரை அணைத்து கொண்டு
” நீ அழுதா நாடு தாங்குமா, தாங்காது காத்தாயி! தாங்காது.,” என அவரை அணைத்து கொண்டு “காத்தாயி! சிரி செல்லம்..,” கொஞ்சி கொண்டு பேசியவளை தன் அறையில் இருந்தபடியே பார்த்து கொண்டு இருந்தவன் மனமோ அவளை நாடி சென்று விட்டது.
ராங்கி யாரென அறிய தான், அவன் தன் இடத்தில் இருந்து எட்டி பார்த்தது. பாட்டி அறையில் சொல்லும் போது புரியாத விஷயம் இப்போது தெளிவாய் புரிந்தது. ” இவளை என் ஜோடியா இன்னும் எத்தனை பேர் தான் சொல்வாங்க. சும்மா இருந்தவன் மனசுல அவளை மட்டுமே சுமக்க வச்சிருவாங்க போல. தர்ஷி தான் ஆரம்பிச்சா.. இப்போ இவங்க… ” மனதின் நினைவு ஊரில் இருந்து வந்த அன்று நடந்தவைக்கு சென்றது.
அன்று பெங்களூரில் இருந்து திரும்பி காரில் வரும் போது, போன் ஒலியெழுப்பி ப்ளூ டூத்தை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.
” அண்ணா., கிளம்பிட்டியா., எப்போ வருவே.,?” அவன் வரும் சந்தோஷத்தில் கத்தி பேசினாள் ரம்யா.
” ஏன்டா, இப்படி கத்துற, நாங்க கிளம்பிட்டோம்., ஈவினிங் ரீச் ஆகிருவோம். “
” ஓய்., உன் அண்ணன் என்னை விட்டுட்டு போக போறான்னு நானே கவலையா இருக்கேன். உனக்கு அவ்ளோ சந்தோஷமோ ..,” என ரம்யாவை தர்ஷி வம்புக்கு இழுக்க.,
” உங்களுக்கு என் அண்ணா, என் மேல் பாசமா இருக்கிறது பார்த்து பொறாமை. என் அண்ணா எனக்கு தான்.., “
” அவன் என் ப்ரண்ட். எனக்கு மட்டும் தான்., என்றதை கேட்டு.
“உங்க ரெண்டு பேருக்கும் அவன் இல்லை. என் மருமகளுக்கு மட்டும் தான். ” என்றவாறே சாவித்திரியும் இணைய.
” உங்க பையனை சொன்னா, உடனே வந்துருவிங்களே., வராத ஆளுக்கு இப்போவே ஜால்ராவா. இன்னும் உங்க பையன் ஒரு பொண்ணை கூட லவ் பண்ண மாட்டேங்குறான். அதுக்கே இவ்ளோ பேச்சு. ம்ம்., இவனுக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. பேசாம நீங்களே ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சிருங்க.”
“மொத உனக்கு தான் முடிக்கணும். அப்புறம் என் பையனுக்கு பார்க்குறேன்..”
” நீங்க கவலையே படாதீங்க. ரெண்டு வருஷம் போகட்டும். நான் எல்லாம் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணுவேன். எனக்கு செட் ஆகுற மாதிரி நீங்களே செட் பண்ணி கொடுத்தாலும் ஓகே. பிரச்சனையே இல்லை. “
” அப்படியாம்ம்மா., சரி உங்க அம்மா கொஞ்ச நேரத்துல இங்கே வருவாளா, அவகிட்ட சொல்லி வச்சிர்றேன். சரியா., ” என அவளுக்கு சமமாய் அவரும் வாயாடினார்.
“என் மேட்டர் விடுங்க. ஆரவ்க்கு என்ன பண்ணலாம். யோசிங்க.,”
“அவனுக்கு என்னடா., எந்த பொண்ணை அவனுக்கு பிடிச்சாலும் ஓகே தான். ஆனா யாரையாவது பிடிக்கணுமே.., “
” ம்க்கும்.., அப்படியே பிடிச்சிட்டாலும்.., கர்நாடக பைங்கிளிகள் சுத்தி வந்தே ஒன்னும் செட் ஆகல. எல்லாரையும் வேணாம்னு சொல்லிட்டான்., இவனுக்கு மட்டும் ஒரு பொண்ணை பிடிச்சி, ஓகே சொல்லிட்டான்., என் ப்ரண்டுகளை எல்லாம் கூட்டி வந்து திருப்பதியிலே மொட்டை போடுறேன்” என சொல்லி முடிக்கவில்லை அதற்குள்
” இருக்கிற ஒரே ப்ரண்டு எங்க அண்ணன் மட்டும் தானே. எத்தனை பேரு இருக்காங்களாம்., ” கேள்வியாய் ரம்யா யோசிக்க.
” மக்கு பாப்பா ., திருப்பதிலே மொட்டை போட வர்றவங்க எல்லாமே என் ப்ரண்டு தானேனு சொல்ல வந்தேன். அதுக்குள்ள .., பேச்சை பாரு.,,” என்றவள் பேச்சை கேட்டு ஆரவ் கூட சிரித்து விட்டான்.
“அப்போ ஊரெல்லாம் உனக்கு பிரண்ட் தானே இருப்பாங்க. மாப்பிள்ளையை எங்கே தேட? ” சாவித்ரி கேள்வி எழுப்ப
” சுத்தி சுத்தி மாப்பிள்ளை பத்தியே பேசுங்க. என்னமோ வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்ச உடனே இவனுக்கு பொண்ணு இருக்கிற மாறி. இவன் கல்யாணம் பண்ணா தான் நானும் பண்ணுவேன். அது வரை பண்ண மாட்டேன்.”
இவளிடம் பேசி புரிய வைக்க இது சூழ்நிலை இல்லை என்றதை அறிந்து அவரும் அமைதி காத்தார். ஊரில் நடக்கும் விஷயம் எதுவும் அப்போது தர்ஷிக்கு தெரியாதே.
” சரிக்கா. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. நாம நந்துமாவையும் சேர்த்துகிட்டு நல்லா சுத்துவோம். ஜாலியா என்ஜாய் பண்ணலாம்” ரம்யா பேச்சை மாற்ற
” நந்துமா யாருடா? “
“நம்ம ஹாஸ்பிடல் ஸ்டாப் தான்மா. இவளோட கிளோஸ் பிரண்ட். ” சாவித்திரி பதில் இயம்ப
“எனக்கு மட்டுமில்ல. அப்பாக்கு ரைட். அம்மாக்கு லெப்ட். ஹாஸ்பிடல் ஹெட் . எல்லாமே அவங்க தான்.” ரம்யா நந்துவை பற்றி பெருமிதமாக பேச
” ஓஓ… சரிடா அடுத்து வரேன். அப்போ போகலாம்.” மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு கால் கட் செய்ய.
கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவள், அவன் புறம் திரும்பி அமர்ந்து கொண்டு, ” டேய் ., எனக்கு ஒரு டவுட். அந்த பொண்ணை பத்தி ஓவரா பில்டப் பண்றாங்களே. அவங்க தான் ஒன்னோட லப்டப் ஆனால் என்ன பண்ணுவ..,” கர்மச்சிரத்தையாய் வினாவினை எழுப்ப
அவளின் தலையில் கொட்டி ” எனக்கு மாமி வேலை பார்க்குறது தான் உன் வேலையா. அவங்க ஆன்ட்டி. ஓவரா கற்பனை பண்ணாதே. சரியா? “
” டேய், கொட்டாதே எப்போ பாரு கொட்டி கொட்டி குள்ளம் ஆகிருவேன் போல. நீ வேணா பாருடா, உங்க வீட்டுல எல்லாருக்கும் புடிச்ச பொண்ணை கண்டிப்பா உனக்கும் பிடிக்கும். அவ பின்னாடி ல்தாக சைஆன்னு நீ சுத்தி, அவ உன்னை சுத்த விட்டு கல்யாணம் பண்ண சம்மதம் கேட்டு அலைவ. இட்ஸ் மை சாபம். உனக்கு செட் பண்ணி முடிச்சுட்டு தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்..,”
“அப்போ உனக்கு கல்யாணமே ஆகாது. இது எதுவும் நடக்க போறதே இல்லை..,” என அவளை கலாய்த்தபடி ஊர் வந்து சேர்ந்தனர்
error: Content is protected !!