Skip to content
Post Views: 1,480
கீதம்
11
கேம்ப் நடைபெறும் இடத்தை பார்வையிடவும், சிலரிடம் முறையாக அனுமதி பெறவும், நந்துவோடு முதல் முறையாக வெளியே செல்ல வந்தவன் பார்க்கிங் சென்று, அவள் தன் வண்டியருகே செல்வதை கண்டவன் ” காரில் போகலாம் மேடம்.. ஏன் ஸ்கூட்டி எடுக்க போறீங்க?”.
Advertisement
” இல்லை சார், அந்த ஏரியால கார்ல போனா நிறைய இடத்தில் நடந்து தான் போக வேண்டி இருக்கும். டூவீலர்னா டக்குனு போக முடியும்..,”
” ஓகே. அப்போ என் பைக்ல ரெண்டு பேரும் போவோம். எதுக்கு தனி தனியா? ..,”
Advertisement
Advertisement
“வேண்டாம் சார். இதான் பெஸ்ட்..,” என்று மட்டும் சொல்லி விட்டு வண்டியை எடுத்தவள், “நான் பைபாஸ் ரோட்ல வெயிட் பண்றேன். நீங்க வந்துருங்க சார்..,” என்றபடியே பறந்து விட்டாள்.
” மேடம் என்கூட வர மாட்டாங்களா?. என்னை பார்த்தா என்ன பொறுக்கி மாதிரியா இருக்கு. ச்சே.. ஏன் தான் இப்படி இருக்காங்களோ..,” சலித்தபடி இவனும் கிளம்பினான்.
Advertisement
” இவனுக்காக அங்கே காத்து இருந்தவள், அவன் வந்தவுடன் ” திட்டி முடிச்சிட்டீங்களா சார். இப்போ போலாமா..,?” என சிரித்தபடி கேட்க
“ஹலோ மேடம், தனியா எனக்கு வர தெரியாதா என்ன ? நானும் இந்த ஊர் தான். வழி தெரியும்..,” கோபத்தை மறைத்து கிண்டல் அடிக்க
” ஓகே. கோபப்படாதீங்க சார். ..,” வண்டியை விட்டு இறங்கியவள்
“அங்க ஒரு ஆளு நம்ம ரெண்டு பேரையும் பார்த்துட்டே இருந்தான். சேர்ந்து வந்தா சேர்த்து பேசுவான்னு தான் முதலில் கிளம்பி வந்தேன். வேற ஒண்ணுமில்ல…,”
“இது தான் காரணமா, இல்லையே வேற எதுவோ இருக்கே..,” மனதில் எண்ணியப்படி அவளை ஆழ்ந்து பார்க்க
‘ சார், இது உங்க பெங்களூர் இல்லை. நம்ம ஊர் இப்படி தான் நினைப்பாங்க, பேசுவாங்க,, ” என்றபோதும் பேசாமலே இருக்க
“நம்ப மாட்டிங்களா சார், நம்பிக்கை அதானே எல்லாம். நம்புங்க. நம்பினோர் கெடுவதில்லை..,” என டயலாக் விட்ட போதும் மௌனம் மட்டுமே சாதித்தான்.
” எனக்கென்ன பயமா? போற வழியில் கடத்தி போய், கிஸ் பண்ணி, ரேப் பண்ணி, என்னை கொலை பண்ணிட்டு போயிருவிங்கனு. அப்படி எல்லாம் பண்ணுவீங்க..,” என புருவம் உயர்த்தி, இடுப்பில் கையை வைத்து கொண்டு, வெள்ளை சுடிதார் அணிந்த தேவதையாய் ஜொலித்து கொண்டு, முறைத்த படி கேட்டவளை பார்த்து பக்கென்று சிரித்து விட்டான்.
” ஹா.., ஹா.., ஓ.. இப்படியும் பண்ணலாமோ? இது தெரியலையே எனக்கு..,” என்றப்படியே மேலும் சிரிக்க
” அப்பாடா, கோபம் போச்சு .., என்னை பத்தி உங்களுக்கு தெரியும். உங்களை பத்தி எனக்கு தெரியும். ஆனால் ஊர்க்கு தெரியாதே. எவனோ எதுவோனு பேச ஆரம்பிச்சிட்டா நிறுத்தவே முடியாது. அதான் கிளம்பி வந்தேன்…,” அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில் அவள் பேச்சை நிறுத்த
அவளின் பின்னே வந்த போதே இதனை யோசித்து இருந்தான். ஆதலால் தான் கேள்வி எதுவும் கேட்கவில்லை. தன் மேல் இத்தனை நம்பிக்கையோடு பேசுபவளை பற்றி அறியவே மேலும் சீண்டினான். ” மேடம். நான் அப்படி பண்ண மாட்டேன்னு எப்படி நம்புறீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்? ” தன்னை இவள் அறிந்து வைத்துள்ளாலே என்ற சந்தோசம் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாது அவனும் கேட்க
” ம்ம்ம். அதுவா நீங்க என் சாரோட பையன். மேடம் வளர்ப்பு அப்படி. சுட்டு போட்டாலும் உங்களால் தப்பு செய்ய முடியாது. அந்த நம்பிக்கை எனக்கு எப்போவும் இருக்கு..,”
ஆரவ் மெல்லிய முறுவலுடன் ஆமோதித்து தலை அசைக்க.
” ஓகே. இப்போ நல்ல பிள்ளையா கிளம்பலாமா..,” என்றப்படியே சென்று வண்டியில் ஏறி, அவனை திரும்பி பார்த்து ” நான் முன்னாடி போறேன். நீங்க பின்னாடி வாங்க. போவோமா.. “என தலை சாய்த்து கேட்டதில் தானாய் தலை அசைத்தான். எதுவோ ஒன்று அவனை அவள்பால் ஈர்த்து கொண்டு இருந்தது.
அவளை பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை போன் ஓசை நிகழ்விற்கு கொண்டு வந்தது. தாயின் நம்பரை கண்டவன் உடனே எடுத்து” என்னம்மா..,” என்பதற்குள் “கண்ணா, கேஸ் வந்துருச்சா? அப்பா உனக்காக சாப்பிடாம வெயிட் பண்றாங்கா. வர லேட் ஆகுமா?” சாவித்ரி பேசுவதை கேட்டு, ” ம்மா…, இதோ வந்துட்டேன்..” என்றப்படியே வெளியே நின்ற நர்சிடம் கையசைத்து விட்டு மேலே வேகமாக ஏற தொடங்கினான்.
“அச்சோ.., இவளை பத்தி யோசிச்சிட்டே உட்கார்ந்துட்டேன். இம்சை பண்றாளே.., ” சுகமாய் அலுத்து கொண்டே தான் இரண்டாவது தளத்தில் இருந்த தன் அறைக்கு சென்று சட்டை பட்டனை எடுத்து கொண்டு இருக்க, கீழே நந்துவின் குரல் கேட்க, ” இவ இப்ப தானே சாப்பிட போனா. அதுக்குள்ள திருப்பி வந்துட்டாளா” மனதில் எண்ணிய படி டிஷர்ட் மாட்டி கொண்டு, கீழே சாப்பிட வர ” மணி என்ன ஆகுது. இவ்ளோ லேட்டா சாப்பிட கூடாதுன்னு சொன்னா, கேக்குறீங்களா. நீங்களும் உட்காருங்க மேடம். நான் பரிமாறுரேன். ” அவனுக்கும் சேர்த்தே தட்டில் அனைத்தையும் எடுத்து வைத்தவள், தண்ணீர் எடுக்க உள்ளே சென்றாள்.
” வந்து அமர்ந்தவன் ” என்னமா.., இவங்கள போய் வேலை வாங்குறீங்க..,” தாயிடம் வினவ, பதில் உள்ளிருந்து வந்தது.
” நம்ம வீட்டில் நான் பண்ண கூடாதா? இதெல்லாம் அநியாயம். ” என்றதை கேட்டவுடன், என்ன சொல்ராங்க இவங்க என யோசனையில் முகம் சுருக்க
ஆரவ் முகம் போன போக்கை கண்டு சாவித்ரி சிரித்து கொண்டே , “ஆமா அது அவ ஹாஸ்பிடல், இது அவ வீடு. நீ மூச்சு விட கூடாது. பேசாம சாப்பிடு. இல்லைனா மேடம் கோபப்படுவாங்க.”
உரிமையாய் அனைத்தும் செய்து முடித்து, ” மேடம் நான் ரூம்ல போய் ஸ்டாக் எடுத்து வைக்க தான் வந்தேன். முருகன் வந்தா மேல அனுப்பி வைங்க. ” சாவித்ரியிடம் கூறிவிட்டு ,
ஆரவ் புறம் திரும்பி ” சார், உங்க ரூம் டேபிள்ல பைல் வச்சி இருக்கேன். அதை எடுத்துக்கவ.” என்றவளிடம் ” என் ரூம்ல எங்கே? எப்போ வந்து வச்சிங்க? ” தடையை தடவி கொண்டு அவன் யோசிப்பதற்குள்.
“இப்போ வரல. அந்த ரூம்ல தான் நான் இம்போர்ட்டண்ட் பேப்பர்ஸ் எல்லாம் எப்போவும் வைப்பேன். எடுக்க மறந்துட்டேன். சாரி.”
“கேம்ப் மெடிசின் எல்லாம் உன் பக்கத்து ரூம்ல தான்பா வச்சிருக்கோம். அங்கே தான் டீடெயில்ஸும் இருக்கும். எடுத்து கொடு கண்ணா.. “தாயும் சொல்ல
வேறு ஒன்றும் கேட்காமல் ” ம்ம்ம்…சரிம்மா.. ” நந்துவை பார்த்து விட்டு மேலே செல்ல, ” மேடம். ரம்யா வந்தா மேலே அனுப்புங்க. ” அவன் பின்னே இவளும் படியேறினாள்.
“என்ன சார். தூங்க விடாம உங்கள டிஸ்டர்ப் பண்றேனா..,” பேச்சை துவங்க
“இல்லை மேடம். வாங்க.,” என்றவன் மனதிலோ “வந்த நாள்ல இருந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. எனக்கும் இது ரொம்ப புடிச்சிருக்கே.”
அவனோடு இணைந்தே ரூமில் நுழைய, சட்டென்று அவள் காலை தான் பார்த்தான். “ஓகே. வலது காலை வச்சி தான் உள்ளே வர்றா.,” என்று ஓரு மனம் சந்தோஷத்தில் துள்ள “என்னமோ கல்யாணம் பண்ணி உள்ளே கூட்டி போற மாதிரி பில்டப் பண்ணாதடா. அவ பைல் எடுக்க தான் வந்துருக்கா..,” மனசாட்சி கிண்டல் செய்ய. “டேய் ரெண்டு பேரும் அடங்குங்க. அவ பார்த்தாலே கண்டுபிடிச்சுருவா” துள்ளிய மனதை அடக்கி கொண்டு இவன் நிற்க, அவளோ அதை எடுத்து கொண்டு பக்கத்து அறைக்குள் சென்று விட்டாள்.
கதவை சாற்றி விட்டு கட்டிலில் விழுந்தவனுக்கு தூக்கம் தூர போனது. மீண்டும் அவளே அவன் எண்ண அலையில் கரை புரண்டு ஓடினாள். அன்றைய நாளுக்கு மீண்டும் மனம் தாவி சென்று விட்டது.
சிறிது தூரம் கடந்த பின்னர் இளநீர் வியாபாரியை கண்டு இவன் வண்டியை நிறுத்தி வாங்க முற்பட, முன்னே சென்றவள் அவனை காணாது திரும்பி பார்த்தாள். நிற்கும்படி கையசைக்க ஓரம் ஒதுங்கி நின்றவளை பார்த்து., ” சார் உங்க பொஞ்சாதிக்கும் செவ்விழனி தரவா, இல்லை பச்சையா .,” என்று கேட்டவனிடம் என்ன சொல்ல முடியும் அவனால். ஒன்றும் சொல்லாமல் அவளுக்கும் வாங்கி கொண்டு சென்றான்.
ஊருக்குள் நுழையும் முன்னே பத்து வயது சிறுமி தன் பெற்றோரின் கையை இருபுறமும் இறுக்க பற்றி கொண்டு, குதித்து குதித்து விளையாடிப்படி வந்தவளை இனம் கண்டு கொண்டு நந்து அவளின் அருகே சென்று வண்டியை நிற்பாட்டினாள்.
அந்த குட்டி பெண்ணிடம் ” என்ன செல்ல குட்டி., அப்பாவோட ஓவர் ஆட்டம் போல., ” கேட்டு சிரிக்க.
” ம்ம்ம்., ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க அப்பா கூட ஜாலியா இருக்கேன்கா.. மலர்ந்து சிரித்த பெண்ணிடம் ” சமத்து குட்டி.., எனக்கு அதோ அங்க தெரியுது பாரு. அந்த பூ வேணும்., கொண்டு வந்து தர்றியா ? ” சொல்லி முடிக்கும் முன்பே அவளோ ஓட்டம் எடுத்திருந்தாள்.
” என்னக்கா., எப்படி இருக்கீங்க.,? கையில் வலி எதுவும் இல்லை தானே.,? அன்று கையை அறுத்து கொண்டு வந்த பெண்ணிடம் இவள் வினவ , அவளை ஒட்டி வந்து வண்டியை நிறுத்தினான் ஆரவ்.
” நல்லா இருக்கேன்மா. இவர் இப்போ குடியை நிப்பாட்டி ஒழுங்கா இருக்காரு., ” சிரித்த முகமாய் பதில் தர.,
” உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது. அண்ணன் மாறிட்டாருன்னு., உங்கட்ட தான் பேசணும்னு சார் சொன்னாங்க. நீங்களே வந்துட்டிங்க ” என்றவாறே ஆரவை கை காட்ட
” வணக்கம் சார்” கைகூப்பி வணக்கம் வைத்தபடி, “நல்லா இருக்கீங்களா .., என்னனு சொல்லுங்க சார்., ” என்றவாறே கந்தன் ஆரவ் முகம் பார்க்க., இவனும் நலம் விசாரித்துவிட்டு
“இல்லை எனக்கு தெரிஞ்ச இடத்துல வேலை ஒன்னு இருக்கு.நீங்க அங்க போக முடியுமான்னு கேட்கலாம்னு நினைச்சேன்.” தயங்கியபடி தான் கேட்க ஆரம்பித்தான்.
” என்ன வேலை சார், எங்கே., ? மகிழ்ச்சியோடு அறியும் ஆவலோடு முகம் நோக்கிட.
” இங்கே …………… கார்மெண்ட்ஸ் தான் ஹெல்பர் வேலை. மெட்டிரியல்ஸ் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போற வேலை தான். ஈஸியா தான் இருக்கும்.” அவனின் பதிலில்
சந்தோசத்துடன் தலை அசைத்து ” கண்டிப்பா போறேன் சார், வேலை இல்லாம தான் குடின்னு தறிகெட்டு சுத்திட்டு திரிஞ்சேன். எப்போன்னு சொல்லுங்க. சேர்றேன்.,”
அங்க வேலைக்கு சேர ஒரே ஒரு கண்டிஷன். மூணு மாசம் தங்கி இருந்து வேலை எல்லாம் கத்துக்கணும், எட்டு மணி நேர வேலை தான். அப்புறம் வீட்டுல இருந்து போகலாம். வண்டி வந்துரும். ” விளக்கியபடி சொல்ல.
மனைவியின் முகத்தை கண்டவர், அவர் தலை அசைத்ததும் ஒத்து கொண்டார். பின் அந்த இடம் போகும் வழி, யாரை சந்திப்பது என இவன் பேசி கொண்டு இருக்க, நந்துவை பார்த்துவிட்டு இன்னொரு பெண்மணியும் வந்து விட்டார். வாடிக்கையாக மருத்துவமனைக்கு வருவதால் தள்ளி சென்று இவளும் பேசிக்கொண்டு இருந்தாள்.
கந்தனிடம் விடை பெற போகும் சமயம் , ரொம்ப நன்றி சார், எங்க டாக்டரோட பொண்ணு ரொம்ப நல்லவங்க. உங்களை மாதிரி நல்ல மாப்பிள்ளை அமைஞ்சதுல சந்தோசமா இருக்கு. அவங்கள நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ரெண்டு பெரும் சந்தோசமா வாழனும், உங்களை மறக்கவே மாட்டோம்” என வாழ்த்தியவரிடம் ” எதே, அவ டாக்டர் பொண்ணு, நான் மாப்பிள்ளையா.., அடிங்க அவரு என் அப்பாடா.., இப்படி கேணத்தனமா யோசிப்பீங்கன்னு தான் ஒதுங்கி போக சொன்னாளா ” என மனதில் யோசித்துவிட்டு எதுவும் கூறாமலே விடை பெற்றான்.
” சார், உங்க மனைவி ரொம்ப நேரமா வெளியே நிற்குறாங்க. அவங்களையும் உள்ளே வர சொல்ல வேண்டியது தானே..,” V O ஆபீஸ் வாசலில் நின்ற நபர் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி, ” ஓ.. நந்திதா மேடமை தான் சொல்ராங்க போலன்னு “மனதில் எண்ணி கொண்டு, ” இல்லை. ஒர்க் முடிஞ்சிருச்சு. நான் கிளம்பிட்டேன். தேங்க்ஸ் சார்..,” என கூறிவிட்டு வெளியேறி விட்டான்.
அன்று சென்ற இடங்களில் எல்லாரும் அவளை அவன் மனைவியாக எண்ணி பேசினர். முகம் தெரியா ஆட்களிடம் என்ன விளக்கம் சொல்வதென்று ஒன்றும் கூறாமல் வெளி வந்து விட்டான். ஆனாலும் அந்த வார்த்தை இவன் மனதில் ஆணி அடித்தது போல பதிந்து விட்டது.
கிராமத்தில் ஒரு பெரியவரிடம் பேசி கொண்டு இருக்கும் வேளையில் ” ஏன் தம்பி பொஞ்சாதியை வேகாத வெயில அலைய வைக்கிற, பாவம் சின்ன புள்ளையா தெரியுது. சூதனாமா கூட்டி போ..,” என அறிவுரை வேறு சொல்ல நெருப்பு இன்னும் பற்றி எரிந்தது மனதில்.
இப்போது நினைக்கையில் ” மேடம் தான் இங்க மஹாராணி. நம்ம வேஸ்ட். ‘ சிரிப்பு தான் அவனுக்கும் வந்தது.
error: Content is protected !!