Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-1 (2)

1(2)

மச்சீ, “ஏதோ உங்க ஊரு புகழா பாடிட்டு இருப்ப? இங்க ஒன்றுமில்லை” பேருந்தின் சன்னலோரம் அமர்ந்திருந்த சத்யா தன் நண்பனிடம் கேட்டான்.

மச்சீ, இப்ப தான மதுரைக்கு வந்திருக்கோம். இனி பாரு. திருவிழா தொடங்கிய நாள். இன்று களைகட்டும்.



Advertisement

“பார்க்க தான போறேன்!”.

Advertisement

பாருடா. ஒரு மாதம் திருவிழா கலைகட்டும். அதான போலீஸ் பயிற்சி நடக்கும் இடத்திற்கே வந்து உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்.

Advertisement

நான் என்னோட வீட்டுக்கு கூட போகல. உன்னோட கிராமத்து ஹூரோவை பார்க்க தான் ஆவலாக வந்துட்டேன். “அப்பப்பா என்ன புகழாரம்? நான் அவரை பார்த்தே ஆகணும்”..

Advertisement

அதான பார்த்தேன்! நீ எனக்காக வரலை..

“அய்யா சாமி, என்னை விடு” அவன் கையெடுத்து கும்பிட்டான். மற்றவன் சிரித்தான்.

“பாடல் சத்தம் கேட்குதா?” அவன் கேட்க,

ஆமாடா..

ம்ம்! ரம்மியமான மாலை. இன்று காப்பு கட்டுவாங்க..

“அதான நீயும் வந்த?”

ஆமா, முதல்ல பெரிய தலைங்கல்லாம் கட்டுவாங்க.

“ஏப்பா, நம்ம பாண்டி வீடு தானப்பா இது?” பேருந்தில் இருந்த ஒருவர் ஊர் எல்லையில் இருந்த ஒரு அரண்மனை வீட்டை காட்டினார்.

“அய்யா, அந்த துரோகிகளை பத்தி கேட்காதீங்க?” மோகன் சீற்றமுடன் கத்தினான்.

“ஏன்டா?” அவன் நண்பன் அவன் தோளை பற்றினான்.

இவங்களால தான் பதினெட்டு வருசத்துக்கு முன் எங்க ஊருல கலவரம் நடந்து பல குடும்பங்கள் அவரவர் உறவுகளை இழந்து தவிச்சாங்க…

“ஏன்? போலீஸ் ஸ்டேசன் அப்பொழுது இல்லையா?”

கட்டப்பஞ்சாயத்து தான்..

“பஞ்சாயத்து தலைவர் இருந்திருப்பார்ல்லடா?”

ஆமாப்பா. இருந்தார்” அவர்கள் இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த முதியவரிடமிருந்து பதில் வந்தது.

“அய்யா, நீங்க?” உங்களை நான் பார்த்ததில்லை மோகன் கேட்க, அவர் அவனை பார்த்து, “நீ யாருப்பா?”

என்னோட அம்மா பூங்கோதை..

“கோத மகனா? நல்லா வளந்திருக்க?”

“என்னோட அம்மாவை உங்களுக்கு தெரியுமா?” அவன் கேட்க, அவன் கேட்டதற்கு பதிலளிக்காமல் “பஞ்சாயத்து தலைவர் இளங்காளையன்” அன்று கலவரத்தில் இறந்துட்டார்..

“இல்லய்யா, அவர் குடும்பத்தையையும் அவர் மனைவியையும் இழந்து துக்கத்தில் தலைமறைவாகிட்டார்ன்னு பேசிக்கிறாங்க.. உங்களுக்கு தெரியாதா?”

அவர் புன்னகையுடன், “ஓ!அப்படியா! வந்து வெகு வருடமாயிற்றா தெரியலை”.

நீங்க யாருன்னு சொல்லவேயில்லை.

நான் யாருன்னு நேரம் வரும் போது உங்களுக்கே புரியும்.

ம்ம்! அவரை ஆழ்ந்து பார்த்து விட்டு மோகன் தன் போலீஸ் நண்பன் சத்யா பக்கம் திரும்பினான்.

பேர் போன குடும்பம் இளங்காளையன்..

காளையனால் தான் எங்கள் ஊருக்கு காளையனூர் என்ற பெயர் வந்ததாம். தலைமுறை தலைமுறையாக அவங்க தான் ஊரை பாதுகாத்து வந்தாங்க. அதே போல தான் இளங்காளையனும் பஞ்சாயத்து நடத்தி வந்தார்.

இளங்காளையன் மனைவி மட்டுவார்குழலி. இவர்களுக்கு மூன்று பசங்களும் இரு பெண்களும் இருந்தாங்க.

மூத்தவர் இளவேந்தன். அமைதியானவர். தீர்க்கமான பார்வை உடையவர். எதையும் சிந்தித்து செய்யும் குணமுடையவர்.

இரண்டாமவர் இளங்குமரன். அடிதடி சண்டையை முன் நின்று தடுப்பவர். காளையனின் கோபம் அப்படியே இருக்கும்ன்னு சொல்லுவாங்க.

மூன்றாமவர் இளவேலன். குறும்புத் தனமும், பாசமும் அதிகமுள்ளவர். நினைப்பதை சிந்திக்காமல் செய்வார். பொறுப்பாக இல்லாமல் ஊர்சுற்றும் வாலிபராக அன்று வலம் வந்தவர். இவருக்கு மட்டும் திருமணமாகவில்லை. இவருக்கு பொண்ணு தேடிக் கொண்டிருக்கும் போது தான் கலவர பூமியானது எங்கள் ஊர்.

மூத்தவர், இரண்டாமவருக்கு அடுத்ததாக பொண்ணுங்க..சாந்தனா தேவி, துர்க்கா தேவி.

சாந்தனாதேவி. மகாலட்சுமியின் அம்சமுள்ளவர். பெயருக்கு ஏற்ற குணத்தவர். அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருந்தனர்.

அடுத்தவர் துர்க்கா தேவி. இவர் தன் அக்காவிற்கு முன்னே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு அதே ஊரிலே வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார்.

பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் இவன் பேச பேச அவர் சிந்தனை பின்னோக்கி சென்றிருந்தது.

சரிடா, “உன்னோட ஹீரோ?” ஆர்வமுடன் அவன் கேட்டான்.

“அதான் சொல்லீட்டு இருக்கேன்ல்ல?”

அந்த கலவரத்தில் எங்கள் ஊரின் பல குடும்பம் அழிந்தது. இக்கலவரத்திற்கு காரணமானவர் சவுந்தர பாண்டியன்.

காளையன் குடும்பத்தை அழிக்க காத்துக் கொண்டிருந்தவர். தக்க சமயத்தில் வேரோடு சாய்த்து விட்டார். அவர்களின் வீட்டு குழந்தைகளும் இறந்து போயினர்.

இதில் அவர்களின் கடைசி வாரிசான இளவேலன் தன் மூத்த அண்ணன் பசங்களை மட்டும் காப்பாற்றினார். நால்வர் மட்டும் தான் உயிரோட இருக்காங்க.

“என்னடா சொல்ற?” சின்ன கேஷ் கூடவா ஆகலை. பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தையே அழிச்சிருக்காங்க. அன்றைய போலீஸ் போல தானடா அவங்க..

“ஆமாடா..” அலுப்புடன் சொன்னான்.

என்னடா? சினமுடன் சத்யா கேட்க, மலையேறாத..மீதியை கேளு..

இளவேந்தனின் மூன்றாவது மகன் இளமாறன். பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்து விட்டான். பன்னிரண்டாம் வகுப்பிற்காக காத்திருக்கான். அவன் அவனது சித்தப்பா இளங்குமரன் குணம். கோபம் பயங்கரமாக வரும்.

இரண்டாமவர் இளஞ்செழியன். கல்லூரியில் எம் பி ஏ படித்து மூன்று வருடங்கள் முடிந்தது. எங்க ஊர்ல இருக்கும் அவங்க பிஸினஸை எடுத்து நடத்துகிறார்.

கிராமத்துல்ல பிசினஸா?

ஆமா. கோதுமை, பஞ்சு, பருப்பு ஆலைகளெல்லாம் வச்சிருக்காங்க. பண்ணையில கோழி, ஆடு, மாடு, குதிரை கூட வளர்க்குறாங்க. செல்வ வளம் மிக்கவர்கள். எல்லாரையும் இழந்திருந்தாலும் அவர்களின் சொத்துக்களை பராமரித்து வர்றாங்க..

“மூன்று வருசமா தான கவனிக்கிறார்?”.

“இல்லை” என்ற அவனது டோனில் அவனை ஆழ்ந்து பார்த்தான் போலீஸ் நண்பன்.

எங்க ஊரு மதுரைவீரனுக்கு இணையான எங்க அண்ணா. எங்க ஊரோட காவல்காரர். அவர் குடும்பத்தினரின் மொத்த குணமும் கலந்த எங்க மதுரைவீரன் “இளந்திரையன்”. குடும்பத்தின் இப்பொழுதுள்ள மூத்த வாரிசு.

என்ன படிச்சிருக்கார்?

அவர் படிக்கவில்லை. அவர் பள்ளியில் படிக்கும் போது தான் கலவரம் நடந்து அவர் குடும்பத்தை இழந்தார். இனி அது போல் எந்த குடும்பத்திற்கும் ஏதும் ஆகக் கூடாது என்றும் அவரின் தம்பிகளுக்காகவும் ஊர் மக்களுக்காகவும் படிப்பை மொத்தமாக நிறுத்தி விட்டார். அவர் நினைத்திருந்தால் அவர்களின் சொத்தடங்கிய எல்லாவற்றையும் அவரின் கடைசி சித்தப்பா வேலனை கவனிக்க வைத்து அவர் பள்ளி சென்றிருக்கலாம். அவர் மனதில் அந்த கலவர நிலைமை அச்சாணி போல ஒட்டிக் கொண்டது. அதனால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

காரணமாடா இது? ச்சீ..தூ..

போலீஸ் நண்பன் சட்டையை பிடித்த அவர்களுடன் பயணம் செய்த இளைஞன், “தீரா அண்ணா பத்தி ஏதாவது பேசுன. வெட்டிப் போட்டு போய்க்கிட்டே இருப்பேன்” போலீஸ்காரனுக்கு அல்லு பிடிக்க வைத்தான்.

விடுடா ராசு. அவனுக்கு அண்ணா பத்தி தெரியாதுடா..

“சரி சரி..மோகனுக்காக விடுறேன்” என்று அவனிடத்தில் அமர்ந்து கொண்டான் ராசு.

ஏப்பா..எங்க ஊரு பசங்களை பத்தி தெரியாம வாயை விடாத. தீரன்..பேருக்கு மட்டும் தீரன் இல்லை. அவன் எங்க குலம் காக்கும் குலதெய்வம் மதுரவீரன்.

தீரன்…..

“அவன் அடங்கி போறவங்களுக்கு அன்னையின் சொரூபம். வாலாட்டினால் வாளேந்தும் மதுரை வீரன்” பெருமையுடன் ஒரு பெண்மணி உணர்ச்சிகரமாக பேசினார்.

பரவாயில்லை. உங்க ஊரையே கட்டுப்பாட்டுக்குள் வச்சிருக்கான். கில்லாடி தான்..

“ஏய், என்ன அவன் இவன்னு பேசுற? தீரன் அண்ணா சொல்ற?” தீட்டி வைத்திருந்த அரிவாளை போலீஸ் நண்பன் கழுத்தில் வைத்தான். அவன் புன்னகையுடன், “நல்ல ஊர்க்காரனா இருக்க?” ராசுவை பாராட்டினான்.

ராசு புரியாமல் மோகனை பார்த்தான்.

“ஏலேய், அவன விடுடா. நம்ம ஊரு வந்துருச்சு” கிழவி ஒருவர் சத்தம் கொடுக்க, காளையனூர் எழுதிய பலகையின் இடப்பக்கம் வாளோடு மாலையுடன் குதிரை காலை உயர்த்தி நிற்கும் மதுரை வீரன் கோவில் அமைக்கப்பட்டிருந்தது.

எல்லாரும் இறங்க மோகனும் சத்யாவும் தங்களது பைகளுடன் இறங்கினார்கள்.

கோவிலின் வெளியே கூட்டம் கூடி இருந்தது. நேராக எல்லாரும் அங்கே செல்ல, குதிரை ஒன்றுக்கு மாலையிட்டு பொட்டு வைத்து, பால் மாறாத வெண்மை பட்டு வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, பூசாரி கையிலிருந்த தேங்காயை வாங்கி ஒருவன் அதில் கற்பூரம் ஏற்றி ஆராத்திக் காட்டிக் கொண்டிருந்தான்.

“என்னடா பண்றாங்க?”

“மச்சீ, இவர் தான் எங்க அண்ணா” சத்யா காதில் மோகன் சொல்ல, “இளந்திரையன்” சத்தமாக சத்யா அழைக்க, தீரன் அவர்களை பார்த்தான்.

மோகன் தன் நண்பன் வாயை பொத்த, அவர்களை முறைத்த தீரன்..தேங்காயை உடைத்து, “மாணிக் ஓட்றா” சாட்டையை அவன் கையில் எடுத்து அதை வாயில் வைத்து காலை தூக்கி வேஷ்டியை மடித்து கட்டினான். தன் கையில் கட்டிருந்த காப்பை ஏற்றி விட்டு மறுகையில் கைக்கடிகாரத்தை பார்த்தவன்…

“சரியான நேரத்துக்கு மாணிக்கோட வாரேன். எல்லாம் தயாராக இருக்கட்டும்” அவன் அந்த குதிரையை விரட்டிக் கொண்டு அக்கோவிலின் பின்னுள்ள காட்டிற்குள் ஓடினான்.

“என்னடா உன்னோட ஹூரோ ஓடிட்டான்?” சத்யா கேட்க, அவனை சுற்றி வளைத்தனர் சிலர்.

அய்யா.. அய்யா… இவன் என்னோட நண்பன். பட்டணத்துல்ல ஒரே இடத்தில் தான் தங்கி இருந்தோம். ரொம்ப நல்லவன். தீரா அண்ணா பற்றி நான் பேசியதில் அவரை பார்த்து ஆர்வமாகிட்டான்.

“ஆர்வமா? இவன் தோரணயான நிமிர்வு நீ சொல்வது போல இல்லை” இளவேலன் கூறினார்.

“சித்தப்பூ…இவனை பார்த்தால் சரியாக தெரியல. இப்பவே விசாரிங்க” உக்கிரமாக அவனை முறைத்து அவசரப்படுத்தினான் இளமாறன்.

“மாறா.. சித்தப்பூ.. எனக்கு அப்படி தோணவில்லை” இளஞ்செழியன் சாதாரணமாக சத்யாவிடம் பேச, அவன் போலீஸ் பயிற்சியில் இருக்கிறான் என்று அறிந்து கொண்டனர்.

“மோகா..காலையில வாறேன்னு இவ்வளவு லேட்டா வந்துருக்க?” அவன் அம்மா பூங்கோதை இழுத்தவாறு கேட்டு சத்யாவை பார்த்து, “ஏப்பா..நீ தான் ச..ச..என்ன பேருடா சொல்வ?” தன் மகனிடம் கேட்டார்.

சத்யா ஆன்ட்டி…

சத்யாவா?..

நீ வேற பேர சொன்ன மாதிரி இருந்தது.

“ஆமா, இவனுக்கு வச்ச பேர் போதாததுன்னு இன்னும் பேர் வைக்கணுமாக்கோம்” மோகனும் இழுத்து பேச, சத்யா புன்னகைத்தான்.

அதே சமயம் சென்ற குதிரையின் பின் ஓடிய இளந்திரையன், குதிரையில் கம்பீரமாக மதுரை வீரனை அச்சில் வார்த்தார் போல் சிம்ம சொப்பனமாக குதிரையின் வேகத்தை தன் கட்டுக்குள் வைத்து வந்து கொண்டிருந்தான்.

“மச்சீ, நம்பவே முடியலடா. அந்த வீரனே வந்தது போல இருக்கு” கோவிலின் வெளியே இருக்கும் சிலையை பார்த்தான் சத்யா.

இளந்திரையன் பூசாரி முன் வந்து குதிரையை நிறுத்த, அவருக்கு கோக்காலி போட்டனர்.

பூசாரி அதில் ஏறி, அந்த கடவுளுக்கு சாத்தியதை போலவே தீராவுக்கும் தலைப்பாகையை தலையில் அணிவித்து பக்தியில் வணங்கி, அவனுக்கும் மாலையிட்டு ஆராத்தி காட்டினார். பின் கூட்டம் கலைய, சத்யா மட்டும் இளந்திரையனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏலேய், அங்க என்ன மிட்டாய் கடையா இருக்கு? எம் மவனை அப்படி பாக்குற?” இளவேலன் சத்தமிட்ட, “அய்யா அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா பாக்குறான். வாடா” அவனை இழுத்து சென்றான் மோகன்.

இளந்திரையன் அவர்களை பார்த்து விட்டு தன் தம்பிகளிடம், “நான் வர நேரமாகும். தேவியம்மாவை பார்க்க போங்க. நான் வந்துடுறேன்”

அண்ணா, காப்பு கட்டணும்..

கட்டுறவங்க கட்டட்டும்டா. நீங்க போங்க. கவனமா இருங்க.

“சித்தப்பூ..” இளந்திரையன் அழைக்க, “தீரா..உன்னை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமாடா? அண்ணா, அண்ணி எல்லாரும் உனக்கான மரியாதையை பார்த்து பூரிச்சு போவாங்கடா”

மரியாதை.. விரக்தியுடன் சொன்ன தீரன், மாணிக்கை தடவியவாறு..“மரியாதையை வாங்கிக்கலாம். அது இப்ப வரும். நாளை போகும். ஆனால் குடும்பம் வரவே வராதுல்ல சித்தப்பூ” மனம் உடைந்து வார்த்தைகள் வந்தது.

இளவேலன் இளந்திரையனை அணைத்து, “அதையே நினைச்சிட்டு இருக்காத தீரா”

“மறக்கக்கூடிய விசயமா சித்தப்பூ? நம்ம குடும்பம்” என்றவன் கண்ணீர் விழாமல்.. அமைதியானான்.

“தீரா, நாம கிளம்பணும். இரவு உணவை முடித்து விட்டு இங்க வந்துரு” இளவேலன் சொல்ல, “சித்தப்பூ தம்பிகளை பார்த்துக்கோங்க” அவன் முன் நடக்க, மாணிக் அவன் முன் வந்தது.

மாணிக்?

குதிரை கனைத்தது. சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பி பார்த்தனர். மண்டியிட்டு அவனை ஏறச் சொல்லியது.

இளந்திரையன் தன் மீசையை முறுக்கி விட்டு அதன் மீது ஏறினான். இளவேலனும் மற்ற அவர் மகன்களும் குதிரையில் கம்பீரமுடன் செல்லும் அவனை பார்த்தனர்.

தீராவுக்கு உங்க பாதுகாப்பு அவசியம். வாங்க கிளம்பலாம்..

“சித்தப்பூ, ஏன் அந்த சவுந்தரபாண்டியன் குடும்பத்தை சும்மா விட்டு வச்சிருக்கீங்க? எந்த தண்டனையும் இல்லாமல் அவனுக இருப்பதை பார்த்தால் கோபமாக வருது”.

எந்த ஆதாரமும் இல்லை என்பதாலும் அவர்களுக்கு எதிராக உங்க தாத்தாவின் உதவியாளர் சொன்னதுக்காக என்றும் தான் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருக்கோம். மத்தபடி நம்ம பகை கோர்ட்டுல்ல செல்லுபடியாகாது..

“கேஷ் குடுத்தா விசாரிப்பாங்கல்ல?” செழியன் கேட்டான்.

“உன் அண்ணாவிற்கு அவங்கள பழி வாங்கும் எண்ணமில்லை. நீங்களும் எண்ணக் கூடாது. புரிஞ்சதா மாறா?”

“புரிஞ்சது..புரிஞ்சது..” அவன் சினமுடன் சொன்னான்.அவர்களும் வைஷ்ணவிதேவியை தரிசிக்க சென்றனர்.

மோகனும் சத்யாவும் வீட்டிற்கு சென்று தயாராகி வந்தனர். மணி ஆறை தாண்டி இருந்தது.

“மச்சீ, அவங்க யாருடா? பசங்களா இருக்காங்க. பயங்கர மரியாதையா இருக்கே!”

நம்ம தீரன் அண்ணா குடும்பம் வழி வழியாக இளா குடும்பமாக பெயர் பெற்றுள்ளது. அது போல இவங்க அரசன் குடும்பம். அதோ முதியவர் இருக்காரே! அவர் தான் பேரரசன். நம்ம தீரன் அண்ணாவின் தாத்தா. அவர் அம்மாவின் தந்தை.

“சொந்தமா?”

ஆமா, ஆனால் அண்ணா பெருசா யாரிடமும் பேச மாட்டாங்க. யாரையும் நம்பமாட்டாங்க. அவங்க பேசினாலும் அண்ணாவிடம் தலையசைப்பு மட்டும் தான் இருக்கும்.

“பொதுவாக அம்மா வீட்டில் தான் எல்லாரும் ஒட்டுவாங்க. பேச கூட மாட்டார்ன்னா இவங்க நல்லவங்க இல்லையோ?”

அப்படியெல்லாம் இல்லை. கலவரத்தில் அனைவருக்கும் உதவிய இவர்களும் தன் மனைவி பிள்ளைகளை இழந்தாங்க.

ஆண்கள் எல்லாரும் உயிரோட இருக்காங்க..

அதெப்படிடா?

“எல்லாரையும் சந்தேகக்கண்ணோட பார்க்காதடா” மோகன்  கூறினான்.

பேரரசன் அய்யாவுக்கு நாலு பசங்க.

மூத்தவர் பூவரசன் இறந்துட்டார்.

அடுத்தவர் மகிழ்வரசன்.

மூன்றாமவர் பொன்னரசன்

நான்காமவர் மணியரசன்.

அதோ கம்பீரமாக தலையை நிமிர்த்தி கண்களால் அனைவரையும் மிரட்டுவது போல பார்க்கிறாரே அவர் மூத்தவரின் ஒரே மகன் அகிலரசன். நம்ம தீரன் அண்ணா வயதிருக்கும். படிச்சிருக்கார். இருவரும் மாமன் மச்சான்..

எல்லாருக்கும் ஒரே பசங்க மட்டும் தான் உயிரோட இருக்காங்க.

இரண்டாமவர் முகிலரசன்..ரொம்ப அன்பானவர்.

கலையரசன்..இவருக்கு நம்ம மாறன் வயதிருக்கும். இருவரும் நல்ல நண்பர்கள்.

கடைக்குட்டி தமிழரசன்..

எத்தனை பேரு ஹப்பா..

இரு குடும்பமும் அவ்வளவு தான் உயிரோட இருக்காங்க..

தீரன் அண்ணா எங்க? அவரோட சித்தப்பா, தம்பிகள் இருக்காங்க. அவரை காணோம்.

ஹ்ம்.. “என்னத்த சொல்றது?” அவரு எதையும் மறக்கலை. அவர் ஆத்தங்கரையோரம் இருப்பார்.

புருவத்தை உயர்த்தினான் சத்யா.

மச்சீ, நம்ம தீரன் அண்ணாவுக்கு அத்தை பொண்ணு இருந்தாங்களாம்டா. இருவருக்கும் அஞ்சு வருசம் இடைவெளியாம். ஆனால் அவங்களும் கலவரத்தில் இறந்துட்டாங்க.

“என்னடா பப்பி லவ்வா?”

தெரியலடா. ஆனால் தீரன் அண்ணா அவர் அம்மாவை விட அந்த பொண்ணு கூடவே தான் திரிவாங்களாம். ஏன்னா அவர் தான் அவங்கள முதல்ல கையில வாங்கியது. பாசமாக கூட இருக்கலாம்.

இல்லடா. லவ்வாக தான் இருக்கும்?

என்னமோ? இப்ப அவங்களும் இல்லை. ஆனால் அதன் பின் தான் அவங்க வீட்டுக்குள்ள பொண்ணுங்கள கூட அண்ணா வர விட மாட்டாங்க. சொந்த பந்தம், வேலைக்கு எந்த பொம்பளைகளும் தீரன் அண்ணா குடும்ப வீட்டிற்குள் நுழைய முடியாது. அண்ணா ரொம்ப கோபப்படுவாங்க. அவருக்கு அவங்க குடும்ப பெண்களின் வாசம் அவ்வீட்டில் சுற்றுவது போல இருக்குமாம். அதனால் அந்த விசயத்தில் ரொம்ப கோபப்படுவார்.

பொண்ணுங்க விசயத்தில் அவர் எப்படி?

வாயில போடுடா..அவரும் அவர் வீட்டினரும் அந்த விசயத்தில் சொக்கத்தங்கம்டா..

வேலன் இருக்காரே! அதான் நம்ம தீரன் அண்ணாவின் கடைசி சித்தப்பா..அவருக்கு திருமணமே ஆகலை. தன் அண்ணன் பசங்களை வளர்க்க தன் வாழ்க்கையையே தியாகம் பண்ணீட்டார். அவர் குடும்பம் உயிரோடு இருக்கும் போது ஒரு பொண்ணை காதலித்து இருந்திருக்கார். யாருன்னு யாரிடமும் அவர் சொல்லாமல் இருந்திருக்கார். காளையருக்கு மட்டும் தெரிந்திருக்கு. ஆனால் அந்த பொண்ணுக்கு வசதியில்லை என்று தான் அவர்களை பிரித்து வேற பொண்ணை பார்த்துட்டு இருந்திருக்காங்க. இன்னும் அவர் அந்த பொண்ணையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கார். பாவம்டா அவரு..

செழியன் அண்ணா சென்னையில் பொண்ணுங்களுடன் சேர்ந்து படித்ததால் சகஜமாக பேசுவார்.

ஆனால் மாறன் இருக்கானே எமகாதவன்.. பொண்ணுங்க பக்கத்துல்ல வந்தாலே எறிந்து விழுவான். அவனை பார்த்தாலே பொண்ணுங்க ஓர் அடி தள்ளி தான் நிற்பாங்க..

“ம்ம்! நல்ல குடும்பம் தான். பார்க்கலாம்” அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சங்கு ஊதும் சத்தம் கேட்டது.

“கோவிலில் வழிபாடு ஆரம்பிச்சுட்டாங்கடா. வழிபாடு முடியவும் காப்பு கட்டுவாங்க” மோகன் சொல்ல, குதிரை சத்தம் கேட்டு கூட்டத்தினர் வழி விட தீரன் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.

சத்யா புன்னகையுடன் அவனை பார்க்க, தீரன் அவனை பார்த்துக் கொண்டே சென்றான்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!