Skip to content
Post Views: 3,714
2(1)
வழிபாடு முடிந்து காப்பு கட்டிக் கொண்டிருந்தனர். முதலில் பேரரசன் குடும்பத்திற்கு முடித்து வேலனுக்கும் தீரனுக்கும் பூசாரி காப்பு கட்டினார். வேலனோ மோகனை அழைத்தார். அவனுடன் சத்யாவும் வந்தான்.
“நீயுமா கட்டப் போற?” வேலன் கேட்க,
Advertisement
“கட்டக் கூடாதா சார்?”
Advertisement
காப்பு கட்டினால் ஊரை விட்டு வெளியே போகக் கூடாது.
Advertisement
“ம்ம்! நான் இனி இங்கே தான்” சத்யா சொல்ல, “சத்யா” அதிர்ந்து மோகன் அவனை பார்த்தான்.
Advertisement
அவன் ஆடையிலிருந்து ஆர்டரை கையிலெடுத்து பூசாரியிடம் கொடுத்து, “இதை சாமிகிட்ட வச்சு கொடுங்க”
அதை பிடுங்கிய மோகன் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ந்தான்.
என்னடா இது? நீ…? நீ…? நீ…?
ம்ம்! அதில தான் இருக்கே! நான் சத்யா தான். “இன்ஸ்பெக்டர் ஆஃப் காளையனூர்”.
எல்லாரும் அவனை பார்க்க, “நீ என்னோட பெரியவனா? எதுக்குடா ஏமாத்துன்ன?”
நான் ஏமாத்தலை. நான் நம் அறைக்கு வரும் போது பயிற்சியில் தான் இருந்தேன். நான் பேசியதை நீ கவனிக்கலை. நீ தான உங்க ஊரு புராணத்தை பாடிட்டு இருப்ப. ஆர்வம் தாங்கலை. போஸ்ட்டிங்கை இங்கே கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.
“அறைக்கு வந்த அன்று பயிற்சியில் நீ சேரலையா?” மோகன் கேட்க, தோளை குலுக்கி அவனிடமிருந்து சத்யா பிடுங்கி பூசாரியிடம் கொடுத்தான்.
“போலீஸ் எப்படி காப்பு கட்டுவீங்க? உங்களுக்கு ஆயிரம் சோலி இருக்கும்?” பேரரசன் தாத்தா கேட்டார்.
“பெரியவரே! போலீஸ் வேலையில் இருந்தாலும் நானும் இனி உங்க ஊர்க்காரன் தான். அதனால கட்டிக்கலாம். என்னடா?” மோகன் தோளில் கையை போட்டான்.
வெளிய போகணும்ன்னா என்ன செய்வீங்க?
ஸ்டேசன்ல்ல ஆட்களா இல்லை.
“இப்படி பொறுப்பில்லாமல் போலீஸ்காரன் பேசலாமா?” தீரன் கேட்க,
பொறுப்பில்லாமலா? அண்ணா..நான் போலீஸ்காரன் என்பது போல என் அம்மாவுக்கு மகன். அவங்களுக்காக செய்யலாமே!
“அம்மாவா?” மாறன் கேட்டான்.
“ஆமால்ல, அம்மாவையும் அழைச்சிட்டு வந்துருக்கியா?” மோகன் கேட்க, “இல்லடா..நாளை அவங்க இங்க பள்ளியில் ஜாயின் பண்ணப் போறாங்க. காலை வந்துருவாங்க”.
“உன்னோட அம்மா டீச்சரா?” வேலன் கேட்டார்.
ம்ம்! எனக்கு அம்மா மட்டும் தான். என் அம்மாவுக்காக தான் காப்பு கட்டுகிறேன்.
“அம்மா பிள்ளையா?” ஏளனமாக சத்யாவை பார்த்தார் பேரரசன்.
“ஏன் சார்? உங்களுக்கு உங்க அம்மாவை பிடிக்காதா?” அவனிடம் சத்யா கேட்க, “பூசாரி காப்பை அவருக்கும் கட்டி விடுங்க” வேலன் கூற, பேரரசன் சத்யாவை உக்கிரமுடன் முறைத்தார். ஆனால் அவன் கண்டுகொள்ளவில்லை.
மச்சீ, அரசு தாத்தா முறைக்கிறாருடா..
அதுக்கு என்ன பண்ணனும்? சாமியை கும்பிடுடா..
மச்சீ, மோகன் மீண்டும் சத்யாவை உரச, “டேய்..நீ இடிக்கிற. பக்கத்துல்ல இருக்கிறவன பாரு. அவனும் என்னை முறைக்கிறான்” சத்யா சொல்ல, மாறனும் முறைத்துக் கொண்டிருந்தான்.
“சது” மோகன் அழைக்க, “சும்மா இருடா” கடுகடுத்த சத்யா மாறனை பார்க்க அவன் தன் அண்ணன் பக்கம் திரும்பியதை பார்த்து,
“மாறா, இவன் கூப்பிடுறான். என்னன்னு கேளு?” என்று மாறனை சத்யா மோகன் பக்கம் நிறுத்தி தீரன் அருகே நின்றான். எல்லாரும் இவர்களை பார்த்தனர்.
மாறன் சினமுடன், “நான் என் அண்ணா அருகே தான் இருப்பேன்” என்று சத்யாவை நகர்த்த, மாறனால் முடியவில்லை. தீரனும் மற்றவர்களும் சத்யாவை வித்தியாசமாக பார்த்தனர்.
“தாத்தா இவர் சிரிப்பு போலீஸ் போல நடந்துக்கிறார்” கலையரசன் சிரித்தான். சத்யா புன்னகைத்தான்.
“டேய், நீ வா” மோகன் அவன் பக்கம் சத்யாவை இழுத்துக் கொண்டான்.
“சாமி, காப்பு கட்டி விடுங்க” ஆர்டரை கையில் வாங்கி காப்பு கட்டிக் கொண்டான் சத்யா.
“வாடா, நாம கிளம்பலாம்” சத்யா சொல்லிக் கொண்டே மாறனை பார்த்து கண்ணை தீரனிடம் காட்டினான்.
மாறன் பல்லை கடித்தான்.
இளந்திரையன் இல்லாமல் மாறன் இல்லை. மாறனை குழந்தையாக கையில் ஏந்திக் கொண்டு கலவரத்தில் ஓட ஆரம்பித்தவன் இப்பொழுது வரை மாறன் தீரன் பிடியில். மாறன் அவன் சித்தப்பா பேச்சை கூட கேட்க மாட்டான்.
தீரனின் ஓர் சத்தத்தில் அடங்கி விடுவான். தீரன் என்றால் மாறனுக்கு உயிர். கொஞ்சம் பொசசிவ் கூட..
“மாறா, அவர் போலீஸ் உன்னுடன் படிப்பவன் அல்ல” செழியன் அதட்டினான்.
“பார்க்க அப்படி தெரியல” மகிழ்வரசன் கூறினார்.
“இங்க தான இருக்கப் போறார். பார்த்துக்கலாம் சித்தப்பா” அகிலரசன் சொல்ல, தீரன் அவனை பார்க்க, அவனும் இவனை பார்த்தான்.
வேலனோ அவ்விடம் விட்டு அகன்று ஓரிடத்தில் சிந்தனையுடன் அமர்ந்தார்.
“சித்தப்பூ” செழியன் அழைக்க “செழியா, தீரா எங்க?”
அண்ணா குதிரையை எடுத்துட்டு மதுரவீரன் கோவிலுக்கு போயிட்டார்.
“அதான! சொல்லீட்டு போறானான்னு பாரு”
“சித்தப்பூ, அண்ணாவுக்கு பொண்ணு பார்த்தீயா?” சீற்றமுடன் மாறன் அவர்களிடம் வந்தான்.
ஆமாடா, இருபத்தெட்டு வயசாகுது தீராவுக்கு. கல்யாணம் பண்ண வேண்டாமா?
வேண்டாம். பொண்ணுங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டா. முன் போல நாம இருக்க முடியாது. எனக்கு பிடிக்கலை.
“ஏலேய், என்ன பேசுற? நான் தான் கல்யாணம் பண்ணிக்கலை. நம்ம குலம் விருத்தியாகணும். இந்த வருசம் கண்டிப்பா நம்ம தீரனுக்கு கல்யாணம் நடந்தே தீரும். நடத்தி காட்டுகிறேன்” சவால் விட்டார் இளவேலன்.
அண்ணாகிட்ட சொல்லிப் பாரு. உன் முயற்சி விளக்கெண்ணையா வழுக்கிட்டு போயிரும்..
“என்னலேய்? கல்யாணம் யாருக்கு? பயங்கரமா பேச்சு போகுது?” பேரரசுவின் சத்தத்தில் மூவரும் திகைத்து அவரை பார்த்து எழுந்தனர்.
மாமா, அது நம்ம தீரனுக்கு தான் பொண்ணு பார்த்துட்டு இருக்கோம்.
“நம்ம சொந்தக்காரப் புள்ளைங்க இருக்கும் போது எதுக்கு என்னோட பேரனுக்கு வேற புள்ளையை பாக்குறீக?”
“மாமா, அவனுக்கு பிடிக்கணுமே!”
“நம்ம பிள்ளைகளுக்கு என்ன குறையாம்?”
அதான் நம்ம அகி இருக்காரே முறைப்பையனாக! வேலன் அகிலரசனை பார்த்தார்.
முதல்ல தீராவுக்கே முடிக்கலாம். பொண்ணுங்க படத்தை அனுப்புறேன். அவரை பார்க்க சொல்லு..
மாமா, நீங்களே அவனிடம் பேசுங்க. வெளிய பொண்ணுங்கல்ல பார்ப்பதற்கே கோபப்படுவான்.
“ஏனாம்? இன்னும் அந்த குட்டிப்பொண்ணையே நினைச்சிட்டு இருக்காரா?”
வேலன் தலை கவிழ்ந்தார்.
“தாத்தா, நீங்க அனுப்ப வேண்டாம். என்னோட அண்ணா யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்” மாறன் சொல்ல, “ஆமா தாத்தா மாமாவுக்கு வேண்டாம். மாறனுக்கு கல்யாணம் பண்ணுங்க” கேலியுடன் கலையரசன் புன்னகையுடன் கூறினான்.
அண்ணனுக இருக்கானுக? அதுக்குள்ள அவனுக்கு முடிக்கணுமா?
தாத்தா, பள்ளியில் நம்ம மாறனுக்கு பின்னாடி நிறைய பொண்ணுங்க சுத்துறாங்க. அதுல ஒன்றை பிடித்து கட்டி வச்சிருங்க. இவன் தொல்லை இருக்காது.
“கலை” மாறன் அவனிடம் ஓடினான் அடிக்க செல்லமாக.
இருவரும் கைகளை கோர்த்து சண்டையிடுவது போல முட்டிக் கொண்டு நிற்க, அவர்களை கடந்து சென்ற அவர்களுடன் படிக்கும் வித்யா இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.
“மச்சீ, இதோ வித்யா போறா. நான் வேணும்ன்னா உனக்காக கேட்கவா?” கலையரசன் சொல்ல, மாறன் சீற்றமுடன் அவனை முறைத்தான்.
“விடுங்கடா” முகிலரசன் இருவரையும் பிரித்து விட்டு, “தாத்தா அதான் சித்தப்பா பாக்குறார்ல்ல. தீரன் அண்ணாவுக்கு பொண்ணு பாக்கட்டும். மாமா ஒத்துக்கிறதே பெரிய விசயம்”
“ம்ம்! இதுவும் சரிதான்” மணியரசன் பேரரசனை பார்த்தார்.
“வாங்க, தாத்தா நேரமாகுது” கனீர் குரலில் அகிலரசன் பேரரசனை அழைத்தான். அவர்கள் கிளம்பினார்கள்.
காரில் ஏறும் முன் அகிலரசன் வேலனை பார்த்த பார்வையை தூரத்திலிருந்து பார்த்த மோகன் அதிர, சத்யா சிரித்தான்.
என்னடா?
“நடக்கவிருப்பதோ….நடந்ததோ…. நமக்கு ஏதும் முழுதாக தெரியாது. பக்கம் இருந்தால் எதுவும் தெளிவாக தெரியாது. தூரமிருந்து கவனி யார் என்ன செய்கிறார்கள் என்று தெளிவாக தெரியும்” என்று மோகன் வாயில் பஞ்சுமிட்டாயை அடைத்து அவனை இழுத்து சென்றான் சத்யா.
மறுநாள் காலை சத்யாவின் அம்மா ராதிகா வந்தார். எல்லாரிடமும் நன்றாக பழகினார். ஆனால் முக்கிய இரு குடும்பத்தை விட்டு தள்ளியே இருந்தார்.
வேலனை பார்த்த சத்யா அவன் அம்மாவை அழைத்து திரும்பி பார்க்க, அவன் அம்மா இல்லை.
“சாரி சார், அம்மா எங்க போனாங்கன்னு தெரியல. இன்னொரு நாள் அறிமுகப்படுத்துகிறேன்” அவன் சென்று விட்டான்.
அன்று தேவி கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொள்ள சுற்றுவட்டார மக்களும் வந்தனர். ராதிகா அன்று வெளியே வரவேயில்லை. சத்யா நண்பனுடன் வந்திருந்தான்.
குதிரையில் வந்த இளந்திரையன் கண்கள் எல்லா பக்கமும் ஆராய்ந்தது. அவனை கவலையுடன் வேலன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன சித்தப்பூ? கண்ணு கலங்குது” செழியன் கேட்க, “உன் அண்ணா இன்னும் நம் குடும்பத்தினரை தேடுவதை நிறுத்தவில்லை. அவங்க இறந்தது அவனுக்கு தெரிந்தும் அவனுள் ஒரு நம்பிக்கை ஒருவரையாவது பார்த்திர மாட்டோமா? பாரு” என்று அவர் கூற, செழியனும் தன் அண்ணனை பார்த்தான்.
ஏக்கமுடன் அலைபாய்ந்த கண்ணில் சீற்றம் தெரிய, “சித்தப்பூ” செழியன் அழைக்க, இளந்திரையன் குதிரையை வேறுபக்கம் திருப்பி சீறலுடன் சென்றான்.
“தீரா” அவர் கத்த, எல்லாரும் இளந்திரையனை பார்த்தனர்.
“அண்ணா” தம்பிகள் அழைப்பதும் கேட்காமல் குதிரையிலிருந்து கீழே குதித்து ஓங்கி எத்தினான் ஒருவனை. புடவை அணிந்திருந்த பொண்ணு ஒன்றின் புடவை கிழிந்து அவள் தன்னை அழுது கொண்டே மறைத்து நின்று கொண்டிருந்தாள்.
அண்ணா விட்ருங்க, “அவன் குடிச்சிருக்கான்” அவன் தம்பி அழுது கொண்டே இளந்திரையனின் காலை பிடித்தான்.
“நம்ம கோவில் திருவிழா ஆரம்பிச்ச பின் என்னடா குடி?” அந்த புள்ளகிட்ட தவறாக நடந்து கொண்டவன் சட்டையை பிடித்து தீரன் அறைய, அவன் மயங்கினான்.
“அவனை நம்ம மதுரவீரன் கோவில்ல கட்டிப் போடுங்க. இவன நா வந்து கவனிச்சுக்கிறேன்” என்ற தீரன் மறுநொடி குதிரையில் ஏறி கோவில் முன் வந்து நின்றான்.
அங்கே வந்த பொண்ணு ஒருத்தி, “ஹாய் தீரா” கையை ஆட்டினாள். அவன் கண்டுகொள்ளாமல் பூசாரியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
யாருடா இந்த பொண்ணு?
பக்கத்து ஊரு பொண்ணு. திமிரு பிடிச்சவ. நம்ம தீரன் அண்ணாவை மடக்க பார்க்கிறாள்.
சத்யா புன்னகைக்க, “அதான! ஹூரோயின் வந்துட்டாங்களோ”!
ச்சே..இவளெல்லாம் அண்ணா பக்கம் கூட நிற்க முடியாது. அண்ணா சொத்து, பெயருக்காக தான் சுத்திட்டு இருக்கா. பார்வையை பாரேன். கண்ணை நோண்டணும் பல்லை கடித்தான் மோகன்.
நீ ஏன்டா பொறாமையில பொங்கி வழியுற?
நானா? ச்சே..ச்சே..அப்படியெல்லாம் இல்லை.
“இப்ப தான் இருக்கிற மாதிரி இருக்கு” சத்யா புன்னகைத்தான்.
விழா முடியவும் ஆடவர்களுக்கான சண்டை நடைபெற்றது. எல்லாரையும் வேடிக்கை பார்க்க, அடுத்தது. நம்ம ஊரு சிங்கம் இளந்திரையன் குரல் மாறி கேட்க, மாறன் முகம் மாறியது. இளந்திரையன் முகம் பிரகாசமானது.
மேடையில் தன் நண்பனை புகழ்ந்து கொண்டிருந்தவன் முன் நின்றான் இளந்திரையன்.
“தீரா” அவன் அழைக்க, “குரு” என்று இருவரும் கட்டிக் கொண்டனர்.
“அண்ணா, இதெல்லாம் ஓவராக இல்லை” செழியன் மாறனை பார்க்க, மாறன் குருவை முறைத்து தள்ளினான்.
“ஓவரா? என்னோட நண்பனை நான் கட்டிப்பிடிக்காமல் யாருடா பிடிப்பா?” குரு கேட்க, “நான் இருக்கேன்” என்று அந்த பொண்ணு ரூபினி இருவரையும் அணைப்பது போல கையை விரித்துக் கொண்டு வந்தாள்.
தீரன் நகர்ந்து ரூபினி மீது குருவை தள்ளி விட்டான்.
“யோவ், என்னய்யா பண்ற? எழுந்திருய்யா. நான் என்னோட ஆளை கட்டிப்பிடிக்க வந்தால் எப்பப்பாரு இடையில வந்து நிக்கிற?”
“உன்னோட ஆளா? ச்சீ…டர்ட்டி..டர்ட்டி..கெர்ல்..” என்று ரூபினியை தள்ளி விட்டு எழுந்த குரு இளந்திரையன் கையை பிடித்து தனியே அழைத்து சென்றான்.
என்னடா?
தீரா, யாழுவை யாரோ பார்த்திருக்காங்க..
“எங்கடா? யாரு? விசாரிச்சீயா?” இளந்திரையன் ஆர்வமுடனும் கண்கலங்க, கண்டிப்பாக எல்லாரும் இருக்கணும் டா..
இதோ.. இருக்கா பாரு..
ஆமா..ஆமாடா..யாழினி தான்..தேங்க்ஸ்டா மச்சான்..
சரி, மாமாகிட்ட சொல்லலாம்ல்ல?
“வேண்டாம்டா, சித்தப்பூ எமோஸ்னல் ஆகிடுவார்”
நான் நேரம் பார்த்து சொல்லும் போது அவளை அழைச்சிட்டு வரணும். அவளுக்கு துணைக்கு சித்தி?…
இல்லடா..அது தெரியல..
விசாரி பாருடா..
கண்டிப்பாடா..
“அசிஸ்டன்ட் குரு சார். எங்க அண்ணாவை விடுங்க” மாறன் சினமுடன் கூறிக் கொண்டே வந்தான்.
உன்னோட அண்ணா அசிஸ்டன்ட் தான்டா நான். அதை விட நாங்க பால்ய நண்பர்கள்.
உதட்டை சுளித்த மாறன். வா அண்ணா போகலாம் அவனை இழுத்து சென்றான்.
போட்டி ஆரம்பமாக, “தீரா..களத்தில் இறங்கு” குருபிரசாத் கூறினான்.
குரு..
புருவத்தை உயர்த்தினான் குரு.
தீரன் தன் சட்டையை கழற்றி அவனிடம் கொடுத்து களத்தினுள் இறங்கினான்.
தீரா..தீரா..தீரா..அனைவரும் கூச்சலிட அகிலரசன் தீரனை பார்த்தான்.
வேஷ்டியை காலுக்கு இடையே இறுக கட்டிக் கொண்டு தன் வெண்ணிற பனியனுடன் கட்டமைப்பான உடல்வாகு அனைவரையும் கவரும் வண்ணம் கர்வமுடன் மீசையை முறுக்கிக் கொண்டு எதிர் நின்றவனுடன் சண்டையிட தயாரானான் இளந்திரையன்.
“ஐய்யோ அண்ணா! பார்த்துண்ணா..கை, காலை உடைச்சு மட்டும் விட்றாதீங்க!” எதிர் நின்றவன் கூற, “நமக்கு எதிரே எவன் எதிரே இருந்தாலும் கெஞ்சக்கூடாது. புரியுதா?” தீரன் கேட்க,
“வேற எவனாக இருந்தாலும் நான் கெஞ்ச மாட்டேனே அண்ணா!”
“வாடா” தீரன் சத்தமிட, உள்ளே வந்த அகிலரசன் தீரனிடம் சண்டையிடாமல் பேசிக் கொண்டிருந்தவனை நகர்த்தி அவன் இடத்தில் நின்று, அவன் சட்டையை கழற்றி தூக்கி எறிந்து “என்னலேய் தீரா, தயாரா இருக்கிறாயா?”
“நான் எப்பொழுதும் தயார் தான்” என்ற இளந்திரையனும் அகிலரசனும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டினார்கள்.
“மச்சான், இன்னும் ஐந்து நொடி தான் இருக்கு” குரு மைக்கில் சத்தமிட்டான்.
தீரனின் எதிர்பாராத மூவ்வில் அகிலரசன் தோற்று போனான். பேரரசன் அமைதியாக இருவரையும் பார்த்தார். கலையரசனும் தமிழரசனும் ஆர்வமுடன் தன் அண்ணனை பார்க்க, அவன் தோற்கவும் கலையரசன் முகமே மாறி போனது.
அவர்களிடம் வந்த மாறன், “கலை இதெல்லாம் சும்மா விளையாட்டு தான! எதையும் மனசுல வச்சுக்காத!” என்று அவன் தோளில் கையை போட்டான். அந்த பொண்ணு வித்யா தூரம் நின்று இருவரையும் பார்த்தாள்.
“ஆமாடா தமிழ், இது வெறும் விளையாட்டு தான? மாறா இன்னும் ஒரு வாரத்துல்ல பள்ளி திறந்துடுவாங்க. செம்ம ஜாலியா இருக்கும்ல்ல?”
ஆமாடா கலை..
மாறன் அவனிடம், “எப்படியோ பாஸ் ஆகிட்ட?” கேலியுடன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
“நானே எதிர்பார்க்கலை!” சிரித்தான் கலையரசன். இருவரையும் பார்த்துக் கொண்டே தமிழரசன் நழுவினான்.
கலையசரன் மாறனை கட்டி அணைத்து முகத்தை சினமாக வைத்துக் கொண்டான். பின் அவனிடம் இருந்து விலகி தூரமிருந்த ஒருவனை பார்த்து, மாறா..அங்க பாரு. அந்த மகி வந்திருக்கான்..
“அவனா? எவ்வளவு திண்ணக்கம் இருந்தா வருவான்?” சீற்றமுடன் கலையரசன் காட்டிய பக்கம் பார்த்த மாறன், மகேஷ் பாண்டியனை பார்த்து அவனிடம் ஓடினான். இதை பார்த்த கலையரசன் மனதினுள் புன்னகைத்துக் கொண்டான்.
“டேய், அவனோட போங்கடா. அந்த மகியை ரெண்டு போடு போட்டு வாங்கடா” தன் நண்பர்களிடம் கலையசரன் சொல்ல அவர்களும் மாறன் பின் சென்றனர்.
மகேஷ் பாண்டியன் சவுந்திர பாண்டியன் குடும்பத்தின் கடைசி வாரிசு. கலையரசன், மாறனுடன் ஒன்றாக படிக்கிறான். அவர்கள் குடும்பத்தை தள்ளி வைத்தாலும் படிப்பு விசயத்தில் மட்டும் அவங்க பசங்களை ஊருக்குள் விட்டிருந்தனர்.
திருவிழாவிற்காக அவன் வந்திருக்க, “மாறன் அவனிடம் சென்று எதுக்குடா வந்த? யாரை கொல்ல வந்த?” அவனை நகர விடாமல் தடுத்து நின்றான்.
“போடா” மாறன் சொல்ல, நான் இங்கே வந்தது என்னோட அம்மாவுக்கு சில பொருள் வாங்கணும். அதுக்கு தான் வந்தேன்.
“ஓ! எனக்கு அம்மா இல்லைன்னு சொல்லி காட்டுறீயா?” மாறன் கேட்டுக் கொண்டிருக்க, அவன் நண்பர்கள் மாறனை மேலும் ஏற்றி விட்டனர்.
“மகி வா” வித்யா அவன் கையை பிடித்து இழுக்க, “பாருடா..வித்யாவுக்கு இந்த பய மேல ஏதோ இருக்குன்னு சொன்னேன்ல்ல?”
மகி சினமுடன் வித்யா கையை விட்டு, “நீ போ”.
“இல்ல மகி, இவனுக” அவள் சொல்ல வருவதை கூட அவன் கேட்கவில்லை.
போ..
நான் போக மாட்டேன். நீ வா..
“போன்னு சொல்றேன்ல்ல” மகி அவளை தள்ள, அங்கிருந்தவர்கள் அவனை திட்டிக் கொண்டே சென்றனர்.
ஏய்! வித்யா கத்த, மாறன் அருகே இருந்த அவன் நண்பர்களில் ஒருவன் மகி வயிற்றில் குத்தினான். அடுத்தடுத்து எல்லாரும் அடித்தனர்.
வித்யா வேகமாக தீரனை தேடி ஓடினாள்.
தீரன் தன் நண்பன் குரு, சித்தப்பாவுடன் இருந்தான்.
மூச்சிறைக்க வந்தவளை பார்த்த குரு, “என்ன ரன்னிங் பிராக்டிஸ்ஸா?”
“அண்ணா, அங்க மாறனும் அவனோட ப்ரெண்ட்ஸூம் மகியை அடிச்சிட்டு இருக்காங்க” கையை காட்டினாள். எல்லாரும் ஓடி வந்தனர்.
error: Content is protected !!