Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 20

பிடித்தம் 20

கமலா தனது வீட்டிற்கே செல்வதாக கூறியதால் அவரை முதலில் வீட்டில் விட்டுவிட்டு தங்கள் வீட்டிற்கு கிருபாகரன் குடும்பம் சென்றது.

 

வீட்டிற்கு சென்றதும் மனோஜ் கிருபாகரனை பார்த்து, “இப்பவாது என்ன பிரச்சனை னு சொல்லுங்க பா”



Advertisement

 

கிருபாகரன் எரிச்சலுடன், “அதான் முடிஞ்சிருச்சே.. விடு”

 

Advertisement

“எனக்கு என்னவோ இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கிற மாதிரி தெரியுது”

Advertisement

 

“…”

 

Advertisement

“அப்பா.. எனக்கு காரணம் தெரியனும்”

 

கிருபாகரன் அவனை முறைத்துவிட்டு அலுவலக அறைக்குச் சென்றார். மனோஜ் அவர் பின்னால் செல்ல போகையில் புயல் போல் பிரசாத் வீட்டினுள் நுழைந்தான்.

 

மனோஜ் வேகமாக பிரசாத் அருகே சென்றவாறு, “டேய்! எங்க டா போய்ட்ட? இவ்ளோ நேரம் எங்……………………..” என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன் இடி என பிரசாத்தின் அடி அவன் கன்னத்தில் விழுந்தது.

 

மல்லிகா அதிர்ச்சியுடன், “டேய்!” என்று கத்த,

 

மனோஜ் பெரும் அதிர்ச்சியுடன் கன்னத்தில் கைவைத்தபடி, “என்ன டா? எதுக்கு…………”

 

மறு கன்னத்திலும் அடித்த பிரசாத் கோபத்துடன், “வர கோபத்துக்கு உன்னை கொல்லனும் னு வெறியே வருது.. ஆனா.. கூட பிறந்தவனா போயிட்டியே னு விடுறேன்”

 

மனோஜ் இப்பொழுது கோபத்துடன், “என்ன டா நினைச்சிட்டு இருக்க?” என்றபடி பிரசாத்தின் சட்டையை பிடிக்கப் போக, அவனது கையை வெகு சுலபமாக தட்டி விட்ட பிரசாத், “காதலிக்கிறவளை எந்த சூழ்நிலையிலும் கை விடாதவன் தான் ஆம்பளை.. நீ!” என்று இகழ்ச்சியான பார்வையோடும் குரலோடும் நிறுத்த மனோஜ் வலியுடன் அமைதியானான்.

 

மல்லிகா, “வந்ததும் வராததுமா அவனை ஏன் டா அடிக்கிற? இவ்ளோ நேரம் நீ எங்க இருந்த?”

 

பிரசாத் கோபத்துடன், “எங்க அந்தாளு? என் வாழ்க்கையை அழிச்சிட்டு எங்க போனாரு?” என்று கத்தினான்.

 

மல்லிகா, “யாரை டா கேட்கிற?” என்று வினவ,

 

மனோஜ், “உனக்கு என்னாச்சு டா? ஏன் இப்படி நடந்துக்கிற?” என்றான் வருத்தத்தை மீறிய பாசத்தில்.

 

கோபத்துடன் வெளியே வந்த கிருபாகரன், “பிரசாத்” என்று கர்ஜிக்க,

 

அவரது கர்ஜனையை சிறிதும் கண்டுக் கொள்ளாத பிரசாத் நக்கலுடன், “வாங்க சார் வாங்க.. உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன்” என்றான்.

 

ஆங்காங்கே தேங்கி நின்றபடி இவர்களை கவனித்துக் கொண்டிருந்த வேலையாட்களை கவனித்த கிருபாகரன் கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டு, “எதுனாலும் உள்ள வந்து பேசு”

 

பிரசாத் அதீத நக்கலுடனும் கோபத்துடனும், “ஏன்! உங்க வண்டவாளம் எல்லோருக்கும் தெரியட்டுமே! பெத்த மகனையே கடத்திய அதி மேதாவி! பெத்த மகனின் வாழ்க்கையை அழித்த சுயநலவாதி! நீங்க னு எல்லோருக்கும் தெரியட்டும்”

 

[the_ad id=”6605″]

 

 

மல்லிகாவும் மனோஜும் அதிர்ச்சியுடன் கிருபாகரனை பார்க்க, அவரோ கோபத்துடன் பிரசாத்தை முறைத்துக் கொண்டு இருந்தார்.

 

பிரசாத் ஏதோ கூற வர கிருபாகரன் கோபத்துடன், “நீ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசாத.. அண்ணனையே கடத்த நினைச்சவன் தானே நீ! நீ மனோஜை இன்னைக்கு காலையில் கடத்த நினைச்ச.. அதான் நேத்து நைட்டே நான் உன்னை தூக்கிட்டேன்..” என்று கூற, மல்லிகாவும் மனோஜும் கிருபாகரனையும் பிரசாத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்தபடி வாயடைந்து நின்றிருந்தனர்.

 

பிரசாத் நெஞ்சை நிமிர்த்தியபடி, “ஆமா நான் இவனை கடத்த பிளான் போட்டேன் தான்.. ஏன்னா இவன் கொஞ்சம் கூட மித்துக்கு பொருத்தம் இல்லாதவன்” என்றவன் மீண்டும் கோபத்துடன் மனோஜின் சட்டையை பிடித்தான்.

 

பிரசாத் வெறியுடன், “எல்லாம் உன்னால் தான் டா.. உன்னால் தான் என் மித்து எனக்கு கிடைக்காம போயிட்டா.. மித்து ஒரு பொக்கிஷம் டா.. அவளோட அருமை தெரியாத உன்னால் தான் இப்போ எனக்கு இந்த நிலைமை.. அவளை இப்படி ஈஸியா எவனுக்கோ தூக்கி கொடுத்துட்டியே!”

 

மல்லிகா பிரசாத்தின் கையை எடுக்க முயற்சித்தபடி, “என்ன டா இது! நடு கூடத்தில் நின்னு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கிற! கையை எடு டா” என்று கண்ணீர் சிந்தியபடி கெஞ்ச,

 

மனோஜை சிறிது தள்ளியபடி கையை எடுத்த பிரசாத் வலியும் கோபமுமாக, “உங்களுக்கு தெரியாது மா.. இவன் மித்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமே கிடையாது.. எதற்கும் யாருக்கும் பயப்படாத மித்து எங்க! கோழையான இவன் எங்க? இவனை காதலிக்கலைனாலும் இவன் காதலை ஏத்துக்கிட்ட ஒரே காரணத்துக்காக இவனை கல்யாணம் செய்ய மித்து போராடினா ஆனா இவன்! இவன் தன்னோட காதலுக்காக சிறு துரும்பையாவது அசைச்சானா? இப்படி அவளை கட்டாய கல்யாணம் செய்ய வச்சிட்டு வந்திருக்கான்” என்றவன் மீண்டும் அவனை அடிக்க போக மல்லிகா கஷ்டப்பட்டு அவனை தடுத்தார்.

 

இந்த துயரத்திலும் மல்லிகாவின் மனதின் ஓரத்தில் ‘மித்து மனோவை காதலிக்கலையா! அப்போ ஒரு நாள் புகழுடன் ஒன்றி வாழ வாய்ப்பு இருக்குது’ என்ற சிறு நிம்மதி பிறந்தது.

 

மல்லிகா பிரசாத்தை சமாதானம் செய்யும் எண்ணத்துடன், “இல்லை டா.. அங்கே என்ன நடந்தது னு உனக்கு தெரியாது.. புகழ்……………………”

 

“அதெல்லாம் தெரிஞ்சிட்டு தான் பேசுறேன்.. முதல்ல இந்த பெரிய மனுஷர் அவன் கிட்ட ஏதோ தனியா பேசி இருக்கார் அப்பறம் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசி இருக்கார்.. அவனும் இவனும் மித்து கிட்ட பேசி முடியாம கடைசியா அவன் அத்தை கிட்ட ஏதோ சொல்லி மித்துவை கல்யாணம் செஞ்சுகிட்டான்.. அங்க என்ன நடந்துது னு தெரிஞ்சிட்டு தான் வந்திருக்கிறேன்.. பெருசா என்ன மிரட்டி இருக்க போறான்! இவரோட தில்லு முள்ளு எதையாவது வச்சு லாக் பண்ணி இருப்பான்” என்றவன் மனோஜை பார்த்து, “பாசமே இல்லாத இவருக்காக மித்துவை விருப்பம் இல்லாத வாழ்க்கையில் தள்ளிவிட்டுட்டு வந்திருக்க” என்று மீண்டும் எகிறினான்.

 

மனோஜ் வாயை திறக்கவே இல்லை.

 

பிரசாத் மீண்டும் வெறியுடன், “வாயை திறந்து பேசு டா” என்று கத்தினான்.

 

மனோஜ் தலை குனிந்தபடி மெல்லிய குரலில், “மித்து அவனை கல்யாணம் செய்யலை னா அப்பா ஜெயிலுக்கு போய் தூக்கில் தொங்குவார் னு சொன்னான்”

 

ஒரு நொடி அதிர்ந்த பிரசாத் அடுத்த நொடியே, “உப்பை திண்ணவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும்! இவர் செய்த தப்புக்கு தப்பே செய்யாத மித்து ஏன் தண்டனை அனுபவிக்கனும்?” என்று வினவ,

 

‘நான் மட்டும் என்ன டா தப்பு பண்ணேன்? எனக்கு எதுக்கு இந்த தண்டனை?’ என்று மனோஜால் மனதினுள் மட்டுமே கேட்க முடிந்தது.

 

கிருபாகரன், “என்ன டா ரொம்ப துள்ற! நடந்தது நடந்து போச்சு.. அதை மாத்த முடியாது.. போய் வேலையை பாருங்க” என்று கூற,

 

பிரசாத், “ஏன் மாத்த முடியாது? இப்போ கூட மித்து அவனை தூக்கி போட்டுட்டு வந்தா நான் அவளை கல்யாணம் செய்ய தயாரா இருக்கிறேன்”

 

கிருபாகரன், “பிரசாத்!!!!” என்று மீண்டும் கர்ஜிக்க,

 

பிரசாத் அசால்ட்டாக ‘என்ன!’ என்பது போல் பார்த்தான்.

 

கிருபாகரன், “இப்படி பேச உனக்கு கேவலமா இல்லை?”

 

“இல்லை”

 

“சீ.. இன்னொருத்தன் மனைவியை…………”

 

“மித்துவோட விருப்பத்துடன் கல்யாணம் நடந்து இருந்தால் விட்டிருப்பேன்.. என்னை பொறுத்தவரை இந்த கட்டாய கல்யாணம் கல்யாணமே இல்லை”

 

மல்லிகா, “பிரசாத்………..” என்று ஆரம்பிக்க,

 

பிரசாத், “மித்து மருமகளா வந்தா ஏத்துக்க மாட்டீங்களா?”

 

அவர், “அப்படி.. இல்லை.. ஆனா.. அது.. அவளுக்கு..” என்று தவிப்புடன் திணறியபடி வார்த்தைகளை தந்தியடிக்க,

 

பிரசாத், “கணவன் இறந்த பிறகோ, டைவர்ஸ் ஆன பிறகோ பெண்கள் இரண்டாம் கல்யாணம் செய்துக்கிறது இல்லையா? உங்க யாரோட அனுமதியையும் நான் கேட்கலை.. அது எனக்கு தேவையும் இல்லை.. மித்துவோட சம்மதம் மட்டும் எனக்கு போதும்” என்றவன் யாரோட பதிலையும் எதிர்பார்க்காமல் வேகமாக வெளியேறினான்.

 

பிரசாத் பேசியதை கேட்டு மனோஜிற்கு தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது.

 

அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைப்புடன் மல்லிகா இருக்க,

 

கிருபாகரனோ கைபேசியில் யாரையோ அழைத்து, “ஏன் டா அதுக்குள்ளே அவனை வெளியே விட்டீங்க?” என்று கத்தியபடி அலுவலக அறையினுள் சென்றார்.     

 

—————————————————————————————————————————————————-

 

புகழ்வேந்தனின் வீட்டு கூடத்தில் இருந்த சோபாவில் கவலையும் கலவரமுமாக கலைவாணி அமர்ந்திருக்க,

 

சதீஷை தனது கைபேசியில் அழைத்த புகழ்வேந்தன் அழைப்பு எடுக்கப் பட்டதும், “மண்டப சிசிடிவி கேமராவில் ராணி ஏறின ஆட்டோ நம்பர் தெரியுதா பார்த்து சொல்லு.. குவிக்” என்று அவசரப் படுத்தியவனின் குரலில் முதல் முறையாக சிறு பதற்றத்தை உணர்ந்த சதீஷ் விரைந்து செயல்பட்டான்.

 

சதீஷ் வேகமாக அலுவலக அறை நோக்கி ஓடியபடி, “மேம் வீட்டுக்கு வரலையா பாஸ்?”

 

“வந்தா உன்னை ஏன் கேட்கிறேன்?” என்று சிறு கோபத்துடன் வினவ,

 

[the_ad id=”6605″]

 

சதீஷ், “இல்லை பாஸ்.. ஒருவேளை மேடமை யாரு னு தெரியாம செக்யூரிட்டி உள்ளே விட……….”

 

“ராணி இங்கே வரலை.. நான் கேட்டது என்னாச்சு?”

 

“ஆபீஸ் ரூம் வந்துட்டேன் பாஸ்” என்றபடி கணினியை ஆராய்ந்தவன் இரண்டு நிமிடத்தில், “எஸ் பாஸ்.. ஆட்டோ நம்பர் தெரியுது”

 

“தன்க் காட்.. அந்த நம்பரை வச்சு அந்த ஆட்டோகரனை பிடி.. ராணியை எங்க இறக்கி விட்டான் னு கேளு”

 

“ஓகே பாஸ்” என்றவன், “டேவிட்டுக்கு போன்……….”

 

புகழ்வேந்தனின் பொறுமை காற்றில் பறக்க, “அதை செய்யாமலா உன்னிடம் பேசிட்டு இருக்கிறேன்.. ரெண்டு பேர் போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருக்குது..” என்று கோபத்துடன் கத்தினான்.

 

“சாரி பாஸ்”

 

“சீக்கிரம் ஆட்டோகாரனை கண்டுபிடி”

 

“ஓகே பாஸ்” என்று கூறி அவன் அழைப்பை துண்டிக்கவும் தன் மனதின் பதற்றத்தை மறைத்தவனாக அன்னை அருகே அமர்ந்து அவரது கையை பற்றி, “கொஞ்ச நேரத்தில் கண்டு பிடிச்சிரலாம் மா.. கவலைப்படாதீங்க” என்றான்.

 

அவன் முகத்தை ஒரு நொடி பார்த்தவர் பின் எதுவும் கூறாமல் கண்களை மூடியபடி சோபாவில் சோர்வுடன் சாய்ந்து அமர்ந்தார்.

 

மித்ராணிக்கு என்னானதோ என்ற பதற்றத்துடன் புகழ்வேந்தன் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு யுகமாக கடத்த,

 

மித்ராணியோ புகழ்பெற்ற காஃபி ஷாப்பில் ஒரு இருக்கையில் கால் கால் போட்டு அமர்ந்து கைபேசி ஒன்றை மேஜை மீது வைத்து சுற்றியபடி தன் எதிரில் நின்றுக் கொண்டிருந்த டேவிட்டை கூர் விழிகளால் நோக்கியபடி, “உன் பெயர் என்ன?”

 

“டேவிட்.. புகழ் சார் தான்…………”

 

“எத்தனை நாளா என்னை பாலோ பண்ற?”

 

“பத்து நாளா”

 

“இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று அவள் கேவலமாக கூற,

 

அவன் சிறு கோபத்துடன், “உங்க பாதுகாப்புக்காக தான் உங்கள் பின்னால் வந்தேன்”

 

அவளும் கோபத்துடன், “நான் கேட்டேனா? எனக்கு பாதுகாப்பு கொடு னு நான் கேட்டேனா?”

 

“அது.. சார்………..”

 

“இப்படி யார் வந்து பணம் கொடுத்து ஒரு பொண்ணை பாலோ பண்ண சொன்னாலும் உடனே செய்வீங்களா? இப்படி ஒரு பொழப்பு……………..”

 

“மேம்.. சார் உங்களை அவரோட பியன்ஸி னு சொன்னார்”

 

“ஓ!” என்று அவள் நக்கலாக கூற,

 

அவன், “யாரு எதை சொன்னாலும் நம்பிட மாட்டோம் மேம்.. சார் எங்க எம்.டி-யோட பிரெண்ட்.. அதான்”

 

“என் அனுமதி இல்லாம என்னை பாலோ பண்ணதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேணாமா?”

 

“மேம் அது என்னோட வேலை.. அதுவும் தப்பான நோக்கத்தில் செய்யலை.. உங்களை…………….”

 

“உனக்கு அவனோட நம்பரை மைண்டில் ஸ்டோர் பண்ணி வச்சிருக்கியா?”

 

“மேம்!!” என்று அவன் புரியாமல் விழிக்க,

 

அவள் சிறு எரிச்சலுடன், “உன்னோட போனை பார்க்காமல் அவனோட நம்பர் உனக்கு மனப்பாடமா தெரியுமா?”

 

“யாரு நம்பர் மேம்?”

 

“என்னை பற்றி நீ யாருகிட்ட ரிபோர்ட் பண்ணுவ?”

 

“புகழ் சார் கிட்ட”

 

“அவனை தான் சொல்றேன்..” என்று அவள் அலட்டிக்கொள்ளாமல் புகழ்வேந்தனை மரியாதையின்றி கூற இவன் சிறு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.

 

அவள், “நம்பர் தெரியுமா தெரியாதா?” என்று அழுத்தி கேட்கவும் அவன் அமைதியாக தெரியாது என்பது போல் தலையை ஆட்டினான்.

 

அவள், “சரி நீ கிளம்பு”

 

அவள் சுழற்றிக் கொண்டிருந்த கைபேசியை பார்த்தபடி அவன் நிற்க,

 

அவள், “சாயுங்காலம் வந்து வாங்கிக்கோ”

 

“மேம்!!!”

 

“இப்போ குடுத்தா உடனே நீ போனை ஆன் பண்ணி அவனுக்கு தகவல் சொல்லுவ.. கொஞ்ச நேரம் அவனை டென்ஷன் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போய்டுவேன்.. நீ கிளம்பு”

 

அவன் கிளம்பாமல் நிற்கவும் அவள், “உன் போனை ஒன்னும் செய்ய மாட்டேன்.. நீ கிளம்பு”

 

“இல்லை மேம்.. நீங்க வீட்டுக்கு போன பிறகு நான் கிளம்புறேன்” என்று அவன் உறுதியாக கூற, சிறு தோள் குலுக்கலுடன் வெளியேறியவள் ஆட்டோ பிடித்து அருகில் இருந்த பேரங்காடிக்கு(MALL) சென்றாள்.

 

டேவிட் சற்று இடைவெளி விட்டு அவளை பின் தொடர, ஒரு ஆடை கடையினுள் சென்றவள் பத்து நிமிடத்தில் பல பைகளுடன் வெளியே வந்து அவற்றை டேவிடின் கையில் கொடுத்தாள்.

 

அவன் திருதிருவென்று விழிக்க, “இன்னையில் இருந்து இதெல்லாம் பாடி-கார்ட் வேலையில் சேர்த்து இருக்காங்களாம்.. பிடி” என்று அலட்டிக் கொள்ளாத குரலில் ஆரம்பித்தவள் மிரட்டலில் முடித்தாள்.

 

‘என் பொண்டாட்டிக்கு கூட நான் தூக்கியது இல்லையே!’ என்று மனதினுள் புலம்பியபடி பைகளை தூக்கியபடி அவள் பின்னால் போனான்.

 

ஒருமணி நேரம் அந்த பேரங்காடியில் சுற்றி மேலும் பல பைகளை டேவிட் கையில் திணித்தவள் மதிய உணவை முடித்துக் கொண்டு புகழ்வேந்தன் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்து இருந்தாள்.

 

 

 

 

அந்த ஆட்டோ ஓட்டுனரை கண்டுபிடிக்க சதீஷ் எடுத்துக் கொண்ட அரைமணி நேரத்தில் மித்ராணிக்காக தனது இதயம் துடித்த துடிப்பை வைத்தே தனது மனதை புகழ்வேந்தன் தெளிவாக புரிந்துக் கொண்டான். தனது காதலை புரிந்துக் கொண்ட நொடியில் அதன் கனத்தை தாங்க முடியாமல் மாடியில் இருக்கும் தனது அறைக்கு விரைந்தவன்.

 

அவனது கால்கள் வேகமாக அறையை அளக்க, மனமோ, ‘இது எப்படி? எப்போ?’ என்று ஆராய்ந்தது.

 

விடை கிடைக்காத அந்த கேள்விகளை விடுத்து, ‘அவள் பெயரை கேட்டாலோ அவளை பற்றிய நினைவு வந்தாலோ சட்டென்று என் மனம் அமைதி ஆகும் மாயம் இதனால் தானோ! என் காதலை உணர்த்த தான் இப்படி நடக்குதா? எங்க டி இருக்க! வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் என்னை விட்டு போய்டாத! என்னையும் என் காதலையும் நீ ஏற்றுக்கொள்ளவே இல்லைனாலும் பரவாயில்லை என் கூட நிதமும் சண்டை போட்டப்படியாவது நீ எனக்கு வேணும்டி.. என் கிட்ட வந்திருடி அல்லிராணி’ என்று பிதற்றியது.      

 

அவளுக்கு எதுவும் ஆகி இருக்காது என்ற திடம் இருந்தாலும் காதல் கொண்ட மனம் பிதற்றுவதை நிறுத்தவில்லை.

 

கிருபாகரனை கண்காணிக்க வைத்திருந்த ஆளிற்கு அழைத்து இது கிருபாகரன் வேலை இல்லை என்பதை உறுதி செய்தவன் டேவிட் வேலை செய்யும் உரிமையாளரான தனது நண்பனை அழைத்து டேவிட் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கச் சொன்னான்.

 

அப்பொழுது சதீஷ் அவனை அழைத்து, “மேம் XXX காஃபி ஷாப்பில் இறங்கி இருக்காங்க.. நான் அங்க போய் பார்த்துட்டு……………”

 

“நானும் அங்கே தான் வந்துட்டு இருக்கிறேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

சதீஷின் அழைப்பு வரவும் அழைப்பை எடுத்தவன் பேசியபடி மூன்றே தாவில் படிகளை கடந்து கூடத்திற்கு வந்திருந்தான்.

 

சதீஷின் அழைப்பை துண்டித்து, “மா ராணியுடன் வரேன்” என்றபடி வெளியேறினான்.

 

மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்தியவன் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த காஃபி ஷாபின் மேலாளர் முன் நின்றிருந்தான்.

 

சதீஷ் அந்த காஃபி ஷாப் வந்தபோது புகழ்வேந்தன் வெளியே வந்துக் கொண்டிருந்தான்.

 

சதீஷ் ஆச்சரியத்துடன், “பாஸ்!” என்று அழைத்தான். ஏனெனில் அந்த காஃபி  ஷாப் சதீஷ் இருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது.

 

புகழ்வேந்தன் அமைதியான குரலில், “ராணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நீ கிளம்பு” என்றான்.

 

“பாஸ்!!!”

 

“என்ன?” என்ற அவனது அமைதியான குரலில் இருந்து அவனது மனநிலையை சிறிதும் அறிய முடியாமல் சதீஷ் மேலும் குழம்பினான்.

 

சதீஷின் முகத்தை பார்த்தவன் மூச்சை இழுத்துவிட்டு, “ஹ்ம்ம்.. ராணி தான் வேணும் னு ரெண்டு பேர் செல்லையும் ஸ்விட்ச் ஆப் பண்ணியிருக்கா.. சிசிடிவி கேமராவில் பார்த்ததை வச்சு சொல்றேன்.. நீ கிளம்பு.. டேவிட் அவளுடன் தான் இருக்கணும்.. நான் வீட்டிற்கு போறேன்”

 

‘ஓ’ என்று மனதினுள் சொல்லிக் கொண்ட சதீஷ், “சரி பாஸ் நான் மண்டபத்திற்கு போய் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கிளம்புறேன்”

 

“ஹ்ம்ம்.. நிவேதா வீட்டிற்கு போயிட்டாங்களா?”

 

“ஹ்ம்ம்.. ஆட்டோவில் ஏத்தி விட்டுட்டு தான் கிளம்பினேன் பாஸ்”

 

புகழ்வேந்தன் சிறு தலையசைப்புடன் கிளம்பினான்.

 

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த புகழ்வேந்தனின் மனம், ‘ராட்சசி.. இப்படி கலங்கடிச்சிட்டா!’ என்று திட்டினாலும் அடுத்த நொடியே மென்னகையுடன், ‘அல்லிராணி!’ என்றும் ‘அழகான ராட்சசி’ என்றும் ரசனையுடன் முணுமுணுத்தது.

 

புகழ்வேந்தன் வீட்டிற்கு சென்றபோது பிரசாத் வாயில் காவலாளியுடன் உள்ளே விட சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

 

————————————————————————————————————————————————–

 

உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் மாலினி அமர்ந்திருந்தாள். இது அவளது பிறந்தநாள் விருந்து.

 

[the_ad id=”6605″]

 

இது நேற்றே ஏற்பாடு செய்யப்படிருந்ததால் தவிர்க்க முடியாமல் வந்திருந்தாள். நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் அவளது மனதினுள் அந்த பெண் பார்க்கும் நிகழ்வு அரித்துக் கொண்டிருந்தது.

 

ஆம்.. மாலையில் நடக்கவிற்கும் அந்த பெண் பார்க்கும் நிகழ்வை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேறொருவன் முன் தன்னால் நிற்க முடியாது என்பதை உணர்ந்தவள் காலையிலேயே தந்தையுடன் பேசும் எண்ணத்துடன் தனது அறையை விட்டு வெளியே வர, அவரோ அலுவலகம் கிளம்பி இருந்தார்.

 

கைபேசியில் அழைத்த போது அருணாச்சலம் இவளை பேச விடாமல், “எதுவும் முக்கியமான விஷயமா டா? இப்போ பிஸியா இருக்கிறேன்” என்றார்.

 

அவள், “வீட்டிற்கு வந்து பொண்ணு பார்க்கிறது வேண்டா………….”

 

அவர் மென்னகையுடன், “அம்மா சொல்லலையா டா? அவங்க வீட்டுக்கு வரலை.. சாயுங்காலம் அஞ்சு மணிக்கு கபாலீஸ்வரர் கோவிலில் வச்சு தான் பார்க்க போறாங்க.. இப்போ அப்பா பிஸி டா.. மதியம் சீக்கிரம் கிளம்பணுமே! அப்பறம் பேசுறேன் டா.. பை” என்று கூறி அழைப்பை துண்டித்து இருந்தார்.

 

அன்னைக்கும் தன்னுடைய எண்ணம் தான் என்றதாலும், இதுவரை அன்னை மூலமாக தந்தையிடம் எந்த விஷயத்தையும் பேசியதில்லை என்றதாலும் தன் மனதை அன்னையிடம் கூறி பெண் பார்க்கும் நிகழ்வை தடுக்க நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் தந்தையிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றே நினைத்தாள்.

 

அதன் பிறகு தந்தைக்காக என்று யோசித்தவள் ‘சரி கோவிலுக்கு போறதா நினைச்சுப்போம்.. அங்கே எத்தனையோ பேரை சந்திப்பது இல்லையா! அப்படி நினைச்சிப்போம்’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

 

அதன் பிறகு அணைத்து வைத்திருந்த கைபேசியை அவள் இயக்கியதும் நண்பர்களின் அழைப்பு வரிசையாக வர, அவர்களுடன் பேசுவதில் நேரம் செல்ல, பிறகு மதிய உணவிற்காக கிளம்பி உணவகத்திற்கு வந்திருந்தாள்.

 

மகளின் மனதை ஓரளவிற்கு அறிந்துக் கொண்ட புஷ்பா வெளியே செல்வதற்கு தடை சொல்லவில்லை. இதுவே அனைவரின் விருப்பத்துடன் பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் நிச்சயமாக மாலினி வெளியே செல்ல அவர் அனுமதித்து இருக்க மாட்டார்.

 

 

மாலினி அருகே அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றவர்கள் அறியாமல், “மாலினி என்னாச்சு?” என்றான்.

 

“என்ன என்னாச்சு?”

 

“நீ நார்மலா இல்லை”

 

“ஹே அப்படிலாம் இல்லை.. அம் பைன்”

 

மறுப்பாக தலை அசைத்தவன், “சம்திங் இஸ் ஈடிங் யூ”

 

இதுவரை எதையும் நண்பனிடம் மறைத்திறாதவள் ‘இதை எதுக்கு பெருசு படுத்தணும்?’ என்ற எண்ணத்துடன், “லூசு.. நான் நல்லா தான் இருக்கிறேன்”

 

“வெற்றி அண்ணா விஷ் பண்ணலையா?”

 

வெற்றி என்ற பெயரை கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் முகத்தில் சிறு வெக்கப்பூக்கள் பூத்தது.

 

கிருஷ்ணமூர்த்தி மென்னகையுடன், “ஸோ அது இல்லை விஷயம்.. அப்பா கிட்ட எப்படி பேசுறது னு யோசிக்கிறியா?”

 

“டேய்.. விடு டா.. இப்போ இந்த கெட்-டூ-கதரை என்ஜாய் பண்ணலாம்” என்றாள்.

 

பிருந்தா, “ஹலோ அது என்ன உங்க ரெண்டு பேருக்கு மட்டும் ரகசியம்?”

 

கிருஷ்ணமூர்த்தி, “ரகசியத்தை யாராவது வெளியே சொல்லுவாங்களா?”

 

பிருந்தா மாலினியை பார்த்து முறைக்க, மாலினி மென்னகையுடன், “ரகசியம்லாம் இல்லைடி.. அவன் சும்மா உன்னை சீண்டுறான்”

 

பிருந்தா அருகே அமர்ந்திருந்தவன், “நீ ஏன் மாலினி பெருசா எக்ஸ்ப்ளேன் பண்ற! இவளோட முறைப்பெல்லாம் சாப்பாட்டை பார்க்கிற வரை தான்” என்றவன் மேஜை பணியாளர் உணவுடன் வரவும், “இதோ சாப்பாடு வந்திருச்சு! என்ன ஜில்ஸ் இப்போ நாங்க யாரும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டோமே!” என்று கிண்டலாக கூற,

 

பிருந்தா, “டேய் குரங்கு!” என்றபடி அவன் மீது பாய,

 

“அய்யோ! புல்டோசர் என் மேல ஏறுதே! டேய் காப்பாத்துங்க டா!” என்று போலியாக அலற, இது எப்பொழுதும் நடக்கும் ஒன்று தான் என்பதால் நண்பர்கள் சிரித்தனர்.

 

கிருஷ்ணமூர்த்தி, ‘வி பிரெண்ட்ஸ் ஆர் இன் XXX ரெஸ்டாரன்ட் பார் மாலினி பர்த்டே ட்ரீட்’ என்று வெற்றிவேலிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான். என்ன தான் மாலினி ஒன்றுமில்லை என்று கூறினாலும் அதை நம்பாத கிருஷ்ணமூர்த்தி ஒருவேளை வெற்றிவேல் வந்தால் சரியாவாளோ என்ற எண்ணத்தில் குறுஞ்செய்தியை அனுப்பினான். அவன் அனுப்பியதும் ‘ஓகே.. தேங்க்ஸ்’ என்ற பதில் வெற்றிவேலிடம் இருந்து வந்தது.

 

கேலியும் கிண்டலுமாக நண்பர்கள் உணவை முடித்துக் கொண்டு உணவகத்தை விட்டு வெளியே வந்தனர். ஒவ்வொருவராக கிளம்ப இறுதியில் கிருஷ்ணமூர்த்தியும் மாலினியும் மட்டுமே இருந்தனர்.

 

கிருஷ்ணமூர்த்தி, “எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காத.. அப்பா நீ சொன்னா புரிஞ்சிப்பாங்க” என்று கூற மாலினி மென்னகையுடன் தலை அசைத்தாள்.

 

அப்பொழுது புன்னகையுடன் அவள் முன் வந்த வெற்றிவேல் சிகப்பு ரோஜாகள் நிறைந்த பூங்கொத்தை நீட்டியபடி, “மெனி மோர் ஹப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே.. ஹப்பி பர்த்டே மானு” என்றான்.

 

ஆனந்த அதிர்ச்சியுடன் கண்களை விரித்தவள் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக் கொண்டு, “தன்க் யூ” என்றாள்.

 

கிருஷ்ணமூர்த்தி, “நான் வண்டி எடுத்துட்டு வரேன்” என்று கூறி அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினான்.

 

வெற்றிவேல், “கண்ணை மூடு” என்று கூற, அவள் சிறு எதிர்பார்ப்புடன் கண்களை மூடினாள்.

 

“நான் சொல்றவரை கண்ணை திறக்கக் கூடாது” என்றவன் அவள் கையில் அணிந்திருந்த கைகடிகாரத்தை கழட்டிவிட்டு தான் வாங்கி வந்த கைகடிகாரத்தை கட்டிவிட்டான்.

 

“ஹ்ம்ம்.. இப்போ திற” என்றான்.

 

கண்களை திறந்து கைகடிகாரத்தை பார்த்தவள் புன்னகையுடன், “ரொம்ப நல்லா இருக்குது.. தேங்க்ஸ்” என்றாள்.

 

பின் அவள், “உங்களுக்கு எப்படி தெரியும்?”

 

“எப்படியோ தெரியும்”

 

அவள் செல்லமாக முறைக்கவும் அவன், “மூர்த்தி மெசேஜ் பண்ணான்”

 

“ஓ”

 

“இந்த வாட்ச்சை பத்தி வீட்டில் கேட்டா என்ன சொல்லுவ?”

 

“எந்த நொடியும் நான் உங்களையே நினைச்சிட்டு இருக்கணும் னு நீங்க தந்ததா சொல்வேன்”

 

“ஹேய்!” என்று மகிழ்ச்சியுடன் அவளை நெருங்க,

 

அவனது வேகத்தில் சட்டென்று பின்னால் நகர்ந்தவள், “ACP இது பப்ளிக் பிளேஸ்”

 

“சீக்கிரம் வந்து பொண்ணு கேட்டு உன்னை கடத்திட்டு போறேன்”

 

‘பொண்ணு கேட்டு’ என்ற வார்த்தைகளின் அரை நொடி அவளது முகம் சுருங்கி இயல்பானது.

 

அவள் மென்னகையுடன் தலை சரித்து, “ACP இப்போ கடத்தல்காரனா மாறப் போறாரா?”

 

சிரிப்பை பதிலாக தந்தவன், “மானு எதுவும் பிரச்சனை இல்லையே?”

 

“இல்லையே.. ஏன் கேட்கிறீங்க?”

 

“ஒன் செகண்ட் உன் முகம் சுருங்கிச்சு”

 

அந்த அரை நொடி முக மாற்றத்தை கூட அவன் கவனித்ததில் மனதினுள் ஆச்சரியம் கொண்டவள் மெல்லிய குரலில், “இன்னைக்கு தான் அப்பா கிட்ட பேச போறேன்” என்றாள்.

 

அவளது கையை மென்மையாக பற்றி, “மாமா புரிஞ்சுப்பாங்க டா” என்றான்.

 

“ஹ்ம்ம்.. புரிஞ்சுக்கணும்” என்றவளின் மனதினுள் சிறு கலக்கம் இருக்கத் தான் செய்தது.

 

அவளது மனநிலையை மாற்றும் முயற்சியில் அவன், “காலையில் கொடுத்த பரிசை இன்னொருமுறை தரவா?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

 

சட்டென்று கையை உருவியவள் தன்னுள் ஓடிய சிலிர்ப்பை மறைத்தபடி, “நீங்க முதல்ல கிளம்புங்க” என்றாள் மிரட்டும் குரலில்.

 

அவன் உல்லாசமாக சிரித்தபடி, “கிளம்பலைனா?”

 

“நான் கிளம்பிட்டு போறேன்”

 

“நான் கிளம்பும் வரை மூர்த்தி இங்கே வர மாட்டான்”

 

‘அப்படியா!’ என்பது போல் பார்த்தவள், “நான் ஆட்டோ பிடிக்க போனா வருவான்”

 

“நான் சொல்லாமல் என்னை விட்டு கிளம்பிடுவியா?” என்று அவன் ஆழ்ந்த குரலில் வினவ,

 

அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

 

ஒரு நொடி சுற்றி பார்த்தவன் அவளது கண்களை காதலுடன் நோக்கி, “லவ் யூ ஸோ மச் மானுமா” என்றவன் கண்ணடித்து மிக லேசாக உதட்டை குவித்து சிறு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தான். மாலினியை தவிர வேறு யாரும் அறிய முடியாதபடி இருந்தது அவனது இந்த முத்தம்.

 

அவள் அதிர்ச்சியுடன் பார்க்க அவன் வசீகர புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.

 

“என்ன இது?” என்று சிணுங்கியபடி அவன் கையை அடித்தாள்.

 

மென்னகையுடன், “சரி கிளம்பு.. எனக்கும் வேலை இருக்குது”  என்றவன் கிருஷ்ணமூர்த்தியை கைபேசியில் அழைத்தான்.

 

கிருஷ்ணமூர்த்தி வந்ததும் சிறு தலை அசைப்புடன் அவள் நண்பனின் வண்டியில் ஏற, அவளது கையை அழுத்தமாக பற்றிய வெற்றிவேல், “மாமா புரிஞ்சுப்பாங்க.. எல்லாம் நல்லதாவே நடக்கும்.. வீட்டில் பேசி சீக்கிரமே உன்னை பொண்ணு பார்த்து கல்யாணம் பேச  கூட்டிட்டு வரேன்.. சந்தோஷமா இரு” என்றான்.

 

அவள் மென்னகையுடன் தலை அசைத்து கிளம்பினாள்.

 

வெற்றிவேல் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் அவள், “தேங்க்ஸ் டா” என்றாள்.

 

கிருஷ்ணமூர்த்தி எதற்கு என்று கேட்காமல், “ஹாப்பி?” என்று கேட்டான்.

 

அவள் மென்னகையுடன், “ஹ்ம்ம்.. ரொம்ப” என்றாள்.

 

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!