Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kottathile oru Thanimai pura

Thanimai Pura Epi 2.1

” மாமா உனக்கு ஒரு
தூது விட்டேன்…….
அந்தி மாலைக் காத்து
வழியா…………..
வந்துச்சா……வந்துச்சா…..
சொல்லு…….சொல்லு”
என்ற பாடல் வரிகளோடு சேர்ந்து “மே……மே……..” கொக்ரக்கோ…….கோ….” என ஆடு மாடு மனிதன் என்ற வித்தியாசம் இல்லாது அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு புழுதியை கிளப்பியவாறு வந்து நின்றது அந்த அரசுப் பேருந்து.
அதிலிருந்து முதலாவதாக குதித்து கீழிறங்கினான் விக்கி(எ)விக்னேஷ்வரன்.அவனை தொடர்ந்து பெண்கள் இருவரும் இறங்க முற்பட, படிகள் சற்றே உயரமாய் இருப்பதை கண்டு திகைத்தனர்.
ஏனெனில் இறங்க வேண்டும் என்றால் அவனைப் போல் குதித்து தான் இறங்க வேண்டும் ஆனால் அதற்கும் வழி இல்லாமல் இருவரும் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்க பெண்கள் இருவரும் செய்வதறியாது சற்றே தடுமாறினர்.
இந்தாம்மா இன்னும் எம்புட்டு நேரம் தான் இப்புடியே நின்னுக்கிட்டு சர்க்கஸ் காட்டுவிங்க…….,வெரசா இறங்கும்மா…, எங்களுக்கு வேற சோலி(வேலை) கழுத இல்லையா….., என்று அருகிலிருந்த பெண்மணி அதட்ட,
அதில் மிரண்டவர்கள் இல்ல……இல்ல… நீங்க முதல்ல இறங்குங்க என வழி விட்டு ஒதுங்கி நின்றுக் கொண்டனர்.
ஒருவழியாக அனைவரும் இறங்கி முடித்து அடுத்த டிரிப்பிற்கு ஆட்கள் ஏறி அமர்ந்தப் பின்னும் பெண்கள் இருவரும் இறங்கியப் பாடில்லை.
ஏம்மா!!!!! அடுத்த டிரிப்புக்கு ஆளுங்க ஏறிட்டாங்க இன்னும் இறங்காமா என்ன பண்ணுறீங்க இப்ப இறங்குறீங்களா இல்லையம்மா என இதுவரை இவர்களை கவனித்துக் கொண்டிருந்த நடத்துனர் தன் பொறுமை இழந்து ஓங்கி சத்தமிட,
இதற்கு மேலும் இறங்கவில்லை என்றால் நடத்துனரே வந்து தள்ளி விட்டாலும் விடலாம் என அனுமானித்த தேவா,
நொடியும் தாமதிக்காது தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு தரை சற்று சமமாக இருந்த இடத்தில் குதித்து விட்டாள்.
அவளைப் பின்பற்றி பவ்யாவும் குதிக்க முற்படும் போது அருகிலிருந்த சேவல் பறந்து இவள் மேல் விழ,
அம்மா….ஆஆ…ஆ…… என அலறியவள் தடுமாறி விழப் போக அவளை விழாமல் தாங்கிப் பிடித்தன விக்கியின் கரங்கள்.
கண்களை இறுக மூடி தன் கைகளில் விழுந்தவளைக் கண்டவனின் மனம்,
“தம்தன……தம்தன…..னன…..தம்தன…”
 ஆ…ஹா…….ஆஆ….ஹா………..
என பாடல் ஒலிபரப்ப அவளுடன் கனவுலகில் டூயட் ஆட சென்றுவிட்டான்.
சற்றே சமமான தரையில் குதித்த தேவா ஓரளவு தன்னை சமாளித்துக் கொண்டு விக்கியைப் பார்த்து அவனது நிலையை ஊகித்தவள் அவனருகே விரைய,
அதே நேரம் தன் விழிகளை திறந்த பவ்யா இருவரின் நிலையையும் அவனது எண்ணவோட்டத்தையும் அறிந்தவள்,
டேய்ய்ய்ய…………என்ற அலறலுடன் அவனிடம் இருந்து திமிறவும் தேவா வரவும் சரியாக இருந்தது.
அவளின் அலறல் கற்பனை உலகில் மிதந்துக் கொண்டிருந்தவனுக்கு கேட்காமல் போக, அவனின் நிலையை உணர்ந்த தேவா,
நமட்டுச் சிரிப்புடன் மெல்லிய குரலில்
“கண்ணு விக்கி” என கோவை சரளா ஸ்டைலில் அழைக்க,
ஒருவித மோன நிலையில் இருந்தவன் ம்ம்ம்ம்…… என்க, அதை உணர்ந்தவள்
பேக்ரவுண்ட் மியூசிக் கேட்குதாடா!!! என,
திரும்பவும் அவனிடமிருந்து அதே ராகம் தான் பதிலாக வர,
அதற்கு மேல் பொறுமையை இழந்தவள் தன் கையில் வைத்திருந்த பேக்கினால் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி அடிக்க,
கனவுலகில் மிதந்திருந்தவன் முதுகில் ஏற்பட்ட “சுளிர்” என்ற வலியில் நிகழ் உலகம் வந்தவன் இதற்கு காரணமானவளாய் முறைத்துக் கொண்டு நிற்க,
அவனின் முறைப்பை புறம் தள்ளியவள் அவனை நோக்கி “அடச் சீ  கீழே  விடுடா அவள” என்க,
இவள் எதை சொல்கிறாள் என குழம்பிய விக்கி சற்றே தன் பார்வையை தாழ்த்த,
அங்கே முகம் எல்லாம் சிவந்து கோபத்தில் மூக்கு விடைக்க பத்திரகாளியாய் தன்னை முறைத்துக் கொண்டிருந்தவளை கண்டு பதறியவன் அவள் யோசிக்கும் முன்னே “தொப்” என்று கீழே போட,
அவன் செய்கையை எதிர்ப்பார்க்காத பவ்யா “ஏய்ய்ய்…………” என்ற அலறலுடன் கீழே விழுந்திருந்தாள்.
[the_ad id=”6605″]
அவனின் செய்கையை எதிர்ப்பார்க்காத தேவாவும், டேய் அறிவுக் கெட்டவனே என்ற திட்டலுடன் பவ்யாவை தூக்கி விட எக்குதப்பாக விழுந்ததில் அவளின் கால் நன்கு பிசகியிருந்தது.
நொண்டியப் படி தோவாவின் தோள்களை பிடித்துக் கொண்டு நின்றவள் அவனை முறைக்க,
ஹீ..ஹீ..ஹீ…. என அசடு வழிந்தவன், நான் போய் அவங்களுக்கு கால் பண்ணி வண்டி அனுப்ப சொல்லுறேன் என்றவன் போனைக் காதுக்கு கொடுத்தப்படி நகர்ந்து விட்டான்.
ஆதவன் தன் அன்பை அள்ளி அள்ளி வழங்கி மூவரையும் தனது அன்பால்(வேர்வையால்) குளிப்பாட்டியிருந்தான்.
வெயில் வேறு உச்சி மண்டையை பிளக்க, அமர்வதற்கு கூட சரியான இடம் இன்றி திண்டாடிப் போயினர்.
அவர்கள் நின்றிருந்த இடம் ஆண்டிப்பாளைம் எனும் கிராமத்தின் எல்லை ஆரம்பிக்கும் பகுதி.ஒட்டன்சத்திரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணத்தில் அமைந்திருக்கும் சிறு கிராமம் அது.
இன்றைய காலக்கட்டத்தில் நவநாகரீகம் வளர்ச்சியடைந்த பொழுதும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காலச்சாரத்தையும்
இன்றளவும் பின்பற்றும் கிராமம்.
முந்தைய காலக்கட்டத்தில் ஆயிரத்திற்கும் குறையாது இருந்த தலைக்கட்டுகள் “காலத்திற்கு ஏற்ப பொன் செய்” என்ற பழமொழிக்கேற்ப தங்களின் பிள்ளைகளின் படிப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ப அக்கிராமத்தை விட்டு பல குடும்பங்கள் வெளியேறியிருந்தனர்.
இப்பொழுது இருநூறு தலைக்கட்டுகளே உள்ள சிறிய கிராமம். இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முதன்னை தொழிலாக இருந்தாலும் அவ்வப் போது  ஏற்படும் நீ்ர் வறட்சியின் காரணமாக காய்கறிகள், பூக்கள், ஆகியவற்றை தங்கள் வீட்டுக் தோட்டத்தில் பயிரிடுவர்.
அப்படி விளைந்த காய்கறிகளை ஆண்டிப்பாளையத்தில் இருந்து அரை மணி பயண தூரத்தில் இருக்கும் மூலனுரில் நடக்கும் தினச் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வர்.
அதோடு மட்டுமில்லாமல் ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் வாரச் சந்தைக்கும் காய்கறிகளை கொண்டு சொல்வர், அப்பொழுது தங்கள் வீட்டிலேயே அதிரசம், முறுக்கு,  போன்றவற்றை செய்து அதையும் வாரச் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள் இதுவும் ஒரு வகையான வருமானம் தான் அவர்களுக்கு.
எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து ஊருக்குள் செல்ல வேண்டுமானால் ஒத்தையடிப் பாதை வழியாக நடந்தோ அல்லது வண்டியிலோ தான் செல்ல முடியும் பேருந்து ஊருக்குள் செல்வதற்கான சாலை வசதி இல்லை.
தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க, விக்கி வண்டி வந்துருச்சுடா சத்தம் கேட்குது என பவ்யா  பரபரப்பானாள் காரணம் வெயிலின் தாக்கம்.
அடிப் போடி……, ஒவ்வொன்னா எதிர்பார்த்து ஏமாந்துதான் மிச்சம், என சோர்ந்துப் போய் ஒலித்தது அவன் குரல்.
பின்னே, இருக்காதா அவன் போன் செய்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
பத்து நிமிடத்தில் வந்துவிடும் என்றார்கள் இன்னும் வந்தப் பாடில்லை ஒவ்வொரு வண்டியாக எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துப் போயினர்.
வெயிலையும் அவர்களால் எதிர்க் கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.  இதற்கெல்லாம் காரணமானவனின் மீது மூவரும் கொலைவெறியில் இருந்தனர்.
தூரத்தில் கேட்ட வண்டிச் சத்தம் நெருங்கி வர வர மூவர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு……, வண்டி அருகே வர வர விக்கியின் முகம் அஷ்டக்கோணலாய் மாறியது.
வண்டியை கண்ட பவ்யா,
“தேவா என்னடி இது….,”
தேவா,  ‘ம்ம்ம்….. பாத்த தெரியலையா இதுக்குப் பேர் தான் மாட்டு வண்டி,
ப்ப்ச்………, நா அதக் கேக்கல டி இந்த வண்டி நமக்கா இருக்குமோ…???
யாருக்கு தெரியும், என்ற தேவாவின் பதிலில் ஒரு நொடி கலவரமடைந்தவள் பின் தன்னை திடப்படுத்திக் கொண்டு,
ச்சே ச்சே…., அப்புடி எல்லாம் இருக்காது இல்லையா விக்கி என அவனையும் கூட்டுச் சேர்க்க,
ஆமா ஆமா…., இது நமக்கு இருக்காது, அனேகமா இதுக்குப் பின்னாடி ஏதாவது கார் வரும் என அவளின் கேள்விக்கு பதில் அளித்தப் போதிலும் அவனுக்குமே சற்று உதறலாக தான் இருந்தது.
அவனது பயத்தை உறுதி செய்யும் பொருட்டு  வண்டி இவர்களின் அருகே வந்து நின்றது.
பவ்யா, விக்கி இருவரும் வண்டியை கண்டுக்கொள்ளாது, பின்னால் ஏதும் கார் வருகிறதா என எட்டி எட்டி பார்க்க,
ஏம்மா! பிள்ளைகளா நீங்க தான் பட்டணத்துல இருந்து வந்தவங்களா என வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவர் கேட்க,
அவரின் குரல் காதில் விழுந்தாலும் இருவரும் கோட்காதது போல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதனை கண்ட தேவா, ‘விக்கி பவ்யா’ என அதட்டலிட, வேறு வழி இன்றி திரும்பிய இருவரையும் இவள் முறைக்க அதன் அர்த்தத்தை உணர்ந்துக் கொண்ட விக்கி திரும்பி அவருக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.
ஆமாங்கய்யா நாங்க தான் பட்டணத்துல இருந்து வந்தவங்க,
சரிய்யா சரிய்யா உங்கள கூட்டிட்டு போகதான் ஐயா வீட்டுல இருந்து வண்டி அனுப்பியிருக்காங்க மன்னிச்சிடுங்க தம்பி கொஞ்சம் நேரம் ஆகிருச்சு வந்து ஏறுங்க,
அதை கேட்ட பவ்யாவின் முகம் விளக்கெண்னையை குடித்தது போல் மாறியது. இது போன்ற கிராமங்களில் ஆடி, ப்பெராரி போன்ற கார்களை எதிர்ப்பார்க்க விட்டாலும் அடலீஸ்ட் ஒரு அம்பாஃசிட்டர், மகேந்திரா போன்றவற்பை எதிர்பார்த்திரவள் இதை சற்றும் யோசிக்கவில்லை என அவளது முகமே காட்டிக் கொடுத்தது.
இதற்கு எதற்கும் பாதிக்கப்பாடதவளாக  அமைதியாக தேவா இருந்தாள்.
[the_ad id=”6605″]
இவர்களின் யோசனையை கலைக்கும் விதமாக, அட வெரசா வண்டியில ஏறுங்க பிள்ளைகளா ஊருக்குள்ள போக அஞ்சு மைல் தூரம் போகணும் உங்கள விட்டுட்டு நா என் சோலிய பாக்க போக வேணாம??
என்பவரின் பேச்சில் வேறு வழியின்றி பெண்கள் இருவரும் முதலில் ஏறிக் கொள்ள, எங்கு சென்றாலும் மெட்ரோ ரயிலை பழக்கபபடுத்தியிருந்தவனுக்கு இதில் ஏறி அமர சற்றே திணறியவன், ஒரு வழியாக தடுமாறி ஏறி அமர்ந்து விட வண்டி ஊருக்குள் சென்றது.
மாட்டு வண்டியின் உள்ளே கால்களை சற்றே மடக்கி தான் அமர முடியும்.சம்மணம் இட்டு அமர்ந்தால் மூவர் அமர்வது கடினமே.
எனவே, பெண்கள் இருவரும் குத்தூகாலிட்டு அமர்ந்திருந்தனர். விக்கி கால்களை வெளியே தொங்கவிட்டு பெண்களுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான்.
ஊருக்குள் செல்ல செல்ல இருபுறமும் அடர்ந்த முட் செடிகளும், கொடிகளும் படர்ந்திருக்க நடுவில் வண்டி செல்லும் அளவிற்கு ஒத்தையடி பாதையை விட சற்றே பெரிதாக இருந்ததில் வண்டி அதில் சென்றுக் கொண்டிருக்க, இடையில் விக்கியின் “அம்மா…ஆஆஆஆ” எந்ற அலறலில் பெண்கள் இருவரும் பதறி அடித்து கொண்டு அவனைப் பார்க்க,
நன்றாக வளர்ந்த காட்டு முள் ஒன்று விக்கியின் கால்களை நன்கு பதம் பார்த்திருந்தது. அவனின் அலறலில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் கீழ் இறங்கி பின்புறம் வந்தவர் கண்டது ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த விக்கியின் கால்களை தான்.
அச்சோ, என்ன தம்பி ரத்தம் இப்புடிக் கொட்டுது…, கால வெளிய விட்டு உக்காந்திருந்தீங்களா?? 
நா ஒரு மடப்பய தம்பி முள்ளுச் செடிய இருக்கும் காலை உள்ள விட்டு உக்காருங்கன்னு சொல்ல மறந்துட்டேன், மன்னிச்சிடுங்க தம்பி
என்றவர் பேசியபடியே,
தனது வேட்டியின் கீழ்பாகத்தை சட்டென்று கிழிக்க,
அய்யோ..!! என்ன அண்ணோ இது இப்புடி வேட்டிய கிழிச்சிட்டீங்க எப்புடி ஊருக்குள்ள போவீங்க….,
அட விடுப்பா இது என்ன பட்டு வேஷ்டியா??  நாலு முழத்துல கொஞ்சுண்டு கிழிச்சிருக்கேன்.
நாங்க எல்லாம் வயக்காட்டுல இறங்கி வேலைப் பாக்குறவங்கய்யா,அப்ப வேட்டி என்ன கால் முழுக்க சகதியா ஆகிடும்.
அப்ப எல்லாம் அய்யோ?? இப்புடி சகதி ஆகியிருச்சே எப்புடி
 ஊருக்குள்ள போறதுன்னு நினச்சா,
அடுத்து வயல்ல இறங்க முடியுமா? இல்ல வேலை தான் பாக்க முடியுமா??அதனால இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல தம்பி என்று பேசியவரே கால்களுக்கு கட்டு போட்டு முடித்திருந்தார்.
விக்கிக்கு அவரின் பேச்சில் ஆச்சரியம் ஏனெனில் அவன் உடை விஷயத்தில் எல்லாம் எங்கும் சுருக்கம் இல்லாமல் கிழிசல் இல்லாமல் பெர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், அவன் வளர்ந்த சூழலும் அப்படி தான்.
போதக்குறைக்கு அவன் பணிபுரிவது மீடியாவில் அங்கு இப்படி கிழிந்த துணிகளை போட்டு செல்ல முடியுமா?????
எனவே, இன்னும் உடை விஷயத்தில் தன்னை மெருகேற்றி கொண்டான்.ஏனெனில் சென்னை போன்ற மாநகரங்களில் ஆடையை வைத்து தானே மரியாதை.
அதுவும் அவன் பல கம்பெனிகள் மற்றும் திரை உலக நட்சத்திரங்களை பேட்டி எடுக்க செல்பவன் அங்கு இது போன்ற கிழிந்த ஆடைகளோ இல்லை கசங்கிய சட்டையையோ போட்டு கொண்டு செல்ல முடியுமா?? அதற்காகவே ஆடை விஷயத்தில் மிக கவனமாக இருப்பவனுக்கு இவரின் பேச்சு ஆச்சரியமாகவே இருந்தது.
காலை உள்ளார தூக்கி வச்சிக்கோங்க தம்பி, போற வழி எல்லாம் முள்ளு அதிகமா இருக்கும், என்றவரின் பேச்சிற்கு தலையை ஆட்டியவன்,
காலை மெதுவாக தூக்க முயல,சுர்ரென்று வலியில் முகத்தை சுளித்தவன், மீண்டும் காலை விட்டு விட்டான்.
அதனை பார்த்தவர், அட அப்புடி தான் தம்பி வலி இருக்கும், இருங்க நா தூக்கி வைக்கிறேன்.
சட்டென்று அவனின் பாதம் தொட்டு தூக்கி உள்ளே வைக்க,
அய்யோ!! அண்ணா என்ன பண்ணுறீங்க என பதறியவன் சட்டென்று காலை உள்ளிழுக்க மறுபடியும் அதே வலி.
அட விடுங்க தம்பி இதுல என்ன இருக்கு, வீட்டுக்கு போனதும் ஆத்தாகிட்ட சொல்லி மருந்து போட்டுகோங்க வலி கொறஞ்சிடும், என்றவர் கிழிந்திருந்த வேட்டியை மடக்கி கட்டிக் கொண்டு வண்டியை ஓட்ட தொடங்கிவிட்டார்.
[the_ad id=”6605″]
இரத்தம் வருவது மட்டுபட்டிருந்தாலும் உள்ளுக்குள் “சுருக் சுருக்” என்று வலி எடுக்க ஆரம்பித்ததில் இவனின் னுகம் கடுகடுவென மாறியிருந்தது.
விக்கி….,
…………………..,
விக்கிகிகி……..,
ம்ப்ச் என்ன டி,
ரொம்ப எரியுதா….,
காலையில் இருந்து ஒரு வித எரிச்சல் மனநிலையில் இருந்தவனுக்கு காயம் ஏற்பட்டு இன்னும் அவனது கோபத்தை அதிகரித்திருக்க பவ்யா மேல் பாய்ந்திருந்தான்.
ஆங்..ங்…இல்ல ரொம்ப குளுகுளுன்னு இருக்கு, அப்புடியே ஐஸ்கட்டிய வச்ச மாதிரி இருக்கு.
அறிவு கெட்ட முண்டம் முள் கிழிச்சிருக்கு எரியுதான்னு கேக்குற,உன் காலை காட்டு முள்ள வச்சி கிழிச்சுவிடுறேன் எரியுதா இல்ளையான்னு பாப்போம்.
முட்டாள் முட்டாள் உன்னை எல்லாம் என் கூட வச்சிக்கிட்டு வேலை செய்யனும்னு என் தலையெழுத்து,உன்னையெல்லாம் மீடியால வேலை செய்யலன்னு யாரு அழுதா,
இந்த சிம்பிள் விஷயம் கூட தெரியாமா வந்து எங்க உயிர வாங்க வேண்டியது….ச்ச… மேலும் எனஎன கூறியிருப்பானே??
விக்கி…இஇ……., என்ற தேவாவின் குரலில் தன்னை கட்டுப்படுத்தியவன் பவ்யாவை பார்க்க,
கண்களில் நீர் வடிய, உதட்டை கடித்து 
அழுகையை அடக்க னுற்பட்டுக் கொண்டிருந்தாள். அதனையும் மீறி சிறு விசும்பல் அவளிடமிருந்து வந்தது.
அவளின் நிலையை கண்டவனுக்கு தன் தவறும் புரிய தன்னையே நொந்துக் கொண்டவன்,
பவ்யா..ஆஆ.., பவி….. சாரி டி ஏதோ கோபத்துல தெரியாமா கத்திட்டேன் ரியலி சாரி டா, என்றவன் அவள் கைகளை பிடிக்க வர,
அதனை உதறியவள் தேவாவின் தோள்களில் சாய்த்துக் கொண்டாள்.அதன் பிறகு விக்கி என்ன கெஞ்சியும் அவள் மனமிரங்கவில்லை அவனின் முகத்தை பார்க்கவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!