Skip to content
Post Views: 649
நேசம் 07
மங்கையும் சந்தோஷூம் பேசியது போலவே அவர்கள் அடுத்த வீடியோ எடுப்பதற்கான இடம் கிடைத்து விட, அங்கே செல்ல திட்டமிட்டனர் இருவரும்.
Advertisement
காலையிலே அதற்காக அவள் கிளம்பி கொண்டிருக்க, கார்த்திக்கேயன் ஒரு முக்கியமான மீட்டீங் இருப்பதாக கூறி காலை சீக்கிரமே சென்றிருந்ததால் மங்கை சந்தோஷை வீட்டிற்கு அழைத்திருந்தாள்.
சந்தோஷ் வருவதற்காக அவள் காத்திருக்க, செண்பகம் மதிய வேளைக்கான சமையலை தொடங்கி இருந்தாலும் அவரின் கவனம் முழுதும் மகளின் மீதே.
Advertisement
Advertisement
ஏனோ செண்பகத்திற்கு மகள் இவ்வாறு வெளியே சென்று வீடியோ எடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. வீட்டில் அதை குறித்து பேச்சை எடுத்தாலே மகளுக்காக சந்திரகேரும் தங்கைக்காக கார்த்தியும் வாரிக் கட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர்.
அதனாலே அவர் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாய நிலை. இப்போது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியாகிற்கு இப்படியான சமயத்தில் இதனை காரணம் காட்டி மகளை மறுத்துவிடுவார்களோ என்ற பயம் அவரிடம் தொற்றிக் கொண்டது.
Advertisement
இதனை பற்றி காலையில் மெல்ல ஆரம்பித்ததற்கே, சந்திரசேகரன் சற்று கோபத்தை காட்டியிருந்தார்.
எப்படியாவது மகளை இந்த வேலை செய்வதிலிருந்து அவளை நிறுத்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையோடு சமையலில் ஈடுபட்டிருந்தார்.
“ப்ரோ, நான் கிளம்பிட்டேன். நீ கிட்ட வந்துட்டு சொல்லு நான் வந்தறேன்” என்றவள் சந்தோஷ் வரும்வரை மொபைலில் சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்தாள்.
அதற்குள் உள்ளேயிருந்து வந்த செண்பகம் அவளுக்கு குடிக்க மோர் கொடுக்க,” தேங்க்ஸ் ம்மா… நீங்க தான் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் மாம்” என்றவள் மெல்ல ரசித்து ருசித்து பருக ஆரம்பித்தாள்.
“ஏன் டி, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு. இப்பவாச்சும் கொஞ்சம் வீடு அடங்கி இருக்கலாம்ல. வர போற மாப்பிள்ளை வீட்ல நான் என்னென்னு உன் வேலையைப் பத்தி நாங்க சொல்றது” என செண்பகம் பெண்ணின் மனதை கரைக்கும் வேலையை ஆரம்பித்தார்.
“ம்மா, சைல்டிஷா பேசாதீங்க. இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க அவனவன் எங்கேயோ போய்ட்டு இருக்கான். நீங்க இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பிடிச்சிட்டு இருக்கீங்க. வரப் போற மாப்பிள்ளை வீட்ல நான் பேசிக்கிறேன். நீங்க கவலைப்படாம இருங்க மா. மாப்பிள்ளை வீடுன்னு ஒன்னு வரும்போது பாத்துக்கலாம்” மங்கை பேச, செண்பகத்தினால் அதற்கு மேல் பேச முடியவில்லை ஆழ்ந்த மூச்சினை விடுத்தார்.
மேலும் இதை பற்றி பேசினால் மங்கையின் செயல்பாடுகள் எப்படியாக இருக்கும் என்று தெரியாது.
“என்னமோ பண்ணு போ. நான் சொன்னா எங்க கேக்க போற” என்று விட்டார்.
மங்கை அடுத்து பேச ஆரம்பிக்கும்போதே சந்தோஷ் வந்துவிட, அந்த பேச்சு அங்கேயே நின்றுவிட்டது.
“மங்கை ப்ரோ போலாமா” என அவன் ஒரு கையில் சாவியை சுற்றியப்படி உள்ளே வந்தவனை பார்த்த செண்பகம்,
“வா பா சந்தோஷ். நல்லாயிருக்கியா?” அவனிடம் நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கேன் ஆண்டி. நீங்க?” என்றதும் தான் தாமதம் மனதிலுள்ளதை அவனிடம் கொஞ்சமாக கொட்டினார்.
“இருக்கேன் சந்தோஷ். இப்படியான பொண்ணை வச்சிக்கிட்டு எப்படி நிம்மதியா இருக்க? எங்க போறா எப்ப வீட்டுக்கு வரா ஒன்னும் தெரிய மாட்டேங்குது. ஏதோ நீ கூட இருக்கப்போய் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியுது” என அவர் புலம்பலை கேட்டு வாசலிலே நின்றான் சந்தோஷ்.
இருவருக்கும் இடையில் வந்த மங்கை,” அம்மா புலம்புவதை நிறுத்துங்க. நான் கிளம்புறேன் வா ப்ரோ போகலாம்” என அவனை இழுத்து வந்தாள்.
வெளியே வந்ததும்,” சாரி ப்ரோ. அம்மா இப்படித்தான் வழக்கமா பேசுவாங்க. இன்னைக்கு நீ கேக்க வேண்டியதா போச்சி. சரி வண்டியை எடு போகலாம்” என்றதும் சந்தோஷ் வண்டியை எடுக்க, அதற்குள் கார்த்திகேயன் அழைத்திருந்தான்.
“ஒரு நிமிஷம் ப்ரோ” என்றவள் அந்த அழைப்பினை ஏற்றாள்.
“சொல்லு கார்த்தி னா? இப்ப கூப்பிட்டு இருக்க?” எடுத்ததும் விசாரிக்க,
“அம்மு, ஒரு முக்கியமான ஃபைலை வீட்ல மறந்து விட்டுட்டு வந்துட்டேன் டி. கொஞ்சம் எடுத்து வந்து கொடுக்கிறயா” தங்கையிடம் உதவி வேண்டி நிற்க,
“டேய், நான் முக்கியமான வேலையா இன்னைக்கு வெளில போறேன் டா னா” என அவள் மறுக்க,
“ப்ளிஸ் அம்மு. அவசரம் டி அந்த ஃபைல் இல்லாம மேனேஜ் பண்றது கஷ்டம்” அவன் அவனின் நிலவரத்தை கூறவும்,
“முக்கியமான ஃபைல்னா அதை பேக்கப் எடுத்து வைக்கணும்னு தெரியாதா” என்று அண்ணனை திட்டியவள்,
“எடுத்து வந்து கொடுக்கிறேன். மெயில் போட்டு வை உள்ள வரதுக்கு” என்றவள் வைத்துவிட்டாள்.
சந்தோஷ் அவள் காரமாக பேசவும் அவளையே பார்த்திருந்தவன், மங்கை மொபைலை வைத்ததுமே கேட்டான்.
“எனி ப்ராப்ளம்?”
“கார்த்தி னா ஏதோ முக்கியமான ஃபைலை வீட்ல விட்டுட்டாங்களாம். எடுத்து வர சொன்னாங்க”என்றவள்,
“அப்போ நீ கிளம்பு ப்ரோ. நம்ம வேற ஒருநாள் மீட்டப் வச்சிக்கலாம்” என்று முடித்தாள்.
“நான் இப்போ ஃப்ரி தான் ப்ரோ. நானே உன்னை கூட்டிட்டு போறேன். வா” என சந்தோஷ் சொல்லவும் மங்கை உள்ளே சென்று ஃபைலை எடுத்து வந்தாள்.
பின்னர் இருவருமாக சேர்ந்து சோழிங்கநல்லூர் சென்றனர் கார்த்திக்கேயனை சந்திக்க.
சந்தோஷ் மங்கையை அழைத்து கொண்டு சோழிங்கநல்லூர் ஐடி பார்க்கிற்கு வந்ததும் அவளை இறக்கிவிட்டவன்,
“நீ முன்னாடி போ ப்ரோ நான் பைக் பார்க் பண்ணிட்டு வந்தறேன்” சொல்லவும் அவளும் சரியென்று உள்ளே சென்றாள்.
கேட்டில் வைத்து பாதுகாவலர்கள் கேள்வி எழுப்ப, அவர்களிடம் தனது வருகையின் காரணத்தை கூறியவள் மெயிலை பார்க்கும்படி கூறினாள்.
“சார், கார்த்திக்கேயன் என்ற பேர்ல் மெயில் வந்திருக்கும் செக் பண்ணுங்க” என்றதும் அவர்களும் பார்க்க,
“வந்திருக்கு மேடம். உள்ள போகலாம்” என்றார் அங்கிருந்தவர்களுள் ஒருவர்.
பின் சந்தோஷ் வந்ததும் இருவருமாக உள்ளே சென்றனர்.
உள்ளே வந்ததுமே அண்ணனிற்கு அழைத்து சொல்லியிருக்க, இருவரும் அவனுக்காக காத்திருந்தனர்.
அதற்குள் அவளுடன் படித்த தோழி ஒருவள் வீடியோ காலில் அழைத்திருக்க, அவளுடன் மங்கை பேசத் தொடங்கவும் சந்தோஷ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றான்.
அதே நேரத்தில்…
“பாய்ஸ் இன்னைக்கு எல்லாரும் ஒரு புடி புடிக்கிறோம். அப்புறம் ஆஃபிஸ் வந்து தூங்குறோம்” என கூட்டத்தில் ஒருவன் சொல்ல,
“அப்படியே தூங்க விட்டுட்டாலும். நீ வேற ஏன் கடுப்பை கிளப்பிக்கிட்டு இருக்க” என்றான் இன்னொருவன்.
“டேய், அதெல்லாம் பாத்துக்கலாம் ப்ரோ” என்றான் மற்றொருவன்.
“எங்க சாப்பிட போறோம்னு டிசைட் பண்ணிட்டீங்க தானே?” என முதலாமவன் கேட்க,
“பண்ணியாச்சு பண்ணியாச்சு” என்றனர்.
அதற்குள் அவர்களில் ஒருவன் மட்டும்,”நீங்க எல்லாரும் சாப்பிட போங்க. நான் டோனி வந்ததும் அவனை கூட்டிட்டு வந்தறேன்” என்றிட, மற்றவர்கள் அனைவரும் அன்புவை விடுத்து சாப்பிட சென்றனர்.
டோனி வரும் வரையில் அவன் காத்திருக்க முடிவு செய்து கொஞ்ச தூரம் நடந்து வந்தவன், யாரோ மொபைலில் வீடியோ எடுப்பதை கண்டவனுக்கு கோபமாக வந்தது.
கம்பெனி ப்ரோசிஜர்ஸில் வீடியோ எடுப்பதற்கெல்லாம் அனுமதி கிடையாது.
அதே கோபத்துடன் அந்த பெண்ணின் முன்பு நின்றவன்,” கம்பெனியை வீடியோ எடுக்க கூடாதுன்னு தெரியாதா?” என கேள்வி எழுப்பியவன் அங்கு நின்றிருந்த பெண்ணை கண்டபொழுது கோபம் ஆத்திரமாக உருமாறியது.
மங்கை திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அங்கே அன்பு நிற்க கண்டதில் அவள் முகமும் கோபத்திற்கு மாறியது.
இதென்ன இவனை காணும் போதெல்லாம் இதுப்போலானா பிரச்சனையில் சிக்க வைக்கிறான் என அன்புவின் மீது கடுப்பாய் வந்தது.
“உங்களுக்கு என்ன பிரச்சினை? எப்ப பாரு என்னை வம்புக்கு இழுத்துட்டு இருக்கீங்க?” என்றாள் கடுப்பான குரலில்.
“நான் உன்னை வம்புக்கு இழுக்கிறேனா. வாட்ட ஜோக் வாட்ட ஜோக்” என கைத்தட்டல்கள் கொடுத்து சிரித்தவன்,
“நீங்க பண்றது என்னமோ ஃபோர்ஜரி வேலை, இதுல என்னை என்னமோ குறை சொல்லிட்டு இருக்க” என அன்பு அவளை ஒருமையில் பேசவும், ஆத்திரம் வந்தது மங்கைக்கு.
“பார்த்து பேசுங்க மிஸ்டர்…” என அவள் எச்சரிக்கை விடுக்க, அவளின் எச்சரிக்கையை துச்சமென மிதித்தான்.
“யூட்டுய்ப்ர்ஸ் உங்களுக்கெல்லாம் வாய்ப்பு வந்தாலே ரீல்ஸ் சார்ட்ஸ் போடனும்னு தான் இருக்கும். சின்னதா ஒரு வாய்ப்பு வந்தாலே, அதுக்குமேலும் எதையாவது போடணும்னு கழுகுப் போல காத்துக்கிட்டே இருப்பீங்க. இதுவும் அதே மாதிரி இல்லையா?” என்றான் எதையும் யோசிக்காமல். உண்மை விவரம் அறியாமல் பேசினான் அன்பரசன்.
மங்கையின் முகம் அவனின் பேச்சில் கடுகடுவென மாறியது. அவள் சிறிது நேரம் அவனை நேராக பார்த்துவிட்டு, “சாரி, எப்ப பாரு ஏன் நீங்களா ஒன்னை நினைச்சு யோசிச்சு பேசுறீங்க. நான் வீடியோ எடுக்கிறதை பார்த்தீங்களா? முதல்ல ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும். என்ன நடக்குதுன்னு பார்த்திட்டு பேசுங்க. ஆக்சுவலி நான் வீடியோ கால்ல தான் இருந்தேன். நீங்க சொல்ற மாதிரி உங்க கம்பெனி ப்ரைவசியை ஒன்னும் நான் திருடல” என்றவள் மேலும் அவனிற்கு ஏற்ப தக்க பதிலை கொடுத்தாள்.
“ஆனால் உங்களோட புரிதலே தப்பா இருக்கு. யூட்டூய்பர்ஸ் கன்டென்ட் க்ரியேட்டர்ஸ்னா எல்லாரும் பொறுப்பில்லாதவங்க மாதிரி பார்க்குறீங்க. ஆனால் உண்மையில், எங்களுக்கும் அதிக பொறுப்புணர்வு இருக்கு”
அன்பு அவள் எதிர்கொண்ட தோரணையைப் பார்த்து சிறிது அசந்தாலும், அவனின் பிடியிலே நின்றான்.
“பொறுப்பா? அதுவும் உங்களுக்கு?” அவன் இழிவாக கேட்க, அன்புவின் வார்த்தைகளை கேட்ட பெண் தீப்பிழம்பாய் எரிய துவங்கினாள்.
“ஆமா! நாங்க எங்களோட வேலையை முழுமையா ஈடுபட்டு தான் பண்றோம். இது ஒன்னும் நீங்க செய்யிற வேலை போல் சாதாரண வேலை இல்லை. உங்களோட அலுவலக வேலை நேரம் மாதிரி, எங்களுக்கு ஒரு நாளுக்குள்ள வேலை முடிஞ்சிடும்னு சொல்லிட முடியாது. சொல்லப்போனா உங்களை விட அதிக நேர உழைக்கிறோம்”
அன்பு மங்கையின் பேச்சில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவன் எதிர்பார்த்ததை விட மங்கையின் பதில் உறுதியாக வந்தது.
மங்கை சிறிய சிரிப்புடனே தொடர்ந்து , “நீங்கள் யூட்யூபர், கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களை சிறுமைப்படுத்தலாம். ஆனா, யாருக்கும் தெரியாது, நாங்க எவ்வளவு போராடிக்கிட்டு இருக்கோம்னு. ஒவ்வொரு நாளும் நாங்க எங்களோட உழைப்பை போடுறோம், மழை வெயில்னு பார்க்காம வீடியோ எடுக்கிறோம், புதியதா யோசிக்கிறோம், எங்களோட திறமையை நிரூபிக்க போராடுறோம். உங்களோட அலுவலகத்தில் இருக்கிற லீவுகள், மத்த சலுகைகள் எல்லாம் எங்களுக்கு கிடையாது. நீங்க ஓய்வெடுக்கலாம், ஆனா எங்களால அது முடியாது. எங்க வேலை ஒரே நேரத்தில் கலை, உழைப்பு, வருமானம் எல்லாமே. நாங்கள் எதையாவது சாதிக்கத்தான் வர்றோம். விளையாட வரல!” மங்கையர்க்கரசி பேசி முடிக்க, அன்பு அவளின் பேச்சில் மெளனமாக இருந்தான்.
மங்கை அவனை நேராக பார்த்து, “உங்களுக்குப் புரியணும்னா இன்னும் நிறைய காலம் ஆகும். அதுவரைக்கும் யாராவது உங்களுக்குப் புரிய வைக்கட்டும்… அல்லது வாழ்க்கையே ஒரு நாள் உங்களுக்குப் புரிய வைக்கும் மிஸ்டர்”
அவன் பதிலளிக்க முடியாமல் தடுமாறி நிற்க, மங்கை அப்போது அங்கே வந்த சந்தோஷை அழைத்து சென்றாள்.
“என்ன பிரச்சினை ப்ரோ?” திரும்பி அன்புவை பார்த்து கேட்க,
“ஒன்னுமில்ல ப்ரோ. நீ வா” என அவனை இழுத்துச் சென்றாள்.
மங்கை கடுமையாக பேசிவிட்டு செல்ல, அவளின் வார்த்தைகள் அன்புவை உள்ளுக்குள் தாக்கியது.
“யார் இந்த பொண்ணு? தன்னை இத்தனை கேவலமாக பேசிவிட்டு செல்கிறாளே” என உள்ளுக்குள் வெதும்பினான் அன்பு.
அவன் இதுவரை சந்தித்த யாருமே அவனிடம் இவ்வாறு கடுமையாக எதிர்த்துப் பேசியதில்லை. ஆனால் இவள்…?
அவன் உள்ளுக்குள் கோபம் கொண்டவனாக, அவளைப் பற்றி சிந்தித்தபடி இருக்க, அதற்குள் அவனது நண்பன் டோனி அவனை அழைத்துச் சென்றான்.
ஆனால் அவன் மனம் மட்டும் இன்னும் மங்கையின் வார்த்தைகளை ஓர் மூலையில் அவனை அரித்துக் கொண்டே இருந்தது…
இங்கே வேகமாய் சந்தோஷை இழுத்துக் கொண்டு வந்தவள், கார்த்திகேயனிற்கு அழைப்பு விடுத்தாள்.
“எங்க இருக்க நீ? வரியா இல்ல நான் கிளம்பட்டுமா?” என காரம் குறையாமல் அவள் அண்ணனிடம் பேச,
“வந்துட்டேன் அம்மு. ஒரு டூ மினிட்ஸ்” என்றவனுக்கு தங்கையின் குரலில் ஏதோ மாற்றம் தெரிந்தது.
கார்த்திக்கேயன் சொன்னது போலவே அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்து விட, கடுகடுவென இருந்த தங்கையின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டான் எதுவோ சரியில்லையென்று.
“அம்மு!!!” கார்த்தி அழைக்க,
“வந்துட்டியா னா. பிடி உன்னோட ஃபைலை இனி இப்படி மறந்துட்டு என்னைய எடுத்து வர சொல்லாத” என ஃபைலை அவனிடம் ஒப்படைத்தாள்.
“பாத்துக்க னா. நாங்க போய்ட்டு வரோம்” என கிளம்ப பார்த்த மங்கையை தடுத்து நிறுத்தினான் கார்த்திக்கேயன்.
“அம்மு! என்ன பிரச்சினை? உன் முகமே சரியில்லையே?” அவன் கேட்க, அவளும் முகத்தினை சாதாரணமாக வைக்க பெரும்பாடு பட்டாள்.
“விடு னா. பெருசா ஒன்னுமில்லை ஒரு நான்செனஸ் க்ராஸ் பண்ணிடுச்சு அவ்வளவு தான்” என்றாள் வழுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு.
“சரி பார்த்துக்கோ அம்மு” என்றவன் சந்தோஷிடம் கண் ஜாடை காட்டினான்.
“நீ கிளம்பு. நாங்க போய்கிறோம்” என்றவள் கார்த்தியை அனுப்பி வைத்தாள்.
பின் சந்தோஷிடம் திரும்பி, “இங்க நடந்தது எதுவும் வெளிய போக கூடாது ப்ரோ. பார்த்துக்கோ” என்று எச்சரிக்கை விடுத்தவள் அவனை அழைத்துக்கொண்டு பிரியாணி கடைக்கு சென்றாள்.
“ஒரு பிரியாணி சாப்பிட்டா எல்லா கோபமும் போய்டும்” சொன்னதும் சிரிப்பு வந்தது சந்தோஷிற்கு.
“நீ சாப்பிடுறதை பார்த்தா யாரும் கோவத்துல சாப்பிடுறதா நினைக்க மாட்டாங்க. ஏதோ பத்து நாள் பசில இருந்து சாப்பிடுறதா நினைப்பாங்க ப்ரோ” மங்கையை கிண்டல் செய்ய,
“கண்ணு வைக்காத ப்ரோ. அப்புறம் ஒழுங்கா சாப்பிட முடியாம போய்டும்” சொன்னதும் அடக்கமாட்டாமல் சிரித்தான் சந்தோஷ்.
அதுவரை அவளுள் இருந்த இறுக்கம் மறைந்து இயல்புக்கு திரும்பினாள். பிரியாணியின் சுவையில் அன்புவை மறந்தே போனாள்.
பின்னர் இருவருமாக சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு கிளம்பினர்.
அன்றைய நாள் முழுதும் அவளுக்கு சோபையாய் தான் சென்றது. தன் முழு நேரத்தையும் அவளுக்கு ஆஸ்தான இடத்தில் செலவழித்தாள்.
மறுநாள் எதுவும் நடவாதது போல் மங்கை வழக்கம் போல அவளது நாளைத் தொடங்கினாள். வீடியோ எடுப்பதற்கான இடங்களை ஆராய்ந்து பார்க்கும் பணியில் தன்னை துரிதப்படுத்தினாள்.
அவளின் இலக்கு என்னவோ அவளின் சேனலின் சப்ஸ்க்ரைபரஸை அதிகப்படுத்துவது தான். அதற்காக தான் பார்த்து கொண்டிருந்தாள்.
இப்படியே நாட்கள் நகர்ந்துவிட எதிர்பாராவிதமாக சீதா மங்கையின் சந்திப்பு நேர்ந்திட, சீதாவினுடைய சிந்தனைகள் யாவும் வழுப்பெற்று கொண்டே வந்தது.
error: Content is protected !!