Skip to content
Post Views: 2,324
5(1)
சூரிய பகவான் தன் வீச்சை மங்கலாக்க வீட்டிற்கு வந்தனர் ஐந்து மாத குழந்தை நிகிதாவுடன்.
மாறன் சினமுடன் அவனறைக்கு சென்றான். அவனை கண்ட வைஷ்ணவி சுப்ரியாவை பார்க்க, அவள் தோளை குலுக்கினாள்.
Advertisement
வைஷ்ணவியை பார்த்து சோர்ந்திருந்த குழந்தை நிகிதா கிலுக்கியவாரு அவளிடம் தாவியது. வைஷ்ணவிக்கு கண்ணீர் வந்து விட்டது.
Advertisement
வைசு, “அந்த பையனை எங்கிருந்து பிடிச்சீங்க?” செழியன் அவளருகே வந்து குழந்தையை பார்த்தான்.
Advertisement
பாருடா..எங்ககிட்டலாம் வரல. உன்னை பார்க்கவும் சிரிக்கிறா. அந்த அம்மா இவள வச்சிட்டு பட்ட பாடை சொன்னாங்க வைசு. கேட்கவே பாவமா இருந்தது. பாப்பாவும் அழுதுகிட்டே இருந்திருக்கா. நாங்க முதல்ல அவங்களை சந்தித்த போது தூங்கிட்டு இருந்தா.
Advertisement
சுபா தான் கன்னத்தை பிடித்து இழுத்து இழுத்து விழிக்க வச்சிட்டா. கத்துனா பாரு கத்து…காது கொய்யின்னு இருந்தது.
“வைஷ்ணவி பாப்பாவை பார்த்து நீலு ஆன்ட்டிய அழ வச்சுட்டீங்கல்லா செல்லம்?” வாயசைத்து குழந்தையை இரு கையாலும் தூக்கி அணைத்தவாறு பிடித்து கொஞ்சினாள்.
“நிக்கி, வைசுவிடம் மட்டும் அமைதியா இருக்க?” என்று அக்சரா வைசுவையும் குழந்தையையும் அவள் பக்கம் திருப்பி குழந்தையை மிரட்டுவது போல கேட்டாள்.
உதட்டை தொங்கவிட்டு கண்ணீர் வர அழுக தயாரானாள் குழந்தை நிகிதா.
“ஓ! நான் திட்டுறது மட்டும் உனக்கு தெரியுதா? அழுதே எல்லாரையும் படுத்துற?” திட்டினாள் அக்சரா..
குழந்தை வைஷ்ணவியை பார்த்து வீறிட்டு கத்தியது..
“ஏய், எதுக்குடி பாப்பாவ அழ வைக்கிற?” வைஷ்ணவி திட்ட, நிகு இங்க பாரு என்று பூஜையறையில் இருந்த மணியை எடுத்து பாப்பா முன் அடித்தாள். மணி சத்தத்தில் பாப்பா அழுகை நின்று அதனை சுப்ரியாவிடம் பிடுங்க வந்தது..
“அது வேண்டாம்டா. வா நாம அறைக்கு சென்று உன்னோட விளையாட்டு பொருள்களை எடுக்கலாம்” வைஷ்ணவி கூறிக் கொண்டே செல்ல, அக்கா…நம்மள இந்த ஊர்ல எல்லாரும் வித்தியாசமா பாக்குறாங்க சுப்ரியா சொன்னாள்.
என்னோட அண்ணா கூட போனேல்ல அதான் அப்படி பார்த்திருப்பாங்க..
ஓ! “அந்த சார் அவ்வளவு நல்லவரா?”
“ஆமா, நீ வேணும்ன்னா உனக்கு வேண்டியதை சும்மா கேளேன். உடனே வாங்கித் தந்திருவாங்க” செழியன் கூற, அவனை முறைத்துக் கொண்டே தொலைக்காட்சியை போட்டான் மாறன்.
வாங்கித் தருவாரா?
“உனக்கு என்ன வேணும்?” வேலன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.
எனக்கு நீங்க வாங்கித் தாரீங்களா அங்கிள்?
என்ன வேணும்ன்னு கேளும்மா. வாங்கித் தாரேன்..
“சித்தப்பூ, நீங்க எதுக்கு அவளுக்கு வாங்கித் தரணும். ஏற்கனவே இவ தொல்லை தாங்க முடியல. இதுல அந்த குட்டிப்புள்ள வேற” அலுத்துக் கொண்டான் மாறன்.
வைஷ்ணவி மாறனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
வேலன் அவளை சமாளிக்க, அவன் அப்படி தான். வீட்டுக்கு யார் வந்தாலும் பிடிக்காது. அவன் அண்ணாவிடம் நெருக்கம் காட்டினாலும் பிடிக்காது..
“பரவாயில்லை சார். குழந்தையின் அருமை தெரியாம தான பேசுறான். இருக்கட்டும்” வா சுபா, ஷரா..நீ தண்ணீர் சூடு செய்து எடுத்துட்டு வா.
எனக்கு அடுப்பை ஆன் செய்யவே தெரியாதுன்னு உனக்கு தெரியும்ல்ல?
பழகிக்கோ..
பழகணுமா? முகத்தை சுளித்தாள் அக்சரா.
அம்மா, “நான் எடுத்துட்டு வாரேன்” சுந்தரம் சொல்ல, “அங்கிள் அவளுக்கு சொல்லி கொடுத்து அவள் கையில் கொடுத்து அனுப்புங்க” சொல்லி சுப்ரியாவுடன் குழந்தையை தூக்கி சென்றாள் வைஷ்ணவி.
சற்று நேரத்தில் அக்சரா வெந்நீர் எடுத்து வைஷ்ணவி அறைக்கு சென்றாள். வெந்நீரை பால் புட்டியில் வெதுவெதுவென ஊற்றி குழந்தையை மடியில் போட்டு குடிக்க கொடுத்தாள் வைஷ்ணவி.
செழியன் அறைக்கு வெளியே கையை கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்தான்.
“உள்ள வாங்க சீனியர்” கையசைத்து அழைத்தாள். பொண்ணுங்க அவனை பார்த்தனர்.
இருக்கட்டும். முதல்ல பாப்பாவை தூங்க வை. அவள் இரு நாளாக சரியாக தூங்காமல் அவளோட அம்மாவை தேடிட்டு இருந்திருக்கா..
ம்ம்! வைஷ்ணவி முகம் வாட, “சுபா வா” செழியன் அழைத்தான்.
என்ன சார்?
எதுக்கு சார்?
அப்புறம் எப்படி கூப்பிடுறது? அவள் கேட்க, அக்சரா வேகமாக அவனை பார்த்தாள்.
பெயர் சொல்லியே கூப்பிடு..
அக்கா என்னை பிச்சு போட்ருவா..
அதெல்லாம் வைசு ஒன்றும் சொல்ல மாட்டா..
என்ன சீனியர் நீங்க? அக்கா திட்டுவா..
அப்புறம் கொஞ்சுவாங்களா? போகிற போக்கில் சுப்ரியாவை வெறுப்பேத்தி நகர்ந்தான் மாறன். அவனை கண்ணால் எறித்து, அவனுக்கு என்ன தான் பிரச்சனையாம்?
அவனா? ஏய்..மரியாத..மரியாத..
உனக்கென்னடா மரியாத. குட்டிப்பாப்பாவை திட்டுற. தலவெட்டி தலையா..
என்ன சொன்ன? பொசுபொசுவென மாறனுக்கு சினம் வந்தது.
போடா..
“நான் உங்களை சார்ன்னே அழைக்கிறேன். எதுக்கு இந்த வம்பு?” மாறனை முறைத்து அவள் வைஷ்ணவி அருகே சென்று அமர்ந்தாள்.
பாப்பா உறங்கவும் அடுக்கலைக்கு சென்று சுந்தரமுடன் சேர்ந்து இரவு உணவு தயார் செய்ய தொடங்கினாள் வைஷ்ணவி. சுந்தரம் அடிக்கடி அவளை பார்த்தார்.
“என்ன?” அவள் கையசைத்து கேட்டாள்.
“ஏம்மா, எங்க தீரன் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“எதுக்கு?”
சும்மா தான்.. சொல்லுங்க..
அது…அவர்..என்று அவனை பற்றி எண்ணி, “உங்க ஊர்ல எல்லாருக்கும் பிடித்தவர். நல்லவர்ன்னு சொல்றீங்க. ஆனால் எனக்கு சரியா சொல்லத் தெரியல. அவரை பார்க்கும் போது எனக்கும் தானாக மரியாதை வருது. அதை விட பயமாகவும் இருக்கு” கண்ணை விரித்து அவளது சைகையில் காட்டினாள்.
“அண்ணாவை பார்த்து எதுக்கு பயப்படுறீங்க?” மாறன் முதன் முறையாக அமைதியாக கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
“கோபப்படுறார். திட்டுறார்ல்ல?”
“அது கண்டிப்பா நம்ம நல்லதுக்காக தான் இருக்கும்” மாறன் கூற, “அப்புறம் ஏன் நாங்க இங்க இருப்பது உனக்கு பிடிக்கலை?”
அது..என்னோட அண்ணாவை விட்டு நான் இருந்ததேயில்லை. அவர் இதுவரை எந்த பொண்ணிடமும் பேசி கூட பார்த்ததில்லை. அவர் பின்னாடியே ஒரு பைத்தியக்காரி சுத்துவா. அவர் அவளை கூட கண்டுகொண்டதில்லை. ஆனால் உங்க மூவருடனும் பாசமா இருக்கார். அது எனக்கு சுத்தமா பிடிக்கலை..
ஆமா, “நீ சுயநலவாதி தான?” செழியன் அங்கிருந்த கேரட்டை எடுத்து கடித்துக் கொண்டே மாறனை பார்த்தான்.
அண்ணா, சும்மா இரு..
என்ன சும்மா இருக்கணும்? உனக்கு பொறாமை. அண்ணா இவங்கள அழகா பெயர் வச்சி கூப்பிடுறதும் பிடிக்கலை. இவங்களுக்கு அலைபேசி வாங்கிக் கொடுத்தது எதுவும் பிடிக்கலை..
அதெல்லாம் இல்லை. அண்ணா இவங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எனக்கும் அண்ணாவுக்கும் இடையில் யாரும் வரக் கூடாது..
அப்படியா? வந்தா என்னடா செய்வ?
செழியா, வேண்டாம்..
இருவருக்கும் இடையில் வந்த வைஷ்ணவி, “உங்க சண்டையை வெளியே வச்சுக்கோங்க” கையை வெளியே காட்டினாள்.
வேலன் அவ்விடம் வந்து, “என்ன பசங்களா செம்ம எஞ்சாய்யா?”
“யோவ் போய்யா” மாறன் சொல்ல, “நா உன்னோட சித்தப்பாலேய்”.
போ சித்தப்பூ, மாறன் சினமுடன் நகர, “அம்மாவிடம் கேட்டதற்கான முழு பதிலும் தெரிஞ்சுக்காம போறீங்க?” சுந்தரம் கேட்டார்.
வைஷ்ணவியை பார்க்க, அவள் சோர்ந்து தெரிந்தாள்.
“நீங்க ஓய்வெடுக்கலையா? முகம் ரொம்ப சோர்வா இருக்கு” மாறன் கேட்க, அவளது நெஞ்சை தொட்டுக் காட்டினாள் சோர்வு மனதால் என்று..
ஏன்?
இழப்பு. அவள் கண்ணீருடன் மறுபக்கம் திரும்பினாள்.
செழியன் அவளருகே வந்து, “வைசு நீ அழலாமா? உன்னோட கஷ்டம் புரியுது பட் லைஃப்ல எல்லாம் நார்மலாக போகும்ன்னு சொல்ல முடியாதுல்ல!” அவள் கையை பிடித்தான். மாறன் அவன் கையை தட்டி விட்டு, “சொல்லுங்க…வேற எதுக்காக அண்ணாவிற்கு பயப்படுவீங்க?”
“அண்ணாவுக்கு பயமா?” செழியன் கேட்க, மாறன் அவள் கூறியதை சொன்னான்.
அண்ணா கோபத்துல்ல அர்த்தம் இருக்கு தான? உனக்காக தான சொன்னாங்க வைசு. இரண்டு நாளா சாப்பிடலை. சும்மா..சும்மா..வீட்டை விட்டு கிளம்புறதாக பேசினால் கோபம் எனக்கும் வர தான் செய்தது. அவர் காட்டி விட்டார். நான் அமைதியாக இருந்துட்டேன்.
“எதுக்கு அவர் கோபப்படணும்?” வைஷ்ணவி கேட்க, திணறிய செழியனுக்கு எடுத்து கொடுத்தாள் அக்சரா.
அக்கா, அதான் அந்த தேவதைகள் சொன்னார்ல்ல?
“ஆமா, அந்த தேவதைகள்” அவனும் சொல்ல, “தேவதைகள் என்று யாரும் இல்லை. எல்லாரும் மனிதர்கள் தான். பாலினம் தான் வேறு. அழகா இருந்தால் தேவதைன்னா..நல்ல விசயம் செய்யும் உங்க அண்ணனையும் என்னன்னு சொல்வீங்க?” கை மீது அடித்து அவள் எமோஸ்னலாக பேசி விட்டாள்.
“வைசு, என்ன கேட்ட? திரும்ப கேளு?” செழியன் கேட்க, வைஷ்ணவி புரியாமல் மனதினுள், “ஆமா இப்ப என்ன பேசினோம்? அவரை எதுக்கு இதுல்ல இழுத்து பேசினோம்?” விழித்தாள்.
செழியன் கையை நறுக்கென்று அக்சரா கிள்ளினாள்.
ஷ் ஆ…..ஆ…ஆ….அவன் சத்தம் கேட்டு எட்டி பார்த்தாள் சுப்ரியா.
“எதுக்குடி அவரை கிள்ளுன?”
ஆமா, “நல்லா கேளு வைசு. சிவந்தே போச்சு” செழியன் கையை ஊதிக் கொண்டே அக்சராவை பார்த்தான்.
கண்ணை சுருக்கி அவனை பார்த்து விட்டு, “அக்கா..நான் கிள்ளவில்லை. சிவப்பெறும்பு பெருசா இருந்ததா. அதான் அதை பிடிச்சேன்”.
“எறும்பா? எங்க?” மாறன் கேட்க,
உக்கூம்..இவன் வேற…என்ற செழியன், “எனக்கு வலிக்கலை. அதை விடுங்க. நீ சொல்லு? தீரன் அண்ணா பற்றி நீ என்ன நினைக்கிற?”
எதுக்கு கேக்குறீங்க?
சும்மா தான்..
இதையே தான் சீனியர் உங்க தம்பியும் கேட்டார்..
சொல்லு..சொல்லு..சொல்லு..அவசரப்படுத்தினான்.
ஒரு நாள்ல்ல அவரை பற்றி நான் என்ன சொல்றது? ஒன்று மட்டும் புரியுது. எந்த காரணத்திற்காகவும் அவர் குடும்பத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். அது மட்டும் தெரியுது..
“இதுக்கா கேட்டோம்?” செழியன் தலையில் அடிக்க, அவன் காதருகே வந்த அக்சரா, “மாமா..அக்கா இன்னும் தீரன் மாமாவை நெருங்கவில்லை. பேசவும் இல்லை. நாம உதவலாமா?”
“என்ன சொன்னீங்க?” மாறன் கேட்க, “ஒன்றுமில்லை. எனக்கு பசிக்குது. கேள்வி கேட்டு என் அக்காவின் ருசியான உணவை உண்ண தாமதிக்க வச்சிடாதீங்கன்னு சொன்னேன்”.
பத்து நிமிடம் வைசு கையை காட்ட, “அக்கா” சுப்ரியா அவர்களிடம் வந்தாள்.
என்னடி? பாப்பாவை தனியா விட்டு வந்துட்ட?
பாப்பா அழுறா..
சத்தமே கேட்கலை..
அது அழுகை இல்லைம்மா..சிணுங்கள்..சுந்தரம் சொன்னார்.
அழுறது போல இருக்கா. அங்கிள் சாப்பாடு வேலையை பார்த்துப்பார். நீ வா. அவளுக்கு பசிக்குது போல. ச்சுசூ போயிட்டா..
“அதான பார்த்தேன்” அக்சரா சொல்ல, “வா..நீ வர்றீயா?” சுப்ரியா அக்சரா கையை பிடித்து இழுத்தாள். இவர்கள் சண்டையிட வைஷ்ணவி அறைக்கு சென்று பாப்பாவை பார்த்தாள்.
ஈரத்தில் பாப்பா அழுவது போல முகத்தை வைத்திருந்தது.. அவள் ஆடையை மாற்றி விட வீறிட்டு அழுதது. தூக்கி தோளில் போட்டு சமாதானப்படுத்தினாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.
தூங்கியவுடன் கீழே பாப்பாவை படுக்க போட மீண்டும் அழுதாள் குட்டி பேபி நிகிதா.
வைஷ்ணவி குழந்தையை வைத்துக் கொண்டே இருக்க, அனைவரும் சாப்பிட்டு அவளை சாப்பிட அழைத்தனர். அப்பொழுது வேலன் பாப்பாவை தூக்க, அவராலும் சமாளிக்க முடியவில்லை. அரை சப்பாத்தியுடன் உணவுண்ணாமல் எழுந்து விட்டாள் வைஷ்ணவி.
“அக்கா, நான் உனக்கு ஊட்டவா?” சுப்ரியா கேட்க, “வேண்டாம் எல்லாரும் ஓய்வெடுங்க. நான் பார்த்துக்கிறேன்” அங்கேயே அமர்ந்து விட்டாள்.
அவளிடமிருந்து யாரும் நகராமல் இருக்க, அனைவரையும் முறைத்தே அனுப்பி வைத்தாள். வேலன் புன்னகையுடன் உள்ளே சென்றார்.
அக்சராவும் செழியனும் அவர் பின் செல்ல, “வைசுவை தொந்தரவு செய்யாம படுங்க. தீரன் வந்துருவான். அவங்க பேசட்டும்” அவர்களை வெளியே தள்ளி கதவை அடைத்தார்.
“ஓ.கே” வைஷ்ணவியிடம் வந்த அக்சரா, குட் நைட் அக்கா..
“அக்காவா? குட் நைட்டா? இனி மார்னிங் தான்” உதட்டை அசைத்தாள் வைஷ்ணவி. நகைப்புடன் அக்சரா அவளறைக்கு சென்று விட்டாள்.
பன்னிரண்டு மணிக்கு மேலிருக்கும்…
சோபாவிலே குழந்தையுடன் தூங்கிய வைஷ்ணவி கண்ணை விழித்தாள்.
யாருமில்லை. பாப்பாவை அறையில் படுக்க வைக்க எண்ணி நகர்ந்தாள். வீல்லென அலறினாள் குட்டி பேபி நிகிதா..
தோளில் குழந்தையை போட்டு அங்குமிங்குமாய் நடந்தாள். பாப்பா தூங்கவும் தோளில் குழந்தையை போட்டவாறே சப்பாத்தியை தட்டில் எடுத்து வைக்க, அது கை தவறி கீழே விழுந்தது.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு பயந்து விட்டாள் வைசு..
கீழே கிடந்த தட்டு, சப்பாத்தியையும் வைஷ்ணவி தோளில் இருந்த குழந்தையை கண்டு, எல்லா அறையையும் பார்த்தான் இளந்திரையன். யாருமில்லாமல் பூட்டி இருந்தது.
நேராக அவளிடம் வந்தான்.
வயிற்றை தடவினாள்.
“உட்காரு” என்று சொல்லி கை, கால், முகத்தை அலம்பி விட்டு, துவாலையால் முகத்தை துடைத்துக் கொண்டே அவளிடமிருந்து குழந்தையை தூக்க வந்தான்.
“வேண்டாம்” வேகமாக எழுந்து நகர்ந்தாள் வைஷ்ணவி.
“என்ன?” அவன் புருவம் உயர்த்தினான்.
பாப்பா அழுதுட்டே இருந்தா. கீழே போட்டாலும் அழுறா. அதான் தூக்கிட்டு இருக்கேன். நான் சாப்பிட்டு அவளையும் அழைச்சிட்டு போயிடுறேன்.
எங்க?
அறை பக்கம் கையை காட்டினாள்.
எப்படி சாப்பிடுவ?
கீழே கிடந்த தட்டை எடுக்க குழந்தையுடன் குனிந்தாள். அவள் தோளில் கை வைத்த இளந்திரையன் “வேண்டாம்” தலையசைக்க, நகர்ந்து கொண்டாள்.
உட்காரு..
எதுக்கு? அவள் புருவத்தை உயர்த்தினாள்.
சாப்பிடணும்ல்ல?
நீங்க சாப்பிடலையா?
நான் விரதத்துல்ல இருக்கேன். இந்த மாதம் சாப்பிட மாட்டேன்..
ஓ..அப்ப உணவு? அவனை கேள்வியுடன் நோக்கினாள். அவளது இரு தோள்ப்பட்டையை அழுத்தி அவளை அமர வைத்து விட்டு அவனும் அருகே அமர்ந்து தட்டில் சப்பாத்தியையும் குர்மாவையும் வைக்க தொடங்கினான்.
நானே சாப்பிடுவேன்..
“அதான் முடியலைல்ல?” சப்பாத்தியை பிய்த்து குர்மாவில் நனைத்து இளந்திரையன் அவன் கையால் வைஷ்ணவிக்கு கொடுத்தான்.
நா..நா..அவள் கண்கள் பறவைகளின் சிறகு போல அடித்தது.
சாப்பிடு. வாயை திற. காலை நான் சீக்கிரம் கிளம்பணும்.
“உங்க அறைக்கு போங்க சார்” அவள் வாயசைக்க, “நீ சாப்பிடாமல் நான் போக மாட்டேன்” என்று அவளுக்கு உணவை ஊட்டி விட்டான். அவள் அவனையே விழி அகலாது பார்த்தாள். அவளுள் ரசிக்கும் எண்ணமும் தோன்றியது.
தீர்க்கமான பார்வை, தெளிவான பேச்சு, அடர்ந்த நீள தாடி, கருகருவென அவளையே பார்க்கும் விழிகள், அதில் ஏதோ தெரிய அதனை பார்த்துக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் உருவானது வைஷ்ணவிக்கு.
“நீ என்ன பண்ணப் போற?” அவன் கேட்க, அவள் கவனம் அவனிடம் இருந்ததால் அவன் பேச்சில் லயிக்கவில்லை.
சிட்டு…
சிட்டு..
சிட்டு…அழுத்தி அழைத்தான்.
ஹ்ம்….என்னாச்சு?
எதிர்காலத்துக்கு நீ என்ன செய்யப் போற?
அது..அது..நான்..வொர்க் தேடணும்..
என்ன வேலை செய்வ? கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலை..
ஓ! அப்ப பாப்பா…?
பாப்பாவையும் வைத்துக் கொண்டு தான் பார்க்கணும். எத்தனை நாள் சார் உங்க வீட்ல ஓசியிலே சாப்பிடுறது?
அதனால என்ன? உணவு தான?
உணவு தானவா?
சிட்டு, நீயும் பாப்பாவும் பாதுகாப்பா இருங்க. வேலை பற்றி சும்மா தான் கேட்டேன்.
“நீங்க என்னை சிட்டுன்னு அழைக்கும் போது ஏதோ தோணுது? ஆனால் எதுவும் பிடிபடவில்லை. கஷ்டமா இருக்கு” நெஞ்சை தடவினாள்.
“ஏதும் பண்ணுதா?” அவன் பதற, சாரி சார் நீங்க கோபக்காரர்ன்னு நினைச்சுட்டேன். இவ்வளவு பாசமா ஊட்டி விடுவீங்கன்னு எண்ணவில்லை.
உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கு.
இளந்திரையன் தவித்து போனான். “பார்த்தது போல இருக்கா? நீயும் நானும் உசுறா பழகினோம்” மனதில் எண்ணினான்.
பின் கையை கழுவி, “உங்க அறைக்கு நான் வரவா?”
வாட்? அதிர்ந்தாள் வைஷ்ணவி.
பாப்பா அழாம இருக்க நான் ஏற்பாடு செய்து தரவா?
ஏற்பாடா? பெருமூச்சு விட்டாள். அவன் விரக்தியுடன் புன்னகைத்தான்.
“இதோ வாரேன்” என்று வேகமாக அவன் செல்லக் கூடாது என கூறிய அறைக்கு பக்கத்து அறைக்கு சென்று சில பொருட்களை எடுத்து வந்து வைஷ்ணவி அறையில் பாப்பாவிற்கு ஏற்றவாறு தயார் செய்து, அவள் படுக்கையின் அருகே தொட்டிலை போட்டு பாப்பாவை அவளிடமிருந்து அவள் எதிர்பாராத நேரம் வாங்கினான்.
அவள் பதறி விட்டாள். நிகிதா கத்தியது
சிட்டு, “நீ படு சொல்றேன்” என்று அவளை படுக்கையில் படுக்க வைத்து அவளது ஆடையின் துப்பட்டாவை தொட்டிலில் கட்டினான்.
சார், என்ன பண்றீங்க?
பாப்பா இவ்வளவு நேரம் உன்னிடம் தான இருந்தா. அவளால உன்னை உணர முடியும். இனி நீயும் தூங்குவ. பாப்பாவும் தூங்குவா..
பக்கத்துல்ல படுக்க போட்டு தூங்க வச்சி உள்ள போடு..
“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” கையசைத்து கேட்டாள்.
மாறன் இதே போல தான் அழுதுட்டே இருப்பான். அவனை இப்படி தான் சமாதானப்படுத்துவேன்.
ஓ!
நீங்க பழங்கள் ஏதாவது சாப்பிடலாமே!
நான் சாப்பிட்டுக்கிறேன்.
நீங்க நல்லா தூங்குங்க.
நான் வெளிய தான் படுக்கப் போறேன். பாப்பா அழுதால் தயக்கப்படாமல் கூப்பிடு..
நீங்க அறைக்கு போகலையா?
“மனசில்லை” என்று குழந்தையை பார்த்தான். அவள் விழித்து கண்ணை உருட்டி அவனை பார்த்தாள்.
“என்னை போல அம்மா, அப்பா இல்லாமல் இருக்கான்னு பார்த்தேன். நீங்க ஓய்வெடுங்க” அவன் வெளியே வந்தான். அவன் எண்ணத்துடன் படுத்தாள் வைஷ்ணவி.
நித்திரா தேவி தள்ளிச் செல்ல, வெளியே வந்து பார்த்தாள். சோபாவில் உடலை குறுக்கி படுத்திருந்தான் இளந்திரையன். அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டு தண்ணீர் அருந்தி விட்டு அவளறைக்கு சென்றாள். இளந்திரையன் புன்னகைத்து திரும்பி மனநிறைவுடன் படுத்தான்.
error: Content is protected !!