Skip to content
Post Views: 1,953
6(2)
“என்ன நடக்குது? எனக்கு ஒன்றுமே புரியல” மாறன் சொல்ல, சென்ற அக்சரா இளந்திரையனிடம் வந்து மூச்சிறைத்து, “இனி என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் நாங்க உங்களை மாமான்னு தான் அழைப்போம். அக்கா கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை” மாறனை பார்த்து சொல்லி விட்டு மீண்டும் சென்றுவிட்டாள்.
சித்தப்பூ..விடுங்க. சிட்டு தனியா இருக்கட்டும்..
Advertisement
தீரா, புள்ள அழுறாடா..
Advertisement
அதான் சொல்றேன்ல்ல சித்தப்பூ..
Advertisement
டேய், “என்ன தான் நடக்குது?” குரு இளந்திரையனை பார்த்தான்.
Advertisement
நான் சொன்னேன்ல்லடா..
“அதுக்காக அழ வைத்து கஷ்டப்படுத்தணுமா? ஏய் வாலுகளா?” அக்சரா, சுப்ரியாவை அழைத்து சத்தமிட்டான் குரு.
குரு, அவங்க முயற்சியை தடுக்காத..
“இதுக்கு பெயர் முயற்சியா?” குரு இளந்திரையனை முறைத்தான்.
“உன்னால செய்ய முடியுமா?” இளந்திரையன் சவாலாக கேட்டான்.
நான் என்ன டாக்டரா?
தெரியுதுல்ல. இத்தனை வருடம் அவளோட வளர்ந்த தங்கைகள் அவங்க. அதனால தான் அவங்களிடம் பேசினேன்.
இல்லடா..
இதை விடு. நாம பருப்பு உற்பத்தி சம்பந்தமான பைல்லை எடுத்து வா..
“சரி” குரு அழுத்தி சொல்ல, குரு சாப்பிட்டு போப்பா? இளவேலன் அழைத்தார்.
“எதுக்கு உங்க கடக்குட்டி எனக்கு விசம் வச்சு கொல்லவா?” நான் என்னோட ஆளுடன் சந்தோசமா வாழணும்.
“என்ன சொன்ன? கேட்கலை” இளந்திரையன் குருவை நெருங்க, “அப்பப்ப அந்த மதுரவீரன் உனக்குள்ள வந்துடுறான். என்னால உன்னிடம் உதை வாங்க முடியாது. என்னை விடுடா”
“அப்படி தான் ஓடிரு. வராத” மாறன் சொல்ல,
நண்பன்டா.. வருவேன்டா….
வீழ்வேன் என நினைத்தாயோ?
நான் பீனிக்ஸ் பறவையடா…
தீக்குளித்தாலும் திரும்பி வருவேன்டா..
குரு டயலாக்கை அள்ளி தெளிக்க, பக்கத்தில் இருந்து சாணித்தண்ணீரை மாறன் அவன் மீது ஊற்றி, “பீனிக்ஸ் பறவை போல மீண்டது போதும். நாராம வீடு போய் சேரு”.
“மாறா” இளந்திரையன் சினமுடன் அழைக்க, கையிலிருந்த பக்கெட்டை கீழே போட்டு “சாரி அண்ணா” அறைக்கு ஓடி விட்டான் மாறன்.
“சாரிடா மச்சான், அவனை பற்றி தான் உனக்கு தெரியுமே!”
நான் பரவாயில்லைடா. உன்னோட பொண்டாட்டியை மட்டும் இவனிடம் காட்டிறாத..கிழி..கிழின்னு கிழிச்சிடுவான்.
“ஏலேய், என்னலேய் பேச்சு இது?”
மாமா, நம்ம தீரன் பொண்டாட்டியை பழி வாங்க அவளது ஆடையை கிழி கிழின்னு கிழிச்சிடுவான்னு சொன்னேன்.
“குளிச்சிட்டு போ” இளந்திரையன் அழைத்தான்.
போதும்டா மச்சான். நல்ல வரவேற்பு. என்னோட சின்னமச்சானுக்கு இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது..
“இப்படியேவா போகப் போறீங்க மச்சான்?” செழியன் கேட்க, ஹப்பா நீயாவது என்னை மச்சான்னு ஏத்துக்கிட்டீயே சந்தோசம்டா. மனசு நிறைஞ்சு போச்சு..
ஏலேய்..போதும். குளிச்சிட்டு கிளம்பு. தீரா இவரை என்னோட அறைக்கு அழைச்சிட்டு போ..
ம்ம்..சரி சித்தப்பூ…பாப்பாவை கொடுங்க. அவ அழுக போறா..
“அதெல்லாம் புள்ள பழகிடும்டா” சொல்லிக் கொண்டே இளந்திரையன் கையில் நிகிதாவை கொடுத்தார். அவன் வைஷ்ணவி அறையை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டே குழந்தையை தூக்கினான்.
மச்சான், எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..
இருவரும் இளவேலன் அறைக்கு சென்று தயாராகி வந்து உணவுண்டு எல்லாரும் அவரவர் வேலையை கவனிக்க சென்றனர்.
தீரன் வைஷ்ணவி அறைக்கதவை தட்டினான். அவள் அறைக்கதவை திறக்க, அவளிடம் குழந்தையை கொடுத்து விட்டு, “இன்னும் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டிருக்கணும். சரியா?” மென்மையுடன் கேட்டான்.
தலையை ஆட்டிக் கொண்டே சுப்ரியா அறையை பார்த்தாள்.
குட்டிம்மா, “உன்னோட பேசாம எங்க போகப் போறா? வந்திருவா..நீ பேச முயற்சி செய்யலாம்ல்ல?” கேட்டான்.
பேசி என்ன ஆகப் போகுது? விரக்தியுடன் அவள் கேட்க, அவன் நிகிதாவை காட்டினான்.
குழந்தையை பார்த்தாள். அது அவளது கன்னத்தை தொட்டது.
கண்ணீர் வந்தது வைஷ்ணவிக்கு.
“சிட்டு அழாத. நீ அழுதா பாப்பாவும் அழுவா. அதனால அவளிடமாவது பேச முயற்சி செய். அவ எங்களை விட உன்னுடன் தான் நேரம் அதிகம் செலவழிக்கிறா. நீ பேசலைன்னா அவளும் பேச மாட்டா. புரியும்ன்னு நினைக்கிறேன்” அவன் சொல்லி சென்று விட்டான். வைஷ்ணவிக்கும் அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
மாலை நேரம் செழியன் வீட்டிற்கு வந்தான். அனைவரும் காபி அருந்திக் கொண்டிருந்தனர்.
“மாமா, தீரன் மாமா வரலையா?” சுப்ரியா அவனருகே வந்து கேட்டாள்.
“உங்க மாமாகிட்ட தான் பேசுவீங்களா? எங்களிடம் பேச மாட்டீங்களோ?” செழியன் ஓரக்கண்ணால் வைஷ்ணவியை பார்த்தான். அவள் முகம் வாடி இருந்தது.
பேசுவேனே! ஆனால் இப்ப ஷாப்பிங் போகணும். பள்ளி செல்ல பள்ளிப்பை, பவுச், பென், பென்சில்..எல்லாம் வாங்கணும்.
வாங்கிட்டா போச்சு..
மாமா வர மாட்டாங்களா?
மாறன் அவளை முறைத்தான்.
மதுரைவீரனுக்கு தான் இன்றைய விழா. அண்ணா ரொம்ப பிஸி..
“நாங்களும் வரவா?” சுப்ரியா கேட்க, “நோ..நாங்க தான் போகணும்” மாறன் எழுந்தான்.
நாங்க வந்தால் என்ன? சினமுடன் அவனை முறைத்து அவள் கேட்டாள்.
“சுபாம்மா, உங்களை கொல்ல எண்ணியவன் இங்க தான் இருக்கான். அதான் உங்களுக்கு துணைக்கு எங்களை அண்ணா ஏற்பாடு செய்திருக்கார். அண்ணா சொல்லும் வரை நீங்க வெளியே வர வேண்டாம்” அவள் காதில் சொன்னான்.
பள்ளிக்கு எனக்கு வேண்டிய பொருட்கள்?
மாறன் உனக்காக வாங்கிட்டு வருவான்..
“என்னால முடியாது” அவன் முகத்தை சுண்டினான்.
“நானே உனக்கு வாங்கித் தாரேன்” என்று அவளை அமர வைத்து, வேண்டிய பொருட்களை எழுதிக் கொடு.
“தேங்க்ஸ் மாமா” என்று சிரித்து தன் அக்காவை பார்த்து விட்டு..ஷரா உனக்கு எதுவும் வேணும்ன்னா சொல்லு? மாமா வாங்கிட்டு வருவாரு..
எனக்கு தேவையில்லை சுபா. மாமா ஏற்கனவே எனக்கு வாங்கி தந்துட்டார்.
“அடிப்பாவி, எதுவுமே சொல்லலை” சுப்ரியா அக்சராவிடம் வந்தாள்.
“வேண்டாம்டி, பக்கத்துல வராத” அக்சரா ஓட, அவளை வேகமாக இழுத்து இருவரும் கீழே விழுந்தனர்.
“அம்மாடி, என்ன பண்றீங்க?” வேலன் விரைந்து வந்தார்.
வைஷ்ணவி அவர்களிடம் வந்தாள்.
இருவரும் வேகமாக எழுந்து ஒருவரை ஒருவர் பார்த்து, ஒருவர் தோளில் மற்றவர் கையை போட்டுக் கொண்டு, “நாங்க சண்டையே போடலை. என்னக்கா?” சுப்ரியா கேட்க, “ஆமா..நாங்க ஜஸ்ட் ரிகர்சல் தான் பார்த்தோம்”.
செழியன் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தான். இருவரின் செய்கையில் மாறனுக்கு வித்தியாசம் தெரிந்தது.
என்ன ரிகர்சல்? இளவேலன் நகைத்தவாறு அமர்ந்தார்.
மாமா, அக்காவும் நானும் எதிரிகளை பந்தாட ரிகர்சல் பண்ணோம்..
“ஓ! சண்டையெல்லாம் போடுவீங்களா?”
“ஆமா, நான் கராத்தே சேம்பியன் மாமா” சுப்ரியா சொல்ல, செழியன் சத்தமாக சிரித்தான்.
மாமா, எதுக்கு சிரிக்கிறீங்க?
“புறாக்குஞ்சு மாதிரி இருந்துட்டு இருவரும் சண்டை போடுவீங்களா?” அவன் மேலும் சிரிக்க, அக்சரா சுப்ரியாவிடம் புருவத்தை உயர்த்தினாள்.
சுப்ரியா செழியன் கன்னத்தில் ஓங்கி குத்த, அவன் எதிர்பாராத நேரம் அக்சரா அவனை அடித்து தள்ளினாள். செழியன் வாயில் இரத்தம் வடிய பொத்தென கீழே விழுந்தான். வைஷ்ணவி பதறி அவனிடம் ஓடி வந்தாள்.
நிகிதா குட்டியோ பொக்கை வாயை காட்டி சிரித்தது. இளவேலன் சிரித்து விட்டார். மாறன் கண்கள் விரிய இருவரையும் பார்த்தான். இருவரும் சேர்ந்து போஸ் கொடுத்தனர்.
“தெய்வங்களா! உங்கள் திறமையை சொல்லீட்டு காட்ட மாட்டீங்களா?” கதறினான் செழியன்.
மாமா, நாங்க தான் சொன்னோம். நீங்க தான் புறாக்குஞ்சுன்னு சொன்னீங்க? அடி எப்படி?
அடிச்சிப்புட்டு என்ன கேள்விம்மா?
வைஷ்ணவி சினமுடன் இருவரிடமும் சென்று அவர்களை ஓங்கி அறைந்தாள்.
“வைசு” செழியன் சத்தமிட, இளவேலன் எழுந்தார்.
பெண்கள் இருவரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்தனர்.
“நாம எதுக்கு இங்க வந்தோம்? நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? அவங்க நமக்கு பாதுகாப்பும் செய்து, எல்லாமே செய்து தாராங்க. படிக்க வைக்கிறாங்க. ஆனால் அதுக்கான மரியாதையை கூட நீங்க அவங்களுக்கு தர மாட்டிக்கிறீங்க?”
“நல்லா சொல்லுங்க உங்க தங்கைகளுக்கு. ஏதோ அவங்க வீடு மாதிரி உரிமையா பேசிட்டு திரியிறாங்க. கொஞ்சமும் கூச்சம் இல்லை” மாறன் சொல்லி விட, “நிறுத்து மாறா” செழியன் கத்தினான்.
“அண்ணா, உங்களோட ஜூனியர்ன்னு தான வந்தாங்க. ஒரு வேளை வேறெதுவும் நடக்குதா?” அவன் கேள்வியில் செழியன் மேலும் கோபப்பட, வைஷ்ணவி உறைந்து அவனை பார்த்தாள்.
“மாறா” பல்லை கடித்து ஆங்காரமுடன் கத்தினார் இளவேலன்.
சித்தப்பூ, பள்ளியில் இவங்க உதவிக்காக வந்தாங்கன்னு சொன்னா. பசங்க ஓவரா பேசுவாங்க. இவளை பள்ளியில் சேர்க்காதீங்க.
சுப்ரியா வேகமாக எழுந்து அவளறைக்கு செல்ல, வைஷ்ணவி மனம் கனத்து குழந்தையை தூக்கி அவளறைக்கு சென்றாள். அக்சரா அறைக்கு சென்று செழியன் வாங்கித் தந்த பொருட்களை அவர்கள் முன் வைத்து நகர்ந்தாள்.
“அக்சா நில்லு” செழியன் அவள் கையை பிடிக்க, அவன் கையை உதறி மாறனை பார்த்து, “நாங்க சாகணுன்னு நினைக்கிறவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்ன்னு தான் வந்தோம். முதலிலும் இப்படி தான் பேசுன.. இப்பவும் இப்படி தான் பேசுற”
“நான் யாரையும் இதுவரை மனதளவில் நம்பியதில்லை. வேறெதுக்கும் நாங்க வரலை. நான் பழகிய பசங்க மாதிரி நீங்க இல்லைன்னு தான் தைரியமா நானும் என்னோட சிஸ்டர்ஸையும் தங்க வைத்தேன். நீ சொன்ன மாதிரி அதிகமாக தான் உரிமை எடுத்துக்கிட்டோம். எங்க தப்பு தான் சாரி” சொல்லி அவள் அகன்றாள்.
“அம்மாடி நில்லு” இளவேலன் அழைக்க, “சாரி சார்” என்று அறைக்குள் சென்றாள்.
சற்று நேரத்தில் சுப்ரியா அறைக்கதவு திறக்கப்பட்டது. அக்சராவும் கதவை திறந்தாள். கீழிருந்த மூவரும் அவர்களை பார்த்தனர். வைஷ்ணவியும் கதவை திறந்து ஒரு கையில் பையுடனும் மறு கையில் குழந்தையுடனும் நின்றாள்.
“அம்மாடி” இளவேலன் அதிர, செழியன் வைஷ்ணவியிடம் சென்று, “வைசு எங்க போகப் போற?” அவன் கேட்க, மற்ற இருவரும் கையில் பையுடன் வந்தனர். வைஷ்ணவி அவர்களை பார்த்தாள்.
“நாங்க பார்த்துக்கிறோம் சார்” அக்சரா சொல்ல, “அம்மாடி கைக்குழந்தையை வச்சி எப்படி சமாளிப்பீங்க?” பேசிக் கொண்டே பின்னே நின்ற சுந்தரத்திடம் கண்ணை காட்டினார் இளவேலன். சுந்தரம் கண்ணசைத்து பின் பக்கமாக இளந்திரையனை பார்க்க ஓடினார்.
வைஷ்ணவி சுப்ரியாவை பார்த்து சைகையில் ஏதோ சொல்ல, மாறனை தவிர மற்றவர்களுக்கு புரிந்தது. சுப்ரியா மொழி பெயர்த்தாள். மாறன் அதிர்ந்து நின்றான்.
“என்னம்மா சொல்ற?” இளவேலனும் அதிர்ந்தார்.
ஆமா சார், பாப்பாவையும் வச்சுக்கிட்டு எங்களால எந்த வேலைக்கும் போக முடியாதுல்ல சார். அக்கா சொன்னது சரிதான்.
“என்ன சரி?” சீற்றமுடன் செழியன், குழந்தை அவள் அம்மாவை இப்பொழுது தான் இழந்திருக்கா. நீயும் அவளை ஆசிரமத்தில் விட்டு விட்டால்.. அழுதுக்கிட்டே இருப்பா. வைசு உன்னை போல பொறுமையா யாரும் இருக்க மாட்டாங்க. பிள்ளைக்கு ஏதாவது ஆகிடும்..
உன்னோட பிள்ளைன்னு சொன்னீயேம்மா?
கண்ணீருடன் அவரை பார்த்த வைஷ்ணவி, எப்பவும் என்னோட பிள்ளை தான் நிகிதா. அவள் எங்களுடன் இருந்து கஷ்டப்படுவதை விட அங்கே பாதுகாப்பாகவாவது இருப்பா..
வைசு..
மாறன் மனம் அந்த குழந்தைக்காகவும், குழந்தையை எண்ணி கண்ணீர் வடிக்கும் வைஷ்ணவியை பார்த்து கனத்தது. ஆனாலும் அவன் ஏதும் பேசவும் இல்லை. அவர்களை தடுக்கவும் இல்லை.
செழியனும் இளவேலனும் மாறி மாறி பேசி அவர்களை தடுக்க முயல, இளந்திரையனும் அவனுடன் குரு, சத்யாவும் வந்தனர். சத்யா தயங்கி நிற்க, குரு அவனை வீட்டிற்குள் அழைத்து வந்தான்.
குட்டிம்மா, “எங்க போறீங்க?” இளந்திரையன் வைஷ்ணவியை கவனித்துக் கொண்டே சுப்ரியாவிடம் வந்தான். அவள் அமைதியாக இருந்தாள்.
குழந்தையை பார்த்து, “சிட்டு… பாப்பா?” அவன் அருகே வர, அவனை சீற்றமுடன் முறைத்து கையை உயர்த்தி அவனை அருகே விடாமல் தடுத்தாள் அவனின் சிட்டு.
குழந்தை தீரனை பார்த்து..ஊஊஊ..பேச, அவன் அவளது கையை தட்டி விட்டு குழந்தையிடம் வந்தான்.
வைஷ்ணவி குழந்தையை நகர்த்தி அவளும் நகர்ந்தாள்.
சிட்டு..குழந்தையை வச்சிக்கிட்டு எங்க போக போறீங்க?
குழந்தையை தரையில் போட்டு சீற்றமுடன் கையெடுத்து கும்பிட்டாள் வைஷ்ணவி. அக்சராவும் சுப்ரியாவும் அவளருகே வந்து நின்றனர்.
சிட்டு..நீ..
வைஷ்ணவி தோளில் கையை வைத்தாள் சுப்ரியா. எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.
மன்னிச்சிருக்கா. நாங்க இவங்களிடம் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டது தவறு தான். ஆனால் அதுக்கு காரணம் இருக்கு. அந்த காரணம் இப்பொழுது ஒன்றுமில்லை என்றாகி போயிருச்சு.
“குட்டிம்மா” இளந்திரையன் திகைத்து சுப்ரியாவை பார்த்தான்.
“இங்க பாருங்க. நீங்க நினைப்பது போல நீங்க வெளிய போனால் உங்களை கொன்றுவாங்க. உங்களை கொலை செய்ய எண்ணியவன் இந்த ஊர்ல தான் இருக்கான்” சத்யா கூறினான்.
தீரா, யாரவன்? இளவேலன் கேட்டார்.
அவன் ஏதும் சொல்லாமல் பெண்கள் மூவரையும் பார்த்தான்.
“தெரியும் சார். எங்களை கொல்ல எண்ணுபவன் யாருன்னு எனக்கு நல்லா தெரியும்” அக்சரா கூற, வைஷ்ணவி அதிர்ந்தாள்.
யார் என்ன சொன்னாலும் இங்கிருந்து போக மாட்டேன்னு நான் சொன்னேன். அதுமட்டுமல்ல நாங்க இப்ப வெளிய வந்தால் என்ன மாதிரி பிரச்சனை வரும்ன்னு நல்லா தெரியும். ஏற்கனவே எங்களுக்கு மற்ற எல்லாம் பழக்கமானது தான். ஆனால் கொலை செய்யும் அளவு யாரும் எங்களை நெருங்கியதில்லை..
மற்ற எல்லாமா? எதை சொல்ற? செழியன் முகத்தை கடுகடுவென வைத்து கேட்டான்.
நாங்க பொண்ணுங்க சார். அம்மாவுடன் தான் இருந்தோம். ஆனால் எல்லாவற்றையும் சொல்லி அம்மாவை கஷ்டப்படுத்த முடியாதுல்ல. அதை தெரிந்து அவங்களாலும் ஏதும் செய்ய முடியாது. நான் எல்லாருடனும் பழகுவேன் தான். மாடர்னாக இருந்தாலும் என் எல்லை எனக்கு சொல்லி தான் வளர்த்தாங்க. ஆனால் எல்லை மீறி நடந்து கொள்பவனிடம் நாங்க என்ன செய்றது?
தேனு..இளந்திரையன் திகைத்து அவளை பார்த்தான்.
எனக்கு கல்லூரியில் பிரச்சனை இருக்கும். அக்காவுக்கு என்று வைஷ்ணவியை அக்சரா பார்க்க, இளந்திரையன் கைகள் இறுகியது. எதுவும் நடக்கும் முன் தடுக்கப்பட்டது எங்களது அதிர்ஷ்டம்.
சுபாவின் பதினைந்தாவது வயதில் அவளை கல்லூரி பசங்க கடத்தினாங்க. அவளோட நண்பர்களின் குடும்பத்தினர்கள் தான் உதவினாங்க. கிட்டத்தட்ட அவள் நிலை மாறும் முன் போலீஸ் காப்பாற்றினாங்க. அம்மாவெல்லாம் ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க. அவளோட நண்பன் விஷ்ணுவின் அண்ணா போலீஸ். அவர் உதவியுடன் தான் பத்திரமாக சுபா மீட்கப்பட்டாள் இல்லை அவளை இப்பொழுதும் பார்த்திருக்க முடியாது. அதன் பின் தான் எல்லாவற்றிற்கும் துணிந்து செயல்பட்டாள். அவளுக்கு அவளே தைரியம் கூறிக் கொண்டாள் அக்சரா சுப்ரியாவை பார்த்தாள்.
சுப்ரியா கண்ணீருடன் கீழுதட்டை மடித்து மரநாற்காலியை இறுக பற்றி இருந்தாள். இளவேலன் அசையாது அப்படியே அமர்ந்தார்.
“இதுக்கெல்லாம் காரணம் என்ன? எங்க குடும்பம் எங்களுக்கு இல்லாதது தான!” அக்சரா சினமுடன் சத்தமிட்டாள். இளவேலன் நெஞ்சம் காலியானது.
உங்க தம்பி சின்னப்பையன். அவன் பேச்சை முதலில் எல்லார் போலும் பேசுவதாக தான் எண்ணினேன். ஆனால் அவன் ஏதோ பணத்துக்காக வந்து இங்க..உங்களோட..வார்த்தைகள் தடுமாறியது அக்சராவிற்கு.
தேனு,..என்ன பேசுற?
கண்ணை துடைத்து, நான் பேசலை சார். உங்க தம்பி தான் பேசிட்டு இருக்கார். நாங்களும் உங்களிடம் உரிமையும் எடுத்திருக்கக் கூடாது. பணமோ பொருளோ வாங்கி இருக்க கூடாது. நாங்கள் என்ன உங்கள் சொந்தமா பந்தமா எல்லாவற்றையும் வாங்க? அக்சரா பேசினாள்.
செழியன் உணர்ச்சி வசப்பட்டு, “அக்சா..நீங்க எங்களோட..”அவன் சொல்லும் முன் குரு அவன் வாயை பொத்தினான்.
இப்ப என்ன பண்ணனும்? இளந்திரையன் விறைப்புடன் கேட்டான்.
நாங்க போகணும்.
முடியாது. இந்த வீட்டை நம்பி வந்தவங்களை நாங்க கை விட்டதில்லை..
ஏளனப்பார்வை சிந்திய சுப்ரியா, அப்படி எனக்கு எதுவும் தெரியலை சார்.
அப்படி என்ன கோபம் குட்டிம்மா? அவன் பேசியதுக்காக எங்களையும் சேர்த்து அப்படி எண்ணலாமா? சரியாக பாயிண்டை பிடித்தான் இளந்திரையன்.
கோபமில்லை சார் வலி. கையையும் உதட்டையும் அசைத்து அவன் முன் வந்தாள் வைஷ்ணவி.
எங்களுக்கு உயிரை விட தன்மானமும் மானமும் தான் பெரியது நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினாள்.
விரக்தியுடன் அவளை பார்த்தான் இளந்திரையன்.
“ஓ! அந்த கொலைகாரனுக்கு நீங்க தீனியாகப் போறீங்க? தயாரா தான் இருக்கீங்க?” சத்யா கையை கட்டிக் கொண்டு அக்சரா முன் வந்தான்.
ஆமா சார், நாங்க சாக பயப்படலை. சாவு தான வரட்டும். எத்தனையோ பொறுக்கிகளை சமாளித்த எங்களுக்கு இது சவாலாக கூட இருக்கும்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த குரு கலகலவென சிரித்தான். அவன் அண்ணன் என்ற எண்ணம் அக்சரா மனதில் ஆழமாகவே பதிந்து இருந்தது.
சினமுடன் அவனிடம் வந்து சிரித்துக் கொண்டிருந்தவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.
ஆஆ….தீரா, இவளுக்கு அந்த கொலைகாரனே பரவாயில்லை.
என்ன சொன்ன?
நானா? சரியா தான சொன்னேன். அவன் ஒரே குத்தில் கொன்னுட்டு போயிருவான். ஆனால் நீ பேசியே கழுத்தருக்கிற..
என்னடா சொன்ன? அக்சரா மேலும் சீற, இருவருக்கும் இடையில் வந்தான் சத்யா.
இருவரும் செல்லசண்டை போடும் நேரமில்லை. உங்கள் முடிவு மிகவும் தவறு. உங்களுக்கு புரிய வைக்க ஒன்று சொல்கிறேன்..
என்ன? அக்சரா கேட்டாள்.
இப்பொழுது மதுரைவீரனுக்கு திருவிழா ஆரம்பிக்கப் போகுது. தீரன் அண்ணா.. எப்படியும் கோவிலிலிருந்து வெளியே வர முடியாது.
இந்த திருவிழா பத்து மணிக்கு மேல தான் முடியும். நீங்கள் மூவரும் மாறுவேடமிட்டு இந்த ஊருக்குள்ள…ஏன் கோவில்ல கூட சுத்தலாம். ஆனால் உங்களில் ஒருவருக்கும் சின்ன கீறல் கூட ஏற்படக்கூடாது. ஏற்படாமல் பத்திரமாக வந்து விட்டால் நீங்க இளா குடும்ப வீட்டை விட்டு போகலாம்.
“யோவ், போலீஸாயா நீ?” மாறன் அவனை மீறியும் சத்தமிட்டான்.
வேலன் சத்யாவை முறைத்து விட்டு, “அதெல்லாம் எதுவும் வேண்டாம்மா. அந்த பாண்டி குடும்பத்து ஆளுங்க திருவிழாவிற்கு வரவில்லை என்றாலும் அவர்களின் அங்காளி பங்காளி ஆட்கள் எல்லாரும் இருப்பானுக” பதறினார்.
சத்யா அவரை முறைத்து, “நீங்க என்ன சொல்றீங்க?” இளந்திரையனையும் பெண்களையும் பார்த்தான்.
அக்சராவிற்கு தூக்கி வாரிப் போட்டது, “அந்த அகில் கண்டிப்பாக வருவானே! அக்கா மாட்டினால் அவ்வளவு தான்..வேண்டாம்” என்று அவள் சொல்லும் முன் வைஷ்ணவி “சரி” என்று விட்டாள்.
“அக்கா, இது வேண்டாம்” வைஷ்ணவியிடம் கூறிக் கொண்டே இளந்திரையனை பார்த்தாள். அவன் ஓய்ந்து போனான்.
“ஒவ்வொரு முறையும் போகாத போகாதன்னு சொல்லியும் போறேன்னு நிக்கிறீங்கன்னா போங்க” என்று சொல்லி விட்டான். சுப்ரியா அவனையே பார்த்தாள்.
“இவங்கள நான் அழைச்சிட்டு போறேன்” சத்யா சொல்ல, “நீ போலீஸ்காரன் வேலையை மட்டும் பாரு” இளவேலன் அவனை தள்ளினார்.
“சித்தப்பூ, அவர் மேல கையை வைக்காத” சீறினான் இளந்திரையன். எல்லாரும் அவனை பார்த்தனர்.
அவன் யாருடா நம்ம புள்ளைங்கள வெளிய போக சொல்ல?
நான் மனுசன் சார். அந்த பொண்ணுங்க நிலையில் இருந்து பாருங்க. ஊர்ல இவங்கள பத்தி தப்பா பேசினால் உங்களால விவரிக்க முடியுமா?
முடியும்.
“எப்படி செய்வீங்க? இவங்க உங்களுக்கு சொந்தமா பந்தமா? வேண்டுமென்றே கேட்டான் சத்யா.
“சார், ப்ளீஸ் வேண்டாம். நாங்க வாரோம்” அக்சரா சொல்ல, அம்மாடி..அவர் அழைத்தார்.
“அங்கிள், நமக்கு பிடித்த சில விசயங்கள் கண்ணுக்கு தெரியாம தூரமா இருக்கும் போதே தேடி கண்டுபிடிச்சிருங்க. இழந்துட்டா கஷ்டம் மட்டும் தான் மிஞ்சும். அக்கா போகலாமா?” அக்சரா வைஷ்ணவியை அழைக்க, அவள் கையிலிருந்து குழந்தையை வாங்கினான் இளந்திரையன்.
குழந்தை கையை நீட்டி அழும் பாவனையுடன் அவளை பார்த்தது.
“முடிச்சிட்டு வந்து வாங்கிக்கோ” என்று வாங்கி யாரையும் பார்க்காமல் அவன் நகர, குரு அவன் பின்னே சென்றான்.
பெண்கள் சத்யாவுடன் அவன் வீட்டிற்கு சென்றனர். தீரனின் ஆணைப்படி “வைசு முகம் மட்டும் வெளியே தெரியாமல் அழைத்து சென்றான் சத்யா”.
error: Content is protected !!