Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 15.1

சம்யுக்தா.. இன்னும் தனது மானிட்டரை பார்த்து குழப்பத்தோடு அமர்ந்திருக்க, 

அவளுக்குப் பின் வந்து நின்று.. தான் செய்திருந்த வேலையை கவனித்த ரியானை தெரிந்திருக்கவில்லை அவளுக்கு.



Advertisement

சிறு புருவ முடுச்சோடு அதை சில கணம் பார்த்தவன்,

“எனிபடி கால் யுவர் டிஎல்..” என்று கட்டளையாக சொல்ல,

Advertisement

Advertisement

அதுவரை ரியான் வந்ததும் காட்டிய சைகையில்.. அமைதியாக அமர்ந்து என்ன நடக்க போகிறது..? என வேடிக்கை பார்த்திருந்தவர்களில் ஒருவர் விரைவாக சென்று சபேசனிடம் ரியான் வருகை பற்றி சொல்ல,

ஒரு நொடி தடுமாறினாலும்.. நேற்றும் இது போல வந்து ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கேட்டு பார்த்தது நினைவில் எழ.. சாதாரணமாக முகத்தை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்.

Advertisement

“மிஸ்டர். சபேசன் உங்ககிட்ட யாருக்கு என்ன போர்ஷன் இன்னைக்கு கம்ப்ளீட் ஆக கொடுக்கனுமுன்னு நேத்து டிஸ்கஸ் பண்ணும் போது ச்சாட் கொடுத்தேனே, அது இருக்கா..?” என்றான் விசாரணை தொனி இன்றி சாதாரணமாக.

“ஓ.. இருக்கு சார். அதுப்படி தான் எல்லாருக்கும் கொடுத்திருக்கேன். 

எல்லாருமே பாதி கம்ப்ளீட் பண்ணிட்டாங்க.. நானும் மானிட்டர் பண்ணிட்டு தான் இருக்கேன்..” என்றார் சின்சியராக.

“ஓ.. ஐ சீ. இப்ப புதுசா வந்தவங்களுக்கு எது கொடுக்க சொல்லிருந்தேன்..?” என்று தன் தாடையை தடவியபடி யோசனை பாவனையில் ரியான் கேட்க,

“அது.. நீங்க.. நேத்து சொன்ன..” என சபேசன் சொல்லும் போதே ரியான் பார்வை சம்யுக்தாவின் மானிட்டரில் பதிந்திருப்பதை கண்ட சபேசன் பாதியோடு சொல்ல வந்ததை நிருத்த,

“இதான் நான் நேத்து கொடுத்ததா..?” என்றான் கண்கள் இடுங்க சபேசனை பார்த்தபடி.

“சார். அது வந்து..” என ஒரு நொடி தடுமாறிய சபேசன், 

“சார்.. இது நான் கொடுக்கல சார். 

நான் கொடுத்ததை அந்த பொண்ணு மாத்தி எடுத்துட்டு வந்து.. எதோ பண்ணிட்டு இருக்கு..” என பழி மொத்தத்தையும் சம்யுக்தா மேல் போட,

‘எது.. நான் மாத்தி எடுத்துட்டு வந்தேனா..?!” என அதிர்ந்து ரியானையும் சபேசனையும் மாறி மாறி பார்த்தாள் சம்யுக்தா.

“மிஸ்டர் சபேசன்.. உங்க ரூம்ல கேமிரா இருக்குன்னு நான் ரிமைண்ட் பண்ணனுமின்னு அவசியமில்லைன்னு நினைக்கிறேன்..” என்ற ரியானின் பேச்சில் இருந்த மரியாதை பண்மை அவனின் பார்வையில் துளியும் இல்லை.

அதில் தடுமாறி கொஞ்சம் நடுக்கம் பிறந்தபோதும்.. அதைக்காட்டி அவனிடம் தானே மாட்டிக்கொள்ள கூடாது.. என நினைத்து திடமாய் இருப்பது போல நிமிர்ந்து நின்ற சபேசன், 

“சார், அந்த பொண்ணு புதுசு. ஒண்ணும் தெரியாம தப்புத்தப்பா எதையோ எடுத்துட்டு வந்து வச்சிட்டு இருக்க நானா பொறுப்பு..? 

உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் பர்ஷனலா கனெக்ஷன் இருக்குங்கறதுக்க..” என பேசிக்கொண்டே சென்றவன், 

ரியானின் வெண்ணிற முகம் கொண்ட செம்மையில் அதிர்ந்து பேச்சை நிறுத்தினான்.

தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றபடி, “உனக்கு ஒரு ச்சான்ஸ் தான். மரியாதையா உண்மைய சொல்லு..” என்றான் மிரட்டலாய்.

“சார்.. என்ன சார் இப்படி மிரட்டறீங்க..? நான் என்ன தப்பு பண்ணினேன்..? 

ஜஸ்ட் அந்த பொண்ணோட ஸ்கில் எப்படின்னு செக் பண்ண வேண்டி தான் இப்படி கொடுத்தேன். இதுல என்ன தப்பு..” என்று வாதிட,

“ஓ.. அப்போ நீங்க வேற எந்த தப்பும் பண்ணல..?” என்றான் விசாரணையாய்.

“நா எதுவும் பண்ணல. அப்படி நா எதாவது பண்ணியிருந்தா.. அந்த பொண்ணையே சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்..?” என்று துணிச்சலாகவே வந்தது சபேசனின் குரல்.

“பரவாயில்லையே ஸ்மார்ட் தான் நீ. 

அதெல்லாம் இருக்கட்டும்.. நீயே ரிசைனிங் லெட்டர் கொடுக்கறையா..? 

இல்ல நாங்க டிஸ்மிஸ் ஆர்டர் பாஸ் பண்ணவா..? ச்சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்..” என்று அவனை கூர்ந்து பார்த்து, தனது ஃபுல்ஸ்லீவை மேலேற்றியபடி கேட்க,

“சார்.. இந்த மாதிரி சில்லி ரீஷன் வச்சு நீங்க என்மேல ஆக்ஷ்ன் எடுக்க முடியாது..” என்று ஜம்பமாய் சபேசனும் பேச,

“ஓ.. அப்போ இந்த ஃபைல்ல.. இதுவரை நீ டிஎல்லா வொர்க் பண்ண.. எல்லா ப்ராஜெக்ட்லயும் இருக்கற லேடி ஸ்டாப்ஸ் கிட்ட நீ பண்ண சில்மிஷம் பத்தி.. 

அவங்க கொடுத்த ஹரஸ்மென்ட் கம்ப்ளைன்ட்டை போலீஸூக்கு பாஸ் பண்ணிடறேன். 

மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்க..” என்றதும் அதிர்ந்து விழித்தான் சபேசன்.

இதுவரை நிதானமாக பேசிய ரியான் சபேசனின் சட்டை காலரை மொத்தமாக பற்றி தன்னருகே இழுத்து,

“ஏன்டா.. மென்ட்டலி ஒருத்தங்கள பலகீனம் ஆக்கி அதை உன்னோட வக்கீரத்துக்கு பயன்படுத்தியிருக்கே.. வெக்கமா இல்ல..?

இங்கே வந்து கொஞ்ச மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள உன் பேர்ல இத்தனை பேர் கம்ப்ளைன்ட் கொடுக்கறாங்கன்னா.. 

இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்துல.. எத்தனை பேரை நீ உன்னோட வக்கீரத்துக்கு யூஸ் பண்ணியிருப்பே..?” என்றவனின் கரம் ஒன்று சபேசனின் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தது.

அதில் தடுமாறி கீழே விழுந்தவனை கண்டு திருப்தி தான்‌ எழுந்தது அங்கிருந்தவர்களுக்கு. 

இப்படிப்பட்டவன் தங்களிடமும் அவனின் வேலையை காட்டியிருந்தால்..! என்ற பயமும், 

இப்போது அவன் மாட்டிக்கொண்டதால் நிம்மதியும்‌.. ஒருங்கே எழுந்தது பெண்களுக்கு.

தட்டுத்தடுமாறி சபேசன் எழுந்து நிற்கவும் காவல் அதிகாரிகள் அங்கு வரவும் சரியாக இருக்க, 

“சார்.. நான் சொன்ன ஆள் இவன் தான். 

இது கம்ப்ளைன்ட் லெட்டர்ஸ்.. உங்களுக்கு தேவையான ஆதாரம் இந்த பென்ட்ரைவ்ல இருக்கு. வேற சாட்சி எதாவது தேவைப்படுமா..?” என கேட்க,

“இதுவே போதும் சார். இந்த மாதிரி பொறுக்கிய வாழ்க்கை ஃபுல்லா ஜெயில்ல களி திங்க வச்சிடலாம்..” என்றவர் அவனின் கையில் விலங்கிட்டு அங்கிருந்து இழுத்து சென்றார்.

“வந்த ஒரு நாள்ல முதலாளிய பேபின்னு கொஞ்ச வச்சவளுக்கு இதெல்லாம் ஒரு விசயமா..? 

 

அவன் கொஞ்சினா தப்பில்ல.. நா பாத்தா தப்பு.. எல்லாம் பணம் பண்ற மாயம்..” என முனங்கிக்கொண்டே,

ரியானையும், சம்யுக்தாவை முறைக்கவும் தவறவில்லை அவன்.

அதை கண்டு கொண்ட ரியான், மீண்டும் ஒரு அடியே பரிசளித்துவிட்டு, 

“எங்க உறவு நிலை பத்தி.. உன்ன மாதிரி கழிசடைங்க கிட்ட விளக்கனுமுன்னு எந்த ——-ம் எனக்கு இல்ல.

உன்கிட்ட ஏதோ தப்பா இருக்குமோன்னு சந்தேகத்தில் தான், நா அந்த இடத்துல சம்யுக்தா எனக்கு எவ்வளவு முக்கியமானவங்கன்னு காட்ட உரிமையா நா கூப்பிட்டேன். 

அப்படி இருந்தும் நீ உன் வேலைய வந்த நாளே காட்ட தயாராகி இருக்கேன்னா.. உன்னை என்ன செய்யலாம்..?” என அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய் பல்லிடுக்கில் கடிந்து கொண்டவன்,

“இனி ஒரு தடவ உன் பார்வை இந்த பக்கம் திரும்புச்சு.. நீ மொத்தமா இல்லாம போயிடுவே.. மைண்ட் இட்..” என்றான் விழிகளில் கொலைவெறி கொண்டு, தன் கீழ் உதட்டை கடித்து விரல் நீட்டி எச்சரித்து.

அதில் சற்று மிரண்டவனின் தலையில் இரண்டு போட்டு போலீஷூம் இழுத்து செல்ல, சற்று நேரத்திற்கு எல்லாம்.. புயல் அடித்து ஓய்ந்த நிலை தான் அங்கே.

அடுத்து இனி.. என்ற சிந்தனையோடு ரியானையே பார்த்திருந்தனர் அந்த இடத்தில் இருந்தவர்கள்.

சம்யுக்தா நடந்த நிகழ்விலிருந்து இன்னும் வெளியேறி இருக்கவில்லை.. என்பது அவளின் வெறித்த பார்வையில் இருந்தே தெரிய, 

“சம்யுக்தா.. நீ முதல்ல போய் சாப்பிட்டு வா..” என சொன்ன ரியானிடம் பார்வையை திருப்பிய சம்யுக்தாவிற்கு சபேசனின் பார்வைக்கான அர்த்தம் இப்போது தான் புரிந்தது போல.

அப்படி ஒரு அவமான உணர்வு அவளுக்கு.. ‘ஒருத்தன் என்னை தப்பா பார்த்திருக்கான்.. அதை கூட உணராம இருந்திருக்கேனே..!’ என்ற எண்ணமே அவளை ஆட்டிப்படைத்தது.

அவளின் எண்ண‌ ஓட்டம் புரிந்தவன் போல, “வயிறு காலியா இருந்தா.. தப்பு தப்பா தான் யோசனை போகும்.. நேத்து எடுத்த விபரீத முடிவு மாதிரி..” என சீண்டலாக பேசியபடி சந்தீப்பிடம் ஜாடையில் கூட்டி செல்லும்படி சைகை காட்ட,

புரிந்து கொண்டவனும், “சம்யுக்தா வா.. நானும் இன்னும் சாப்பிடல.. எனக்கு கம்பெனி கொடு..” என்று சொல்லி கையோடு அங்கிருந்து அழைத்து சென்றான்.

அவள் சென்றதும்,‌ “இங்கே இருக்கறவங்கள்ல சிலரும் அவனால பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு சிசிடிவி ஃபுட்டேஜ்ல தெரிஞ்சது.

நீங்க ஏன்‌ இதை ஆரம்பத்துலையே உங்க ஹச்ஆர் கிட்டையோ.. இல்ல, சந்தீப் கிட்டையோ சொல்லாம விட்டீங்கன்னு எனக்கு புரியல. 

ஓகே.. போனது போகட்டும். இனி உங்களுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வந்தா.. அடுத்த நிமிஷம் நீங்க என்னை நேர்ல மீட் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணலாம்.

எனக்கு இந்த கம்பெனியை விட இங்கே இருக்கறவங்க பாதுகாப்பும், நம்பிக்கையும் தான் முக்கியம்..” என்று முடித்தவன், 

“அன்தென் ஒன்மோர் திங்.. இங்கே எனக்கும், மிஸ். சம்யுக்தாவுக்குமான உறவை பத்தி நீங்க யாராவது தெரிஞ்சுக்கனுமா..?” என்றான் கூர்மையான பார்வையோடு.

அதில் அங்கிருந்தவர்களின் தலை ஒன்று போல மறுப்பாக அசைய, “குட்..” என்றவன் தன் கை கடிகாரத்தை பார்க்க,

அந்த நேரம் சரியாக அங்கே வந்து சேர்ந்தான் வெங்கடேஷ். 

“அண்ணா.. நீங்க சொன்ன படியே என்னோட டீம்ல எனக்கு அடுத்து இருக்கற சாஷித்கிட்ட எல்லா டீட்டெய்லும் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்று மரியாதை தன்மையோடு சொன்னவனை பார்த்து புன்னகைத்த ரியான்,

“இனி உங்க டீமை லீட் பண்ண போறது இவர் தான். உங்களுக்கு அசைன் பண்ணதை நீங்க பாருங்க..” என சொல்லிவிட்டு,

“வெங்கீ.. வா..” என டீஎல்லுக்கான அறைக்கு அழைத்து சென்றவன், 

அந்த ப்ராஜெக்ட் சம்மந்தமான அனைத்து தகவலையும் சொல்லி ஃபைலையும்‌ கொடுத்துவிட்டு,

“இருக்கற டைம் பீரியட்ல முடுச்சிடலாம் தானே..?” எனக்கேட்க,

“ஐ ஹோப் டூ மை லெவல் பெஸ்ட் ண்ணா..” என்றான் தன்னம்பிக்கையுடன்.

“ஆல் தி பெஸ்ட் டா..” என வாழ்த்தியவன், 

“ஈவீனிங் ரிப்போர்ட்டோட கேபின் வா..” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

வெங்கடேஷ் ரியான் படித்த கல்லூரியில் ஜூனியராக இருந்தவன். 

ஏழ்மையான நிலையில் இருந்தவனின் திறமை கண்டு சீனியரான ரியான்‌ அவன் படிப்பதற்காக நிறைய உதவிகள்‌ செய்திருக்கிறான்.

ரியான் பேட்சில்.. ரியான் டாப்பர் ஆஃப் த காலேஜ் என்றால் வெங்கடேஷ் அவன் பேட்சில் டாப்பர். 

சந்தீப் சென்னையில் வேலை பார்த்த இடத்தில் தான் வெங்கடேஷூம் வேலை பார்த்திருக்க, 

ரியான் சொந்தமாக கம்பெனி தொடங்குவது தெரிந்ததும்.. சந்தீப்போடு அவனும் தனது வேலையை விட்டுவிட்டு ரியானுக்கு உதவ இங்கே வந்திருந்தான்.

ஏற்கனவே.. நம்தனா பாடிய தேவதைகள்.. இனி‌ தினமும் வெங்கீயை சுற்றி பாடுவார்களா…?!!!

பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!