Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-8 (1)

8(1)

பின்னே வந்து கொண்டிருந்த வித்யாவை கண்டுகொள்ளாமல் மாறன் கையில் வைஷ்ணவியின் புடவை இருந்த கவருடன் குடிலுக்குள் சென்றான். சென்றவன் அக்சரா மடியில் படுத்திருந்த வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து விட்டான்.

“சித்தப்பூ, இவங்களுக்கு என்னாச்சு?” மாறன் பதட்டமுடன் வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே கேட்டான்.



Advertisement

இளவேலன் கண்ணீருடன் மாறனிடம் ஏதும் கூறாமல் வெளியேறினார்.

Advertisement

“சித்தப்பூ” அவன் அழைக்க, வித்யா நிகிதாவுடன் வந்தாள். பாப்பா அழுது சோர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

Advertisement

வைஷ்ணவி வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

Advertisement

செழியன் சினமுடன், “எல்லாமே உன்னால தான்” மாறனை அடித்தான். வித்யா இருவரையும் பார்த்து நின்று விட்டாள்.

“அவனை விடுங்க.” அக்சரா செழியனை தடுக்க, “மாறா உன்னோட கோபம் அளவில்லாமல் போகுது. உன்னோட கடுமையான வார்த்தைகளால் தான் இவங்க வீட்டை விட்டு வந்தாங்க. இப்ப வைசுவின் இந்த நிலைக்கு நீயும் ஒரு காரணம். வீட்டிலே இருந்திருந்தால் இவ்வாறு ஏதும் நடந்திருக்காது” சீற்றமுடன் மீண்டும் மாறனை அடிக்க பாய்ந்தான் செழியன். இம்முறை சுப்ரியாவும் அக்சராவும் சேர்ந்து செழியனை பிடித்து இழுத்தனர்.

மாறனிடம் வந்து கவரை வாங்கி விட்டு, சீனியர் தீரன் சார் சொல்லியும் நாங்கள் தான் கேட்கலையே! எங்கள் மீதும் தவறிருக்கு.

நீ என்ன சொன்னாலும் வைசு.. மாறா உங்களை பற்றி மட்டும் தவறாக எண்ணவில்லை. நம்ம வீட்ல எல்லாரையும் அண்ணாவையும் சேர்த்து தான் பேசி இருக்கான்.

“அண்ணா” மாறன் சினமுடன், “உங்களை எப்படி தவறாக பேசுவேன்?” பெண்கள் மூவரும் அவனை பார்த்தனர்.

“அக்கா, நீ மாத்து. நான் வெளிய இருக்கேன்” சுப்ரியா செல்ல, செழியன் வெளியே செல்ல அவன் பின்னே மாறன் வைஷ்ணவியின் தலைக்காயத்தில் இடப்பட்ட பிளாஸ்டரை பார்த்துக் கொண்டே சென்றான்.

சுப்ரியா வித்யாவை பார்த்துக் கொண்டே நேராக இளவேலன் அருகே சென்று அமர்ந்தாள். வித்யா செய்வதறியாது நிற்க, செழியன் அவளிடம் வெளியிலிருந்து வந்து நிகிதாவை வாங்க “பேபி நிக்கி” அழுதாள்.

தன் இரு கைகளாலும் அவளை தூக்கி பார்த்து வேடிக்கை காட்டினான் செழியன். வித்யா அவர்களை பார்த்துக் கொண்டே இளவேலனிடம் சென்றாள்.

உன் உதவிக்கு நன்றிம்மா..

“இருக்கட்டும் அய்யா” அவள் சுப்ரியாவை பார்த்தாள்.

ஹம்ம்…அம்மாடி, இவங்க சுப்ரியா. உங்களது பள்ளியில் தான் சேரப் போறாங்க..

அப்படியா? ஹாய்..ஐ அம் வித்யா..

“ஹாய்…ஐ அம் சுப்ரியா. நைஸ் டூ மீட் யூ” கையை நீட்டினாள். வித்யா அவள் கை குலுக்கி “நைஸ் டூ மீட் யூ” என்று மாறனை பார்த்தாள். சுப்ரியாவும் இளவேலனும் மாறனை திரும்பி பார்த்தனர். அவன் இவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுந்தரம் அங்கிள் பொண்ணும்மா சுப்ரியாவிடம் சொல்ல, ஓ..உன்னோட அம்மா வரலையா? சுப்ரியா கேட்டாள்.

எனக்கு அப்பா மட்டும் தான்.

எனக்கு அம்மா இருந்தாங்க என்று அவள் கண்கலங்க இளவேலனை பார்த்தாள். அவர் அக்கா தான இவளின் அம்மா. அவள் இழுத்து தன் மீது சாய்த்து, எதை நினைத்தும் கவலைப்படாதம்மா. அதான் நாங்க இருக்கோம்ல்ல?

அய்யா..நான் கிளம்புறேன்.

இல்லம்மா, இரவாகிடுச்சி. ஏலேய் செழியா என்ன செய்யுற?

வேண்டாம்ய்யா, நான் போய்ப்பேன் என்று சுப்ரியாவிடம் கையசைத்து சென்றாள் வித்யா.

“பரவாயில்லை பள்ளியில் சேரும் முன் நண்பியை பிடிச்சுட்ட? அக்சரா கேட்டு பெருமூச்சுடன் எனக்கு எப்படி அமையப் போகுதோ?”

செழியன் அவளை பார்த்து, “ஐய்யோ..உன்னை தோழியா பிடிச்சிட்டு யார் என்ன கஷ்டப்படப் போறாங்களோ?” கேலி செய்தான்.

வீட்டுக்கு வாங்க சார். உங்களுக்கு இருக்கு..

இளவேலன் புன்னகைத்தார்.

“எதுக்கு இப்படி முழிக்கிற?” செழியன் கேட்டான்.

“கட்டிகிட்டவங்க தான் இப்படி பேசுவாங்க” சுப்ரியா சிரித்தாள்.

“என்னது இவளை கட்டிக்கிட்டு நான் லோல் படவா? மை காட்..” தலையில் கை வைத்தான் செழியன்.

“ஹலோ…என்னை விட பேசுற பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க” செழியனை முறைத்தாள்.

“இவனுக செட் ஆகிட்டானுகளோ!” மாறனுக்கு எண்ணம் சென்றது.

வைஷ்ணவியை பார்த்து எழுந்து, “அம்மாடி தீரா உங்களை கோவிலுக்கு அழைச்சிட்டு வர சொன்னான். போகலாமா?” இளவேலன் கேட்க,

ம்ம்ம்! என்று அமைதியாக பாப்பாவை வாங்கினாள்.

“செழியா நீ பைக்கை எடு. நாம கிளம்பலாம். அவன் காரை ஓட்டி வரட்டும்” இளவேலன் சொல்லி முடிக்க மாறன் காரில் ஏறினான்.

“ஏதோ மதுரவீரன் கதை சொல்வாங்களாமே!” சுப்ரியா மாறனை பார்த்தாள்.

ம்! என்று மாறன் அடிக்கடி வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே வந்தான். நால்வரும் அவனை கவனித்தனர். யாரும் ஏதும் பேசவில்லை.

திருவிழா நடக்கும் இடத்திற்கு வரவும் காரை நிறுத்தி வைஷ்ணவியை பார்த்தான் மாறன். அவள் சோர்ந்து இருந்தாள்.

வைஷ்ணவி பக்கம் திரும்பி, “என்னை மன்னிச்சிருங்க. நான் பேசக் கூடாததை தான் பேசிட்டேன். அண்ணா சொல்லும் வரை நீங்க எங்கேயும் போக வேண்டாம். என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை?” தொண்டை அடைக்க மாறன் பேசினான்.

சுப்ரியா வெளியே வேடிக்கை பார்க்க, அக்சரா அவனை ஆழ்ந்து கவனித்தாள்.

வைஷ்ணவி குழந்தைக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டே, “மன்னிப்பு எளிதான வார்த்தை. உங்க அண்ணனுக்காக மன்னிக்கிறேன். ஏன்னா அவர் தான் என்னை காப்பாற்றினார். அவர் வரலைன்னா என் நிலை?” சுப்ரியா அவள் அக்காவை பார்த்து அவள் வாயசைப்பதை பேசினாள்.

வைஷ்ணவி கண்ணீருடன் வெளியே பார்த்தாள். மாறன் முன்னே திரும்பி கண்கலங்கி அவளை கண்ணாடி வழியே பார்த்தான்.

ப்ளீஸ் அழாதீங்க. இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை. அவன் யாரு? எதுக்கு உங்களை கொல்ல நினைக்கிறான்னு மட்டும் தான் சிந்தித்தேன். ஆனால் அவன் எண்ணம் இவ்வாறாக இருக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பாரவில்லை. ஐ அம் சாரி..

சுப்ரியா பேசினாள்.

“கோபம் எல்லாருக்கும் வருவது தான். அதை கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கப் பாரு. அது உன் வாழ்க்கையையே அழிக்கும்” என்று மாறனை பார்த்தான். எப்போதும் அவளுடன் சண்டைக்கு நிற்கும் அவன் அமைதியாக இருந்தான்.

“அக்கா, உன்னை மன்னிச்சிட்டாங்க. நீ கிளம்பு” சுப்ரியா சொல்ல, மாறன் வைஷ்ணவியை பார்த்தான்.

ஆம், அவள் தலையசைத்தாள். அவனுக்கு மேலும் கண்ணீர் வந்தது. அவனுக்கு வைஷ்ணவியை பிடித்து விட்டது. காரை செலுத்தினான்.

வித்யாவை மனதில் எண்ணிய சுப்ரியா, “எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கியோ?” மாறனிடம் கேட்க வந்த வாயை பொத்திக் கொண்டு அவனை பார்த்தாள். அவனும் அவளது உதட்டசைவில் அதனை கண்டு விட்டான். ஆனால் ஏதும் பேசவில்லை.

“ஆத்தாடி பாக்குறானே!” என்று வெளியே பார்த்தாள். மதுரவீரன் கதை கூறும் இடத்திற்கு வந்து காரை நிறுத்தினான் மாறன்.

“அக்கா, நான் முன்னால உட்காரவா? மூச்சு முட்டுது?” சுப்ரியா கேட்க, “ஏன் சரியா தெரியலையா?” அக்சரா கேட்க, “ஆமா..ஆமா..” தலையை அசைத்தாள்.

“இது எங்க மதுரைவீரனோட உண்மைக்கதை கேளுங்க” என்றான் மாறன்..

“ஓ! உண்மையிலே நடந்ததா?” காரை திறந்து முன் அமர்ந்து கன்னத்தில் இரு கைகளையும் ஊன்றி கதை கூறத் தொடங்க இருக்கும் பெரியவரை கண்ணை விரித்து பார்த்தாள் சுப்ரியா. அவள் செய்கையை பார்த்த மாறனிடம் ஓரப்புன்னகை வந்து சென்றது.

வீரத்திற்கு புகழ்பெற்ற நம் மதுரை மாநகரில் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தான் நம்ம குலதெய்வம் மாவீரன் மதுரைவீரன்.

பெரம்பலூரின் கோனேரி பட்டினம் தற்பொழுதைய கோனேரிப்பாளையத்தை பொம்மநாயக்கன் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரின் வேலையாள் தான் சின்னாளும் அவர் மனைவியும். நம் மதுரைவீரனின் பெற்றோர்கள்.

சிறுவயதிலிருந்தே வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்குபவர்  மதுரைவீரன். அஞ்சா நெஞ்சினர்.

அப்பொழுது பொம்மநாயக்கரின் மகள் பொம்மி பருவமடைந்தார். அவர்கள் வழக்கப்படி அவ்வரச குல பெண்கள் பருவமடைந்தால் முப்பத்து இரண்டு நாட்கள் எந்த ஆண்மகன் கண்ணிலும் படாமல் காட்டில் குடில் அமைத்து  தங்க வைப்பார்கள். முதல் நாள் தங்கி மறுநாள் குடிசையை எறித்து மறு தான் குடிசை அமைத்து தங்க வைப்பாங்க.

பொம்மியையும் தங்க வைத்திருந்தனர். பொம்மிக்கு காவலாக மதுரைவீரனின் தந்தை சின்னாள் தான் இருந்தார். இப்படியே முப்பது நாட்கள் கழிந்தது. முப்பதாவது நாள் மதுரைவீரனின் தந்தைக்கு உடல்நலமில்லாது போனது. அதனால் இளவரசியை தான் கவனித்துக் கொள்வதாக மதுரைவீரன் தன் தந்தையிடம் கேட்டார்.

வீரா, “ஆண்வாசம் படக்கூடாது என்று தான் இளவரசியை இங்கே பாதுக்காக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீயோ இளவட்ட ஆண்மகன். நீ இங்கே வந்தது தெரிந்தால் கூட அரசருக்கு கோபம் வரும். பிரச்சனையாகும்..வேண்டாம்”  மறுத்தார்.

தந்தையே! நீங்கள் உடல்நலமில்லாத போது உங்களால் சரிவர பாதுகாக்க முடியாது. உங்களை போலவே இளவரசியை பாதுகாப்பேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து இளவரசி பொம்மிக்காக குடிசைக்கு வெளியே காவல் காத்து நின்றார் மதுரைவீரன்.

அன்றிரவு கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இரவு ஒதுங்க இடமில்லாமல் இளவரசியிடம் குடிலில் இடம் கேட்டார் மதுரைவீரன்.

“ஆண்கள் என்னை பார்க்கக்கூடாது என்பதற்காக தான் திரையமைத்து பாதுகாப்பாக தங்க வச்சிருக்காங்க. என்னால இடம் தரமுடியாது” பொம்மி மறுத்து விட்டார்.

பின் சூழ்நிலையை கவனித்த பொம்மி மனம் மாறி குடிலுக்குள் மதுரைவீரனை தங்க வைத்தார்கள். திரைக்கு மறுபக்கம் இருக்கும் மதுரைவீரனை பார்த்து பொம்மி காதல் வசப்படுகிறார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

முப்பத்து இரண்டு நாள் பருவமடைந்த சடங்குகள் முடிந்து பொண்ணை அழைத்து செல்ல, பொம்மியின் தந்தை பொம்மநாயக்கர் தன் சேனைகளுடன் காட்டிற்குள் வந்தார்.

பொம்மி அவள் கையிலிருந்த மணிவிளக்கை மதுரைவீரன் கையில் கொடுத்தததை கண்ட பொம்மநாயக்கருக்கு இருவரும் காதலிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அரண்மனைக்கு அழைத்து சென்று வேறு வரன் பொம்மிக்கு பார்க்கிறார்.

அதே சமயம் வீரனையும் யானை மிதித்து கொல்ல ஏற்பாடும் செய்கிறார். இதை கேள்விப்பட்ட பொம்மி சரியான நேரத்தில் அவ்விடம் சென்று வீரனை காப்பாற்றி அவருடன் சேர்ந்து இவளும் தப்பி செல்கிறாள்.

பொம்மநாயக்கர் திருச்சி மன்னரிடம் உதவி கேட்கிறார். அவர் சேனைகள் பொம்மி, வீரனை பிடித்து மன்னர் முன் நிற்க வைத்தனர்.

“சாதி காரணமாக எங்களை எங்க குலத்தவர்கள் சேர விடாமல் செய்கிறார்கள். எங்களுக்கு உதவுங்கள்” பொம்மி அவரிடம் உதவி கேட்டார்.

சாதியை பொருட்படுத்தாமல் இவர்களின் காதலுக்காக திருச்சி மன்னர் மதுரைவீரன்- பொம்மிக்கு திருமணம் செய்து வைக்கிறார். வீரனின் திறமையை பார்த்து திருச்சி மன்னர் வீரனை அவரின் படைத்தளபதியாக நியமிக்கிறார். பொம்மியும் மதுரைவீரனும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.

மதுரை அழகர்மலை சங்கிலிகருப்பன் கொள்ளைக்கூட்டத்தினர் அட்டகாசம் செய்கிறார்கள் என்று மதுரை திருமலைநாயக்கர் திருச்சி மன்னரின் உதவியை நாடினார். திருச்சி மன்னர் வீரனை மதுரைக்கு அனுப்புகிறார். வீரனின் திறமையும் அவரின் மனதும் திருமலைநாயக்கருக்கு மிகவும் பிடித்து போயிற்று. சங்கிலி கருப்பன் கொள்ளைக்கூட்டத்தினரிடமிருந்து மதுரை மக்களை திறமையுடன் பாதுகாக்கிறார் வீரன்.

திருமலைநாயக்கரின் அரண்மனையில் வெள்ளையம்மாள் நாட்டியப் பெண்மணியாக வலம் வருகிறார்கள். அவரை திருமலை நாயக்கருக்கு மிகவும் பிடிக்கும்.

வீரன் கொள்ளையர்களை பிடிக்க கடுமையான சட்டதிட்டத்தை உருவாக்கினார். அதில் முக்கிய சட்டமானது…

பொதுமக்கள் இரவு நேரம் வீதியில் உலாவக் கூடாது என்றும் உலாவினால் கை, கால்கள் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் யாரும் இரவு வீதியில் உலாவுவதில்லை.

நாட்டியமாடும் வெள்ளையம்மாள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். வீரன் அவர்களை தடுத்து நிறுத்தி வெள்ளையம்மாவின் மானம், உயிரை காப்பாற்றுகிறார். வெள்ளையம்மாள் வீரன் மீது காதல் வசம் கொள்கிறார்.

அவ்விசயம் அரசல்புரசலாக திருமலைநாயக்கர் காதில் விழுகிறது. வீரன் மீது அவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக பத்து நாளைக்குள்  திருடர்களையும், அக்கூட்டத் தலைவனையும் அவர் முன் நிறுத்த வீரனுக்கு கெடு வைக்கிறார்.

வீரன் மாறுவேடமிட்டு திருடனை பிடிக்க செல்கிறார். திருடனையும் அவர்கள் திருடிய பொருட்களையும் கைப்பற்றி தன் வீட்டில் அவர்களை வைத்துக் கொள்கிறார். மறைந்திருக்கும் தலைவனையும் சேர்த்து அரசரிடம் ஒப்படைக்க எண்ணி அவர் செய்தார்.

வீரன் வெள்ளையம்மாள் வீட்டின் வழி செல்லும் போது திருமலைநாயக்கர் வெள்ளையம்மாவிடன் தவறாக நடக்க கட்டாயப்படுத்துகிறார். இதனால்  வெள்ளையம்மா தற்கொலை செய்ய எண்ணுகிறார். அவரை காப்பாற்றி வீரன் அவரை தன் மனைவியாக்கி கொள்கிறார். இதனால் வீரன் மீது மேலும் வஞ்சம் கூடியது திருமலை நாயக்கருக்கு.

கொள்ளையர்களின் தலைவர் சங்கிலி கருப்பனை தேடி செல்கிறார் வீரன்.

வீரன் வீட்டில் திருடர்களும், அவர்கள் திருடிய பொருட்களும் இருப்பதை பார்த்து அவர் தான் திருடர்களை பாதுகாக்கிறார் என்று தவறாக எண்ணிய திருமலைநாயக்கர் வீரனை மாறுகை, மாறுகால் வாங்க கட்டளையிடுகிறார்.

மதுரையை காக்க வந்த தன் கணவன் மீது பழி சுமத்தியதை அறிந்த மனைவிகள் கண்ணகிகளாக திருமலை நாயக்கர் முன் வந்து இருவரும் வாதாடி கொலைக்களத்திற்கு செல்கின்றனர். மன்னரும் உண்மையை அறிந்து பதட்டமுடன் வருகிறார். ஆனால் அதற்குள் வீரனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரின் ஒரு கை, கால் வெட்டப்பட்டு துடிதுடித்து இறந்து போகிறார் வீரன். கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவிகளும் அவ்விடமே உயிரை துறக்கிறார்கள்.

தன் தவற்றை உணர்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரனையும் அவர் மனைவிகளையும் தெய்வமாக வழிபடுகிறார்.

மதுரையை காக்க வந்த வீரனை கொலை செய்ததால் மீனாட்சி அம்மன் மதுரையை அழிக்க எண்ணியதாகவும், வீரன் அம்மாவை தடுத்ததாகவும் வரலாறுகள் கூறப்படுகிறது. அதனால் மீனாட்சி அம்மன் கோவிலில் அவருக்கு காவலாக கிழக்கு கோபுர வாசலில் கம்பத்தடி வீரனாக காட்சியளிக்கிறார் மதுரை வீரன்.

சிறந்தவீரன் மதுரைவீரன்.

வீரனாக மட்டுமல்லாது சாதியை ஒழிக்கவும் போராடி இருக்கிறார் நம் மதுரைவீரன்.

உயிரோட இருந்து மதுரையை காவல் காத்ததை போல இறந்தும் காவல் காத்துக் கொண்டு வருகிறார்.

காதலுக்கும் வீரத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்து பொம்மியம்மன் வெள்ளையம்மனோட நம் ஊரில் காட்சியளிக்கிறார் நம் குலதெய்வம் மதுரை வீரன்.

இன்று கூட நம் திருவிழாவின் போது ஒரு பெண்ணின் மானத்தை காக்க மதுரைவீரன் வந்தார் பெரியவர் சொல்லி முடிந்தார்.

மதுரைவீரனா? அதிர்ந்து விட்டாள் வைஷ்ணவி.

வாயசைத்த அவளை பார்த்த மாறன் சுப்ரியாவை பார்த்தான். அவள் சீட்டில் ஓய்யாரமாக சாய்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

கார் ஹாரனை அழுத்தினான் மாறன்.

பதறி “அய்யோ! வீரா என்னை ஏதும் செய்திடாதீங்க!” கத்தினாள்.

அவள் பதறியதை பார்த்து அவளது சகோதரிகள் பயப்பட, மாறன் முதன் முறையாக கலகலவென சிரித்தான். கண்ணை திறந்து அவன் சிரிப்பதை பார்த்து தன் சகோதரிகளை பார்த்தாள் சுப்ரியா.

“அக்கா, நான் உன்னிடம் பேசாததற்கு காரணம் இருக்கு. அதுக்காக அந்த வீரன் என்னை கொல்ல வர்றார்” அவள் கண்ணை உருட்டி பயந்து பேசினாள்.

மற்றவர்கள் பேசும் முன்..அ..அ..அ..அ…அ..தெ…தெ…தெ..ல்லா..ல்லா…ம்ம்ம்ம்ம்ம் ஒ..ஒண்ணு…மி…மி..ல்ல்ல்…லை..வைஷ்ணவி திக்கி திக்கி பேச மூவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

“அக்கா, நீ பேசிட்ட” சுப்ரியா கார் கதவை திறந்து வைஷ்ணவி அருகே மகிழ்ச்சியுடன் அமர்ந்தாள்.

“நீ பேசுற..வைசு..நீ பேசுற..” அக்சரா சொன்னதையே சொல்லி கண்கலங்க, “எப்படி? எப்படி?” கேள்வியுடன் வைஷ்ணவியை பார்த்தாள்.

தீ..தீ..தீரன்…சார்…அ..அ..அவர் தான் அ..அவ..அவ..னி..டமி..ரு..ந்து காப்பா..த்…து…னாரு..கண்ணை மூடி திக்கி சொல்லி, வீ..ரன் அ…அ…அல்ல…முடித்தாள்.

“அண்ணாவா?” மாறன் கேட்டு விட்டு, அவர் மீது மதுரைவீரன் வந்திருந்தார். எனக்கு நன்றாக வித்தியாசம் தெரிந்தது..

இ…இ..ல்…ல..அவரு..தா..தா..ன்..உறுதியாகவும் திக்கியும் மாறனிடம் சொன்னாள்.

சத்யா தன் சித்தப்பூ கையிலிருந்ததை வாங்கி சென்றதும், அவன் அண்ணாவுடன் அவன் இருந்ததும் மாறனுக்கு நினைவு வந்தது.

அப்படின்னா மதுரவீரன் உங்களை காப்பாற்றலை.அண்ணா தான் காப்பாற்றினார்..

ம்ம்..அவள் தலையசைத்தாள்.

இது அந்த மதுரவீரன் கதையோட லிங்க் ஆகுதுக்கா. வெள்ளையம்மாள் நிலையில் நீயிருக்க மதுரைவீரன் கிளம்பி இருக்கார். ஆனால் சத்யா அண்ணா தான் அங்கிள் கையிலிருந்து எதையோ வாங்கி சென்று ஏதோ செய்து மதுரைவீரன் செய்யக் கூடாதுன்னு நினைச்சிருக்கார். அவருக்கு இந்த கதை முன்பே தெரியுமா? அக்சரா பேசினாள்.

“அந்த போலீஸ்காரன் உங்களை போல சென்னையில வசித்தவர். அவருக்கு எப்படி எங்க மதுரைவீரன் கதை தெரியும்?” மாறன் கேட்டான்.

அங்கேயும் மதுரவீரன் கோவிலெல்லாம் இருக்கு. அதனால கூட தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு அக்சரா கூறினாள்.

இருக்கா? மாறன் அவளை பார்த்தான்.

“அக்கா, நீ இதே போல பேச முயற்சிக்கணும்” அக்சரா சொல்ல, தலையை மட்டும் ஆட்டினாள் வருத்தமுடன்.

“அக்கா, நீ எதையும் தேவையில்லாமல் யோசிக்காத” சுப்ரியா வைஷ்ணவியை தேற்ற முயன்றாள்.

அவன் யாருன்னு நீங்க பார்த்தீங்களா? மாறன் கேட்டான்.

பார்த்தேன். ஆனால் அவன் யாருன்னு தெரியல. அவன் சிறுவயதிலிருந்தே உங்க அண்ணனுடன் பழகியவன் போல பேசினான்.

அண்ணனுடனா? மாறன் தவறாக மகி குடும்பத்தை எண்ணினான்.

எனக்கு என்னமோ இவன் எங்க ஊருக்காரன் போல இல்லை. உங்க ஊருக்காரன் போல இருக்கான்.

“என்னது உங்க ஊருக்காரன்? மாறன் கேட்க, அடக்கடவுளே இவ சொன்னா அவனுக்கு சந்தேகம் வந்து நாங்க அவனோட குடும்பம்ன்னு தெரிந்து விடுமே!” அக்சராவும் சுப்ரியாவும் பார்த்துக் கொண்டனர்.

வெளியே சலசலப்பு சத்தம் கேட்டது. மாறன் எட்டி வெளியே பார்த்தான்.

ராதிகா அழுது கொண்டிருந்தார். சத்யா சினமுடன் ரூபினி அப்பாவின் சட்டையை பிடித்தான். அவர் சீற்றமுடன் அவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்தார். இதை கண்ட அக்சரா வேகமாக இறங்கி ஓடினாள்.

“இவங்க எதுக்கு இறங்குறாங்க? பிரச்சனைன்னா அண்ணா என்னை ஒருவழி செய்திடுவான்” மாறன் சொல்லிக் கொண்டே “இருவரும் இறங்காதீங்க” என்று அக்சரா பின் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!