Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 19

பகுதி 19

முகுந்த்.. தந்தையையே ஏக்கமாய் பார்த்திருக்கும் நேரம் கதவு திறந்து.. அதனருகே நின்ற புதிய முகத்தை கண்டு பிள்ளையின் புருவம் சுருங்க அவரையே பார்த்திருந்தான்.



Advertisement

அடுத்த வாய் உணவு கொடுக்கவென நிமிர்ந்து முகுந்த் முகத்தை பார்த்த சம்யுக்தா அதை கண்டு யோசனையோடு திரும்ப, 

அங்கே நின்ற அமிழ்தினியாளை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த விழியிலேயே தெரிந்தது.

Advertisement

Advertisement

அவள், “எந்த மருத்துவமனை..?” என விசாரிக்கும் போது கூட, ‘சாதாரண விசாரிப்பு..’ என நினைத்து மட்டுமே சொல்லியிருக்க இந்த நேரத்தில் வந்து நின்றவளை கண்டு திகைப்பே.

“அக்கா..! நீ எப்படி இந்த நேரத்துல..? உள்ள வாக்கா..” என்றபடியே எழ,

Advertisement

அதுவரை மனதால் ரியானை வருத்துக்கொண்டு இருந்த இனியாளோ.. குழந்தை தன்னை யோசனை வழியும் கண்களோடு புருவமும்.. சுருக்கி பார்த்த அழகில் மயங்கி நிற்க.. தங்கையின் அழைப்பில் உள்ளே கட்டிலருகே வந்தாள்.

சம்யுக்தா அழைப்பில் தான் வெங்கடேஷூம், ரியானும் அந்த பெண்ணையே பார்த்தனர்.

“சம்யூம்மா.. நீ தானே முகுந்துக்கு உடம்பு முடியாம அட்மிட் பண்ணியிருக்குன்னு சொன்னே.. அதான்..” என தங்கையிடம் பேசினாலும், கண்கள் முகுந்தையே தலை முதல் கால் வரை அளவிட்டு கொண்டிருந்தது ஆதுரமாய்.

“ஆமா சொன்னேன் தான்.. அதுக்காக இந்த நேரத்துல நீ வரனுமா..? 

அது சரி, வெண்பா குட்டி எங்கே..? அம்மா எப்படி தனியா உன்னை இந்த நேரத்துக்கு விட்டாங்க..?” என வரிசையாய் கேட்க,

“பாப்பா தூங்கிட்டா சம்யூ. அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்..” என்றவளின் பார்வை இன்னமும் குழந்தை மீதே.

“அப்படி என்ன அவசரம் அக்கா. நாளைக்கு வந்து பார்த்திருக்கலாமே..? 

திடீர்ன்னு அவ முழிச்சு நீயும் நானும் இல்லன்னா அழுவாளே..” என்று சொல்ல,

“அதெல்லாம் நல்லா தூங்கிட்டா. உனக்கு தான் தெரியுமே.. தூங்கிட்டா யாராவது பக்கத்துல இருக்கற வரை அவ்வளவு சுலபமா விழிக்க மாட்டான்னு. 

அதனால தான் அம்மா ரூம்ல அவள படுக்க வச்சிட்டு வந்தேன்..” என்றவள் முகுந்த் அருகே அந்த மெத்தையில் அமர்ந்தாள்.

அதுவரையிலும் அக்கா.. தங்கை இருவரின் உரையாடலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த முகுந்தை கண்டு புன்னகைத்த இனியாள்,

“ஹாய் கண்ணா.. நா அமிழ்தினியாள். உன்னோட பேபியோட அக்கா..” என இனிமையாய் சொல்லி அவனின் சுருண்டு அடர்ந்திருந்த கூந்தலை கோதிவிட..

ஒரு நொடி சுகமாய் சொக்கி போனது குழந்தை பூ முகம். 

அதுவரை இருந்த சோர்வு போன இடம் தெரியாமல்.. அழகாய் மலர்ந்த முகத்தோடு இதழ் பிரித்து கன்னக்குழி தெரிய புன்னகை பூத்தான் அந்த மாயக்கண்ணனும்.

அந்த புன்னகை அவன் விழியிலும் பளிச்சிட இதுவரை காணாத பாவமாய் இருந்தது அது.

சகோதரிகள் இருவரின் உரையாடலில் மகனை போல தந்தையும் இவர்கள் பக்கம் பார்த்திருக்க.. 

மகனின் விழி காட்டிய மகிழ்ச்சியை கண்டு நிம்மதியோடு, “போச்சு.. இன்னும் பார்க் விசயத்தையே எப்படி சமாளிக்கன்னு தெரியல.. 

இதுல இவங்கள இவன் பார்க்கறதை பார்த்தா.. கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு போலாமுன்னு சொல்லிடுவானோ..?!” என பதட்டமும்.. பயமும்.. இப்போதே ரியானை வாட்டத்தொடங்கியது.

சிரிப்போடு கை உயர்த்தி, “ஹாய்..” என்ற பிள்ளையை நெருங்கி.. 

அவனின் சுருள் கூந்தலை ஒதுக்கி பிறை நெற்றியில் இதழ் ஒற்றி விலகிய இனியாள், 

“சாப்பிடுறீங்களா..தங்கம். நான் கொடுக்கவா..?” என அன்பான புன்னகையோடு கேட்ட நொடி,

அவசரமான சரியென்ற உற்சாக தலையாட்டல் பிள்ளையிடம்.

அதில் உள்ள ஆர்வத்தை உணர்ந்த பெண்கள் இருவருக்கும் புன்னகையே. 

ரியானுக்கோ.. மானசீகமாய் தலையில் கைவைத்து நிற்கமட்டுமே முடிந்தது அப்போது. 

“சம்யூ.. இரு நா ஹேண்ட் வாஸ் பண்ணிட்டு வந்து நானே தங்கக்குட்டிக்கு கொடுக்கறேன்..” என்றவள், 

“கண்ணா.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. சரியா..?” என கொஞ்சும் குரலில் சொல்லி, 

அங்கிருந்து விலகியவள் அறையை சுற்றி பார்த்துவிட்டு.. அனுமானித்த படி ஒரிடம் சென்று, 

அங்கிருந்த சேனிடைஷர் கொண்டு கைகளை நன்றாக கழுவிக்கொண்டு பிள்ளையை நோக்கி வந்தாள்.

அதுவரை அவளின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த ரியானுக்கு யோசனையில் புருவம் சுருங்கியது. 

அடுத்து இனியாளின் செய்கையில், “போச்சுடா..” என்ற நிலை தான் ரியானுக்கு.

இனியாளின் செய்கை ஒரு விதத்தில்.. பார்க்கில் உணவு ஊட்டும் பெண்ணை குறிப்பால் உணர வைக்க, 

யோசனையோடு இருந்தவன் கண்களை மூடி அந்த உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தான். 

அவன் எங்கே அவளை உற்று பார்த்தான்..?

முதல் நாள் மகன் காட்டியதில் பார்த்த அந்த நிழல் உருவமே திரும்ப மனக்கண்ணில் வர, 

முயன்று யோசித்ததில் நீண்ட பின்னலும், சுடிதார் அணிந்திருந்த பெண்ணின் உயரமும்.. ஓரளவு இந்த பொண்ணோடும் ஒத்து போனாலும் உறுதிபடுத்த முடியாமல் இருந்தவன் காதில், 

“என்ன சம்யூம்மா.. இப்படியா ஓப்பனா வச்சிட்டு கொடுப்பே..? 

என்ன தான் ஹாஸ்பிடல் க்ளீனா தான் இருக்குமுன்னாலும், ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கற குழந்தைக்கு இன்னும் பக்குவமா கொடுக்க வேணாமா..? 

பாரு.. வாட்டர் பாட்டில் ஓப்பன்ல கிடக்கு..” என தங்கையை திட்டிக்கொண்டே, 

அக்கறையாய் எல்லாம் ஒழுங்கு செய்துவிட்டு, கட்டிலை நிமிர்த்தி.. அதில் சாய்ந்தபடி அமர வைக்கப்பட்டிருந்த குழந்தையை.. அவனுக்கு வலிக்காத வண்ணம் பட்டிலும் மென்மையாய் அள்ளி மடியில் வைத்தவள், 

அந்த உணவை குழந்தை வாயருகே கொண்டு செல்ல, ஆசையாய் வாய் திறந்த பிள்ளை கண்களோ காரணமின்றி(?!) கலங்கி போனது.

ஏற்கனவே ஓரளவு ஊகித்த விசயத்தை.. தெளிவாக்கி கொள்ள இதுவரை வாய் திறக்காமல் இருந்த

ரியான், “பேபி.. நீங்க எந்த ஏரியால ஸ்டே பண்ணியிருக்கீங்க..?” எனக்கேட்க,

“என்ன பாஸ்.. இத்தனை நாள் உங்க கிட்ட தானே என் பயோ இருக்கு.. அதுல பார்க்கலையா..?” என அவனின் அவதி புரியாமல் விளையாட்டாய் கேட்க,

‘அய்யோ.. இவ வேற..’ என மனதில் புலம்பியவன், 

“கவனிக்கல பேபி.. இப்ப சொல்லேன்..” என்றான் கெஞ்சல் என்று அப்பட்டமாக தெரியாமல் காத்து. 

அவள் குறிப்பிட்ட ஏரியாவே.. அவனின் யூகம் சரியென அப்பட்டமாக சொன்னது.

இருந்தும் “அங்கே எந்த ப்ளேஸ்..?” என்றிட, 

“என்னாச்சு பாஸ்.. எங்களை வீட்டுல விடறதுக்கு கேப் எதாவது புக் பண்ணறீங்களா..? 

நோ ப்ராப்ளம்.. ஐ வில் மேனேஜ்..” என்றாள் அவனின் நிலை புரியாமல்.

வெளிப்படையாக அவளை திட்டக்கூட முடியாமல் தவித்தவன், “கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லேன்..?” என்றான் பல்லைக்கடித்து.

அவனின் முகத்தை வைத்து.. ‘ஏதோ சரியில்லை..’ என்பதை கண்டு கொண்ட வெங்கடேஷ்,

“சதா.. ஒழுங்கா உன் ஃபுல் அட்ரஸ் சொல்லு..” என்றான் கண்டிப்பான குரலில்.

அவனை யோசனையோடு பார்த்த போதும் அவளின் வாய் தன்னால் அதை சொல்லி கொண்டிருந்தது.

அவள் முடித்ததும்.. பெரு மூச்சு ஒன்றை வெளியிட்ட ரியான் தளர்ந்து இருக்கையில் அமர்ந்தான்.

எதை எதிர்பார்த்திருந்தாலும் இதை அவன் எதிர்பார்க்கவே இல்லையே.. என்ற அயர்வு கொடுத்த தளரச்சி அது.

அவள் சொன்னதை கேட்ட வெங்கடேஷ், “ஹேய் சதா.. அப்போ நீ பாஸோட வீட்டு பக்கத்துல தான் இருக்கீயா..? 

இத்தன நாள் எப்படி தெரியாம போச்சு..! 

ஒரே என்ட்ரன்ஸ் தானே அங்கே. எதேச்சையா கூட பார்த்துக்கலையா.. நீங்க..?” என்றான் ஆரவாரமாக.

அதுவரை நடந்த உரையாடல் காதில் விழுந்தாலும், அதுபற்றி பெரிதாக சிந்திக்காமல்.. உணவை ஊட்டுவது ஒன்றே குறி.. என்பதாய் குழந்தையோடு மென்குரலில் பேசிக்கொண்டிருந்த இனியாள் விலுக்கென நிமிர்ந்தாள்.. வெங்கடேஷ் சொன்ன விசயத்தில்.

அதுவரை ரியானை நிமிர்ந்து என்ன.. அப்படி ஒரு ஜிவன் அங்கு இருப்பதையே காணாதவள் போல தங்கையுடனும்.. பிள்ளையுடனும்.. மட்டும் பார்வையை பதித்து பேசிக்கொண்டிருந்தவளுக்கு, இது அதிர்ச்சியான தகவல் தான். 

அதுவரை பார்க்காமல்.. வெறுப்போடு தவிர்த்தவனை.. சில நொடி எனினும் பார்த்தவளின் முகத்தில் நிச்சயமாக சினேகபாவம் மட்டும் இல்லை. 

அதோடு அவளின் விழிகளில் ஒரு வித கடுப்பும் தெரிய சிந்தனை வயப்பட்டான் ரியான்.

‘சம்திங் ஃபிஷி.. அந்த பொண்ணுக்கு என்ன என்மேல அம்புட்டு காண்டு.. இந்த பார்வை பார்க்குது..! 

ஆகமொத்தம்.. என்னை கண்டா ஆகல அந்த பொண்ணுக்கு..’ என மனதில் தீர்மானித்தவன், எதுவும் பேசாமல்.. நடப்பதை பார்க்கும் மௌனசாட்சியானான்.

சம்யுக்தாவுக்கும் இது அதிர்ச்சி தான்.. ‘அது எப்படி இத்தனை நாள் தெரியாமல் போனது..?’ என நினைத்து ரியானை பார்க்க அவனுக்கும் அது தெரிந்தால் தானே..?

‘யார் யாரை எந்த நேரத்தில் சந்திக்க வைக்க வேண்டும்..’ என்ற திட்டத்தை வகுத்து வைத்திருப்பவன் மட்டுமே அதை அறிந்து வைத்திருக்க முடியும்.. 

நேரம் வரும் போது.. விதியின் பேரில் அவனாடும் ஆட்டம் நன்மைக்கா.. இல்லை.?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!