கோவையின் முக்கியமான போக்குவரத்து சாலை என்றாலும்.. இரவு மணி பதினொன்றை நெருங்கிவிட்டதால் சாலை வெறிச்சோடி போயிருக்க.. கார் வெங்கடேஷ் கரங்களில் கொஞ்சம் வேகமெடுத்து தான் சென்று கொண்டிருந்தது.
Advertisement
பின்னால் அமர்ந்திருந்த சகோதரிகள் இருவரும் தந்தமது நிலையில்.. ஏதோ யோசனையில் இருக்க, கண்ணாடி வழியாக இனியாளை யோசனையோடு அவ்வப்போது தழுவி மீண்டது வெங்கடேஷின் பார்வை.
ரியானின் மீதான அவளின் வெறுப்பு மிகு பார்வையை.. அவனும் கண்டு கொண்டதால் வந்த யோசனை அது.
Advertisement
Advertisement
ஆனாலும் எதையும் கேட்க முடியாது.. ‘தனக்கு தெரியாமல் கூட அவர்களுக்குள் எதாவது தனிப்பட்ட விசயம் இருக்கலாமே..’ என்ற எண்ணத்தோடு அவனும் அமைதியாகவே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
“சம்யூ ம்மா.. முகுந்துக்கு அடிக்கடி இப்படி ஆகுமா..?” என இதுவரை ஏதோ சிந்தனையில் லயித்திருந்த இனியாள் கேட்க,
Advertisement
“எனக்கு தெரிஞ்சு ஆரம்பத்துல அவன் அழுதப்போ வந்துச்சு.
வீட்டுக்குள் நுழைந்தது முதல் கடுகடுவென இருக்கும் இனியாளை கண்டுவிட்டு, “என்ன ஆச்சு அக்கா..? எதுக்கு இப்படி இருக்கே..?” என்றிட,
“அவன் குழந்தைடீ.. அவனை எப்படி அந்த ஆள் அடிக்கலாம்..?” என்றாள் எடுத்த உடனே கோபமாக.
“அக்கா..! என்ன பேசற நீ..? அது அவரோட பையன். அவருக்கு அதுக்கு உரிமை இருக்கு.
அது மட்டுமல்ல, நீ அவன் இவன்னு பேசறது சரியில்ல..” என்றவளுக்கு,
‘இன்று இனியாளுக்கு என்ன ஆனது..?
யாராக இருந்தாலும்.. மரியாதையுடன் பேச வேண்டும்.. என அடிக்கடி சொல்பவளின் வாயிலிருந்து.. எப்படி இப்படியான வார்த்தைகள்..’ என்ற குழப்பமும் திகைப்பும்.
“ஆமா.. அந்தாளுக்கு மரியாதை ஒண்ணு தான் கேடு..” என வாயினுள் முணுமுணுத்தவள்,
“அத விடு. எதுக்கு அடிச்சாங்களாம் உன்னோட பாஸ் அந்த குழந்தையை..” என்றாள் முடிந்தவரை தனது கோபத்தை கட்டுப்படுத்தி,
“அது..” என ஆரம்பித்த சம்யுக்தா, ரியான் சொன்னவற்றை சொல்லிக்கொண்டே வர,
சட்டென.. இப்போது தான் மூளையில் மின்னலாய் தோன்றியது முகுந்த் தேடும் பெண் யாரென.
சம்யுக்தா சொல்லும் போதே.. சில வாரங்களாக தன்னை யாரோ தினமும் பார்க்கும் உணர்வை உணர்ந்திருந்த இனியாளுக்கு உறுதியாகவே தெரிந்திருந்தது.. அந்த குழந்தை ஏங்கி கேட்ட அந்த ஜோடி தானும் தன் மகளும் என்பது.
“அக்கா..! தினமும் நீயும் வெண்பாவும் தானே அங்கே நிற்பீங்க.
ஏன்னா.. நானும் யாரோ என்னை பார்க்கற மாதிரி ஃபீல் பண்ணிட்டு தான் இருந்தேன்.
பட், அது தப்பான பார்வையா தோனல. அதனால அதை பெருசாவும் எடுத்துக்கல..” என்றவளுக்கும் மனதில் ஒரு இதம்.
‘தன்னை அந்த பிஞ்சு எந்த அளவு பாசத்தோடு பார்த்திருக்கும். அவனின் ஆசையை இன்று கடவுள் சித்தமாய் நிறைவேற்றி விட்டேனே..’ என்ற ஆசுவாசம் அவளின் கண்ணில்.
“ச்சே.. இது முதல்லையே தெரிஞ்சிருந்தா.. வெண்பாவோட சேர்த்து முகுந்துக்கும் நீயே கொடுத்திருக்கலாம்.. இல்லக்கா..” என எதார்த்தமாக சம்யுக்தா சொல்ல,
“இதுவரை முடியலன்னா என்ன..? அதான் இங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சே.
இனி டெய்லியும் முகுந்தை கொண்டு வந்து விடச்சொல்லு.
பாப்பாக்கு ஊட்டும் போது அவனுக்கும் நானே கொடுத்திடறேன்..” என்று இயல்பாக சொல்வது போல இருந்தாலும், மனமெங்கும் ஒரு வித உல்லாச ஆர்ப்பரிப்பு.
சம்யுக்தாவிற்கும் இது நல்ல யோசனையாய் பட, “சரிக்கா.. நான் நாளைக்கே பாஸை பார்த்து.. இனி டெய்லி அவனை பார்க் கூட்டிட்டு வரச்சொல்லிடுறேன்..” என்று உறுதி கொடுத்தவள் கொஞ்சம் யோசனை செய்திருக்கலாம்.
இதில் முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய நபர்.. அந்த பிள்ளையின் தந்தை.. என்பதும் அவர்களுக்கு மறந்துவிட்டது போல.
******
மறுநாள் காலை தான் சந்தீப்புக்கு விசயம் சொல்லப்பட,
அவசரமாக ஓடி வந்தவன், “ஏன்டா.. என்கிட்ட நைட்டே சொல்லல..” என சண்டை போட..
என்ன சொல்வது என்றே புரியவில்லை ரியானுக்கு.
‘ஆமா.. சொல்லியிருக்கனும் இல்ல..?’ என இப்போது தான் தோன்றவே செய்தது ரியானுக்கு.
நேற்று வெங்கடேஷூம்.. சம்யுக்தாவும் இங்கு வந்தது கூட தற்செயலாக நடந்தது தானே அன்றி.. இவன் யாருக்கும் சொல்லவில்லையே..!
இத்தனை வருட பழக்கமாக, தனியாகவே எல்லாம் பார்த்த பழக்கத்தில் வந்தவனுக்கு வெங்கடேஷூம் உதவ, சந்தீப்பிடம் சொல்ல வேண்டும்.. என்ற எண்ணம் எழவில்லை என்பதே உண்மை.
இப்போதும் டாக்டர் வந்து சொன்ன பிறகு தான்.. ‘என்ன செய்வது..?’ என முடிவெடுக்க முடியும்.
அதுவரை ஆஃபிஸுக்கு வரமுடியாது.. என சொல்லவே சந்தீபிடம் தகவல் சொல்ல அழைத்திருந்தான்.
“சாரிடா.. நிஜமா தோனல..” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“என்ன தோனலையா..? நீங்க இங்கே இருக்கீங்கன்னு தான் இங்கே வந்தேன்னு.. அப்போ அன்னைக்கு சொன்னது எல்லாம் வாய் வார்த்தைக்கு தானா..?” என்றான் இன்னும் கோபமாக.