Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 23

அத்தியாயம் 23

இன்னும் நான்கு நாட்களே இருந்தது அனன்யாவின் வளைகாப்பிற்கு. ஏழாம் மாதம் தான் அதுவும் எளிதாய் வீட்டில் தான் என முடிவான பின் வேலைகளையும் திட்டமிட்டு எந்த படபடப்பும் இன்றி அழகாய் எளிதாய் என ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருந்தது.



Advertisement

காலையில் நீண்ட நேரமாய் அழைத்தும் விஜயலக்ஷ்மி அழைப்பை ஏற்காமல் இருக்க, புருவம் சுருக்கி யோசனையான அர்ஜுன் மொபைலை வைத்துவிட்டு காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பி கீழே வந்தான்.

Advertisement

“தீபக்!” என குரல் கொடுக்க, தீபக் அங்கிருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.

Advertisement

‘எங்க போனான் காலையிலேயே!’ என்று எண்ணியபடி சமையலறை சென்றான்.

Advertisement

என்னவெல்லாம் இருக்கிறது என பார்த்து தோசை வார்க்க தயாராக, கொட்டாவியோடு வந்து சேர்ந்தான் தீபக்.

“ஆபீஸ் இல்லையா டா?” அர்ஜுன் கேட்கவும்,

“இல்ல டா லீவ்! ரெண்டு நாள் நைட் ஷிப்ட் பார்த்து செம்ம டையார்ட்!” என்று சொல்லி,

“விலகு! நான் ஊத்துறேன்! ரெடியாகிட்டு வந்து இங்க நிக்குற!” என்றான் தீபக்.

“சாப்பிட வேணாம் நினச்சேன்! லைட்டா பசிக்குது! அதான் பொடி இருக்கவும் தோசை ஊத்திக்கலாம்னு வந்தேன்!” என்று அர்ஜுன் சொல்ல,

“சட்னி பண்ணவா? ஒரு டென் மினிட்ஸ்ல?” 

“ம்ம்ஹும்ம் வேணாம் டா! லேட்டாச்சு! இன்னும் ஒண்ணு மட்டும் ஊத்து போதும்!” என்று சொல்லி பேசியபடி அங்கேயே நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் மொபைலை எடுத்து விஜயலக்ஷ்மிக்கு அழைக்க, இப்போதும் எற்கவில்லை அவள்.

“ப்ச்!” என்றவன் சாப்பிட்டு முடித்து கைகளைக் கழுவ,

“மேரேஜ்க்கு ரெண்டு வாரம் லீவ் சொல்லிட்டேன் அர்ஜுன்! அடுத்த வாரம் கிளம்பிடுவேன்! நீங்க எல்லாரும் எப்ப வர்றிங்க?” என்றான் தீபக்.

“நான் முந்தின நாள் வந்துடுறேன்! மாமா மேரேஜ் மார்னிங் வருவாங்களா இருக்கும்!” அர்ஜுன் சொல்ல,

“அப்போ குள்ளச்சி?”

“டேய்!”

“இல்ல டா! தங்கச்சி! டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு! உன்னோட வரலையா?”

“அவ வர்றாளானே தெரில! கேட்டுட்டு சொல்றேன்! இந்த வீக் ஃபன்க்ஷன் இருக்கு. நியாபகம் இருக்குல்ல? வந்து நீயே கேளு!”

“ஆமா டா! வரணும்! இன்விடேஷன் குடுக்கணும்! நான் சொல்றேன்! அனு அக்காவைப் பார்க்க சேர்ந்தே போலாம்!” என்று தீபக் சொல்லவும் அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான் அர்ஜுன்.

காரில் போனை கனக்ட் செய்தவன் அனன்யாவிற்கு அழைப்பு விடுக்க,

“சொல்லு அர்ஜுன்!” என்றாள் அவள்.

“மாமா எங்க அனு?” என்றான் எடுத்ததும்.

“உங்க மாமா அப்பவே கிளம்பிட்டாங்க டா! கிளையண்ட் வர்றாங்களாமே!”

“ஹ்ம்ம் ஆமா!”

“நீயும் கிளம்பிட்டியா?” 

“போய்ட்டு இருக்கேன் அனு!”

“ஓஹ் அப்ப சரி டா! ஆமா விஜிக்கு கால் பண்ணியா?”

“ஹ்ம் பண்ணினேன் பிக்கப் பண்ணல. இன்னும் தூங்குறாளா என்ன?”

“அவ நைட்டே எமெர்ஜென்சினு ஹாஸ்பிடல் போய்ட்டா அர்ஜுன்!” என்று சொல்லவும்,

“அப்படியா?” என்றவன் மொபைலில் வாட்சப்பை எடுத்துக் பார்க்க, செய்தி அனுப்பி இருக்கிறாள் இரவு ஒரு மணிக்கெல்லாம்.

“மாமா தான் கூட்டிட்டு போனாங்க! மார்னிங் வர்றேன்னு சொல்லி இருக்கா. இப்ப கால் பண்ணினா எடுக்க மாட்றா! மாமாவும் வீட்டுல இல்ல! அதான் யோசிச்சுட்டு இருக்கேன்!” 

“ஓஹ்!”

“என்ன ஓஹ்? நான் கூட்டிட்டு வர்றேன்னு சொல்ல மாட்டியா?”

“க்கா! மீட்டிங் இருக்கே!” என்றவன்,

“சரி மாமாகிட்ட பேசுறேன்!” என்று சொல்லி விவேக்கிற்கு அழைத்து பேசவும், அவன் தான் சமாளித்துக் கொள்வதாய் சொல்லிவிட, விஜயலக்ஷ்மி வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.

“டாக்டர் விஜயலக்ஷ்மி!” என்று சொல்லிவிட்டு அவன் காத்திருக்க, கண்கள் சிவக்க அவனிடம் வந்து சேர்ந்தாள் விஜயலக்ஷ்மி.

“குட் மார்னிங் அர்ஜுன்! அண்ணா வரலையா?” என்று வந்ததும் கேட்க,

“ஹ்ம்ம்! உன் போன் எங்க விஜி?”

“பேக்ல!” என்றவள்,

“கால் பண்ணிங்களா? தூங்கிட்டேன் சாரி!”

“கால் பண்ணிருந்தா அப்பவே வந்திருப்பேன்! வீட்டுக்கு போய் தூங்கிருக்கலாம்ல?”

“அக்சிடேன்ட் பா! ஒரு மணிக்கு கால் வந்துச்சு! ஆபரேஷன் முடியவே அஞ்சு மணி! அப்புறம் எனக்கும் சுத்தமா முடியல! அதான் ரூம்ல டேபிள்லயே சாய்ஞ்சுட்டேன்!”

“அனு சொன்னப்றம் தான் மெசேஜ் பார்த்தேன்!” என்று அர்ஜுன் சொல்லி கார் பார்க்கிங் அழைத்து வர,

“கேன்டீன் போலாமா? பசிக்குது அர்ஜுன்!” என்றாள் கண்கள் சுருக்கி. அதில் புன்னகைத்தவன் காரில் இருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் தந்து,

“ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு வா! வெளில சாப்பிடலாம்!” என்று சொல்லவும் அதை செய்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தவள், கண்ணாடியில் தன் முடியை சரி செய்ய, டவலை எடுத்து நீட்டினான் அவன்.

“தூங்கி எழுந்து அப்படியே வந்துட்டேன்! இப்படியேவா ஹோட்டல் போக?” கண்ணாடியைப் பார்த்து முகம் துடைத்தபடி அவள் கேட்க,

“அழகா தான் இருக்கீங்க மேடம்!” என்றான் அவளைப் பார்த்து ரசித்து அமர்ந்திருந்தவன்.

அப்பொழுது தான் அதனைக் கண்டாள் அவளுமே! “அண்ணா தானே வந்திருப்பாங்க! வீட்டுக்கு தானே போக போறோம்னு அப்படியே வந்துட்டேன்!”

“ஓஹ்! அப்ப நான்னு தெரிஞ்சிருந்தா?”

“தெரிஞ்சிருந்தா?” என்று தோள்களை குலுக்கினாலும் நிச்சயம் முகம் கழுவி சின்னதாய் டச்சப்பையாவது முடித்துவிட்டு வந்திருக்கலாம் என நினைத்தது தான் நிஜம்.

“ஹ்ம்! நல்லாருக்கு!”

“என்ன?”

“ப்ச்!” என்று தோள்களை குலுக்கியவன் முகம் மாறா புன்னகையில் இரு நொடி அதிகமாய் அவனை கவனித்தவள், என்ன என அவன் புருவம் உயர்த்தவும் தலையை ஆட்டி திரும்பிக் கொண்டாள்.

மீண்டுமாய் கிடைத்த பத்து நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம். கார் நாகர்வதே தெரியாத அளவிற்க்கு அர்ஜுனும் சொகுசு செய்து கொடுக்க, ஹோட்டலில் நிறுத்திவிட்டு,

“ஓய்!” என்று அர்ஜுன் கன்னம் தட்டவும் சட்டென விழித்துக் கொண்டாள்.

“ச்சோ! சுத்தமா முடியல! ஆனாலும் பசிக்குது!” என்று சொல்லி மீண்டும் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

“ஆபீஸ் போலயா நீங்க?” உணவை சொல்லிவிட்டு அமர்ந்தவனிடம் விஜயலக்ஷ்மி கேட்க,

“மீட்டிங் விஜி! நீ கால் எடுக்கலை அதான் அனுக்கு கால் பண்ணி கேட்டேன்! மாமா போய்ட்டாங்க. சோ நான் இங்க வந்துட்டேன்!”

“ஓஹ்!”

“ஏர்லி மார்னிங் எல்லாம் கூப்பிட்டிருக்கீங்க?” அப்போது தான் மொபைலை எடுத்துப் பார்த்து விஜயலக்ஷ்மி கேட்க,

“அக்காக்கு ஜ்வெல் வாங்க போலாம்னு கேட்க கூப்பிட்டேன்! நாளைக்கு பார்த்துக்கலாம்!” என்றான்.

“ஓஹ்! ஆனா ஈவினிங் தானே? போலாமே!”

“சூர்?”

“ஹ்ம்! எப்படியும் இன்னைக்கு லீவ் தான்! போய் ரெஸ்ட் எடுத்தா ஈவ்னிங் நான் ஓகே!” 

“கண்ணெல்லாம் ரொம்ப ரெட்டிஷ்ஷா இருக்கு உனக்கு!”

“ஹ்ம்! தூங்கினா சரியாகிடும்!”

“அப்ப சரி! நம்மோட இன்னொருத்தர் கூட வருவாங்க!”

“யாரு!”

“வந்து பார்த்துக்கோ!” என்று சொல்லவும் சரி என கூறி, வந்தவற்றை சாப்பிட்டு இருவரும் எழுந்து கொண்டனர்.

விஜயலக்ஷ்மி வீட்டின் முன் அவள் இறங்கிக் கொண்டு, “உள்ள வாங்களேன்!” என அவனிடம் சொல்ல,

“மாமா தனியா ஹண்ட்ல் பண்ணிட்டு இருப்பாங்க டா! போய்ட்டு கால் பண்றேன்!” என்று சொல்லவும் தான் விடைகொடுத்தாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு மாலை ஐந்து மணிக்கு மேல் விஜயலக்ஷ்மியை அழைத்துக் கொண்டு அன்று வந்த அதே நகைக்கடைக்கு அழைத்து வந்தான் அவளை.

“வேற யாரோ வர்றதா சொன்னிங்க அர்ஜுன்?” விஜயலக்ஷ்மி கேட்க,

“ஹ்ம் வருவாங்க! நீ பாரு! என்ன வாங்கலாம்!” என்றவன் சுற்றிலும் பார்க்க,

“எனக்கெல்லாம் தெரியாது! கிப்ட் வாங்குறதுல உங்களை அடிச்சுக்க முடியாதாமே! அண்ணி சொல்லிருக்காங்க!” என்றாள் விஜயலக்ஷ்மி.

“ஓய்! அவகிட்ட சொல்லிட்டா வந்த?” அர்ஜுன் கேட்க,

“இல்லையே! வெளில போறோம்னு மட்டும் தான் சொன்னேன்!”

“அப்புறம் எப்ப சொன்னா அனு?”

“அது இப்ப இல்ல! ரொம்ப நாள் முன்ன! ரொம்ப நாள்னா ரொம்ப ரொம்ப நாள் முன்னாடி!” என்று சொல்லவும் அது அன்னை இருக்கும் போதாய் இருக்கும் என அவனே நினைத்துக் கொண்டான்.

“என்ன வாங்கலாம்? ஐடியா இல்ல விஜி!” 

“நான் உங்களைவிட மோசம்! எனக்கெல்லாம் அம்மா வாங்கி தந்தா தான் உண்டு! நான் செலக்ட் பண்ணின சரித்திரம் எல்லாம் இல்ல!”

“அப்போ நான் என்ன வாங்கி தந்தாலும் ஓகே தான் இல்ல?” 

“அர்ஜுன்?”

“என்ன தந்தாலும் ஓகேவா கேட்டேன்!” கண்ணாடி முன் நின்று அவன் கேட்க, ஏனென்றே தெரியாமல் அவன் பார்வைக்கே கன்னங்கள் சிவந்து அவள் நிற்க,

“மா…. மாமா!” என அவர்கள் அருகே வந்து நின்றாள் ப்ரணித்தா!”

எத்தனை ஆசையாய் ஓடி வந்திருந்தாள்! இப்படி இவர்கள் இருவரையும் அதுவும் அவன் பார்வைக்கு அவள் முகத்தில் வந்து போகும் அந்த வெட்கம் என பார்க்க பார்க்க நெஞ்சடைத்தது ப்ரணித்தாவிற்கு.

கொஞ்சமும் யோசிக்கவில்லை! அர்ஜுன் அழைத்ததும் அத்தனை உற்சாகமாய் கிளம்பி வந்திருக்க, இங்கே இப்படி விஜயலக்ஷ்மியோடு அர்ஜுன். 

“ஹே! வா ப்ரணித்தா!” அர்ஜுன் அழைத்து விஜயலக்ஷ்மி பக்கம் திரும்ப, கோபமான கோபமாய் ப்ரணித்தாவைப் பார்த்து நின்றாள் விஜயலக்ஷ்மி.

“ப்ரணித்தா இப்ப ஆபீஸ் போகலையாம் விஜி! என் மாமா சொன்னாங்க!” என்று அர்ஜுன் சொல்லவும் புரியாமல் விஜயலக்ஷ்மி அர்ஜுனைப் பார்க்க,

“உனக்கு தெரியாதுல்ல? ப்ரணித்தா இப்ப அவங்க பெரியப்பா வீட்டுக்கு போய்ட்டா! அங்க தான் இருக்கா! அவளுக்கு இந்த மாதிரி வெளில வர்றதுனா பிடிக்கும்! ரொம்ப நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு போய் இருக்குறதா அவங்க பெரியப்பா அதான் என்னோட மாமா சொன்னாங்க. அதான் சரினு கூப்பிட்டேன்!” என்று சொல்ல, வார்த்தைக்கு வார்த்தை ப்ரணித்தா என முழுப் பெயரிட்டு அழைத்தவன் அழைப்பில் இன்னும் அதிர்ந்து நின்றாள் ப்ரணித்தா.

“என்ன அர்ஜுன்?” என்று மெதுவாய் அர்ஜுனிடம் விஜயலக்ஷ்மி கேட்க, அத்தனை அவமானமாய் உணர்ந்தாள் ப்ரணித்தா.

அன்று விஜயலக்ஷ்மி வீட்டில் வைத்து நடந்த பிரச்சனைக்கு பின் இரண்டு மாதங்கள் கழித்து இன்று தான் இவர்களைப் பார்க்கிறாள் ப்ரணித்தா.

விஜயலக்ஷ்மி தன்னிடம் வந்து சேர்ந்த அந்த நாளே அர்ஜுன் தனது தாய்மாமாவான ப்ரணித்தாவின் பெரியப்பா வீட்டிற்கு சென்று பேசி, அவளை அவர்கள் வீட்டில் அழைத்துக் கொள்ள என்னென்ன பேச வேண்டுமோ அப்படி பேசி சென்றிருக்க, அடுத்த பத்து பதினைந்து நாட்களில் எல்லாம் ப்ரணித்தா அவர்களின் வீட்டிற்கு சென்றுவிட்டதாய் தகவல் வந்தது அர்ஜுனிற்கு.

அர்ஜுன் தாய்மாமாவிற்கு மட்டுமே முழு விஷயத்தையும் கூறி இருந்தான் அர்ஜுன். அத்தையிடம் கூற வேண்டாம் என்றதும் கூட அர்ஜுன் தான். என்ன இருந்தாலும் அவர் ப்ரணித்தாவின் அன்னை இல்லையே! ஏதோ ஒரு கணத்தில் இதனால் பிரணித்தாவை அவர் வெறுத்து அவள் மீண்டும் ஆதரவற்ற நிலைக்கு சென்றுவிட்டாள் என்று தான் அவளின் எதிர்காலம் குறித்து யோசித்து தான் முடிவெடுத்திருந்தான்.

அடுத்து இந்த ஒன்றரை மதங்களும் அவள் வேலைக்கு செல்லவில்லை எனவும் அர்ஜுன் அவனது தாய்மாமா மூலம் தெரிந்து கொண்டான்.

“என்னவோ பயமா இருக்கு பா! ரூம்குள்ளயே இருக்குறா! எப்பவும் நகத்தை கடிச்சுட்டு என்னவோ யோசனைலயே இருக்குறா! மாப்பிள்ளை பாக்குறோம் சொன்னா எறிஞ்சு விழுறா! நான் கேட்டுப்பேன்! என் வீட்டம்மாக்கு அவ பண்றது சுத்தமா பிடிக்கல! எதுக்கு இப்படி இருக்குறா? நீ அவளை மன்னிச்சு விட்டதே பெரிய விஷயம்! இன்னும் என்ன தான் வேணும் அவளுக்கு!” என்று அர்ஜுனை அழைத்து அவர் பேசி இருக்க, அதற்கு தான் என்ன செய்ய முடியும் என்று தான் முதலில் நினைத்தான் அர்ஜுனுமே!

அடுத்து சில யோசனைகளுக்கு பின் தான் தனக்கு விஜயலக்ஷ்மி எவ்வளவு முக்கியம் என அவளுக்கு உணர்த்திட நினைத்தான். நேற்று ப்ரணித்தா எண்ணுக்கு அழைத்துவிட்டு அர்ஜுன் காத்திருக்க,

“மாமா! எனக்கு தெரியும் மாமா நீங்க கால் பண்ணுவீங்கனு! பைத்தியம் பிடிக்குற மாதிரி இருந்துச்சு இத்தனை நாளும்! நான் எப்போவும் உங்களுக்காக காத்துட்டு தான் இருப்பேன் மாமா!” என அவன் பேசும் முன் அவள் பேசியதைக் கேட்டு திடுக்கிட்டு தான் போனான் அர்ஜுன்.

“என்னை புரிஞ்சிக்கிட்டீங்க தானே? நான் இருக்கேன் மாமா உங்களுக்கு!” என அவள் பேசவே சிறிதாய் ஒரு வருத்தம் கூடவே அதிகமாய் கோபம் என கடுப்பாகிவிட்டான் அர்ஜுன்.

நாளை அதே நகைகடைக்கு வர சொல்லிவிட்டு அதை தாய்மாமாவிடமும் சொல்லிவிட்டான் அர்ஜுன்.

இரண்டு மாதங்களுக்கு பின் இன்று தான் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து அந்த அறையை விட்டே வெளியே வந்திருந்தாள் ப்ரணித்தா.

அதற்கே அவள் பெரியப்பாவும் அதிர்ந்துவிட்டார் என்ன செய்கிறாள் இவள் என்று.

அன்று தான் காணும் போது அந்த நகைக்கடையில் விஜயலக்ஷ்மி எப்படி இருந்தாளோ அதே போன்று தான் தானும் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து ப்ரணித்தா அனைத்தும் செய்து அர்ஜுனைக் காண என அத்தனை ஆசையாய் ஓடி வந்தாள்.

அவன் கோபம் விஜயலக்ஷ்மியின் அடி அன்று தான் பட்ட அவமானம் எல்லாம் அர்ஜுனை நினைகையில் இரண்டாம்பட்சம் ஆகிப் போக, அவனே தனக்கு அழைத்து வா என்றதில் அத்தனை ஆனந்ததோடு வந்து சேர்ந்தவள் வாசலில் வைத்தே கண்டுவிட்டாள் அர்ஜுனோடு விஜயலக்ஷ்மியை.

அருகில் நெருங்க நெருங்க அவர்களின் நெருக்கமும் இருவரின் பார்வை வழி புரிய, இதோ வெகு அருகில் வரும் நேரம் அர்ஜுனின் பார்வைக்கு அவள் முகம் செவ்வானமாய் சிவக்க, மூச்சே இல்லை ஏமாற்றமாய் ப்ரணித்தாவிடம்.

“என்ன அர்ஜுன்?” நிச்சயம் ப்ரணித்தாவை இங்கே எதிர்பார்க்காமல் நொடியில் மொத்த சந்தோச உணர்வும் கெட்டு முகம் சோர்ந்து விஜயலக்ஷ்மி கூற,

“விஜிமா!” என்ற அர்ஜுனின் அழைப்பில்,

“ஹ்ம்! நான் ஓகே தான்!” என்று விஜயலக்ஷ்மி சொல்லவும் அவள் விரல்களைப் பற்றிக் கொண்டவனை வெறித்த பார்வை பார்த்தாள் ப்ரணித்தா.

“சரி ஓகே! வாங்க! அனுக்கு ஃபர்ஸ்ட் வாங்கிடலாம்!” என்ற அர்ஜுன்,

“வா ப்ரணித்தா!” என்று அழைத்து விஜயலக்ஷ்மியோடு செல்ல, ப்ரணித்தாவை அதன்பின் திரும்பியும் பார்க்கவில்லை விஜயலக்ஷ்மி.

“என்ன வாங்கலாம்னு யோசிச்சியா இல்லையா நீ?” என விஜயலக்ஷ்மியிடம் அர்ஜுன் கேட்டபடி கடை முழுதும் சுற்றிவர, கூடவே ப்ரணித்தாவையும் அவன் கவனிக்க மறக்கவில்லை.

“ஹே வாவ்!” விஜயலக்ஷ்மி கைகளில் இருந்த மூக்குத்தியைப் பார்த்து அர்ஜுன் சொல்ல,

“அழகா இருக்குல்ல?” என்றாள் அவள்.

“ஹ்ம் ரொம்ப!” 

“ஆனா அனு அண்ணிக்கு பிடிக்காதே! அவங்க நோஸ் ரிங் போடுறது இல்லைல?”

“உனக்கு பிடிச்சிருக்கு தானே?”

“ம்ம்ஹும்ம் வேணாம் அர்ஜுன்!”

“பிடிச்சிருக்கா இல்லையா?”

“பிடிக்கும் தான்!”

“தென் எடுத்துக்கோ! குத்திக்க கூட வேண்டாம். ஸ்டிக்கிங் தான் போல!” என்றவன்,

“ஹ்ம்ம்! உனக்கு ரொம்ப அழகா இருக்கும்!” என்றும் சொல்ல, அவனின் விருப்பம் தெரிந்தபின் மறுக்க முடியவில்லை.

கூடவே நின்று இதையெல்லாம் வலிக்க வலிக்க பார்க்க வேண்டுமா? கிளம்பி விடலாமோ என்றே தோன்றிவிட்டது ப்ரணித்தாவிற்கு.

அப்போதும் கூட ஒரு பக்கம் மனம் எதாவது செய். இவர்கள் இப்படி இருக்க கூடாது என்று கூவ தான் செய்தது. ஆனால் என்ன செய்திட முடியும்? இருவருக்கும் இடையில் தான் நின்றாலேனும் எதுவும் செய்திடலாம். இங்கே தானே மூன்றாம் நபராய் நிற்க, மனம் சொல்வதை செய்திட எல்லாம் வாய்ப்பில்லை என புரிந்தது அவளின் அதிர்ஷ்டம் தான்.

“ஓகே! இது பாரேன்! அக்காக்கும் மாமாக்கும் சேம் டைப்ல ரிங் எடுத்துக்கலாம். ஒரு மெமரியா இருக்கும்ல?” அர்ஜுன் கேட்க,

“ஹ்ம்! கலக்குறீங்க!” விஜயலக்ஷ்மி சொல்ல,

“ஓகே தானே ப்ரணித்தா?” என்று அவளிடமும் கூட கேட்டு வைத்தான்.

“தீபக் மேரேஜ்க்கு அப்புறம் தனியா வரணுமா? அவனுக்கும் எதாவது வாங்கிடலாம்!” அர்ஜுன் சொல்லியவன் ஏற்கனவே முடிவு செய்திருந்ததை போல பிரேஸ்லெட் பக்கமாய் செல்ல, கூடவே சென்றனர் இருவரும்.

“அர்ஜுன்! உங்க செலக்ஷன் இவ்வளவு நல்லா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல! ஒவ்வொருத்தருக்கும் அழகா, நிதானமா… ஹப்பா! எவ்ளோ பொறுமை உங்களுக்கு?” தீபக்கிற்கு என கைசெயின் ஒன்றை தேர்வு செய்து முடித்த அர்ஜுனிடம் விஜயலக்ஷ்மி சொல்ல,

“இங்க வந்து தான் என் செலக்ஷன் நல்லா இருக்குமான்னு தெரிஞ்சதா உனக்கு?” என்றவன் புருவம் உயர்த்தி, அமைதியாய் புன்னகைக்க, “ப்ச்!” என தன் தலையில் தானே கொட்டிக் கொண்டவள் பாவனையில் இன்னும் சிரித்து ஒற்றை விரலை நீட்டி செல்லமாய் மிரட்டிட, கெஞ்சலான பார்வை விஜயலக்ஷ்மியிடம்.

“ஓகே! அவ்ளோ தானே? உனக்கு வேறெதாச்சும்?” என விஜயலக்ஷ்மியிடம் கேட்க, 

“இதுக்கே அம்மா என்ன சொல்ல போறாங்களோ! போதும் அர்ஜுன்!” என்றுவிட்டாள் விஜயலக்ஷ்மி.

“ப்ரணித்தா உனக்கு?” அர்ஜுன் கேட்க,

“ஹான்!” என்றவள் தலையை மட்டும் அசைக்க,

“ஓகே! போலாம்?” என்று சொல்லி பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

நடந்த அத்தனையையும் மறந்து அர்ஜுன் என்ற ஒருவன் தன்னை அழைக்கவும் அவனுக்காக என ஓடி வந்து நின்ற ப்ரணித்தாவிற்கு இந்த முறை நடுமண்டையில் நச்சென அடித்தது போல தெள்ளத் தெளிவாய் புரிந்தது இனி அர்ஜுனை சீண்டிவிட முடியாது என.

இத்தனை நாளும் அறைக்குள் அடைந்து கிடந்து அர்ஜுன் என்ற வார்த்தைகளோடு மட்டும் வாழ்ந்து, என்ன செய்து விஜயலக்ஷ்மியிடம் இருந்து அவனைப் பிரிக்க என ப்ரணித்தா நினைவுகள் முழுதும் இவர்களிடம் தான் இருந்தது.

அதில் பாதி கொஞ்சம் தைரியம் மட்டும் தான். நிச்சயம் விஜயலக்ஷ்மியை அவன் திருமணம் செய்யவே மாட்டான் என்று. 

ஆனால் இவர்களை சேர்த்து வைத்ததே அவள் தான் என அவளுக்கு புரியவே இல்லை.

“அப்புறம்! எதாவது சாப்பிடுறியா ப்ரணித்தா?” அர்ஜுன் கேட்க, கண்களில் நீர் நிறைந்து கொண்டது ப்ரணித்தாவிடம்.

“ப்ச்! அர்ஜுன்! நான் கார்ல இருக்கேன்!” என்று சொல்லி அவன் பதிலைக் கூட கேட்காமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் விஜயலக்ஷ்மி.

“மாமா!” என அழுகை கலந்த குரலில் ப்ரணித்தா அழைக்க,

“வேலைக்கு போகலைனு மாமா சொன்னாங்க?” என்று அர்ஜுன் கேட்டதற்கும் பதிலில்லை.

“ஹ்ம்! இதுவும் நல்லது தான்! இனி மாமா மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாங்க! மாப்பிள்ளைக்கு எந்த ஊரோ அங்க போய் வேலை பார்த்துக்கலாம்” அர்ஜுன் சொல்ல,

“மாமா! ஒரு நிமிஷம் கூட நான் சொன்னதை யோசிக்கவே இல்லையா நீங்க?” கேட்டேவிட்டாள்.

“நான் பண்ணினது தப்பில்ல மாமா! உங்க மேல இருக்க ஆசைல…. கயல் அத்தை இறந்ததுலாம் நான் எதிர்பார்க்காதது. அதுக்காக என்னை மொத்தமா வெறுத்துட்டு… இவ கூட…” என ப்ரணித்தாவைக் காட்ட,

“என்ன சொல்ல வர்ற நீ?” என்றான் கைகட்டி நின்று அர்ஜுன்.

“அன்னைக்கே சொன்னேனே மாமா! நம்ம கல்யாணம்?” என்று அப்போதும் அவளைப் பற்றி மட்டுமே ப்ரணித்தா பேச வெறுத்து போனது அர்ஜுனிற்கு.

“இன்னும் மூணு மாசத்துல எனக்கும் விஜிக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு ப்ரணித்தா!” என்று அர்ஜுன் சொல்ல, அதிர்ந்து விழித்தாள் அவள்.

“எல்லாமே இப்ப தான் என் வாழ்க்கைல ரொம்ப ஸ்மூத்தா போய்ட்டு இருக்கு! ரொம்ப ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கேன்!” அர்ஜுன் சொல்ல, நிலைத்த பார்வை ப்ரணித்தாவிடம்.

“அர்ஜுன்!” காரில் இருந்து விஜயலக்ஷ்மி அழைக்கும் சத்தம் கேட்க,

“ஜஸ்ட் டூ மினிட்ஸ் டா!” என அவளிடம் கூறிவிட்டு நிமிர்ந்தவன்,

“கல்யாண தேதி வரை முடிவு பண்ணிட்டாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பயம்! முதல் தடவை நடந்த மாதிரி எதுவும் அபசகுனமா ஆகிட கூடாதேனு பயம்” என்றவன்,

“இந்த கல்யாணம் யாரால எப்ப எப்படி நிக்குமோன்னு எல்லாரையும் மாதிரி நானும் கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது! நான் வாழனும்னு ஆசைப்படறேன்! அதுக்கு எனக்கு விஜி வேணும். விஜி மட்டும் தான் வேணும்!” அழுத்தம் திருத்தமாய் கூறி இருந்தான் அர்ஜுன்.

என்னவோ இந்த நாள் போல தண்டனை எந்த நாளுக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை ப்ரணித்தாவிற்கு. தனக்கு பிடித்தவன் தன்முன் வேண்டுமென்றே அவனுக்கு பிடித்த பெண்ணுடன்! நினைக்க நினைக்க தலையெல்லாம் வலி ப்ரணித்தாவிற்கு.

“யார் கேரக்டரும் என்னவா வேணா இருக்கலாம்! நான் வாழ என்ன பண்ண முடியுமோ அதை நான் பண்ணிக்குவேன்! என் வழில இனி யார் வந்தாலும் நான் வழி மாறிப் போக வாய்ப்பில்ல!”

“மாமா?” என்ன சொல்ல வருகிறான் இவன் என அவள் அழைக்க,

“இன்னைக்கு விஜி கூட என்னோட நேரம் எவ்வளவு அழகா இருந்ததுன்னு பார்த்த தானே? இதே மாதிரி தான் எனக்கு ஒவ்வொரு நாளும் அழகழகா போய்ட்டு இருக்கு! என்னோட கடைசி நாள் வரை அப்படி தான் போகும்! உன்னோட குப்பை எண்ணத்தை மாத்திக்கோ!” என்றவன்,

“நிச்சயமா இன்னைக்கு இது நான் உனக்கு தர்ற தண்டனை இல்ல வாய்ப்பு! புரிஞ்சிருக்கும் நினைக்குறேன்! இன்விடேஷன் கண்டிப்பா வரும்! நீ வர்றதும் வராததும் உன்னோட விருப்பம்!” கிட்டத்தட்ட மிரட்டல் தான். அதை அவன் பாணியில் சொல்லி இருந்தான் அர்ஜுன்.

“பார்த்துப் போ! வழியில கவனம் வை!” என சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.

தெளிவாய் புரிந்துவிட்டது இனி அவனை எந்த வழியிலும் அணுகிட முடியாது என்று.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!