Skip to content
Post Views: 5,528
காதல் அன்று
“ஷ்.. சும்மா இருங்கடி.. வருவாரு. கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று தன் தோழிகளை அதட்டிக் கொண்டிருந்தாள் திவ்யா!
ராகவைப் பார்த்து பேச என்று அவளின் பள்ளித்தோழிகளை அழைத்து வந்திருந்தாள் அவள்.
இப்போது ப்ளஸ் டூ படிக்கிறாள்.
Advertisement
அவளின் பள்ளியில் தான் மித்துவும் எல்கேஜி படிக்கிறான்!
கூடவே, அவனை இடுப்பை விட்டுக் கொஞ்சம் கூட கீழே இறக்கி விடாமல் வளர்த்துக் கொண்டிருக்கும் வித்யாவும் ராகவின் அனுமதியுடன் அவர்கள் படிக்கும் ஸ்கூலிலேயே ப்ரிகேஜி மிஸ்!
அவளுக்கு குழந்தைகளை நன்கு கையாளத் தெரியும் என்பதால், அவளுக்குப் பிடித்த வேலையும் ஆச்சு, அவள் மித்துவை அந்த கொஞ்ச நேரம் கூட பிரிந்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை!
Advertisement
ராகவிற்கும் அவன் வைஸ் ப்ரெசிடென்ட் – சேல்ஸ் ஆகி விட்டதால் இப்போதெல்லாம் பொறுப்புகளும் அதிகம், வேலையும், அதற்கான பயணங்களும் அதிகம்!
Advertisement
அவனும் வெளியூர் சென்று, மித்துவும் பள்ளிக்கு சென்ற பின் வீட்டில் மொட்டு மொட்டென்று தனியாக உட்கார்ந்து, ராகவிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு, அவளின் அந்த “பழைய டெக்னிக்கான” மோனோ ஆக்டிங்கில் “எப்ப மாமா வருவ?” என்ற கேள்வியையும் அப்புறம் அவளே “ட்ரைன் ஏறிட்டேன்டி வந்திட்டு இருக்கேன்” என்ற அவனின் பதிலையும் பேசிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்து தான் அவன் அவளை வேலைக்குப் போக அனுமதித்தே!
ராகவ் விசயத்தில் மட்டும் அவள் இன்னமும் அதே பைத்தியம் தான்!
அதனால் மித்துவை ஸ்கூலில் சேர்த்த போதே அவளும் வேலைக்கு சேர்ந்து விட்டாள்!
Advertisement
குழந்தைகளுக்கு சுலோகம், ரைம்ஸ் கூடவே மிகவும் எளிய யோகாவும் கற்றுத் தந்தாள்! இதைப் பார்த்து விட்ட ஸ்கூல் மேனேஜ்மென்ட் அவளையே பெரிய குழந்தைகளுக்கும் யோகா சொல்லித் தர சொல்லி அதற்கு தனியாக வேறு சம்பளம் கொடுத்தார்கள்!
போன வருடம் நடந்த ஆண்டு விழாவில் இவள் பயிற்சிக் கொடுத்த குழந்தைகள் செய்த யோகா தான் விழாவின் ஹைலைட்டாக அமைந்து விட்டிருந்தது!
மனைவி போன வருடம் கலக்கினாள் என்றால், இந்த வருடம் ஒரு விருந்தினராக விசிட்டராக தான் அந்த பள்ளிக் குழந்தைகள் நடத்திய எக்சிபிசனுக்கு போய் கலக்கி இருந்தான் ராகவ்!
அவனின் ஆளை அசர வைக்கும் தோற்றமும், ஸ்டைலும் அந்த நுனி நாக்கு ஆங்கிலமும் மாணவிகளையும் கூடவே இளம் வயது ஆசிரியைகளையும் கூட கவர்ந்தது!
அவன் தான் பெரும் பேசுபொருள் ஆகி விட்டான்!
வழக்கம் போல வித்யாவிற்கு பயங்கர பெருமை!
அன்று திவ்யாவின் பிரண்ட்ஸ் எல்லோரும் அவனைப் பார்ப்பதை மிஸ் பண்ணி விட்டார்கள்!
அவர்கள் ப்ளஸ் டூ என்பதால் அந்த எக்சிபிசனுக்கு அனுமதியில்லை! ஸ்பெசல் கிளாஸ் மட்டுமே!
ராகவை சைட் அடித்த அவர்களின் ஜூனியர்களான ப்ளஸ் ஒன் மாணவிகள் பீற்றிக் கொள்வதை சகிக்க முடியாமல், திவ்யாவின் மூலம் அவனைக் காண இதோ அவன் வீட்டுக்கே வந்து விட்டார்கள்!
குளித்து விட்டு வந்திருந்தான் ராகவ் இடுப்பில் துண்டுடன்!
புடவை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்த வித்யாவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்!
“அய்யோ பார்த்து மாமா, இந்நேரம் கையை சுட்டுட்டு இருப்பேன்!” சிணுங்கியவள், “மாமா இப்படியே ஹாலுக்கு ஏதும் போய்டாத, அங்க திவ்யாவோட பிரண்ட்ஸ் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க!”
“என்னைப் பார்க்கவா? எதுக்கு?”
“ம்ம். நீ தான் ஐடி இண்டஸ்ட்ரிய கட்டிக் காப்பாத்துறியாம், அதான் உன் கிட்ட ப்ளஸ் டூக்கு அப்புறம் என்ன சேரலாம்னு கேக்க வந்திருக்காங்க!”
“ஓ” என்று கேட்டுக் கொண்டவன், பின் உடையணிந்து கொண்டு அவர்களை போய் பார்த்து பேசி விட்டு வந்தான்!
வந்தவனிடம் “என்ன மாமா பேசி முடிச்சீட்டிங்களா?”
“ஹேய் அந்த பொண்ணுங்களைப் பார்த்தா அட்வைஸ் கேக்க வந்த மாதிரி சீரியசா எல்லாம் இல்ல, ஏதோ பேசணும்னு வந்தா மாதிரி இருந்தது!”
“அது தான் எனக்கும் தெரியுமே”
“தெரிஞ்சுமா நீ என்னை அவங்க கூட பேசவிட்ட?”
“ம்ம். இங்க மட்டுமில்ல ஸ்கூல்ல கூட சில டீச்சர்ங்க, இந்த வித்யா மிஸ் ஹஸ்பன்ட் பார்க்க அப்படியே சீயான் விக்ரம் மாதிரி இருக்காரில்ல என்று உன்னை சைட் அடிச்சாங்க!
அப்ப எல்லாம் எனக்கு சின்ன வயசுல செலின் அக்கா ஒண்ணு சொல்லுவாங்க, அது தான் ஞாபகம் வரும்!
இந்த சங்க இலக்கிய காலத்துல எல்லாம் ராஜா நகர்வலம் வரும் போது, எழுவகை பருவப் பெண்களும் அதாவது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை அப்புறம் பேரிளம்பெண், இப்படி எல்லா வயசுப் பொண்ணுங்களும் அந்த ராஜாவை சைட் அடிப்பாங்கன்னு!
ஸோ, சைட் அடிப்பது அவங்க உரிமை! அடிச்சுட்டுப் போகட்டும்!” என்றாள்.
“பார்த்துக்க.. உன் மாமாவோட பெருமைய” அவன் செல்லமாக பீற்றிக் கொண்டான்.
“ஆமா பெரிய பெருமை, ஏழு கழுத வயசாவுது, இன்னும் தலையை நல்லா துவட்டிக்க தெரியல” என்றபடியே அவள் டவலை எடுத்து அவன் தலையை துவட்ட முயல, அவனோ அவள் கட்டியிருந்த காட்டன் சாரியின் பின்னை கழற்றி விட்டு, அவள் புடவையில் தலையைத் துவட்டினான்!
“ச்ஷ் என்ன மாமா, இப்ப தான் கஷ்டப்பட்டு அயர்ன் பண்ணி கட்டினேன், ஸ்கூல் போக, இப்படி பண்ணிட்டியே” அவள் சலித்துக் கொள்ள,
“ஆமா பொல்லாத புடவை! என் மானத்தை வாங்கன்னு தானே இந்த முன்னூறு ரூவா புடவையா வாங்குற?”
“அப்படி இல்லீங்க, நான் தான் ஏற்கனவே சொன்னேனே, அங்க வேலை செய்ற மத்த டீச்சர்ஸ் எப்படி புடவைக் கட்டுறாங்களோ நானும் அப்படி தான் கட்டினா தான் நல்லது.
நீங்க எடுத்துக் கொடுக்கிற புடவை விலையெல்லாம் கிட்டத்தட்ட அவர்களின் ஒரு மாத சம்பளம்! அது மாதிரி நான் தினமும் கட்டிட்டுப் போனா, வீணாக என் மேல பொறாமையும் துவேசமும் தான் வரும்!”
“நீ ஏற்கனவே பேசுவ, இப்ப ஸ்கூலுக்கு போனப்புறம் ரொம்ப பேசுது இந்த வாய்.. அத..” அவன் அவள் இதழ்களில் வன்மையாக முத்தமிட்டான்!
“அய்யோ மாமா, என்ன நீ இப்பெல்லாம் ரொம்ப கடிச்சு வைக்கிற, அப்படியே மார்க்ஸ் விழுது! போன வாரம் கூட என் கிளாசில் ஒரு குட்டிப் பொண்ணு கேட்டே விட்டா! மேம் உங்க கழுத்துல ஏதோ woundன்னு, எனக்கு அப்படியே மானமே போய்டுச்சு!
இல்லடா, அது ஏதோ இன்செக்ட் பைட்(insect bite) – பூச்சிக்கடின்னு சொல்லி சமாளிச்சா, இதோ, உங்க பையன் இருக்கானே, அவன் பங்குக்கு அவன் வேறே, நம்ம வீட்டுல ஏது இன்செக்ட்ஸ் ன்னு கேட்டு வச்சான்!”
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
தட்டியது மித்து தான்! திவ்யா கூடவே அவர்கள் வீட்டிற்கு சென்றவன் திரும்பி வந்து கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்!
“வந்துட்டான் என் எனிமி, கொஞ்ச நேரம் என் பொண்டாட்டியோட இருக்க விட மாட்டான்.” என்று ராகவ் புலம்ப,
“என்னங்க அவனைப் போய் எனிமி அது இதுன்னு.”
“ஆமா அவன் என் கூட எல்லாத்துக்கும் போட்டிக்கு வரான்! நீயும் அவனுக்கு தான் பர்ஸ்ட் ப்ரையாரிட்டி குடுக்கிற!”
“நீங்க இப்படி சொல்றீங்க, அவன் என்ன பண்ணி வச்சுருக்கான் பாருங்க” என்று மித்து வரைந்த ஒரு படத்தைக் காட்டினாள்.
அதில் ஒரு பெரிய வீடும் அதற்கு பக்கத்தில் ஒரு மரமும் அதன் கீழே ஒரு குடிசையும்!
“என்னடி இது?”
“ம். இந்த பெரிய வீட்டில், நீங்க, அவன், அப்புறம் அவனோட ஒரு புது மம்மியாம்! வெளியே இருக்கும் இந்த ஹட் எனக்காம்! நான் அதில் தான் இருக்கனுமாம்!”
“ஏண்டி அவனுக்கு உன் மேல இவ்வளவு கோபம்!”
“ம்ம். நான் அவனுக்கு செல் போனை, சினேக் கேம்ஸ் விளையாடக் கொடுக்காததால வந்த கோபம்!”
ராகவ் அதை வாங்கிப் பார்த்தவன் சிரித்து விட்டான்!
“சீக்கிரம் கதவை திறங்க, அப்பா அங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” வெளியே இருந்து மித்து கத்தினான்.
“நான் சாரி கட்டிக்கிட்டு இருக்கேண்டா” என்று வித்யா பதில் சொல்ல,
“நீங்க என்னப்பா பண்றீங்க, எனக்கு போரடிக்குது இங்க?”
“நான் அவ புடவைக்கு ப்ளீட் எடுத்து விட்டுட்டு இருக்கேண்டா, இரு வரேன்” ராகவ் குரல் கொடுத்தான்!
“பாரு அவனுக்கு போர் அடிக்குதாம், அதான் அவனுக்கு ஒரு தங்கச்சி பாப்பா ரெடி பண்ணலாம்னா விடுறானா பாரு!
ஏற்கனவே ஒண்ணு மிஸ் ஆகிடுச்சு, சரி அடுத்தத ரெடி பண்ணலாம்னா முடியுதா பாரு!” ராகவ் சலித்துக் கொண்டான் போலியாக!
ஆமாம். வித்யாவுக்கு இரண்டு வருடங்கள் முன்பு ஒரு குழந்தை உண்டாகியிருந்தது.
ஆனால், அவள் அப்பா தமிழரசு ஹார்ட் அட்டாக்கில் இறந்த போது, வித்யா கதறிய கதறலில், கட்டுப்படுத்த முடியாத அளவு அவள் புரண்டு உருண்டு அழுததில், அந்த ஐம்பது நாள் கரு கலைந்தே விட்டது!
அதற்கு பிறகு இன்னும் உண்டாக வில்லை!
அவளும் அவள் அம்மா வேறு அவள் அக்கா அண்ணன் வீட்டுக்கே துணையாக அமெரிக்கா சென்று விட்டதால், அதற்கு தயாராக இல்லை!
“நீ பெத்துக்கோம்மா, நான் துணையா இருக்கேன்” என்று திவ்யா அம்மா வேறு சொல்லியிருக்கிறார்! பார்ப்போம் என்று இருக்கிறாள்!
ஒரு வாரம் கழித்து..
பொண்டாட்டி பிள்ளையைக் காண என்று ஓடோடி வந்திருந்தான் ராகவ்!
ஆபீஸ் டூர் முடிந்து அப்படி தான் வருவான் எப்போதும்!
அவர்களுக்கு உதவ என்று திவ்யா அம்மாவும் மித்துவை அவர்கள் வீட்டிலயே சில சமயம் வைத்துக் கொள்வார்!
மனைவியைக் கட்டிக் கொண்டு ராகவ் கேட்டான்.
“மயிலும்மா, எனக்கு ஒரு டவுட்!” என்றான் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு!
“என்ன மாமா?”
“நான் இப்படி ஊர் ஊரா சுத்துறேன், நல்ல கலரா சூப்பரா நார்த் இண்டியன் பொண்ணுங்களோட எல்லாம் ஹேன்ட் ஷேக் பண்ணி பேசிட்டு வரேன், சில சமயம் அவங்க கல்ச்சர்படி லேசா ஹக் பண்ணிக் கூட!
அப்புறம் இங்கயும் உனக்கு தெரிஞ்சே என்னை பொண்ணுங்க எல்லாம் சைட் அடிக்கிறாங்க, உனக்கு என் மேல கொஞ்சம் கூட சந்தகேமே வராதா?”
“ம்ம்ஹும்.. வரவே வராது மாமா, ஏன்னா இங்க பூராவும் நானும் மித்துவும் மட்டுமே இருக்கோம்னு எனக்கு நல்லா தெரியும்! அவன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியவள்,
நீ தானே சொல்லுவ மாமா, இது நம்ம வீடு இல்ல, நான் பார்த்து பார்த்துக் கட்டின கூடுன்னு, இந்த கூட்டுக்குள்ள நம்மைத் தவிர வேறு யாருக்கும் இங்கே அனுமதியில்ல!
அது எனக்கு நல்லா தெரியும்! ஸோ எனக்கு ஒரு டவுட்டும் வந்ததில்ல, இனியும் வராது!”
“சரி.. அது இருக்கட்டும், நான் ஒரு பேச்சுக்கு கேக்குறேன், ஒரு வேளை, எனக்கு எந்த பொண்ணு மேலயாவது ஈர்ப்பு எற்படுதுன்னு வச்சுக்க, அப்ப என்ன பண்ணுவ நீ?”
“ம்ம். அந்த பொண்ணுகிட்ட போய் பேசி, உனக்கு உஷார் பண்ணிக் கொடுப்பேன்!”
“அடிப்பாவி என்ன பேசுற நீ?” ராகவ் அதிர்ந்துப் போய் கேட்டான்!
“நிஜமா மாமா, நான் வெறும் பேச்சுக்கு எல்லாம் சொல்லல! நிஜமா தான் சொல்றேன்! எனக்கு என் மாமாவோட சந்தோசம் தான் முக்கியம்!
அது அந்த பொண்ணு தான்னா, எப்பேர்ப்பட்டாவது அந்த சந்தோசத்தை என் மாமாவுக்கு வாங்கிக் கொடுப்பேன்!
இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமா பத்தாம் பசலித்தனமா தெரியலாம்!
ஆனா நான் இப்படி தான்!
என்னோட லவ்வுல லாஜிக் எல்லாம் பார்க்காதே, இது ஒரு அன்கண்டிசனல் லவ்!
நீங்க இந்த நளாயினி கதை கேள்விப்பட்டு இருக்கீங்களா, அதான் அவ புருஷன் கேட்டான்னு, அவனை கூடையில் உக்கார வச்சு, தலையில் சுமந்து தாசி வீட்டுக்குப் போனதா சொல்லுவாங்களே அந்த கதை!
இந்த காலத்துல அதைக் கேட்டா, எந்த பொம்பளைக்கும் கோபம் தான் வரும்!
ஆனா நான் மட்டும் அவளோட லவ் டெப்த் பத்தி தான் யோசிப்பேன்!
இது சரியா தப்பான்னு எல்லாம் தெரியல! எனக்கு இப்படி தான்! நான் இப்படி தான்!”
ராகவ் அப்படியே பேச்சிழந்து போய் விட்டான்! அவன் கண்களில் கண்ணீரே வரத் தொடங்கி விட்டிருந்தது!
“நான் அப்படி என்ன உசத்தி இவளுக்கு! நான் அப்படி என்ன புண்ணியம் செய்துருக்கேன் இவளை மனைவியா அடைய!”
அவன் மனம் அப்படியே நெகிழ்ந்து போய் விட்டிருந்தது!
அவளை அப்படியே இறுக்கி கொண்டான்!
“ஆனா மாமா இதில் ஒரு கண்டிசன் இருக்கு!”
“அவன் என்ன?” என்பது போல பார்க்க,
“நீ அவங்க யார் மூலமும் பிள்ளை மட்டும் பெத்துக்க கூடாது, உன் பிள்ளைன்னா அது நம்ம மித்து மட்டும் தான்!
உன் பொண்டாட்டியா அது எனக்கு கொஞ்சம் விதி விலக்கான கடமை! ஆனா ஒரு அம்மாவா இதுவும் என் கடமை!”
“போடி லூஸு! நான் ஏண்டி இந்த தேவதையை விட்டுட்டு வேற ஒண்ணை தேடித் போகப் போறேன்!”
மறுநாள் காலை.
ராகவ் ஜெய்ப்பூர் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன் ஆபிஸ் வேலையாக!
“மாமா, இந்த மாசக் கடைசியில நம்ம கேஸ் ஹியரிங் வருதாம்! வக்கீல் போன் பண்ணினார்! நீ அத அனுசரிச்சு உன் டூர் ப்ரோக்ராமை வைச்சுக்கோ!”
“ம்ம். சரிடி” என்றவன் , ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் போனான்!
அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா!
அவள் செய்த முட்டாள்த் தனமான ஒரு வேலையால் தானே இப்படி கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியது ஆகி விட்டது!
ஆம், ராகவ் அவன் அப்பா இராஜேந்திரன் மேலேயே கேஸ் போட்டு விட்டான்!
வித்யாவின் அப்பா இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கவென்று ரொம்ப நல்லவர் மாதிரி ராஜேந்திரன் வித்யாவிடம் பேசினார்!
அவளும் என்ன இருந்தாலும் மாமனார் என்ற மரியாதையில் பேச ஆரம்பித்து இருந்தாள்!
ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது , அவர் வீட்டிற்கு அடுத்த வீட்டில் புதியதாக குடி வந்திருப்பவர்கள் அவளிடம் படிக்கும் ஒரு ப்ரீகேஜி மாணவன் என்றும் அவனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு அவன் மிஸ் கட்டாயம் வர வேண்டும் என்று அழுது அடம் பிடித்து வர சொல்லியிருந்தான் அந்த சிறுவன் என்றும் அவரிடம் போனில் சொல்லியிருந்தாள் ஆர்வக் கோளாறில்!
அந்த பிறந்த நாள் பார்ட்டி அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நடந்து கொண்டிருக்க, பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இராஜேந்திரன் இவளையும் மித்துவையும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்!
அதைப் பார்த்து மனம் இறங்கிய வித்யா, பங்க்சன் முடிந்த பின் மித்துவை அழைத்துக் கொண்டு அவரைக் காண நேராக அவர் வீட்டுக்கே ஏதோ ஒரு தைரியத்தில் சென்றே விட்டாள்!
பேரனைத் தூக்கிக் கொஞ்சினார் இராஜேந்திரன்!
சட்டென்று அப்போது அவ்வளவு நேரம் வெளியே சென்றிருந்த ஈஸ்வரி, புயலென உள்ளே நுழைந்தாள்!
அவளைக் கண்டவுடன் மித்துவை சட்டென கீழே இறக்கி விட்டவர், பதில் பேச முடியாமல் திகைத்து நின்றார்!
“நீ எங்கடி இங்க?” எடுத்தவுடன் ஏக வசனம் தான்!
“ம்ம் மாமா தான் மித்துவ பார்க்க ஆசைப்பட்டார் அதான் வந்தேன்!”
“இல்ல, இல்ல நான் எல்லாம் கூப்பிடவே இல்லை, அவளா தான் உள்ளே வந்தா” பயத்தில் இராஜேந்திரன் கிட்டத்தட்ட அலறினார்!
“வெளியே போடி..” என்று வித்யாவைப் பார்த்து கத்தியவள் அதோடு நில்லாமல், அவளின் நீண்ட தலைமுடியைப் பிடித்து இழுத்து சென்று வெளியே துரத்தினாள்!
வித்யாவிற்கு அவள் ஸ்டுடென்ட் வீட்டு முன்பு இப்படி நடந்ததில் ரொம்பவும் அவமானமாக போய் விட்டது!
ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்று விட்டாள்!
இதை அறிந்த பின் ராகவ் கோபமாகி அவளை அப்படியே அறைந்து விட்டான்!
“அறிவிருக்காடி உனக்கு? என்கிட்ட சொல்லாம நீ ஏன் அங்க போன? எனக்கு தெரியாதா அவர்கிட்ட பிள்ளையைக் காட்ட? என்ன இது அதிகப் பிரசங்கித்தனம்!” முதல் முதலாக அவனிடம் பெற்ற அடி!
விசயம் கேள்விப்பட்ட அவன் பெரியப்பா பார்த்தசாரதி அப்படியே ரவுத்திர மூர்த்தி ஆகி விட்டார்!
யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை கழுத்தைப் பிடித்து வெளியே விரட்டுவது? இது ராகவ் வீடு! அவன் அம்மா நந்தினியின் வீடு!
“நான் தான் அப்பவே உன் கிட்ட தலை தலையா அடிச்சுகிட்டேன்டா, உனக்கு கல்யாணம் ஆனவுடனே அவங்கள அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புன்னு, நீ தான் அப்பா பாவம், அவர் காலத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லி விட்டு வச்சிருந்த! பாரு, இப்ப அது எந்த இடத்தில் வந்து நிக்குதுன்னு!”
அவர் சொன்னபடி , அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பும்படி வக்கீலை வைத்து எவிக்சன் நோட்டிஸ் அனுப்பினார்கள்!
ஆனால் ஈஸ்வரியோ, நந்தினியின் கணவன் என்கிற முறையில் இராஜேந்திரனுக்கும் அந்த வீட்டில் உரிமை உண்டு அதெல்லாம் வெளியே போக முடியாது என்று சொல்லி, இப்போது வழக்கு இப்போது கோர்ட்டில்!
நந்தினி சாகும் போது அந்த வீட்டை முழுக்க முழுக்க ராகவிற்கு செட்டில்மெண்ட் எழுதி பெரியப்பாவை கார்டியனாக போட்டு அதை ரிஜிஸ்டரும் செய்து விட்டே தான் போய் இருந்தார்!
ஆனால் அந்த டாகுமென்ட் பெரியப்பாவின் பேங்க் லாக்கரில்!
ராகவின் கெட்ட நேரம், பெரியப்பாவின் அரசியல் தொடர்புகள் காரணமாக, அவர் சார்ந்திருந்த கட்சி முக்கிய பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து, அவரோடு தொடர்புடைய பெரியப்பாவின் வீட்டிலும் ரெய்டு நடந்து அவரின் பாங்க் லாக்கர்கள் ப்ரீஷ்(Freeze) செய்யப்பட்டிருக்க, ராகவால் உடனே நிரூபிக்க முடியவில்லை!
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார்கள்!
இப்போதும் அதை தான் செய்யப் போகிறார்கள்!
அடுத்த சிகரெட்டையும் எடுத்தான் ராகவ்! இப்போதெல்லாம் இது ஜாஸ்தியாகிக் கொண்டிருக்கிறது!
அவனுக்கு சமீப காலமாக ஆபிசிலும் தொந்தரவு!
சியாம் நல்லவன் தான்! ஆனால் அவனது மனைவிக்கு இவனைக் கண்டால் பிடிக்க வில்லை!
சியாமிடம், அந்த கம்பெனியில் அவனுக்கு இருக்கும் இந்த அளவு முக்கியத்துவமும் ஆதியில் இருந்தே பிடிக்கவில்லை!
இப்போது அதை மேலும் அதிகப்படுத்தி இருந்தான் அவளின் தம்பி!
அமெரிக்காவில் எம்பிஏ படித்து விட்டு வந்திருக்கும் அவனை ராகவின் இடத்திற்கு கொண்டு வர அவள் முயற்சி செய்தாள்!
அதற்கு அவளைத் தூண்டியவள் அவளின் தம்பி மனைவி தான்!
அந்த தம்பி லவ் மேரேஜ் பண்ணியிருந்தான்! அந்த பெண் ஈஸ்வரியின் அண்ணன் மகள்!
“காசு இருந்தா தானே கேஸ் நடத்துவ” என்று அவன் வருமானத்தில் கை வைக்க எல்லா வேலைகளையும் செய்ய தொடங்கி விட்டாள் ஈஸ்வரி!
ராகவ் எப்படி மீள்வான்?
error: Content is protected !!