Skip to content
Post Views: 1,306
கீதம் 💜 24
இல்லத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை கண் காட்டியபடி, ” இங்க பசங்க எல்லாம் இருக்காங்க. கொஞ்சம் தள்ளி போய் பேசுவோம் ” என்றவுடன் எதுவும் பேசாமலே காரை கிளப்பி விட்டான். அது புறநகர் பகுதி என்பதால் அவ்வளவாக மக்கள் கூட்டம் தெருவில் இல்லை. சற்று தொலைவில் சென்ற பின் நிற்பாட்டினான். அவனுக்கும் திடீர் திருமணம் எதனால் என புரியவில்லை.
Advertisement
” ஐ அம் சாரி ” என்றாள் உடனே.
Advertisement
புருவம் தூக்கி என்னவென கேட்க.
Advertisement
தயக்கமாய் அவன் முகத்தை பார்த்து ” நம்ம கல்யாணம் பத்தி உங்ககிட்ட ஒன்னும் சொல்லாம எல்லார் முன்னாடியும் சொன்னதுக்கு “
Advertisement
” பரவாயில்ல,. இப்போவாவது என்கிட்டே சொல்லணும்னு தோணிச்சே., ஆமாம்., டக்கு டக்குனு பிளான் பண்றீங்க., நான் வரலைனா என்ன பண்ணுவீங்க.,? ” என்றவன் கேட்க.
” நான் கூப்பிட்ட உடனே வருவேன்னு சொன்னிங்களே.., அந்த நம்பிக்கை தான்.” அழுத்தமாக சொன்னபடி அவனை பார்க்க.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் ” நிஜமா இப்போவே மேரேஜா? ” என்றான்.
” ஏன் வேணாமா? ” தலையை மறுப்பாய் அசைத்து தவிப்புடன் கேட்க.
” இல்லைம்மா., இப்போ,., அப்பா கூட டேட் ஒன்னும் சொல்லல. ” சற்றே யோசனை படர்ந்த முகத்துடன் அவளிடம் கேட்க.
” நீங்க அங்க ரொம்ப தனியா தவிச்சுட்டு இருக்கீங்கன்னு ராஜேஷ் அண்ணாவும், அண்ணியும் வந்து அத்தைகிட்ட சொல்லி இருக்காங்க. அவங்களும் அதை பத்தி பீல் பண்ணிட்டே இருந்தாங்களா, நீங்க வரும் போதே மேரேஜ் பண்ணி அனுப்பணும்னு மாமா முடிவு பண்ணிட்டாங்க. காலையில் தான் டேட் பிக்ஸ் பண்ண ஐய்யர் பார்த்துட்டு வந்தாங்க அத்தை. நீங்க இங்க வந்த உடனே மாமா போன் பண்ணி, அதே டேட்ல பிக்ஸ் பண்ணிட்டாங்க. ” என்றாள் விளக்கமாய்.
” எப்போ ? “
” வர்ற சண்டே ” தயங்கி சொல்ல.
” ஏய், விளையாடுறிங்களா? மேரேஜ் முடிச்சுட்டு உன்னை எப்படிடி விட்டுட்டு இருக்க முடியும். என்னால முடியாது. ” என்றான் உடனே.
” உங்கள யாரு விட்டுட்டு போக சொன்னது? நானும் தனியா எல்லாம் இருக்கமாட்டேன். கூடவே வந்துருவேன் ” என்றவள் பதிலில் அதுவரை இருந்த இறுக்கம் தளர சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தவன், உற்சாகத்தில் அவளை இறுக்கி அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு விலகும் போது தான், தான் செய்ததை உணர்ந்தான்.
” அச்சோ! கையை தொட்டத்துக்கே அன்னிக்கு அடிச்சா. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் முறைச்சா. இப்போ என்ன பண்ணுவாளோ?” மனதில் எண்ணியபடி அவளை பார்த்தவனோ திகைத்தான்.
அவளோ கன்னங்கள் சிவந்து இருக்க தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.
அவளின் கன்ன சிவப்பை ரசித்தவனோ, ” அச்சோ!, என் பொண்டாட்டி வெட்கம் எல்லாம் படுறாளே.” என அவள் தலையை நிமிர்த்தி பார்க்க.
இமைகள் இரண்டிலும் நீர் படலம் சூழ்ந்து இருக்க, உதடுகள் துடித்து கொண்டு இருந்தன.
பதறியபடி ” என்னடா., ஏன் ? என கண்களை காட்டி வினவ,
அவனின் தோளில் தலை சாய்த்தவள், அவன் கரத்தினை இறுக பற்றி கொண்டாள். சில நொடி கடந்தும் எதுவும் பேசினால் இல்லை. அவளின் எண்ணம் புரிந்தவனும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் பார்த்து இருந்தான். அவனுக்கும் அது தேவையாய் இருந்தது. நிமிடங்கள் கடந்தும் மௌனம் தொடர ” நந்திதா, என்னாச்சு?” மென்மையாய் மறுகரத்தால் அவளின் தலையை வருட .
” அரு” மொத்த காதலையும் ஒத்தை வார்த்தையில் கொட்டி உள்ளமுருக அழைத்தாள்.
இத்தனை நாட்கள் கடந்து அவள் தன் பெயரினை உரிமையாய் கூறுவதை கேட்டவன் மனம் கனிந்தான்.
” என்னடா..,” அவளின் தலை மீது இவனும் தலை சாய்த்து கொண்டு பூவுக்கும் வலிக்குமோ என மென்மையாய் பேச.
” சாரி.., ” என்றாள் மீண்டுமே
” இது எதுக்குமா? “
” உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துட்டேன்., எனக்காக ஊருக்கே வராம இருந்திட்டிங்க., ஐ அம் எஸ்ட்ரீம்ல்லி சாரி. ” மெல்லிய குரலில் பேச.
” ஓஓ.., மேடம்க்கு இப்போ தான் என்னை பத்தி கவலை எல்லாம் வருது.”
” கவலை எல்லாம் இல்லாம இல்லை.வண்டி வண்டியா இருக்கு. சொல்ல தான் முடியல., ” மெல்லிய குரலில் முனங்கியவள்
” உங்கள் பார்க்காம எல்லாரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க. என்னால தானே.., ” என்றாள்.
” இப்பவும் அவங்கள பத்தி தான் யோசிக்கிற., அப்போ நான் முக்கியம் இல்லையா.,” என்றான் செல்ல கோபத்துடன்.
“எங்க இருந்தாலும் உங்களை என்னால புரிஞ்சுக்க முடியும். தெரியும்.” அழுத்தமாய் சொல்ல.
” பாருடா., இது கூட தெரிஞ்சி இருக்கே., ” என்றான் சிரித்து கொண்டே பின்
” இவ்ளோ தெரிஞ்சி என்ன பண்ண., இன்னும் லவ் பன்றேன்னு ஒரு வார்த்தை சொல்லல. “
” நீங்க தான் என்னை டெய்லி பார்த்துட்டு இருந்திங்களே., உங்களுக்கே தெரியுமே., பின்ன என்ன “
” நான் உன்னை பார்த்துட்டுட்டு இருக்கேன்னு எப்படி சொல்ற., உனக்கு தெரியுமா.,?
” வரமாட்டேன். பேச மாட்டேன்னு தானே சொன்னிங்க., பார்க்க மாட்டேன்னு சொல்லவேயில்லையே? நான் சொன்னால் தான் உங்களுக்கு புரியுமா., இல்லைனா தெரியாதா ? சற்றே முகம் சாய்த்து, புருவம் உயர்த்தி ” தெரியாதா.,?” என மீண்டும் கேட்டவளிடம் என்ன சொல்வான் உன்னை பற்றி தெரிந்ததால் தானே ஓடி வந்தேன் என்றா சொல்ல முடியும்.
” ஹ்ம்ம், ” தலையை மட்டுமே அசைத்து ஆமோதிப்பை வழங்க.
” அகைன் சாரி “
‘!!!”
“உங்களுக்கு ஓகே சொல்லாம இவ்ளோ நாள் சுத்தல்ல விட்டதுக்கு” மெதுவே அவன் நாடியை முட்டி, சற்றே தலை உயர்த்தி சொல்ல.
” நீ தான் அன்னைக்கே நான் சொன்னதை ஏத்துகிட்டியே. பின்ன என்னமா.. ?”
“நிஜமா என் மேல் கோபமே இல்லையா? “
இல்லை என விழி முடி, மறுப்பாய் தலையசைக்க.
“எனக்காக ஏன் இவ்ளோ பண்றீங்க? “அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து தவிப்புடன் கேட்க
” நான் என்னமா பண்ணேன். உன்னை தவிக்க விட்டு ஓடி போனதை தவிர ?”
” பொய் சொல்லாதீங்க, எனக்கும் எல்லாம் தெரியும். நீங்க சொல்லி தான் உங்க ரூம்ல மாமா என்னை கான்சல்ட்சன் பார்க்க வச்சாரு. நிர்வாகத்துலயும் உட்கார வச்சாரு. அவருக்கு நம்மள பத்தி முன்னமே தெரியும் தானே.”
” ஹ்ம்ம்.., “
” அந்த ஊர்ல படிக்க கஷ்டப்படுற பொண்ணுங்களை எல்லாம் உங்க சொந்த செலவுல படிக்க வைக்குறிங்க. எனக்காக..,”
” கரெக்ட். பட் சின்ன மிஸ்டேக், உனக்காக இல்லை, நமக்காக. “
“அப்புறம்..,” என விலக போனவளை,”ஒய், என்ன சொல்றத இருந்தாலும் இந்த இடத்தை விட்டுட்டு நகரவே கூடாது. இப்படியே சொல்லு..,” என இன்னும் வாகாய் அணைத்து கொண்டான்.
அவளும் அதனை மறுக்காமல் ” பூவிழியை அரவிந்த் அண்ணாகிட்ட பேசி அன்பு இல்லத்துல அவளை வேலைக்கு வச்சது., இன்னும் நிறைய சொல்லலாம், அவ்ளோ பண்ணிருக்கீங்க, ஆனால் ஒன்னுமே பண்ணலன்னு சொல்றிங்க “
அவனை பற்றி இத்தனை நாட்களில் புரிந்த விஷயங்கள்தானே, அவனை எண்ணி இத்தனை தவிக்க வைத்தது. எங்கோ இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும், அவள் செய்யும் அனைத்து உதவியிலும் கரம் கொடுப்பவன், தன்னை எங்கும் வெளிகாட்டுவதே இல்லையே. அதை அவளிடம் கூட கூறாமலே அவளுக்காய் இருப்பவனை அவள் எப்படி இனி பிரிந்து இருப்பாள்.
” சரிடா., இது எல்லாமே ஏற்கனவே நான் பண்ண வேண்டியதுன்னு யோசிச்சு வச்சது, நீ ஸ்டார்ட் பண்ண, நான் ஹெல்ப் பண்ணேன் ., உன் பெயருக்கேத்த மாதிரி நீ எப்பவும் சந்தோசமா சிரிச்சிட்டே இருக்கனும். அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்..,” என்று உச்சதலையில் முத்தமிட்டவன் அழுத்தி சொல்ல,
” தவிக்காதடி, வலிக்குதுனு என்கிட்ட சொல்லிட்டு, எல்லாத்தையும் விட்டுட்டு போய், வலிக்க வலிக்க தவிச்சுட்டு இருக்கீங்களே, உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர இப்போ நானும் ரெடி. “அழுத்தம் திருத்தமாய் அவன் முகம் பார்த்தப்படியே சொன்னாள்.
அவனின் அன்பில் நெகிழ்ந்து இருந்தவள் அப்போது தான் உணர்ந்தால், அவனின் தோளில் ஒய்யாரமாய் சாய்ந்து இருந்ததை, அவனும் விலகாமல் இருப்பதை.
அவனோட கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், கணவன் என மனதில் வரித்து கொண்டு, நொடி பொழுதையும் அவன் வசமாக்கி கொண்டு இருப்பவன் தன்னை சேயாய் எண்ணி தோளில் தாங்கி கொண்டு, அவள் கூறும் அனைத்து விஷயங்களையும் செவிமடுத்து, பதில் சொல்லி கொண்டு இருந்தாலும், அவனின் பார்வை எந்த களங்கமுமின்றி நேசத்தை மட்டுமே வெளிப்படுத்துவதை உணர்ந்தாள்.
இத்தனை அருகில் ஒரு பெண் இருந்தால் ஆண்மகன் என்னவெல்லாம் செய்ய முற்படுவான் என அறியாதவள் இல்லையே. தன்னிடம் கூட கண்ணியம் காட்டும் அவனை இன்னுமே பிடித்தது. மனதில் இருந்த அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டதால் இறுக்கம் தளர்ந்து மனம் லேசாவதை போல உணர்ந்தாள். குறும்பு தலை தூக்க அவனை சீண்டும் பொருட்டு
” எவ்ளோ நேரம் இப்படி இருக்குறது..,” தங்களை சுட்டி காட்டி கேட்க
” ஜஸ்ட் டெய்லி ட்வீன்ட்டி போர் ஹௌர்ஸ் மட்டும்..,” சொல்லி விட்டு ஆரவ் குறும்பாய் கண் சிமிட்ட
” ரொம்ப கம்மியா சொல்றிங்க..,” என இவளும் மெல்ல இதழ் விரித்து சிரித்தபடி விலக முற்பட வேண்டாம் என மறுத்தவனிடம்
“கிளம்ப வேணாமா.,” என்க
அவளை பார்த்தபடி “கிளம்பணுமா” என்றான்.
” கிளம்பணுமே. உங்களை பார்க்க எல்லாரும் இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க.” என்றவுடன் பேசியபடியே காரினை கிளப்பினான்.
வீட்டினை வாசலில் காரினை நிறுத்தி, இறங்கும் வேளையில் அவன் அருகாமையை விட்டு, அவள் விலகி அமர முற்பட சட்டென்று கை பற்றி இழுத்ததில் அவன் மேலேயே விழுந்து விட்டாள். அதை கூட கவனிக்காமல், ” ஓய்! நம்ம வீட்டுக்குள்ள போனதும், அத்தையை விட்டு வரமாட்டேன், ஹாஸ்பிடல் விட்டுட்டு வர மாட்டேன்னு கதை சொல்ல மாட்டல்ல. இனிமேல் என் கூட வரமாட்டேன்னு மட்டும் சொல்லி பாரு. கொன்றுவேன் உன்னை” அவளின் இதழை நிமிட்டி பிடித்து அவன் பேசியதில் அவள் நிலையை கூறவும் வேண்டுமா?
முழுதாய் அவன் மேல் சாய்ந்து, அவனின் ஒரு கை இடுப்பை அணைத்தபடியும், மறு கை உதட்டை பிடித்தபடியும் இருக்க, நூலிழை அளவு வித்தியாசம் தான் இருவரின் இதழ்களுக்குமிடையே இருந்தது. அவன் கேள்விக்கு பதில் சொல்ல கூட அவளால் இயலவில்லை, தலையை மட்டும் ஆட்டி சரியென்றவளிடம் ” குட். இப்படியே இருக்கனும் சரியா ” என்றபின்னே அவன் விட சடாரென கதவை திறந்து வெளியேறி விட்டாள். அதற்கு பின் தான் தாங்கள் இருந்த நிலையே அவனுக்கு புரிந்து அவளை வடை போச்சே ரீதியில் ஏக்கமாய் பார்த்தான்.
வந்த சிரிப்பை அடக்கி கொண்டு ” அச்சோசோ.., மிஸ் பண்ணிட்டீங்களா? என்றாள் குறும்பாக.
அவளில் தன்னையே தொலைத்தவன் ” மிஸஸ் பண்ணிட்டு, மிஸ் பண்ணத எல்லாம், மிஸ் பண்ணாம வாங்கிக்குவேன். கேக்காமலே எனக்கு எல்லாமே கிடைக்கும்” அவனும் குறும்புடன் கண் சிமிட்டி சிரித்தபடியே உள்ளே நுழைந்து படியேறினர்.
” வாங்க சார்., ரொம்ப பிசியோ ., இப்ப தான் எங்கள பார்க்க நேரம் கிடைச்சுதா? நக்கலாய் தர்ஷி வரவேற்க.
அவளை தாய்மையின் பூரிப்பில் பார்த்தவன் முகம் மலர ” தர்ஷி, எப்படிடா இருக்க” நல விசாரிப்புகள் முடிந்து பேசி கொண்டிருந்தனர்.
” ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு. என் தங்கச்சி அறிவா, அழகா இருக்குறா. அதான் கவுந்திட்டீங்களா?” விழி சிமிட்டி ஆரவ்வை பார்த்து ராஜேஷ் கேட்க
“கவுந்தேனா, கவுத்தேனா தெரியல” அவளை பார்த்தவாரே “கவுந்துட்டோம் ” என்றான் குறும்புடன்.
” என் மருமக சேலையில் எவ்ளோ அழகா இருக்கா” நெட்டி முறித்து சாவித்ரி சிலாகிக்க ,
அவள் புறம் குனிந்தவன் ” இல்லைனாலும் அழகா தான் இருப்பேன்னு நினைக்கிறேன், அம் ஐ கரெக்ட் .” கிசுகிசுக்க
இதை ஏன் இவ்ளோ மெதுவா சொல்றாரு, யோசித்தவளோ வெட்கி முகம் சிவந்தாள். அதை மறைக்க “அத்தை, நான் கீழே போறேன். ஒர்க் இருக்கு” என்று எழுந்தவளை தொடர்ந்து அவனும் எழ
“டேய்! நீயும் என்னடா பின்னாடியே போற. உட்காரு” தர்ஷி கலாய்க்க
“இல்லைடா., நான் கேஸ் பார்த்தேனா அப்பா மேரேஜ் வேலை எல்லாம் பார்க்க ஈஸியா இருக்கும். சீக்கிரம் எல்லாம் அரேஞ்ச் பண்ண முடியும் ” பொறுப்பாய் பதிலளித்தவனை கண்டு.
“நம்புறோம், நம்புறோம்., என் மச்சானுக்கு இருக்கிற தெளிவு யாருக்குமே இருக்காது. பக்கத்து பீல்டிங்கல இருக்குற உன்னை சைட் அடிக்க நான் எந்திரிச்சி போகணும். ஆனால் இவரு ஒரே கேபின்ல பக்கத்துல உட்கார்ந்து, கேஸ் பார்த்துட்டு சந்தடி சாக்குல சிந்து பாடலாம். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?” என்றவனிடம்
சிரிக்காது ” எத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும். ஓகே..,” என கூறி கொண்டே நடை பயின்றவனை பார்த்து அவர்களால் சிரிக்க தான் முடிந்தது.
error: Content is protected !!