முகுந்தை அவங்க வேற ரூமுக்கு கூட்டிட்டு போனதும் நான் நிஜமா மயங்கிட்டேன்.
மயக்கம் தெளியும் போது ஒரு நர்ஸ் மட்டும் அங்கே இருந்தாங்க.
நானா கேட்கப்போய்.. எனக்கு எல்லா விசயமும் தெரியுமுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதேன்னு அமைதியா இருந்தேன்.
அந்த நர்ஸ் டாக்டர்கிட்ட போய் சொல்லிட்டு, வரும் போது பாப்பாவோட வந்தாங்க.
“இந்தா உன் பொண்ணு.. ஃபீட் பண்ணு. உன்னை அட்மிட் பண்ணவங்க வெளியே இருக்காங்க.
கொரோனா பாதுகாப்புக்காக யாரையும் அலோவ் பண்ண மாட்டோம்..” ன்னு அவங்க புதுசா ஒரு கதை சொன்னாங்க.. எனக்கு உண்மை தெரியுமுன்னு தெரியாம.
திரும்ப நான் தூங்கும் நேரம் ட்யூட்டி மாத்த வந்த நர்ஸ்,
“என்னடீ.. இந்த பேஷன்ட் பெரிய விஐபி யா..?
கூடவே இருக்கனும்.. டாக்டரை தவிர வேற யாரையும் உள்ளே அலவ் பண்ண கூடாது..ன்னு அத்தனை கண்டீஷன் போட்டு ட்யூட்டிக்கு அனுப்பியிருக்காங்க..” ன்னு கேட்டதுக்கு,
அவங்க சொன்ன பதிலை வச்சு, ‘கோமதி. அடிக்கடி இல்லீகலா தன் பொண்ணுக்காக அந்த டாக்டரை யூஸ் பண்ணியிருக்காங்க.
இப்போ இந்த திட்டமும் அவங்க ஏற்பாடு தான்.
ஆனா, அதுல இவங்க கொடுக்கற பணம் அல்லாம.. தனியா தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு பார்க்கும் போது தான், ஸ்கேன்ல ஆண் பெண்ணுன்னு ரெட்டை பிள்ளை இருக்கறது தெரிஞ்சிருக்கு.
எனக்கு பெயின் வந்து, நார்மல் ஆக வாய்ப்பிருந்தும், நான் கான்சியஸ்ல இருந்தா.. விசயம் வெளியே வர வாய்ப்பு இருக்கு.. ன்னு சீசெஷன் பண்ண எனக்கு அனஸ்தீஷியா கொடுத்திருக்காங்க.
ஆனா, நான் முழு மயக்கத்துக்கு போகல.
அதுமட்டுமில்லாம, பெண் குழந்தைங்களுக்கு மார்கெட்ல நல்ல டிமாண்டுங்கறதால.. பெண் குழந்தைய மறச்சு,
கொஞ்சம் சரியானதும்.. நானும் என் பொண்ணும் இவங்களுக்கு பாரமா இருக்க கூடாது.. விலகி போகனுமுன்னு தான் நான் நினைச்சேன்..
நானே தள்ளி நின்னாலும், வலிய பேசி அன்பா.. அனுசரனையா.. நடந்துக்கிட்டா.. சம்யூ.
இதுவரை நான் தேடி பாசத்தை எனக்கு கொட்டி கொடுத்தா.. அவ.
தனம்மா கண்டிப்போட அம்மாவ நடந்துக்கிட்டா.. சம்யுக்தா எனக்கு அம்மாவா.. தோழியா.. அன்பா அரவணைச்சுக்கிறது சில நேரம் அப்பாவா இருந்தா..
அவளை விட்டு பிரியனுமான்னு யோசிச்சாலும், கோமதி இருக்கற ஊர்ல இருக்க எனக்கு பயம்.
எங்கே அவ கண்ணுல நான் பட்டு.. வெண்பா விசயம் தெரிஞ்சிடுமோன்னு இருந்துச்சு.
அப்போ தான் காலேஜ் ஓப்பன் பண்ணாங்க.
என்னை ஏமாத்தினவன் மூலம் என் மகளுக்கு ஆபத்து.. இங்கிருந்து நான் போகனுமுன்னு தனம்மாகிட்ட சொல்ல,
அவங்க நான் ஏற்கனவே வெளியே போக பயந்ததை வச்சு.. நான் சொன்னதை நம்பி.. அந்த ஊரையே விட்டுட்டு இங்கே வந்துட்டாங்க.
சம்யுக்தாவும் ஹாஸ்டல் போகாம வீட்டுல இருந்து காலேஜ் போனா.
கொஞ்ச நாள்ல நாங்க அவங்களுக்கு பாரமுன்னு தோன.. தனம்மாகிட்ட பேசினப்போ தான்,
“நீ ஃபேஷன் டெக்னாலஜி தானே படுச்சே.. டெய்லரிங் முடி..” ன்னு சொல்ல, ஏற்கனவே நான் அதை முடுச்சிட்டேன்னு சொன்னதும்,
அவங்க வீட்டுக்காரர் பணத்தை பேங்க்ல இருந்து எடுத்து, இப்போ நா வச்சிருக்க பொட்டிக்கை வச்சு கொடுத்தாங்க.
என்னை முழுமனசா அவங்க பொண்ணாவே பார்க்க ஆரம்பிச்சு.. இப்போ நா அவங்க பொண்ணா மட்டுமே இருக்க.. முழு காரணமும் தனம்மாவும் சம்யுக்தாவும் தான்.
அவங்க என் வாழ்க்கையில வராம போயிருந்தா.. நானும் என் மகளும் அநாதையா இருந்திருப்போம்.
அப்படி பார்த்துகிறவங்ககிட்ட உண்மைய மறைக்கிறோமேன்னு ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வோட தான் இதுவரை இருந்தேன்.
ஆரம்பத்துல சொல்லாம.. இப்போ முடுஞ்சு போனதை சொல்லி, அதனால என்ன பிரயோஜனமுன்னு விட்டுட்டேன்.
ஆனாலும் நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னிச்சிடுங்க தனம்மா..” என மடங்கி அமர்ந்து அழ,
அவசரமாய் அவளை தாங்கிக்கொண்ட சம்யுக்தா,
“அக்கா.. என்ன இது..! எப்பவும் நீ எனக்கு சொந்த அக்கா தான்.. என்ன பேச்சு அநாதை அது.. இதுன்னு..
அதோட மன்னிப்புன்னு.. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியாதா..?” என லேசான அதட்டலோடு,
அவளை அணைத்துக்கொண்ட சம்யுக்தாவின் மீதும்.. தனத்தின் மீதும்.. மதிப்பு கூடி போனது அங்கிருந்தவர்களுக்கு.
அதுவரை விளையாட்டு பிள்ளை.. எதையும் சட்டென செய்துவிட்டு அதை சரி செய்ய வழி தேடும் அசடு.. என நினைத்திருந்த வெங்கடேஷூக்கு இப்போது சமாதானம் செய்யும் இந்த சம்யுக்தா வேறு மாதிரி தெரிந்தாள்.
இது வரை, ‘நட்பா..? இல்லை நட்புக்கு மேலா..?’ என்ற குழப்பம் நீங்க,
‘இனி அவள் தான்..’ என்ற முடிவோடு அவளை ஆசையாய் அரவணைத்திருந்தான் தன் கண் பார்வையாலேயே…