Skip to content
Post Views: 1,606
11(2)
சுபா, “சாப்பிடலையா?” செழியன் அவளருகே வந்து அமர்ந்தான்.
Advertisement
தொலைக்காட்சியில் நியூஸ் வைத்து விட்டு அவளிடம் வந்து அமர்ந்து வைஷ்ணவியை பார்த்தாள்.
“இரு வாரேன்” என்று சுந்தரமிடம் ஜூஸ்ஸை எடுத்து வர பணித்து விட்டு செழியனுக்கு உணவை தட்டில் வைத்து சுப்ரியா அருகே வந்து, “சின்னபிள்ளை மாதிரியே பண்ணு” என்று இட்லியை பிய்த்து சாம்பார், சட்னியில் நனைத்து சுப்ரியாவிற்கு ஊட்டினாள்.
Advertisement
Advertisement
“உட்கார்ந்துக்கோம்மா” இளவேலன் கூற, “இருக்கட்டும் அங்கிள்” என்று மாறன் தட்டை பார்த்து இட்லியை கரண்டி ஒன்றால் எடுத்து வைத்தாள். செழியன் புன்னகைத்தான்.
மாறனுக்கு சிறுவயதில் இளந்திரையனும் இளவேலனும் ஊட்டியது. அவர் அவனை பார்க்க, அவன் அவ்வப்போது வைஷ்ணவியையும் சுப்ரியாவையும் பார்த்தவாறே உண்டு எழுந்தான்.
Advertisement
மாறா, ஜூஸ்..
“வாரேன்” என்று கையை கழுவி விட்டு வந்து அமர்ந்தான். சுப்ரியா கண்கள் நியூஸில் பதிந்திருந்தது. வைஷ்ணவி அருகே மாறன் வந்து நின்றான்.
என்ன மாறா? இன்னும் பசிக்குதா? எடுத்து வைக்கவா?
சுப்ரியாவிற்கு ஊட்ட இருந்த இட்லி பகுதியை வைஷ்ணவி கையில் வைத்திருந்தாள். அவள் கையை பிடித்து அவன் வாயில் இட்டு மென்றான். சுப்ரியா வாயிலிருந்த இட்லி துண்டு கீழே விழுந்தது. வைஷ்ணவி அவனை பார்த்தாள்.
சுப்ரியா அருகே நாற்காலியை இழுத்து போட்டு ஏக்கமுடன் வைஷ்ணவியை பார்த்தான். இளவேலன் மனதில் புன்னகைத்தாலும் அவன் பேச்சு தான் பிடிக்கவில்லையே! அவர் எழுந்து சென்றார்.
“மாறா.. நம்ம சித்தப்பூ வாழ்க்கையை பற்றி நீ சிந்திக்கவில்லை. இப்ப நல்லா கொட்டிட்டு இருக்க?” சீறலுடன் கேட்டான் செழியன்.
மாறன் சினமுடன் எழுந்தான். அவனை அமர்த்திய வைசு, மாறா சின்னப்பையன் புரியாம பேசிட்டான். அதுக்காக சாப்பிடும் பிள்ளையை சாப்பிட விடாமல் பண்ணாதீங்க சீனியர்..
வைசு, உனக்கு தெரியாது..
விடுங்க சீனியர். சிலர் சொன்னால் கேட்பாங்க. சிலர் அனுபவப்பட்டு தன்னுடைய வழியை கண்டுபிடிப்பாங்க. எல்லாவற்றிற்கும் நேரம் வரும் என்று அவனுக்கு ஊட்டி விட்டாள்.
“அக்கா” வாயை திறந்தாள் சுப்ரியா.
புன்னகைத்த வைஷ்ணவி இருவருக்கும் ஊட்டி விட்டு அவர்களை பள்ளிக்கு தயாராக்கினாள்.
புத்தகப்பையுடன் இருவரும் வெளியே வந்தனர். அவர்களை கண்டவாரே தன் முகத்தை திருப்பிக் கொண்டு செழியன் சென்றான்.
மாமா, கழுத்து சுளிக்கிட்டா. சுளுக்கெடுப்பாங்க. வலி உயிர் போகும்.. பார்த்து..பை பை..கத்தினாள் சுப்ரியா.
கையசைத்து அவன் விடைபெற, மாறன் தன்னுடைய நியூ மாடல் “எம்.டீ.பி லேடர் ஸ்கவுட்” ஆரஞ்சு நிற சைக்கிளை எடுத்து வந்தான்.
“வாவ்! அழகா இருக்கு” வாயை பிளந்தாள் சுப்ரியா.
இதுல எப்படி உட்காருவ சுபா? வைஷ்ணவி மாறனையும் சுப்ரியாவையும் பார்த்தாள்.
மாறன் சைக்கிளில் ஏற, அவன் பின்னே இரு கால்களையும் சைக்கிளின் இருபக்கமும் போட்டு, இப்படி தான் உட்காருவேன்..பை பை..வைசு எல்லாரையும் பார்த்துக்கோ புன்னகையுடன் சுப்ரியா கையை ஆட்டினாள்.
மாறன் சைக்கிளை எடுக்க, அவனது வயிற்றை ஒரு கையால் கட்டிக் கொண்டாள். அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட சைக்கிளை நிறுத்தினான்.
என்ன?
கையை மேல போடாத..
போட லைன்னா நான் கீழ விழுந்திருவேன்.
பிடிக்காத..
“நான் எதை பிடிப்பது? உனக்கு பின்னே பிடிச்சுக்கோ” என்று அவன் திரும்பி அவளை பார்த்தான். முகம் சுளித்து அவள் எதை பிடிக்கவென தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாள்.
அவளது கையை இழுத்து அவனது தோள்ப்பட்டையில் வைத்துக் கொண்டான் மகிழ்வுடன்.
அவன் மகிழ்ச்சியை அவளிடம் காட்டாமல், இங்க பாரு. நீ கீழ விழக்கூடாதுன்னு தான் தோளில் கை வைக்க உன்னை விட்டேன். நீயாக எதையும் கற்பனை பண்ணிக்காத..
ஆமா, “இவரு பெரிய மன்மதராசா? நாங்க உன் மேல கை வைக்க ஆசைப்படுறோம் பாரு” முணங்கினாள். அவளின் முணங்கல் கேட்டாலும் புன்னகை முகமாக பள்ளிக்கு வந்தான் இளம்மாறன்.
மாறனும் சுப்ரியாவும் ஒரே சைக்கிளில் நெருக்கமாக வருவதை பார்த்து, அவன் நண்பர்கள் ஓவென ஓலமிட்டனர். அவள் இறங்கி அவர்களை முறைத்துக் கொண்டே நகர்ந்தாள்.
“ஓய்! இங்க வா” மாறன் சுப்ரியாவை மிரட்டுவது போல அழைத்தான். அவள் சினமுடன் அவனருகே வந்தாள்.
அவள் முன் வந்து “இவனுக முன் மட்டும்” கண்சிமிட்டினான். அமைதியாக நின்று விட்டாள் சுப்ரியா.
“என்னோட லன்ஞ்ச் பேக்கை நம்ம வகுப்பறைக்கு எடுத்துட்டு போ” அதட்டினான். அவள் ஏதும் பேசாமல் அவன் கையிலிருந்ததை வெடுக்கென பிடுங்கி கலையரசனை முறைத்துக் கொண்டே சென்றாள்.
மாறா, ஜோடி போட்டு வர்றீங்க? கலையரசன் பொறாமையில் வெந்தான்.
அவ தான் உதவி கேட்டா அதான் போனா போகட்டும்ன்னு அழைச்சிட்டு வந்தேன். அதுக்காக தான் என்னோட லன்ஞ்ச் பேக்கையும் அவளிடம் கொடுத்தேன். பார்த்தேல்ல.. நான் என்ன சொன்னாலும் செய்வாள்..
“ஓ! நீ என்ன சொன்னாலும் செய்வாளா?” மற்றவன் கேட்க, மாறனிடம் சுருதி குறைந்தது.
ஒன்றுமில்லைடா மச்சான், இந்த சிவப்பு மையை அவளது உதட்டில் தீட்டி எனது நோட்டில் அவள் இதழ் பதித்து தந்தால் போதும்..
மாறன் முகம் வெளிறியது. மாறனை கவனிக்க சொல்லி அருகே இருந்தவன் கலையரசனிடம் கண்ணை காட்டினான்
மாறா, இதை மட்டும் கேட்டு வாங்கிட்டு வா. அப்ப நாங்க அவ உன்னோட பேச்சை கேட்கிறான்னு நம்புறோம்..
“அதை வச்சி நீ என்னடா செய்யப் போற?” ஜாலியாக பேசுவது போல அவன் தோளில் கையை போட்டான்.
கையை எடுத்து விட்ட கலையரசன், மாறா சும்மா ட்ரை பண்ணலாம்ல்லதான்..
ட்ரை தான?
ம்ம்..சத்யமா கலையரசன் மாறன் தலையில் கையை வைத்தான்.
அழைப்பு மணி ஒலிக்க அனைவரும் வகுப்பிற்கு சென்றனர். இன்று பசங்க ராதிகாவை பார்த்து இளவேலனுடன் கேலி செய்ய பார்த்த பின் தான் கலையரசனுக்கு இளவேலன்- ராதிகா விசயம் நினைவுக்கு வந்தது.
மாறா, இந்த பொம்பளையவா உன்னோட சித்தப்பா காதலிக்கிறார். இந்த மாதிரி இருப்பவர்கள் எல்லாம் ஊருக்கு ஒருவன் வச்சிருப்பாங்க அசிங்கமாக பேசினான். மாறன் கைகள் இறுகியது.
நம்ம ஊர்க்காரவங்க பேசியதை கேட்டு தான் சொல்றேன். அந்த போலீஸ்காரன் உனக்கு அண்ணனாமே! எனக்கு அவங்க உறவும் சந்தேகமா தான் இருக்கு என்று மதிய வேலையில் பேச்சு செல்ல, மாறனால் உண்ண முடியவில்லை. அவன் நண்பர்கள் செல்லவும் அந்த டிபன் பாக்ஸை சினமுடன் தூக்கி போட்டான். அது மரத்தில் பட்டு வைசு தயார் செய்து கொடுத்து அனுப்பி இருந்த தக்காளி தொக்கும் அவரைக்காய் பொரியலும் மரத்திற்கு விருந்தானது.
சினமுடன் தலையை பிடித்த மாறனுக்கு, வைஷ்ணவி அவனுக்கு செய்து கொடுத்தது எனவும் சிந்தி இருந்ததை எடுத்து அவனது பாக்ஸில் போட்டான்.
மாலை சுப்ரியா அவன் சைக்கிளில் ஏதும் பேசாமல் அமர்ந்தாள்.
அமைதியா இருக்க?
எனக்கு தெரியாமல் வாய் துடைத்து மிஸ் செய்த கைக்குட்டையை அந்த பொறுக்கிட்ட கொடுத்துருக்க? சீறினாள்.
சுபா..அப்படியில்லை..
என்ன இல்லை?
சாரி..
சாரியாவது மண்ணாங்கட்டியாவது..
இருவரும் வீட்டை அடையவும் நேற்று போல அறைக்கு சென்றாள் மனநிலை மட்டும் மாறியவாறு. மாறன் வருத்தமுடன் அமர்ந்தான்.
அறைக்கு சென்ற சுப்ரியா கதவை தாழிட்டு குப்புற படுத்து அழுதாள்.
பள்ளி மதிய இடைவேளையில் வகுப்பை விட்டு வந்த சுப்ரியாவை மறித்தான் கலையரசன்.
வழிய விடு..
“போகலாம் தங்கம்” அவளது கைக்குட்டையை அவனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.
ஏய், இது என்னுடையது..
“ம்ம்! அதான் வாசனையா இருக்கு” அவன் கைக்குட்டையை முகர்ந்தான்.
ச்சீ..குடுடா..
தூரம் நின்ற தன் நண்பனிடம் கண்ணை காட்டினான் கலையரசன். யாரென்று பார்க்க சுப்ரியா திரும்பிய நேரம் அவன் வைத்திருந்த சிவப்பு மையை அவளது உதட்டில் தடவி விட்டான்.
“ஏய்..ச்சீ..” அவள் அதை அழிக்க முற்பட்டாள்.
ஓடி வந்த அவன் நண்பர்களில் இருவர் அவள் இரு கையையும் இறுக பிடித்துக் கொண்டனர்.
கலையரசன் சுப்ரியாவை நெருங்க, தூள்ளிக் கொண்டு அவனை எத்தி தள்ளினாள். அவள் எதிர்பார்க்காத நேரம் அவள் பின்னே வந்து அவளது இதழ்களில் அவளது கைக்குட்டையை அழுத்தினான். அவள் அதிர்ந்து நின்று விட்டாள். சுப்ரியா இதழ்களின் அச்சு அதில் பதிந்து விட்டது.
சுயநினைவு வந்து அவனிடமிருந்து அவள் பிடுங்க எண்ணினாள். ஆனால் அவளை தான் அவன் நண்பர்கள் பிடித்துக் கொண்டிருந்தனரே! அந்த கைக்குட்டையில் இருந்த அவளது இதழச்சில் கலையரசன் அவன் இதழை பதித்தான். அருவருப்பாக உணர்ந்தாள் சுப்ரியா..
அவள் கையில் கைக்குட்டையை திணித்து விட்டு, “இந்த நிழலுதடே இவ்வளவு ஏத்துதே!” அவன் கிரங்குவது போல பேச, அவள் அவர்களை தள்ளி விட்டு ஓடி விட்டாள். அவளால் வகுப்பை கவனிக்கவே முடியவில்லை. கலையரசன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா அவனை முறைத்து விட்டு சுப்ரியாவை கவனித்தாள். ஏதும் கேட்கவில்லை.
தற்பொழுது இதை எண்ணியவாறு அழுதாள் சுப்ரியா. கைக்குட்டையை மாறனிடம் காட்டிய போது அவன் அவளது இதழச்சை பார்க்கவில்லை. காற்றின் திசையில் அதன் மறுபக்கம் தான் அவன் கண்ணில் பட்டிருக்கும்.
அவனுக்கு நடந்தது தெரிந்தும் அவனுக்கு நண்பன் தான் முக்கியம் என தவறாக எண்ணிக் கொண்டாள் சுப்ரியா.
சுபா, “கதவை எதுக்குடி பூட்டி வச்சிருக்க?” வைஷ்ணவி வெளியே இருந்து குரல் கொடுத்தாள்.
“வாரேன்க்கா” முகத்தை கழுவி ப்ரெஷ்ஷாகி வெளியே வந்தாள் சுப்ரியா. நீலநிற டாப்பும் மஞ்சள் நிற ஷார்ட் பேண்டுடன் வந்திருந்தாள்.
மாறன் அவளை பார்க்க, அவள் அவன் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.
நேராக அடுக்கலை சென்று தீப்பெட்டியை எடுத்தாள்.
“இது எதுக்குடி?” வைஷ்ணவி கேட்க, ஏதும் பேசாமல் தோட்டம் பக்கம் சென்றாள். வைஷ்ணவி அவள் பின் ஓடினாள். மாறன் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.
தோட்டக்காரர் அவளிடம், “என்னம்மா வேணும்?” கேட்டார். அவரிடமும் பதில் கூறாமல் ஓரிடத்தில் அமர்ந்து, அவள் கையிலிருந்த கைக்குட்டையை கீழே போட்டு கொளுத்தி விட்டு அதனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளது செயலில் மாறன் திகைத்து அவளை பார்த்தான்.
வைஷ்ணவியோ அடியேய், “என்ன பண்ற?” பதட்டத்தில் பேசி விட்டாள்.
சுப்ரியா வைஷ்ணவியை அணைத்துக் கொண்டாள். வைஷ்ணவிக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்து விட்டது.
வா சுபா, அவளை அழைத்து மாறனை வைஷ்ணவி பார்த்துக் கொண்டே சென்றாள். அவனும் அவர்கள் பின் சென்றான்.
என்னாச்சு சுபா? பள்ளியில் ஏதும் பிரச்சனையா?
நம்மை ஏதும் சொல்லி விடுவாளோன்னு மாறனுக்குள் பயம் எழுந்தது.
வைஷ்ணவியிடம், அக்கா ஹாட்டா டீ வேணும். தலைவலிக்குது..
தலைவலிக்குதா? ஓய்வெடுக்கிறியா?
ம்ம்! அவளறைக்கு சுப்ரியா சென்றாள்.
தேனீர் தயார் செய்து. அங்கிள் இத மாறனுக்கும் ஷராவுக்கும் கொடுத்திருங்க. அப்புறம் பஜ்ஜி சாப்பிடட்டும் என்று வைஷ்ணவி சுந்தரத்திடம் கூறி விட்டு அவள் கையில் தேனீர் டபராவுடன் சுப்ரியா அறைக்கு சென்றாள்.
மாறனிடம் சுந்தரம் தேனீரை நீட்டினார்.
“அவங்க வந்து தர மாட்டாங்களா?” மாறன் வைஷ்ணவியை எதிர்பார்த்தான்.
மாறா, “எதுக்கு அவங்க இவங்கன்னு சொல்றீங்க? அண்ணின்னு அழைக்கலாமே!” சுந்தரம் சொல்ல, அவரை முறைத்தான்.
உங்க அண்ணன் தீரனுக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு.
வாய்ப்பேயில்லை..
“அவரு அவரோட சிறுவயது காதலியை கூட மறந்துட்டார்” சுந்தரம் சொன்னார்.
இருக்காது..
இது தான் உண்மை. வேணும்ன்னா இன்றிரவு அண்ணா வரும் வரை விழித்திருந்து கவனிங்க. அந்த பொண்ணு அறையை பார்த்து விட்டு தான் செல்வார்.
மாறனை ஏத்தி விட்டு அவன் கையில் தேனீரை வைத்து சென்றார்.
இரவு முதலில் செழியன் வந்தான்.
“மாமா” அக்சரா அவனிடம் கையை நீட்டினாள். மாறன் அவர்களையும் கவனித்தான். அவன் வாங்கி வந்த கவரை அவளிடம் கொடுத்தான். அதை சரி பார்த்து..சூப்பர் மாமா. தேங்க்ஸ் என்று அறைக்கு சென்று வைத்து வந்தாள்.
அண்ணா, “எதுக்கு இவங்களுக்கு வாங்கித் தரணும்?” மாறன் செழியனை ஓரக்கண்ணால் பார்த்தான். மாறனை பார்த்தும் பாராதது போல செழியன் உணவுண்ண அமர்ந்தான்.
“வைசு” செழியன் அழைக்க, “புள்ள பாப்பாவை தூங்க வச்சிட்டு இருக்காடா செழியா” இளவேலன் வைஷ்ணவி அறையிலிருந்து வந்தார்.
சுந்தரத்தை அழைத்தார். அவர் முன்னமே சென்று விட்டார்.
அக்சரா அவளாகவே வந்து, மாறனை உணவுண்ண அழைத்தாள். அவனும் அவர்களுடன் அமர்ந்தான்.
வாலு எங்க போனா? செழியன் சுப்ரியாவை கேட்டான்.
அவளா? அவளுக்கு தலைவலியாம். புத்தகத்தை எடுக்காமல் தூக்கம் வராது. ஆனால் இன்று இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்டாள்.
தலைவலியா? செழியன் மாறனை பார்த்தான். அவன் உணவுத்தட்டின் மீது பார்வையை திருப்பினான். இளவேலன் இருவரையும் பார்த்துக் கொண்டே அமர்ந்தார். அனைவருக்கும் அக்சரா பரிமாறினாள். சாப்பிட்டு அனைவரும் எழுந்து சென்றனர்.
மாறன் இளவேலனிடம் அவனது மகன், ராதிகா பற்றி பேசியது அவங்க வீட்டு பசங்க யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவனிடம் பேசாமலே இருந்தனர். அவனும் எந்த வேள்வியும் எழுப்பாமல் அமைதியாக இருந்து விட்டான்.
மாறன் மட்டும் தூங்காமல் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தான். வைஷ்ணவி அவனை பார்ப்பதும் அடுக்கலையை ஒதுக்குவதுமாக இருந்தாள்.
பாப்பா அழும் சத்தம் கேட்கவும் அவளறைக்கு சென்று பாப்பாவை தூக்கி வந்து தரையில் போர்வை விரித்து கிடத்தினாள். நிகிதா அதனுடைய விளையாட்டு சாமான்களை கையில் வைத்து அதை கடிப்பதும், கீழே போடுவதும், எடுப்பதுமாக இருந்தது.
மாறன் எழுந்து நகர்ந்தான்.
வாயிலில் இளந்திரையனின் பைக் சத்தம் கேட்கவும், நிகிதா சத்தம் அதிகமானது. அவள் அச்சத்தத்தை கூட கவனித்து இருக்கிறாள்.
வைஷ்ணவி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
தீரன் உள்ளே வரவும் நிகிதா காலை இழுத்து தவழ்ந்து சிரிப்புடன் ஞா ஞா..ஞா பேசிக் கொண்டே அவனை நோக்கி வந்தது.
குழந்தை தன்னை நோக்கி சிரிப்புடன் வரவும் உலகம் மறந்து பாப்பாவை தூக்கி கொஞ்சினான். மாறன் ஓரிடம் நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்ப தான் சாப்பிடுறியா சிட்டு?
ம்ம்! நீங்க சாப்பிடுங்க சார்.
“வேண்டாம்” தலையசைத்து, “எல்லாரும் சாப்பிடவும் நீயும் சாப்பிட வேண்டியது தான!”
“வேலையை முடித்து சாப்பிட்டு பழகிடுச்சு” அவனை ஏறிட்டாள்.
பாப்பா அவளை பார்க்கவும் அவளிடம் தாவியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை பார்த்தாள்.
இளந்திரையன் அவளருகே அமர்ந்து, உணவை எடுத்து அவளுக்கு வாயில் ஊட்டினான்.
“அண்ணா இவங்களுக்கு ஊட்டி விடுறானா?” சிந்தித்தான் மாறன்.
குட்டிம்மாவை எப்போதும் சுபான்னு தான அழைப்பாயா?
ம்ம்..
மாறா சாப்பிட்டானா?
சாப்பிட்டான். ஆனால் யாரும் அவனோட பேச மாட்டிங்கிறீங்க?
ம்ம்..அவன் எங்களுடன் சேர்ந்து எங்க குடும்ப பொறுப்புகளை பின்னாளில் ஏத்துக்கணும். அதற்காக தான் எல்லாம்.
அதற்காக எதுக்கு பேசாமல் இருக்கணும்?
காரணமில்லாமல் நான் அவனிடம் கோபப்பட மாட்டேன்னு அவனுக்கே தெரியும். அவன் நிறைய தவறு செய்து கொண்டிருக்கிறான். அவன் சரி செய்ய நாங்க தூண்டுகோலாக இருக்கணும்..
தவறா?
ம்ம்..
என்ன தவறு?
அதை அவன் புரிந்த பின் அவனே மன்னிப்பு கேட்பான்.
நான் என்ன தவறு செய்கிறேன்? சிந்தனையுடன் தீரனை பார்த்தான் மாறன்.
தவறு செய்தால் தப்பை சுட்டிக்காட்டலாமே!
சுட்டிக்காட்டினால் அதற்கு மதிப்பிருக்காது. “அனுபவமே சிறந்த ஆசான்” சொல்லுவாங்கல்ல அது போல தான் மாறனும் அவன் அவனாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் யாரிடமும் ஏமாற மாட்டான்.
ஏமாற்றமா?
கேள்வி கேட்காமல் சாப்பிடு..
ம்ம்..உணவை உண்டாள்.
நீங்க கொஞ்சமா சாப்பிடலாமே!
வேண்டாம்மா. எனக்கு பசியும் எடுக்கல. எனக்கு சூடாக பால் எடுத்துட்டு வாரீயா? மனசு சரியில்லை.
என்னாச்சு?
அவளை பார்த்து புன்னகைத்தான்.
“கேட்க தான செய்தோம்? அதுக்கு எதுக்கு சிரிக்கிறார்? அட…நாம சாதாரணமா பேசினோம்” என்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கட்டை விரலை உயர்த்தினான்.
எல்லாம் ஓ.கே தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அக்கறையாக நடந்துக்கிறாங்க. இதை பார்த்தால் கணவன், மனைவி பேச்சு மாதிரி இருக்கே? சிந்தனையுடன் அங்கேயே நின்றான் மாறன்.
வைஷ்ணவி இளந்திரையன் அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அவன் முகத்தை பார்த்தாள்.
“என்ன?” வைஷ்ணவி கண்களை பார்த்துக் கொண்டே கேட்டான்.
நீங்க அவனை பார்க்க போனீங்களா? அவன் என்ன சொன்னான்? நேற்று..அது..அது அவன் தானா? வினாக்களை தொடுத்தாள்.
ம்ம்! பேசினேன்..
பேசுனீங்களா? இனி அவன் எங்களை தொந்தரவு செய்ய மாட்டானா?
இளந்திரையன் மௌனம் காத்தான்.
சொல்லுங்க?
நான் கேட்பதற்கு கோபப்படாமல் பதில் சொல்வாயா?
கேளுங்க?
அந்த குடிலுக்குள் அவனை நீ பார்த்தாயா? அவன் முகம் தெளிவாக தெரிந்ததா? அவனை பற்றி உனக்கு ஏதாவது தெரிந்ததா?
அவனை நான் பார்த்தேன். என்னிடம் பேசினான்.
என்னை கொல்ல எண்ணுபவனுக்கு உங்களை எப்படி தெரியும்? நாங்க சென்னையில இருக்கும் போது எங்களுக்கும் உங்களுக்கும் பழக்கமில்லை. அன்று என் கற்பை அழிக்க வந்தவன் உங்க மீது தான் தீராத வெறியில் இருக்கான். எனக்கு ஒன்றுமே புரியல. அந்த குடிலுக்குள் இருந்தவன் மேல லக்ஸரியான பர்பியூம் வாசனை தெரிந்தது.
என்ன சொல்ற? வைஷ்ணவியை உலுக்கினான் இளந்திரையன்.
ஆமா, அவன் வாசனை திரவியம் பயன்படுத்தி இருந்தான். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ளும் போது இருளடைத்து இருந்தது. அவன் முகம் தெரியவில்லை. அவன்..அவன்..சொல்ல முடியாமல் உதட்டை கடித்தாள். கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டிருந்தது.
தன்னை நிதானப்படுத்தி இளந்திரையன் மனம் வலிக்க தன் சிட்டுவை பார்த்தான். அவள் கண்ணீரோ நிற்க மறுத்தது. பாப்பா தூங்குவதை பார்த்து இளந்திரையன் அவளை அணைத்தான். முதலில் அதிர்ந்த வைஷ்ணவி அவனை கட்டிக் கொண்டாள்.
அழாத சிட்டு. பாப்பா விழித்து விடுவாள். அப்புறம் நாம தூங்க முடியாது.
பெண்களும் ஆண்களை போல சதையும் உணர்வுகளும் கலந்த ஜீவன் தான? எதுக்கு இந்த ஆம்பளைங்க பொண்ணுங்கள தவறான கண்ணோட்டத்திலே பார்க்குறாங்க. இந்த ஒரு காரணத்துனாலேயே நாங்க நிறைய கஷ்டம் அனுபவித்தோம். இன்னும்…பேச விடாமல் அவளை நகர்த்தி அவள் வாயில் கை வைத்தான்.
“சரி. இனி நான் இதை பற்றி உன்னிடம் கேட்க மாட்டேன்” இளந்திரையன் அவள் தோள்களை பற்றியவாறு பேசினான்.
நான் இவரை அணைத்தேனா? எண்ணம் வைஷ்ணவிக்குள் வந்து, அவன் கையை தட்டி விட்டு நகர்ந்து..சாரி..சா..சாரி ..சா..சா….சார் திக்கினாள்.
இவ்வளவு நேரம் கோர்வையாக பேசிக் கொண்டிருந்த வைஷ்ணவி தடுமாற்றம் புரிந்து, ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்..ஸ்டே காம் என்றானே! வேகமாக அவனை பார்த்தாள்.
சார்..நீங்க..
ம்ம்..ஆங்கிலம் எனக்கு தெரியும்.
அப்படின்னா ரூபினி கொண்டு வந்த பத்திரம்?
தெரியும்.
என்ன சார் இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க..
அப்புறம் எப்படி சொல்லணும்?
கையெழுத்து போட போனீங்க? நான் சிந்தனையில் தான் இருந்தேன். நீ தான் அவசரப்பட்டுட்ட..
ஓ! அப்படின்னா கையெழுத்து போட்டிருக்க மாட்டீங்களா?
தெரியல. நல்ல நேரம் உதவின..
சோ…தெரிந்தே கையெழுத்திட முடிவுக்கு வந்துட்டீங்க?
துரோகம் எனக்கு ஒன்றும் புதிதில்லை..
துரோகமா? யார் உங்களுக்கு துரோகம் செய்தது?
அதெல்லாம் இருக்கட்டும். நீ பாப்பாவோட சென்று உறங்கு என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மாறனுக்கு தலை சுற்றியது.
error: Content is protected !!