வரமாய் வந்த உறவே – 3
அத்தியாயம் -3
திருநெல்வேலி நகரத்தில் சற்று ஒதுக்கு புறமான பகுதியில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் அந்த இடத்தில் தீப்பெட்டி போன்ற சிறிய அளவிலான நிறைய வரிசை விடுகள் கட்டப் பட்டிருந்தன.
அஞ்சுகம் இல்லம் என்ற பெயர் பலகை கொண்ட அந்த காம்பவுண்ட் வீட்டில் கீழே ஐந்து வீடுகளும் மேலே ஐந்து வீடுகளும் இருந்தன. மடியில் இருந்த வீடுகள் அனைத்தும் சிமெண்ட் சீட் கொண்டு மேற்கூரை அமைக்கப் பட்டிருந்தது.ஒரு அறை மட்டும் கொண்ட அந்த வீட்டில் சிறிய தடுப்பு சுவர் அமைத்து அங்கு ஒரு சிறிய மேடையும் ஒரு அலமாரியும் இருந்தது. அதன் எதிரில் பாத்திரம் கழுவுவதற்கு இடம் இருந்தது. கழிவறையானது ஐந்து வீட்டிற்கும் போதுவாக அமைக்க பட்டிருந்தது.
Advertisement
மடியில் கடைசியாக இருந்த வீட்டில் ஒரு இளம்பெண் கந்த சஷ்டி கவசத்தை கூறி முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது கீழிருந்து யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டது
Advertisement
“லட்சுமி லட்சுமி தண்ணிர் லாரி வந்துருச்சி சீக்கரமா வா” என்று கிழிருந்து சத்தம் போட்டார் மஞ்சுளா.
Advertisement
“இதோ வந்துட்டேன் அக்கா” என்று கூறிக் கொண்டே இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் லட்சுமி.
Advertisement
வெள்ளை நிற தேகமும், அளவான உயரமும் அதற்கு ஏற்ற உடல் எடையும் கொண்டவள்,சாதாரண காட்டன் புடவையில், கழுத்தில் முத்து மாலையும், காதில் முத்துவைத்த கம்மளும் கையில் கண்ணாடி வளையாளும் அணிந்து மிகவும் எளிமையான தோற்றதித்திலும் அழகாக இருந்தாள் லட்சுமி .
தண்ணிர் பிடிக்க நின்டிருந்த கூட்டத்தில் மஞ்சுளா அடித்துப் பிடித்து நடுவில் புகுந்து முன்னே சென்று விட்டாள். ஆனால் லட்சுமியும் கூட்டத்தைக் கண்டு பயந்து சற்று தயக்கத்துடன் ஒதுங்கியே நின்றிருந்தாள். மஞ்சு தனக்கு பிடித்துவிட்டு லட்சுமிக்கும் சேர்த்து தண்ணீர் பிடித்து கொடுத்தார்.
“லட்சுமி உன்கிட்ட எத்தன தடவ நான் சொல்றது இப்படி பயந்து பயந்து ஒதுங்கி நிக்காதனு”
“என்ன அக்கா பண்றது எனக்கு கூட்டத்தை பார்த்தாலே பயமா இருக்கு அதுலயும் அந்த பொம்பளைங்க தண்ணீர் பிடிக்க சண்டை போடுறத பார்த்தா ரொம்பவே பயமா இருக்கு அக்கா” என்றாள் லட்சுமி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“இந்த காலத்துல எதுக்கெடுத்தாலும் பயந்துட்டு இருந்தனா, நம்மனால நிம்மதியா வாழ முடியாது பாப்பா. பொண்ணுங்க கொஞ்சமாது தைரியமா இருக்கணும் அதுலயும் நீ சொந்த பந்தம் யாரும் இல்லாத தனி ஆள இருக்க, நீ தைரியமா இருந்தா தான் உன்ன நீயே பார்க்க முடியும் சரியா” என்றார் மஞ்சு அதற்கு லட்சுமி தலையை மட்டும் ஆட்டினாள்.
“லட்சுமி சீக்கிரமாக கிளம்பு இப்பவே பஸ்சுக்கு நேரம் ஆச்சு இந்த பஸ்ஸை விட்டா அடுத்து வர்ற பஸ் எல்லாம் ரொம்ப கூட்டமா இருக்கும், வேலைக்கு போக லேட் ஆகிரும் “
“சரி அக்கா உடனே கிளம்பி வாரேன்”
பெண்கள் இருவரும் கிளம்பி பஸ் ஸ்டாப்க்கு சென்று கட்டணம் செல்லாத பஸ்ஸில் ஏறி அதில் ஓரமாக நின்றுக் கொண்டனர். மஞ்சு லட்சுமியை தன் கை வளைவுலேயே வைத்துக் கொண்டார்.
லட்சுமிக்கு பேருந்து பயணம் ஒத்து வராது. அதனால் கண்களை முடிக்கொண்டு பஸ் கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
ஆதரவற்ற தனி பெண்ணான லக்ஷ்மி. மிகவும் அமைதியானவள் பயந்த சுபாவம் கொண்டவள் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள்.
“குருநாதன் டெக்ஸ்டைல்ஸ்” என்ற ஐந்து தலங்களை கொண்ட பெரிய ஜவுளி கடையில் தான் லட்சுமி மஞ்சுளா மற்றும் மஞ்சுளா கணவர் பாபு மூவரும் வேலை செய்கின்றனர். மஞ்சுளா பாபு இருவரும் சூப்பர்வைசராகவும் லட்சுமி சேல்ஸ் கேர்ள் ஆகவும் வேலை செய்து வருகின்றனர். இந்த கடையானது பல கிளைகளைக் கொண்டுள்ளது. திருநெல்வேலியில் இருக்கும் இந்த கிளையானது திறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்த மூவரும் சென்னை கிளையில் இருந்து இந்த கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் இவர்களுடன் இன்னும் பலர் மாற்றம் செய்ய பட்டிருந்தனர்.
மஞ்சுளா புடவைகள் பிரிவிலும், லட்சுமி டெய்லரிங் பிரிவிலும் வேலை செய்து கொண்டிருந்தனர். லட்சுமி பெண்கள் அணியும் அனைத்து வகையான ஆடைகளையும் புதுப்புது டிசைன்களில் தைத்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவள்.
இளம் பெண்கள் பலரும் லட்சுமியிடம் வந்து சுடிதார் தைத்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
“மாமா மாமா” என்று கத்தி குமரனை அழைத்துக் கொண்டிருந்தாள் கவி.
“பாப்பா உனக்கு என்னதான் வேணும் ஏன் காலையிலேயே இப்படி கத்துக்கிட்டு இருக்க, இன்னும் நீ காலேஜ் கிளம்பலையா” என்றான் குமரன்.
“மாமா அடுத்த மாசம் என் பிறந்தநாள் வருது அதுக்கு புது டிரஸ் தைக்க குடுக்கணும் ப்ளீஸ் என்ன கூட்டிட்டு போங்க மாமா”
“பக்கத்து தெருவுல இருக்க அக்கா கிட்ட தானே பாப்பா சுடிதார் தைக்க கொடுப்ப, அது நீயே போய் கொடுக்க வேண்டியது தான என்னை ஏன் கூப்பிடுற”
“மாமா நான் என் பிரண்டு சொன்னா இடத்துல தைக்க கொடுக்க போறேன் மாமா வாங்க மாமா ப்ளீஸ்” என்று கூறிய அழைத்து சென்றாள்.
இருவரும் குருநாதன் டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு சென்று சுடிதார் தைக்க தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு லிப்ட்யின் மூலம் தரைதளத்திற்கு வந்தனர் அப்பொழுது வாடிக்கையாளர் ஒருவர் லட்சுமியிடம் மிகவும் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். லட்சுமி கண்களில் கண்ணீர் வடிய தலைகுனிந்து நின்றிருந்தாள் அவர்களை சுற்றி கூட்டம் கூடி இருந்தது.
அப்பொழுது அங்கு வந்த மஞ்சுளா அந்த வாடிக்கையாளரிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, தான் தைக்க சொன்னா அளவைவிட மிகவும் சிறியதாக தைத்து தன்னுடைய துணியை இந்த பெண் வீணாக்கி விட்டதாக கூறினார்.
லட்சுமி இவ்வாறு எந்த தவறும் செய்ய மாட்டார் என்பதை நன்கு அறிந்த மஞ்சுளா. வாடிக்கையாளரின் பில்லை வாங்கி பரிசோதித்து அதில் வேறொருவருடைய துணியை மற்றொரு ஊழியர் இவருக்கு மாற்றி கொடுத்து விட்டது தெரிந்தது. அதன் பின் அவருடைய உடையை கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். இங்கு நடக்கும் பிரச்சினை அனைத்தையும் லிப்டின் அருகில் நின்று குமரனும் கவிதாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எந்தத் தப்பும் செய்யாமல் அனைவரின் முன்பும் திட்டு வாங்கிய அந்த பெண்ணை பார்த்து குமரனுக்கு பாவமாக இருந்தது. அந்தப் பெண் வேறு புறம் திரும்பி இருந்ததால் குமரனுக்கு அவள் முகம் தெரியவில்லை.
கூட்டம் கலைந்ததும் மஞ்சுளா லட்சுமியை அழைத்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் இளங்குமரன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான் அவனது இதழ்கள் மட்டும் குட்டி என்ற பெயரை உச்சரித்தது.
லட்சுமி இருந்த மனநிலையில் எதிரில் நிற்பவர்களை கூட கவனிக்காமல் சென்று விட்டாள். குமரனோ தான் காண்பது கனவா அல்லது நினைவா. அமெரிக்காவில் இருப்பவள் எப்படி திருநெல்வேலியில் அதுவும் சேல்ஸ்கேர்ளாக வேலை செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இருந்தான்.
மாமா டிரஸ் தைக்க குடுத்துடேன் வாங்க போலாம்” என்று கூறி அவனை அழைத்து சென்றாள்.
அவனோ அந்த பெண்ணின் முகத்தை மறுபடியும் பார்த்து விட வேண்டும் என்று எண்ணி அந்த தளம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தான்.
“மாமா வந்த வேலை முடிஞ்சதுல வாங்க போலாம். ஏன் இன்னும் இங்கையே இருக்குறோம்”
“அது வந்து பாப்பா எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்கள இங்க பாத்தேன், அது அவங்க தானா இல்ல அவங்கள மாதிரி வேற ஒருத்தவங்கள தெரியல அதான் பாத்துட்டு இருக்குறேன்,சரி வா பாப்பா அது அவங்கள இருக்காது நாம போவோம்” என்று கூறி கவியை அழைத்து சென்றான்.
நாம எப்பவும் குட்டிய நினைச்சிட்டே இருக்குறதுனால யார பாத்தாலும் அவள மாதிரியே தெரியுதோ. குட்டி அமெரிக்கால அவ புருஷன் கூட சந்தோசமா இருக்குற அவள போய் இந்த கடையில் வேலை பாக்குற பொண்ண நெனச்சேன் பாத்துட்டானே, எனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல.
“கடவுளே எனக்கு நல்ல புத்திய குடுப்பா, என் குட்டி எந்த கஷ்டமும் இல்லாம அவ புருஷன் கூட சந்தோசமா வாழனும்பா” என்று அவசரமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
அது குட்டி இல்லை என்று தெரிந்தாலும் மனதில் ஏனோ அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. மனதிற்கு கடிவாளம் இட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
பெண்கள் ஓய்வு அறையில் லட்சுமி மஞ்சுவின் தோளில் சாய்த்து அழுதுக் கொண்டிருந்தாள். மஞ்சு அவளை தேற்றிக் கொண்டிருந்தார்.
“அந்த துணியோட வேலை என்னனு தெரியுமா உனக்கு, இதுக்கு முன்னாடி அந்த துணி எல்லாம் நீ பார்த்தாது இருக்கியா” என்று அந்த வாடிக்கையாளர் பெண்மணி பேசிய பேச்சுகள் லட்சுமியை மிகவும் காயப் படுத்தி இருந்தது. தன்னுடைய ஏழ்மை நிலையை நினைத்து கண்ணீர் வடித்தாள்.
