Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 31

பகுதி 31

சம்யுக்தாவின் விரும்பம் அப்பட்டமாக தெரிந்து விட வெங்கடேஷின் தாயாருக்கும், உடன் பிறப்புக்கள் இருவருக்கும் அத்தனை நிறைவு.



Advertisement

ஏற்கனவே தனத்தை பற்றியும்.. சம்யுக்தாவை பற்றியும்.. வெங்கடேஷ் மற்றும் மரகதம் இருவரும் தன் பெண்களிடம் சொல்லியிருக்க, 

பார்க்காமலேயே அவர்கள் மேல் நன்மதிப்பு உண்டாகியிருந்தது.

Advertisement

அது மட்டுமில்லாமல், ‘வெங்கடேஷின் விருப்பத்திற்கு சம்யுக்தா ஒத்துக்கொள்ளாவிட்டால்.. 

Advertisement

தங்களுக்காக பார்த்து பார்த்து செய்யும் தன் அண்ணனின் மனம் நோகுமே..!’ என நினைத்திருந்ததற்கு மாறாக நடந்த நிகழ்வு பெண்களை மகிழ்வித்திருந்தது.

Advertisement

அதனால், “அண்ணி.. நீங்க கவலையேபடாதீங்க. 

இப்பவே நீங்க ஓகே ன்னு சொல்லுங்க.. எங்க கூடவே உங்களையும் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுறோம்..‌” என அவர்கள் ஒன்றாய் சொல்ல,

மகிழ்ச்சியோடு வெக்கமும் வந்து தொலைத்தது சம்யுக்தாவிற்கு.

பெண்களின் வார்த்தையிலும் தன் மகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியிலும் தனத்திற்கு, ‘தான் எடுத்த முடிவை எப்படி சொல்வது..?’ என்ற குழப்பம் மேலோங்கியது.

‘ஆனாலும் வேறு வழியில்லையே..!’ என தவிப்போடு இருந்தவரின் தவிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கினான் ரியான் தன் வார்த்தைகளால்.

வெங்கடேஷின் தாயாரை பார்த்த ரியான், “அம்மா என்னோட பொண்ணு வெண்பாக்கு கல்யாணம் பண்ணா என்ன பண்ணுவேனோ.. அதை அப்படியே என்னோட பேபிக்கு நான் பண்ணிடுறேன். 

மேற்படி உங்க விருப்பம் எதாவது இருந்தா சொல்லுங்க. 

அதையும் சேர்த்து செஞ்சிடுறேன்..” என்றதும் இனியாளுக்கு தன்னவனை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி.

சம்யுக்தா இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாள்.. என்று தான் சொல்லவேண்டும். 

ஏனெனில், ‘அவளை கண்ட நாள் முதலாய்.. உறவாய் ஆகும் முன்பே.. தனக்காக பார்த்து பார்த்து செய்யும் ரியான், 

இன்று.. மாமனாய், அவளுக்கு இதை செய்வேன்.. என்று சொல்லாமல் போனால் தான் அதிசயம்..!’ என்பது அவளின் எண்ணம். 

தனமோ தயங்கி, “தம்பி.. அது.. நீங்க.. ஏன்..” எனத் தடுமாறும் போதே,

“அம்மா, நா ஏற்கனவே எடுத்த முடிவு தான். 

என்னோட மனைவியையும், மகளையும் பாதுகாத்து என்கிட்ட பத்திரமா சேர்த்திருக்கீங்க எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.

நா வராம போயிருந்தாலும்.. இனியாளை கடைசிவரை உங்க மகளா, வெண்பாவை உங்க பேத்தியா நினச்சு அவங்களுக்கான அத்தனையும் செஞ்சு தானே இருப்பீங்க..?

எப்போ நா உங்க மூத்த பொண்ணு அமிழ்தினியாள் கழுத்துல தாலி கட்டி, உரிமையா என்னோட கூட்டிட்டு வந்தேனோ.. அப்ப இருந்து நீங்களும் என்னோட குடும்பம் தான்.

எங்க வீட்டு பொண்ணுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா..? 

அதனால நீங்க எதை பத்தியும் யோசிக்காம கல்யாணத்துக்கு மனநிறைவோட வந்து அவங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க போதும்..” என்று உறுதியாய் சொல்லிவிட,

“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது..” என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, 

சிறிதாய் தான் செய்த உதவிக்கு மதிப்பளித்து, அதை பெரிதாய் கருதி.. இப்படியான ஒரு‌ செயலை ரியான் செய்யவிருப்பது தனத்திற்கு பெரும் வியப்பாய் இருந்தது.

அதிலும் கணவரின் வழியில் உள்ள பெயரளவு சொந்தங்களை நம்பியெல்லாம் தன் மகளின் வாழ்க்கையை முடிவு செய்ய முடியாதே.. என்ற தவிப்பு அவருக்கு எப்போதும் உண்டு.

அதனால் வேறு வழியின்றி அவரும் ஒத்துக்கொள்ள, 

இப்போது வெங்கடேஷ் தரப்பில் சொல்லப்போகும் பதிலுக்காய் அவர்களை பார்த்தனர் சம்யுக்தாவை சேர்ந்தவர்கள். 

“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றத விட, என் மகனோட சந்தோஷமே அவ தான்னு ஆகிடுச்சு. 

அவ மட்டும் போதும் எங்களுக்கு. அதை தாண்டி எதுவும் வேண்டாம்..” என அவர்கள் மறுத்த போதும்,

ரியான் விடாமல் பேசி, இறுதியில்.. ‘முழுவதும் ரியானின் விருப்பம், எதை செய்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை..’ என வெங்கடேஷ் தரப்பு சொல்லிவிட,

வெங்கடேஷ், சம்யுக்தா இருவருக்கும் தை மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தமும், 

பின் ஜாதகம் கொண்டு மண்டபம் கிடைப்பதை வைத்து கல்யாணம் வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

ஏனெனில் வெங்கடேஷ் சம்யுக்தா இரு வீட்டிலும் கடைசி திருமணம். 

அதனால் பெரிதாக தான் செய்ய வேண்டும்.. என்று அனைவரின் மனதிலும் இருக்க, அதற்கு ஏற்ப மண்டபம் அமைய வேண்டுமே.. என்பதால் தான் இப்படியான ஏற்பாடு.

‘சம்யுக்தா இனி எங்கள் வீட்டு மருமகள்..’ என்பதை உறுதிசெய்யும் விதமாக, 

பெண் மக்கள் இருவரும் சம்யுக்தாவுக்கு பூச்சூட்டிவிட, மரகதமோ தன் கரத்தால் சங்கிலி ஒன்றை அணிவித்தார்.

எல்லாம் சிறப்பாய் முடிந்து, ரியானின் ஏற்பட்டின் படி இரவு உணவையும் முடித்துக்கொண்டு எல்லாரும் கிளம்ப சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு தனமும் கிளம்ப எத்தனித்தார்.

அவர்களை தடுத்த இனியாள், “தனம்மா.. நீங்க அந்த வீட்டுக்கு இப்ப போக வேணாம். 

பக்கம் தான்.. இருந்தாலும் இந்த நேரத்துக்கு சம்யுக்தாவுக்கு பூ வச்சதும் போறது சரியில்லை.

இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே இருங்களேன்.. ப்ளீஸ்..” என கெஞ்சலாக கேட்க,

இனியாளின் முகத்தை பார்த்து மறுக்க முடியாது சரியென சொல்லியிருந்தார் தனமும்.

நீண்ட நாட்களுக்கு பின் தன் சித்தாவோடு தூங்க கிடத்த வாய்ப்பை விடுவாளா வெண்பா..? 

வெண்பா அவளோடு உறங்க போகிறேன் என ஓட, முகுந்தும் வெண்பாவை ஒட்டிக்கொண்டு சம்யுக்தா இருக்கும் அறைக்கு ஓடினான்.

இனியாள்‌ போய் எவ்வளவு போராடியும் இருவரும் வராமல் ஆட்டம் காட்ட, 

ரியானிடம் அவள் முறையிட, அவனும் அவன் பங்கிற்கு சொன்ன எதற்கும் வெண்பா இறங்கி வருவதாய் இல்லை.

அவளின் கைகோர்த்து தூங்கி பழகியதோடு, “சித்தா.. கட சூப்பரா சொல்வா.. தெர்யுமா..?” என முகுந்திடம் வெண்பா‌ ஏத்தி விட அவனும் ஆர்வத்தோடு சம்யுக்தாவை கட்டிக்கொண்டான்.

‘என்ன செய்வது..?’ என கணவனும் மனைவியும் கவலையோடு பார்த்துக்கொள்ள,

“மாமா விடுங்க. அவங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்..! என்கூடவே தூங்கட்டும். 

சப்போஸ் இடையில உங்கள கேட்டாலும் நான் அங்கே கொண்டு வந்து விடறேன்..” என்று சம்யுக்தா சொல்லிவிட, 

வேறு வழியின்றி அவளிடமே உறங்கட்டும்.. என விட்டுவிட்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர் ரியானும், இனியாளும்.

இருவருக்கும் இதுவரை பிள்ளைகளோடு இருந்துவிட்டு, இன்று வெறுமையாக இருந்த மெத்தை ஒரு மாதிரியாக இருக்க, அமைதியாய் அடுத்தடுத்து ரெப்ரஸ் செய்து வந்து அவரவர் இடங்களில் படுக்கையில் சரிந்தனர்.

இனியாளுக்கு எப்படியோ,‌ ஆனால்.. ரியானுக்கு இந்த தனிமை மீண்டும் ஏதேதோ பழைய நினைவுகளை கொண்டு வர.. 

தூங்க முடியாமல் எழுந்தவன், விடிவிளக்கின் ஒளியில் இனியாளை பார்க்க.. அவளோ முகத்தை மறுபக்கம் திரும்பி படுத்திருந்தாள்.

சிறிது நேரம் கவனித்த வரையில் அவள் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிய.. ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்தவன், 

தனது கபோர்டை திறந்து.. எப்போதும் தனிமை வாட்டும் போதோ, இல்லை மனம் அதீத வலியில் தவிக்கும் போதோ மட்டும்.. எடுத்துக் கொள்ளும் மதுவை திறந்து வாயருகே கொண்டு செல்ல,

அதை தன் கரம் கொண்டு தடுத்திருந்தாள் இனியாள்.

“என்னங்க இது..‌? நா இங்கே வந்த அடுத்த நாளே இதை பார்த்திட்டேன். 

ஆனா, நான் பார்த்த வரை நீங்க இத்தனை நாள்ல இதை யூஸ் பண்ணவே இல்லை. 

அதனால இதை பத்தி நானும் பேசல.

இப்போ என்ன ஆச்சுன்னு இதை கையில எடுத்திருக்கீங்க..?” என கண்டிப்போடு அவள் கேட்க,

‘இவள் தூங்காமல் இருந்தாளா..?’ என அதிர்ந்த போதும்‍,

“நா ரெகுலரா ட்ரிக் பண்ணற ட்ரிங்கர் இல்ல அம்மூ. 

ஆனா, பசங்க கூட இல்லாம ஒரு மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுது. 

அது எனக்கு.. பழைய நினைவுகளை தூண்டுது. 

ஃபுல்லா எல்லாம் குடிக்கமாட்டேன். 

நா தூங்க, ஜஸ்ட் மருந்து மாதிரி லைட்டா தான்..” என அவளின் முகத்தை பார்க்காமல் உரைத்தவன்,

அவளின் கரத்தை விலக்க பார்க்க, இன்னும் இறுக்கமாக பற்றி அதை தடுத்தவளை கண்டு, 

“ம்ப்ச்.. என்ன அம்மூ..! விடு.‌ 

ஏன் என்னை புருஞ்சுக்காம படுத்தறே..? 

போ.. போய் படு. நான் ரெகுலராவெல்லாம் எடுத்துக்கற ஆள் இல்ல.. சரியா..? 

பயப்படாம போ..” என்றான் கடுப்பாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!