Skip to content
Post Views: 6,607
“ம்ம் சரி துண்டை கழட்டி விடுங்க..” என, “ஏன்.. நான் தான கட்டினேன்.. இப்போ நீ கழட்டு…” என்றான் பதிலுக்கு..
“இன்னிக்கு உங்களுக்கு என்ன மாமா ஆச்சு?? பட் நான் ரொம்ப டயர்ட்… துண்ட கழட்டுங்க.. தூங்கனும்..” என்று நிஜமாகவே ஒரு சலிப்பில் சொன்னாள்.
அவளுக்கு காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒருவித அலுப்பைக் கொடுத்திருந்தது… ஒன்றிலிருந்து தெளிவு பெருமுன்னே இன்னொன்று.. ஆக அனைத்தையும் மனதில் இறுத்திக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாய் போனது..
ஈசன் அவள் முகத்தை ஆராய்ச்சி செய்தபடி துண்டை கழட்ட, வேகமாய் சென்று குப்புறப் படுத்துக்கொண்டாள்.. லட்சுமியின் செய்கைகள் எல்லாம் வித்தியாசமாய் இருக்க, எழுந்து அவளருகே வந்தவன், “லஷ்மி என்ன செய்யுது??” என, அவளோ முகத்தையே திருப்பவில்லை..
Advertisement
“லஷ்மி…” என்றபடி அவளருகே அமர, வேகமாய் தலையை மட்டும் தூக்கி அவன் மடியில் வைத்துக்கொண்டாள்..
அவள் செய்தது ஈசனுக்கு சிறு புன்னகையை கொடுக்க, “என்ன டி.. மறுபடி என்னை சுத்தல்ல விடப் பாக்குறியா..??” என்று வேண்டுமென்றே கேட்க, வேகமாய் அவன் முகத்தைப் பார்த்தவள், தன் முகத்தை நோக்கி அவன் முகத்தை இழுத்துக்கொண்டாள்..
ஈசன் எதிர்பார்க்கவில்லை.. அந்த நேரத்தில் அவளிடத்தில் இருந்து ஓர் இதழொற்றல்.. ஆனால் என்னவோ அவளாக அவனை நெருங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. லட்சுமியாக அவள் பிடியை தளர்தும் வரைக்கும் ஈசனும் விலகவில்லை.
Advertisement
லட்சுமிக்கோ அந்த நேரத்தில் அவனின் நெருக்கும் மட்டுமே ஒரு திடத்தை கொடுப்பது போலிருந்தது. கண்களை இறுக மூடியிருந்தாலும், இதயம் கொஞ்சம் வேகமாவே துடித்தாலும், ஈசனின் அருகாமையும், அவனது வாசமும் அவள் நாசிக்குள் நுழைந்து அலைப்புறும் அவள் மனதைஅமைதியடைய செய்தது.
Advertisement
அவளுக்கு அப்படியென்றால், ஈசனுக்கோ அவளாய் அவனை முதல்முறையாக அணுகியது வேறொரு உணர்வைக் கொடுத்தது.. அவர்களுள் இப்போது எந்த பேதமும் இல்லையென்ற நிலை.. நீ வேறு நான் வேறல்ல என்ற உணர்வு..
அவளிடமிருந்து விலாகமலே, அவளை லேசாய் தூக்கி தன் மேல் சாய்த்துக்கொண்டவன், தன்னிரு கைகளால் அவளை அணைத்துக்கொள்ள, லட்சுமி அப்போது தான் அவனிடம் இருந்து விலகினாள்.. விலகினாள் என்றாலும் தள்ளிப்போகவில்லை அப்படியே சாய்ந்திருந்தாள்..
கண்கள் திறக்க மனமில்லை.. மனதிலோ ஆழ்கடல் அமைதி. அந்த அமைதிக்குள் மூழ்கிப் போகும் எண்ணம் வர, அவளிடம் அசையவேயில்லை..
Advertisement
“லஷ்மி…” என்றவன் மெல்ல அவள் முகத்தை வருடியவன், அவளிடம் பதிலில்லை என்றதும், “என்ன லஷ்மி…” என்றவன் அவள் முகத்தைத் திருப்ப, மெல்ல கண்களை திறந்தவள்,
“ஒண்ணுமில்ல மாமா.. கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது…” என்றாள் லேசாய் சிரித்து.
“ஹ்ம்ம் நான் சொன்னதுனாலயா??”
“ம்ம்ஹும்… இதுவேற.. இந்த பேங்க் விஷயம் கொஞ்சம் டென்சன் ஆனேன்…”
“இல்லையே.. பேங்க் போறதுக்கு முன்னாடியே உன்னோட வாய்ஸ் சரியில்லையே..??” என்று கேட்க, அத்தனை நேரம் அனிதாவை மறந்திருந்தவளுக்கு இப்போது மீண்டும் அவள் நியாபகம் வர, ஈசனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் போனது அவளுக்கு…
அவளது யோசனை கண்டு, “லஷ்மி.. எதுவும் பிரச்சனையா??”என்று தீவிரமாய் கேட்க, “அதெல்லாமில்ல மாமா..” என்றாள் வேகமாய்..
மனதிற்குள்ளே போட்டு போட்டு வைத்தால் தானே அதன் பாரம் கூடிக்கொண்டே போகும். சொல்லிவிட்டால் அதன் அழுத்தம் குறைந்துவிடுமே.
வேறெதுவாக இருந்தாலும் லட்சுமி பட்டென்று பேசியிருப்பாள். ஈசனிடம் பேச அவளுக்கு என்ன தயக்கம் இருக்கப்போகிறது. ஆனால் என்னவோ அனிதாவைப் பற்றி பேச எப்படியோ இருந்தது.
“லஷ்மி உன்னத்தான் கேட்கிறேன்…”
“ம்ம்ம்…” என்றவள், அவன் மீது சாய்ந்திருன்தவள், அவன் வயிற்றில் முகத்தை அழுந்தப் புதைத்துக்கொண்டாள்.
“ஏய் என்ன டி.. இன்னிக்கு புதுசு புதுசா பண்ற…” என்றவனின் கைகளை எடுத்து அவளாகவே தன்மீது போட்டுக்கொள்ள,
“லஷ்மி…” என்றவனின் குரலில் இருக்கும் அழுத்தம், பிடியிலும் தெரிய, இதற்குமேல் பொறுமையாய் இருக்கமாட்டான் என்றும் தோன்ற, “ம்ம் மாமா…” என்று இழுத்தாள்.
“ம்ம் மாமா தான்.. சொல்லு லஷ்மி என்ன.??”
“அது…”
“எது…??”
“ம்ம்ச் மாமா…” என்று அவள் பல்லைக் கடிக்க, “சரி சரி.. அது.. அப்புறம்??” என்றான் அவனோ சிறு பிள்ளையோடு விளையாடுவது போல்.
“ம்ம்… காலையில கடைக்கு போயிருந்தேன்ல..”
“ஆமா…”
“அங்க அனிதா வந்திருந்தா…” என்று லட்சுமி சொல்லி முடிக்கவும், ஈசனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை.
“என்ன சொல்ற??” என்று திரும்பவும் கேட்க, “அனிதா மாமா…” என்றாள் அவளோ குரலே எழும்பாமல்..
“அனிதாவா.. அது யாரு..??” என்று ஈசன் கேட்க, லட்சுமி வேகமாய் எழுந்தமர்ந்தாள்.
நிஜமாகவே ஈசனுக்கு அப்போது அனிதாவெல்லாம் யாரோ எவளோ தான்.. அவனுக்கு சகலமுமாய் லட்சுமியும் அவளோடான வாழ்வும், அவன் குடும்பமும் இருக்க, அனிதா என்ற பெயர் கூட அவனிலிருந்து மறைந்து போயிருந்தது..
“மாமா…” என்று அதிர்ந்து போய் அவன் கண்களில் தன் பார்வையை கலக்க,
அவனும் அவளை சளைக்காது பார்க்க, லட்சுமியின் கண்களில் தெரிந்த உணர்வுகள் சொன்ன சேதியில், ‘அனிதா..’ என்று யோசித்தவனுக்கு புத்தியில் சட்டென்று ஒரு மின்னல் வெட்டு..
ஆனால் ஈசனுக்கோ அனிதாவை யாரென்று கண்டுகொள்ள தான் இந்த யோசனையே தவிர, அதன் பிறகு அவனிடம் எவ்வித சலனமும் இல்லை. ‘ஓ அவளா..’ என்ற எண்ணம் மட்டுமே..
லட்சுமியோ அவனை அரண்டு போய் பார்க்க, அவனுக்கோ அவள் முகம் பார்த்து சிரிப்பு வர, அந்த நேரத்தில் சிரித்தது அவளுக்கு அபத்தமாய் பட, “இப்போ எதுக்கு இந்த சிரிப்பு…” என்றாள் முகத்தை சுருக்கி..
“பின்ன நீ இப்படி அரண்டு போய் பார்த்தா சிரிப்புதான் வரும்.. என் லஷ்மி ரொம்ப போல்டான பொண்ணுன்னுல நினைச்சேன்..” என்று அவனும் அவளைப் போலவே முகத்தை சுறுக்கிக் கேட்க,
“அதெல்லாம் நிறைய இருக்கு..” என்று லட்சுமி சொல்லும்போதே, “பின்ன அவளைப் பார்த்து ஏன் உனக்கு இவ்வளோ டென்சன் என்றான்.
“அதில்ல மாமா.. திடீர்னு பாக்கவும் ஒருமாதிரி ஆகிடுச்சு அவ்வளோதான்…”
“ஹ்ம்ம்” என்று அவளையேப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் இருக்க, “என்ன மாமா சைலன்ட் ஆகிட்டீங்க..” என, “நீ ஏன் டி இப்படியிருக்க…” என்றான் அமைதியாய்..
அவன் குரலில் தெரிந்த மாற்றம், லட்சுமிக்கு என்னவோ செய்ய, “என்.. என்ன எப்ப்டியிருக்கேன்..??” என்றாள் கேள்வியாய்.
“லஷ்மி.. அனிதா இந்த ஊர் தான். சோ இந்த ஊருக்கு வர அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஒருவேளை நம்ம கடைக்கு வந்தது உனக்கு டென்சனா இருக்குன்னா அதுவும் தேவையில்லாத ஒண்ணு தான்.. சரியா…” என்று சொல்ல,
“ம்ம்ம்…” என்றாள் சுரத்தேயில்லாமல்.
“லஷ்மி… என்ன அவ வந்து எதுவும் குழப்பம் செய்வாளோன்னு நினைக்கிறயா..??” என்றான் அவள் முகத்தை தன்னிரு கரங்களால் பற்றி.
‘ம்ம்ஹும்…’ என்று லட்சுமி இல்லையென்று தலையை ஆட்ட,
“அப்புறமென்ன.. இதெல்லாம் தூசு மேட்டார்.. நமக்கு வேண்டியவங்க வேண்டாதவங்க எல்லாரையும் லைஃப்ல கிராஸ் பண்ணித்தான் வரணும்.. அதெல்லாம் பழகிக்கணும்.. சோ இதை நினைச்சு நீ கவலைப் பட வேண்டியதில்லை..” என்றான் மிக மிக பொறுமையாய்.
“ம்ம்..” என்று இப்போதும் தலையை ஆட்டினாள்.
“ஷ்.. ரொம்ப பண்ற டி நீ…..” என்றவன், பற்றியிருந்த அவள் முகத்தை தன் நெஞ்சில் பதித்துக்கொண்டு,
“நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்.. நமக்குள்ள மறுக்கவோ மறைக்கவோ எதுவுமே இல்லைன்னு.. இப்போ சொல்றேன் லஷ்மி.. நீ வேற நான் வேற இல்லை.. புரிஞ்சதா.. என் லைஃப்ல என் லஷ்மி இருக்கா.. நான் ரொம்ப சந்தோசமா அவக்கூட வாழ்ந்திட்டு இருக்கேன். எனக்கு இந்த வாழ்கை போதும்..” என்று ஈசன் பேசிக்கொண்டே போக,
அவனில் இருந்து விலகியவள், பேசிக்கொண்டிருந்த அவன் இதழை தன் விரலால் மூடி, “நமக்குள்ள மறுக்கவும் மறைக்கவும் எதுவும் இல்லைங்கிறது போல.. விளக்கம் கொடுக்கவும் எதுவுமில்ல மாமா.. ஜஸ்ட் எனக்கு அனிதாவ பார்த்ததும் ஒருமாதிரி இருந்தது அவ்வளோதான்.. அதுக்காக இவ்வளோ நீங்க எக்ஸ்ப்ளெயின் எல்லாம் பண்ணத் தேவையில்ல..” என்று லட்சுமி சிரித்தபடி தலையை சரித்து, கண்ணடித்து சொல்ல,
அவள் விரலை நறுக்கென்று கடித்தவன், “அடிப்பாவி.. இவ்வளோ நேரம் முகத்தை தூக்கி வச்சு என்னைப் படுத்திட்டு, சரி பொண்டாட்டி ஃபீல் பண்றாளே அப்படின்னு எல்லாம் பேசினா… நீ..” என்று அவளை அங்கங்கே கிள்ளியபடி கேட்க,
“ஐயோ.. ச்சு… மாமா..” என்று அமர்ந்த வாக்கில் துள்ளியவள், “இது தான் நீங்க என்னைய சாஃப்டா ஹேண்டில் பண்றதா…” என்றாள் அவன் கைகளை தன்னை கிள்ள விடாமல் தடுத்து..
எப்படியடா சொல்வது என்றிருந்த தயக்கம் இப்போது போய்விட, அதற்குமேல் லட்சுமியிடம் சோர்வில்லை.. சோகமில்லை.. குழப்பமில்லை.. அதற்குமேல் ஈசன் அவளை வேறெதுவும் நினைக்கவும் விடவில்லை..
error: Content is protected !!