Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை❤️ 9(இரண்டாம் பாகம்)

அர்ஜுனன் சத்தத்தில்  அனைவரும் அந்த அறைக்கு ஓடி வர பாட்டி அசைவின்றி படுத்து இருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டனர்… நிலைமையை உணர்ந்து அனைவரும் அழுக ஆரம்பித்து இருந்தனர்….தேவியின் அப்பா தான் முதலில் சுயநினைவிற்கு வந்து மாரியப்பன், ஜனனியின் அப்பாவை சுயநினைவிற்கு கொண்டு வந்தார்….

பின் மூவரும் மற்றவர்களை சமாதானம் படுத்தி ஆக வேண்டிய வேலைகளை கவனிக்க சென்றனர்….



Advertisement

அர்ஜுனன் சசியை விட கர்ணனுக்கு பாட்டி என்றால் அவ்வளவு விருப்பம் … அவன் தான் அவரின் இழப்பில் மிகவும் துவண்டு போனான்…. அவனை யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை….

Advertisement

Advertisement

அர்ஜுனன் இன்னும் சுபாவை பார்க்கவே இல்லை… அவன் ஆக வேண்டிய வேலைகளை பார்த்து கொண்டு இருக்க சுபா உள்ளே பாட்டி அருகில் அமர்ந்து இருந்தாள்…

Advertisement

அனைவரும் மிகவும் வருந்தினர்…. குடும்பத்தினர் எவ்வாறு வருந்தினார்களோ அதே போல் ராஜம்மாவும் (அங்கு வேலை செய்பவர்) வருந்தினார்… அவர் எப்போதும் பட்டு பாட்டியுடன் மட்டும் தான் இருப்பார்…. அவர் இங்கு வேலை செய்தாலும் பாட்டி எப்போதும் அவரை அப்படி நடத்தவே மாட்டார்…..

நன்முறையில் பாட்டியின் கடைசி பயணத்தை முடித்தனர்… பாட்டியின் கடைசி ஆசை… தனக்கு கர்ணன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என….  அர்ஜுனனை பாட்டிக்கு பிடிக்கும் தான்…. ஆனால் அவனை விட அவருக்கு கர்ணன் தான் மிகவும் இஷ்டம்…. அவனோ முடியவே முடியாது என கூறினான்… ஆனால் அர்ஜுனன் தான் “கர்ணா இங்கு பாரு பாட்டியோட கடைசி ஆசை நீ தான் அவங்களுக்கு செய்யனும்…. அவங்க மேல நீ வெச்சு இருக்க பாசம் புரியுது….அவங்களோட கடைசி ஆசையை நிறைவேத்தி வை” என்று கர்ணனின் தலையை தடவி கொடுத்து கூறினான்….

அவன் அப்டியே அர்ஜுனனை அணைத்து கொண்டு கதறிவிட்டான்…. சசி அர்ஜுனன் இருவரும் தான் அவனை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தனர்….

அவர்களின் சொந்த நிலத்திலேயே தான் பாட்டியை அடக்கம் செய்தனர்…. அங்கிருந்து ஆண்கள் எல்லாம் வீட்டிற்கு வருவதற்குள் பெண்கள் வீட்டை சுத்தம் செய்து முடித்து இருந்தனர்…. விவரம் புரிந்த குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை…. பாட்டி இனிமேல் தங்களுடன் இருக்க மாட்டார் என்று மட்டும் தான் புரிந்து இருந்தது….

தன்சிகா தஸ்விகா தர்ஷிகா அழுது கொண்டே இருந்தனர்….. அவர்களை சமாதானம் செய்யவே முடியவில்லை… அதே போல் சுபாவிற்கும் உடம்பு முடியவில்லை…. தலை காயம் வலித்து கொண்டே இருந்தது காலையில் இருந்து அழுது கொண்டே இருந்ததால்….

அர்ஜுனன் இன்னும் சுபாவை காணவே இல்லை…. கண்மணியும் ஜனனியும் தான் சுபாவை உறங்க வைத்து மூன்று குழந்தைகளையும் பார்த்து கொண்டு இருந்தனர்….

மருதாயி பாட்டி மிகவும் ஒடிந்து போய் விட்டார்… அவரை பார்க்கவே செண்பகம் அம்மாவிற்கு சரியாக இருந்தது….  பெரியவர்கள் அடுத்து ஆக வேண்டியதை பார்க்க அவர்களுக்கு துணையாக வாணன் வர்ணன் முகுந்தன் மூவரும் உறுதுணையாக இருந்தனர்…

அர்ஜுனன் சசி கர்ணன் மூவரும் வீட்டிலேயே இருந்தனர்…. இரண்டு நாட்கள் சென்று இருந்தது…. அப்போது தான் சுபாவை கவனிக்கவே இல்லையே என்று நினைத்து கண்மணியிடம் கேட்டான் அர்ஜுனன்… “கண்மணி சுபா எங்க வெளியவே காணோம்… என்ன ஆச்சு அவளுக்கு” என்று கேட்டான்….

அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…. சுபாவிற்கு காய்ச்சல் வந்து இருந்தது…  சசி கர்ணனிடம் அன்று சாமி சொன்னது போல் அந்த வீட்டின் ஆணிவேர் இல்லாமல் போய் விட்டது… அப்படி என்றால் இவளிடம் சாமி சொல்லியத்தை யோசித்து யோசித்து பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்து இருந்தது…. அர்ஜுனனிடம் சொல்ல வேண்டாம் என்று சுபா சொல்லி இருந்தாள்…

வீட்டில் இன்னும் அங்காளி பங்காளிகள் எல்லாம் இருந்ததால் அந்த கூட்டத்தில் அவளை பார்க்க முடியவில்லை…. வேலையாக இருப்பாள் என அவனும் கூப்பிடவில்லை அவளை….

தற்போது கேட்டதும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை…. அப்போது தான் ஒரு உறவுக்கார பெண்மணி “என்ன அர்ஜுனா உனக்கு தெரியாதா… சுபாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல்…  புள்ள ரொம்ப பயந்து போய் இருக்கு.. அதுனால காய்ச்சல் கண்டு இருக்கு….” என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு சென்று இருந்தார்….

கண்மணி மானசீகமாக தலையில் கை வைத்து இருந்தாள்…. “கண்மணி அவளுக்கு என்ன ஆச்சு காய்ச்சலா ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை…. இப்போ எங்க அவ” என்று  பதட்டமாக கேட்டான்… அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்….

சுபாவை ஹாஸ்பிடல் அழைத்து சென்று இருந்தான் முகுந்தன்…. அவன் கேட்டு கொண்டு இருக்கும் போதே அவளை கை தாங்கலாக முகுந்தன் உள்ளே அழைத்து வந்தான்….

அவளை பார்த்தவுடன் மிகவும் பதறிவிட்டான்… சுபாவிற்கு இன்னும் கட்டு பிரிக்கவில்லை….  சாமி குறி சொல்லி முடித்தவுடன் மயங்கி இருக்க இவள் பின்னால் சென்று ஒரு மரத்தில் மேல் மயங்கி இருந்தாள்… அங்கிற்கும் கூர்மையான கலில் இடித்து கொஞ்சம் ஆழமாக காயம் ஆகி இருந்தது…

“அம்மு காய்ச்சல்னு மட்டும் தான் சொன்னாங்க… தலைல என்ன டா காயம்…. ஏன்டா என்கிட்ட சொல்லவே இல்ல… என்ன ஆச்சு டா” என்று அவளை தன் கை வளைவில் கொண்டு வந்து கேட்டான்…

அவனை பார்த்தவுடன் சாமி சொன்னது ஞாபாகம் வந்து அவனை அணைத்து கொண்டு “மாமா மாமா என்னை விட்டு போக மாட்டல…. என்கூட தானு இருப்ப…. நீ இல்லாம என்னால இருக்க முடியாது… என்னை விட்டு எங்கயும் போகாத….” என்று அழுது கொண்டே கூறினாள்….

அவளை அணைத்து கொண்டு “உன்னை விட்டு நான் எங்க போக போறேன் அம்மு…. எதுக்கு இந்த அழுகை…. தலைல என்ன கட்டு…..” என்று அதை வருடியவாறே கேட்டான்…

அவள் எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே இருந்தாள்…. அவள் இதற்கு மேல் எதுவும் கூறமாட்டாள் என அவனுக்கு தெரிந்துவிட்டது… அவனின் பார்வை முகுந்தனின் மேல் விழுந்தது….

“சொல்லு முகி… சுபா ஏன் இப்படி அழுகுறா… அன்னிக்கு நைட் சாமி என்ன குறி சொன்னிச்சு…. அவளுக்கு தலைல எப்படி அடி பட்டுச்சு….” கேள்விக்கு மேல கேள்வி கேட்டான்….

அதற்கு முகுந்தனோ “இதுக்கான பதில் நான் அப்பறம் சொல்றேன்…. அவ ரெண்டு நாளா தூங்கல…. தூக்க மாத்திரை குடுத்து தான் தூங்க வெச்சோம்….  பாப்பாவை தூங்க வை முதல்ல” என கூறிவிட்டு கண்மணியை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்….

முகுந்தன் இப்போதே கூறி இருக்கலாம்…. அவன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து இருப்பான்…. விதி யாரை விட்டது…..

அவனுக்கு தெரிந்து விட்டது சாமி எதோ தவறான வாக்கு கூறி இருக்கிறார்…. அதனால் தான் அதை பற்றியே சுபாவிற்கு காய்ச்சல் வந்து இருக்கிறது என….

சுபாவால் நடக்க முடியவில்லை… எனவே தூக்கிக்கொண்டு அறைக்கு சென்று விட்டான்….. அவளுக்கு எதுவும் தோணவில்லை… அவளுக்கு அவள் மாமன் கூடவே இருக்க வேண்டும்… அவளின் அறிவு கூறுகிறது அவனுக்கு வேலை இருக்கும் விடு என…. ஆனால் அவள் மனமோ ஏற்க மறுக்கிறது…. அவனை பார்க்காமல் இரண்டு நாள் இருக்க முடிந்த அவளால் அவனை பார்த்த பின் அவனை விட்டு விலகி இருக்க முடியவில்லை…. எங்கே விட்டாள் எங்கேயோ சென்று விடுவானா என்ற பயம்….. அவனின் சட்டையை பிடித்தவள் விடவே இல்லை…. தூங்கும் போது கூட அவள் விடவே இல்லை…

பின் அவனும் இரண்டு நாள் தூங்காத தூக்கத்தை அவளின் அருகாமையில் தூங்கி இருந்தான்…  அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை…. ஆனால் சுபாவை திட்ட கிடைத்த நேரத்தில் வந்து இருந்த சொந்தங்களிடம் “என்ன மூத்த மருமகளோ இப்போ கூட அவளால எப்படி தூங்க முடியுதோ தெரியல….  இவளை ஏன் கல்யாணம் என் தம்பிக்கு கல்யாணம் செஞ்சி வெச்சோம்னு இருக்கு… சோம்பேறியா இருக்கா….” என்று குறை கூறி கொண்டு இருந்தாள்….

அங்கு இருந்த உறவினர்களே “என்ன நந்தினி இப்படி பேசுற…. சுபா அப்படிபட்ட ஆளா…. அவளுக்கு ரெண்டு நாளா எவ்வளவு காய்ச்சல்…. ஆனாலும் அவ வேலை செஞ்சால…. அவளை ஏன் குறை சொல்லிட்டு இருக்க…  நாங்க தான் அவளை தூங்க சொன்னதே…  இனிமே அந்த புள்ளயை குறை சொல்லிட்டு இருக்காத… அது தங்கமான புள்ள” என்று கூறிவிட்டு சென்றனர்….

நந்தினி முகம்கறுக்க  அறைக்கு சென்றுவிட்டாள்…. குடும்பத்தினர் அனைவருக்கும் நந்தினியை நினைத்து கோவம் தான் வந்தது இப்படி ஆகி விட்டாளே என…..

பாட்டி இறந்து பதினாறு நாட்கள் ஆகி இருந்தது…. அன்று பாட்டிக்கு பதினாறு நாள் காரியம் செய்தனர்…. உறவினர்கள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்று இருந்தனர்…. அன்று தான் குடும்பத்தினர் அனைவரும் சற்று ஓய்வாக அமர்ந்தனர்…. இன்னும் அர்ஜுனனுக்கு அன்று கோவிலில் நடந்ததை கூறவில்லை…..

அனைவரும் அன்று இரவு கூடத்திலேயே தூங்கி இருந்தனர்….

இன்னும் இருபது நாட்கள் ஓடி இருக்க பாட்டியின் இழப்பு யாரையும் விட்டு அகலவில்லை….. அன்று எதோ அழைப்பு வந்தது என்று விடியற்காலையே அர்ஜுனன் சென்று இருக்க இரவாகியும் வரவேயில்லை….  அவனுக்கு அழைத்து அழைத்து சோர்ந்து விட்டாள் சுபா….

நேரம் ஆக ஆக அவளுக்கு அழுகை அதிகம் ஆகியது… யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை…. ஆண்கள் அனைவரும் அவனை தேடி வெளியில் சென்று இருக்க பெண்கள் சுபாவை சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்….

ஆர்வ் சுபா அழுவதை பார்த்து “ம்மா அழுகாத…. அப்பா வந்துதுவாரு…..” என்று அவளின் கண்ணை துடைத்து விட்டு அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!